September 30, 2006

யோம் கிப்பூர்-יום כפור


...In the seventh month, on the tenth day of the month, you shall afflict your souls, and you shall not do any work ... For on that day he shall provide atonement for you to cleanse you from all your sins before the L-RD. -Leviticus 16:29-30



யோம் கிப்பூர் என்பது மன்னிப்புக் கேட்கும் நாள் (day of attonement) என்று ஹீப்ரூவில் அர்த்தம். அது ஒவ்வொறு ஆண்டும் செப்டம்பர் அக்டோபர் மாத காலத்தில் (ஹீப்ரூ நாட்காட்டியில் டிஷிரி 10 ம் நாள்) வரும்.

இது யூதர்களின் மிக முக்கிய மத விடுமுறை நாளாகும். பல யூதர்கள் மதக்கட்டுபாடுகள் பல கடைபிடிக்காவிட்டாலும் இந்த நாளை நிச்சயம் அனுஷ்டிப்பர். இந்த ஆண்டு இது அக்டோபர் 1 மாலை முதல் அக்டோபர் 2 மாலைவரை (ஹீப்ரூ நாட்காட்டியில் ஒரு நாளின் கணக்கு சூரிய அஸ்தமனத்திற்கு பின் துவங்கி, அடுத்த நாள் சூரியன் அஸ்தமிக்கும் வரை).

மேலே குறிப்பிட்ட tanakh (ஹீப்ரூ விவிலியம்) படி, உணவு இல்லை. மாலை முதல் அடுத்த நாள் மாலை வரை. இதில் வண்டிகள் செல்லாது, ரோட்டில் அனைத்து கடைகளும் அடைத்திருக்கும். யாரும் கார் ஓட்டாதலால் ரோடுகள் வெரிச்சோடிக் கிடக்கும். ஆஸ்பத்திரி எமர்ஜென்சி வார்டுகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மட்டுமே செயல்படும்.

மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இருப்பதை விட, மக்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருப்பர். மன்னிப்பு என்றவுடன் synegouge தேவாலயம் சென்று பிரார்த்தனையில் ஈடு பட்டு மன்னிப்பு கேட்பது போல் இல்லாமல், நண்பர்கள் உறவினர்களிடம் பேசி தாங்கள் இதற்கு முன்னால் ஏதேனும் தீங்கு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளவேண்டும். அப்போது தான் ஆண்டவன் நம்மை மன்னித்து அவர் வைத்திருக்கும் நல்ல பிள்ளைகள் புத்தகத்தில் நம் பெயரை சேர்த்துக் கொள்ள கையொப்பமிடுவாராம்..!! அதற்காக எல்லோரும் g'mar Hatima Tova -May you be inscribed in the book of life என்று வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருப்பர்.

ட்ஸாஹ்ல் (IDF) ல் உள்ள பல பெரிய்ய ஆஃபிசர்களும் லிவு எடுத்துக் கொண்டு குடும்பத்தைக் கவனிக்கச் சென்றுவிடுவர். முழு இஸ்ரேலும் Stand Still.

1973 ம் ஆண்டு, எகிப்து, சிரியா, ஜோர்டான், ஈராக் நாடுகள் கூட்டமைப்புப் படைகள் சோவியத் கொடுத்த போர் விமானங்கள் தளவாடங்கள் உதவியுடன் யோம் கிப்பூர் அன்று இஸ்ரெலைத் தாக்கின. அவர்கள் எண்ணம், இஸ்ரேல் இப்படி இருக்கும் போது தாகினால் போரில் வெற்றி நிச்சயம் என்பதே. (புனித ரமலான் நோன்பு காரணமாக பல அரபு முஸ்லீம் படைகள் போருக்குச் செல்ல முராண்டு பிடித்தாலும் கடைசியில் சென்றனர்).

சிரியா கோலான் மலைப்பகுதியையும், எகிப்து சைனாய் பாலைவனப் பகுதியையும் தாண்டி இஸ்ரேலுக்குள் புகுந்துவிட்டது, (1967) 6 நாள் போருக்கு பிறகு இந்த பகுதிகள் இஸ்ரேல் வசம் இருந்தது. அன்று துவங்கிய யுத்ததில் இஸ்ரேலுக்கு முதலில் பேரிழப்புகள் இருந்த போதிலும், சிக்கிரமே விடுப்பில் இருந்த கம்மாண்டர்களை அழைத்து போருக்கு தயாராகி பதில் தாகுதல் துவக்கியது. இதில் அரபு கூட்டமைப்புப் படைகளுக்கு பெருத்த சேதம் நிகழ்ந்து முடிவில் இஸ்ரேல் வெற்றி கொண்டது சரித்திரம். இந்த பொர் பற்றி விக்கிபீடியா சுட்டி.

September 21, 2006

விமானநிலைய Wi-fi

இப்பொழுதெல்லாம் விமான நிலையங்களில் இண்டர்னெட் வசதிக்காக வயர் லெஸ் (wi-fi) வசதி செய்யப்பட்டு வருகின்றது. சென்னை விமான நிலையத்தில் பிரச்சனையின்றி இயங்குவதாக கேள்விப்பட்டேன்...

மதுரை விமான நிலையத்தில் போர்டு எல்லாம் மாட்டிவிட்டுருந்தார்கள்....இந்த விமான நிலையத்தில் வை-பை வசதியுள்ளது என்று.

அட, நம் விருமாண்டி ஊர் மதுரையில கூட வை-பை வசதி இருக்கே என்று மடி கணினி எடுத்து சோதித்துப் பார்த்தால்...BSNL க்கு பணம் கொடுக்காமல் கனெக்ஷன் கட். !! லாகின் கடவுச்சொல் வேண்டும் என்று காட்டியது திரை. கேட்டால் அதில் ஏதோ பிரச்சனை என்று விமான நிலைய இன்சார்ஜ் தெரிவித்தார்.

பம்பாய் சர்வதேச விமான நிலையத்தில் மணிக்கு 100 ரூ கொடுத்து வாங்கவேண்டிய TATA IndiCom Wi fi. எத்தனையோ பேர் வந்து போகும் விமான நிலையத்தில் எப்போதோ, ஐந்தோ, பத்து நிமிடமோ பயன் படுத்தும் வசதிக்காக 100 ரூ செலவு செய்யவேண்டுமா...? என்ன முட்டாள் தனம்.

உலகம் முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் இலவச வை-பை வசதி கொடுக்கும் இந்த வேளையில் ஒரு டிக்கட்டுக்கு சராசரியாம 1500 ரூ வரை airport tax - விமான நிலைய சேவை வரி வசூலிக்கும் நம் விமான நிலையத்தின் நிலை படு மோசம்.

மற்ற சர்வதேச விமான நிலையத்தின் சேவைவரி 20-25 US$ மட்டுமே. நம்மூரில் அந்த அளவுக்கு பணம் வாங்கியும் கிடைப்பது இரண்டாம் தர சேவையே. ஏன்?

September 7, 2006

மதுரெ மதுரெ..

வீட்டில் விசேஷம் காரணமாக மதுரை வந்து சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், புத்தகக் கண்காட்சி நினைவுக்கு வர, சிறப்பு பேருந்தெல்லாம் நம் பாண்டியன் போக்குவரத்துக் கழகம் இயக்குகின்றது என்பதை அறிந்து சி2 வட்டப் பேருந்து பிடித்து தமுக்கம் திடலை அடைந்தேன்...
புத்தகக் கண்காட்சி பற்றி சொல்லும் முன்னர் வட்டப் பேருந்து பற்றியும் அதை மதுரையில் அறிமுகம் செய்யக் காரணம் பற்றியும் சொல்லிவிடுகின்றேன்...
மதுரையில் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே கட்டிய ரயில்வே மேம்பாலம் பெரியார் பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்தது. அதை ஹானரபிள் அம்மா காலத்தில் பெரிய மேம்பாலமாகக் கட்டி முடிக்க திட்டம் தீட்டி கட்ட ஆரம்பித்தனர். கட்ட ஆரம்பித்தவர்கள் முதலில் பழைய பாலத்தை உடைத்துவிட்டதால். கோச்சடை, அரசடி, அச்சம்பத்து, விராட்டிபத்து, அடிக்கடி வலைப்பதிவுகளில் அடிபடும் பெயரான நாட்டார்மங்கலம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் டவுன் பஸ்கள் ரயில் நிலைய மேற்கு நுளைவுவாயிலில் நிருத்தி வைத்திருந்தனர். அப்போதிருந்தே நூதன சிந்தனையாக பெரியார் ஆரம்பித்து ஆரப்பாளயம் சென்று வேறுவழித்தடம் வழியாக மாட்டுத்தாவணிக்குப் போய் திரும்ப பெரியார் நிலையம் வரும் வட்டப் பேருந்து இயக்கப்பட ஆரம்பித்தது.
பாலம் கட்ட ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டாண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், ஹானரபிள் அம்மா இப்போது அவ்வளவு ஹானரபிள் பதவியில் இல்லாத நிலையிலும் பாலம் கட்டுமானப் பணிகள் நின்று நிதானமாகச் செல்கின்றது, ப்ராக்கெட்டில் "ஆமையைவிட" என்று போட்டுக் கொள்ளவும்.
அப்பாடா, ஒரு வழியாக கோச்சடை போக பெரியார் நிலையத்திலிருந்து வசந்த நகர் சுற்றி, பைப்பாஸ் ரோடு பிடித்து மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் கட் அடித்து தற்பொழுது டவுன் பஸ்கள் செல்வது போல் புத்தகக் கண்காட்சிக்கு வந்துவிட்டேன்...டீ டூர் (de tour) என்றால் இது தானோ?
சரி, தமுக்கம் திடலில் நடக்கும் புத்தகக் கண்காட்ச்சியில் ஏகப்பட்ட ஸ்டால்கள்..(statistics களை ஹிந்து, எக்ஸ்பிரஸ் நாளிதள்களில் இடம் பெறும் செய்தியில் பெற்றுக் கொள்ளுங்கள்!)
சில பல ஸ்டால்களில் "ஸ்டேல்" (stale) சரக்குகள் மட்டுமே இருந்தது மன வேதனை அழித்தது...
ஆன்மீகப் புத்தகக் கடைகளும், பெரியாரின் கருத்துக்கள் போதிக்கும் புத்தகக் கடைகளும் மிக அருகாமையில் கண்ணில் பட்டது...இதுவரை அடிதடி நடந்ததாக செய்திகல் வரவில்லை.!! :)
ஆங்கிலப் புத்தகங்கள் வெகு சிலவே இருந்தன...அதுவும் எல்லாம் ஹைதர் அலி காலத்துப் பழையப் புத்தகங்கள்...New releases இல்லாமல் என்ன புத்தகக் கண்காட்சி?!!
தமிழில் அப்படி இல்லை, புதிய புத்தகங்கள் ஏராளமாய்க் காணப்பட்டது...ஆனால், தமிழில் புத்தகத்தின் புலம் (subjects) பாலிடிக்ஸை விட்டு வெகுதூரம் செல்வதாக இல்லை. 100 க்கு 90 புத்தகங்கள் பாலிடிக்ஸ் அல்லது ஆன்மீகமாகவே காணப்படுகின்றன...பயோடெக்னாலஜி, இன்ஃபர்மேடிக்ஸ், ஜீனோமிக்ஸ் போன்ற அறிவியல் புலங்களில் தமிழ் புத்தகங்கள் காணக்கிடைப்பதில்லை. இந்தப் புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கவில்லை.
கிழக்கு பதிப்பகத்தின் வெளியான, திரு பா. ரா வின் நிலமெல்லாம் ரத்தம், மற்றும் ஹெஸ்புல்லா புத்தகத்தை வாங்கினேன்...( அதைப் பற்றி அடுத்த வலைப்பதிவு வரும்! )
இங்கு கண்ணில் பட்ட இன்னொறு சமாச்சாரம், பத்து கடைக்கு ஒரு கடையில் கார்ல் மார்க்ஸும், சே குவேராவும் இழித்துக் கொண்டும், முஷ்டியை மடித்து வானத்தில் குத்திக் கொண்டும் நின்றது.
மாவோவின் கவிதைத் தொகுப்பு என்று புத்தகங்களும் காணப்படுகின்றன...
காந்தியைவிட, அப்துல் கலாமைவிட கார்ல் மார்க்ஸ் போஸ்டர்கள் கண்ணில் பட்டது தான்...மனதை உருத்தியது...
இருந்தும் அதில் ஒரு சந்தோஷம் என்னவென்றால் செத்த ideology ஐ பழய புத்தகத்திலும், நூலகங்களிலும் தான் காண முடியும்!!
சீக்கிரமே அந்த நூலகள் ப்ழய நூலகங்களை அடையும் அல்லது துருப் பிடித்துப் போன மூளையை மேலும் செல்லரிக்கவைக்கும் என்று நம்புகின்றேன்...
கல்கியின் படைப்புகள் தனி ஸ்டாலே இருந்தது...150 ரூ முதல் 350 ரூ வரை விலை வித்தியாசத்தில் பல பொன்னியின் செல்வன்கள் கிடைக்கின்றன...ஹாரி போட்டர் சீரீஸ் போல் அழகாக பேக் செய்யப்பட்ட பெட்டியில் வரும் புத்தகங்களாக கல்கியின் பொன்னியின் செல்வன் இன்னும் வராமல் ஐந்து புத்தகதை இன்னும் சணல் நூல் அல்லது பிளாஸ்டிக் கயிறு கட்டி விற்கின்றனர்...!!
கொடுக்கும் காசுக்கு குவாலிட்டி எதிர்ப்பார்க்கக்கூடாதா?
350 ஐ 500 ஆக்கி நல்ல gsm தாள்களில் அச்சடித்து பேப்பர் பேக் (paper back) புத்தகத்தை தரமான முறையில் பேக் செய்தால் பொன்னியின் செல்வனை வாங்க மாட்டார்களா?