July 8, 2006

படங்காட்றேன்....!!-6

ஜெரூசலம் - ירושליים-Jerusalem

யூதர்கள், கிறுத்தவர்கள், மற்றும் இஸ்லாத்தவர்களின் புனித நகரமாகக் கருதப்படுவது ஜெரூசலம். இது ஏழு மலைக்குன்றுகளின் நடுவில் கட்டப்பட்ட நகரம். வாரணாசி அளவுக்கு பழமைவாய்ந்த நகரம் இது. இஸ்ரேலின் தலை நகரம். இஸ்ரேலின் நாடாளுமன்றமான க்னெஸ்ஸட் -כוסת - knesset இங்குதான் உள்ளது. அடிக்கடி செல்லாவிட்டாலும், சென்ற பொழுதெல்லாம் படங்கள் எடுத்துத்தள்ளியதால் எதைப் பதிப்பது என்று யோசிக்க நேரமாகின்றது. சரி, வாசற் படியிலிருந்து ஆரம்பிக்கிறேன்.

பழய நகரம் (old city) கிட்டத்தட்ட ஒன்று சதுர கிலோமீட்டர் பரப்பளாவு கொண்டது. அதில் யூதர்கள் பகுதி, இஸ்லாமியர் பகுதி, கிறுத்தவர் பகுதி என்று பிரிக்கப்பட்டு இருக்கும். நகரத்தைச் சுற்றி வெளிச்சுவர், ஆங்காங்கே நுளைவாயில்கள் என்று பழய பெறுமை அதிகம் உள்ள நகரம்.


ஜெரூசலத்தின் (பழய நகரத்தின்) மிக அழகான நுளைவாயில்களில் ஒன்று Damascus Gate. இந்த நளைவு வாயில் சிரியாவிலுள்ள டமாஸ்கஸ் நகரம் நோக்கியுள்ளதால் இதற்கு இந்த பெயர். டேவிட் ரொபர்ட்ஸ் என்கிற ஆங்கில ஓவியர் 19ம் நூற்றாண்டில் வரைந்த சித்திரமும், அதே டமாஸ்கஸ் நுளைவு வாயில் இன்று எப்படி உள்ளது என்பதையும் படத்தில் காண்க.

இந்த நுளைவு வாயில் வழியாக உள்ளே நுளைந்ததும் அரபு மார்க்கெட் தான் முதலில் வரும். இது முஸ்லீம்கள் வாழும் பகுதி. அரபு மொழி, ஹீப்ரூ மொழி என்று எல்லாமே கேட்கும். அதிக அரபு முஸ்லீம்கள் வாழும் பகுதி இது.

அதுவும் எப்பொழுதுமே கூட்டமாக இருக்கும் இந்த மார்கெட் பகுதியில் மசூதியும், யூதத்தேவாலயமும் சேர்ந்தே இருக்கின்றது. யூதத்தேவாலயத்தின் சின்னமான மெனோராஹ்- מנורה-menorah இருப்பதைப் பார்க்கலாம்.

புதிய ஜெரூசலத்தில், அதாவது வெளிச்சுவற்றுகு வெளியில் உள்ள நகரத்தில், கட்டிடங்கள் மற்றும் வெளிச்சுவர் கற்கள் Jerusalem stone என்கிற வெண்ணிர கற்களால் மட்டுமே கட்டப்படவேண்டும் என்று அரசு அணை இருக்கிறது. ஆகயால் எல்லா வீடுகளும் அதே நிறத்தில் தான் இருக்கும்.

6 comments:

CT said...

Hi Shankar
Nice informative post and well taken pictures.Inspiring me to learn more about the country.
1.Israel is it secular nation or non secular nation.
2.since all the three faith groups are living what is the law , do they have separate like India or do they have common law.
3.Are there any caste groups or subdivisions in jews like in muslims and christians.
If you are planning to write as a separate post ,I can wait for that.

with best
CT

Vajra said...

Israel is not a secular country

Israel is a jewish republic

The law of the land is Jewish. Muslims christians and other minority religious groups are allowed to have personal civil law as in India.

There are no caste or sub division in Jewish religion per se. But the ultra religious would prefer ultra religious orthodox people and secular would prefer secular people. The russian immigrants marry amoung themselves and the Ethiopian jews (who are black) marry amoung themselves. Inter racial marriages are as rare as inter caste marriages.

Vajra said...
This comment has been removed by a blog administrator.
மா.கலை அரசன் said...

நல்ல பதிவு. ஜெருசலேம் பற்றி நல்ல தகவல்கள் பதிந்துள்ளீர்கள்.

பழூர் கார்த்தி said...

வணக்கம் வஜ்ரா, முதல்முறையாக உங்கள் வலைப்பதிவிற்கு வருகிறேன்..
வாழ்த்துக்கள் !!

****

படங்களும், விவரங்களும் அருமை..
'வெய்லிங்/விஷ்ஷிங் வால்' படங்கள் வருகின்றனவா ??

****

நானும் இஸ்ரேல் பயணம் பற்றிய பதிவுகள் எழுதி வருவது தெரியுமல்லவா.. சில படங்களை போட்டு அடுத்தடுத்த இடுகைகளை செழுமைப்படுத்தலாம் என எண்ணமுள்ளது..

Vajra said...

சோம்பேறி பையன்,
வருக வருக,

இந்த படங்காட்றேன்...தொடரில் முந்தய பதிவுகளையும் பாருங்கள்.

முந்தய படங்கள் link 1, link 2, link 3, link 4, link 5.

அடுத்தது வெயிலிங் வால் படங்கள் தான்..!! (அழுகைச் சுவர்)