December 13, 2006

அனானிமஸ் அமீபா

ஒரு சர்தார் ஜி ஜோக்,

சர்தார் ஒரு வசந்த் அன் கோ வுக்குப் போயி அந்த ஃபிரிட்ஜ் என்ன விலை என்று கேட்க, கடை முதலாளி "நான் முட்டாள்களுக்கு எல்லாம் ஃப்ரிட்ஜ் விக்கிறதில்ல" என்று சொன்னான்.

சர்தாருக்கு வந்ததே கோவம், உடனே வீட்டுக்குப் போயி பாய் மாதிரி வேஷம் போட்டுகிட்டு அதே கடைக்கு போய் அந்த ஃப்ரிட்ஜ் என்ன விலை என்று கேட்க, கடை முதலாளி தெரிந்து கொண்டு "ஏய் ஏற்கனவே சர்தார் மாதிரி வந்த ஆள் தானய்யா நீ, அப்பவே சொன்னேன்ல நான் முட்டாள்களுக்கு எல்லாம் ஃப்ரிட்ஜ் விக்கிறதில்லன்னு ! ஏன்ய்யா வந்து தொந்தரவு பண்ற ?" என்றான்.

ச்செ! என்று வெறுத்த சர்தார் இன்னொரு நாள் நன்றாக மொட்டை அடித்து ஷேவ் எல்லாம் செய்துகொண்டு அதே கடைக்குப் போய் "அந்த ஃப்ரிட்ஜ் என்ன விலை?" என்று கேட்க கடை முதலாளிக்கு வந்ததே கோவம், "யோவ் மொட்டை அடிச்சுட்டு வந்தா, ஆள் தெரியாதா?, போய்யா முட்டாள், ஏற்கனவே சொன்ன மாதிரி நாங்க முட்டாப்பசங்களுக்கெல்லாம் ஃப்ரிட்ஜ் விக்கிற மாதிரி இல்ல!" என்று காட்டமாக கத்திவிட, சர்தார் மெதுவாக, "ஐயா, நான் எவ்வளவு கஷ்டப் பட்டு வேஷத்த மாத்தி, கொரல மாத்தி பாஷைய மாத்தி எல்லாம் வந்தும் நீங்க கண்டு புடிச்சுட்டீங்களே! எப்புடிய்யா ?" என்று பவ்யமாக கேட்டான்.

"யோவ், நீ கேட்டது ஃப்ரிட்ஜ் இல்லைய்யா வாஷிங் மெஷின்!" என்று பதில் வந்தது.

..

பி.கு., தமிழ்மணத்தில் "அனானிமசாக" வந்து சிலர், தாங்கள் யார் என்று மீண்டும் மீண்டும் காட்டிக் கொண்டுள்ளனர். அவர்களைப் புண்படுத்துவதற்காக இந்த ஜோக் சொல்லவில்லை.

November 29, 2006

சரித்திர சமநிலைப்பாடு

உலக அளவில் மிக பிரபலமான ஆங்கில எழுத்தாளர்களில் நய்பாலும் ஒருவர். அவரது முழு பெயர் Sir வித்யாதர் சூரஜ்பிரசாத் நய்பால் T.C. 2001 ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டு கவுரவிக்கப் பட்டவர்.

ஆகஸ்ட் 17 1932ல் ட்ரினிடாட் ல் பிறந்தவர் இன்று இங்கிலாந்தில் வில்ட்ஷயர் என்ற இடத்தில் வசிக்கிறார். 1971 ல் Booker பரிசைப் பெற்ற முதல் இந்திய வம்சாவழி வந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இவரைப் பற்றி வலைப்பதியவேண்டும் என்ற எனது நீண்ட நாள் அசையைப் பூர்த்தி செய்துகொள்ளவே இந்தப் பதிவு.

இதற்கு பல காரணங்கள்.


முதலில் இவர் மார்க்ஸ்வாத சிந்தனையை எதிர்ப்பவர். ஆகவே நவயுக மார்க்ஸ்வாதிகளால் தீவிரமாக விமர்சிக்கப் படுபவர், politically correct மரமண்டைகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனைகளை வைப்பவர். இரண்டு, இஸ்லாம் பற்றிய இவர் பார்வை.

பலர் தீவிரமாக அதை அன்றைய நாளில் விமர்சித்திருந்தாலும் இறுதியில் இவரது கூற்றே நின்றது. சாமுவேல் ஹண்டிங்டன் சொல்லிய Clash of the civilization ன் மூல சிந்தனை இவரது இஸ்லாம் பற்றிய இரண்டு புத்தகங்களில் பரவலாகப் பார்க்கலாம்.

1. Among the believers: An Islamic Journey
2. Beyond Belief: Islamic excursion among the converted people

இந்த இரண்டு புத்தகத்திலும் அவர் கூறும் முக்கிய விஷயம்.


Islam is an Arab religion. Everyone who is not an Arab is a convert. Islam is a demanding religion. A convert to Islam changes his view of the world. His holy places are in another country, his sacred language is Arabic. He rejects his own history and turns away from his own historical background. In a profound way the converted Muslims are a colonised people.
..
இஸ்லாம் ஒரு அரபியர் மதம். அரபியர் அல்லாத இஸ்லாமியர் அனைவரும் மதம் மாற்றப் பட்டவர்கள். இஸ்லாம் அதனைப் பின்பற்றுபவர்களிடம் பல கட்டுப்பாடுகளை முன்வைக்கும் மதம். மதம் மாற்றப் பட்டவன் தன் பார்வையை மாற்றிக் கொள்கிறான். அவனது புனிதஸ்தலங்கள் வேறு நாட்டிற்கு மாறிவிடுகின்றன. அவனது புனித மொழி அரபியாக மாறிவிடுகிறது. அவன் தனது வரலாற்றை நிராகரித்துவிடுகிறான். ஒரு விதத்தில் மதம் மாற்றப்பட்ட இஸ்லாமியருக்கும் ஒரு அன்னிய ஏகாதிபத்தியத்தின் கீழ் வாழும் மக்களுக்கும் வித்தியாசமில்லை.


பாபர் "மசூதி" இடிப்பு பற்றி அவர் முன் வைக்கும் பார்வை வித்தியாசமானது.

அவுட்லுக் இந்தியாவில் முன்பு வந்த இந்த சிறிய உரையாடலின் தொகுப்பில் குஷ்வந்த் சிங் பாபர் "மசூதி" இடிப்பு பற்றி அவரிடம் கேட்டதற்கு நய்பால் அளித்த பதில்,


I would call it an act of historical balancing. The mosque built by Babar in Ayodhya was meant as an act of contempt. Babar was no lover of India. I think it is universally accepted that Babar despised India, the Indian people and their faith.

இதை ஒரு சரித்திர சமநிலைப்பாட்டினை நோக்கிச் செல்லும் முதல் படி என்று தான் சொல்வேன். பாபர் அயோத்தியாவில் கட்டிய "மசூதி" ஒரு அவமதிப்பின் சின்னம். பாபர் ஒன்றும் இந்தியாவை விரும்பியவரல்ல. பாபர் இந்தியாவைப் பற்றியும் இந்திய மக்கள் மற்றும் இந்திய மதங்களைப் பற்றியும் ஒரு இகழ்ச்சியான சிந்தனையைத்தான் வைத்திருந்தார் என்பது இன்று உலகில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்பதே என் கருத்து.


இப்படியெல்லாம் பேசியதாலேயோ என்னவோ BJPயின் poster boy ஆகிவிட்டார் நய்பால். இதை சல்மான் ருஷ்டி எதிர்த்தார். ஆனால் ருஷ்டி satanic verses எழுதியதால் அவருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் அடி. ருஷ்டி எவ்வளவு தான் இஸ்லாமை எதிர்த்தாலும் அவர் முஸ்லீம் என்பதில் அலாதி பெருமை கொண்டுள்ளவர் அவர்.

ப.ஜ.க அரசியல் கொளகையை மீறி இன்று நாம் நய்பாலைப் பார்க்கவிரும்புவதில்லை என்ற நிலைக்குப் போய்விட்டோம். இதற்கு முக்கிய காரணம் லிபரல் சிந்தனை என்று சொல்லிக்கொண்டு பத்திரிக்கைகளில் எழுதும் நவ யுக மார்க்ஸ்வாதிகள். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு கூஜா தூக்கும் இவர்கள் சல்மான் ருஷ்டியின் நிலை பற்றி மிக மிக அடக்கி வாசிப்பது திம்மித்தனத்தின் உச்சகட்டம் என்பதைத் தவிர வேறு சொல்வதற்கில்லை.

பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளில்கூட (இன்னும் உயிருடன் இருக்கும்) சிந்திக்கக் கூடிய மக்கள் சிலர் சல்மான் ருஷ்டியை ஏற்கின்றனர்.

ஒரு காலத்தில் An Area of Darkness என்று புத்தகம் எழுதி அதில் இந்தியாவை "உலகின் மிகப்பெரிய சேரி" என்று "வர்ணித்தவர்" தான் நய்பால்.

நெற்றியில் பொட்டு வைத்த பெண்ணைப் பற்றி, "அந்தப் பொட்டின் பொருள், என் தலையில் மூளைக்குப் பதில் களிமண் தான் என்பதே" என்றெல்லாம் கமெண்ட் அடித்தவர் இந்த நய்பால்.

இந்திரா காந்தியைப் போற்றியும் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

இஸ்லாமை விமர்சித்ததற்காக அவரை "ஹிந்து அடிப்படைவாதி", சாதி வெறியன், தீண்டாமை பார்க்கும் மேல்சாதி இந்து என்றெல்லம் பட்டங்கள் கொடுக்கும் இந்திய லிபரலிஸ்டுகள் முன்னிலையில், இஸ்லாமை விமர்சித்ததற்காகவே ப.ஜ.க அவரை ஏற்றுக் கொண்டுள்ளது என்பது வேடிக்கையாகத் தெரிகின்றது.

அவர் இந்துக்கள், இந்தியர்கள் பற்றி வைத்த விமர்சனங்கள் ப.ஜ.க, சங் அமைப்புகள் இன்றும் பல கோணங்களில் எதிர்க்கும் விமர்சங்களே என்றாலும், இவர்கள் மாறி வருகின்றனர் என்பதற்கு நய்பாலை ஏற்பதிலிருந்தே தெரிகின்றது. அதே வேளையில் இன்று இந்தியாவில் எதையும் ஏற்க மனமில்லாமல் சோசியலிசமே குறி என்று இயங்கும் சிந்தனையாளர்களிடையே நிலவும் சிந்தனையை "லிபரல்" என்று சொல்வது உண்மையான லிபரல் சிந்தனைக்கு கேடு என்பதே என் கருத்து.

November 23, 2006

இலங்கைத் தமிழர் மற்றும் பாலஸ்தீன்

இலங்கைத் தமிழர் பிரச்சனையை பல வலைப்பதிவாளர்கள் தங்கள் பதிவுகளில் பதிகின்றனர். இதில் ஒரு Trend என்னவென்றால், இலங்கைப் தமிழர் பிரச்சனையை பாலஸ்தீனர்களுடன் equate செய்துகொள்வது. மிகவும் ஆழமான பிரச்சனையை இது சுலபமாக சுளித்துவிடுகிறது என்பதனால் இதை என்னால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

பாலஸ்தீனர்கள் நாடிழந்து நிற்பதும், தமிழர் நாடு கேட்டு நிற்பதும், இருவேறு தளங்களில் பார்க்கப் படவேண்டிய பிரச்சனைகள் என்றே நான் கருதுகிறேன்.

பாலஸ்தீனர்களுக்கு நாடு இல்லாமல் போனதுக்கான காரணம் சரித்திரம் அறிந்த உண்மை. ஜோர்டான் எகிப்து செய்தது போன்று தமிழர்களுக்காக ஒன்றும் இந்தியா இலங்கையின் மேல் போர் தொடுத்து தமிழருக்குச் சேர வேண்டிய நாட்டை அபகரிக்கவில்லை.

இலங்கையை விட்டுச் சென்ற வெள்ளையர்கள் ஒன்றும் ஈழ நாட்டையும் இலங்கையையும் கோடு போட்டுப் பாகப் பிரிவினை செய்துவிட்டுச் செல்லவில்லை.

பாலஸ்தீன அரசைப் போல் இலங்கை விடுதலைப் புலிகள் ஒன்றும் ஸ்ரீ லங்கா என்ற நாட்டை முழுவதும் அழிக்க நினைப்பதில்லை.

இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு அமேரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் ஆதரவு திரட்டிட வேண்டும், ஐ. நா வின் மூலம் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்றால், அது இந்த நாட்டில் உள்ள Powerful jewish lobby க்களின் கவனைத்தை ஈர்த்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதில் ஆரம்பிக்கலாம்.

கொள்கைக்காக பாலஸ்தீனர்களுடன் (இஸ்லாத்துடன் என்று படிக்கலாம்) இணைந்து கொண்டால் உங்களை தீவிரவாதிகள் என்றே இங்கு சொல்லி ஒதுக்கிவைப்பார்கள்.

அதற்காக பகிரங்க இஸ்ரேலிய ஆதரவு வேண்டும் என்று சொல்லவில்லை. கொஞ்சம் ஒன்றுக்கும் பிரயோசனப்படாத பாலஸ்தீன ஆதரவை அடக்கி வாசிக்கலாம் என்று தான் சொல்ல விழைகிறேன்.

சங்கம்.ஆர்க் ல் தமிழர் பிரச்சனை ஒரு தனிப்பிரச்சனை. மதம் சார்ந்த பாலஸ்தீன, கஷ்மீர், செசன்யா போல அல்ல என்று Vijay Lazarus எழுதியுள்ளார்.

November 20, 2006

உடலுக்குள் ஒரு உலகம்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தயாரிப்பில் இந்த சிறிய வீடியோ படம் வெளியிட்டுள்ளார்கள்.

இதில், செல்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை இசையுடன் கூடிய வீடியோவாக பதிவு செய்யப் பட்டுள்ளது. எல்லாமே graphics தான் என்றாலும் எவ்வளவுக்கெவ்வளவு அறிவியல் அறிவு வளர்ந்துள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு நுணுக்கங்களைப் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் தொடுப்பு

படத்தில் ஒரு ரத்தக் குழாயினுள் ஆரம்பித்து செல்லுக்குள் எப்படி புரதங்கள் தயாரிக்கப் படுகின்றன, எப்படி செல்கள் தங்கள் வடிவத்தைப் பாதுக்காக்கத் தயாரிக்கும் cytoskeleton கள் உருவாகின்றன. என்று ஏகத்துக்கு நுணுக்கமான விஷயங்களை அழகாகப் வடிவமைத்திருக்கின்றனர்.

படத்திலிருந்து Screen shots கள்.

Protein synthesis (ரைபோசோம்கள், புரதத்தை தயாரித்துக் கொண்டிருக்கின்றன)



செல்லுக்குள் ஒரு பார்வை..



சைடோஸ்கெலிடன்கள்



ஒரு ரத்தக் குழாயினுள்...


Golgi complex

November 15, 2006

Lock stock and .....

கய் ரிட்சீ என்ற ஆங்கில (உண்மையான பச்சை ஆங்கில UK திரைப்பட இயக்குனர்/எழுத்தாளர்!) இயக்கிய படங்களில் ஒன்று இந்த Lock Stock and two smoking barrels என்ற 1998 ல் வெளி வந்த இந்த திரைப்படம். வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

கதை இது தான்,

Eddy சீட்டாட்டத்தில் வெல்லும் "லக்" உடையவன். ஒரு நாள் அவனும் அவனது நண்பர்கள் மூன்று பேரும் சட்டவிரோதமாக அதிக பணம் வைத்து ஆடும் சீட்டாட்டத்தை ஒரு லோக்கல் குண்டனான Hatcher உடன் ஆடப் போய். 500,000 பவுண்டுகளை செலுத்தவேண்டும் இல்லையெனில் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு விரலைத் துண்டாக்குவேன் என்ற நிலையில் வீடு திரும்புகின்றனர்.

இந்தப் பணத்தை திரட்டுவதற்கு plan போட்டு, பக்கத்து வீட்டுக்காரனின் வெண்டிலேட்டரில் மைக் வைத்து ஒட்டு கேட்டு, அவன் அடித்த கொள்ளையை டபுள் கிராஸ் செய்து எடுக்கின்றனர். இதற்கெல்லாம் மூல காரணமாக இரண்டு பழமைவாய்ந்த துப்பாக்கிகளை தேடிக் கொண்டிருக்கும் வில்லன் Hatcher அனுப்பிய ஆட்கள் அந்தத் துப்பாக்கியை குறைந்த விலையில் இந்த நான்கு நண்பர்களுக்கே விற்றிருக்கின்றனர்.

எக்கச் செக்க குழப்பத்திற்கு நடுவில் கதையை எப்படி நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் Guy ritchie என்பது தான் ஹைலைட்.

அவரது மற்றொரு படமான Snatch ம் இதே போல் அறுமையான Action comedy படமே.

ஒரு வைரக்கல்லைக் கொள்ளையடித்தவன் கையிலிருந்து அந்த வைரக்கல் எத்தனை பேர் கைமாறுகிறது அதில் வரும் character களின் கதை, எப்படி அவர்கள் மூலக் கதையில் criss cross ஆகின்றனர் என்று lock stock போலவே மாறி மாறி அமைந்த காட்சிகளுக்கு இடையில் நகைச்சுவையுடன் கதை சொல்லப் பட்டிருக்கும்.

எல்லாமே, லண்டனின் நடப்பதால் Cockney ஆங்கிலத்தில் தான் எல்லோரும் பேசுவார்கள். பழக்கமில்லை என்றால் சுத்தமாகப் புரியாது. Sub titles உடன் பார்ப்பது நலம்.

November 9, 2006

ஏசுவும், கிறுத்தவர்களும் ஆரியர்களா ?


சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய்,

நேரிய எதிர் ஒப்பு இன்றி நீத்த ஓர் கடவுள் தூய,

வேரிய கமல பாதம் வினை அறப் பணிந்து போற்றி,

ஆரிய வளன்தன் காதை அறம் முதல் விளங்கச் சொல்வாம்


திரு.ஜடாயு அவர்களின் பதிவில் பெஸ்கி பாதிரியார் ஏசுகிறிஸ்துவை ஆரியன் என்று பாடுவதாக ஒரு அனானி பின்னூட்டியிருந்தார்.

இரண்டாம் உலகப் போர் முன்பு இந்த ஆரிய இனக் கொள்கை மிகவும் பிரபலம். ஹிட்லரின் இந்த ஆரிய இனவாதம் வாடிகனின் ஆசியுடனேயே கடைபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மேற்கத்திய வெள்ளையர்களுக்கு கிறித்துவை, தாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாய் புழுவாய் நடத்திவரும் யூத இனத்தில் பிறந்தவராகக் காட்டிக் கொள்ள அருவருப்பாக இருந்தது. குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் ஏசு யூதர் அல்லர், ஆரியர் என்ற "உயர்ந்த இனத்தைச்" சேர்ந்தவர் என்ற புது வரலாறு இதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டுப் பரப்புரை செய்யப்பட்டது.

ஆரிய என்ற வேர்ச்சொல்லில் இருந்து (கிரேக்க aristos) அரிஸ்டோ, அரிஸ்டோக்ரேட் என்று பல சொற்கள் அதே பொருள்பட ஐரோப்பிய மொழிகளில் இருந்தும், அதை ஓர் இனமாக்கியது இந்தக் காரணத்திற்காகத்தான்.

Stewart Chamberlain போன்ற அடிப்படைவாத கிறுத்துவ இனவெறியர்கள், ஏசுவை யூதர் அல்லர், ஆரியர் என்று பரப்பி யூதப்பெருங்கொலைக்கு வழிவகுத்தவர்கள். இந்த ஸ்டுவர்ட் ஒருபடிமேலே போய், ஏசுவை யூதர் என்று சொல்பவர் வடிகட்டிய மடையர்கள். ஒரு சொட்டு யூத ரத்தம் கூட அவர் நாளங்களில் ஓடவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம் என்றான். இவனின் வாயிலிருந்து உதித்த இன்ன பிற நஞ்சுக்களை இங்கே பார்க்கலாம். பின்னர் ஹிட்லரின் தோல்வி மற்றும் எதிர்பாராத யூத எழுச்சி போன்ற காரணங்களால், வாத்திகன் இந்த ஆரிய இனவாதக் குல்லாவைக் கழட்டி விட்டது.

ஆனால் இந்தியர்களைப் பிரிப்பதற்கு வசதியாக இங்கே மட்டும் இந்த யாதொரு அடிப்படையுமில்லாத இனவாதத்தைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். அதற்கு இந்த திராவிட Fascist கள் ஜல்லி ஒரு பக்கம் என்றால் மார்க்ஸ்வாத மடையர்களின் Tacit support இன்னொறு பக்கம்.

திராவிட Fascist களுக்கு இது அதிகார ஆசையினால் கடைபிடிக்கும் கொள்கை என்றால், எதிர்ப்புவாத மார்க்ஸ்வாதிகளுக்கு என்ன இலாபம் ? If you cannot beat them, Join them என்ற உடன் போக்கு "பொதுபுத்தி" யோ ?

இப்போது அந்த அனானி கேட்ட கேள்வி,


இங்கே ஆரியன் என்பது ஏசுவின் இனமா அல்லது குணமா என்று தமிழ்மண ஆரியதிராவிட இனவியாதிகளே பதில் சொல்லட்டும்.


அதை அப்படியே வழிமொழிந்து இந்த பதிவின் மூலம் இனவாத துவேஷிகளைக் கேட்கிறேன். பதில் உள்ளதா ?

October 26, 2006

குற்றவாளிக் கூண்டில் ஆதி ஷங்கரர்-2

முதல் பகுதி

சரி,

"இந்த திரை எப்படி வேலை செய்கிறது...? எவ்வளவு தூரம் என்னால் பின்னோக்கிச் செல்ல முடியும்? காலத்தில் முன்னோக்கிச் செல்ல முடியுமா?" ஷங்கரர் கேட்க...ஒரு ஒளிப்பந்து "எவ்வளவு காலம் வேண்டுமானாலு பின்னோக்கிச் செல்லும், ஆனால் முன்னோக்கி வருங்காலத்தைப் பார்க்க முடியாது. சம்பவங்கள் நடந்து முடிந்த பின் தான் இங்கே தெரியும்... நேரே திரையைப் பார்த்து பேசினால் அது எங்கே செல்லவேண்டுமோ அங்கே சென்று காட்டும்".

ஷங்கரர் "பின்னோக்கிச் செல்"...முதலில் வெண்திரையில் ஒன்றும் மாறவில்லை... ஒரு சிறிய தாமதத்திற்குப் பிறகு திரையில் காட்சி மாறியது...ஒரு 8000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது " நில்..அங்கே...அந்த இடத்தில் .." சரஸ்வதி நதிக்கரையில் சில ரிஷிக்கள் யாகத்தில் ஈடுபட்டிருந்தனர்...வேதங்கள் அப்போது தான் தோன்றிக் கொண்டிருந்தது...

"அங்கே பார்த்தீர்கள் என்றால்...அவர்கள் அந்த சரஸ்வதி நதியை பல இடங்களில் போற்றிப் பாடுகின்றனர்..."

"முன்னோக்கிச் செல்" அங்கிருந்து திரையில் காலம் சில ஆயிரம் ஆண்டுகள் முன்னோக்கி விறைந்து மிதிலைக்கு வந்தடைந்தது, அங்கே சிவ தனுசை ராமன் தூக்கி நாணை கட்டிக் கொண்டிருந்தார்..சீதாவை வென்று மணமுடிப்பதற்காக...! "முன்னோக்கிச் செல்" என்றார் ஷங்கரர், பல வாணரங்களும் ராக்ஷசர்களும் மாண்டு கிடந்த யுத்த பூமி அது... நடுவில் ராமன் யாகம் செய்து கொண்டிருந்தான்...சிவனின் பக்தனான ராவணனைக் கொன்றதற்காக!

"இன்னும் முன்னோக்கிச் சென்று குருக்ஷேத்திரத்தில் காண்பி" என்றார் ஷங்கரர்...அங்கே ஒரு தேரின் மேல் ஹனுமனின் உருவம் பதித்த கொடியிருந்தது..அந்த தேரில் அர்ஜுனன் நின்று கொண்டிருந்தான்.

" சனாதன தர்மம் என்றுமே சரித்திர அடிப்படையும் கொண்டுள்ளது என்பதற்கு நான் மூன்று சான்றுகள் கொடுத்துள்ளேன். நதிகளை போற்றுதல், புனிதஸ்தலங்கள், போற்றத்தகு புருஷர்கள் என்பதற்கெல்லாம் சனாதன தர்மத்தில் வேத காலம் தொட்டே இடம் இருந்துள்ளது. துவைதம் அதாவது கடவுள்-மனிதன் பாகுபாடு என்பது என்றுமே இருந்துள்ளது, அது இல்லாமல் எந்தப் போரும் நேர்ந்திருக்காது, அதை புதிதாக நான் ஒன்ரும் ஆரம்பிக்கவில்லை"

"ஆனால், அதை மிக இயற்கைக்கு முரனான தளத்திற்கு இட்டுச் சென்ற பெருமை உன்னையே சேரும்" சொன்னது மூன்றாவது ஒளிப் பந்து.

"அது இயற்கைக்கு முரனான தளம் என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது... இப்போதே அதை விளக்குகிறேன்."

"மனித மன நிலையை நால்வகைத் தன்மை கொண்டதாகப் பிரிக்கலாம், செயல்வீரன், சிந்தனையாளான், யதார்த்தவாதி, மற்றும் தத்துவார்த்தவாதி முதலும் மூன்றாவதும் பெண்பால் மன நிலைகள். அவை சரித்திரத்தில் ஈற்பு கொண்டு, அதை பக்தியாக வெளிப்படுத்தும். ஆகவே பெண்கள் என்றுமே சின்னச் சின்ன நிகழ்வுகளை ஞாபகம் வைத்திருப்பர், யார் என்ன உடை அணிந்திருந்தனர், எந்த தேதி, நாள் என்று.
ஆனால், ஒரு ஆண் அவனது திருமண நாளைக் கூட மறந்துபோவான். இரண்டு மற்றும் நான்காவது நிலைகள் ஆண்பால் நிலைகள், அவை தத்துவ அடிப்படை கொண்டவை. ஆகவே ஒரு ஆண் எப்போதும் எந்த நிகழ்வுக்கும் வேர் என்ன என்பதைத் தேடுவான்...மிக சிக்கலான கணித சூத்திரமானாலும் சரி, அல்லது ஒரு பழம் மரத்திலிருந்து கீழே விழும் விஷயமாக இருந்தாலும் சரி.

இதே காரணிகள் மற்ற மனித செயல்களுக்கும் பொருந்தும்."

"முன்னோக்கிச் செல்" திரையில், ஷங்கரர் பிறப்பதற்கு சில வருடங்கள் முன்னர் இலங்கையின் முக்கிய நகரம் கண்டி..அங்கே, சில புத்த பிக்ஷுக்கள் புத்தரின் பல்லை பாதுகாத்து வைத்திருந்தனர் ப்ல்லாயிரம் பக்தர்கள் வந்து தரிசித்தனர்.

"இந்த காலத்தில் தான் நான் பிறந்தேன்,"புத்தமதம் தழைத்துக்கொண்டிருந்தது, இந்து மதத்தை அது இந்த நான்கு நிலைகளிலும் தோற்கடித்து விட்டிருந்தது" அது சகிப்புத் தன்மையற்ற திடக் கொள்கையாக "சிந்தனையாளன்-தத்துவார்த்தவாதி" தளத்திற்கு மாறும் முன்னர் இந்து சனாதன தர்மத்தை தத்துவ அடிப்படையில் அது வென்றிருந்தது. அதற்குப் பிறகு பௌத்தம் இந்த "செயல்வீரன்-யதார்த்தவாதி" தளத்தில் மிக வேகமாக வளரத் துவங்கிவிட்டது, பக்தி மார்க்கமாக சிலை வழிபாடு, கோவில்கள், இத்யாதி.. இந்துமதம் சரித்திரத்தில் அடிப்படையில் மெலிந்து இருந்தத்தால் இந்த அடிக்கு அது தாங்கவில்லை. முற்றிலும் அழிந்தே போய்க் கொண்டிருந்தது"

"அந்த தருணத்தின் தேவை இந்து சனாதன தர்மத்தை உயிர்பிக்கச் செய்வதே...அதனால் அடிப்படையில் இந்த நான்கு நிலைகளிலும் அதை உயிரூட்ட வேண்டிருந்தது. அத்வைதம் சிந்தனையாளன், தத்துவார்த்தவாதி நிலைகளை உயிரூட்டினாலும் செயல்வீரன்-யதார்த்தவாதி நிலைகளை அது எத்தகய மாற்றமும் செய்யவில்லை. ஆகயால், சரித்திர அடிப்படை கொண்ட தர்மத்தை உருவாக்கினால் இந்த நிலைகளும் உயிர்பெரும் என்பது என் நம்பிக்கையாக இருந்தது."

"சரித்திரம்+ தத்துவம் = சரித்திரத்துவம்" முணுமுனுத்தது ஐந்தாவது ஒளிப்பந்து.

"அதே, அத்வைதம் சரித்திர புருஷர்களின் வழிப்பாட்டுடன் கலப்பதால் துவைத கொள்கை உருவாகும் என்பதை நான் முற்றிலும் அறிந்திருந்தேன். இந்த சரித்திர புருஷர்களான ராமர், கிருஷ்ணர் வழிப்பாட்டினால் ஒரே அடையாளம் இல்லாமல் பன்மை அடையாளங்கள் ஒரே மனித மனத்தில் உருவெடுத்தது. அதற்கு முன்னர் மக்கள் பௌத்தர், வேதாந்திகள் என்று தனிமை அடையாளம் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் வைஷ்ணவர், சைவர், ஷக்தர் என்று பர்ப்பல அடையாளங்கள் கொண்டு விளங்குவர், அவர்தம் இஷ்ட தெய்வத்திற்கேற்ப. அவர்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை அவர்களே கூட உருவாக்கிக் கொள்ள முடியும். முன்னர் பௌத்தம் மேலோங்கி இருந்ததால் இந்து சமூகத்திடம் செல்வம் இல்லாமல் இருந்தது. இந்த இஷ்ட தெய்வ பக்தி கோவில்கள் பல எழுப்பியது. இதனால் வேலைவாய்ப்பு பெருகியது, பணம் புரள ஆரம்பித்தது. பாடல்கள், கவிதைகள் ஏற்றுதல், ஆடல் கலை என்று கலைகளும் வளர்ந்தது. மொழி வழம் பெருகி பற்பல மொழிகள் தோன்ற ஆரம்பித்தன. இந்த புதிய மக்கள் மத இஷ்ட தெய்வ அடையாளங்கள் தவிர மொழி அடையாளங்களும் பெற்றனர். இது பன்முகத்தன்மையை வலுப்பெறச் செய்தது. மத்வாச்சார்யார், ராமானுஜர் போன்றோர் இன்னுமொறு அடையாளத்தை மக்களுக்குக் கொடுத்தனர். பௌத்தமும் அதன் ஒரே குரு, ஒரே தத்துவம், ஒரே மொழி, ஒரே விதமான வழிபாட்டு முறை என்ற ஒருமையும் இத்தகய பன்முகத்தன்மையின் தாக்குத்தலைத் தாக்கு பிடிக்கவில்லை. சில் நூற்றாண்டுகளில் அது அழிந்தே போனது. ஆகவே, மத்வாச்சார்யார், ராமானுஜர் போன்றோரையும் இந்த நீதி மன்றத்தில் நீங்கள் விசாரிக்கவேண்டும்.."

" நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நீ சொல்லத் தேவையில்லை. உன் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பௌத்தம் பற்றியது அல்ல. ஆகவே அந்தக் கோணத்தில் விவாதப் பொருளை திசை திருப்பித் தப்பிக்க எண்ணாதே"


"புரிகிறது, மன்னித்துக் கொள்ளுங்கள். நான் இதனால் என்ன சொல்ல வந்தேன் என்றால், இந்து மதம் மானுட அன்றாட விஷயங்களில் மனித இயற்கையான சரித்திர அடிப்படை எண்ணத்தில் வலுவாக இருக்கவில்லை. ஆனால், அது தற்பொழுது சற்று அதிகமாகவே சரித்திர அடிப்படை தர்மமாக மாறிவிட்டது என்பது உண்மை, என் கணிப்பு எல்லாம் பௌத்தத்தை பொருத்தே அமைந்தது என்றாலும் இதற்கு ஒரு நல்ல அம்சமும் இருந்ததை நான் எண்ணிப் பார்க்கவில்லை. முன்னோக்கி என் காலத்திற்குச் செல்"

வெண்திரை பாரசீக பாலைவனத்தின் நடுவில் உள்ள ஒரு நகரைக் காட்டியது. அந்த நகரின் மக்கள் முன்னே கோவிலில் புகுந்து வண்புணர்வில் ஈடுபட்ட படைவீரர்கள் போலவே உள்ளவர்களால் வெட்டிக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தனர்.

"பாருங்கள்!" ஷங்கரர் சொன்னார் "அவர்களும் வைத்தீக மக்கள் போலவே அக்னியை வழிபடுபவர்கள். அவர்களும் சரித்திர அடிப்படை சற்றும் இல்லாதவர்கள். ஆனால், அவர்கள் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டனர். மற்றொன்றைப் பார்க்கலாம்".

திரையில் பல பௌத்த மற்றும் இந்து ராஜ்ஜியங்கள் இந்திய மண்ணில். பௌத்த ராஜ்ஜியங்கள் ஒவ்வொன்றாக அதே படைவீரர்களுக்குப் பலியாகிக் கொண்டிருக்க, இந்து ராஜ்ஜியங்கள் சில விழுந்தாலும், சில சிதரி மறுபடியும் ஒன்று கூடி மேலெழும்பி திருப்பித் தாக்கின.

"இதனால் நமக்கு என்ன தெரியவருகின்றது? சரித்திர அடிப்படை கொண்ட, ஒரே வழிபாட்டு வரைமுறை கொண்ட, பன்முகத்தன்மையில்லாத சித்தாந்தங்கள் அதே போலுள்ள ஆனால் சிறந்த போர் முறைகள் கொண்ட மற்ற பன்முகத்தன்மையில்லாத சித்தாந்தங்களுக்கு பலியாகிவிடும் என்பதே. ஆனால், ஒரு அத்வைதக் கட்டமைப்பினாலான சரித்திர அடிப்படை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட சித்தாந்தத்தை நான் உருவாக்கிவிட்டேன் என்னையறியாமலேயே. மக்கள் வேத வழியை என்றும் விட்டுக்கொடுக்கவில்லை.

தத்துவம் சரித்திரத்திடம் தோற்றே போனது சில இடங்களில், ஆனால் அதற்கு சரித்திர அடிப்படை கொண்ட வெளி நாட்டுத் துவைதக் கொள்கைகளால் தான் அந்தத் தோல்விகளும். கூடப் பிறந்தவர்களிடத்தே சண்டை சச்சரவு எல்லாம் நூற்றாண்டுகள் வெளி நாட்டு துவைதக் கொள்கையினால் ஏற்பட்ட அடிமைவாழ்க்கையினால் தான், சரித்திர அடிப்படை வாழ்க்கைமுறையினால அல்ல. ஒரு கோவில் கட்ட சண்டை, ராமர் கட்டிய பாலத்தைக் கண்டுபிடிப்பது, அழிந்து போன நதியை அளவெடுப்பது எல்லாம் இந்த வெளி நாட்டு துவைதக் கொள்கையுடன் தொடரும் சண்டைகளே. இந்தப் போர் நடந்தே ஆகவேண்டும், அதில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றால், மக்கள் தத்துவ அடிப்படை வாழ்க்கைமுறைக்குத் தானாக மாறிவிடுவர்."

"நீ என்ன சொல்லவருகின்றாய் என்பது எனக்குப் புரிகிறது!" முதல் ஒளிப் பந்து கூறியது, நீல நிறமாக மாறி. "துவைதக் கொள்கை வேறு இடங்களில் துவைத அடிப்படை கொண்டுள்ளதால், சகிப்புத் தன்மையற்று இருக்கிறது ஆகவே அது அழிந்து போகவாய்ப்பும் உள்ளது. ஆனால் நீ ஆரம்பித்து வைத்த துவைதக் கொள்கை அத்வைதத்தின் அடிப்படை கொண்டுள்ளதால் அசூயைத் தன்மை இல்லாமல் உள்ளது, மேலும் வெளி நாட்டுக் கொள்கைகளின் பிடியில்லாம இருக்கையில் இந்த துவைதம் என்ற உடையைக் கழைந்து உண்மையான அத்வைத தத்துவ அடிப்படைக்கு மாறிவிடும்"

"அதுவே" ஷங்கரர் சொன்னார். " நான் ஆரம்பித்து வைத்த அத்வைத அடிப்படை துவைதக் கொள்கை என்பது, இன்னொறு முறை சனாதன தர்மம் எதிரியை அழிக்க எதிரி போல் உருமாருவதே, எதிர் அழிந்தபின் ஒரு ஆத்மா இறந்த உடலைத் துரப்பது போல் இந்த உருவமும் துரந்து உண்மை நிலையை அடையும் சனாதன தர்மம்"

அதற்கு ஏழாவது ஒளிப்பந்து "அதை பொருத்துத் தான் பார்க்கவேண்டும்".

அனைவரும் காத்திருந்தனர்....

பூலோகக் காலம் விரைந்து சென்று கொண்டிருக்க இவர்களுக்கு ஆண்டுகள் நொடிகளாகச் சென்றன.

திரையில் ராமர் கோவில் அதே இடத்தில் கட்டப் படுவது தெரிந்தது.

"இது ஒரு மைல்கல், இன்னும் முன்னே செல்லலாம்" என்றார் ஷங்கரர்.

கொஞ்ச அதிக நேரமே காத்திருந்தனர்.

ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஓடிவிட்டது. " நில்" என்றது ஏழாவது ஒளிப்பந்து. அதே கோவில் சிதிலமடைந்து பாழ் பட்டுக் கிடந்தது. முக்கிய புனித ஸ்தலங்கள், அனைத்திற்கும் இதே கதி. வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் எல்லாம் என்ன்வென்றே தெரியாமல் மக்கள் இருந்தனர். மத அடையாளங்களை மக்கள் வெளியில் காண்பிப்பதை நிறுத்திவிட்டிருந்தனர்"

"பாருங்கள்" ஷஙகரர் தொடர்ந்தார் " துவைதத்தின் தேவையே இப்போது இல்லாமல் போய்விட்டது, ஏனென்றால் வெளி நாட்டுக் கொள்கைகள் அழிந்துவிட்டன. 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அந்த இரண்டு துவைத மதக் கொள்கைகள் சண்டையிட்டனவே அது என்ன ஆயிற்று பார்த்தீர்களா? அன்னாட்டு மக்கள் மதங்களையே வெறுத்து ஒதுக்கிவிட்டு காட்டில் குகைகளில் வாழும் நிலைக்குப் போய் விட்டனர். இந்த மக்கள் துவைதத்தை ஒரு எதிர்வினையாகவே கடைபிடித்தனர் என்பதால் அவர்கள் துவைதத்தைத் தூக்கி எரிந்துவிட்டு அடிப்படை அத்வைதக் கொள்கைக்கு மாறிவிட்டனர். அதோ, அங்கே பார்க்கலாமா?"

ஒரு பள்ளியின் வகுப்பறை, 24ம் நூற்றாண்டு, 13 வயது மாணவ மாணவிகள் ஒரு தீப்பந்தை காற்றில் மிதக்க விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

"உங்க தூரத்து சொந்தக்காரர் போல் இருக்காரே?" என்றால் ஷங்கரர். அங்கிருந்த எந்த ஒளிப்பந்துக்கும் இந்த Joke பிடித்தது போல் தெரியவில்லை.

அந்த மாணாக்கர்கள் "அக்னியே, அனைத்து தெய்வங்களுக்கும் தூதுவனே, நாம் உம்மை வணங்குகிறோம்" என்று வணங்கிக் கொண்டிருந்தனர்...

ஆசிரியர் வருகிறார், "இன்று உங்களுக்கு திடீர் Test வைக்கப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு, "ப்ரஹதாரண்யக உபனிடத்தின் அடிப்படைத் தத்துவங்களுக்கும் எதிர்-புவியீர்ப்பு விசைத் தத்துவத்திலிரிந்து பெறப்படும் உப தத்துவங்களுக்குள் உள்ள ஒற்றுமையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதுங்கள்...ஒரு மணி நேரம். இப்பவே ஆரம்பம்...ம்ம்!"

"துவைதக் கொள்கையை முற்றிலும் துரந்துவிட்டனர் போல் தெரிகிறாது, மக்கள் கோவில், சிலைகளுக்கு வழிபாடு போன்ற விஷயங்களை விட்டுவிட்டனர். வீட்டில் பூஜை அறை என்றெல்லாம் இல்லை, சரித்திர புருஷர்களின் பிறந்த நாட்களையெல்லாம் கொண்டாடுவதில்லை. சனாதன தர்மத்தை விதைத்த ரிஷிகள் எண்ணிய வண்ணம் அதாவது, தத்துவ அடிப்படை வாழ்க்கை வாழ ஆரம்பித்துவிட்டனர். ஆனால், வெளியிலிருந்து ஏதேனும் துவைதக் கொள்கைகளினால் தாக்கப்பட்டால் சனாதன தர்மம் அந்த தாக்குதல் தொடரும் வரை தன் நிலையை எதிரியைப் போல் மாற்றிக் கொள்ளும். அந்த தாக்குதன் நின்றவுடன் மீண்டும் பழய நிலைக்குத் திரும்பும்...இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.."

என்று சொல்லிவிட்டு ஷங்கரர் திரும்பினால்...அங்கே யாருமில்லை....

எல்லாம் மறைந்துவிட்டது.

அண்டத்தின் நடுவில் ஷங்கரர், உடலிலிருந்து பல வண்ண ஒளி வீசத் துவங்கி எல்லா திசைகளிலும் விரியுத் துவங்கியது. சூரிய மண்டலம், நக்ஷத்திரங்கள், பால் வீதி எல்லாம் அவருள் அடங்க அவர் விரிந்து கொண்டே போய் ஒரு வினாடி ஒரு ஒளிப்பிளம்பாக உருவெடுத்து பேரொளி பரப்பிரம்மாதில் கலந்தார்.

(முற்றும்.)

ஆங்கில மூலம்:
மூர் நாம்மின் The Trial of Adi shankara

October 21, 2006

குற்றவாளிக் கூண்டில் ஆதி ஷங்கரர்-1

ஆதி ஷங்கரர் ஒரு வினாடிப் பொழுதில் ஒரு ஒளி பிம்பத்தின் இறுதியில் வந்தடைகிறார், அது ஆதியும் அந்தமும் இல்லாது ஒரு இடம் முன்னேற எண்ணி முதல் அடி எடுத்து வைத்தவுடன் ஷங்கரர் முன்னே இருந்து கண்ணாடி துண்டுகளாக சிதறி காட்சி விரிகிறது.

"நில்" கேட்கிறது குரல்...அங்கேயே நிற்கிறார் ஆதி ஷங்கரர். நிற்பது தரையே இல்லாத ஒரு இடத்தில்...ஒரு புறம் ஒரு பெரிய்ய வெண் திரை, எதிரே 7 ஒளிப்பந்துகள் 7 நிறத்தில்.. அதன் பின்னே ஒரு 50 ஒளிப் பந்துகள் அதே போல் பல்வேறு நிரங்களில்...

இன்னொரு பக்கம் ஒரு சுவர், அதில் மூடிய கதவு.

அந்த ஏழு ஒளிப் பந்துகளில் ஒன்று சற்றே மேலெழும்பி, " நீ இறந்துவிட்டாய்" என்று சொல்கிறது...

கேட்ட ஆதி ஷங்கரர் "ஓ! அது தானா இப்படி.." என்று எண்ணுகிறார்.

ஓளிப்பிம்பம்: "இந்தப் பிறப்பில் நீ மிகவும் சிறப்பாகச் செயல் பட்டுள்ளாய், இது தான் கடைசிப் படி"

"இது என்ன?" என்று ஆதி ஷங்கரர் அந்த வெண் திரையை நோக்கி கையசைத்துக் கேட்கிறார்..

"இது இந்த உலகில் நடப்பனவற்றைக் காட்டும் திரை. அதில் தெரியும் வண்ணங்கள் உன் செய்கையினால் தூண்டப்பட்ட முக்கிய சம்பவங்களின் நிகழ்வுகள்..." ஓளிப்பிம்பம் பதில் சொல்கிறது.

மறுபடியும், ஆதி ஷங்கரர் அந்த மூடிய கதவை நோக்கி "இது என்ன?" என்று கேட்கிறார்...

"பொறுமையாக இரு" எல்லாம் விளங்கும் என்றது... "எப்பவும் இதே போல் கேள்விகேட்டுக் கொண்டு சந்தேகம் தீர்த்துக் கொள்வதே இவன் வாடிக்கை, மூன்று வயதில் சமஸ்கிருத இலக்கணத்தில் சந்தேகம் வந்து தன் தந்தையின் பதிலில் திருப்தி அடையாமல் பக்கத்து ஊருக்கு காட்டுவழியில் நடந்து சென்று வேறு யாரையோ கேட்டுத் தெரிந்துகொண்டவன் தானே..." என்று கிசு கிசுக்கின்றன ளிரண்டு ஒளிப் பிம்பங்கள்.

"அந்தக் கதவு பரப் பிரம்மத்தை அடையும் வழி..." என்று மூன்றாவது ஒரு ஒளிப் பிம்பம் சொல்கிறது. "உனது பூலோக நன்மை தீமைகளைச் சரிபார்த்து உனது செயல்களினால் நீ பரப் பிரம்மத்தை அடைவதா அல்லது பூலோகத்தில் இன்னொறு பிறவி எடுப்பதா என்பது பற்றி இங்கே முடிவெடுக்கப் படும்" என்று சொல்கிறது நான்காவது ஒளி வட்டம்.

"அந்த முடிவை நீங்கள் தான் எடுப்பீர்களா?" கேட்டார் ஷங்கரர்.

"இல்லை, நாங்கள் வெறும் வழக்கறிங்கர்கள் போலத்தான், உனது பூலோகச் செயலுக்கு விளக்கங்களை உன்னுடன் விவாதிப்பதன் மூலமும் உனது செயல்களுக்கு உனது விளக்கத்தை கேட்பதன் மூலமும் பெறுவோம், முடிவு தானாக நிகழும்." என்று அந்த நான்காவது ஒளிப்பிம்பம் சொல்கிறது.

"முடிவு எதுவாக இருந்தாலும், நீ பல நல்ல காரியங்கள் செய்திருக்கிறாய், ஆகயால் குறைந்த பட்சம் நீ பூலோகத்திற்குத் திரும்பச் சென்றாலும் நல்ல வசதி வாய்புள்ள வாழ்க்கைதான் உனக்கு கிடைக்கும், வீடு, கார், பங்களா..." என்று ஐந்தாவது ஒளிப்பிம்பம் அள்ளி விடும் நேரத்தில் ஷங்கரரின் கண்கள் "அங்கே இன்னும் ஒரு முறையா?" என்ற கேள்வி எழுப்பியது...

அதே வேளையில் அந்த வெண் திரையில் ஒரு கரும் புள்ளி தோன்றி மரைந்தது...

"அது என்ன?" வின்வினார் ஷங்கரர்.

"அது உன் சீடன் பத்மபதாச்சார்யாரின் மரணம்" என்று சொல்லிய ஒளிப்பிம்பம் ஒரு வினாடி மௌனித்துவிட்டு "அவன் திரும்ப பூலோகத்திற்குச் செல்கிறான்" என்று சொன்னது.

"என்ன நடக்கிறது இங்கே, அவன் எப்படி இறந்தான், எவ்வளவுகாலம் வாழ்ந்தான், அவன் மறு பிறவி எடுப்பதை எப்படி ஒரு வினாடியில் முடிவெடுக்கிறீர்கள்?" என்று கேட்டார் ஷங்கரர்.

ஓளிப் பிம்பம்:"அவன் நீ இறந்து மேலும் 30 ஆண்டுகள் வாழ்ந்தான்...இதே போல் கீழ் நிலை " நீதி மன்றம்" இருக்கிறது, மற்ற "கீழ் நிலை" மனிதர்களுக்காக, அங்கே அவன் விதி நிர்ணயிக்கப்பட்டது, அந்த " நீதி மன்றம்" பூலோகக் கால அளவில் இயங்கி 13 நாட்கள் எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்கியது..., அத்தகய நீதி மன்றத்தில் வெற்றி பெற்று வருபவன் தான் இங்கே விசாரிக்கப் படுவான், இங்கே காலம் மிக மெதுவாகச் செல்லும், யுகங்கள் பல கடந்துவிடும் ஆனால் நமக்கு அது ஒரு வினாடி போல் இருக்கும், ஆனால் இது தான் கடைசி நிலை ..இதற்குப் பிறகு பரப்பிரம்மம் தான்."
ஷங்கரர்: "இங்கே அவன், அவள் என்றெல்லாம் இல்லை, இந்த தோற்றம் உண்மையல்ல, இந்த உடை உண்மையல்ல, அந்த கதவும் உண்மையல்ல இல்லையா?"
ஒளிப்பிம்பம்: "இந்தத் தருணத்தில் இதற்கு விடை கிடையாது, பொறுமையாக இரு, இது உன் விசாரணைக்காக ஏற்படுத்தப் பட்ட மாயை என்பதைத் தவிற"

"பிரச்சனையைப் பேசுவோம்" நடுவில் இருந்த ஒரு ஒளிப் பிம்பம் சொன்னது. " நீ முதல் இரண்டு கீழ் நீதி மன்றங்களில் வெகு சுலபமாக வெற்றி பெற்றுவிட்டாய், ஆனால்"..
"ஆனால்" ஏழாவதாக அமர்ந்திருந்த ஒளிப் பிம்பம் சிவப்பாக மாறி தொடர்ந்தது.." நீ மிக அடிப்படைத் தவறு ஒன்றைச் செய்துவிட்டாய் என்பது என் எண்ணம், சனாதன தர்மத்தின் மிக அடிப்படை கோட்பாட்டை நீ தகர்த்துவிட்டாய், முந்தய ரிஷிகளின் பல காலத் தவப்பலனால் ஏற்படுத்தப் பட்ட கட்டமைப்பை நீ தகர்த்துவிட்டாய் என்பது என் கருத்து".

" நான் சரியாக என் பணியைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்பார்த்தேன்" என்றார் ஆதி ஷங்கரர், "ஆனால், இது, ...என்ன தவறு செய்தேன் நான்?"

" நீ சனாதன தர்மத்தை, தத்துவ அடிப்படை தர்மத்திலிருந்து, சரித்திர அடிப்படை தர்மத்திற்கு மாற்றி விட்டாய்"

ஒரு நீண்ட அமைதி நிலவியது...

" நான் விளக்குகிறேன்" அந்த ஏழாவது ஒளிப் பிம்பம் ரத்தச் சிவப்பாக மாறி இருந்தது, "பல காலம் முன்னே இருந்த ரிஷிக்கள் சனாதன தர்மத்தை நிலை நிருத்திய போது, அவர்கள் மனித குலம் இருக்கும் வரை தர்மமும் இருக்கும் படி அதன் விதிகளை அமைத்தனர். தொடர்ச்சியே மிக முக்கியம். அதனால், தத்துவத்தை அதன் அடிப்படையில் நிருவினர். அப்பொழுது தான், காலம் மாற மக்களும் தத்துவங்களைக் காலத்திற்கேற்ப பிரயோகிப்பர். ஆகயால் தத்துவங்கள் தொடர்ந்து நிற்கும். அந்த ரிஷிகளின் பெயர்கள் உனக்குத் தெரியுமா? இல்லை, ஏனென்றால் பெயர்கள் தெரிந்தால் அவரைக் கடவுளாக்கிவிடுவர் என்பதால், அவர்கள் பெயர்களை மறைத்துவிட்டனர். எப்போது அதைத் துவக்கினார்கள் என்று தெரியுமா? இல்லை, அது தெரிந்தால், வருடா வருடம் அந்த நாளைக் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால் அதுவும் மறைக்கப் பட்டது. இதெல்லாம் அந்த ரிஷிகள் முன்னமே அறிந்ததினால் தான் அதை ஒரு ஆதியும் அந்தமும் இல்லாத சரித்திரம் என்ற சங்கிலியால் கட்டுப் படுத்த முடியாத நிலையில் தர்மத்தை விதைத்தனர். அந்தச் சங்கிலியை உன் செயல் அந்தத் தர்மத்தின் மேல் கட்டியது"

ஷங்கரர்: "போதும் நிறுத்துங்கள்... நான்.."

ஒளி: "பொறு, நீ பேசி உன் நிலையை விளக்க உனக்கு வாய்ப்பு வரும், முதலில் நாங்கள் சொல்வதை முழுமைகக் கேள்"

மற்றொரு ஒளிப் பிம்பம் தொடர்ந்தது.."முதலிலிருந்தே, மனிதனின் நடத்தைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, அவன் எவ்வளவு பக்தியாக வழிபடுகிறான் என்பதில் முக்கியத்துவம் இல்லை. "கர்மத்தின்" அடிப்படையில் சமூகம் இயங்கியது. வழிபாட்டின் அடிப்படையில் அல்ல. வழிபாடும் இறை நம்பிக்கையும் தனிப்பட்ட விஷயம், கோவில்கள், உருவங்கள், சிலைகளெல்லாம் கீழ் நிலை வழிபாட்டு முறைகளாகவே பார்க்கப் பட்டன. மக்கள் இஷ்ட தேவதைகளைப் பொருட்படுத்தாமல் எங்கு வேண்டுமானாலும் இறைவனை வணங்கலாம், வழிபாட்டின் மொழி அக்னியாக இருந்தது. உருவங்களும் சிலை வழிபாடும் பழங்குடி வழிபாட்டு முறைகளின் எச்சங்களே. அதனாலேயே, இனச் சண்டைகள் பல இந்த உருவங்கள் அடிப்படையில் நிகழ்ந்தது. எந்த இடத்திற்கோ, ஒரு யோகிக்கோ, ஒரு குறிப்பிட்ட நாளிற்கோ முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை. புனித யாத்திரை என்றால் என்னவென்றே தெரியாது. ராமர், கிருஷ்ணர் போன்ற பிறவிகளின் நற்குணங்களை தங்கள் வாழ்வில் கடைபிடிக்க மக்கள் எண்ணினர். அவர்கள் உண்மையில் இருந்தார்களா, அப்படியென்றால் எங்கே பிறந்து, வளர்ந்தனர் போன்ற சின்னச் சின்ன விஷயங்களில் மக்கள் அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. என்றாவது கவுடில்யர் புனிதயாத்திரை சென்றதாகக் கேள்விப் பட்டிருக்கிறாயா? இல்லை திருவள்ளுவர் தான் "சிவ ராத்திரி" கொண்டாடியதாகச் சொல்லக் கேட்டிருக்கிறாயா?"

"அடிப்படையில்"...தொடர்ந்தது ஆறாவதாக அமர்ந்திருந்த ஒளிப்பந்து, "சரித்திரம் என்பது மக்களின் அன்றாட வாழ்வில் சிறிதும் முக்கியமில்லாத சமாச்சாரமாக இருந்தது, மக்கள் முன்னோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர், பின்னோக்கி அல்ல. ஆனால், நீ எல்லாவற்றையும் மாற்றிவிட்டாய்.. உன் செயலினால் தொடர்ந்து கொண்டிருக்கும் பின் விளைவுகளை உனக்கு காட்டியாகவேண்டும். அதோ அந்த கரும்புள்ளியைத் திரையில் பார்"

"அது என் செயலின் பின்விளைவாகத் தான் இருக்கவேண்டும்.."

"சரியாகச் சொன்னாய், அது ராமானுஜாச்சார்யார்...அவர் இன்னொறு சரித்திர அடிப்படை வாழ்வுமுறையை உபதேசித்துக் கொண்டிருக்கிறார்"

"லௌகீக உலகம் மாறிக் கொண்டே இருக்கும்" என்று நான்காவது ஒளிப் பந்து பேச ஆரம்பித்தது.." நதிகள் தோன்றி மறையும், மலைகள் எழுந்து கரையும். காடுகள் அழிந்து பாலை நிலங்களாகும், பாலை நிலம் செழிப்படைந்து காடுகளாகும். ஆகயால், முக்கிய இடம், குறிப்பிட்ட காலம், ஒரு தனி மனிதன் என்பதெல்லாம் இயற்கைக்கு ஒவ்வாத விஷயங்கள். இயற்கையின் கோட்பாடுகளை தகற்காத சிந்தனைகள் மட்டுமே நிரந்தரமானவை. சனாதன தர்மத்தினை விதைத்த ரிஷிக்கள் இதை இறந்த உடலை புதைக்காமல் தீயிட்டு நிறுபித்தனர். உலகில் உள்ள பல கலாச்சாரங்கள் இறந்தவர் உடலைப் புதைப்பதும் அதில் தங்கம் வெள்ளி என்று லௌகீக உலகின் செல்வங்களைச் சேர்த்து புதைப்பது என்பதைக் கொண்டுள்ளனர். சமாதியே ஒரு சிறப்புமிக்க இடமாகக் கொண்டாடப் படுகிறது. புனித யாத்திரை செல்லும் இடமாகவும் மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட வாழிபாட்டு முறை ஒரு வாழ்வியல் முறையா...? இல்லை, இது சாவு-இயல்-முறை!. மனித உடலைப் புதைத்து வழிபடும் முறையே, சரித்திர அடிப்படை கொண்டது. இதே, அந்திமக் கிரியையாக உடலை தீயிலிடுவதன் மூலம் அந்த மனிதனின் லௌகீக வாழ்க்கை அழிக்கப் படுகின்றது. அவன் உடுத்திய உடைகள் தூரக் கடாசப் படுகின்றன. எகிப்திய அரசர்களின் தனிப்பட்ட விஷய்ங்களை பிரமீடுகள் கட்டிப் பாதுகாத்தது போல், ராமரின் உடைகளையோ, கிருஷ்ணரின் செறுப்பையோ இந்திய மக்கள் பாதுகாத்து கண்காட்சிப் பொருளாக, வணங்கும் பொருளாக மாற்றவில்லை. ராமர் எந்த இடத்தில் உயிர் துரந்தார்? கிருஷ்ணர் உடல் எங்கே தகனம் செய்யப் பட்டது? தெரியாது, தேவையில்லை.! அவர்களின் நல்ல கருத்துக்களை மக்கள் பின்பற்றுவதே முக்கியமாகக் கருதினர்...ஆனால் நீ! வந்து இதையெல்லாம் கெடுத்து விட்டாய்!"

"பின்னோக்கிச் செல்!" அந்த வெண் திரையை நோக்கி நான்காவது ஒளிப் பந்து கட்டளையிட்டது.
வெண் திரையில் காட்சி விரிந்தது....அடர்ந்த காட்டின் நடுவில் ஒரு நதி, நதிக்கரையில் ஷங்கரர் நடந்து சென்று கொண்டிருக்கிறார்... அங்கே ஓரிடத்தில் ஒரு ராஜ நாகம் படமெடுத்துக் கொண்டிருந்தது...ஆனால் என்ன அதிசயம், அதன் தலைக்குக் கீழே ஒரு தவளையை கொடூர வெயிலிலிருந்து அது பாதுகாத்துக் கொண்டிருந்தது...! இதைப் பார்த்த ஷங்கரர், இங்கே தெய்வீகம் நிறைந்துள்ளது என்று கூறி சாரதா மாதா கோவில் கட்ட நினைக்கிறார்.
"நில்" வெண்திரையில் காட்சி அப்படியே "Freeze" ஆகி நிற்கிறதி..."இது தான் உனது முதல் அடி, சரித்திர அடிப்படை வாழ்க்கை முறைக்கு, ஒரு நாள், அந்த ஒரு நொடியில் ஒரு நாகம் தானே உண்ணக்கூடிய தவளையை வெய்யிலிலிருந்து பாதுகாத்தது என்றால் அந்த இடம் ஒன்றும் என்றுமே இறைவனின் அருள் பெற்ற இடமல்ல" அந்த ஒளிப் பந்து சொன்னது. "மேலே செல்"

வெண் திரையில் வேறொரு காட்சி... "ஒரு நதியின் அடிப்பகுதியில் ஆதி ஷங்கரர் நீந்தி வந்து அங்கே கிடந்த ஒரு சிவ லிங்கத்தை எடுத்து கரைக்கு கொண்டு வருகின்றார். அதை ஷங்கரர் அங்கே கூடியிருந்த மக்களிடம் காட்டி "இந்த சிவ லிங்கம் புத்த மதத்தவர்களால் பல நூற்றாண்டுகள் முன்னர் நதியில் வீசப் பட்டது. இப்போது நமக்கு அது கிடைத்துள்ளது இந்த மூர்த்தியை இங்கே இந்த புனிதஸ்தலத்தில் வைத்து பூஜிக்கவேண்டும் இங்கே தான் சிவன் நெடுந்தவம் புரிந்துள்ளார்" என்கிறார்.

" நில்" மறுபடியும் வெண் திரைக்காட்சி Freeze ஆகிறது..."என்ன செய்தாய் பார்த்தாயா...? யாருக்குமே தெரியாத ஒரு புது விஷயம் அங்கே சிவன் நெடுந்தவம் புரிந்தது என்பது, அதை வைத்துக் கொண்டு அந்த இடத்தில் ஒரு புனிதஸ்தலம் கட்டிவிட்டாய். மறுபடியும் ஒரு சரித்திர அடிப்படையில் புனிதஸ்தலம். இது வெரும் ஆரம்பமே...இதே போல் கிருஷ்ணர், ராமர் என்று உன் கொள்கையினால் இதையெல்லாம் வழிப்பாட்டுத் தெய்வங்களாக்கிவிட்டாய். அதற்குக் கோவில்கள் திரும்பும் திக்கெல்லாம். பாட்டெழுதுகிரேன் பேர்வழி என்று அயோத்தி, மிதிலா, துவாரகா என்று சரித்திர அடிப்படையில் புனிதஸ்தலங்களைக் கோடிட்டு காட்டிவிட்டாய். இஷ்டதேவதையிடம் சரணாகதி ஆவது மோக்ஷத்திற்கான வழி என்று புதிய கோட்பாட்டை ஆரம்பித்துவிட்டாய், மனிதனைத் தவிர கடவுள் என்று தனிப்பட்டு திகழும் சக்திவுள்ளது, அதை வழிபடவேண்டும், போற்றவேண்டும், அதன் முன் வணங்கவேண்டும் என்பதே இயற்கைக்கு முரனான பழங்குடித் தத்துவம்"

"ஆனால் நான் அத்வைதம் என்ற தத்துவத்தையும் சொல்லியுள்ளேன்" மிக அமைதியாக ஷங்கரர் சொன்னார்.

ஒரு சிறிய அமைதி நிலவியது...

"ஆம், அதனால் தான் இந்த நிலைவரை உன்னால் வர முடிந்தது, உன் நல்ல செயல்கள் நீ ஆரம்பித்து வைத்த இந்த கெட்ட செயல்களை எவ்வாறு ஈடு செய்கிறது என்பதைப் பார்க்கத்தான் இவ்வளவு விவாதம், உனக்கு உன் கருத்தைச் சொல்ல வாய்ப்பு கிடைக்கும் இன்னும் இருக்கிறது கேள்"
வெண்திரையில் காட்சி வேகமாக நகர்ந்தது....ராமானுஜர் தோன்றி மறைந்து சில நூற்றாண்டுகள் நகர்ந்தது...புத்த மதம் அழிந்து கொண்டிருந்தது...பக்தி மார்க்கம் மென் மேலும் வளர்ந்து கொண்டிருந்தது... "மெதுவாகச் செல்" என்றது ஏழாவது ஒளிப்பந்து.

"இவர்கள் யார்? சப்த ரிஷிகளா?" என்று வியந்து கொண்டிருந்தார் ஷங்கரர்.

திரையில் காட்சி தோன்றியது...ஒரு கோவில், அதில் பக்தர்கள் ஆண்கள் பெண்கள் என்று பஜனை பாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று சில படைவீரர்கள் உள்ளே நுளைந்து அவர்கள் கடவுள் பெயரைக் கத்திக் கொண்டே ஆண்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தனர்...கர்பக் க்ருஹத்தில் ஒளிந்து கொண்டிருந்த பெண்களை அங்கேயே உடைகளைக் களைந்து வண்புணர்ச்சி செய்தனர்... ஒருவர்கூட எதிர்த்துப் போராடவில்லை...."ராமா" கிருஷ்ணா" என்று கத்திக் கொண்டு இருந்தனர்...அதே படை வீரர்கள் அந்த கடவுள் சிலைகளை உடைத்து நொறுக்கினர். தங்கம் வெள்ளி நகைகளை எடுத்துச் சென்றனர்...

"இது வெறும் ஆரம்பமே! பார் எப்படி அவர்கள் எதிர்த்துப் போராடவேண்டிய கடமையிலிருந்து தவறுகிறார்கள் என்று. சரித்திர மஹா புருஷர்களை துணைக்கு அழைத்து என்ன நடக்கப் போகிறது. எல்லாம் நீ அரம்பித்து வைத்த செயலினால் தான். இது வேத தத்துவத்தைக் கடைபிடிக்கும் ஒரு சமூகத்திற்கு நடந்திருக்கவே நடந்திருக்காது. பார்க்கலாம் எவ்வளவு காலம் இப்படிப் போகுமென்று. சரித்திர அடிப்படை கொண்ட மக்கள் சமூகம் தங்கள் சரித்திரம் தான் உயர்ந்தது, என்று அடுத்தவர்களிடம் நிறூபிப்பதே பெரும் செயலாகக் கருதிக் கொண்டு இருப்பர்...அதுவே சரித்திர அடிப்படை சமூகத்தின் இயற்கை."

திரையில் காட்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன...காலம் ஓடிக்கொண்டிருந்தது...திடீரென்று ஏழாவது ஒளிப்பிம்பம் எதையோ பார்த்துவிட்டு "மெதுவாகச் செல்" என கட்டளையிட்டது.

1670 AD என்ற காலத்தில் திரையில் காட்டியது..தக்கான பீடபூமியின் நடுவில் ஒரு கிராமத்தில் ஒரு யோகி தன் கடைசி சொற்பொழிவை ஆற்றிவிட்டு. பிரணவ மனிதிரத்தை ஜபிக்கிறார். அவர் கைகளில் அசையும் ஜப மாலை நின்றவுடன் சுற்றி சுவர்கள் கட்டப் பட்டு ஒரு கோவில் எழுப்பப் படுகின்றது. பக்தர்கள் வெள்ளமாகப் பெருகி அங்கே வர ஆரம்பிக்கின்றனர்.


"என்ன நடந்தது பார்த்தாயா? சரித்திர புருஷர்களுக்கு, அவர்கள் பிறந்த இடம் போன்றவற்றிற்கு பக்தி என்பது அவர் இறந்தது அந்த இடத்தில் புனித ஸ்தலம் அமைத்து பிறப்பிடத்தை வழிபடுவது போல் இறப்பிடத்தை வழிபடுகின்றனர். என்ன தான் அத்வைதம் என்பதை நீ விளக்கியிருந்தாலும் மனிதன்-கடவுள் என்ற துவைத கொள்கையை நீ அன்றாட வாழ்வில் ஊக்குவித்ததனால் அரை குரை துவைதமாம ராமானுஜர் கொள்கையும், பின்னர் வந்த மத்வ மதக் கொள்கையின் முழுமுதல் துவைதமும் சமூகத்தில் வந்தடைந்து விட்டது. இதற்குப் பிறகு பக்தி மட்டுமே, எல்லா தத்துவ அடிப்படை எண்ணங்களும் நின்று விடுகின்றது. இஷ்ட தேவதையிடம் சரணாகதி, கோவில், பூஜை. ஒரு நாளுக்கு எவ்வளவு முறை, என்று, எப்படி பூஜிப்பது போன்ற அபத்தங்கள் மட்டுமே உள்ளன. வேதங்கள் கிடைக்கப் பெற்ற நாள் முதல் பல தத்துவங்கள் தோன்றி மறைந்துள்ளன. முதலில் சாங்கியரினுடய தத்துவம், அடுத்து, மைமாம்ஸ, மைத்ராயணி, மத்யமாதின, கௌதும்ன, அன்வ, சௌனக, பைப்பால்த, ஜைமின்ய, என்று பல..சில தத்துவங்கள் காலத்தால் அழிந்தன, சில நிலைத்து நின்றன. தொடர்ச்சியாக மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபாவமே தேடலின் முதல் படி. அது என்றுமே இருந்தது. ஒரு சில தத்துவங்கள் அழிந்த போதும் அடுத்துவந்தவை மக்கள் சாஸ்திர சம்பிரதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டால் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை இழந்துவிடுவர். அது நடந்தே விட்டது, உன்னால்"

"என்னால் தான் எல்லாமே நடந்தது என்று சொல்வதை தயவு செய்து நிறுத்தவும், என் நிலை விளக்கம் இன்னும் நான் கொடுக்கவில்லை" என்றார் ஆதி ஷங்கரர்.

ஒளி: "சரி, அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்."

"அடுத்த பின் விளைவுகளைப் பார்ப்போம்..." திரையில் காட்சிகள் தோன்றின. வெள்ளையர்கள் வந்து சென்றனர். மோஹன் தாஸ் காந்தி கொல்லப் பட்டிருந்தார். அவரது அந்திம கிரியை நடந்த இடத்தை அலங்கரித்து ஒரு பெரும் நினைவுச் சின்னம் எழுப்பப் படுகிறது. அவர் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்கின்றனர்.

"அவரது கொள்கைக்கு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்" என்றது ஒரு ஒளிப் பந்து.
திரையில் இந்திய நகரங்களில் அனைத்துவித மக்களும் தாங்கள் காந்தியக் கொள்கையைக் கடைபிடிப்பவர்கள் என்று சொல்லிக் கொண்டு அதே போல் உடை அணிந்து செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருந்தனர். திருடர்கள், ஜால்ராக்கள், மொள்ள மாரிகள் காந்தி பெயரைச் சொல்லிக் கொண்டு வோட்டு வாங்கிக் கொண்டிருந்தனர். நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருந்தனர். காந்தியின் சிந்தனைகளை யாரும் கடைபிடிப்பதில்லை. அது கடைபிடிக்கமுடியாது என்பது விவாதப் பொருளல்ல என்றாலும், அடி மனதில் காந்தி பெயரைச் சொல்லி எதைச் செய்தாலும் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் தான்."

"ஒரு சாதாரண மனிதனை சரித்திர புருஷராக்கி வணங்க ஆரம்பித்தால் அவர் கடைபிடித்த சிந்தனைகள் செயலிழந்து போய். அந்த ஆளின் பெயர் மட்டுமே நிற்கும். இதுவே இயற்கையின் நியதி" சொன்னது அந்த ஏழாவது ஒளிப்பந்து.

திரையில் ஒரு வீட்டின் உட்புறத்தில் ஒரு வயோதிக ஆள் தன் மூன்று மகன்களுடன் ராமர், கிருஷ்னர், சிவா, சீதா இத்யாதி..இத்யாதி சிலைகள் கொண்ட பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். பூஜை முடிந்ததும் பிரசாதத்தை வீட்டிலுள்ள் அனைவரும் பிரித்துக் கொடுக்கிறார் அந்த வயோதிகர். அழைப்பு மணி ஒலிக்கிறது. கதவைத் திறந்தால் அங்கே, ஒரு வக்கீல்.
வரவேற்பு, குடிக்க டீ, காபி எல்லாம் முடிந்தது. வீட்டின் ஹாலில் எல்லோரும் குடும்ப சமேதமாக, பெரியவர் தன் மனைவியுடன், அவரது மகன்கள் தங்கள் மனைவி குடும்பத்துடம் அமர்ந்திருக்கின்றனர்.

வக்கீல்: "நீங்கள் கேட்டது போல் papers ready செய்துவிட்டேன்."

வயதான பெரியவர்: " நன்றி வக்கீல் சார், ரொம்பவே வேகமாகச் செய்துவிட்டீர்கள். என் உடல் நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆகயால் என் சொத்துக்களை என் குடும்பத்தாருக்குப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்துவிட்டேன். இதுவே எனது உயில்.. வீடு பெரிய பையனுக்கு, நில புலன்கள் இரண்டாவது பையனுக்கு, Factory கடைசி மகனுக்கு."
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வீட்டில் ஒரே கூச்சல் குழப்பம்...."Factory எனக்குத்தான் வேண்டும்..." "என் அப்பா ஒன்றும் இந்த வீட்டிற்காக உங்களை எனக்கு கட்டி வைக்கவில்லை... மரியாதையாக நில புலன்களை எடுத்துக் கொள்ள கேளுங்கள்..." மனைவிகளின் குரல்கள் மகன்களின் திருப்தியின்மை.... நடுவில் பவமாய் அந்தப் பெரியவர்.

" நில்" ஒளிப் பந்து சொல்ல திரையில் காட்சி Freeze...! "பார்! பூஜையில் என்றுமே தனக்கு நேரும் கஷ்டத்தை எண்ணி வருந்தாத தன் கணவரிடம் நச்சரிக்காத பெண்ணை பூஜித்தனர். முற்றும் துரந்த மஹா புருஷரைப் பூஜித்தனர். இருந்தும், அவர்கள் வாழ்ந்து காட்டிய தத்துவத்தை மறந்துவிட்டு கூடப் பிறந்தவர்களுடனேயே தெரு நாய்கள் போல் சண்டை போட்டுக் கொள்கின்றனர். பார், சரித்திர அடிப்படை சமூகம் மனிதனி மனத்தை எப்படி மாற்றுகிறது என்று...பார், கடவுள்-மனிதன் என்று பாகுபாடு பிரித்தால் அது செய்யும் லீலையை...!"

காட்சி ஒரு நீர் மூள்கிக் கப்பலுக்குள் "பார், துவாரகா வைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர்..." அடுத்த காட்சியில் ஒரு விண்வெளிக் கோளில் படங்கள் பதிவாகிக் கொண்டிருந்தது..."பார், ராமர் கட்டிய பாலத்தை படம் பிடித்துக் கொண்டும், மறைந்த சரஸ்வதி நதியை படம் பிடித்துக் கொண்டும் இருக்கின்றனர்.. இதெல்லாம் எதற்காக, எதற்காக பல்லாயிரமாண்டு முன் நடந்த சம்பவங்களுக்கு சான்றுகள் தேடுகின்றனர் ? நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சனாதன தர்மம் ஒரு கோவில் கட்டுவதை வைத்துக் கொண்டு இப்படி அடித்துக் கொண்டு சீரழிகிறது...எல்லாம் எதனால்...?"

"இது போதுமா? இன்னும் வேண்டுமா?"


ஆதி ஷங்கரர், நிமிர்ந்தார்...." நீங்கள் முடித்துவிட்டீர்களா?" ..." நான் விளக்கலாமா?"

(தொடரும்...)

பின் குறிப்பு: இது ஒரு மொழி பெயர்ப்பு முயற்சி. இரண்டு பாகமாக பிரித்து எழுதுகிறேன். ஆங்கில மூலத்தின் சுட்டி இரண்டாவது/இறுதி பாகத்தில்.

October 20, 2006

மடைதிறந்து பாயும் நதி...தமிழ் Rap

மடைதிறந்து பாயும் நதி...தமிழ் Rap


தமிழில் ராப் பாடல்...

ஓவராக அமேரிக்க ghetto கருப்பின மக்களின் பாடல் போல் ஒரு தோற்றமளிக்கிறது.

லிரிக்ஸும் கொஞ்சம் Strong தான்...என்றாலும் போற்றத்தகு முயற்ச்சி. அச்சு அசல் காப்பி அடிக்கவேண்டுமா என்று எண்ணத்தோன்றுகிறது...

October 15, 2006

இணைய ரேடியோவில் புதிய முயற்சி

www.pandora.com என்ற இணைய தளத்தில், Music genome Project என்று ஒரு புதிய முயற்சி செய்துவருகின்றனர். ஆங்கில பாடல்கள் மட்டுமே என்றாலும், இதில் இசையை வகைப்படுத்தி சேமித்துவைத்திருக்கிறார்கள். எப்படிப் பட்ட பாடல்கள், எத்தகைய இசை கருவிகள் உபயோகப் படுத்தப் பட்டிருக்கின்றன, Vocal tonation, Jazz, Rock, R&B என்று.

உங்களுக்குப் பிடித்த Artist பெயர் அல்லது Album பெயர் கொடுத்தால் அதிலிருந்து பாடல்கள் கேட்கலாம். பாடல் ஓடிக்கொண்டிருக்கையில் அந்த பாடல் உங்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்று வாக்கு போட்டீர்கள் என்றால் அடுத்த பாடல் அதற்கேற்ப கொடுக்கும்.

உதாரணமாக Smashing Pumpkins என்ற Artist கொடுத்து கேட்டால், அந்த இசை கலைஞர்களின் தனித்தன்மை என்னவோ அதே போல் தனித்தன்மைகள் உள்ள மற்ற இசை கலைஞர்களை நாம் கண்டுகொள்ளலாம்.

Smashing pumpkins களுக்கு, முக்கிய அம்சங்கள், மூல ஆண் Vocalist, Hard rock இசையின் மூலம், Tonal variation என்று சொல்லக் கூடிய பாடும் விதம் என்று அதை வகைப் படுத்தியிருக்கிறார்கள். அதே போல் வகைப் படுத்தப் பட்ட மற்ற பாடல்களை அது இசைக்கும். அதே விதமாக, Perl Jam, Pixies, Nirvana போன்ற இசை குழுக்களின் பாடல்கள் நீங்கள் கேட்கலாம்.


இதன் மூலம் உங்கள் விருப்பப் பாடல்கள் கேட்பது மட்டுமில்லாமல் அதே போல் உள்ள மற்ற இசைக்குழுக்களின் பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம். க்ரெடிட் கார்ட் இருந்தால் பாடல்களை விலைக்கு வாங்கலாம். புதிய Artist களைத் தெரிந்துகொள்வது இதன் முக்கிய அம்சம்.



எல்லாம் காப்பிரைட் சமாச்சாரம் என்பதால் திருட்டுத்தனமாக டவுண்லோட் எல்லாம் செய்ய முடியாது.

இது போல் தமிழ் பாடல்களை வகைப்படுத்தி இணையத்தில் வைத்து விருப்பங்கள் ஏற்றவாரு கொடுக்க முடியவேண்டும்.

October 6, 2006

அலெக்ஸாண்டர்

சென்ற வாரம் திண்ணையில் திரு சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) எழுதிய கட்டுரை உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள்-2 மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) வெளிவந்திருந்தது.

அதில் அவர்

"ஆசிய அதிபதி" [Lord of Asia] என்று தன்னைப் பீற்றிக் கொண்டு, அலெக்ஸாண்டர் காடு, மலை, பாலைவனம் கடந்து, கடும் மழை, வெப்பம் தாங்கிக் கொண்டு ஆ·ப்கானிஸ்தானில் உள்ள ஹிந்துகுஷ் மலைத் தொடர்களைத் தாண்டி, எதைப் பற்றியும் அறியாத பிரதேசங்களில் துணிவாகப் படைகளுடன் கால்வைத்தார். ஐந்து நதிகள் பாயும் சிந்து சமவெளிப் பரப்பில் அலெக்ஸாண்டர் நுழைந்து இந்திய மன்னன் புருஷோத்தமனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.



Porus (புருஷோத்தமன்) ஐ வெற்றி கொண்டதாக எழுதியிருந்தார்.

பள்ளிப் பாடங்களில் தோற்ற புருவிடம் அலெக்ஸாண்டர் "உன்னை எப்படி நடத்த நீ விரும்புகின்றாய்" என்று கேட்பதாகவும், அதற்கு புரு "ஒரு அரசனை நடத்துவது போல் நடத்து" என்று ஹீரோ மாதிரி பதில் சொல்வதும் நிகழ்ந்ததாக படித்திருக்கிறோம். ஆனால், E. A. Wallis Badge என்பவர் ''Life and Exploits of Alexander the Great'' என்ற தனது புத்தகத்தில், அலெக்ஸாண்டர் புருவிடம் தோற்றதாகவே குறிப்பிடுகிறார்.


In the battle of Jhelum a large majority of Alexander's cavalry was killed. Alexander realized that if he were to continue fighting he would be completely ruined. He requested Porus to stop fighting. Porus was true to Indian traditions and did not kill the surrendered enemy.


மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர் தோற்றார் என்றால் அவரை மாவீரன் என்று சொல்ல முடியாது என்பதால் அவர் தோற்றதை மறைத்து வெற்றி பெற்றார் என்று கூறுகின்றனர். ஆனால் சரித்திரம் மாறிவிடாது. அலெக்ஸாண்டர் புருஷோத்தமனுடன் சமரசம் செய்துகொண்டதற்கான சரித்திர சான்றுகள் உள்ளன, வென்ற அலெக்ஸாண்டர் ஏன் புருஷோத்தமனுடன் சமரசம் செய்து கொள்ளவேண்டும்..?


அலெக்ஸாண்டர் சட்லஜ் (hyphsis) நதிக்கரையின் வழியாக தன் படைகளைத் திரட்டிக்கொண்டு கடலை அடைந்து பாபிலோனியா திரும்பியது தெரிந்ததே. அப்போது எதிர்கொண்ட "மல்லிஸ்" படைகளுடன் புருவின் படைகள் அலெக்ஸாண்டருடன் சேர்ந்து போரிட்டதாக சரித்திரம் கூறவில்லை. புரு தோற்றிருந்தால் அவன் படைகள் அலெக்ஸாண்டரை ஆதரித்து "மல்லிஸ்" படைகளுக்கு எதிராக போரிட்டிருக்கும்!


ப்ளூடார்க் (plutarch) அலெக்ஸாண்டர் புருவுக்கு தங்கங்கள் பல கொடுத்ததாகவும் சொல்கிறார். வென்ற அரசன் தோற்ற அரசனுக்கு தங்கம், வெள்ளி கொடுக்கும் முறை எந்த காலத்தில் இருந்தது?


சில ஆண்டுகளுக்கு முன் வந்த அலெக்ஸாண்டர் திரைப்படத்தை திரு ஜெயபாரதன் பார்த்தாரா என்று தெரியவில்லை. ஆலிவர் ஸ்டோன் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து பின் தன் படத்தை இயக்கியிருக்கிறார். அதில் தெளிவாக அலெக்ஸாண்டர் புருவிடம் தோற்றது காட்டப் படுகின்றது.


இந்த "ராஜாவை நடத்தும் முறையில் நடத்து" என்று தோற்ற புரு டயலாக் அடிப்பதாக படிக்கும் நான்சென்ஸையெல்லாம் எவ்வளவு நாள் தான் நாம் படித்துக் கொண்டிருப்பது?


புருஷோத்தமன், இந்திய மண்ணின் மைந்தன், அலெக்ஸாண்டரை தோற்கடித்தான். இந்தியரான நாம் அதை நினைத்து பெருமை கொள்ளவேண்டும்.

இது தொடர்பாக திண்ணையில் என் கடிதம்.

இந்த யூ டியூப் சுட்டியில் இருக்கும் வீடியோவில் அலெக்ஸாண்டர் தோற்கடிக்கப் படுவது பார்க்கலாம்.

September 30, 2006

யோம் கிப்பூர்-יום כפור


...In the seventh month, on the tenth day of the month, you shall afflict your souls, and you shall not do any work ... For on that day he shall provide atonement for you to cleanse you from all your sins before the L-RD. -Leviticus 16:29-30



யோம் கிப்பூர் என்பது மன்னிப்புக் கேட்கும் நாள் (day of attonement) என்று ஹீப்ரூவில் அர்த்தம். அது ஒவ்வொறு ஆண்டும் செப்டம்பர் அக்டோபர் மாத காலத்தில் (ஹீப்ரூ நாட்காட்டியில் டிஷிரி 10 ம் நாள்) வரும்.

இது யூதர்களின் மிக முக்கிய மத விடுமுறை நாளாகும். பல யூதர்கள் மதக்கட்டுபாடுகள் பல கடைபிடிக்காவிட்டாலும் இந்த நாளை நிச்சயம் அனுஷ்டிப்பர். இந்த ஆண்டு இது அக்டோபர் 1 மாலை முதல் அக்டோபர் 2 மாலைவரை (ஹீப்ரூ நாட்காட்டியில் ஒரு நாளின் கணக்கு சூரிய அஸ்தமனத்திற்கு பின் துவங்கி, அடுத்த நாள் சூரியன் அஸ்தமிக்கும் வரை).

மேலே குறிப்பிட்ட tanakh (ஹீப்ரூ விவிலியம்) படி, உணவு இல்லை. மாலை முதல் அடுத்த நாள் மாலை வரை. இதில் வண்டிகள் செல்லாது, ரோட்டில் அனைத்து கடைகளும் அடைத்திருக்கும். யாரும் கார் ஓட்டாதலால் ரோடுகள் வெரிச்சோடிக் கிடக்கும். ஆஸ்பத்திரி எமர்ஜென்சி வார்டுகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மட்டுமே செயல்படும்.

மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இருப்பதை விட, மக்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருப்பர். மன்னிப்பு என்றவுடன் synegouge தேவாலயம் சென்று பிரார்த்தனையில் ஈடு பட்டு மன்னிப்பு கேட்பது போல் இல்லாமல், நண்பர்கள் உறவினர்களிடம் பேசி தாங்கள் இதற்கு முன்னால் ஏதேனும் தீங்கு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளவேண்டும். அப்போது தான் ஆண்டவன் நம்மை மன்னித்து அவர் வைத்திருக்கும் நல்ல பிள்ளைகள் புத்தகத்தில் நம் பெயரை சேர்த்துக் கொள்ள கையொப்பமிடுவாராம்..!! அதற்காக எல்லோரும் g'mar Hatima Tova -May you be inscribed in the book of life என்று வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருப்பர்.

ட்ஸாஹ்ல் (IDF) ல் உள்ள பல பெரிய்ய ஆஃபிசர்களும் லிவு எடுத்துக் கொண்டு குடும்பத்தைக் கவனிக்கச் சென்றுவிடுவர். முழு இஸ்ரேலும் Stand Still.

1973 ம் ஆண்டு, எகிப்து, சிரியா, ஜோர்டான், ஈராக் நாடுகள் கூட்டமைப்புப் படைகள் சோவியத் கொடுத்த போர் விமானங்கள் தளவாடங்கள் உதவியுடன் யோம் கிப்பூர் அன்று இஸ்ரெலைத் தாக்கின. அவர்கள் எண்ணம், இஸ்ரேல் இப்படி இருக்கும் போது தாகினால் போரில் வெற்றி நிச்சயம் என்பதே. (புனித ரமலான் நோன்பு காரணமாக பல அரபு முஸ்லீம் படைகள் போருக்குச் செல்ல முராண்டு பிடித்தாலும் கடைசியில் சென்றனர்).

சிரியா கோலான் மலைப்பகுதியையும், எகிப்து சைனாய் பாலைவனப் பகுதியையும் தாண்டி இஸ்ரேலுக்குள் புகுந்துவிட்டது, (1967) 6 நாள் போருக்கு பிறகு இந்த பகுதிகள் இஸ்ரேல் வசம் இருந்தது. அன்று துவங்கிய யுத்ததில் இஸ்ரேலுக்கு முதலில் பேரிழப்புகள் இருந்த போதிலும், சிக்கிரமே விடுப்பில் இருந்த கம்மாண்டர்களை அழைத்து போருக்கு தயாராகி பதில் தாகுதல் துவக்கியது. இதில் அரபு கூட்டமைப்புப் படைகளுக்கு பெருத்த சேதம் நிகழ்ந்து முடிவில் இஸ்ரேல் வெற்றி கொண்டது சரித்திரம். இந்த பொர் பற்றி விக்கிபீடியா சுட்டி.

September 21, 2006

விமானநிலைய Wi-fi

இப்பொழுதெல்லாம் விமான நிலையங்களில் இண்டர்னெட் வசதிக்காக வயர் லெஸ் (wi-fi) வசதி செய்யப்பட்டு வருகின்றது. சென்னை விமான நிலையத்தில் பிரச்சனையின்றி இயங்குவதாக கேள்விப்பட்டேன்...

மதுரை விமான நிலையத்தில் போர்டு எல்லாம் மாட்டிவிட்டுருந்தார்கள்....இந்த விமான நிலையத்தில் வை-பை வசதியுள்ளது என்று.

அட, நம் விருமாண்டி ஊர் மதுரையில கூட வை-பை வசதி இருக்கே என்று மடி கணினி எடுத்து சோதித்துப் பார்த்தால்...BSNL க்கு பணம் கொடுக்காமல் கனெக்ஷன் கட். !! லாகின் கடவுச்சொல் வேண்டும் என்று காட்டியது திரை. கேட்டால் அதில் ஏதோ பிரச்சனை என்று விமான நிலைய இன்சார்ஜ் தெரிவித்தார்.

பம்பாய் சர்வதேச விமான நிலையத்தில் மணிக்கு 100 ரூ கொடுத்து வாங்கவேண்டிய TATA IndiCom Wi fi. எத்தனையோ பேர் வந்து போகும் விமான நிலையத்தில் எப்போதோ, ஐந்தோ, பத்து நிமிடமோ பயன் படுத்தும் வசதிக்காக 100 ரூ செலவு செய்யவேண்டுமா...? என்ன முட்டாள் தனம்.

உலகம் முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் இலவச வை-பை வசதி கொடுக்கும் இந்த வேளையில் ஒரு டிக்கட்டுக்கு சராசரியாம 1500 ரூ வரை airport tax - விமான நிலைய சேவை வரி வசூலிக்கும் நம் விமான நிலையத்தின் நிலை படு மோசம்.

மற்ற சர்வதேச விமான நிலையத்தின் சேவைவரி 20-25 US$ மட்டுமே. நம்மூரில் அந்த அளவுக்கு பணம் வாங்கியும் கிடைப்பது இரண்டாம் தர சேவையே. ஏன்?

September 7, 2006

மதுரெ மதுரெ..

வீட்டில் விசேஷம் காரணமாக மதுரை வந்து சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், புத்தகக் கண்காட்சி நினைவுக்கு வர, சிறப்பு பேருந்தெல்லாம் நம் பாண்டியன் போக்குவரத்துக் கழகம் இயக்குகின்றது என்பதை அறிந்து சி2 வட்டப் பேருந்து பிடித்து தமுக்கம் திடலை அடைந்தேன்...
புத்தகக் கண்காட்சி பற்றி சொல்லும் முன்னர் வட்டப் பேருந்து பற்றியும் அதை மதுரையில் அறிமுகம் செய்யக் காரணம் பற்றியும் சொல்லிவிடுகின்றேன்...
மதுரையில் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே கட்டிய ரயில்வே மேம்பாலம் பெரியார் பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்தது. அதை ஹானரபிள் அம்மா காலத்தில் பெரிய மேம்பாலமாகக் கட்டி முடிக்க திட்டம் தீட்டி கட்ட ஆரம்பித்தனர். கட்ட ஆரம்பித்தவர்கள் முதலில் பழைய பாலத்தை உடைத்துவிட்டதால். கோச்சடை, அரசடி, அச்சம்பத்து, விராட்டிபத்து, அடிக்கடி வலைப்பதிவுகளில் அடிபடும் பெயரான நாட்டார்மங்கலம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் டவுன் பஸ்கள் ரயில் நிலைய மேற்கு நுளைவுவாயிலில் நிருத்தி வைத்திருந்தனர். அப்போதிருந்தே நூதன சிந்தனையாக பெரியார் ஆரம்பித்து ஆரப்பாளயம் சென்று வேறுவழித்தடம் வழியாக மாட்டுத்தாவணிக்குப் போய் திரும்ப பெரியார் நிலையம் வரும் வட்டப் பேருந்து இயக்கப்பட ஆரம்பித்தது.
பாலம் கட்ட ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டாண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், ஹானரபிள் அம்மா இப்போது அவ்வளவு ஹானரபிள் பதவியில் இல்லாத நிலையிலும் பாலம் கட்டுமானப் பணிகள் நின்று நிதானமாகச் செல்கின்றது, ப்ராக்கெட்டில் "ஆமையைவிட" என்று போட்டுக் கொள்ளவும்.
அப்பாடா, ஒரு வழியாக கோச்சடை போக பெரியார் நிலையத்திலிருந்து வசந்த நகர் சுற்றி, பைப்பாஸ் ரோடு பிடித்து மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் கட் அடித்து தற்பொழுது டவுன் பஸ்கள் செல்வது போல் புத்தகக் கண்காட்சிக்கு வந்துவிட்டேன்...டீ டூர் (de tour) என்றால் இது தானோ?
சரி, தமுக்கம் திடலில் நடக்கும் புத்தகக் கண்காட்ச்சியில் ஏகப்பட்ட ஸ்டால்கள்..(statistics களை ஹிந்து, எக்ஸ்பிரஸ் நாளிதள்களில் இடம் பெறும் செய்தியில் பெற்றுக் கொள்ளுங்கள்!)
சில பல ஸ்டால்களில் "ஸ்டேல்" (stale) சரக்குகள் மட்டுமே இருந்தது மன வேதனை அழித்தது...
ஆன்மீகப் புத்தகக் கடைகளும், பெரியாரின் கருத்துக்கள் போதிக்கும் புத்தகக் கடைகளும் மிக அருகாமையில் கண்ணில் பட்டது...இதுவரை அடிதடி நடந்ததாக செய்திகல் வரவில்லை.!! :)
ஆங்கிலப் புத்தகங்கள் வெகு சிலவே இருந்தன...அதுவும் எல்லாம் ஹைதர் அலி காலத்துப் பழையப் புத்தகங்கள்...New releases இல்லாமல் என்ன புத்தகக் கண்காட்சி?!!
தமிழில் அப்படி இல்லை, புதிய புத்தகங்கள் ஏராளமாய்க் காணப்பட்டது...ஆனால், தமிழில் புத்தகத்தின் புலம் (subjects) பாலிடிக்ஸை விட்டு வெகுதூரம் செல்வதாக இல்லை. 100 க்கு 90 புத்தகங்கள் பாலிடிக்ஸ் அல்லது ஆன்மீகமாகவே காணப்படுகின்றன...பயோடெக்னாலஜி, இன்ஃபர்மேடிக்ஸ், ஜீனோமிக்ஸ் போன்ற அறிவியல் புலங்களில் தமிழ் புத்தகங்கள் காணக்கிடைப்பதில்லை. இந்தப் புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கவில்லை.
கிழக்கு பதிப்பகத்தின் வெளியான, திரு பா. ரா வின் நிலமெல்லாம் ரத்தம், மற்றும் ஹெஸ்புல்லா புத்தகத்தை வாங்கினேன்...( அதைப் பற்றி அடுத்த வலைப்பதிவு வரும்! )
இங்கு கண்ணில் பட்ட இன்னொறு சமாச்சாரம், பத்து கடைக்கு ஒரு கடையில் கார்ல் மார்க்ஸும், சே குவேராவும் இழித்துக் கொண்டும், முஷ்டியை மடித்து வானத்தில் குத்திக் கொண்டும் நின்றது.
மாவோவின் கவிதைத் தொகுப்பு என்று புத்தகங்களும் காணப்படுகின்றன...
காந்தியைவிட, அப்துல் கலாமைவிட கார்ல் மார்க்ஸ் போஸ்டர்கள் கண்ணில் பட்டது தான்...மனதை உருத்தியது...
இருந்தும் அதில் ஒரு சந்தோஷம் என்னவென்றால் செத்த ideology ஐ பழய புத்தகத்திலும், நூலகங்களிலும் தான் காண முடியும்!!
சீக்கிரமே அந்த நூலகள் ப்ழய நூலகங்களை அடையும் அல்லது துருப் பிடித்துப் போன மூளையை மேலும் செல்லரிக்கவைக்கும் என்று நம்புகின்றேன்...
கல்கியின் படைப்புகள் தனி ஸ்டாலே இருந்தது...150 ரூ முதல் 350 ரூ வரை விலை வித்தியாசத்தில் பல பொன்னியின் செல்வன்கள் கிடைக்கின்றன...ஹாரி போட்டர் சீரீஸ் போல் அழகாக பேக் செய்யப்பட்ட பெட்டியில் வரும் புத்தகங்களாக கல்கியின் பொன்னியின் செல்வன் இன்னும் வராமல் ஐந்து புத்தகதை இன்னும் சணல் நூல் அல்லது பிளாஸ்டிக் கயிறு கட்டி விற்கின்றனர்...!!
கொடுக்கும் காசுக்கு குவாலிட்டி எதிர்ப்பார்க்கக்கூடாதா?
350 ஐ 500 ஆக்கி நல்ல gsm தாள்களில் அச்சடித்து பேப்பர் பேக் (paper back) புத்தகத்தை தரமான முறையில் பேக் செய்தால் பொன்னியின் செல்வனை வாங்க மாட்டார்களா?

August 27, 2006

அந்த (கோழி) குஞ்சு என்னுடயது

அமேரிக்க பேச்சு ஆங்கிலத்தை தமிழில் அப்படியே மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. மூலம் இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்து வெளிவந்தது Funtoosh.com ல்.

..
Have a nice day! -- நல்ல நாளை எடுத்துக் கொள்

What's up? -- மேலே என்ன இருக்கு?

Yo, Baby, What's up? -- குழந்தை யோ, மேலே என்ன இருக்கு?

Cool man! -- குளிர் மானிடா!

Don't mess with me, dude. -- என்னுடன் அசிங்கம் பண்ணாதே, ஏய் தம்பி.

Check this out, man -- இதை சோதனை செய், மானிடா

Listen buddy, that chick's mine, okay!? -- கேளு நண்பா, அந்த (கோழி) குஞ்சு என்னுடயது, சரியா!?

Hey Good looking, What's cooking? -- ஏய் சுந்தரி, என்ன சமயல்?

Are you nuts? -- நீங்க கொட்டையா?

Son of gun -- துப்பாக்கி மகனே

General Body meeting -- பொதுவான உடல் சந்திப்பு

Keep in touch -- தொட்டுகிட்டே இருங்க

August 21, 2006

திண்ணையில் சில விளக்கங்கள்

சென்ற வாரம் திண்ணையில் திரு. சின்னக்கருப்பன் அவர்களும், திரு. பீர்முகம்மது அவர்களும் இஸ்ரேல் பற்றி கட்டுரைகள் எழுதியிருந்தனர்.

சின்னகருப்பன் அவர்களது மத்திய கிழக்கு போரும் இந்தியாவும்

பீர்முகம்மது அவர்களது புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை

எனது விளக்கங்கள்

சின்னகருப்பன் அவர்களுக்கு

பீர்முகம்மது அவர்களுக்கு

August 20, 2006

A for Apple macintosh

ஏகப்பட்ட கணினி சார்ந்த பொருட்கள் மார்கெட்டில் வந்து கொண்டு தான் இருக்கின்றது...ஆனால் என்னைப் போன்ற ஆப்பிள் வெறியர்களுக்கு, ஆப்பிளின் புதிய சந்தை சமாச்சாரங்களின் மேல் ஒரு அலாதி பிரியம் தான்...

ஆப்பிளின் புதிய Camcoder ஐ பால் (iBall)



புதிய வருங்கால ஆப்பிள்



ஐ பாட் கைக் கடிகாரம்.



ஆப்பிளின் புதிய ஐ பாட் போன் iTalk.


ஆப்பிளின் 30 ஆண்டுகள் நிரைவையொட்டி வெளிவந்த Documentary
Apple 30th Anniversary Act I: the rise and fall
EpicEmpire.com


மேலும் விபரங்களுக்கு

1. Tech blog
2. The cult of mac
3. Cult of mac

August 15, 2006

போரின் ஞாயம்

இஸ்ரேல் - ஹெஸ்பல்லா போர் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் (ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தால்) என்னுடய சொந்த அனுபவம் சில,

மத்தியகிழக்கில் வாழ்ந்த சில காலத்தில் என் அரசியல் - சமூக நிலைப்பாடு பெரிதும் மாறுதல் அடைந்ததை நான் முதலில் ஒத்துக் கொள்ளவேண்டும். இந்தியாவில் இருந்த வரை பாலஸ்தீனர்களுக்காகப் பரிதாபப் பட்டதும் உண்டு, இஸ்ரேலின் அராஜகங்கள் என்று படித்து கொதித்ததும் உண்டு. இன்று I Stand for Israel என்று என் வலைப்பதிவின் வலது புறத்தில் HTML கோடை சேர்த்துவிட்டு வலைப்பூ எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இஸ்ரேலில் கூடவே வேலை பார்க்கும் நண்பர்களுடன் பேசியதில் தெரியும்/அறியும் விஷயங்களில்,

இந்த லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஞாயமானதே என்று பலரும் கருதுகின்றனர். ஏன் என்று அவர்களிடம் கேட்டால், ஹெஸ்பல்லா தீவிரவாத அமைப்பைக் கட்டுப்படுத்த லெபனான் அரசு முன் வரவில்லை. ஹெஸ்பல்லாக்கள் இஸ்ரேலிய படை வீரர்களைக் கடத்தி பணயக் கைதிகளாக்கித் ஏற்கனவே இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்கின்றனர். லெபனான் மக்கள் ஹெஸ்பல்லாக்களை ஆதரிக்கின்றனர். ஆகயால் தீவிரவாதிகள், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் மேல் தாக்குதல் நடத்துவது தவறேதுமில்லை என்று கூறுகின்றனர்.

என்னைப் பொருத்த வரையில் பிரச்சனை எப்போது பெரிதாகிறது என்றால், கோபம் கட்டுக் கடங்காமல் போகும் போது...!!

இரண்டு வீரர்களை ஹெஸ்பல்லாக்கள் கடத்தினர், இஸ்ரேலியர்கள் பதிலாக பெய்ரூத்தை விமானம் கொண்டு தாக்கினர், கற்பிணிப் பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்தனர். கோபம் கட்டுக் கடங்காமல் போனது...! ஹைபா, ஹதேரா, ஆக்கோ மீது கத்யூஷா ராக்கெட்டுகள் விழத்தொடங்கின.

கேட்டால் பல இஸ்ரேலியர்கள் ...ஆம், இது தான் இங்கே சகஜம்...என்கிறார்கள்...!! ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும், ஆளைக் கொல்வதும் தான் சகஜமா?!! ஆம், இது தான் மத்திய கிழக்கு என்கிறார்கள்.

அவர் அவர் ஞாயம் அவர் அவருக்கு...!

யாருக்கும் விட்டுக் கொடுத்துச் செல்ல மனமில்லை. இஸ்ரேலில் அடிப்படைவாதிகள் உள்ளனர் என்றால் அதைவிட தீவிர அடிப்படை வாதிகள் அரபு நாடுகளில் உள்ளனர். ஓப்பனாக, இஸ்ரேலின் அழிவில் தான் அமைதி உள்ளது என்று பிரகடனம் செய்பவர்கள்.

இஸ்ரேலியர்கள் ஏன், பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இரண்டு வீரர்களைக் கடத்தியவுடன் லெபனான் மீது போர் தொடுத்தது என்று எனகும் தோன்றியது. நண்பர் IDFல் இருப்பவர், அவரிடம் கேட்டேன்...

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் இஸ்ரேலை ஒரு பலமில்லாத நாடாகப் பார்ப்பர் இந்த அரபு தேசத்தவர். சரி. அவர்கள் சொல்வதை ஒத்துக் கொண்டு பணயக் கைதிகளை விடுவித்தால் நாளை மேலும் பல படை வீரர்கள், சிவிலியன்கள் கடத்தப் படுவர். இஸ்ரேலின் ஞாயம் ஒரு போராட்டம், வாழ்வதற்கான போராட்டம். அமைதிப் பேச்சுவார்த்தையை கோழைத்தனம் என்று பார்க்கும் அரபு வீரத்திடம் எப்படி பேச்சு வார்த்தை நடத்த முடியும்? என்று விளக்கமளித்தார்.

ஞாயமாகப் பட்டது.

இதன் காரணமாகவே IDF செயல்களில் ஞாயம் உள்ளது என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது...ஹெஸ்பல்லாக்கள், போர் நிறுத்தத்தை வெற்றி என்று கொண்டாடுவதிலேயே தெரியவில்லையா? எது மத்திய கிழக்கில் வீரம் என்று கருதப்படுவது?

வீரம் என்றால் எதிரியன் நேருக்கு நேர் நின்று போராடுவது அல்ல. எதிரியின் Weak spot ஐ அடிப்பதும், எங்கே அடித்தால் வலிக்குமோ, அங்கே அடிப்பதும் தான் வீரம் உலகின் இந்தப் பகுதியில். இங்கே பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் எல்லாம் இல்லை. அவன் அழியவேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது.

இஸ்ரேலியர்கள இவர்களுக்கு நடுவில் வாழ்கின்றனர் என்பதை நாம் மறக்கக் கூடாது, சொகுசாக கலிபோர்னியாவிலோ, அல்லது தில்லியிலோ, சிங்கப்பூரிலோ உட்கார்ந்து கொண்டு உலக ஞாயம் பேசும் நாம்.

இஸ்ரேலுக்கு வரும் முன்னர், எல்லோரின் விருப்பமும் அமைதியாக வாழ்வதும் அவர் அவர் வேலையைச் செய்துகொள்வது தான் என்று எண்ணியிருந்தேன், இந்த இரண்டாடுகளில் மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தை என்பது சிறு பிள்ளைத்தனம் என்பதை என்னால் உணர முடிந்தது.

Not every body is content with peaceful co-existence. என்று என்னுடன் ஒரே அப்பர்ட்மெண்டில் வாழும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் நாகடானி கிண்டலாகச் சொன்னது நினைவுக்கு வருகின்றது...!! :D

August 11, 2006

குண்டுவெடிப்புகள் - நினைவுச்சின்னங்கள்

இஸ்ரேலில் பாலஸ்தீனர் தற்கொலைப் படை தொடர்ந்து குண்டுவெடிப்பு நடத்திய காலம் உண்டு. அத்தகய தருணத்தில் இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவீவ்ல் நடந்த குடுவெடிப்பும் அதில் உயிரிழந்தவர்கள் பெயரையும் வைத்து ஒரு சிறு நினைவிடம் கட்டி அந்த குண்டுவெடிப்பை மனதில் நீங்காத இடமாக்கிவைத்துள்ளனர். இதன் முக்கிய காரணம், மக்கள் தீவிரவாதத்தை என்றும் நினைத்துக் கொண்டு தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுதலின் அவசியம் வேண்டும் என்றே. Constant vigilence is the price for freedom. அத்தகய constant vigilence தொடர்ந்து அதை மனதில் பதித்தால் தான் வரும்.



வரலாற்றில் கெட்ட சம்பவங்களை மறத்தல் கூடாது.

Those who forget the past are condemned to repeat it. என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள்.

மும்பையில் இரண்டு முறை 1993ல் மற்றும் 2006 ல் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எத்தனை நினைவிடங்கள் உள்ளன?

எத்தனை பேர். 1993ல் குண்டுவெடிப்பு நடந்தது பற்றி இன்று நினைத்துப் பார்க்கின்றனர்?

August 10, 2006

ஆரியக் கேள்வி!

திராவிடத் தமிழர்கள் என்று வலைத்தளம் அமைத்து சில வலைப்பதிவாளர்கள், முன்பு நான் விவாதித்திருந்த ஆரியர் என்றொரு இனமுண்டா? மற்றும் ஆரியர்-திராவிடர் பூர்வீகக் குடிகள் ஆதாரங்கள் என்று என் கருத்துக்களை ஏதோ மிகப் பெரும் ஆரியர் - திராவிடர் ஆராய்ச்சியாளன் கருத்துப் போல் மதிப்பளித்து பதில் எழுதுகின்றோம் என்று என்னை உயர்த்தி வைக்கின்றனர். அதற்கு என் நன்றி.

திராவிடத் தமிழர்கள் தொடராக எழுதிய 4-5 பதிவிற்கும் என்னால் விடையளிக்க முடியும். ஆனால் அதற்கு முன்னர் என் சில கேள்விகளுக்கு அவர்கள் தெளிவான முறையில் ஆம். இல்லை என்று விடையளிக்கவேண்டும்.


ஆரியர் என்றொரு இனம் (Race) உண்டா?

வட நாட்டு ஆரியர்கள் தென்னாட்டு திராவிடர்கள் என்ற கருத்தை நம்புகின்றீர்களா?

சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் அவர்கள் வந்தேறிய ஆரியர்களால் புலம் பெயர்ந்து தற்பொழுதய தமிழகத்தில் வந்தேறிவிட்டனர் என்று நம்புகிறீர்களா?

குதிரை ஆரியர் வருகைக்கு முன்னர் இல்லை என்று திருவாளர் விட்சல் பரைசாற்றுவதை நம்புகின்றீர்களா?

மொழியியல் ஆராய்ச்சி என்று சொல்லிக் கொண்டு இந்தோ ஆரிய மொழி என்றும், திராவிட மொழி என்றும் பிரித்தது எதனால், மொழியினாலா, அல்லது இனத்தினாலா?

திராவிடம் என்ற கருத்தாக்கத்தை "ஆரியம்" என்ற கருத்தாக்கத்தின் எதிர் வினை என்றே சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் (அதில் இன அடிப்படை ஏதும் இல்லை), பிராமண எதிர்ப்பு ஏன்? தமிழ் பேசும் பிராமணர்கள் திராவிடர்கள் இல்லையா?

August 7, 2006

ஒரு அரேபியப் பெண்ணின் பார்வை...

பார்க்க படம் (இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் விண்டோஸ் மீடியா ப்ளேயர் தேவை)



இது கலாச்சாரங்களுக்கு இடையே ஆன போர் அல்ல...இது காட்டுமிராண்டித் தனத்திற்கும் மானுடத்திற்கும் இடையிலான போர் என்கிறார்.



நன்றி:

August 5, 2006

Turn left at the end of the World


Sof ha olam smola

2004ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் Israeli Film academy விறுது பெற்ற படம். இயக்குனர் அவி நெஷர் இஸ்ரேலில் பெரிய இயக்குனர்களில் ஒருவர். சமீபத்தில் அவரிடம் துணை இயக்குனராகப் பணிபுரியும் ஒரு பெண்ணிடம் பேசியதின் விளைவாக இந்த படத்தின் DVD வாடகைக்கு எடுத்துப் பார்த்தேன்.

ஆறு நாள் போருக்குப் பிறகு இஸ்ரேலுக்கு இறக்குமதியாகும் பல யூதக் குட்ம்பங்கள் சேர்ந்து வாழும் குடியிருப்பில் ஒரு இந்தியக் குடும்பம் வருகிறாது. அந்த 1960 காலகட்டத்தில் (Post colonialism era) எத்தகய மனோபாவத்தில் மக்கள் இருந்தனர். குறிப்பாக இஸ்ரேலியப் பொதுமக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்று கதை அமைந்திருக்கும். டெல் அவீவ், போன்ற பெரிய நகரவாழ்க்கை இல்லாமல் நெகவ் பாலைவனப்பகுதியில் இருக்கும் குடியிருப்பில், ஏர்கனவே வந்த மொராகன் மற்றும் புதிதாக வந்திறங்கிய இந்தியக் குட்ம்பமும் எவ்வாறு முட்டிக் கொள்கின்றனர்..முக்கியமாக மொராக்கன் குக்டும்பப் பெண் இந்தியர்கள கறுப்பாக இருப்பதை கிண்டல் செய்வதும், இந்தியக் குடும்பப் பெண் பிரஞ்சு மொழி பேசும் மொராக்கன் குடும்பத்துப் பெண்கள் எவ்வாறு வெட்கமில்லாமல் ஆடைஅணிகிறார்கள் என்று அங்கலாய்ப்பதும் ..படத்தில் இழையோடிய அந்தப் புராதன காலத்து Racist mentality தெளிவாகத் தெரியச் செய்திருக்கிறார் அவி நெஷர்.

வந்த இடத்தில் ஏகப்பட்ட வேலைவாய்ப்பு இருக்கும் என்று நம்பி வந்த குடுமத்திற்கு மிஞ்சுவது ஏமாற்றமே...

சாரா ஒரு 17 வயதுப் பெண், அவள் தந்தை தாய் தம்பியுடன் வந்திறங்குகிறாள். நிகோல் ஒரு மொராக்கோ தேசத்திலிருந்து வந்த யூத குடும்பத்தைச் சேர்ந்தவள், அவளின் நட்பு சாரா விற்கு கிடைக்கிறது. சாரா எழுதும் தன் கதை புத்தகம் வாயிலாகச் சொல்லப்படுவது போல் அமைந்த இந்த கதையில் கொஞ்சம் காமெடி தனியாக இல்லாமல் கதையுடன் சேர்ந்தே வருவது சிறப்பு.


இந்தியக் குடும்பம் ஆன்கிலம் தான் சிறந்தது, ஆங்கில சோப்பு தான் சிறந்தது என்றும் மொராக்கன் குட்ம்பம் பிரஞ்ச் தான் சிறந்தது அந்த நாட்டு சோப்பு தான் சிறந்தது என்று துணி காயப்ப் போடும் இடத்தில் முறைத்துக் கொள்வதில் துவங்கி ஏகப்பட்ட சண்டைகள்.

இரண்டு குட்ம்பங்களும் வந்தது ஐரோப்பிய காலனியாதிக்க நாட்டிலிருந்து தான்.

எப்படி இந்த இரண்டு குடும்பங்களும் ஒண்றிணைகின்றன, எத்தகய நிகழ்வுகள் அவர்களை இணைய வைக்கிறது என்று சற்றே emotional ஆகும் பின்பாதி மற்றும் கொஞ்சம் சுவாரஸ்யம் என்று படம் ஜாலியாகப் போகும் ஒரு Drama.

படத்தில் இந்தியக் குடும்பங்கள் இருப்பதால் கிரிக்கெட் மேட்ச் எல்லாம் உண்டு. இந்தியக் குடும்பத்தின் தலைவர் அதாவது சாரா வின் தந்தையாக நம்மவூர் டீ. வி. மெகா சீரியல்களில் நடிக்கும்
பர்மீத் சேதி ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் தன் அழுத்தமான நடிப்பினால். இன்ஸாப், சந்திரகாந்தா போன்ற தொ(ல்)லைகாட்சித் தொடர்களில் நடித்த கிருத்திகா தேசாய் கூட படத்தில் உண்டு.

படத்தின் மொழி: ஹீப்றூ (என்ற போதிலும் இந்தியக் குடும்பங்கள் பெறும்பாலும் ஆன்கிலமே பேசிக் கொள்வதும், மொராக்கன் தேசத்துக் குடும்பங்கள் பிரஞ்சு மொழி பேச்திக் கொள்வதுமாகவே இருக்கிறது....)

Amelie மற்றும் City of God

ஆமிலீ பிரஞ்சு மொழிப்படம், மென்மையான காதல் கதையில் மெல்லிய கமெடி இழையுடன் அறுமையான படம். தனிமையிலேயே சிறுவயதைக்கழிக்கும் சுட்டிப் பெண் தன் காதலனை எப்படி அடைகிறாள் என்பதுபற்றிய படம்.

சிடாடெ டெ டூஸ் அல்லது City of God பிரேசிலிலிருந்து 2002ல் வெளிவந்த போர்துகீசிய மொழிப் படம். உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில், ரியோ டி ஜெனீரோ நகர சேரிகளில் வாழும் போதைப் பொருள் விற்கும் ரவுடிகள் பற்றிய கதையை அதே சேரியிலிருந்து வளர்ந்து வந்த ஒரு புகைப்படக்காரர் மூலமாகச் சொல்லப்பட்ட சீரியஸ் கதை.

சமீபத்தில் தான் இந்த இரண்டு படங்களையும் பார்த்தேன்...நிச்சயமாக இரண்டு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அமிலீ கதைச் சுறுக்கம்:
ஆமிலி என்ற இளம் பெண் சிறுவயதிலிருந்து ஒரு வித ஏக்கத்துடனேயே வாழ்கிறார்ள். யாரும் கவனிக்காத அல்லது சாதாரணமாக விட்டுவிடும் விஷயங்களில் அதீத அக்கரை கொண்டவள். ஒரு கபே யில் வெயிட்ரஸாக பணிபுரியும் இந்தப் பெண் ஒரு நாள் தன் வீட்டுச் சுவறில் மறைத்துவைக்கப்பட்ட ஒரு சிறுவனின் விளையாட்டுப் பொருட்கள் நிறைந்த பெட்டியை கண்டுபிடிக்கிறாள். பிறகு அந்தப் பெட்டியின் சொந்தக்காரரை கண்டுபிடித்து அதை அவரிடம் வளங்கி அவரின் மகிழ்ச்சியால் தானும் சந்தோஷப்படுகிறாள். அப்போது அவளின் நினைவில் தட்டும் பொறி, ஏன் நாம் மற்றவர்களை மகிழ்ச்சியடையச் செய்யக் கூடாது என்பது...இதனால் தன் சுற்றியுள்ளவர்களை எப்படி சந்தோஷப்படுத்தலாம் என்று நூதன முறையில் யோசித்துச் செய்யும் ஆமிலீ பக்கது ரயில் நிலயத்தில் போட்டோ எடுக்கும் பூத்தில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து கிழித்து போடப்பட்ட போட்டோக்களை சேகரிக்கும் தன் காதலனைச் சந்திக்கிறாள். அவனை எப்படி ஆமிலீ அடைகிறாள் எவ்வாறு தன் சுற்றாரை சந்தோஷப்படுத்துகிறாள் என்பதை மெல்லிய காமெடி கலந்த கதையாய் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் Jean-Pierre Jeunet.

படத்தில் வரும் ஒரு காமெடியான சம்பவம்.

சிறுவயதில் சேட்டை அதிகம் செய்கிறாள் என்று அமிலீயின் தாய் ஒரு பழய காமிராவை அவளிடம் கொடுத்துவிடுகிறாள். அதை வைத்துக் கொண்டு பிளாட்பாரத்தில் நின்று போட்டோ எடுக்கும் அமிலீ தன் கண்முன்னே இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளாவதைப் பார்த்து பயந்து விடுகிறாள். அந்த நேரத்தில் அவ்வளியாகச் செல்லும் பக்கத்து வீட்டுக்காரன் அமிலீயின் காமிராவால் தான் அந்த சம்பவம் நடந்தது என்று அமிலீயை பயமுறுத்தி நம்பபைத்து விடுகிறான். இதை சில நாட்கள் கழித்து உணர்ந்த அமிலீ, வஞ்சம் தீர்க்க ரேடியோவுடன் அந்த பக்கத்து வீட்டு அங்கிள் கூறையி அமர்ந்து Football மேட்சில் முக்கிய கட்டத்தை ஆண்டனா வயரை பிடுங்கி அந்த ஆசாமிக்கு எரிச்சல் வரவழைத்து பழி தீர்ப்பாள்.
இன்னொறு சம்பவம்,

படத்தில் சதா சர்வகாலமும் தன் காய்கரிக்கடையில் வேலைசெய்யும் பையனைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் முதலாளியை கஷ்டப்படச் செய்யவேண்டும் என்ற நீக்கத்தில் அமிலீ செய்யும் திருகல்கள் பயங்கர காமெடி. ஷெவிங் க்ரீமையும் பேஸ்டையும் இடம் மாற்றி வைப்பதில் துவங்கி பாத்ரூம் கதவு knob ஐ இடம் மாற்றம் செய்து வைத்து...அலாரம் கடிகாரத்தின் நேரத்தை மாற்றி வைத்து அடுத்த நாள் அந்த ஆசாமி படும் அவஸ்தையில் காமெடியோ காமடி.

2002ல் ஆஸ்கார் விருதுக்காக வெளி நாட்டுப் பட வரிசயில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

நிற்க.

City of God.



ஆறுபதுகளில் ரியோடி ஜெனீரோ நகரில் கட்டப்பட்ட ஏரியாவின் பெயர் தான் City of God. சேரிகளில் வசிக்கும் இந்த கறுப்பின மக்கள் போதைப்பொருள் கடத்தல், கொலை கொள்ளை அடிதடி சண்டைகளில் ஈடுபடும் திருடர்களாகவே வாழ்ந்தனர். அக்காலத்தில் நடை பெறும் சம்பவங்களை அதே சேரியில் பிறந்து வளரும் ஒரு பையன் தன் திறமையால் முன்னுக்கு வரவேண்டும், படித்து முன்னேரவேண்டும் என்று எண்ணுபவன், புகைப்படத் தொழிலில் ஈடு பாடு கொண்டவன் கண்ணோட்டத்தில் கதை சொல்லப்படுகின்றது. படத்தில், ஏகப்பட்ட உட் கதைகள், ஒவ்வொறு கதாபத்திரமும் ஒரு கைத போல் சொல்லப்படுகின்றது. கதாபாத்திரங்கள் தங்கள் கதை தனிக்கதையாக இருந்த போதிலும் அவர்கள் அடிக்கடி Intersect ஆவதும் அதை இந்த காமிரா மேன் (Rocket என்பது படத்தில் அவர் பெயர், Busca pe என்பதை மொழி பெயர்த்து அப்படிச் சொல்லியிருப்பார்கள் subtitile ல்) தன் கோணத்தில் எப்படிப் பார்க்கிறான் என்பது தான் கதை சொல்லப்படும் விதம். புதுமையானதும் கூட...சற்றே நம் விறுமாண்டிபோல்..!




படத்தில் ஒரே ரத்தக் காட்சிகள் தான். Gang war கள், துப்பாக்கிச்சூடுகள், கொளைகள், மிரட்டல்கள், லஞ்சம், போலீஸ், நீயா நானா, யார் தான் பெரியவன் போன்ற ஈகோ மோதல்களினால் ஏற்படும் கொலைகள், சதா சர்வ காலமும் கைதுப்பாக்கியுடனேயே சுற்றும் 10 வயது வாண்டுகள். கவலையே இல்லாமல் கொலை செய்யும் 13 வயதுப் பையன்கள். கொலை செய்தால் தான் சமூகத்தில் மதிப்பு என்று எண்ணி வாழ்பவர்கள் என்று ஏகப்பட்ட intricate network களால் பின்னப்பட்ட கதை. கதை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதால் கடைசியில் உண்மையான பாத்திரங்கள் யார், என்பதையும் சொல்கிறார்கள்.

2004ல் ஆஸ்கார் விருதுக்கு பிரேஸிலிலிருந்து அனுப்பப் பட்ட படம். Foreign movies விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் ஒன்றும் கூட.

திருப்தியான படங்கள் இரண்டுமே....


இதை ஏன் பதிகிறேன் என்றால்,

நாம் இந்தியாவிலிருந்து ஆஸ்காருக்கு அனுப்பும் படங்களின் தரத்தையும் இவற்றையும் சற்றே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

பஹேலி, தேவதாஸ், ஜீன்ஸ், தேவர் மகன். இத்தகய படங்களே இந்திய அரசு இந்தியாவின் Official entry யாக அனுப்பியிருக்கிறது. நாம் ஆஸ்கார் வெல்லவேண்டாம், அது நம் நோக்கமுமாக இருக்கவேண்டாம்,

படத்தின் தரத்தைப் பாருங்கள். ஜீன்ஸ், பஹேலி எல்லாம் ஒரு படமா? ஆஸ்காருக்கு இந்தியா அரசு அனுப்பும் தரத்தில் உள்ள படங்களா?

அங்கே என்ன, பட்டிக்காட்டான்களா உட்கார்ந்து படம் பார்க்கிறார்கள், கலர் கலர் உடைகள், ஐஷ்வர்யா ராய் பார்த்தவுடன் ஜொள்ளு வடிவதற்கு.

இதுவரை, லகான், சலாம் பாம்பே, மதர் இந்தியா மட்டுமே நாமினேஷன் பெற்றிருக்கிறது.

August 3, 2006

Protocols of the elders of the Islamists

கூகிள் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டது...
இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், எப்படி நாஜிசத்துடன் ஒத்துப் போகிறது என்பதற்கு இதைவிட வேறு நல்ல படவிளக்கம் இல்லை.

பார்க்க.

இதில் சொல்வது கேட்ட பிறகாவது, இந்த Denial ல் இருக்கும் நம் இடது சாரிக்கள் மாறுவார்கள் என்று நம்புவோமாக.

Democracy now!!

மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து வலைப்பதிவுகளில் உலகெங்கும் வியாபித்து இருக்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தைக் குற்றம் கூறியபோது "மதச்சார்பற்ற" இந்திய அரசு வலைப்பதிவுகளைத் தடைசெய்தது. கேவலம், பாகிஸ்தான், ஈரான் போன்ற இஸ்லாமிய தீவிரவாத நாடு, மற்றும் கம்யூனிஸ்ட் சீனாவுடன் லிஸ்டில் சேர்கப்பட்டுவிட்டது இந்தியா...கருத்துச் சுதந்திரத்தில்...(so much for liberal left!!)

Indiblogs blogspot ban alternative.

August 2, 2006

Marxist-Islamist-ஆறு விளையாட்டு

  • மார்க்ஸ்வாதிகள் கார்ல் மார்க்ஸ் என்கிற உலக தொழிலாளர்கள் ரட்சகரை நம்பும் கூட்டம். இஸ்மாலிஸ்டுகள், முஹம்மது என்கிற உலக இஸ்லாத்தவரை ஒன்றிணைத்த "ரட்சகரை" நம்பும் கூட்டம்.


  • மார்க்ஸ்வாதிகள் ஆயுதம் ஏந்தும் புரட்சி மூலம் தொழிலாளர்கள் பூர்ஷ்வா ஜனனாயகத்தை உடைத்து தூய கம்யூனிச உலகை உருவாக்கவேண்டும் என்று நம்புபவர்கள். இஸ்லாமிஸ்டுகள் ஆயுதம் ஏந்திய ஜிஹாத் மூலம் தூய ஷரியா சட்டம் கொண்ட இஸ்லாமிய உம்மாவை உலகில் நிறுவ வேண்டும் என்று நம்புபவர்கள்.



  • மார்க்ஸ்வாதிகள், மற்றும் இஸ்மாமிஸ்டுகள், இருவரும் மிகக் கொடிய சர்வாதிகாரத்தை ஆதரிப்பவர்கள். (ஸ்டாலின், லெனின், மாவோ மார்க்ஸ்வாதி என்றால், நாஸர், இடி அமீன், பாகிஸ்தானின் ஜியா உல் ஹக், ஈரானின் கொஹ்மேனி இஸ்லாமிஸ்டுகள்.)



  • மார்க்ஸ்வாதிகளுக்கு ஒரே கொள்கை மார்க்ஸ்வாத சோஷியலிசம், ஒரே புத்தகம் கார்ல் மார்க்ஸின் "தாஸ் காபிடல்". இஸ்லாமிஸ்டுகளுக்கு ஒரே கொள்கை இஸ்லாம், ஒரே புத்தகம் குர்-ஆன்.



  • இருவரும் கொடிய யூத வெறுப்பு (Anti-semite) கொண்டவர்கள். இந்தியாவில் இனவாதம் பேசுபவர்கள், பிராமண வெறுப்பு (Anti-brahminism) கொண்டவர்கள். வர்க்கப் போராட்டம் என்கிற பெயரில் வக்கிர தாண்டவம் ஆடும் கேடு கெட்ட தீவிரவாதிகள்.



  • இந்தியாவில் மார்க்ஸ்வாதிகள் காலஞ்சென்ற சோவியத், மற்றும் சீனா போன்ற வெளி நாட்டு முதலாளிகளுக்கு கூஜா தூக்குபவர்கள் என்றால், இஸ்லாமிஸ்டுகள் சவூதி, ஈரான் போன்ற வெளிநாட்டு காட்டரபிகளுக்கும், கொடுங்கோலர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பவர்கள். இருவரும் மொத்தத்தில் தன் நாட்டை தரம் தாழ்த்திப் பிர நாட்டுக்காரர்களிடம் விசுவாசம் காட்டும் "பரதேசீய" வாதிகள்.



  • ஈரானின் இஸ்மிஸ்டுகள் புரட்சி, மற்றும் சீனாவின் கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் புரட்சி.














  • இருவரும் தமது கொள்கையில் நம்பிக்கையில்லாதவரை சிறைவைப்பர், கொன்றுவிடுவர் அல்லது இரண்டாந்தர குடிமக்களாக்கிவிட்டு, தமது கொள்கையை திணிப்பர்.



  • மார்க்ஸ்வாத நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது இல்லை. (சீனா, வட கொரியா), இஸ்மாமிஸ்ட் நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது இல்லை (ஈரான், சவூதி)



  • இந்திய மார்க்ஸ்வாத திம்மிக்கள் இஸ்லாமிய கொடுங்கோல் ஆட்சியை வெள்ளையடித்து சரித்திரத்தை மாற்றி எழுதுவர். இஸ்லாமிஸ்டுகள் ஈரானின், எகிப்தின் சரித்திரத்தை திரித்து எழுதுவர்.



  • சீனாவின் கலாச்சாரப் புரட்சியின் போது எரிக்கப்பட்ட புத்தகங்கள் எத்தனையோ.. அதே போல் இஸ்லாமிஸ்டுகள் கொளுத்திய நலந்தா, தக்ஷசீலா பல்கலைக்கழகங்களில் உள்ள புத்தகங்கள் எண்ணிலடங்கா...!! மொத்தத்தில் இறுவரும் மாற்றுகாருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத பழமைவாதிகள், புத்தகத்தை எரிப்பவர்கள்..



  • இஸ்லாமிஸ்டுகளும், மார்க்ஸ்வாதிகளும் ஹோலோகாஸ்டை மறுப்பவர்கள், (holocaust deniers).



  • விளையாட்டு என்று சொல்லிவிட்டு விளையாடவில்லை என்றால் எப்படி,

    கொடுக்கப்பட்ட 12ல் பிடித்த ஆறை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்..Marxist-ismaist கள் ஒற்றுமை பட்டியல் போட முடியாத அளவிற்கு நீண்ட ஒன்று..கடவுள் நம்பிக்கை என்கிற ஒன்றை நீக்கிவிட்டால் இறுவரும் ஒன்றே...

    Hezbollah-civilians

    வலைப்பதிவு, தொலைகாட்சி, செய்தித் தாள் என்று ஒரு ஊடகம் விடாமல் இஸ்ரேல் லெபனான் பொதுமக்கள் மீது வன் தாக்குதல் நடத்துகின்றது என்று திட்டித் தீர்காத நாளில்லை. ஆனால் போர் நடக்கும் பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட ரகசிய படங்கள் ஹெஸ்பொல்லாக்களின் உண்மை ரூபத்தைக் காட்டுகின்றது.



    எத்தனை ஹெஸ்பொல்லா தீவிரவாதிகள் அவர்களது போராட்டக் குளுவின் அங்கி அணிந்து இருக்கின்றனர். இவர்கள் இஸ்ரேலின் பதில் தாக்குதலில் மடிந்தால், மடிந்தது பொது மக்களே!! நம்புங்கள் திம்மிக்களே!!
    உங்களைப் போல் திம்மிக்கள், திம்மித்துவாவாதிகள், மார்க்ஸ்வாத மடையர்கள் இருக்கும் வரை, இஸ்லாம் என்கிற தீவிரவாத மார்க்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கயவர்கள், எல்லாம் ஹீரோக்கள் ஆவார்கள்.

    July 30, 2006

    தூர்தர்ஷன் மிலே சுர் மேரா துமாரா MITல்



    தூர்தர்ஷனில் முன்பு வந்து கொடிருந்த மிலே சுர் மேரா துமாரா என்ற பாடல் MIT ல் வாலுத்தனமாக மறு படபிடிப்பு செய்திருக்கின்றனர் இந்திய MIT மாணவர்கள்...

    யூ டியூப் மூலமாக கிடைத்த இந்த பாடலை வலை பதிகிறேன்...

    July 29, 2006

    மும்பை குண்டுவெடிப்புக்குக் காரணம் மொஸாத்!!

    இந்தியா-யூனிடி என்கிற யாஹூ குளுமத்தில் வெளிவந்த இந்த மடல்.

    சஹாரா மும்பையில் வெளிவரும் உருது மொழி செய்தி. அதில் மொஸ்ஸாத் தான் மும்பை குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என்று சொல்கிறது.


    Mumbai's Urdu Daily 'Sahara' headlines: Is Mossad hand behind Mumbai train blasts of 7/11?

    Mossad, an Israeli intelligence agency, is today cited as possible organiser of Mumbai train bomb blasts. Immediately after the blast, Mossad was reportedly engaged by Sai Baba Mandir trust to provide security to the famous religious shrine. The newspaper clarifies that till now the Mumbai authorities have not confirmed as to why the Sai Baba Trust had to employ a foreign intelligence agency for its protection. Or if Maharashtra Government and Central Government have cleared the hiring of Mossad intelligence agency?

    Sahara News Bureau [SNB] report on the front page of Sahara Urdu Daily, further adss that "some security experts have wondered if through the excuse of security of Hindu temples, Mossad, which is notorious for counter-terrorism and counter-espionage all over the world and especially in Arab and Muslim countries, is allowed to step in Maharashtra state, the conditions will seriously deteriorate not only in Maharashtra, but all over India".

    SAHARA further quotes an anonymous retired Muslim police officer,who was commenting on the news of Mossad security for Sai Baba Mandir: " To get into Maharashtra, Mossad itself may have arranged the Mumbai train blasts in such a way that the whole blame should fall on SIMI, the banned Muslim Students organization" [which is now legal at least in India largest state of Uttar Pradesh] and other Muslim organisations.

    [SAHARA URDU is published from Mumbai, Delhi, Lucknow, Gorakhpur, Kolkatta and Patna]

    No English media with all their patriotic pretensions has yet found it necessary to report on entry of Israeli intelligence agencies in Maharashtra or in India. That probably suits private media interests, but is fraught with most sinister development for the nation, in times to come.

    GHULAM MUHAMMED, MUMBAI



    நாம் தான் தேவையில்லாமல் லஷ்கர், பாகிஸ்தான் என்று முட்டாள் தனமாக பேசிக் கொண்டிருக்கிறோம்... நமக்கு கொஞ்சமும் மூளை என்பதே இல்லை.

    இந்தியா இஸ்ரேல் மீது தான் போர் தொடுக்கவேண்டும்...!! என்ன கம்யூனிஸ்ட் மற்றும் இஸ்லாமிய "சகோதரர்களே", சரியா?

    எதிர்ப்பு அரசியல் - பட விளக்கம்

    இந்திய கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு அரசியலை இந்த படம் மூலம் விளக்கியிருக்கிறார் இந்த வலைப்பதிவாளர்.

    பயங்கரவாதப் பாசறை

    V.S. Naipaul, "Neurosis of the convert" என்று சொன்னதை தமிழ் நாட்டில் இஸ்லாமியர் செய்கின்றனர்.

    இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தி, சில நாட்கள் முன்பு கோவையில் கைதி செய்யப்பட்ட இரு தீவிரவாதிகள் சமீபத்தில் தான் இஸ்லாத்திற்கு மதம் மாறியுள்ளனர் என்று கூறுகிறது.


    Of the five MNP activists arrested on July 22 for plotting a terror attack on Coimbatore, two—Athikur Rehman and Tipu Sultan—had converted to Islam only a year ago, and had their indoctrination at the Arivagam.


    இதைத் தான் நய்ப்பால் அவர்கள் மதம் மாறியவனின் மன நோய் என்று சொல்கிறார். நேற்று வரை இந்துவாக இருந்தவன், மதம் மாறியவுடன் தன்னையே, வெறுக்கும் அழவிற்குச் சென்றுவிடுகின்றான்.

    இந்த MNP அல்லது மனித நேயப் பாசறை (Humar Justice forum) என்ற இயக்கம், தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் தலைவராக இருந்த M. குலாம் மொஹம்மது என்பவரால் ஆரம்பிக்கப் பட்ட இயக்கம், சென்னையை தலமையிடமகக் கொண்டு இயங்கும் இந்த இயக்கம் முதல் முதலில் 2004ல் தமிழக போலீஸால் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் 15 பேர் நாட்டு குண்டுகள், வெடி பொருட்கள் மற்றும் பாபர் கட்டிடம் இடிப்பு சீ.டி க்களுடன் கைது செய்யப்பட்ட போது செய்தியில் அடிபட்டது.


    Hundreds of men and women from all over the state, mostly the jobless and Dalits, have been converted to Islam in the last five years. Intelligence agencies say they have reason to believe that the mass conversions could be used as a potential bridge to terror.
    Every four months, more than 50 Hindus from all over Tamil Nadu, converge at Arivagam (House of Knowledge), an Islamic learning institute, after going through the conversion ceremonies at local Jamats, to learn about the new religion they have embraced.


    மனித நேயப்பாசறை இயக்கம் தமிழக போலீஸால் கவனிக்கப்பட்டுவரும் ஒரு அடிப்படை வாத இயக்கமாக இருந்து வருகின்றது சில நாட்களாக...

    இவர்கள் கூட்டாக ஊர் ஊராக மதம் மாற்றும் வேலையை செய்து வருகின்றனர்.


    Most converts, obviously, come from the lowest strata. Like 22-year-old Mohammad Mustafa who was Selvamani till two months ago. He is an orphan, and says he was advised by the Imam of the Sengottai Jamat (in Tirunelveli) and sent to Arivagam. He says he convinced his 30-year-old brother Ummar (Kumar) to join him.
    ‘‘My sister is waiting to get her delivery over with and to get converted.’’
    Mohammed Mushtaq, earlier Rajkamal from Thanjavur, hails from the Thevar caste, known for its fierce caste chauvinism. ‘‘I used to drink, smoke cigarettes and take drugs. My Hindu religion could not stop me. But a few Muslim friends pointed out that in their religion, there was fear of punishment. Now I have no vices and I am happy,’’ he says. He has been helped to settle in Ukkadam in Coimbatore where he now sells fruits.
    The new class of nearly 50 converts get free boarding and lodging until they finish their ‘education.’ Some men bring their children along while some send their womenfolk to attend the classes at Eruvadi.
    Women like Fathima (22), until recently Shanthakumari, and 22-year-old Katheeja (who was Priya), have not opposed the family’s conversion to Islam, as they would be given a ‘secure’ life by the ‘Dharul Hikma.’ Says its principal, Sheik Mohammed: ‘‘We will find them grooms and arrange for their weddings just as we found Muslim brides for most of the new converts at Arivagam.’’


    இவர்கள் ஏழை தலீத் மக்களை குறி வைத்து மதம் மாற்றுகின்றனர் என்பது தெளிவாகியிருக்கிறது.


    The village head of the Dalit colony in Muthuthevanpatty, E N Karuppiah, said at least 50 Dalit families in the village, with its 500-odd members, have already converted to Islam.
    ‘‘Not surprising. They are poor, very poor, and are easily lured by money, land and houses,’’ he said.


    வழக்கம் போல் அப்பாவி "சகோதரர்களை" காவல்துரையினர் கைது செய்ததாக அலருகின்றது தமிழ் முஸ்லீம்கள் அரசியல் மேடை

    நிற்க.

    ANI செய்திக் குறிப்பிலிருந்து யாஹூவில் வந்த செய்தி.

    உத்தராஞ்சல் பிரதேசம், ஜமாத் ஏ உலேமா ஏ ஹிந்த் கட்சி துணைத் தலைவர் மவுலானா மசூத் மதானி தில்லி ஜாம மசூதி ஷாஹி இமாம் அஹமெத் புகாரி தான் இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாதி என்று சொல்லியிருக்கிறார்.

    Dehradun, July 26 (ANI): Jamait Ulama-a-Hind leader and Vice President of Uttaranchal's 15 Points Implementation Programme Maulana Masood Madani today said that Shahi Imam Ahmed Bukhari was the "biggest terrorist of India".

    Talking to reporters, Madani accused Imam Bukhari for masterminding various bomb blasts in the country and having links with anti-social activities.

    "The government is not doing anything after having all relevant details about terrorists. Two months ago, I had intimated the government through a separate copy of letter to the Prime Minister that India's biggest terrorist is Shahi Imam Ahmed Bukhari. Why is government not doing anything to arrest him? He is the one who is responsible for the bomb blasts in Jama Masjid and Srinagar. He has contacts with all the terrorist agencies. He has also threatened to kill us. Our information is correct. Even the government and the CBI have information about the same. Government is only responsible to support the terrorist in this country," said Madni.


    இன்னும் புகாரியை கைதி செய்யாமல் தனது "செக்குலர்" தனத்தை நிறூபித்துவருகின்றனர் நம் அரசியல் வாதிகள்.

    July 28, 2006

    இஸ்ரேல்-ஹெஸ்பல்லா கார்டூன்கள்

    இந்த இஸ்ரேல் ஹெஸ்பல்லாக்களுக்கு இடையே நடக்கும் போர் பற்றி வந்த கார்டூன்கள். அதில் எனக்குப் பிடித்தவை சில.

    Le Temps (Geneva)

    © Chappatte

    NZZ Am Sontag


    © Chappatte

    International Herald Tribune

    © Chappatte

    இந்த கார்டூன்கள் வரைந்தவர் Chappatte என்கிற கார்டூனிஸ்ட். சுவிட்சர்லாந்தில் வாழும் இவர். International herald tribune க்கு Editorial cartoonist. இவரது படைப்புகள் அனைத்தயும் பார்க்க இங்கே சுட்டவும்.


    வலது சாரி Jerusalem Post கார்டூன்கள் என்ன சொல்கின்றன...?



    International Herald tribune ல் வந்த இன்னொரு கார்ட்டூன்.



    Extra தகவல்:
    டிபேரியாஸ் (Tiberias) ல் இஸ்ரேலியர்கள் எவ்வாறு கத்யூஷ் ராக்கெட்களிலிருந்து தப்பி வாழ்கை நடத்துகின்றனர் என்று படத்துடன் கூடிய கட்டுரை