November 7, 2007

HMV


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் திரு பிரகாஷ் காரத் அவர்கள் சில நாட்கள் முன்பு தன் கட்சி ஏன் இந்திய அமேரிக்க அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறது என்பதைத் தெளிவாக்கினார்.

அவர் கூறியது:

He said the US was trying to make India its strategic ally in countering China, "the most powerful socialist country capable of challenging the might of USA".

சீனாவின் வளர்ச்சியைத் தடுக்கத்தான் அமேரிக்கா இந்தியாவுடன் கூட்டு சேர்கிறதாம். 
இருக்கட்டுமே, அமேரிக்கா இந்தியாவுடன் சேர்வதனால் இலாபம் இந்தியர்களுக்குத்தானே ? 

அவருடைய 
சமீபத்திய சாதனையாக இதைச் செய்கிறார்

அவர் சொல்வது :

இப்போது தீபாவளி போனஸ் பீஜிங்கிலிருந்து வந்துவிட்டது போலும், இந்திய அமேரிக்க நட்பை முரிக்கக் கேவலமான செய்கைகளிக் ஈடுபடுகிறார்.

இது தேவையா, ஒரு தனிமனிதனாக எதைவேண்டுமானாலும் யாரைப்பற்றியும் சொல்லலாம். ஆனால் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆளும் கட்சியின் member ஆக இருந்துகொண்டு இப்படி மற்ற ஜனநாயக நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைக் கேவலமாகப் பேசலாமா ?

ராஜ தர்மம் என்பது இது தானா ? 

அதைச் சொல்லிய தருணம் ஒன்றும் தீபாவளி வாழ்த்துச் சொல்லும் போது அல்ல. ஏதோ புஷ் லெனினைக் கேவலமாகப் பேசிவிட்டாராம் அதற்காக இதைச் சொல்லியுள்ளார். அதுவும் ரஷ்யாவிலேயே லெனினின் சிலைகளை தூக்கி வீசிய பின்னர் இவர் லெனினின் திரு உருவச் சிலையைத் திறந்துவைத்து இப்படிப் பேசுகிறார்.

ஜார்ஜ் புஷ் ஒரு காந்தியையோ, நேருவையோ, கேவலமாகப் பேசியிருந்தால் அவரைத் திட்டுவதில் அர்த்தம் உண்டு. இல்லை, ஈராக் போர், 9/11 என்று அவரைத் திட்ட ஆயிரம் காரணங்கள் உள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு உடைந்த சோவியத்தின் கடந்த காலக் கேவலங்களில் ஒன்றான லெனினைப் பற்றிச் சொன்னால் இவருக்கு ஏன் பற்றிக் கொண்டு வருகிறது ? 

அவருடைய செய்கைகள் எப்படி இருக்கோ இல்லையோ, இந்தியாவுக்கு மட்டும் ஆதரவாக இல்லை என்பது திண்ணம்.

October 20, 2007

கரன் தாபரும் நரேந்திர மோடியும்

இந்த வார devil's advocate நிகழ்சிக்காக கரன் தாபர் காந்திநகரில் நரேந்திர மோடியை சந்திக்கச் சென்றிருக்கிறார். அங்கே நேர்காணலுக்கு சம்மதித்த குஜராத் முக்கிய மந்திரி மோடி தன் நவராத்திரி விரதத்திற்கு நடுவில் கரனின் கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். நேர்காணல் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடமே அதை முடித்துக் கொண்டு மோடி அவர்கள் வெளியேறிவிட்டார் என்று செய்திகள் வந்தது.

ஏன் ?

சும்மா மெல்லும் வாயில் அவலைப் போட்டுவிட்டாரா மோடி ?

மோடி இதற்கு முன் நேர்காணலே கொடுக்கவில்லையா ?
இல்லை Times now என்ற சேனலில்  கொடுத்தார். 

மோடியை ஒரு ஹிட்லரைப் போன்ற கொலைகாரன் என்று வர்ணிக்கும் சிலர் (முக்கியமாக சில NGOக்கள்) கேட்கும் கேள்வியைத்தான் திரும்பத் திரும்ப கரன் அவர்கள் மோடியிடம் கேட்டிருக்கிறார் அந்த நேர்காணலில்.

கேள்வி:

"குஜராத் கலவரத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோருவீர்களா ?"

என்பது தான்.

ஏன் கரன் அவர்கள் அந்தக் கேள்வியில் அவ்வளவு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று அவருக்குத் தான் வெளிச்சம்.

மன்னிப்பு கேட்கவேண்டியவர்கள் யார் ?

ஏன் குஜராத் முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் ?

நடந்தது கலவரம். அதில் பங்கு இரு சமூகத்தினருக்கும் சமமாக உள்ளது. . காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மற்றும் அறிவு சீவிக்கள் அடிக்கும் "pogrom", "holocaust" ஜல்லி அல்ல.

(ஹோலொகாஸ்ட் போன்றதொரு கொடூரத்தைக்கூட இந்த செகுலர் சிந்தனைவியாதிகள் விட்டு வைக்கவில்லை! அதைக்க்குட ஜல்லியடிக்கப் பயன்படுத்தி 6 மில்லியன் மனித உயிர்களுக்கு மிகப்பெரும் துரோகம் இழைத்துவிட்டார்கள்)

அந்த குஜராத் கலவரத்தினை "செகுலர்" முலாம் பூசி (இந்துக்கள் நடத்திய வண்கொடுமை என்று சொல்லி)  அடிக்கடி மக்கள் மத்தியில் பரப்பி சமுதாயப்பிரிவினைக்கு மேலும் வலு சேர்ப்பவர்கள் இந்த மீடியாக்கள். ஞாயமாகப் பார்த்தால் அவர்கள் தான் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். செய்வார்களா ?


அந்தக் கலவரத்தையே காரணம் காட்டி குஜராத்தை எப்பவுமே மட்டம் தட்டும் சில NGO க்கள் செய்யும் வேலையை, கரன் செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன ?

1984 சீக்கியப் படுகொலைகள் நடந்த போது அப்போதய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி பேசியது என்ன ? அதற்கு அவர் எத்தனை முறை மன்னிப்பு கேட்டார் ?

கஷ்மீரிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட இந்துக்களின் கதி என்ன ? அதற்கு எந்த கஷ்மீர் முதல்வர் இதுவரை மன்னிப்பு கேட்டுள்ளார் ? எத்தனை முறை கேட்டுள்ளார் ?

தற்பொழுது மிகப்பெரும் பிரச்சனை நரேந்திர மோடிக்கு இருக்கும் மக்கள் ஆதரவு தான் என்று தோன்றுகிறது. 

இரண்டு முறை முதல்வர் ஆனவர் தன் மாநிலத்தில் நலனில் அக்கரை கொண்டு செயல்படும் இந்தியாவின் சிறந்த முதல்வர் என்று அவர் பெருமைகள் இருக்க, அவருடைய மாநிலத்தில் இருக்கும் முன்னேற்றத்திற்குக் காரணம் என்ன என்று கேள்விகள் எழுப்பி பேட்டியை நடத்தாமல் ஏன் கரன் தாபர் அவர்கள் 2002 ல் நடந்த ஒரு சம்பவத்தை மட்டுமே வைத்துக் கொண்டு கேள்வி எழுப்பவேண்டும் ?


மோடி செய்த ஒரே தவறு, கரன் தாபருடனான நேர்காணலுக்கு சம்மதித்தது.

September 19, 2007

கருணாநிதியும் சேதுராமனும்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அருளிய பொன் மொழிகளில் ஒன்று, ராமன் என்று யாரும் இருந்ததற்கான சரித்திரப்பூர்வமான சான்று இல்லை என்பது. 
தமிழகத்திற்கு இது தேவையில்லாத ஆராய்ச்சி.

தமிழகம் செய்யவேண்டியது, ராமர் வாழ்ந்தாரா இல்லையா என்ற ஆராய்ச்சி அல்ல. சேது சமுத்திர திட்டம் தக்க பலனை அளிக்குமா இல்லையா என்பதே.
சேது சமுத்திரத் திட்டம், ரூ 87 கோடி ஆண்டுவருமானமாக ஈட்டும் திட்டம்.
2006 ஆம் ஆண்டு மட்டுமே இந்திய அரசு ஹஜ் மானியமாக ரூ 180 கோடி வழங்கியுள்ளது.
இதில் உள்ள "மதச்சார்பின்மையை" ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும், சேதுத் திட்டம் செயல் படுத்துவதால் எத்தகய இலாபத்தை இந்திய அரசு எதிர்பார்க்கிறது என்பது தெளிவுபட வேண்டும்.
படத்தில் இருப்பது சோழர் காலத்து நாணயம். அதில் எழுதியுள்ளது, "சேது" என்று தமிழில்.
சேதுவைப் பற்றியும் அதனைச்சார்ந்த கதையான கம்ப இராமாயணமும் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டுகிறது.
இராமன் எந்த இஞ்சினியரிங் கல்லூரியில் படித்தான் என்று கேட்டு சிரிப்பது, பகுத்தறிவாளர்களின் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டுகிறது.

இதே கருணாநிதி அவர்கள், The DaVinci code திரைப்படத்தையும் புத்தகத்தையும் தடைசெய்த போது இவர்களின் பகுத்தறிவு எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது. 

August 26, 2007

போலி மதச்சார்பின்மை = குண்டுவெடிப்புகள்

குண்டுவெடிப்புகள் போன்ற வெறிச்செயல் செய்யும் ஒரு கூட்டத்துக்கு முதுகு சொறிந்துவிடும் வோட்டு வங்கி அரசியல் நடப்பதால் தான் குண்டுவெடிப்புகள் அதிகரிக்கின்றன.

CNN-IBN தொகுத்த சில குண்டு வெடிப்புச் சம்பவங்கள்.

கடந்த சில ஆண்டுகாலத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் இவை :
  1. ஆகஸ்ட் 2007, ஹைதராபாத் குண்டு வெடிப்பு
  2. மே 2007, மக்கா மசூதி குண்டு வெடிப்பு, அதே ஹைதராபாதில்.
  3. செப்டம்பர் 2006, மெலகாவ் மசூதியில் குண்டுவெடிப்பு.
  4. ஜூலை 2006, மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு.
  5. மார்ச் 2006, வாரணாசியில் தொடர் குண்டுவெடிப்பு.
  6.  அக்டோபர் 2005, தில்லியில் தொடர் குண்டுவெடிப்பு தீபாவளிக்கு முந்தய நாள் இரவு நிகழ்த்தப்பட்டது.
  7. ஆகஸ்ட் 2003, மும்பையில் டாக்சியில் குண்டுவைத்து வெடிக்கச் செய்தனர்.
  8.  மார்ச் 1993, மும்பையில் டைகர் மேமன், தாவூத் கூட்டாளிகளால் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு.
காட்கோபர் மும்பையில் 2003ல் நடந்த குண்டுவெடிப்பைத் தவிர, அனைத்துச் செயல்களுமே காங்கிரஸ் மாநிலத்திலும் மத்தியிலு ஆட்சியில் இருக்கும் போது தான் நிகழ்த்தப்பட்டுள்ளது. 
காங்கிரஸ் மற்றும் போலி மதச்சார்பின்மைவாதிகளால் தான் இஸுலாமிய அடிப்படைவாதிகளின் குண்டுவெடிப்புகள் அதிகரிக்கின்றன என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.

June 17, 2007

இடஒதுக்கீட்டு அடிப்படை 101

இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக முக்கிய பத்திரிக்கைகள், செய்தித் தொலைக்காட்சிகள் பிரச்சாரம் செய்துவருவதனால் எனக்கு ஏற்பட்ட ஒவ்வாமையை தீர்த்துக் கொள்கிறேன்.
சோசியலிச சித்தாந்தவாதிகள், முக்கியமாக இன்றைய இந்திய ஊடகங்கள் தமிழ், மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் எடிட்டோரியல்கள் எழுதும் "அறிவாளிச் சமூகச் சிந்தனையாளர்கள்" முக்கியமாம அடிக்கடி எழுப்பும் கேள்வி:


பொருளாதார தாராளமயமாக்கலினால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் ஏழை மக்களைச் சென்றடைகிறதா இல்லையா ?





இதில் அவர்களது தீவிர நம்பிக்கை இப்படிப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையின் பலன்கள் ஏழை மக்களை(அவர்களது குழப்ப பாசையில் விழிம்பு நிலை மக்கள்) சென்றடைவதில்லை.

ஆனால் இதே கேள்வியை இடஒதுக்கீட்டில் அவர்கள் கேட்பது இல்லை. ஏன் ?

அப்படி ஒரு நம்பிக்கை அவர்களிடம். இட ஒதுக்கீடு, "விழிம்பு நிலையில்" வாழும் மக்களை சென்றடைந்து கொண்டுதான் இருக்கிறது என்று.

கார்டூன் நன்றி : மைக் டேடர்

Barbarindians

June 15, 2007

சோசியலிச திணிப்பு

சமீபத்தில் ஒரு செய்தியை இந்த வலைத்தளத்தில் படித்து அதிர்ந்து போனேன்.


Jerry Rao has, as usual, written a good piece on the need for a free-market political party in India, “Tired of socialists”, Mint, 8 June.
He correctly refers to the fact that I have been trying to register a party that is expressly opposed to socialism and that I have made very little headway. In fact, I tried to register the old Swatantra Party (there was no registration required in the old days) but my application for registration was rejected.
An amendment to the Representation of the People Act made when Rajiv Gandhi was prime minister stipulated that the constitution or the rules and regulations of political parties should contain a provision swearing loyalty to democracy, secularism and socialism. The Election Commission sent me a form for registration which I completed and returned, accepting democracy and secularism but rejecting socialism, as the Swatantra Party was opposed to it in principle. The registration was turned down.
A friend and I filed a writ petition in the Bombay high court in December 1996. The writ was admitted. It has still to come up for hearing. This is the hurdle. Under current law, no party that refuses to accept socialism can get registered as a political party. So much for our democracy!
—S.V. Raju


(ஏலே ராஜூ அம்புட்டு நல்லவனாடா நீ! ஒரு பொய்கூட சொல்லத் தெரியல்ல நீயெல்லாம் கட்சி ஆரம்பிச்சு என்ன, ஓட்டாண்டி ஆவுரதுக்கா ?)



இயற்கையாகவே சோசியலிசத்தில் நம்பிக்கையில்லாத ஒருவரால் ஒரு மக்களாட்சி நடக்கும் இந்தியத் திருநாட்டில் ஒரு அரசியல் கட்சியை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யமுடியாது. இந்திய ஜனநாயகத்தில் ஆரம்பிக்கப்படும் அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களாட்சி, மதச்சார்பற்ற கொள்கை, சோசியலிசம் என்ற மூன்று கொள்கைக்கும் நம்பிக்கையிருப்பதாக சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டால் தான் அரசியல் கட்சியை அங்கீகரிக்கமுடியுமாம். ராஜீவ்காந்தி காலத்தில் இயற்றப்பட்ட இந்த சட்டத்திருத்தம் இன்னும் அமலிலிருப்பதால், ஜனநாயகம், மதச்சார்பற்ற கொள்கை என்ற இரண்டிற்கும் சரி என்றும் சோசியலிசத்தில் நம்பிக்கையில்லை என்றும் சொல்லி ஒரு கட்சியை பதிவு செய்யமுடியாது. 

இந்திய ஜனநாயகத்தில் சோசியலிசத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் என்றால் இருக்ககூடாதா ?

ஜனநாயகத்தில் We agree to disagree என்ற "அடிப்படை சுதந்ந்திரம்" இந்தச் சட்டத்தால் அடிபடுகிறதே !!

 தொடுப்புக்கு நன்றி : பார்பாரிந்தியன்

May 28, 2007

Little children

Little children, இந்தப் படத்தை நான் நவம்பர் 2006 லேயே பார்க்கவேண்டும் என்று நினைத்து கடைசியில் சென்ற வாரம் தான் வாய்ப்பு கிடைத்தது. டாட் ஃபீல்ட் என்ற இயக்குனரால் எடுக்கப்பட்ட படம். இந்த டாட் ஃபீல்ட் ஒரு நடிகரும் கூட.

படத்தைப் பார்த்த உடன் எற்பட்டது சலிப்பு தான். ஓவர் எக்ஸ்பெக்ட் செய்துவிட்டோமோ என்று தோன்றியது. திருமணமான இளவயது தம்பதியினர் இருவருக்குள் ஏற்படும் உறவைப் பற்றிய கதை. அத்தகய உறவை தகாத உறவு என்று பெயரிட்டு அழைப்பார்கள். இதில் எந்த பொயெடிக் ஜஸ்டிஸோ இல்லை தகாத உறவை ஞாயப்படுத்தும் முயற்சிகளோ இயக்குனர் எடுக்காமல் கொஞ்சம் மெச்சூராகவே கதையை நகர்த்தியிருப்பது ஆறுதலான விஷயம்.

கதை:
சாரா ஒரு குழந்தையின் தாய். கணவர் வேலையில் பிசி. ப்ராட் ஒரு குழந்தைக்கு அப்பா. வேலை இல்லை. அடுத்த முறை தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வக்கீலாக முடியும் என்ற நிலை. மனைவி சம்பாத்தியத்தில் வாழும் மனிதர். வீட்டையும் குழந்தையையும் பார்த்துக் கொள்கிறார். மனைவி ஒரு டாக்குமெண்டரி படம் இயக்குபவர். வேலையில் அனியாய பிசி. ரோன்னி என்பவர் ஒரு பரோலில் வெளிவந்திருக்கும் குற்றவாளி. அவனது குற்றம், பொது இடத்தில் குழந்தைகளின் முன்னிலையில் பிறந்த மேனியாக காட்சி அளித்தது. லேரி ஒரு அவசரக்குடுக்கை எக்ஸ் போலீஸ். வேலையிலிருந்து வாலண்டரி ரிட்டையர்மெண்ட் கொடுக்கப்பட்டவர். அவரது தற்போதைய தொழில் ரோன்னியை மறுபடியும் ஜெயிலுக்கு அனுப்புவது. ரோன்னியும், லேரியும் ஒரு பக்கம் சண்டை ஆரம்பிக்கிறது என்றால், சாராவுக்கும் பிராடுக்கும் கள்ள உறவு மலர்கிறது. ரோன்னியின் தாய் தன் மகனுக்கு ஒரு கர்ள் ஃபிரண்ட் இருந்தால் அவன் தவறான வழிக்குச் செல்ல மாட்டான் என்று நம்பிக்கை. சாராவின் கணவனுக்கோ இண்டர்நெட்டில் இருக்கும் ஆபாசம் பிடிக்கும். இவர்கள் அனைவரின் வாழ்க்கை எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது ? சாராவின் அட்வெஞ்சர் எப்படி முடிவுக்கு வருகிறது. பிராட் ஒரு வக்கீலாக தேர்ச்சி பெருவானா ? இதெல்லாம் தான் கதை.



மதாம் போவரே என்ற ஃபிரஞ்சு மொழி நாவல் குஸ்தாவ் ஃப்ளாவ்பர்ட் எழுதியது. அது 19ம் நூற்றாண்டு முடிவில் சக்கை போடு போட்டு விற்ற நாவல். ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. அதில் மேடம் போவரே டாக்டரை திருமணம் செய்து வீட்டில் வாழும் பெண். தனது காதல் இல்லாத வாழ்க்கையில் ஏற்றம் வேண்டி தகாத உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார். ஐரோப்பிய சிந்தனைகளில் தகாத உறவுகள் முக்கியத்துவம் பெருவது இந்த நாவலில் தான் ஆரம்பமாகிறது என்று பலர் கருதுகின்றனர். அந்த வரிசையில் இந்தப் படத்தையும் நிறுத்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர். படத்திலும் இந்த நாவலை பற்றி விவாதங்கள் எழுகின்றன. சாரா வை இந்த போவரே போல் காட்ட முயற்சித்திருக்கிறார்.

2007 ஆஸ்கார் விருதுக்காக பல துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இந்தப்படம்.

April 26, 2007

Das leben der anderen

பிறரது வாழ்க்கை ஏன்று அர்த்தம் வரும் இந்தத் திரைப்படம் என்னை மிகவும் பாதித்த படமாகவே நான் கருதுகிறேன். ப்ஃளோரியான் ஹென்கெல் ஃபோன் டோன்னெர்ஸ்மார்க் என்ற இயக்குனரால் 2006 ல் இயக்கி வெளியிடப்பட்ட படம். இது அவரது முதல் படமும் கூட. முதல் படத்திலேயே ஆஸ்கரைத் தட்டிவிட்டார்.

GDR அல்லது DDR என்று அழைக்கப்பட்டு வந்த முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் நடக்கும் கதை. ஜார்ஜ் ட்ரேமன் என்பவர் பிரபலமான எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியரும் ஆவார். சோஷியலிச சித்தாந்தத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டும் நாடகங்களை எழுதி இயக்கி வெளியிடுபவர். அவரது நாடகங்களில் நடிக்கும் நடிகை கிரிஸ்டா மரியா என்ற பெண்ணுக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. இருவரும் ஒரே வீட்டில் வாழும் அளவுக்கு முன்னேறிய நட்பு. இவருமே சோஷியலிச சித்தாந்தத்தில் மிகுந்த ஈடு பாடு காட்டுபவர். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் சோஷியலிச சித்தாந்த நம்பிக்கையில்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் மேல் சந்தேகம் கொண்டு அவர்களை கண்காணிக்க உத்தரவு பிரப்பிக்கிறார் ப்ரூனோ ஹெம்ப் என்கிற மந்திரி. இத்தகைக ஆப்பிரேஷன்களைச் செய்யவே அப்போதய கிழக்கு ஜெர்மனியில் சிறப்பு காவல் படை இருந்திருக்கிறது. அதன் பெயர் STASI. இத்தகைய ஸ்டாஸி ஏஜண்டாக வருகிறார் வைஸ்லர் என்பவர். படத்தின் கதையே இவர் மூலமாகச் சொல்லப்படுவதாக அமைந்திருக்கிறது.

வைஸ்லர் ட்ரேமேனை கண்காணிக்க அவரது வீட்டின் மூலை முடுக்கெல்லாம் மைக்ரோஃபோன்களை மாட்டி 24 மணி நேரமும் கேட்டுக்கொண்டே கண்காணிக்கிறார். நித்தம் ரிப்போர்ட் டைப் செய்து அவரது சுப்பீரியருக்கு அனுப்புகிறார். ட்ரேமேன் மற்றும் க்ரிஸ்டா மரியாவின் வாழ்க்கையினால் கொஞ்சம் கொஞ்சம் அவரும் பாதிக்கப்படுகிறார். ட்ரேமேன் தன் சகாக்களுடன் இணைந்து மேற்கு ஜெர்மனியின் ஊடகதத்திற்கு ஒரு கட்டுரையை எழுதி அனுப்புகிறார், அதுவும் எப்படி கிழக்கு ஜெர்மனியில் தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன என்று. ஸ்டாஸிக்கள் உஷாராகி, வைஸ்லரைக் கேட்கின்றனர். வைஸ்லர் சரியான சமயத்தில் ட்ரேமேனைக் காப்பாற்றிவிடுகிறார்.

ஒருவரை இப்படியும் ஒரு நாடு கண்காணிக்குமா என்று அதிர்ச்சியில் இருந்த எனக்கு கடைசியாக கிளைமாக்ஸில் மிகப்பெரிய அதிர்ச்சிகள் காத்திருந்தன. ட்ரேமான் போன்ற பிரபலங்களை மட்டுமே கண்கானிக்கவில்லை, பல மில்லியன் மக்களையும் அவர்களது அந்தரங்க வாழ்க்கையையும் கண்காணித்துள்ளனர் என்பது தான் அந்த அதிர்ச்சி.

ஒரு கட்டத்தில் தன் காதலி கிரிஸ்டா மாரியாவை இழந்து நிற்கும் ட்ரேமேன் எழுதுவதை நிறுத்திவிடுவார். அப்போதுகூட அவருக்கு அவரது வீடு கண்காணிக்கப்படுகின்றது என்ற உண்மை தெரியாது. ஆனால் பெரில்ன் சுவர் உடைந்து கடைசியில் தான் நம்பிய அந்த மந்திரியே சொல்லும் போது அதிர்ந்து போய் விடுவார். அவரை யார் கண்கானித்தது என்ற உண்மை அறிந்து கொண்டு பின்னர் ஒரு புத்தகமாக வெளியிடுவார். அந்தப் புத்தகத்தை அந்த கண்காணிப்பாளரான வைஸ்லருக்கே சமர்பணம் செய்வார். இதில் ஐரனி என்னெவென்றால் வைஸ்லரும், ட்ரேமேனும் படத்தில் பேசிக் கொள்ளும் காட்சியே இல்லை. ஆனால் கடைசியில் தன் அந்தரங்கத்தை கண்காணித்த வைஸ்லருக்கே தன் புத்தகத்தை சமர்பணமாக்கும் அளவுக்கு மதிப்பு கொடுக்கிறார்.

எப்படி சோசியலிச நாட்டில் மேற்குலகைப் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நாம் நம் அரசியல் வாதிகள் அதுவும் முக்கியமாக கம்யூனிஸ்டுகள் சொல்வது போலவே இருக்கிறது.

April 25, 2007

தமிழ்மணம்

Dear Admin,

I have been an avid reader of tamil blogs since april 2006. And thamizmanam gave great opportunity to find several different kinds of blogs at one place. Now i find thamizmanam to be increasingly partial towards a group of bloggers who express their disagreement in a democratic way and increasingly ading and abeting leftist radicals, naxalites, and anti-national anti-indian elements. Those who write rejoinder to these anti national blogs are labelled without any basis as hindutva goons, fascists and what not. I am sick and tired of reading the same kind of nonsense that thamizmanam treats as best blogs and hosts in poonga. All of them invariably contain anti-state, anti-national rhetoric.

People who write such blogs are sometimes paid to do so. People who write rejoinders are doing so out of their own will and spending their own time.

It is well within your purview to decide what befits good and bad according to your own understanding. I have no intentions of changing that. But the recent actions of thamizmanam is clearely showing what it favors and what it wants to reject. The delisting of nesakumar who just questioned thamizmanam's integrity is just an example of how thamizmanam is tackling its opponents.

By silencing them!

I feel that the attitude of thamizmanam is it selectively promotes leftist, marxist, anti-india, anti-hindu bloggers.

This happens only when a group controls the whole. It is increasingly becomming clear that the group is the "be all" and "end all" of thamizmanam. What the group feels as bad is considered bad, those who disagree are prosecuted.

This trend is worrying and i increasingly feel i do not want to be part of this intellectual terrorism.

Fortunately the world of blogs is bigger than thamizmanam and i, having a free will to choose, choose to get out of what i consider to be a terrorist den.

So, I hereby request you to delist my blog from your site. I have done the necessary things from my side.

Sincerely
sankar

mailed to: adm@thamizmanam.com

tamil version:

நிர்வாகிகளுக்கு,

தமிழ் வலைப்பதிவுகளை நான் கடந்த ஏப்ரல் 2006 முதல் படித்துவருகிறேன். தமிழ்மணம் இந்த விஷயத்தில் பல நல்ல பதிவுகளைப் பார்த்து படிக்கக் கூடிய இடமாக விளங்கிற்று. சில காலமாக தமிழ்மணம் ஒரு சாராரை, அரசியல் சார்புடையவர்களை அதுவும் அவர்கள் ஜனநாயக முறையில் எதிர்ப்புகள் தெரிவித்ததற்காக அவர்களைத் தூக்குவது, மற்றும் இடது சாரி அல்ட்ராக்கள், நக்ஸலைட் இயக்க அடிவருடிகளுக்கு முன்னுரிமை மற்றும் முதல் உரிமை கொடுப்பது கேவலமாக உள்ளது. இது போன்ற தேச விரோதப் பதிவுகளுக்கு பதில் எழுதுபவர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் ஹிந்துத்வாவாதிகள் ஃபாசிஸ்டுகள் என்று முத்திரை குத்தி வருகிறது தமிழ்மணம். போதாததற்கு தமிழ்மணம் வாராவாரம் தேர்ந்தெடுத்து தொகுக்கும் பூங்கா வலையிதழ் முழுக்க இந்த நக்ஸலைட்டு அடிவருடித்தனமும், கம்யூனிஸ தேச விரோதப் பதிவுகளுமாகவே உள்ளது.

இப்படிப்பட்ட வலைப்பதிவு எழுதுபவர்களுக்கு பணம், பொருள் ஆதாயம் கிடைக்கலாம். ஆனால் இந்த இந்திய எதிர்ப்பை எதிர்ப்பவர்கள் தங்கள் சொந்த செலவில், பொன்னான நேரத்தை வீணாக்கி பதில் எழுதுகிறார்கள்.

தமிழ்மணத்திற்கு நல்லது கொட்டது சொல்லிக் கொடுத்து மாற்றுவது என் வேலையல்ல. அதன் வரம்புகள் உணர்ந்து செயல்படத் தெரியாத அளவுக்குத் தமிழ்மணமும் மோசமானதாக இருந்ததில்லை. ஆனால் சில காலமாக தமிழ்மணத்தின் நடவடிக்கைகள் சோபை அளிப்பதாக இல்லை. அதன் விருப்பு வெறுப்புகளின் வரம்புகள் என்ன என்பதை அது தெளிவாக்கிக் கொண்டே வருகிறது. நேசகுமாரை நீக்கியதன் மூலம் தமிழ்மணம் தன் எதிர் கருத்துள்ளவர்களை எப்படி அடக்குகிறது என்பது தெளிவாகிறது.

எதிர்கருத்துள்ளவர்களை ஓழித்துவிடுவது!!

தமிழ்மணத்தின் எண்ணம் கம்யூனிசம், மார்க்ஸ்வாதம், இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு வலைப்பதிவர்களையே முன்னிருத்துவதாக உள்ளது.

இத்தகைய செயல்கள் ஒரு குழு முழுதையும் கட்டுப்படுத்து வல்லமை பெற்றதையே காட்டுகிறது. அந்தக் குழுவின் விருப்புகள், வெறுப்புகளும், அரசியல் சார்புகளுமே சரி, மற்றவை தவறாகிவிடுகின்றது. அந்தக் குழுவை எதிர்ப்போரின் கதி, தமிழ்மணத்திலிருந்து நீக்கம்.

இத்தகைய செயல்கள் அதிகரிப்பது நல்லதல்ல. இத்தகைய அறிவார்ந்த அடாவடித்தனத்திற்கு துணை போக நான் விரும்பவில்லை.

கடவுள் புன்னியத்தில், தமிழ் வலைப்பதிவுகள் உலகம் தமிழ்மணத்துடன் நிற்பதில்லை. அது பறந்து விரிந்து கிடக்கிறது. என் சுய சிந்தனை எனக்கு இன்னும் இருப்பதால், இந்தத்த் தீவிரவாதக் கூடம் என நான் கருதும் தமிழ்மணத்திலிருந்து விலகுகிறேன்.

ஆகவே, என் வலைப்பதிவுகளை உங்கள் வலைத்திரட்டியிலிருந்து நீக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,

ஷங்கர்.

April 2, 2007

சமீபத்தில் பார்த்த படங்கள்

1. Happy Feet
2. The Departed
3. Children of Men

happy feet:

அழிவின் விழிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் emperor penguin கள் தங்கள் குரல் வழத்தால் ஜோடியைத் தேர்ந்தெடுக்கும் முறையை ஏக இறை கொள்கை போல் கடைபிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் காஃபிர் போல் குரல் வளம் இல்லாத ஆனால் நன்கு நடனமாடக்கூடிய ஒரு குட்டி பிறக்கிறது. அது தன் வாழ்கையில் எத்தகைய கஷ்ட நஷ்டங்கள் அனுபவிக்கிறது, எதனால் தன்னினம் அழிவின் விழிம்பிற்குத் தள்ளப்பட்டுவருகிறது என்ற காரணத்தை அறியத் துடித்து தேடலில் ஈடுபடுவது என்று animated திரைப்படம் என்றாலும் விருவிருப்புக்குச் சற்றும் குறைவின்றி அதே நேரத்தில் இடையே gobal warming funda க்களையும் நுளைத்து அருமையான படம். எல்லோரும் பார்க்கவேண்டிய படம்.

The Departed:

குற்றவாளிக்களிடையே ஒரு போலீஸ் ஒற்றன், போலீஸ்களிடையே ஒரு கிரிமினல் ஒற்றன், இருவரும் சந்தித்தால் ? லியொனார்டோ டிகாப்ரியோவும், மாட் டிமொன்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். நல்ல ஆக்ஷன் த்ரில்லர்.

237 முறை fu*k என்ற பதத்தைப் பயன்படுத்திய படம் ஆஸ்கார் வாங்கி சரித்திரம் படைத்திருக்கிறதாம்...சொல்கிறார்கள்.

Children of Men:

பதினெத்து ஆண்டுகள் ஒரு குழந்தை கூடப் பிறக்கவில்லை என்றால் ?

2027 ல் நடக்கும் இந்த sci-fi thriller ல், க்ளைவ் ஓவன் முக்கிய கதாப்பாத்திரமான தியோ வாக நடித்திருக்கிறார். படம் ஆரம்பிக்கும் போது ஒரு காஃபி ஷாப்பில் தொலைக்காட்சி செய்தியில் உலகின் மிக இளமையான மனிதர் கொலைசெய்யப்பட்டார் என்பது. அவருக்கு வயது 18. அந்த செய்தி முடிந்து சில நொடிகளில் தியோ வெளியில் வந்து காஃபியில் தன் பிரியமான "விஸ்கி" மிக்ஸிங்க் செய்யும் போது "பூம்"!! வெடிகுண்டு, தற்கொலைப்படைத் தாக்குதல். அல்லாஹ் ஹு அக்பர் கோஷங்கள். ப்ரொலெடேரியட் புரட்சிகள் என்று படம் எக்கச்செக்க திடீர் திருப்பங்களுடன் செல்கிறது. தியொவின் ex காதலி ஜூலியன் பிரிட்டனில் immigrants rights க்காகப் போராடும் ஒரு புரட்சிகர அமைப்பின் அங்கம் வகிக்கிறாள். அதில் ஒரு கருப்பினப் பெண் கர்பமாக இருப்பது தெரியவே அரசியல் லாபத்திற்காக ஜூலியனை கொன்றுவிடுகின்றனர்..எப்படி அந்த கர்பமான பெண்ணை அரசியல் லாபத்திற்காக புரட்சி செய்யும் கூட்டத்திடமிருந்து காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. 2007 ஆஸ்கருக்காக நாமினேஷனில் இருக்கும் படம். சமீபத்தில் தான் DVD வெளிவந்துள்ளது.


P.D. James ன் இதே பெயரில் வெளிவந்த நாவல் கதையை திரைப்படம் ஆக்கியிருக்கிறார்கள்.

படத்தில் ஏன் மனித குலத்துப் பெண்கள் கருத்தரிக்காமல் போனார்கள் ? இந்த infertility க்கான காரணம் என்ன ? என்றெல்லாம் எந்த விளக்கமும் இல்லை! என்பது உருத்திக் கொண்டே இருக்கும் கேள்வியாக இருந்தது.

March 10, 2007

கம்யூனிசத்திற்கு ஒரு மியூசியம்

communism என்பது ஒரு அரசியல் கொள்கை. அதன் தாக்கம் உலகெங்கும் காணப்படுகின்றது.

ஆனால் அந்தக் கொள்கையினால் நடந்த மனித உரிமை மீரலகள் வெகுவாக மக்கள் ஆறியாமல் இருக்கிறார்கள்.

அதற்காக, ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக எகனாமிக்ஸ் துரை ஒரு விர்ச்சுவல் முயூசியத்தை வடிவமைத்து அனைத்துவித தகவல்களையும் தந்துள்ளனர்.

அதன் முகவரி

http://www.gmu.edu/departments/economics/bcaplan/museum/comfaq.htm

இந்த வலைத்தளத்தில் கம்யூனிசத்தை ஒரு controlled experiment என்ற முறையில் ஆராய்ந்து அதன் முடிவுகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

Government is at best a necessary evil and at worst an intolerable one.

Free markets lead to prosperity and socialism leads to poverty.

The history of Communism provides one important argument for libertarianism. Communism deprived its people of both personal and economic freedom.

இந்த முடிவுகளுக்கு எப்படி வந்தார்கள் என்பதை அந்த வலைத்தளத்திலேயே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

முக்கியமாக தமிழ் வலைப்பதிவுலகில் கம்யூனிஸ்டுகள் அதிகம். அவர்கள் இதில் என்ன நினைக்கிறார்கள் ? இல்லை, இது கொள்கையின் எதிரி என்று "கம்" என்று கிடந்துவிடுவார்களா ?

After all, மாற்றுக் கருத்துக்களை ஆராய்ந்து பார்ப்பதினால் தான் தம் கருத்துக்கள் செறிவடையும் என்பது அடிப்படை உண்மையாயிற்றே!!

February 26, 2007

வணக்கம்

இத்தோட படம் முடிஞ்சிருச்சுங்க...

வணக்கம் போட்டேன்...

ஒரு வாரம் என் அறுவைகளையும் அரசியல்களையும் தாங்கிக் கொண்டு அத்துடன் என் தமிழ்க் கொலைகளையும் (spelling mistakes) பொறுத்துக்கொண்டு எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றி.

இந்த வாய்ப்பை எனக்குத் தந்த தமிழ் மணத்திற்கும் என் நன்றி.

I enjoyed that attention.!

அன்புடன்

வஜ்ரா

February 25, 2007

இயைதல் கோட்பாடு

"இந்த நெட்ஸ்கேப்புக்கு என ஆச்சுன்னே தெரியல்லையே, இப்ப வராமலே போயிருச்சே" புதிதாக வால் மார்டில் வாங்கிய ஒயர் லெஸ் அடாப்டரை install செய்து கொண்டிருந்தார் தந்தை.

"அப்பா" மகளின் குரல், "ஒரு முக்கியமான விஷயம் பேசனும்",

"சொல்லு, கேட்டுகிட்டே தான் இருக்கேன்"

"நான் ஒருத்தர விரும்புகிறேன்"

"ஓ! அதாவது..."

ஆமா, நான் அவரக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்"
-----
"என்ன விளையாடறியா? இப்பவே ஸ்ரீரங்கத்தப் போய் பிடிக்கிறதா ? நம் படைகள் மிகவும் களைப்பாக இருக்கின்றன, நாளை காலை வரை காத்திருக்கலாமே?" படைத்தளபதி கேட்டான்.

"நான் என்ன தில்லியிலிருந்து இங்கு வந்து ஓய்வெடுப்பதற்காகவா வந்தேன்?" உலுக் கான் கோபமானான். "அங்கே இறந்து கிடக்கும் படைவீரர்களைப்பார்! இப்போது இந்தக் கோவிலுக்குப் பாதுகாப்பு இல்லை, இப்பொழுதே ஊருக்குள் சென்று கோவிலைக் கொள்ளையடிப்போம், காபீர்களைக் கொன்று குவிப்போம், பின்னர் அவர்கள் சிலைகளை உடைப்போம்!"

"கோவில் எங்கெயும் போகாது!"

"ஆனால், அந்த காபீர்கள் சிலையைத் தூக்கி ஒளித்து வைத்துவிடுவார்களே ?, அதைத்தான் பல இடங்களில் பார்த்தோமே, திப்ருபூர், நாராயண்கஞ்ச், நர்சிபட்டனத்திலும் அதைத்தானே செய்தார்கள். நான் மறுபடியும் அதே தவறைச் செய்வதாக இல்லை. இவர்களுக்கு கலாச்சார, வரலாற்று முக்கியத்துவம் கொடுப்பதே இந்த சிலைகள் தானே, இதை உடைப்பது இவர்கள் மனோ பலத்தைத் தகர்க்கும், அல்லாஹ் நன் துணையிருந்தால் நம் இந்த ஜிஹாதில் வெற்றி பெருவோம்."
-----

"அவன் என்ன செய்யறான், அவன் பெயர் என்ன ?" அப்பா கேட்டார்.

"சுஹைல்" என்றாள் மகள், "இப்பத்தான் படிப்பு முடித்து வேலைக்கு apply செய்கிறார், கொஞ்சம் job offer ஸும் இருக்கு"

"அவன் ஒரு..."

"ஆமாம் பா, முஸ்லீம்". "இது ஒரு பிரச்சனையா ? நீங்க எங்களை நல்ல லிபரல் வேலியூஸோடத்தான வளர்த்தீர்கள் ?"

"எனக்கென்னம்மா பிரச்சனை ? infact நீ தான் யோசிக்கவேண்டிய விஷயம் இது."

"இல்லப்பா, அவன் ரொம்ப நல்லவன் பா, நம்மள மாதிரியே நல்ல லிபரல் வேலியூஸ மதிக்கிறவன், அவன் ஒண்ணும் fundamentalist எல்லாம் இல்லப்பா"

"அவன் இது வரை மதத்தைப் பத்தியே பேசுனது இல்ல, நாம அடிக்கடி சந்திக்கிறது, பார் பப் டேன்ஸ் பார்ல இப்படித்தான் போவோம், அவனோட career ல தான் அவனுக்கு interest."

"எனக்கு இப்பவே ஒரு சந்தேகமா இருக்கு" "முதல்ல அடிப்படைவாதின்னா நீ நினைக்கிற மாதிரி குண்டு வைக்கிறவன் இல்ல குண்டக்கட்டிக்கிட்டு தற்கொலை பண்ணிக்கிறவன் மட்டும் இல்ல, அமைதியா இதெல்லாம் பாத்துக்கிட்டே சும்மா இருக்குற, சமையத்துல சப்போர்ட்டும் பண்ற பெரும்பான்மை மக்களும் தான்"

"அப்பா, சும்மா, முஸ்லீம்னு சொன்ன உடனேயே முடிவுக்கு வந்துறாதீங்க, அவன கிட்ட பேசுங்க, பிடிக்குதான்னு பாருங்க, பிடிக்கலையான்னு அப்பறமா முடிவு பண்ணிக்கலாம்"

ம்ம்ஹூம் இவ கேக்குற மாதிரி இல்லைன்னு நினைத்துக் கொண்டே, லேப்டாபைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிடு மகள் பக்கம் திரும்பினார் தந்தை.


அவருக்கு அவர் மகள் மேல் தனி அன்பு, அவள் ஒரு மாதக்குழந்தையாக இருந்த போது சிரித்த சின்னஞ்சிரு சிரிப்பு அவர் மனதில் தொன்றி மறைந்தது, "ஆண்டவா, நான் என்ன பாவம் பண்ணேனோ, ஏன் என்ன இதெல்லாம் பாக்கவைக்கிற ?" மனதில் கேள்வியுடன் மகளைப் பார்த்தார். அவள் விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள், போர்களத்திலிருந்து வந்த செய்திகேட்டு. அவளது கணவன் உலுக் கானின் படையினரால் வீர மரணம் அடைந்தான் என்பது தான் அந்தச் செய்தி.

"பொன்னி, அழாதேம்மா, உன் புருஷன் சண்டையில செத்துருக்கார் -- ஒரு க்ஷத்திரியனுக்கு இதெவிட பெருமை ஏது ?"

"என்ன சொல்றீங்க, கஷ்ட காலத்துல க்ஷத்திரியன், சக்கிலியன்னு பேசிகிட்டு, ?" ஆசுவாசப்படுத்த வந்த பக்கத்துவீட்டுப் பெண் முணுமுணுத்தாள்.

"நான் இனிமே இருக்க விரும்பல, நானும் செத்து வைகுண்டம் போறேன், கிருஷ்ணா! என்னையும் எடுத்துக்கோ!" பொன்னி புலம்பி அழுதாள்.

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாதும்மா, எனக்கு உன்னைவிட்டா வேற யாரு இருக்கா, எல்லாரும் ஊரைவிட்டுப் போயிகிட்டு இருக்காங்க. உலுக் கான் ஸ்ரீரங்கம் கோவிலைத்தான் அடுத்து தாக்கப் போறதா வேற சொல்றாங்க, முஸ்லீம்கள் வந்தாலே, ஊர்ல இருக்குற மக்களையெல்லாம் கொன்றுவிடுவார்கள், பெண்களை கற்பழிப்பார்கள். குழந்தைகளைக் கடத்திச் சென்று முஸ்லீம்கள் ஆக்கிவிடுவார்கள்"

"நாமளும் இந்த இடத்தைவிட்டுப் போவோம், புதுசா வேறு வாழ்க்கை ஆரம்பிப்போம்"


"கல்யாணம் பண்ணிக்கிறியா ?" அப்பா கேட்டார்.

"ஆமாம்" மகள்.

"இங்க பாரு " என்று தனது லேப்டப்பைக் காட்டி "இதுல புது software ஒண்ணு போட்டேன், அது வேலை செய்யணும்னா இருக்குற செட்டிங்ஸெல்லாம் மாத்தணுமாம், அப்ப நான் இதுக்கு முன்னாடி பண்ணுன எதையுமே பண்ண முடியாது. இப்ப இந்த softwareக்கு தகுந்த மாதிரி என் கம்ப்யூட்டர் செட்டிங்ஸையெல்லாம் மாத்திக்கவேண்டியிருக்கு, விக்கும் போது இது backwards compatible ன்னு சொன்னாங்க, அத நான் அப்புடியே நம்பிட்டேன். இப்ப கஷ்டப்படறேன்.."

"அப்பா, விஷயத்துக்கு வாங்க"

"சரி, சுஹைல் என்ன plug and play டைப்பா, இல்ல இந்த software மாதிரி மக்கர் டைப்பா ?"

"அப்பா !"

"இதெல்லாம் உன்னை நீயே கேட்டுக்கவேண்டிய முக்கியமான கேள்வி. சுஹைல், நி நினைக்கிற மாதிரி plug and play டைப்னா, எந்தப் பிரச்சனையும் இல்ல".

"இல்லை! இந்த software மாதிரி எல்லாம் தனக்கேத்தமாதிரி மாத்திக்க நினைக்கிற டைப்னா பெரிய்ய பிரச்சனை தான்!"

அவளுக்குத் திடீர் என்று ஏதோ உரைத்தது. அழுகையை நிறுத்திவிட்டாள் பொன்னி.

அவளது தந்தைக்குப் புரிந்து விட்டது, இவள் ஏதோ மனதில் நினைத்துவிட்டாள், அவளை மாற்ற முடியாது என்று!

"உலுக் கான் படை எங்கே இருக்கிறது ?" அமைதியாகக் கேட்டாள்.

"குதிரையில் போனால் ஒரு மணி நேரம் ஆகும், இப்ப நம்ம கிட்ட நேரமில்ல, நம்ம தெற்கால போயி அந்த மலைக்குப் பின்னால ஒளிஞ்சுக்குவோம். ஓடி அடுத்த ஊருக்குப் போறதுக்குப் பதிலா ஒளிஞ்சுக்குறது நல்லது. அந்த மலைக்குப் பின்னாடி நிறைய இடம் இருக்கு, அங்கே ஸ்ரீரங்கத்துப் பெண்கள் எல்லாரும் ஒளிஞ்சுக்கலாம்"

"அப்ப ஆண்களெல்லா என்ன செய்வார்கள் ?"

"அரங்க நாதர் மூர்த்தியை என்ன செய்ய ?" பொன்னி கேட்டாள்.

"லோகாச்சார்ய பிள்ளை மூர்த்தியை மைசூர் பக்கத்துச் சத்திய மங்கலத்துக்கு எடுத்துச் செல்கிறார். அங்கே உடையாரிடம் பெரிய படை இருக்கிறது. உலுக் கான் அங்கே தாக்க மாட்டான். ஆனா, கானின் படை சீக்கிரமே கோவிலுக்கு வந்துருச்சுன்னா, அவங்களுக்கு மூர்த்தியை எடுத்துச் செல்ல நேரம் இருக்காது. நடு வழியில் சிக்கிவிடுவர். பகவான் தான் காப்பாத்தனும்."



"என்ன பிரச்சனைன்னு புரியல்லையா...?" அப்பா கேட்டார்.

"இப்ப ஒரு விளக்கத்தோட சொல்றேன், இப்ப இங்க அமேரிக்காவுல நடக்குற ஹலோவீன் எடுத்துக்கோ, ஒரு சில பேருக்குப் பக்கத்துவீட்டுக் குழந்தைகள் வந்து மணி அடிப்பதே பிடிக்காது, கதவுகளில் "do not disturb" எழுதிப் போட்டிருப்பார்கள். சட்டப்படி எந்தத் தவறும் இல்லை. இது 'சுத்தமாக எதையும் புதிதாக ஏற்றுக் கொள்ளத்தெரியாத' stage. கொஞ்ச பேருக்கு ஹாலோவீன் பார்டி காஸ்டியூம் போட்டு வர்ர பசங்களுக்கு இனிப்பு கொடுப்பதும் பிடிக்காது, அவுங்கள do not disturb னு போட்டு விரட்டவும் மனசில்லை. அதனால அவுங்க காலிங் பெல் அடிச்சாலும் போயி கதவைத் திறக்கமாட்டார்கள். இது 'நீ எதவேண்ணா பண்ணிக்கொ என்ன விட்டுவிடு' ங்குற மாதிரி stage. இன்னும் சில பேருக்கு குழந்தைகளுக்கு இனிப்பும் கொடுக்கணும் ஆனால் அடிக்கடி தொந்திரவும் இருக்கக் கூடாது, அதனால அவுங்க, கதவுல இனிப்புக் பாக்கெட்டை மாட்டி வைத்திருப்பார்கள். ஹாலோவீன் பார்டிக்காக வரும் குழந்தைகள் இனிப்பு எடுத்துக் கொண்டு போயிவிடலாம். இந்த stage கொஞ்சம் 'ஒத்துக் கொள்ளும்' stage. இன்னும் சில பேருக்கு குழந்தைகள் சந்தோஷமும் மிக முக்கியம், ஆகயால் குழந்தைகளுக்கு இனிப்பு தாங்களே வழங்குவதோடு, இந்த spiderman காஸ்டியூம் நல்லா இருக்கு போன்ற appreciation கொடுப்பார்கள். இது முழுதாக அவர்களுடன் ஒத்துப் போகும், அவர்களுடன் இரண்டரக் கலக்கும் stage 'பங்கெடுத்துக் கொள்ளும்' stage. இப்படி இருப்பவர்கள் தான் வாழ்க்கையில் எத்தகைய மாற்றம் வந்தாலும் அதற்கேற்றார் போல் இசைந்து வாழக்கூடியவர்கள். அதாவது, இன்று ஹாலோவீனுக்கு இனிப்பு வழங்குவது ஒரு பண்பாடாக இருக்கிறது, நாளை வேறேதாவதாக இருக்கும் பட்சத்தில் இவர்கள் தங்களை ஈசியாக adapt செய்து கொள்வர்."

"அப்பா, நீங்க பிள்ளை வாளுடம் மைசூருக்குச் சென்றுவிடுங்கள். தயவு செய்து அரங்க நாதர் மூர்த்திக்கு ஏந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள், எனக்குச் சில காரியங்கள் செய்யணும்." என்ற பொன்னி, பணிப்பெண்ணிடம் திரும்பி, "எனக்கு ஒரு குதிரை உடனே வேண்டும், தயார் செய்!" என்று கட்டளையிட்டாள்.

ஏன் ? எதுக்கு ? என்ன செய்யப் போகிறாய் ? முக்கியமா உன்னைப் போலுள்ள இளம் பெண்கள் தான் முதலில் ஓடி ஒளிய வேண்டும் !" என்று சொல்லிய அப்பா, பொன்னியின் கண்களைப் பார்த்து அமைதியானார், அவளின் அம்மாவின் கண்களில் தெரியும் அதே தீர்க்கம். இனி இவள் முடிவை மாற்றா ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிந்தும் முயற்சித்தார்.

"அப்பா, உலுக் கான் படைகளை ஒரு சில மணி நேரமாவது தாமதப்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. முஸ்லீம் படைகள் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும், அவர்கள் இந்து அரசர்களைப் போல அல்ல, மிருகங்கள் அவர்கள், அவர்கள் முதியவர்களைக்கூட விட்டு வைக்காமல் வெட்டிவிடுவர். யாராவது ஒருவர் அவர்களை நிறுத்தவேண்டும், யாராவது ஒருவர் இந்தப் புதுக்கஷ்டத்துக்கு ஏத்த மாதிரி இசைந்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்"

"அதுக்கு நீ என்ன செய்யப் போகிறாய் ?"

"அதை என்னிடம் விட்டுவிடுங்கள், ஒரு க்ஷத்திரியப் பெண் என்ற முறையில் அவர்களை எதிர்த்துப் போராடவேண்டிய கட்டாயம் எனக்குள்ளது. உங்களுக்கு அரங்க நாதர் மூர்த்தியை மைசூருக்கு எடுத்துச் செல்ல போதிய நேரம் கிடைக்கும் படி நான் பார்த்துக் கொள்கிறேன், புறப்படுங்கள்.."


"இப்ப நீ எப்படி இந்த விஷயத்தைப் பார்த்துக்கப் போறன்னு பார்ப்போம்." அப்பா ஆரம்பித்தார். "உனக்கு இந்த ஓபெரா பிடிக்கும் இல்ல ?"

"ஆமா, ரொம்பப் பிடிக்கும்"

"ஒரு argument க்காக சுஹைல் ஓபெராவுக்கே போனது இல்ல, ஆனா அது என்னன்னு ஏதோ தெரியும் ன்னு வெச்சிக்குவோம். கல்யாணத்திற்கு அப்பறம், இதுல ஏதாவது ஒண்ணு நடக்கும், ஒண்ணு, எனக்குப் இஷ்டமில்லாத வேலையை நீயும் செய்யக் கூடாது ன்னு சொல்லி ஓபெராவுக்கு நீயும் போகக்கூடாது, and ஓபெரா ங்குறது கதோலிக்க மதம் சார்ந்த விஷயம்ன்னு சொல்லி தடுக்கலாம்"

"அப்பா, அது intolerance, எதையும் ஏத்துக்காதது, சுஹைல் அப்படி இல்ல"

"இரு, நான் இன்னும் முடிக்கல்ல, ரெண்டாவது, அவனுக்கு இஷ்டமில்லன்னாலும் நீ போயிட்டுவா ன்னு உன்னை அனுப்பலாம். அது ஏத்துக்குறது, அடுத்தது, மூணாவது ஆப்ஷன்ல, அவன் உன்னையும் குழந்தைகளையும் ஓபெரா ஹவுஸுல ட்ராப் செய்து, டிக்கெட்டும் வாங்கிக் கொடுப்பான், ஆனால் கூட வர மாட்டான். இது 'நீ எதவேண்ணா பண்ணிக்கொ என்ன விட்டுவிடு' ங்குறது. நாலாவது ஆப்ஷன்ல அவன் உன்னுடன் ஓபெராவுக்கு வருவான், அவனும் ஓபெரா பற்றிப் படித்து தெரிந்து கொண்டு அதைப்பற்றி கருத்துச் சொல்வான். இது தான் நான் சொன்ன "ஒண்ணாக் கலந்து விடுகிற, பங்கெடுத்துக்குற" best stage. நீ என் பொண்ணு உனக்கு எல்லாத்துலயும் best ஆப்ஷன் தான் வேணும்."

"ofcourse!"

"அதே மாதிரி சுஹைலுக்கு முஸ்லீம் பண்டிகையெல்லாம் கொண்டடும்னு ஆசையிருந்தால், அவனுடன் நீயும் போகனும்.!"

"அதனாலென்ன, எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல, அப்படித்தான் நீங்கள் எங்களை வளர்த்தீர்கள்"

அதே மாதிரி நீ கோவிலுக்குப் போகணும்னா அவன் உங்கூட வரணும்"

".........." அவள் அமைதியானாள்.

பக்கத்தில் இருந்த கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தார் அப்பா.

"அப்பா, அவங்க மதப்படி, அவங்க மத்த மத கோவில்களுக்கெல்லாம் போக முடியாது..!"

"என்ன முட்டாள் தனம், ஜனாதிபதி அப்துல் கலாம் செய்யலைய்யா ?!"

"அது exception ப்பா, சாதாரண முஸ்லீம் செய்ய முடியாது"

"ஏன் முடியாது ?"

"Well, அது தேவையே இல்லையே, நான் தனியாக்கூட கோவிலுக்குப் போவேன்"

"அப்ப உனக்கு எல்லாத்துலயும், best option வேண்டாம். அவனுக்காக விட்டுக் கொடுக்க தயாராயிட்ட "

"அப்படி இல்லையே, "

"அப்படித்தான் இருக்கு"

"அதனால என்ன இப்ப"

"கல்யாணத்துக்கப்புறம் கொஞ்ச நாள் இப்படித் தனியாப் போவ, அப்பறம் போறதே நிறுத்திருவ, உனக்குப் பிறக்கிற குழந்தைகளும் இந்துவாக இருக்க மாட்டார்கள், அவர்களும் முஸ்லீம் ஆயிடுவார்கள். அது தான் நடக்கும்".

"அதுல என்ன தப்பு, எந்த மதமா இருந்தா என்ன ?"

"ஆமா, இதெல்லாம் natural தானேப்பா"

இங்கே அமேரிக்காவுல இனம் மாறிக் கல்யாணம் பண்ணிப் பிறந்த குழந்தைகளெல்லாம் பார்த்திருக்கிறியா ? அவர்கள் எந்த இனத்த்தை போல் இருப்பார்கள் ? அப்பாவா, இல்ல அம்மாவா ?"

"ரெண்டு பேர் மாதிரியும் தான் இருப்பாங்க"

"Nature ஒருத்தர் மாதிரித்தான் இருக்கணும் னு ஒண்ணும் கண்டிஷன் போடுறதில்ல. மசூதிலில தொழுகை பண்ணாத்தான் கடவுள் ஏத்துக்குமா? கோவில்ல பண்ணா ஏத்துக்காதா ?"

"அவங்க ரெண்டையும் பண்ணவேணாமே!" என்றாள்.

"Excellent, அவங்க எங்கெயும் போயி சாமி கும்பிட வேண்டாம், அவங்க பேஸ்பாலும் பாக்கவேணாம், ஓபெராவுக்கும் போகவேணாம், அவங்க பீஃபும் சாப்பிடவேணாம், போர்க்கும் சாப்பிடவேணாம். உன் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னாலயே அவங்களுக்கு கொடுக்குற ஆப்ஷன்ஸக் கட் பண்ணிட்ட, ரொம்ப நல்லது!"

"I am sorry ப்பா, அவரும் எல்லாத்துலயும் எங்கூட பங்கெடுத்துக்கணும், அதே மாதிரி நானும் அவர் கூட எல்லாத்துலயும் பங்கெடுத்துக்கணும்" என்று சொல்லிவிட்டு அவள் மனம் சுஹைலுடனான முதல் சந்திப்பிற்குச் சென்றது.

பாதை கரடுமுரடான பாதை, நன்கு குதிரை ஓட்டத்தெரிந்தவரால் தான் அந்த வழியாகச் செல்ல முடியும், பொன்னி அந்த வழியாக உலுக் கான் படைகள் இருக்கும் இடத்திற்குச் சென்றாள்.

ஒரு சில மணி நேரத்தில் உலுக் கான் படைகள் இருக்கும் இடத்தை அடந்தாள், வீரர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். நேராகச் சென்று அங்கே நின்றாள்,

"உங்கள் தலைவன் எங்கே" என்றாள்.

ஒரு பெண்ணிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுப் பழக்கமில்லாத போர் வீரர்கள் அவளின் பின் புறத்தைப் பிடித்து அவளை குதிரயின் மீதிருந்து இறக்குனர்.

"நான் உங்கள் தலைவருக்குச் சொந்தமான பொருள்" என்று சொன்னாள்.

உடனே அவர்கள் பயந்து தங்கள் பிடியை தழர்த்தி தலைவருக்கு செய்தி அனுப்பினர். உள்ளிருந்து அழைத்துவரச்சொல்லி உத்தரவு வந்தது.

"ஹலோ! " அப்பாவின் குரல்...சுஹைலுடனான முதல் சந்திப்பிலிருந்து திரும்பி வந்தாள்...

"நான் என்ன கேக்குறேன்ன்னா, அவரைக்கட்டிகிட்டா, உன் குழந்தைகளுக்கும் உனக்கும் இப்ப உனக்கு கிடைக்கிற best option கிடக்குமா, அவர் முழுசா ஒத்துப் போவரா, adapt பண்ணிக்குவாரா ?"


ஏம்பா, இந்த adaptation ல யே வந்து நிக்குறீங்க ?"

"adaptation தான் வாழ்க்கையே!, அப்படிப்பட்ட மன நிலை இருந்தால் தான் "நம்மளவிட வித்தியாசமாம் யோசிக்கிறவங்களோட நம்ம ஒத்துப் போக முடியும், இப்ப, பெண்கள் ஏன் ஆண்களைவிட அதிக நாள் வாழ்கிறார்கள் தெரியுமா ? அவர்கள் உடல் காலத்திற்கேற்றார் போல் இசைந்து கொடுக்கும். வயசுக்கு வர்ரப்ப ஒரு மாதிரி, பிள்ளை பெத்துக்குறப்ப ஒரு மாதிரி, வயசானப்பிறகு ஒரு மாதிரின்னு adapt செய்து கொள்ளும் பெண்ணின் உடல். எங்கே இந்த இசைந்து கொடுப்பதைப் பார்க்குறியோ அங்கே தான் தொடர்ச்சி இருக்கும், நான் இதை கிஷோர்-பாலு phenomenon ன்னு சொல்லுவேன்"

"கிஷோர்- என்னது?"

"பெரிய பெரிய பாடகரகள் எல்லாம் வந்து போயிட்டே தான் இருந்தார்கள். முகேஷ், ரஃபி, மன்னாடே ஹேமந்த் குமார்., ஆனா கிஷோர் குமார் மாதிரி யாருமே நிக்கல. ஏன் தெரியுமா, adaptation. அவர் அவரோட குரல ஹீரோவுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்திப் பாடுவார். அதே மாதிரி தான் SPB யும். ஆனா SPB ஹீரோவுக்கு ஏத்த மாதிரி குரலை மாற்றுவது மட்டுமில்லாமல் பல மொழியிலயும் பாடுறார், அவர் சல்மான் கான் குரலுக்கேத்த மாதிரி மாடுலேட் செஞ்சு ஹிந்தில கூட பாடுறார், ஆனா, ஜெயச்சந்திரன், ஏசுதாஸ், பி.பீ. ஸ்ரீனிவாஸ் எல்லாம் இவர மாதிரி செய்ய முடியல."

"அவங்க adapt பண்ணிகிட்டாங்க, அதனால ஃபீல்டுல நின்னாங்க"
"எந்தச் சமுதாயம் இது மாதிரி மாறும் சூளலுக்கு adapt செஞ்சுக்குறதோ அது தான் பெரிய நாகரீகமா வளர்ச்சி அடையும்"
"இன்றைய சூளல்ல, மக்களாட்சிக்கு எந்த நாடு இசைகிறதுங்குறது தான் கேள்வி. எவ்வளவோ குறை நிறை இருக்கலாம் ஆனால் மக்களாட்சி இருந்தால் நல்லது. இன்னிக்கு நம்ம மேற்காசியாவில் பார்க்கும் பிரச்சனைக்கெல்லாம் காரணம் இஸ்லாம் கொடுத்த இந்த adaptation இல்லாத சமுதாயம் தங்களை புதிய உலகுடன் எப்போதும் பிரச்சனைக்குள்ளாக்கொள்கிறது என்பதனால் தான். கிறுத்தவத்திற்கு ஒரு renaissance தேவைப்பட்டது என்றால் யூதத்திற்கு ஒரு ஹோலோகாஸ்ட். இஸ்லாமுக்கு இன்னும் அந்த அறிவு வரவில்லை. இந்த அடிப்படை தான் தனி மனிதனுக்கும் ..."
"கல்யாணம்...அதப்பத்தித்தான் இப்ப பேசிகிட்டு இருக்கோம் நம்ம, நீங்க தான் எதுலெயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டீங்க.."

"ம்ம்ம், கல்யாணம், இந்த விஷயத்துல தான் முஸ்லீம்கள் கொஞ்சம் தெளிவா நடந்துக்குறாங்க." அப்பா தொடர்ந்தார். " முக்கியமா இஸ்லாமியப் பெண்களை வெளியில் கல்யாணம் செய்துகொள்ள இஸ்லாத்தில் தடை உள்ளது, இல்லைன்னா கட்டிக்கப் போற பையன் இஸ்லாத்துக்கு மாறனும், அதே தடையை ஆண்கள் மீது விதிப்பதில்லை. ஏன்னா, பெண்கள் பிள்ளை பெற்றுக் கொடுக்கும் மெஷின்கள் என்ற எண்ணம் தான் காரணம். எந்த நாட்டுல பார்த்தாலும், இப்படித்தான் இருக்கும், முஸ்லீம் ஆண்கள் தான் வேறு நாட்டுப் பெண்களை மணமுடிப்பர். ஆனால் முஸ்லீம் பெண்கள் வேறு நாட்டு ஆண்களை மணக்க மாட்டார்கள். இந்தியாவில் நடந்த 600 ஆண்டு கால இஸ்லாமிய ஆட்சியில் ஒரு முகலாய மன்னனும் தனது பெண்ணை ஒரு இந்து அரசனுக்கு மண முடிக்கவில்லை. அந்த காலத்துல அடிக்கடி போருக்குச் செல்லும் அரச குடும்பங்கள் திருமணம் மூலம் ஒன்றிணைவது நடந்துவந்துள்ளது. அமைதி ஒப்பந்தம் மாதிரி. கிரேக்கர்கள், ஹுன், என்று யாரெல்லாம் இந்தியாவுக்குள் படை எடுத்துவந்தார்களோ எல்லோரும் அப்படிச் செய்தனர். கிரேக்க அரசர்கள் இந்திய அரச பரம்பரைப் பெண்களையும், அதே போல் இந்திய அரசர்கள் கிரேக்கப் பெண்களையும் மணமுடித்தனர். ஆனால் இதெல்லாம் இஸ்லாமியர் வந்த பிறகு நடக்கவில்லை. இந்து ராஜாக்கள் தான் பெண்களை முகலாய மன்னர்களுக்குக் கொடுத்தனர். பதிலுக்கு அவர்கள் வீட்டில் பெண் எடுக்க முடியவில்லை. கொடுக்கல் இருந்தால் வாங்கலும் இருக்கவேண்டும். இல்லையென்றால் பிரச்சனை தான். இஸ்லாமியர் இருக்கும் எல்லா நாடுகளிலும் இதே பிரச்சனை தான். அவர்கள் கொடுக்க இசையாததால் வரும் பிரச்சனை இது. பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, ஐரோப்பா என்று எங்கெல்லாம் வாழ்கின்றனரோ, அங்கெல்லாம் அவர்கள் பிரச்சனைக்குள்ளாகின்றனர்."

"சுஹைல் அப்படித்தான் இருப்பான்னு நீங்க ஏன் நினைக்கிறீங்க?"

"இப்ப அப்படி இல்லாம இருக்கலாம். ஆனா, வயசாக ஆக அப்படி மாறலாமில்லையா ? இங்கே, இங்கிலாந்து, நெதர் லாந்து, ஆஸ்திரேலியா ல எல்லாம் முஸ்லீம் ஆண்கள் வெள்ளை இனப்பெண்ணை மண முடித்துப் பெண் குழந்தை பெற்றவர்கள், ஒரு நாள் திடீர் என்று அவர்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு, சவுதி, பாகிஸ்தான் னு காணாமல் போய்விடுவார்கள். இவர்கள் நல்ல லிபரலாகத்தான் இருந்தார்கள், சின்ன வயதில் ஆனா ஒரு 45 ஐ த்தாண்டும் போது அடிப்படை வாதிகள் ஆயிடுறாங்க, இதை, Midlife crisis ன்னு சொல்லுவாங்க. இந்த 45 வயசுக்கப்பறம் இருக்குற காலத்துல அவங்க அடி மனசுல என்னவா இருந்தாங்களோ அப்படி மாறிவிடுவார்கள். சிலர், வேலை, வேலை என்று workaholic ஆயிடுவார்கள், சிலர் சின்ன வயதுப் பெண்கள் பின்னாடி அலைவார்கள். இதெல்லாம் எந்தச் சமுதாயம் adaptation செய்யத் தெரியாமல் இருக்கிறதோ அந்தச் சமுதாயத்து ஆண்கள் செய்யும் வேலை. எந்தச் சமுதாயத்தில் இசைந்துகொடுத்துப் போதல் ஒரு கொள்கையாக இருக்கோ அங்கே, midlife crisis ன்னு ஒண்ணு கிடையவே கிடையாது. அவங்களுக்கு, பாலக் கொதிக்க வைக்கணும்னா பாலைக் கொதிக்கவைப்பார்கள், குப்பையை சுத்தம் செய்யணும்னு தோனினா அதைச் செய்வார்கள். குப்பைன்னு சொன்ன உடனே ஞாபகம் வருது...!"

"அப்பா...! இப்ப அதவிட முக்கியமான விஷயம் பேசிகிட்டு இருக்கோம்....அத அப்பறம் பாத்துக்கலாம்"

சரி, நான் சொல்ற மாதிரி adapt பண்ணிக்கத் தெரிஞ்ச ஆளாப்பாரு. மத்ததெல்லாம் தானா வந்துரும்!"

"சுஹைல் அப்படி எல்லாம் இருக்கமாட்டான் பா! ஏன் நீங்க கவலைப்படறீங்க?"

அவன் நல்லவனாவே இருக்கட்டும், ஆனா, நீ அதை சரியான்னு பாத்துக்க. ஒரு சோதனை பண்ணிப்பாரு..!"

"இது தான் எனக்குச் சோதனைக்காலம்." கணவனை இழந்த பொன்னி மனதில் நினைத்துக் கொண்டே உலுக் கான் கூடாரத்தில் நுழைந்தாள். அவள் ஆடைகளை விலக்கிவிட்டிருந்தாள்.

உலுக் கான் கண்களாலேயே அவளை கற்பழித்துக்கொண்டே, "பெண்ணே, என்னவேண்டும்?"

"என் கணவனை உங்கள் படை கொன்றுவிட்டது ?"

உலுக் கான் கூடாரத்துக் காவலாளிகள் உஷார் ஆயினர். ஏதாவது கொலை முயற்ச்சியாக இருக்கும் என்ற எண்ணத்தில். "எங்கள் சட்டத்தின் படி, வெற்றி கொண்டவர்கள் என்னை இந்த இரவுக்குள் ஏற்றுக் கொள்ளவேண்டும், இல்லையென்றால் நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு காட்டுக்குச் சென்று விடவேண்டும், எனக்கு அப்படிப் போக இஷ்டமில்லை"

"இந்த நாடைப் புரிந்துகொள்ளவே முடியல்லையே!" தாடியைத் தடவிக்கொண்ட உலுக் கான் மனதில் கேள்வி எழுந்தது. "எங்கிருதாவது ஒரு 40 மைல் தள்ளிப்போனால் புது சட்டம், புது விதி, சில பெண்கள் அவர்கள் கணவனின் சிதையில் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். சிலர் போர் களத்திற்கு வந்து இறந்த கணவனின் ஆயுதம் எடுத்தே சண்டைக்கு வருகிறார்கள்..இன்னும் சிலர் இப்படி!" பாரசீகத்திலிருந்து அல்ஜீரியா வரை ஒரே கடவுளை வணங்கி ஒரே மொழி பேசும் மக்களை அறிந்த உலுக் கானுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது.

"இன்று இரவு போருக்குச் செல்ல வேண்டும், ஆக நீ காத்திருக்கவேண்டும்!" அவன் கண்கள் அவள் இடுப்பைப் பார்த்துக் கொண்டிருந்தது.

"இன்று இரவு இல்லையென்றால் நீங்கள் என்னை வலுக்கட்டாயமாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும், உங்கள் போரை சற்று தாமதப்படுத்தினால் நான் உங்களுடையவளாகிவிடுவேன் இப்போதே, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்"

"இந்த முடிவு தான் உன் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான முடிவு" என்றார் தந்தை. "உனக்கு நல்லது எதுவோ அதை நீ தான் செய்யணும், நான் வழி தான் சொல்ல முடியும். நூற்றாண்டுகள் இசைந்து கொடுத்து வாழும் கலாச்சாரத்தில் பிறந்த உனக்கு எப்போதுமே பிரச்சனைக்குள்ளாகும் இஸ்லாமியக் கலாச்சாரத்தில் பிறந்தவனை கல்யாணம் செய்துகொள்ள முடியுமா ?"

"அப்பா, நான் என் இந்துக் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துத்தான் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று என் நினைக்கிறீர்கள் ?"

"இந்துக்கலாச்சார, முஸ்லீம் கலாச்சார, அமேரிக்க கலாச்சாரம் என்றெல்லாம் இல்லை. இரண்டே விதமான கலாச்சாரம் தான் இருக்கிறது. சரியான கலாச்சாரம், தவறான கலாச்சாரம். முதலாவது இசைந்து வாழக்கூடியது, இரண்டாவது இசைந்து கொடுக்கத் தெரியாதது. அப்பாவி மக்களை குண்டு வைத்துக் கொல்வாது தவறாக கலாச்சாரம். வேற்று மதப் பெண்களை வழைத்துப்போட்டுக் கொள்வதும் அதே வேளையில் தன்னினப் பெண்களை வெளியில் போகத் தடை விதிப்பதும் தவறான கலாச்சாரம். முஸ்லீம்கள் அப்படி இருப்பதனால் இது முஸ்லீம் கலாச்சாரம் என்று சொல்ல முடியாது. நீ கேக்கவேண்டியது என்னனா, சுஹைல் சரியான கலாச்சாரத்தை உடையவனா ? என்ற கேள்வி தான்"

"நான் இப்பப் போகணும் பா, நிறையவே பேசிட்டோம்!"

"அவனப்பாக்கப் போறியா..."

"ஆமா...இன்னும் ஒரு மணி நேரத்துல.."

"சு" என்றார்...

"என்ன ?"

சமஸ்கிருதத்தில் "சு" என்றால் சுபம் என்பதற்கான வேர்ச்சொல், "நல்ல" என்ற பொருள் வரும். சுப்பிரபாத என்றால் நல்ல காலைப்பொழுது சுபாஷா என்றால் நல்ல வார்த்தைகள், அதே மாதிரி சுஹைலும் இருக்கட்டும்! அவரைப்பற்றிய என் பயமெல்லாம் தவறாகட்டும், அவர் ஒன்றும் 100% adapt பண்ணிக்கிற ஆளாக்கூட இருக்கவேணாம், நாம யாரும் அப்படி இல்ல. கொஞ்சம் திறந்த மனது இருந்தால் போதும்...just in case..!" தந்தை அங்கிருந்த chest ல் இருந்த draw வைத்திறந்து அதைக் கொடுத்தார்...

"இது எனக்குத் தேவைப்படாதுப்பா.."

"இருக்கட்டும் வெச்சுக்கோ, எதுக்கும்...."

கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளைக் களைந்தாள். "இந்த முன் விளையாட்டை ரொம்ப நேரம் வெச்சிக்கணும்" என்று மனதில் நினைத்துக் கொண்டாள் பொன்னி. பிள்ளைவாளுக்கு ஸ்ரீரங்கத்துச் கிருஷ்ணர் மூர்த்தியை மைசூருக்குப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல நேரம் கொடுக்கும் என்று எண்ணிக் கொண்டாள்.

"அடுத்ததா என்ன பண்ணப்போறோம் ?" சுஹைல் கேட்டான். அப்போது தான் காரின் பின் சீட்டில் ஒரு முத்தம் கொடுக்கும் படலம் முடிந்திருந்தது. அவள் உடனே பதில் சொல்லவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள், பார்கிங் லாட்டில் கடைசியாக இருந்தது கார்.

"சீக்கிரமே.." என்றாள் சிறிது நேரம் கழித்து.

வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினர். படு பயங்கர traffic ரோட்டில்.

"ஏதாவது Accident நடந்திருக்கணும். நம்ம பார்ட்டிக்கு கரெக்ட் டைமுக்குப் போகணும்னா வேகமாப் போகணும்னு நினைக்கிறேன்."

"சொல்ல மறந்துட்டேன், என் கசின் ரெண்டு பேரை வரச்சொல்லிருக்கேன் பார்ட்டிக்கு, சுபோத், பிரணை. பிரச்சனையில்லையே?"

"ஓ, sure, தாரளமா வரட்டும், எந்தப் பிரச்சனையுமில்ல"

"நீ ஏன் உன் கசின் ஷமீமை கூப்பிடக்கூடாது. அவ நல்லப் பொண்ணு actually, பிரணைக்கு ரொம்பப் பிடிச்சப் பொண்ணு. அவளுக்கும் பிரணையைப் பிடிச்சிருக்கு போலருக்கு. போன get together ல அவங்க ரெண்டு பேரும் பாத்துக்குறத நீ பாத்திருக்கணும்."

"Damn, traffic" என்று ஸ்டியரிங் வீல் மீது கையால் இடித்தான். அவள் கேட்டதற்குப் பதில் ஏதும் சொல்லவில்லை.

"அப்ப, ஃபோன் பண்ணிக் கூப்பிடறியா ?" அவள் கேட்டாள்..

"யாருக்கு ஃபோன் போட்டு யாரைக் கூப்பிடுறது "

"ஷமீம்! நான் சொன்னதக் கேட்டியா இல்லையா?"

"ஓ, அதுவா, அது நடக்காது..thats not going to work out"

"ஏன் ?"

"ஆமா அது அப்படித்தான் விடு, அப்பறம் ஏற்கனவே நிறைய பேர் இருக்காங்க, அதுவும் சின்ன அபார்ட்மெண்ட் தான்"

"சரி, நாம ஒரு இடத்துக்குப் போகணும், வர்ர ரைட்ல கட் பண்ணிக்கிறியா ?"

"Sure, எங்கே?"

"கோயிலுக்கு"

"நான் உன்ன ட்ராப் பண்ணிடறேன்"

"நீ என்ன ட்ராப் பண்ணவேணாம், நாம சேர்ந்து போகணும்"

"என்ன சொல்ற ?"

"நீ எங்கூட வரணும்னு சொல்றேன்..! நான் உங்கூட கடைசி வரை வரணும்னு எதிர்ப்பார்க்குறல்ல ?"

"ஆனா என்னால அது முடியாது"

"அது தான் ஏன் ?"

"நீ ஏன் இப்படி behave பண்ற "

"வண்டியை நிறுத்து.." பக்கத்து மாலின் பார்கிங் லாட்டில் வண்டியை நிறுத்தினான் சுஹைல்.

"ஏன் உள்ள வர மாட்டேன்னு சொல்ற? நீ மசூதிக்குப் போற தானே ?"

"ஆமா, ஆனா நான் ஏன் கோவிலுக்கு வரணும் ? நீ என்ன பண்ணனுமோ அதை நீ பண்ணிக்க உனக்கு உரிமையிருக்கு"

"சுஹைல்" காரின் கதவைத் திறந்து வெளியேறியபடி தொடர்ந்தாள் " நான் உன்னப் பாக்க விரும்பல"

"என்ன சொல்ற...? ஏன் ?"

"நான் விரும்பல அவ்வளவுதான்.." கொஞ்ச நேரத்திற்கு முன்பு சுஹைல் பேசிய அதே தோறணையில் இந்தப் பதில் அவளிடமிருந்து வந்தது.

"நீங்க என்ன, அவ்வளவு தானா ? " உலுக் கான் தன் உடைகளை சரி செய்துகொண்டிருந்தான்.

"நான் இப்ப போகணும், ஸ்ரீரங்கத்து சிலையில் ரெண்டு ரத்தினக்கற்கள் இருக்கிறதாம், நீ இங்கேயே இரு, நான் அதை உடைத்து எடுத்து வருகிறேன். அதை வைத்து நீ பிழைத்துக் கொள்ளலாம்"

ஒரு வெற்றிப் புன்னகை தான் உலுக் கானுக்கு அவளிடமிருந்து பதிலாகக் கிடைத்தது.

"அது இன்னேரம் மைசூருக்குப் போயிருக்கும், அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய சில மணி நேரம் கிடைத்துவிட்டது" என்றாள்.

"அடித் தே$%$%, என்னை ஏமாற்றிவிட்டாயா ?" உலுக் கானின் முகம் கோபத்தில் சிவந்தது.

"ஸ்ரீரங்கத்துப் பெண்கள் உன் இந்த முகத்தைப் பார்க்க காசு கொடுப்பார்கள்" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் பொன்னி.

"உன்ன என்ன செய்கிறேன் பார்..."

"என் கணவரை கொன்று விட்டார்கள் அதைவிட கொடிய தண்டனை வேறேது. உன்னால் என்ன செய்ய முடியும் ?"

"யாரங்கே, இவள் உங்களுக்குத்தான்...என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்!, சீக்கிரம் குதிரைகளைத் தயார் செய்யுங்கள், கோவிலைப் பிடிக்கவேண்டும்"

எட்டு காவலாளிகள் அவளை நெருங்கிவந்தனர, பசியால் தவிக்கும் ஓனாய்க்கூட்டம் போல.

"கிருஷ்ணா, திரௌபதியின் மானத்தைக் காத்தது போல என்னையும் காக்க மாட்டாயா " என்று எண்ணிக்கொண்டே தன் விரலில் இருந்த மோதிரத்தைக் கடித்து அதிலிருந்த வைரத்தை முழுங்கினாள். வன்புணர்ச்சி நடக்கும் முன்னரே அவள் அவளது கணவனை அடைந்தாள்.

"நில்லு" சுஹைல் கத்தினான்.

"முடியாது"...அவள் நடந்து கொண்டிருந்தாள்.

"நீ இப்படிப்பண்ண முடியாது"

"பாத்துகிட்டே இரு.."

"நில்லுடீ" கையைப் பிடித்து இழுத்தான்...

அவள் உதரிவிட்டு வேகமாக நடந்தாள். அதைப் பார்த்து பார்க்கிங் லாட்டில் யாரோ 911 க்கு ஃபோன் செய்தனர்.

"வாடீன்னா..."

சடார் எனத் திரும்பி டேசரைக் காண்பித்தாள்.

"நீ செய்ய மாட்ட!" என்றான்

அவனது நெஞ்சில் வைத்து fire செய்தாள், ஐம்பதாயிரம் வோல்டேஜ் அவன் மூளையையும், உடலையும் 15 நிமிடத்திற்குப் பிரித்துவிட்டது. ஒரு வினாடியில் மூர்ச்சையாய் கீழே விழுந்தான். 3 நிமிடத்தில் போலீஸ் அங்கே வந்தது.

அவள் பக்கத்திலிருந்த pay phone ல் அப்பாவை அழைத்தாள். அவர் வந்து இவளை பிக்கப் செய்துகொண்டு இருவரும் வீடு திரும்பினர்.

(இது ஒரு சுறுக்கப்பட்ட கதை. மூலம் இங்கே)

February 24, 2007

நான் இங்கேயே இருக்கிறேன்

'நான் யார் என்று இந்த வெங்காயத்தை வைத்துக் கொண்டு எப்படிக் கண்டுபிடிப்பது?'

'மகனே நீ யார் என்று கேட்டால் என்ன சொல்வாய்?'

'நான் இன்னாரின் மகன்; இந்த ஊரில் இந்த இடத்தில் இப்படி இருக்கிறேன் என்று சொல்வேன்.'

'அது மேல்தோலுடன் கூடிய உரிக்காத வெங்காயம். உண்மையில் நீ அதுதானா? இந்தஉடம்பு, இது இன்னாரின் மகன் என்று சொல்வது எது? அப்படியானால் அந்த உடம்பா நீ? என் கை, என் கால் என்று கை கால் இழந்தாலும் சொல்வது எது? அது உடம்பைக் கடந்த வேறு ஒன்று அல்லவா?அதைக் கண்டுபிடிக்கும் வரை வெங்காயத்தின் அடுக்குகளை ஒவ்வொன்றாய் உரித்துக் கொண்டு வா!'

தலைவருக்குக் குழப்பமாய் இருந்தது.

'இதைக் கண்டுபிடிக்க எவ்வளவு நாளாகும்? நான் வேறு வேலை செய்ய வேண்டாமா?'

'நீ இதற்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் மகனே. தினசரி விடிகாலையில்அமைதியாக ஐந்து நிமிடம் அமர்ந்து யோசித்தால் போதும். இதற்கு விடையை நீ நிச்சயம் கண்டுபிடிப்பாய். இந்த ஊரையே நல்வழிப் படுத்துவாய்'

- என்று சொல்லித் தலைவரின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் சித்தர்.

இருவரும் குகையை விட்டு வெளியே வந்தனர்.

'தலைவர் இவர் இனி உங்களை நல்வழிப்படுத்துவார்' என்று ஊர்மக்களிடம் சொல்லிவிட்டுத் தன்வழி நடந்தார் சித்தர்.

ஆத்திகர்களுக்கோ ஏமாற்றம்; அயோக்கியர்களுக்கு ஆதரவான இந்தத் தலைவன் நம்மைநல்வழிப் படுத்துவானா என்று.

நாத்திகர்களுக்கோ கொண்டாட்டம். 'பாருய்யா இந்தச் சாமியாரையே ஜெயிச்சு ஊரைவிட்டே அனுப்பிட்டாரு நம்ம தலைவரு' என்று எக்காளமிட்டனர்.

தலைவர் அமைதியாக வீடு நோக்கி நடந்தார். அடிப்பொடிகள் கூடவே சென்றன.

தலைவர் திண்ணையில் அமர்ந்து கையில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு எதுவும்பேசாமல் யோசனையில் ஆழ்ந்ததைப் பார்த்ததும் அவர்களுக்குக் கிலி பிடித்துக் கொண்டது.

அவரிடம் தைரியமாய்ப் பேசும் அவரின் வலக்கை போன்றவன் குரல் கொடுத்தான்.

'என்ன தலைவா, அந்த ஆரியப் பார்ப்பு உங்களை ஏதாச்சும் மயக்கிட்டானா?'

இது ஆத்திகர்களைப் பார்த்து தலைவர் வழக்கமாய்ப் பேசும் வசனம்தான்.ஆனாலும் இப்போது தலைவருக்கு இதைக் கேட்டதுமே அருவருப்பாய் இருந்தது.

'டேய் அடங்குங்கடா! எதுக்கெடுத்தாலும் ஆரியன் பூரியன்னுக்கிட்டு. அந்தச்சாமியாரு நம்பாளுதாண்டா. போங்கடா எல்லாரும்!' என்றவர் கத்தக் கண்டு
கலங்கிக் கலைந்து போனது அவர் கோஷ்டி.

அடுத்தநாள் விடியுமுன்னர் எழுந்து நிதானமாய் யோசிக்க ஆரம்பித்தார் தலைவர்.

'என் உடல் என்று சொல்வது எது? என் வீடு இடிந்து போனதென்றால் அது என் வீடல்ல, என் மனைவி என்னை விட்டுப் போய் விட்டால் என் மனைவி அல்ல என்று சொல்வது சரி. என் உடல் என்பது நானேதானே...'

சித்தர் சொன்னது ஞாபகம் வந்தது.

'என் கை, என் கால் என்று சொல்வது...'

'நாளை எவனாவது என் விரோதி என் கையை வெட்டிவிட்டுப் போய்விட்டால்...'

கையைப் பார்த்துக் கொண்டார்.

'இந்தக் கையே நாளை துண்டாகி விழுந்துவிட்டால் அது நானில்லாமல் போகும்.
அப்போது இந்தக் கை நானில்லை. அப்புறம் இந்த உடலில் நான் நான் என்று
சொல்வதுதான் எது?'

'மூளை மட்டுமா? அது மட்டும் நானாகி விடுமா? அது தனியே யோசிக்குமா?'

'இல்லை, சாமியார் சொல்வது போல் அது உடலாய் இருக்க வாய்ப்பில்லை..!'

வெங்காயத்தின் மேல்தோலைப் பிய்த்தெறிந்தார்.

மேலே சிந்திக்கத் தோன்றவில்லை.

அடுத்த நாள் விடிகாலை அவர் கண்ட கனவொன்று அவரை எழுப்பியது. மீண்டும் சிந்தனையில் ஆழ்த்தியது.

'கனவில் நான் அனுபவித்த இன்பத்தை உண்மையில் அனுபவித்தது எது? இந்த உடலா அல்லது வேறொன்றா?'

வெங்காயத்தின் அடுத்த அடுக்கும் உறிந்தது.

தொடர்ந்து வந்த நாட்களில் ஐந்து நிமிடம் பத்து நிமிடமாகி மணிக்கணக்கில் நீண்டது. தலைவர் தன் ஜமாவைச் சந்திப்பதையே நிறுத்தி விட்டார்.



வெளியே ஏகக் கலவரம்.

தலைவரை எதிர்த்துக் கேள்வி கேட்ட வலக்கையின் பின்னால் நாத்திகக் கூட்டம் ஒன்று திரண்டிருந்தது இப்போது. இவன் இன்னும் முரடன். தலைவரை எதிர்த்து அறிக்கைக்கு மேல் அறிக்கையாக விட்டுக் கொண்டிருந்தான்.

ஆத்திகக் கோஷ்டியைச் சேர்ந்த அயோக்கியன் ஒருவன், சித்தர் நட்ட கல்லைச் சுற்றி பெரிதாய் நிலத்தை வளைத்து வேலி போட்டு, அந்தக் கல்லுக்கு ஒரு புடவையையும் கட்டி விட்டான்.

'ஊரில இருக்கற சாமியோட சக்தியெல்லாம் இங்க இந்த ஆத்தா கிட்ட இப்ப வந்திருச்சு! டேய் எல்லாம் எனக்குப் படையல் வயுங்கடா. இங்க பெரிசா கோயில் எழுப்பணுமடா' என்று சாமியாடிக் கூட்டம் சேர்க்க ஆரம்பித்தான். குறி சொல்லி எல்லோர் குறையும் தீர்க்கிறேன், காணிக்கையோடு வாருங்கள் என்று அவன் அழைப்பதைக் கேட்டு மூட பக்தர்களின் பெருங்கூட்டம் திரண்டது.

வலக்கைக்கு ஆத்திரம் கரை புரண்டோடியது. ஊர்க்கோயிலில் வருமானம் குறைந்ததால் அவனுக்குத் தாங்க முடியவில்லை.

'வாங்கடா இந்த புதுப்பூசாரிய இன்னிக்கு ரெண்டில ஒண்ணு பாத்திறுவோம் வாங்கடா' என்று படை திரட்டினான்.

முனைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அருளப்பா மட்டும் இதற்கு ஆட்சேபித்தார். 'நலிந்து வரும் நாட்டார் மரபியல்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து சமீபத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர் அவர். அவர் சார்ந்திருந்த அமைப்பு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அவரை ஊர் ஊராகப் பிரச்சாரத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தது. நேற்று கூட உள்ளூர் சிவன் கோயில் வாயிலில், பகுத்தறிவாளர் பாசறை அமைத்துக் கொடுத்த மேடையில் 'நடுகல் வழிபாடே தமிழர் வழிபாடு' என்ற தலைப்பில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒண்ட வந்து, தமிழரின் தொல்வழிபாட்டு மரபுகளைக் கபளீகரம் செய்த பார்ப்பனக் கூட்டத்தை சாடிப் பேசியதை, அதை வலக்கையே பாராட்டிப் பேசியதை அவர் நினைவூட்டினார். அவர் தொலைநோக்குடன் செய்து வரும் பரப்புரைகளுக்கு இந்த வலக்கை ஒரே நாளில் வேட்டு வைத்து விடுவான் போலிருக்கிறதே.

''அண்ணே! அங்க என்ன பாப்பானா மணியாட்டுறான் நம்ம ஆள்தான அண்ணே விட்றுங்க அண்ணே" என்று பக்குவமாய்ச் சொல்லிப் பார்த்தார்.

"இதுக்குதான் படிச்சவனயெல்லாம் கிட்டசேக்கக் கூடாதுன்னு சொல்றது" என்று வலக்கை சீறி விழுந்தான்.

"யோவ்! ஏதாச்சும் வாய்ல வந்து சொல்லப் போறன்யா. ரெண்டாயிரம் வருசம் கதையெல்லாம் இப்ப எதுக்குய்யா? இப்ப இன்னா அத்தப்பாரு. உள்ளூரு வெளியூருன்னு எம்மா சனம் அங்க இப்ப அம்முது பாத்தியா? உண்டி மட்டும் ஒரு நாளைக்கு ரெண்டுதரம் ரொம்புதான்யா. நம்ம இன்னா இளிச்சவாயனுங்களா? இங்க இன்னாடான்னா நம்ம கோயில்ல பாவம் அய்யிரு தட்ல கூட பத்து ரூவா சேர மாட்டேங்குதுன்னு அழுதுட்டாருய்யா நேத்து. உனுக்குப் பிடிக்கலன்னா எதிரொலிய கேட்டுப்பிட்டு பித்து பிடிச்சாப்புல உக்காந்திருக்காரே தலிவரு, அவரு கூட போய் உக்காந்துக்க போ!"

வலக்கை தன் சுயநலத்திற்காகக் கோயில் பார்ப்பனருக்கே பரிந்து பேசுவான் என்று அருளப்பா எதிர்பார்க்கவில்லை. பேசாமல் இடத்தைக் காலி செய்தார்.

"அதே கல்லு கிட்ட இன்னிக்கு நான் கேள்வி கேக்கப் போறன். ஏதாச்சும் உட்டாலக்கடி வித்தை காட்ட சாமியாரும் இப்ப பக்கத்தில இல்ல. மவனே அதுலயிருந்து இன்னிக்குப் பதில் வரலயின்னா, எப்டி வரும், வராது, அப்புறம் அந்த கல்லையும் உடச்சுப் போட்டுட்டு அந்த பேமானி மண்டையும் பொளந்துட்டு வரலாம் வாங்கடா!"

பெரிய கடப்பாறை ஒன்றை எடுத்துக் கொண்டு நாத்திகர் கூட்டம் புடைசூழப் புறப்பட்டான் வலக்கை.

தலைவர் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். இதற்கு மேல் சிந்திப்பதே கஷ்டமாய் இருக்கிறதே சாமியாரே என்று சொல்லிக் கொண்டே அமர்ந்திருந்தவர் மெதுவாய் எதுவுமே யோசிக்காமல் மனதை அலைபாய விடாமல் எங்கிருந்து இந்தச் சிந்தனை எல்லாம் உதிக்கிறது என்று உற்றுக் கவனிக்கத் தொடங்கினார்.

அவர் சிந்தனை உள்முகமாய்க் குவிந்து நின்று போன ஒரு கணத்தில் அவருள் அந்த அதிசய மாற்றம் நிகழ்ந்தது. அவர் திடீரென்று ஓர் ஒளிக்கடலில் வெடித்துக் கலந்தார்.

விவரிக்க இயலாத அந்த ஆனந்தப் பெருக்கில் விம்மி விம்மி அழுதார் தலைவர். அவர் சிறுமைகள் யாவும் கண்ணீரில் கரைந்தன. கருணையைத் தவிர வேறொன்றும் அங்கில்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நிற்கும் அந்த ஆனந்த ஜோதியில், 'நான்' என்ற அடையாளம் கொண்ட ஒரு துளி கரைந்து போனது. தன் வீடும் மனைவியும், மக்களும், ஊரும், மலையும், அருவியும், ஆறும் யாவும் பிணைத்து நிற்கும் சக்தி வெள்ளத்தில் கரைந்து தாமாகி நிற்பதைக் கண்டார்.

ஊர் மக்களைக் காணும் இச்சை வர அந்த ஒளிவெள்ளமே அவரை மலையடிவாரத்தை நோக்கி நகர்த்தியது.

வலக்கை கையில் கடப்பாறையுடன் அந்தக் கல்லின் முன் நின்று உரத்து சண்டை போட்டிருந்தான். புதுப்பூசாரியும் ஆவேசம் வந்தது போல் ஆடிக்
கொண்டிருந்தான்.

"டேய், ஆத்தா குடியிருக்கிற கல்லு மேலய கை வெச்சுடுவியா நீ? வெய்யிடா பாக்கலாம்! ராத்திரிக்குள்ள நீ ரத்தம் கக்குல நான் ஆத்தா இல்லடா!"

"டேய் அடங்குடா! இப்ப நான் இன்னா கேட்டேன்? ஒன் ஆத்தாவுக்கு உண்மைலய சக்தி இருந்துச்சுன்னா நான் கேக்கற கேள்விக்குப் பதில் சொல்லட்டுமடா. இல்லாட்டி இதை கண்டிப்பா ஒடப்பேன்" என்று கடப்பாறை தூக்கி நின்றான் வலக்கை.

"கேள்டா! என்னா வேணும்னாலும் கேளு! ஆத்தா வந்து பதில் நிச்சயம் சொல்வாடா! ஆனா என் மூலம் சொல்வாடா" என்றான் ஆவேசத்திலிருந்த புதுப்பூசாரி.

"இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் நம்ம கிட்ட வேணாம் கண்ணு. எனக்கு இந்தக் கல்லுதான் இப்ப பதில் சொல்லணும்" என்ற வலக்கை ஊர் மக்களை அமைதியாக நிற்கும்படிச் சொல்லிவிட்டு தலைவர் நின்று கேள்வி கேட்ட இடத்தில் வந்து நின்றான்.

எங்கும் நிசப்தம்.

தலைவரைப் பார்த்தே பேசக் கற்றவன் அவன்.

உரத்த குரலில் கல்லைப் பார்த்துக் கேட்டான்.

"யார் நீ எங்கிருக்கிறாய்?"

இம்முறை ஊர்மக்கள் அனைவருக்கும் கேட்கும்படி பதில் வந்தது.

"யார் நீ எங்கிருக்கிறாய்?"

ஆனால் ஆத்தா குரலில் அல்ல,
- தலைவர் குரலில்.

(நிறைந்தது)

நன்றி:
இணைய நண்பர்கள், மற்றும் ஒத்த சிந்தனை உடையவர்கள்.

யார் நீ ? எங்கிருக்கிறாய் ?

அந்த ஊரின் பெயர் அழகாபுரி. பெயருக்கேற்ப மிக அழகான ஊரது. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலுமாய் வளம் செழிக்க மக்கள் குறையொன்றும் இல்லாமல் வாழ்ந்திருந்தனர்.

இயற்கை குறை வைக்காவிட்டாலும் மனிதன் எதையாவது உருவாக்கிக் கொள்வது வழக்கம் அல்லவா? அந்த ஊரிலும் அப்படி ஓர் அக்கப்போர் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாய் மக்களிடையே ஒற்றுமை குலைந்தது.

ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் என்று இரு குழுக்கள் ஏற்பட்டு அந்த ஊரின் நிம்மதி பறி போனது. இரண்டு பக்கங்களிலும் மூடர்களும், அயோக்கியர்களும், சிந்தனாவாதிகளும் இருந்தனர். ஆத்திகக் கோஷ்டியில் இருந்த மூடர்களால் மக்களுக்கு நன்மையும் கிடையாது, தீமையும் கிடையாது. அயோக்கியர்கள் சுயநலவாதிகளாய் இருந்தனரே ஒழிய அவர்களாலும் பெரிய தீங்கு மக்களுக்கு இல்லை.

ஆனால் நாத்திகக் கோஷ்டியில் இருந்த மூடர்களும் அயோக்கியர்களும் சும்மா இருக்காமல் ஊரை அடிக்கடி கலகப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் கோஷ்டியைச் சேர்ந்த சிந்தனாவாதிகளும் பல நூதனமான கருத்தாக்கங்களை உண்டாக்கிக் கலகம் விளைவிக்கக் காரணங்களை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

ஆனால் பெருவாரி ஆத்திக மக்கள் அவர்கள் பக்கம் கூட போவது கிடையாது. அவர்களை ஆத்திகர்களாக மாற்ற முயற்சி செய்யவும் இல்லை. ஆனாலும் நாத்திகர்கள் தாங்களாகவே ஓர் எதிரியைக் கற்பித்துக் கொண்டு ரகளை செய்து வந்தனர். நாளுக்கு நாள் இவர்கள் அட்டகாசம் அதிகமாகி வந்தது.

அதற்கும் ஒரு காரணம் இருந்தது.
அந்த ஊரின் தலைவர் இந்த நாத்திகவாதிகளின் அட்டகாசங்களின் மூலம் பதவியைப் பிடித்தவர். ஆதலால் இவர்கள் என்ன குற்றம் செய்தாலும் காணாதது போல இருந்து விடுவார்.

'கடவுள் என்று ஒருவர் இருந்தால் அது நாங்கள்தான்' என்று கூறிக் கொண்டு மக்களை மிரட்டத் தொடங்கினர் நாத்திகர்கள். தலைவர் உதவியால் கோவில் நிர்வாகிகளாகவும் மற்றும் கோவில் சம்பந்தமான பொதுநிதியைப் பராமரிக்கும் குழுவிலும் அவர்கள் ஊடுருவி இருந்தனர். ஆண்டவனுக்கு எதற்கு செல்வம், ஏழைகளுக்கு அதைப் பங்கிட்டுக் கொடுப்போம் என்று சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றித் தாங்கள் செல்வந்தர்களாக மாறி வந்தார்கள். திருவிழாக்களில் பெண்கள் கூட்டத்தில் புகுந்து அவர்களை மானபங்கப் படுத்திவிட்டு 'ஆண்டவன் வந்து உங்களைக் காப்பாற்றுவான் பாருங்கள்' என்று கேலியும் பேசினர்.

ஆத்திகர்கர்களோ, ஆண்டவன் உண்மையிலேயே ஏதாவது அவதாரம் செய்து தங்களைக் காப்பாற்ற வரமாட்டானா என்று ஏங்கி வேண்ட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தாற்போல் அந்த ஊருக்கு ஒரு சித்தர் வந்து சேர்ந்தார். ஆத்திகர்கள் அவரைத் தங்கள் துன்பம் துடைக்க ஆண்டவனே நேரில் வந்ததாய்க் கருதினர். எல்லோரும் அவரிடம் நாத்திகக் கோஷ்டியின் அட்டகாசத்தை எல்லாம் ஒரு பாட்டம் சொல்லி அழுதனர். அற்புதம் ஏதாவது நிகழ்த்தியாவது தங்களைக் காக்க வேண்டினர்.

அந்தச் சித்தர் சிரித்தார்.

'நாத்திகக் கோஷ்டியில் இருக்கும் உண்மையான அறிஞர்களையும் சிந்தனையாளரையும் வாதத்தால் திருத்திவிட முயற்சி செய்கிறேன். அற்புதங்கள் நிகழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அயோக்கியர்களைத் திருத்துகிற அளவுக்கு எனக்குச் சக்தி இல்லை. பார்ப்போம். நீங்கள் போய் அவர்களை அழைத்து வாருங்கள்' என்றார்.

நாத்திகர் பக்கமிருந்து அறிஞர்களும் சிந்தனையாளரும், இந்தச் சித்தரை வாதத்தில் வென்று அவரை இந்த ஊரை விட்டே துரத்துவோம் என்ற ஆவலில் வாதம் செய்ய முன்வந்தனர்.

மலையடிவாரத்திலுள்ள குகை ஒன்றின் வாசலில் கூட்டம் நடந்தது. தன்னைப் பெரிய சிந்தனையாளனாகக் காட்டிக் கொண்ட தலைவரும் கலந்து கொண்டார். வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. நாத்திகக் கோஷ்டியின் பல விதண்டாவாதங்களுக்கு மிகப் பொறுமையாய் பதில் அளித்தார் சித்தர்.

நேரம் போகப்போக விதண்டாவாதம்தான் வளர்ந்ததே ஒழிய நாத்திகர் தரப்பு எதையும் ஏற்பதாயில்லை. கடவுளையும் அவருடைய சக்தியையும் நேரில் கண்டால்தான் அடங்குவார்கள் போலத் தோன்றியது.

சித்தரும் கடைசியில் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்போல் குகை வாயிலில் ஒரு கல்லை நட்டு ஏதோ ஒரு மந்திரத்தை உச்சாரணம் செய்து இதுதான் கடவுள் என்று சொல்லி நாத்திகவாதிகளின் கேள்விகளுக்குக் கடவுளே இனி பதில் சொல்வார் என்றார்.

நாத்திகவாதிகள் சிரித்தனர். கல் எப்படித் தங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் என்று கேலி பேசினர். சிலர் சித்தரைத் திட்டவும் செய்தனர், தங்களைக் கேவலப் படுத்துகிறார் என்று. ஆனாலும் ஒரே ஒரு கேள்வி கேட்போம் என்று தலைவர் சம்மதிக்க, அதற்குப் பதில் வராவிட்டால் சித்தர் ஊரை விட்டே போய்விட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தனர்.

சித்தர் சம்மதம் என்றார்.

நல்ல குரல்வளம் கொண்ட தலைவர், நாத்திகர் தரப்பிலிருந்து கேள்வி கேட்க முன்வந்தார்.

எங்கும் நிசப்தம்.

தலைவர் கல்லின் முன்னால் போய் நின்று உரக்கக் கேட்டார்.

'யார் நீ எங்கிருக்கிறாய்?'



யாரும் எதிர்பார்க்காத வகையில் கல்லிடமிருந்து பதில் வந்தது. அதுவும் ஒரு கேள்வியாக.

'யார் நீ எங்கிருக்கிறாய்?'

அது கடவுளே கேட்டாரா அல்லது வெறும் எதிரொலியா என்று யாருக்கும் புரியவில்லை. தலைவரின் அல்லக்கைகள் இது ஏமாற்று வேலை என்று கூவ ஆரம்பித்தன. ஆனால் தலைவர் மட்டும் சற்று அயர்ந்து போயிருந்தார். அவரிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. அமைதியாய் நின்றிருந்தார். அருகிலிருந்து
கேட்ட அவர் காதுகளில், ஒலித்த குரல் சித்தர் குரல் போலவும் தோன்றியது.

திரும்பிப் பார்த்தார்.

பின்னால் தொலைவில் அவர் கண்மூடிக் கைகூப்பி நின்றிருப்பது தெரிந்தது.

கண்திறந்த அந்தச் சித்தர் தலைவரை அருகில் அழைத்து அவர் தோள்மேல் கைபோட்டு குகைக்குள் அழைத்துப் போனார்.

'வா என் செல்லமே!' என்று அவர் வாஞ்சையாய் அழைத்தது தந்தையையே பார்த்து வளர்ந்திராத தலைவருக்கு இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு நெகிழ்ச்சியைக் கொடுத்தது. கூடவே போனார். உள்ளே போனதும் அவரை அருகில் அமர்த்தி அந்தச் சித்தர் சொன்னார். 'குழந்தாய், கல்லின் மூலம் கடவுள் எப்படிப் பேசினார், அது என் குரலா, கடவுளின் குரலா, அல்லது வெறும் எதிரொலியா என்று ஆராய்ச்சி செய்யாதே. அது வீண்வேலை. ஆனால் திருப்பிக் கேட்ட அந்தக் கேள்வியை மட்டும் மனதில் வை!

உண்மையில் நீ யார் எங்கிருக்கிறாய் என்று தேடிக் கண்டுபிடி. கடவுளைச் சுலபமாய்க் கண்டுபிடிக்க அது ஒன்றே வழி' என்று சொல்லி, தலைவர் கையில் ஒரு பெரிய வெங்காயத்தைக் கொடுத்தார்.

ஏதோ வித்தை காட்டப் போகிறார் என்று எதிர்பார்த்திருந்த தலைவருக்கு ஆச்சரியம்.


தொடரும்..

"மு"ம்மதமும் சம்மதம் 2

இதற்கு முன் ஜெரூசலம் பற்றி மூன்று பதிவுகள் போட்டிருக்கிறேன்.

ஜெரூசலம்
ஜெரூசலம்
மும்மதமும் சம்மதம்

இந்தப்பதிவில் முன்னரே சொல்லியிருந்த church of holy sepulchre பற்றியும் அதன் படங்களும்.

மன்னன் constantine ன் தாயார் ஹெலெனா பிஷம் மகாரியஸிடமிருந்து தெரிந்துகொண்டதற்கிணங்க, கொல்கொத்தா (Golgotha) எனப்படும் ஏசு சிலுவையில் அறைந்து நிறுத்தப்பட்ட இடமும், ஏசுவின் உடல் புதைக்கப் பட்ட இடமும் ஒரே இடத்தில் தான் இருக்கிறது என்ற விஷயத்தை 325 ACE ல் அறிந்தார். கான்ஸ்டாண்டீன் உடனே அகழ்வாராய்ச்சியைத் துவங்கி அதில் கண்டெடுக்கப் பட்ட சிதிலத்தின் மீது தேவாலயம் எழுப்பினார். இந்த முதல் தேவாலயம் 614 ACE பாரசீக மன்னர் படையெடுத்து வந்தபோது அழிக்கப்பட்டது. பின்னர் இதே இடத்தில் கட்டப் பட்ட தேவாலயம் 1009 ACE ல் கலீபா அல் ஹகீம் பி அமர் அல்லாஹ் வால் அழிக்கப் பட்டது, பின்னர் பைசாந்தியர்களால் மறுமுறை சீரமைத்துக் கட்டப் பட்டு இன்று நிற்கிறது.

இந்தத் தேவாலயம் ஆறு கிறுத்தவ மதப்பிறிவினர்களால் ஆழப்பட்டுவரும் இடம். The Greek orthodox, Roman catholic, Armenian, Coptic, syrian and Abyssinian congregation.

உள்ளே நுளைந்த உடன் தெரிவது The stone of unction.

இந்தக்கல்லில் தான் ஏசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கி வைத்தார்களாம்.

அடுத்தது, Chappel of Cruxifixion மற்றும் Cavalry.

அங்குதான் ஏசு கிறிஸ்துவின் சிலுவை நிறுத்தப்பட்டதாம்.


அடுத்தது ஏசுவின் கல்லறை.



(ஏசுவின் கல்லறை மற்றும் Dome of rock படம் தேடிப்பார்த்ததில் கிடைக்காததால் கூகிளிடமிருந்து பெற்று பதிகிறேன்)

மற்ற படங்கள் என் கேமிரா படங்களே.

February 22, 2007

"மு"ம்மதமும் சம்மதம்

ஜெரூசலம்.

அக்கேடியன் மொழியில் உருஷலம் என்றும், பழைய ஏற்பாட்டில் முதன் முதலில் "ஷலெம்" என்றழைக்கப்படும் இடம், 1700 BCE (before common era) ல் ஆபிரஹாம் முதன் முதலில் உர் என்ற இடத்திலிருந்து அவர் மனைவி மக்களுடன் வந்த இடம் இந்த ஷலெம். பின்னர் வரும் பழைய/புதிய ஏற்பாட்டின் கதைகளை எழுதி போரடிக்க நான் விரும்பவில்லை.

ஜெரூசலம் ஃபிலிஸ்தீனியர்கள் எனப்படுபவர்கள் எகிப்திய ஃபாரோவின் ஆஸ்தான மக்களாக வாழ்ந்துகொண்டிருந்த இடமாக மாறியிருந்தது மோசஸ் தன்னின மக்களை அழைத்து "பாலும் தேனும்" வடியும் நிலத்திற்கு செங்கடலைப்பிழந்து வந்த போது. பின்னர் போர்கள், சண்டைகள், அமைதிக் காலங்கள் என்று அன்றிலிருந்தே ஒரு பிரச்சனைக்குறிய பூமியாகவே இருந்துவந்துள்ளது இந்த "இறைவனின் அருள் பெற்ற" இடம். இந்த இடத்தைத் தான் யூத மன்னர்கள் தங்கள் நாட்டின் தலமை நகராகக் கொண்டுச் செயல் படுத்தியுள்ளனர். இன்றும் இஸ்ரேலின் தலைநகர் ஜெரூசலம் தான் (டெல் அவீவ் அல்ல!).

ஓமாரின் மஸூதி என்றழைக்கப்படும் இந்த Dome of Rock, ஜெரூசலத்தின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்திற்காகச் சிந்தப் பட்ட ரத்தம் உலகில் நடந்த எல்லாப் படுகொலைகளைக் கணக்கில் கொண்டாலும் குறைவாகத் தான் இருக்கும் என்பது என் எண்ணம். பழைய ஏற்பாடு காலம் முதலே இந்த இடம் சர்ச்சைக்குறிய இடமாகவே இருந்துவந்துள்ளது. சமீபத்தில் கூட இந்த dome of rock பகுதியைச் சுற்றி அகழ்வாராய்ச்சி நடத்த திட்டமிட்டு சில கட்டிடங்கள் உடைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இதன் உள்ளே செல்ல முஸ்லீம்களைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. வெள்ளிக்கிழமைகளில் பக்கத்தில் கூட செல்ல அனுமதி இல்லை. ஜுமா நாள் என்பதால்.



இங்கிருந்து தான் முகம்மது புராக் வாகனம் ஏறி வானுலகம் சென்றதாக இஸ்லாமியர் நம்புகின்றனர்.

கிறுத்தவமும், இஸ்லாமும் போட்டி போட்டு ஜெரூசலத்தைப் பிடித்து இந்த இடத்தின் மீது தங்கள் கோவிலைக் கட்ட நினைத்தனர். இஸ்லாமிய கலீபா ஓமர் கட்டிய இந்த சின்னம், கிறுத்தவர் ஆட்சியின் போது தேவாலயமாக மாற்றப்பட்டு இருந்தது. பின்னர் சலாதீன் என்ற மன்னன் அதை முஸ்லீம்களுக்கே திருப்பிக் கொடுத்தான்.

இந்த இடத்தில் தான் ஆப்ரஹாம் தன் மகன் ஐசக்கை பலி கொடுக்கச் சொல்லிக் கட்டளை வந்ததாம் கடவுளிடமிருந்து, பின்னர் இந்த இடத்தில் தான் யூதக் கோவில்கள் கட்டப் பட்டு பின்னர் போர்கள் நடந்து இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டும் உள்ளது.

இந்த மசூதியின் மேற்குச் சுவர் பகுதி பழைய யூதர் கோவிலின் எஞ்சியிருக்கும் பகுதி என்று சொல்லி அதைத் தான் யூதர்களின் மிக முக்கிய மற்றும் ஒரே புனித இடமாகக் கருதப்பட்டுவருகிறது.



இந்தச் சுவரின் அந்தப் பக்கத்தில் தான் மேலே சுட்டியுள்ள மசூதி உள்ளது.

ஜெரூசலம், நகரமே யூதர்கள் பகுதி, இஸ்லாமியர் வாழும் பகுதி, மற்றும் கிறுத்தவர் வாழும் பகுதி என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு இருக்கிறது.

ஏசு தன் சிலுவையை சுமந்து சென்ற Via dolarosa என்ற பகுதியில் எங்கெல்லாம் அவர் கால் தடுக்கி விழுந்தாரோ, எங்கெல்லாம் அவர் சுமை தாங்காமல் விழுந்தாரோ அங்கெல்லாம் தேவாலயம் கட்டிவைத்துள்ளனர். (தடுக்கிவிழுந்தால் தேவாலயம் தான்!!) அந்தப் பாதை வந்து முடியும் இடம், church of holy sepulchre. இங்கு தான் ஏசு சிலுவையில் அரையப்பட்டு இறந்தார். அவர் கல்லரை இந்த தேவாலயத்தில் உள்ளதாக கிறுத்தவர்கள் நம்புகிறார்கள். (அடுத்த பகுதியில் இந்தத் தேவாலயத்தின் உள்பகுதிப் படங்கள் வரும்)


சும்மா தலைப்பு மட்டும் தான் secularized தலைப்பு. உண்மையில் மதக்கலவரம் அடிக்கடி வரும். ஏதாவது இஸ்ரேல் பிரச்சனை செய்தால் உடனே, இந்த ஊரில் தான் மதக்கலவரம் வெடிக்கும்.

வேத காலத்து Pi

பண்டைகாலத்து எகிப்தியர்கள் pi ன் அறுமை தெரிந்து அதனை அவர்கள் கணிதத்தில் பயன் படுத்தியதற்கான சான்றுகள் நிறையவே உள்ளன. கிரேக்கர்களும் பாபிலோனியர்களும் பயன்படுத்தியதாக வரலாற்றியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Place value system எனப்படும் decimal system பத்து என்ற எண்ணை அடிப்படை எண்ணாக வைத்து எழுதப்படும் எண்களின் முறையை கண்டுபிடித்துப் பயன் படுத்திய இந்தியர்கள் pi ன் மகத்துவம் அறியாமல் இருந்திருப்பார்களா ?

गोपिभाग्यमधुव्रात - श्रुग्डिशोदधिसन्धिग ।।
खलजीवितखाताव गलहालारसँधर ।।

கோபி பாக்ய மதுவ்ரத ஸ்ரீங்கிசொ ததி சந்திக
கல ஜீவித காதாவ கால ஹாலா ரசந்தார.

இதன் அர்த்தம் ஆங்கிலத்தில்

O Lord anointed with the yogurt of the milkmaids' worship (Krishna), O savior of the fallen, O master of Shiva, please protect me

சமஸ்கிருத "அனுஸ்துப்" இது. இதில் pi யை பத்தால் வகுத்தால் கிடைக்கும் எண்ணைக் குறிப்பிடுகிறார்களாம். எப்படி ?

எண் கணிதம் போல் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்படும் உயிர் மற்றும் மெய்யெழுத்துக்களுக்கு உரிய எண்களைக் கொடுத்திருக்கிறார்கள் முன்னோர். அதன் படி இதில் வரும் எழுத்துக்களுக்கு எண்களை சரியாகப் போட்டால் கிடைப்பது,

pi/10 = 0.31415926535897932384626433832792

இது முற்றிலும் co incidental ஆக இருக்க probablity யை கணித்தால் 1/10^32 அதாவது 10 க்குப்பிறகு 32 பூஜ்யங்கள் அதில் ஒரு வாய்ப்பு உள்ளது! நிச்சயம் இது எதேச்சையான ஒன்று அல்ல.

இது போலுள்ள பல விஷயங்கள் சமஸ்கிருதத்தை செத்த மொழி என்று திட்டி ஒதுக்கிவைக்காமல் தேடினாலே கிடைக்கும்.
என்ன, அதுவும் நம் மொழிதான், நம் சரித்திரப் பெருமை சொல்லும் மொழி என்ற சுய கவுரவத்துடன் அதனைப் படிக்கவேண்டும். இதெல்லாம் பள்ளிகளில் சொல்லித் தந்தால் Saffronization என்று ஒரு வெத்து வேட்டு கோஷ்டி கத்திக் கொடி பிடிக்கும்.

21 ம் நூற்றாண்டு இந்தியாவின் சாபக்கேடு எது என்றால் சுய ஏளனத்தின் உச்சத்தை தொடும் "சிந்தனா வியாதிகளை" அறிவு சீவிகளாக ஆக்கி வைத்திருப்பது தான்.

http://www.vedicmaths.org/

February 21, 2007

GN ராமச்சந்திரன்

மனித, மிருகத்தோலில் இருக்கும் ஒரு விதமான connective tissue வில் இருக்கும் முக்கிய புரதம் collagen. அது எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து முதலில் சொல்லியவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்த GN ராமச்சந்திரன் என்பவர். ஆண்டு 1954.


எர்ணாக்குளத்தில் 1922 ஆம் அண்டு நாராயண ஐயர் என்பவரின் மகனாகப் பிறந்து அங்கேயே தன் பள்ளிப்படிப்பை முடித்தவர், திருச்சி St. Joseph's ல் பௌதீகத்தில் B.Sc hons முடித்து 1942ல் பங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திற்குச் சென்றார். அங்கேயே தன் முதுகலைப்படிப்பை முடித்து கேம்ப்ரிட்ஜ்ஜில் W.A.Wooster என்பவருடன் இரண்டாண்டுகள் ஆராய்ச்சிப் படிப்பு முடித்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் பங்களூருக்கே வந்து பௌதீகத்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியைத் துவக்கினார்.





அதே வேளையில் சென்னைப் பல்கலைக்கழகம் அவரை வரவேற்றுக் காத்திருந்ததால் சென்னைக்கு வந்துவிட்டார். ஒரு நாள் ஜே. டி பெர்னல் என்பவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது கொலாஜெனின் மூலக்கூறுகள் அடுக்கப் பட்டுள்ளவிதம் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று எண்ணத்தோன்றியது. உடனே, மத்தியத் தோல் ஆராய்ச்சிக்கழகத்தின் உதவியுடன் collagen ன் மூலக்கூறுகள் எவ்வாறு அடுக்கப் பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து, 1954-55 ல் இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகப் புகழ்பெற்ற nature இதழில் வெளியிட்டார். அதன் காரணமாக புரதங்களின் மூலக்கூறான அமினோ அமிலங்கள் எவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் அமைந்து புரதத்தை உருவாக்குகிறது போன்ற மிக அடிப்படை அறிவு நமக்குக் கிட்ட வழிவகுத்தார்.

அதன் காரணமாக இன்று பயன் படுத்தும் ஒருவித Graph plot க்கு ராமச்சந்திரன் plot என்றே பெயர்.

புரதங்களின் database ஆன PDB ல் புரதங்களின் மூலக்கூறுகள் அடுக்கப் பட்டுள்ள முறை இயற்கையில் சரியானதாக உள்ளதா என்று சரிபார்க்கக் கூட இந்த ராமச்சந்திரன் plot பயன் படுகிறது.





புரதங்களில் அமைந்த அமினோ அமிலங்கள் ஒன்றோடொன்று கொண்ட கோணங்கள் எவ்வாறு அமையக்கூடும் எவ்வாறு அமையக்கூடாது என்பதை உணர முடிந்தது ராமச்சந்திரன் அவர்களின் ஆராய்ச்சியின் விளைவே.

கெலிச்சான் மோடி

Special economic zones என்கிற சிறப்பு வணிகவளாகங்கள் நாடெங்கும் அமைக்கப் பட்டு வருகின்றது. ஒரு SEZ (special economic zone) நிருவுவதற்கே பட்டாச்சார்யா, அதாங்க மே. வ கம்யூனிஸ்ட் முதல்வருக்கு தாவு தீர்ந்துவிடுகிறது.

விவசாயிகள் ஆர்பாட்டம் ஒரு பக்கம் என்றால் எதிர்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் இன்னொரு பக்கம் என்று மாநிலத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் பந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவிருகின்றனர்.

இதே வேளையில் இந்தியாவின் மேற்குக் கரையில் (west coast !!) அதாங்க, குஜராத்தில், ஊடகங்களின் வில்லன், செகுலரிசத்தை நசுக்கிய அரக்கன் மோடி ஆளும் மாநிலத்தில் 33 SEZ களை சத்தமின்றி சேங்க்ஷன் செய்திருக்கிறார். அவரால் மட்டும் எப்படி முடிந்தது என்று outlook ல் R.K Mishra கேள்வி எழுப்பியுள்ளார் .

அந்தக் கேள்வியை ஆராய்ந்து பார்க்கையில்,

மோடி செய்த நல்லவிஷயம், அரசு விதிமுறைகள் என்று சொல்லி மக்களை கஷ்டப்படுத்தாமல் லிபரல் எகனாமிக்ஸ் படி நிறையவே தனியார் நிறுவனங்கள் கூட்டுவைத்து மாநிலத்தில் முன்னேற்றத்தை அதிகரித்தது. குஜராத்தின் entrepreneurial skill கொண்ட மக்கள் அதை மிகவும் வரவேற்று முன்னேறினர். இன்று FDA அதிகம் கொண்டுவரும் மாநிலம் மே.வங்கமோ, கேரளமோ அல்ல, குஜராத்.

இன்னொன்றும் எனக்கு strike ஆனது, குஜராத்தில் நிறையவே விவசாயத்திற்கு உதவாத சதுப்பு நிலங்கள், கட்ச், சௌராஷ்டிரா பகுதிகளில் அதிகம், அதை நன்றாகப் பயன் படுத்தி SEZ களை கடலோரப் பகுதி, விவசாயத்திற்குப் பயன் படுத்த முடியாத நிலங்களில் அமைத்தது மோடியின் புத்திசாலித்தனம்.

பட்டாச்சார்யா ஆளும் மே. வங்கத்தில் கம்யூனிஸம் என்று தழைக்க ஆரம்பித்ததோ அன்றே பிடித்தது சனி. 30 ஆண்டுகால ஆட்சியில் கல்கத்தாவைத் தவிர எந்த நகரமும் சொல்லிக் கொள்ளும் படி முன்னேற்றாம் அடையவில்லை. பெரும் நிறுவனங்கள் trade union பிரச்சனை என்று சொல்லி முதலீட்டினைக் குறைத்துவிட்டன. வங்கதேசம் போன்ற வளமையான தேசம் நாட்டில் இல்லை, தஞ்சை போன்ற டெல்டா பகுதி அது. கங்கை, பிரம்மபுத்திரா வந்து வங்கக்கடலில் கலக்கும் பகுதி அது. வெள்ளைக்காரன் வந்து இறங்கிய உடன் கைவைத்த இடங்கள் தமிழக தஞ்சையும், வங்க தேசமும் தான். ஏனென்றால் அங்கே தான் டெல்டா பகுதி விளை நிலங்கள் அதிகம். 18ம் நூற்றாண்டின் SEZ சிறப்பு வணிக வளாகங்கள் தஞ்சையும், வங்காளமும். அதை வெள்ளையன் நன்றாகவே பயன் படுத்திக் கொண்டான். இன்று வெள்ளையனே A joke of an ideology என்று சொல்லித் தூக்கி எரிந்துவிட்ட கம்யூனிசத்தை வைத்துக்கொண்டு படாத பாடு படுகிறார் பட்டாச்சார்யார். இவர்கள் எதிர்கட்சியாக இருந்து என்னென்ன செய்தார்களோ அதையே செய்து மம்தா பானர்ஜீ அரசியல் ஆதாயம் தேடுகிறார். அது தெரியாமல் விவசாயிகளும் அவர் பின்னால் செல்கின்றனர்.

பந்த், Strike, உண்ணாவிரதம் எல்லாம் கம்யூனிஸ்டுகள் தான் மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இருந்து சொல்லிக் கொடுத்தார்கள். இன்று அந்த கசப்பு மருந்தை ஆட்சியில் இருந்துகொண்டு அனுபவிக்கவேண்டிய நெருக்கடி அவர்களுக்கே வந்துவிட்டது வேடிக்கையான உண்மை.

அதே அவுட்லுக் கட்டுரையில், மிஸ்ரா சொல்வது,

Another reason why setting up SEZs have been trouble-free is because the government has left it to the promoters to purchase the land directly from farmers. So, the farmer can demand market price for his property and not settle for the lower prices offered by the state when it acquires land.

மோடியிடமிருந்து ஒரு சில மேனேஜ்மெண்ட் பாடங்களை பட்டாச்சாரி கற்கலாம். சும்மா அவரை தூற்றுவதை கொஞ்சம் தில்லி, மும்பை, மற்றும் தமிழகத்தில் உள்ள Tabloidகள் நிறுத்தலாம்.

Journalist and Jihad

டேனியல் பெர்ல் என்ற அமேரிக்க பத்திரிக்கையாளரின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியிருக்கும் டாகுமெண்டரி.

The journalist and Jihad என்று தலைப்பு வைக்கப் பட்டிருக்கும் இந்த டாகுமெண்டரி, எட்டு பகுதிகளாகக் கொடுக்கப் பட்டுள்ளது.

daniel perl யார் என்று மறந்துபோயிருந்தால், இதோ, நன் நினைவுகளைத் தட்டி எழுப்ப,

Wall street பத்திரிக்கையாளர் டேனியல் பெர்ல் 9/11 பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பொழுது 2002 ல் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு இஸ்லாமிய ஜிஹாதிக்களால் தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் பட்டவர். கூகிளில் daniel perl கொடுத்துப் பாருங்கள்.

அவர் தலை துண்டிக்ப்பபடுவதற்கான காரணம், அவருக்கு அல்-காயிதா வுக்கும் பாகிஸ்தானிய ISI க்கும் உள்ள நெருக்கமான தொடர்பு பற்றி பல அந்தரங்க விஷயங்கள் அவருக்குத் தெரிந்துவிட்டதால் தான் என்கிறது இந்த செய்திப் படம்.


















இதெல்லாம் ஏன் பதித்தேன் என்று கேட்டால்,

இவ்வளவு நடக்கிறது, நம் இந்தியாவின் விமானத்தைக் கடத்தி நம் ஜெயிலிருந்து தப்பும் ஜிஹாதிகள் இது போல் பாகிஸ்தானில் போய் ஜாலியாக இருக்கிறார்கள். பின்னர் அமேரிக்க பத்திரிக்கையாளரையே கடத்துகிறார்கள். அவனை வெட்டி அதை டீவியில் ஒளிபரப்பிவிடுகிறார்கள். பின்னர் அவர்கள் நாட்டு சர்வாதிகாரி அமேரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து உலகத்தில் நடக்கும் தீவிரவாதத்தினை எதிர்க்கும் நாடுகளுடன் பாகிஸ்தானையும் சேர்த்துக் கொள்கிறார்.

நம் வெத்துவேட்டு அரசியல்வாதிகளோ, உலக நாடுகளுக்கு நம் மண்ணில் நடக்கும் தீவிரவாதத்திற்கு அடிப்படைக் காரணம் பாகிஸ்தான் என்பது திண்ணமாக நிறுவிக்காட்டி பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் அரசியலை நடத்தாமல், முஸ்லீம்களுக்கு ஹஜ் யாத்திரை செலவு, சோப்பு விற்பது, நரேந்திர மோடியைத் திட்டுவது, இல்லை, ஓசியில் படியளப்பது போன்ற வெட்டிக்காரியங்கள் செய்துகொண்டு அவர்களையும் ஏமாற்றிக் கொண்டு நம்மளையும் ஏமாற்றுகின்றனர்.

February 20, 2007

ஏக "இரை" கொள்கை

மு. கு., இந்தப் பதிவு மத நம்பிக்கையின் காரணமாகவோ, உடல் நலத்தின் காரணமாகவோ வெஜிடேரியன்களாக இருப்பவர்களைப் பற்றி அல்ல.

புலால் உண்ணாமை என்பது தொன்று தொட்டு இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வாழ்க்கை முறை. இதில் எந்த வித கட்டாயமும் இல்லை. சிலருக்கு இந்த புலால் உண்ணாமை என்ற உணவுப் பழக்கம் கட்டாயமாக இருக்கலாம் ஆனால் vast majority மக்கள் வெறும் மரக்கறி சாப்பிட்டுக் கொண்டு காலம் தள்ளத் தயாராக இல்லை என்பதே உண்மை நிலை.

இப்போது சொல்லவந்த விஷயம் புதிய வெஜிடேரியன்களைப் பற்றியது. இவர்கள், நேற்றுவரை கறி இல்லாமல் சோறு சாப்பிடாத மிருக ஜாதிகள். இன்று Fashion என்பதற்காக வெஜிடேரியன்களாக மாறித் திரிபவர்கள்.

அமேரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வெள்ளையர்கள் என்றால் நம்மூரில் சில ஜந்துக்கள் இப்படி இருக்கிறார்கள்.

அவர்கள் இது போல் வெஜிடேரியன்களாக மாற எடுத்து வைக்கும் காரணங்கள் என்னவென்று பார்க்கலாம். விக்கியில் கிடைத்த இந்த புள்ளிவிபரத்தைப் பார்க்க

மிருக வதையைத் தடுக்கிறார்களாம். (10%)

ஒரு பவுண்ட் பீஃப் steak செய்யத் தேவைப்படும் தண்ணீரின் அளவு 20,000 லிட்டர், இதைவைத்து ஒரு ஊரே தண்ணீர் பஞ்சமில்லாமல் வாழலாம். வெஜிடேரியன்களில் 4% ஆட்கள் இந்த சிந்தனைக்காக வெஜிடேரியன்களாக மாறியவர்களாம்

1% வெஜிடேரியன்கள் உலகில் நிலவும் பசிக்கொடுமைக்கும், வரட்சியைக் குறைக்கவும் வெஜிடேரியன்களாக மாறினார்களாம்.


இந்த 10 + 4 + 1 சதவிகித ஆட்கள் தாங்கள் வெஜிடேரியன்களாக இருப்பதில் என்தப் பிரச்சனையும் எனக்கில்லை. ஆனால், நான் என்ன சாப்பிடவேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்று சொல்லி தெருக்களில் ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்துவது, பஞ்சத்தைத் தடுக்க ஆடு, மாடுகளை சாப்பிடாமல் இருக்கச் சொல்லி campaign கள் செயவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகின்றனர். PETA India இதில் அதிக வெற்றி பெற்றுள்ளது.

இவர்களின் முதல் மற்றும் முற்றிலும் hypocritical வாதம், சுற்றுப் புரச் சூளல் மாசு (pollution).


between 15 and 20 per cent of the methane gas emissions worldwide are produced by animals raised for food. These gases contribute to global warming and can sicken the people who live in communities around farms.


இந்த மடையர்களில் எத்தனைபேர், கார், ஸ்கூட்டர் ஓட்டிச் செல்பவர்கள் ? அதில் வராத pollution ஆ மாட்டின் மெதேன் வாயுவினால் வந்துவிடப் போகிறது ? சுற்றுப் புரச் சூளல் மேல் அக்கரை என்றால் முதலில் சைகிளில் போகட்டும் வேலைக்கு! அதற்கு பிறகு வெஜிடேரியனாகட்டும்!


மிருகவதை தடுப்பு!
அடுத்து, ஏதோ, கறி சாப்பிடாதனால் மிருகவதை நடப்பதில்லை போன்ற மாயையை உருவாக்குகின்றனர். மேலும் கறி சாப்பிடுபவர்கள் பாவச் செயல் செய்வதனால் நரகத்திற்குசத் தான் போகப் போகிறார்கள் என்று கூடச் சொல்வார்கள், இவர்களிடம் ஒன்று கேட்கவேண்டும்,

என்னைப் போன்றவர்கள் சாப்பிடத்தான் மிருகங்களைக் கொல்கிறோம், உங்களைப் போலுள்ள வெஜிடேரியன்கள் சாப்பிடும் கோதுமை, அரிசி, பருப்பு விவசாயம் செய்யப் பயன் படுத்தும் பூச்சிக் கொல்லிகளால் பல இன பூச்சிகளே முற்றிலுமாக இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அது தவிற, அமேரிக்கா போன்ற நாடுகளில் பயிர்களை காட்டு விலங்குகள் வந்து நாசம் செய்யாமல் இருக்க hunting pass கள் வழங்கப் படுகின்றன பல மான், முயல் போன்ற உயிரினங்கள் கொல்லப் படுகின்றன. இந்தியாவில் சொல்லவே வேண்டாம், பயிர்களை நாசம் செய்தால் அன்னிக்கு மான், மயில், முயல் கறி தான் வீட்டில் !

எது இப்போது அதிக பாவச் செயல்? கூண்டில் உணவுக்காகவே பிரதேயேகமாக வளர்க்கப் படும் மிருகத்தைக் கொல்வதா ? அல்லது சுதந்திரமாக காட்டில் சுற்றித் திரியும் மிருகங்களைக் கொல்வதா ?


என்னைக்கேட்டால் ஒரு கொலை செய்தாலும் 10 செய்தாலும் தூக்கு ஒண்ணுதான்.!!

ஆகவே, மிருகவதை என்றெல்லாம் புருடா விட்டுக் கொண்டு வெஜிடேரியன் கொள்கைக்கு ஆள் சேர்ப்பது, குற்ற உணர்ச்சியைத் தூண்டுவது போன்ற காரியங்களைச் செய்யாதீர்கள்.

அது போல் இவர்களுக்கு மிருக வதையைத் தடுக்க வேண்டும் என்று தான் நோக்கம் என்றால் தாங்கள் உண்ணும் பயிரை தாங்களே விவசாயம் செய்து தான் உண்ணவேண்டும்! முடியுமா ?

பஞ்சம்

அடுத்தது கறி சாப்பிடுபவர்களால் தண்ணீர் பஞ்சம் வருகிறது. வரட்சி வருகிறது என்பது. இந்த குற்றச்சாட்டைக் கொஞ்சம் ஆராயலாம்.


It takes 20,940 litres of water to produce 1 kilogram of meat, but only 503 litres of water to produce 1 kilogram of wheat.


ஒரு ஆடோ, மாடோ தன் வாழ் நாளில் பல லிட்டர் தண்ணீர் உட்கொள்கிறது. அந்த மாட்டை வளர்க்கவில்லை என்றால் தண்ணீர் பஞ்சம் வராதாக்கும் ?

இப்ப ஒரு மாடு இவ்வளவு லிட்டர் தண்ணீரைக் குடிக்கிறது என்றால் என்ன ஆகிவிடப் போகிறது. உலகத்தில் என்ன தண்ணீர் இல்லாமலா போய்விடும் ?

5 பில்லியன் வருஷத்திற்கு முன் எவ்வளவு தண்ணீர் இந்த உலகில் இருந்ததோ அதே அளவு தான் இன்றும் உள்ளது. அஞ்சாப்பில் வாடர் சைகிள் சொல்லிக் கொடுத்திருக்கவில்லையா ?


பஞ்சம் பற்றிய இன்னொரு விஷயம்,


Raising animals for food is grossly inefficient because, while animals eat large quantities of grain, they produce only small amounts of meat, dairy products or eggs in return. Scientists estimate that animals must be fed up to 10 kilograms of grain to produce just 1 kilogram of meat. The world’s cattle alone consume a quantity of food equal to the caloric needs of 8.7 billion people – more than the entire human population on Earth.


இது மஹா சொத்தை வாதம்.

உலகில் 80% திற்கு மேல் தயாராகும் பயிர்கள் not fit for human consumption!! மனிதர் உட்கொள்ள ஏற்றவையல்ல. ரப்பர் போலுள்ள அரிசி, கல் போலுள்ள கோதுமையை இது போல் Fashion வெஜிடேரியன் மடையர்களுக்குத் தான் உணவாகக் கொடுக்கவேண்டும். அவை மிருகங்கள் உட்கொள்ளவே ஏற்ற உணவாகும். மேலும், இந்தியாவிலோ, வேறு எந்த நாட்டிலோ எவ்வளவு நிலம் விழை நிலம் என்ற கணக்கில் வரும் ? விவசாயிகளுக்கோ, ஆடு, மாடு வளர்க்கும் பண்ணை வைத்திருப்பவர்களுக்கோ ஏதேனும் Choice உள்ளதா ? மனிதன் உண்ணத்தகு பயிர்வகைகளையும் தானியங்களையும் மட்டுமே வளர்க்க முடிவு எடுக்க முடியுமா ?

இது போல் இவர்களது சொத்தை வாதங்களை உடைத்துக் கொண்டே போகலாம்.

சுற்றுப் புரச்சூளல் பாதுகாப்பு கருதி, மிருக வதையைத் தடுக்க வேண்டுமென்று வெஜிடேரியன்களாக "மதம்" மாறும் கூட்டம், தங்கள் நிலையை ஞாயம் என்று கற்பிக்க அபத்த வாதங்களைச் செய்து சாதாரண புலால் உண்ணும் சாமான்ய மனிதனைக் கேவலப் படுத்துகின்றனர் என்பதற்காகவே என் கோபம்.

இது போன்ற Fashion வெஜிடேரியன்களுக்கும் ஏக இறை கொள்கை மதக்காரகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அவர்களுக்கு அவர்கள் மதம் தான் சிறந்தது மற்ற மதமெல்லாம் "பொய்" மதங்கள் என்றால் இவர்களுக்கு இவர்கள் உண்ணும் வெஜிடேரியன் உணவே சிறந்தது மற்றதெல்லாம் "தீங்கான" உணவுகள். முட்டாள் தனத்தின் உச்சகட்ட வெளிப்பாடு.

February 19, 2007

கல்யாணப் பரிசு

சில நாட்கள் முன்பு ndtv ல் bone of contention என்ற பட்டி மன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு, "இந்தியர்கள் திருமணத்திற்காக மிக அதிகமான செலவு செய்கிறார்களா ?". கொல்கத்தாவிலிருந்து வந்த பள்ளி மாணவர்கள் "ஆம்" என்றும், லக்னோ விலிருந்து வந்த பள்ளி மாணவர்கள் "இல்லை" என்றும் வாதிட்டனர்.

கொல்கத்தா வெற்றி பெற்றது.

கொல்கத்தாவிலிருந்து வந்த பள்ளி மாணவர்கள், இந்தியர்கள் தன் சக்திக்கு மீறி செலவு செய்கிறார்கள் என்று சொல்லிவிட்டனர் அதற்கு புள்ளிவிபரம் என்று ஒன்றைக் காட்டினர். ஒரு சராசரி இந்தியன் கல்யாணத்திற்கு, தன் வருமானத்தைவிட 3 மடங்கு அதிகம் செலவு செய்கிறான் அதாவது வருமானம் 12,000$ கல்யாணச்செலவு 34,000 $, ஆனால் ஒரு சராசரி அமேரிக்கனின் வருமானம் 20,000 $ என்றால் கல்யாணச்செலவு 24,000 $ எனபதே அந்தப் புள்ளிவிபரம்.

ஆனால் உண்மையில் என்னைக் கேட்டால் புள்ளிவிபரங்கள் ஒன்றும் சொல்லிவிடவில்லை என்றே கருதுகிறேன். இந்தியர்களுக்கு திருமணம் என்று வரும் போது அதிகமான செலவு தான் செய்கின்றனர். ஆனால் ஒவ்வொன்றும் accountable செலவு. பாத்திரங்கள், சீர், தங்கம், நில புலன் என்றெல்லாம் பார்த்தால் அது செலவு என்று கருத முடியாது.

ஏனென்றால், அதெல்லாம் அன்றாடம் பயன் படக்கூடிய பொருட்கள், தங்கம் என்பது liquifiable asset, நிலம் என்பது investment. இன்றைய ரியல் எஸ்டேட் நிலவரத்தின் படி 5-10 ஆண்டுகளில் ஒரு கிரவுண்டின் விலை 10 மடங்கு கூட ஏறும். பண வீக்க விகிதத்தைக் கழித்துவிட்டுப் பார்த்தாலும் நிச்சயம் இலாபம் தான். சீராக வரும் பாத்திரம் எல்லாம் வீட்டில் பயன்படுத்தத்தான் வாங்கிக் கொடுக்கிறார்கள்.

ஆனால், அமேரிக்கர்கள் திருமணச்செலவு என்று செய்வது குறைவு என்றாலும், ஒவ்வொரு டாலரும், இசை, பாட்டு, தண்ணி என்று செலவு செய்யப்படுகின்றது. Fixed asset செலவே அதில் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அது car அல்லது வேறுவிதமான பொருளாக இருக்கும். அதை பின்னாளில் விற்றால் குறைந்த் விலையில் தான் விற்க முடியும். Flat, villa பொன்ற பரிசுகள் பெற பணக்காரப் பெண்ணைத் (ஆணைத்) திருமணம் செய்து கொண்டால் தான் கிடைக்கும்.

இதையெல்லாம் அந்த லக்னோவிலிருந்து வந்தவர்கள் அதிக அழுத்தம் கொடுத்துச் சொல்லவில்லை. அவர்கள் over defensive ஆகவும், புள்ளி விபரமே தவறு என்று வாதிட்டு தோற்றுப் போயினர்.

தமிழ் வலைப்பதிவுலகில் என்ன நினைக்கிறார்கள் ? இந்தியர்கள் திருமணத்திற்கு மிக அதிகச் செலவு செய்கிறார்கள் என்றா ?