October 26, 2006

குற்றவாளிக் கூண்டில் ஆதி ஷங்கரர்-2

முதல் பகுதி

சரி,

"இந்த திரை எப்படி வேலை செய்கிறது...? எவ்வளவு தூரம் என்னால் பின்னோக்கிச் செல்ல முடியும்? காலத்தில் முன்னோக்கிச் செல்ல முடியுமா?" ஷங்கரர் கேட்க...ஒரு ஒளிப்பந்து "எவ்வளவு காலம் வேண்டுமானாலு பின்னோக்கிச் செல்லும், ஆனால் முன்னோக்கி வருங்காலத்தைப் பார்க்க முடியாது. சம்பவங்கள் நடந்து முடிந்த பின் தான் இங்கே தெரியும்... நேரே திரையைப் பார்த்து பேசினால் அது எங்கே செல்லவேண்டுமோ அங்கே சென்று காட்டும்".

ஷங்கரர் "பின்னோக்கிச் செல்"...முதலில் வெண்திரையில் ஒன்றும் மாறவில்லை... ஒரு சிறிய தாமதத்திற்குப் பிறகு திரையில் காட்சி மாறியது...ஒரு 8000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது " நில்..அங்கே...அந்த இடத்தில் .." சரஸ்வதி நதிக்கரையில் சில ரிஷிக்கள் யாகத்தில் ஈடுபட்டிருந்தனர்...வேதங்கள் அப்போது தான் தோன்றிக் கொண்டிருந்தது...

"அங்கே பார்த்தீர்கள் என்றால்...அவர்கள் அந்த சரஸ்வதி நதியை பல இடங்களில் போற்றிப் பாடுகின்றனர்..."

"முன்னோக்கிச் செல்" அங்கிருந்து திரையில் காலம் சில ஆயிரம் ஆண்டுகள் முன்னோக்கி விறைந்து மிதிலைக்கு வந்தடைந்தது, அங்கே சிவ தனுசை ராமன் தூக்கி நாணை கட்டிக் கொண்டிருந்தார்..சீதாவை வென்று மணமுடிப்பதற்காக...! "முன்னோக்கிச் செல்" என்றார் ஷங்கரர், பல வாணரங்களும் ராக்ஷசர்களும் மாண்டு கிடந்த யுத்த பூமி அது... நடுவில் ராமன் யாகம் செய்து கொண்டிருந்தான்...சிவனின் பக்தனான ராவணனைக் கொன்றதற்காக!

"இன்னும் முன்னோக்கிச் சென்று குருக்ஷேத்திரத்தில் காண்பி" என்றார் ஷங்கரர்...அங்கே ஒரு தேரின் மேல் ஹனுமனின் உருவம் பதித்த கொடியிருந்தது..அந்த தேரில் அர்ஜுனன் நின்று கொண்டிருந்தான்.

" சனாதன தர்மம் என்றுமே சரித்திர அடிப்படையும் கொண்டுள்ளது என்பதற்கு நான் மூன்று சான்றுகள் கொடுத்துள்ளேன். நதிகளை போற்றுதல், புனிதஸ்தலங்கள், போற்றத்தகு புருஷர்கள் என்பதற்கெல்லாம் சனாதன தர்மத்தில் வேத காலம் தொட்டே இடம் இருந்துள்ளது. துவைதம் அதாவது கடவுள்-மனிதன் பாகுபாடு என்பது என்றுமே இருந்துள்ளது, அது இல்லாமல் எந்தப் போரும் நேர்ந்திருக்காது, அதை புதிதாக நான் ஒன்ரும் ஆரம்பிக்கவில்லை"

"ஆனால், அதை மிக இயற்கைக்கு முரனான தளத்திற்கு இட்டுச் சென்ற பெருமை உன்னையே சேரும்" சொன்னது மூன்றாவது ஒளிப் பந்து.

"அது இயற்கைக்கு முரனான தளம் என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது... இப்போதே அதை விளக்குகிறேன்."

"மனித மன நிலையை நால்வகைத் தன்மை கொண்டதாகப் பிரிக்கலாம், செயல்வீரன், சிந்தனையாளான், யதார்த்தவாதி, மற்றும் தத்துவார்த்தவாதி முதலும் மூன்றாவதும் பெண்பால் மன நிலைகள். அவை சரித்திரத்தில் ஈற்பு கொண்டு, அதை பக்தியாக வெளிப்படுத்தும். ஆகவே பெண்கள் என்றுமே சின்னச் சின்ன நிகழ்வுகளை ஞாபகம் வைத்திருப்பர், யார் என்ன உடை அணிந்திருந்தனர், எந்த தேதி, நாள் என்று.
ஆனால், ஒரு ஆண் அவனது திருமண நாளைக் கூட மறந்துபோவான். இரண்டு மற்றும் நான்காவது நிலைகள் ஆண்பால் நிலைகள், அவை தத்துவ அடிப்படை கொண்டவை. ஆகவே ஒரு ஆண் எப்போதும் எந்த நிகழ்வுக்கும் வேர் என்ன என்பதைத் தேடுவான்...மிக சிக்கலான கணித சூத்திரமானாலும் சரி, அல்லது ஒரு பழம் மரத்திலிருந்து கீழே விழும் விஷயமாக இருந்தாலும் சரி.

இதே காரணிகள் மற்ற மனித செயல்களுக்கும் பொருந்தும்."

"முன்னோக்கிச் செல்" திரையில், ஷங்கரர் பிறப்பதற்கு சில வருடங்கள் முன்னர் இலங்கையின் முக்கிய நகரம் கண்டி..அங்கே, சில புத்த பிக்ஷுக்கள் புத்தரின் பல்லை பாதுகாத்து வைத்திருந்தனர் ப்ல்லாயிரம் பக்தர்கள் வந்து தரிசித்தனர்.

"இந்த காலத்தில் தான் நான் பிறந்தேன்,"புத்தமதம் தழைத்துக்கொண்டிருந்தது, இந்து மதத்தை அது இந்த நான்கு நிலைகளிலும் தோற்கடித்து விட்டிருந்தது" அது சகிப்புத் தன்மையற்ற திடக் கொள்கையாக "சிந்தனையாளன்-தத்துவார்த்தவாதி" தளத்திற்கு மாறும் முன்னர் இந்து சனாதன தர்மத்தை தத்துவ அடிப்படையில் அது வென்றிருந்தது. அதற்குப் பிறகு பௌத்தம் இந்த "செயல்வீரன்-யதார்த்தவாதி" தளத்தில் மிக வேகமாக வளரத் துவங்கிவிட்டது, பக்தி மார்க்கமாக சிலை வழிபாடு, கோவில்கள், இத்யாதி.. இந்துமதம் சரித்திரத்தில் அடிப்படையில் மெலிந்து இருந்தத்தால் இந்த அடிக்கு அது தாங்கவில்லை. முற்றிலும் அழிந்தே போய்க் கொண்டிருந்தது"

"அந்த தருணத்தின் தேவை இந்து சனாதன தர்மத்தை உயிர்பிக்கச் செய்வதே...அதனால் அடிப்படையில் இந்த நான்கு நிலைகளிலும் அதை உயிரூட்ட வேண்டிருந்தது. அத்வைதம் சிந்தனையாளன், தத்துவார்த்தவாதி நிலைகளை உயிரூட்டினாலும் செயல்வீரன்-யதார்த்தவாதி நிலைகளை அது எத்தகய மாற்றமும் செய்யவில்லை. ஆகயால், சரித்திர அடிப்படை கொண்ட தர்மத்தை உருவாக்கினால் இந்த நிலைகளும் உயிர்பெரும் என்பது என் நம்பிக்கையாக இருந்தது."

"சரித்திரம்+ தத்துவம் = சரித்திரத்துவம்" முணுமுனுத்தது ஐந்தாவது ஒளிப்பந்து.

"அதே, அத்வைதம் சரித்திர புருஷர்களின் வழிப்பாட்டுடன் கலப்பதால் துவைத கொள்கை உருவாகும் என்பதை நான் முற்றிலும் அறிந்திருந்தேன். இந்த சரித்திர புருஷர்களான ராமர், கிருஷ்ணர் வழிப்பாட்டினால் ஒரே அடையாளம் இல்லாமல் பன்மை அடையாளங்கள் ஒரே மனித மனத்தில் உருவெடுத்தது. அதற்கு முன்னர் மக்கள் பௌத்தர், வேதாந்திகள் என்று தனிமை அடையாளம் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் வைஷ்ணவர், சைவர், ஷக்தர் என்று பர்ப்பல அடையாளங்கள் கொண்டு விளங்குவர், அவர்தம் இஷ்ட தெய்வத்திற்கேற்ப. அவர்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை அவர்களே கூட உருவாக்கிக் கொள்ள முடியும். முன்னர் பௌத்தம் மேலோங்கி இருந்ததால் இந்து சமூகத்திடம் செல்வம் இல்லாமல் இருந்தது. இந்த இஷ்ட தெய்வ பக்தி கோவில்கள் பல எழுப்பியது. இதனால் வேலைவாய்ப்பு பெருகியது, பணம் புரள ஆரம்பித்தது. பாடல்கள், கவிதைகள் ஏற்றுதல், ஆடல் கலை என்று கலைகளும் வளர்ந்தது. மொழி வழம் பெருகி பற்பல மொழிகள் தோன்ற ஆரம்பித்தன. இந்த புதிய மக்கள் மத இஷ்ட தெய்வ அடையாளங்கள் தவிர மொழி அடையாளங்களும் பெற்றனர். இது பன்முகத்தன்மையை வலுப்பெறச் செய்தது. மத்வாச்சார்யார், ராமானுஜர் போன்றோர் இன்னுமொறு அடையாளத்தை மக்களுக்குக் கொடுத்தனர். பௌத்தமும் அதன் ஒரே குரு, ஒரே தத்துவம், ஒரே மொழி, ஒரே விதமான வழிபாட்டு முறை என்ற ஒருமையும் இத்தகய பன்முகத்தன்மையின் தாக்குத்தலைத் தாக்கு பிடிக்கவில்லை. சில் நூற்றாண்டுகளில் அது அழிந்தே போனது. ஆகவே, மத்வாச்சார்யார், ராமானுஜர் போன்றோரையும் இந்த நீதி மன்றத்தில் நீங்கள் விசாரிக்கவேண்டும்.."

" நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நீ சொல்லத் தேவையில்லை. உன் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பௌத்தம் பற்றியது அல்ல. ஆகவே அந்தக் கோணத்தில் விவாதப் பொருளை திசை திருப்பித் தப்பிக்க எண்ணாதே"


"புரிகிறது, மன்னித்துக் கொள்ளுங்கள். நான் இதனால் என்ன சொல்ல வந்தேன் என்றால், இந்து மதம் மானுட அன்றாட விஷயங்களில் மனித இயற்கையான சரித்திர அடிப்படை எண்ணத்தில் வலுவாக இருக்கவில்லை. ஆனால், அது தற்பொழுது சற்று அதிகமாகவே சரித்திர அடிப்படை தர்மமாக மாறிவிட்டது என்பது உண்மை, என் கணிப்பு எல்லாம் பௌத்தத்தை பொருத்தே அமைந்தது என்றாலும் இதற்கு ஒரு நல்ல அம்சமும் இருந்ததை நான் எண்ணிப் பார்க்கவில்லை. முன்னோக்கி என் காலத்திற்குச் செல்"

வெண்திரை பாரசீக பாலைவனத்தின் நடுவில் உள்ள ஒரு நகரைக் காட்டியது. அந்த நகரின் மக்கள் முன்னே கோவிலில் புகுந்து வண்புணர்வில் ஈடுபட்ட படைவீரர்கள் போலவே உள்ளவர்களால் வெட்டிக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தனர்.

"பாருங்கள்!" ஷங்கரர் சொன்னார் "அவர்களும் வைத்தீக மக்கள் போலவே அக்னியை வழிபடுபவர்கள். அவர்களும் சரித்திர அடிப்படை சற்றும் இல்லாதவர்கள். ஆனால், அவர்கள் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டனர். மற்றொன்றைப் பார்க்கலாம்".

திரையில் பல பௌத்த மற்றும் இந்து ராஜ்ஜியங்கள் இந்திய மண்ணில். பௌத்த ராஜ்ஜியங்கள் ஒவ்வொன்றாக அதே படைவீரர்களுக்குப் பலியாகிக் கொண்டிருக்க, இந்து ராஜ்ஜியங்கள் சில விழுந்தாலும், சில சிதரி மறுபடியும் ஒன்று கூடி மேலெழும்பி திருப்பித் தாக்கின.

"இதனால் நமக்கு என்ன தெரியவருகின்றது? சரித்திர அடிப்படை கொண்ட, ஒரே வழிபாட்டு வரைமுறை கொண்ட, பன்முகத்தன்மையில்லாத சித்தாந்தங்கள் அதே போலுள்ள ஆனால் சிறந்த போர் முறைகள் கொண்ட மற்ற பன்முகத்தன்மையில்லாத சித்தாந்தங்களுக்கு பலியாகிவிடும் என்பதே. ஆனால், ஒரு அத்வைதக் கட்டமைப்பினாலான சரித்திர அடிப்படை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட சித்தாந்தத்தை நான் உருவாக்கிவிட்டேன் என்னையறியாமலேயே. மக்கள் வேத வழியை என்றும் விட்டுக்கொடுக்கவில்லை.

தத்துவம் சரித்திரத்திடம் தோற்றே போனது சில இடங்களில், ஆனால் அதற்கு சரித்திர அடிப்படை கொண்ட வெளி நாட்டுத் துவைதக் கொள்கைகளால் தான் அந்தத் தோல்விகளும். கூடப் பிறந்தவர்களிடத்தே சண்டை சச்சரவு எல்லாம் நூற்றாண்டுகள் வெளி நாட்டு துவைதக் கொள்கையினால் ஏற்பட்ட அடிமைவாழ்க்கையினால் தான், சரித்திர அடிப்படை வாழ்க்கைமுறையினால அல்ல. ஒரு கோவில் கட்ட சண்டை, ராமர் கட்டிய பாலத்தைக் கண்டுபிடிப்பது, அழிந்து போன நதியை அளவெடுப்பது எல்லாம் இந்த வெளி நாட்டு துவைதக் கொள்கையுடன் தொடரும் சண்டைகளே. இந்தப் போர் நடந்தே ஆகவேண்டும், அதில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றால், மக்கள் தத்துவ அடிப்படை வாழ்க்கைமுறைக்குத் தானாக மாறிவிடுவர்."

"நீ என்ன சொல்லவருகின்றாய் என்பது எனக்குப் புரிகிறது!" முதல் ஒளிப் பந்து கூறியது, நீல நிறமாக மாறி. "துவைதக் கொள்கை வேறு இடங்களில் துவைத அடிப்படை கொண்டுள்ளதால், சகிப்புத் தன்மையற்று இருக்கிறது ஆகவே அது அழிந்து போகவாய்ப்பும் உள்ளது. ஆனால் நீ ஆரம்பித்து வைத்த துவைதக் கொள்கை அத்வைதத்தின் அடிப்படை கொண்டுள்ளதால் அசூயைத் தன்மை இல்லாமல் உள்ளது, மேலும் வெளி நாட்டுக் கொள்கைகளின் பிடியில்லாம இருக்கையில் இந்த துவைதம் என்ற உடையைக் கழைந்து உண்மையான அத்வைத தத்துவ அடிப்படைக்கு மாறிவிடும்"

"அதுவே" ஷங்கரர் சொன்னார். " நான் ஆரம்பித்து வைத்த அத்வைத அடிப்படை துவைதக் கொள்கை என்பது, இன்னொறு முறை சனாதன தர்மம் எதிரியை அழிக்க எதிரி போல் உருமாருவதே, எதிர் அழிந்தபின் ஒரு ஆத்மா இறந்த உடலைத் துரப்பது போல் இந்த உருவமும் துரந்து உண்மை நிலையை அடையும் சனாதன தர்மம்"

அதற்கு ஏழாவது ஒளிப்பந்து "அதை பொருத்துத் தான் பார்க்கவேண்டும்".

அனைவரும் காத்திருந்தனர்....

பூலோகக் காலம் விரைந்து சென்று கொண்டிருக்க இவர்களுக்கு ஆண்டுகள் நொடிகளாகச் சென்றன.

திரையில் ராமர் கோவில் அதே இடத்தில் கட்டப் படுவது தெரிந்தது.

"இது ஒரு மைல்கல், இன்னும் முன்னே செல்லலாம்" என்றார் ஷங்கரர்.

கொஞ்ச அதிக நேரமே காத்திருந்தனர்.

ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஓடிவிட்டது. " நில்" என்றது ஏழாவது ஒளிப்பந்து. அதே கோவில் சிதிலமடைந்து பாழ் பட்டுக் கிடந்தது. முக்கிய புனித ஸ்தலங்கள், அனைத்திற்கும் இதே கதி. வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் எல்லாம் என்ன்வென்றே தெரியாமல் மக்கள் இருந்தனர். மத அடையாளங்களை மக்கள் வெளியில் காண்பிப்பதை நிறுத்திவிட்டிருந்தனர்"

"பாருங்கள்" ஷஙகரர் தொடர்ந்தார் " துவைதத்தின் தேவையே இப்போது இல்லாமல் போய்விட்டது, ஏனென்றால் வெளி நாட்டுக் கொள்கைகள் அழிந்துவிட்டன. 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அந்த இரண்டு துவைத மதக் கொள்கைகள் சண்டையிட்டனவே அது என்ன ஆயிற்று பார்த்தீர்களா? அன்னாட்டு மக்கள் மதங்களையே வெறுத்து ஒதுக்கிவிட்டு காட்டில் குகைகளில் வாழும் நிலைக்குப் போய் விட்டனர். இந்த மக்கள் துவைதத்தை ஒரு எதிர்வினையாகவே கடைபிடித்தனர் என்பதால் அவர்கள் துவைதத்தைத் தூக்கி எரிந்துவிட்டு அடிப்படை அத்வைதக் கொள்கைக்கு மாறிவிட்டனர். அதோ, அங்கே பார்க்கலாமா?"

ஒரு பள்ளியின் வகுப்பறை, 24ம் நூற்றாண்டு, 13 வயது மாணவ மாணவிகள் ஒரு தீப்பந்தை காற்றில் மிதக்க விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

"உங்க தூரத்து சொந்தக்காரர் போல் இருக்காரே?" என்றால் ஷங்கரர். அங்கிருந்த எந்த ஒளிப்பந்துக்கும் இந்த Joke பிடித்தது போல் தெரியவில்லை.

அந்த மாணாக்கர்கள் "அக்னியே, அனைத்து தெய்வங்களுக்கும் தூதுவனே, நாம் உம்மை வணங்குகிறோம்" என்று வணங்கிக் கொண்டிருந்தனர்...

ஆசிரியர் வருகிறார், "இன்று உங்களுக்கு திடீர் Test வைக்கப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு, "ப்ரஹதாரண்யக உபனிடத்தின் அடிப்படைத் தத்துவங்களுக்கும் எதிர்-புவியீர்ப்பு விசைத் தத்துவத்திலிரிந்து பெறப்படும் உப தத்துவங்களுக்குள் உள்ள ஒற்றுமையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதுங்கள்...ஒரு மணி நேரம். இப்பவே ஆரம்பம்...ம்ம்!"

"துவைதக் கொள்கையை முற்றிலும் துரந்துவிட்டனர் போல் தெரிகிறாது, மக்கள் கோவில், சிலைகளுக்கு வழிபாடு போன்ற விஷயங்களை விட்டுவிட்டனர். வீட்டில் பூஜை அறை என்றெல்லாம் இல்லை, சரித்திர புருஷர்களின் பிறந்த நாட்களையெல்லாம் கொண்டாடுவதில்லை. சனாதன தர்மத்தை விதைத்த ரிஷிகள் எண்ணிய வண்ணம் அதாவது, தத்துவ அடிப்படை வாழ்க்கை வாழ ஆரம்பித்துவிட்டனர். ஆனால், வெளியிலிருந்து ஏதேனும் துவைதக் கொள்கைகளினால் தாக்கப்பட்டால் சனாதன தர்மம் அந்த தாக்குதல் தொடரும் வரை தன் நிலையை எதிரியைப் போல் மாற்றிக் கொள்ளும். அந்த தாக்குதன் நின்றவுடன் மீண்டும் பழய நிலைக்குத் திரும்பும்...இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.."

என்று சொல்லிவிட்டு ஷங்கரர் திரும்பினால்...அங்கே யாருமில்லை....

எல்லாம் மறைந்துவிட்டது.

அண்டத்தின் நடுவில் ஷங்கரர், உடலிலிருந்து பல வண்ண ஒளி வீசத் துவங்கி எல்லா திசைகளிலும் விரியுத் துவங்கியது. சூரிய மண்டலம், நக்ஷத்திரங்கள், பால் வீதி எல்லாம் அவருள் அடங்க அவர் விரிந்து கொண்டே போய் ஒரு வினாடி ஒரு ஒளிப்பிளம்பாக உருவெடுத்து பேரொளி பரப்பிரம்மாதில் கலந்தார்.

(முற்றும்.)

ஆங்கில மூலம்:
மூர் நாம்மின் The Trial of Adi shankara

October 21, 2006

குற்றவாளிக் கூண்டில் ஆதி ஷங்கரர்-1

ஆதி ஷங்கரர் ஒரு வினாடிப் பொழுதில் ஒரு ஒளி பிம்பத்தின் இறுதியில் வந்தடைகிறார், அது ஆதியும் அந்தமும் இல்லாது ஒரு இடம் முன்னேற எண்ணி முதல் அடி எடுத்து வைத்தவுடன் ஷங்கரர் முன்னே இருந்து கண்ணாடி துண்டுகளாக சிதறி காட்சி விரிகிறது.

"நில்" கேட்கிறது குரல்...அங்கேயே நிற்கிறார் ஆதி ஷங்கரர். நிற்பது தரையே இல்லாத ஒரு இடத்தில்...ஒரு புறம் ஒரு பெரிய்ய வெண் திரை, எதிரே 7 ஒளிப்பந்துகள் 7 நிறத்தில்.. அதன் பின்னே ஒரு 50 ஒளிப் பந்துகள் அதே போல் பல்வேறு நிரங்களில்...

இன்னொரு பக்கம் ஒரு சுவர், அதில் மூடிய கதவு.

அந்த ஏழு ஒளிப் பந்துகளில் ஒன்று சற்றே மேலெழும்பி, " நீ இறந்துவிட்டாய்" என்று சொல்கிறது...

கேட்ட ஆதி ஷங்கரர் "ஓ! அது தானா இப்படி.." என்று எண்ணுகிறார்.

ஓளிப்பிம்பம்: "இந்தப் பிறப்பில் நீ மிகவும் சிறப்பாகச் செயல் பட்டுள்ளாய், இது தான் கடைசிப் படி"

"இது என்ன?" என்று ஆதி ஷங்கரர் அந்த வெண் திரையை நோக்கி கையசைத்துக் கேட்கிறார்..

"இது இந்த உலகில் நடப்பனவற்றைக் காட்டும் திரை. அதில் தெரியும் வண்ணங்கள் உன் செய்கையினால் தூண்டப்பட்ட முக்கிய சம்பவங்களின் நிகழ்வுகள்..." ஓளிப்பிம்பம் பதில் சொல்கிறது.

மறுபடியும், ஆதி ஷங்கரர் அந்த மூடிய கதவை நோக்கி "இது என்ன?" என்று கேட்கிறார்...

"பொறுமையாக இரு" எல்லாம் விளங்கும் என்றது... "எப்பவும் இதே போல் கேள்விகேட்டுக் கொண்டு சந்தேகம் தீர்த்துக் கொள்வதே இவன் வாடிக்கை, மூன்று வயதில் சமஸ்கிருத இலக்கணத்தில் சந்தேகம் வந்து தன் தந்தையின் பதிலில் திருப்தி அடையாமல் பக்கத்து ஊருக்கு காட்டுவழியில் நடந்து சென்று வேறு யாரையோ கேட்டுத் தெரிந்துகொண்டவன் தானே..." என்று கிசு கிசுக்கின்றன ளிரண்டு ஒளிப் பிம்பங்கள்.

"அந்தக் கதவு பரப் பிரம்மத்தை அடையும் வழி..." என்று மூன்றாவது ஒரு ஒளிப் பிம்பம் சொல்கிறது. "உனது பூலோக நன்மை தீமைகளைச் சரிபார்த்து உனது செயல்களினால் நீ பரப் பிரம்மத்தை அடைவதா அல்லது பூலோகத்தில் இன்னொறு பிறவி எடுப்பதா என்பது பற்றி இங்கே முடிவெடுக்கப் படும்" என்று சொல்கிறது நான்காவது ஒளி வட்டம்.

"அந்த முடிவை நீங்கள் தான் எடுப்பீர்களா?" கேட்டார் ஷங்கரர்.

"இல்லை, நாங்கள் வெறும் வழக்கறிங்கர்கள் போலத்தான், உனது பூலோகச் செயலுக்கு விளக்கங்களை உன்னுடன் விவாதிப்பதன் மூலமும் உனது செயல்களுக்கு உனது விளக்கத்தை கேட்பதன் மூலமும் பெறுவோம், முடிவு தானாக நிகழும்." என்று அந்த நான்காவது ஒளிப்பிம்பம் சொல்கிறது.

"முடிவு எதுவாக இருந்தாலும், நீ பல நல்ல காரியங்கள் செய்திருக்கிறாய், ஆகயால் குறைந்த பட்சம் நீ பூலோகத்திற்குத் திரும்பச் சென்றாலும் நல்ல வசதி வாய்புள்ள வாழ்க்கைதான் உனக்கு கிடைக்கும், வீடு, கார், பங்களா..." என்று ஐந்தாவது ஒளிப்பிம்பம் அள்ளி விடும் நேரத்தில் ஷங்கரரின் கண்கள் "அங்கே இன்னும் ஒரு முறையா?" என்ற கேள்வி எழுப்பியது...

அதே வேளையில் அந்த வெண் திரையில் ஒரு கரும் புள்ளி தோன்றி மரைந்தது...

"அது என்ன?" வின்வினார் ஷங்கரர்.

"அது உன் சீடன் பத்மபதாச்சார்யாரின் மரணம்" என்று சொல்லிய ஒளிப்பிம்பம் ஒரு வினாடி மௌனித்துவிட்டு "அவன் திரும்ப பூலோகத்திற்குச் செல்கிறான்" என்று சொன்னது.

"என்ன நடக்கிறது இங்கே, அவன் எப்படி இறந்தான், எவ்வளவுகாலம் வாழ்ந்தான், அவன் மறு பிறவி எடுப்பதை எப்படி ஒரு வினாடியில் முடிவெடுக்கிறீர்கள்?" என்று கேட்டார் ஷங்கரர்.

ஓளிப் பிம்பம்:"அவன் நீ இறந்து மேலும் 30 ஆண்டுகள் வாழ்ந்தான்...இதே போல் கீழ் நிலை " நீதி மன்றம்" இருக்கிறது, மற்ற "கீழ் நிலை" மனிதர்களுக்காக, அங்கே அவன் விதி நிர்ணயிக்கப்பட்டது, அந்த " நீதி மன்றம்" பூலோகக் கால அளவில் இயங்கி 13 நாட்கள் எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்கியது..., அத்தகய நீதி மன்றத்தில் வெற்றி பெற்று வருபவன் தான் இங்கே விசாரிக்கப் படுவான், இங்கே காலம் மிக மெதுவாகச் செல்லும், யுகங்கள் பல கடந்துவிடும் ஆனால் நமக்கு அது ஒரு வினாடி போல் இருக்கும், ஆனால் இது தான் கடைசி நிலை ..இதற்குப் பிறகு பரப்பிரம்மம் தான்."
ஷங்கரர்: "இங்கே அவன், அவள் என்றெல்லாம் இல்லை, இந்த தோற்றம் உண்மையல்ல, இந்த உடை உண்மையல்ல, அந்த கதவும் உண்மையல்ல இல்லையா?"
ஒளிப்பிம்பம்: "இந்தத் தருணத்தில் இதற்கு விடை கிடையாது, பொறுமையாக இரு, இது உன் விசாரணைக்காக ஏற்படுத்தப் பட்ட மாயை என்பதைத் தவிற"

"பிரச்சனையைப் பேசுவோம்" நடுவில் இருந்த ஒரு ஒளிப் பிம்பம் சொன்னது. " நீ முதல் இரண்டு கீழ் நீதி மன்றங்களில் வெகு சுலபமாக வெற்றி பெற்றுவிட்டாய், ஆனால்"..
"ஆனால்" ஏழாவதாக அமர்ந்திருந்த ஒளிப் பிம்பம் சிவப்பாக மாறி தொடர்ந்தது.." நீ மிக அடிப்படைத் தவறு ஒன்றைச் செய்துவிட்டாய் என்பது என் எண்ணம், சனாதன தர்மத்தின் மிக அடிப்படை கோட்பாட்டை நீ தகர்த்துவிட்டாய், முந்தய ரிஷிகளின் பல காலத் தவப்பலனால் ஏற்படுத்தப் பட்ட கட்டமைப்பை நீ தகர்த்துவிட்டாய் என்பது என் கருத்து".

" நான் சரியாக என் பணியைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்பார்த்தேன்" என்றார் ஆதி ஷங்கரர், "ஆனால், இது, ...என்ன தவறு செய்தேன் நான்?"

" நீ சனாதன தர்மத்தை, தத்துவ அடிப்படை தர்மத்திலிருந்து, சரித்திர அடிப்படை தர்மத்திற்கு மாற்றி விட்டாய்"

ஒரு நீண்ட அமைதி நிலவியது...

" நான் விளக்குகிறேன்" அந்த ஏழாவது ஒளிப் பிம்பம் ரத்தச் சிவப்பாக மாறி இருந்தது, "பல காலம் முன்னே இருந்த ரிஷிக்கள் சனாதன தர்மத்தை நிலை நிருத்திய போது, அவர்கள் மனித குலம் இருக்கும் வரை தர்மமும் இருக்கும் படி அதன் விதிகளை அமைத்தனர். தொடர்ச்சியே மிக முக்கியம். அதனால், தத்துவத்தை அதன் அடிப்படையில் நிருவினர். அப்பொழுது தான், காலம் மாற மக்களும் தத்துவங்களைக் காலத்திற்கேற்ப பிரயோகிப்பர். ஆகயால் தத்துவங்கள் தொடர்ந்து நிற்கும். அந்த ரிஷிகளின் பெயர்கள் உனக்குத் தெரியுமா? இல்லை, ஏனென்றால் பெயர்கள் தெரிந்தால் அவரைக் கடவுளாக்கிவிடுவர் என்பதால், அவர்கள் பெயர்களை மறைத்துவிட்டனர். எப்போது அதைத் துவக்கினார்கள் என்று தெரியுமா? இல்லை, அது தெரிந்தால், வருடா வருடம் அந்த நாளைக் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால் அதுவும் மறைக்கப் பட்டது. இதெல்லாம் அந்த ரிஷிகள் முன்னமே அறிந்ததினால் தான் அதை ஒரு ஆதியும் அந்தமும் இல்லாத சரித்திரம் என்ற சங்கிலியால் கட்டுப் படுத்த முடியாத நிலையில் தர்மத்தை விதைத்தனர். அந்தச் சங்கிலியை உன் செயல் அந்தத் தர்மத்தின் மேல் கட்டியது"

ஷங்கரர்: "போதும் நிறுத்துங்கள்... நான்.."

ஒளி: "பொறு, நீ பேசி உன் நிலையை விளக்க உனக்கு வாய்ப்பு வரும், முதலில் நாங்கள் சொல்வதை முழுமைகக் கேள்"

மற்றொரு ஒளிப் பிம்பம் தொடர்ந்தது.."முதலிலிருந்தே, மனிதனின் நடத்தைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, அவன் எவ்வளவு பக்தியாக வழிபடுகிறான் என்பதில் முக்கியத்துவம் இல்லை. "கர்மத்தின்" அடிப்படையில் சமூகம் இயங்கியது. வழிபாட்டின் அடிப்படையில் அல்ல. வழிபாடும் இறை நம்பிக்கையும் தனிப்பட்ட விஷயம், கோவில்கள், உருவங்கள், சிலைகளெல்லாம் கீழ் நிலை வழிபாட்டு முறைகளாகவே பார்க்கப் பட்டன. மக்கள் இஷ்ட தேவதைகளைப் பொருட்படுத்தாமல் எங்கு வேண்டுமானாலும் இறைவனை வணங்கலாம், வழிபாட்டின் மொழி அக்னியாக இருந்தது. உருவங்களும் சிலை வழிபாடும் பழங்குடி வழிபாட்டு முறைகளின் எச்சங்களே. அதனாலேயே, இனச் சண்டைகள் பல இந்த உருவங்கள் அடிப்படையில் நிகழ்ந்தது. எந்த இடத்திற்கோ, ஒரு யோகிக்கோ, ஒரு குறிப்பிட்ட நாளிற்கோ முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை. புனித யாத்திரை என்றால் என்னவென்றே தெரியாது. ராமர், கிருஷ்ணர் போன்ற பிறவிகளின் நற்குணங்களை தங்கள் வாழ்வில் கடைபிடிக்க மக்கள் எண்ணினர். அவர்கள் உண்மையில் இருந்தார்களா, அப்படியென்றால் எங்கே பிறந்து, வளர்ந்தனர் போன்ற சின்னச் சின்ன விஷயங்களில் மக்கள் அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. என்றாவது கவுடில்யர் புனிதயாத்திரை சென்றதாகக் கேள்விப் பட்டிருக்கிறாயா? இல்லை திருவள்ளுவர் தான் "சிவ ராத்திரி" கொண்டாடியதாகச் சொல்லக் கேட்டிருக்கிறாயா?"

"அடிப்படையில்"...தொடர்ந்தது ஆறாவதாக அமர்ந்திருந்த ஒளிப்பந்து, "சரித்திரம் என்பது மக்களின் அன்றாட வாழ்வில் சிறிதும் முக்கியமில்லாத சமாச்சாரமாக இருந்தது, மக்கள் முன்னோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர், பின்னோக்கி அல்ல. ஆனால், நீ எல்லாவற்றையும் மாற்றிவிட்டாய்.. உன் செயலினால் தொடர்ந்து கொண்டிருக்கும் பின் விளைவுகளை உனக்கு காட்டியாகவேண்டும். அதோ அந்த கரும்புள்ளியைத் திரையில் பார்"

"அது என் செயலின் பின்விளைவாகத் தான் இருக்கவேண்டும்.."

"சரியாகச் சொன்னாய், அது ராமானுஜாச்சார்யார்...அவர் இன்னொறு சரித்திர அடிப்படை வாழ்வுமுறையை உபதேசித்துக் கொண்டிருக்கிறார்"

"லௌகீக உலகம் மாறிக் கொண்டே இருக்கும்" என்று நான்காவது ஒளிப் பந்து பேச ஆரம்பித்தது.." நதிகள் தோன்றி மறையும், மலைகள் எழுந்து கரையும். காடுகள் அழிந்து பாலை நிலங்களாகும், பாலை நிலம் செழிப்படைந்து காடுகளாகும். ஆகயால், முக்கிய இடம், குறிப்பிட்ட காலம், ஒரு தனி மனிதன் என்பதெல்லாம் இயற்கைக்கு ஒவ்வாத விஷயங்கள். இயற்கையின் கோட்பாடுகளை தகற்காத சிந்தனைகள் மட்டுமே நிரந்தரமானவை. சனாதன தர்மத்தினை விதைத்த ரிஷிக்கள் இதை இறந்த உடலை புதைக்காமல் தீயிட்டு நிறுபித்தனர். உலகில் உள்ள பல கலாச்சாரங்கள் இறந்தவர் உடலைப் புதைப்பதும் அதில் தங்கம் வெள்ளி என்று லௌகீக உலகின் செல்வங்களைச் சேர்த்து புதைப்பது என்பதைக் கொண்டுள்ளனர். சமாதியே ஒரு சிறப்புமிக்க இடமாகக் கொண்டாடப் படுகிறது. புனித யாத்திரை செல்லும் இடமாகவும் மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட வாழிபாட்டு முறை ஒரு வாழ்வியல் முறையா...? இல்லை, இது சாவு-இயல்-முறை!. மனித உடலைப் புதைத்து வழிபடும் முறையே, சரித்திர அடிப்படை கொண்டது. இதே, அந்திமக் கிரியையாக உடலை தீயிலிடுவதன் மூலம் அந்த மனிதனின் லௌகீக வாழ்க்கை அழிக்கப் படுகின்றது. அவன் உடுத்திய உடைகள் தூரக் கடாசப் படுகின்றன. எகிப்திய அரசர்களின் தனிப்பட்ட விஷய்ங்களை பிரமீடுகள் கட்டிப் பாதுகாத்தது போல், ராமரின் உடைகளையோ, கிருஷ்ணரின் செறுப்பையோ இந்திய மக்கள் பாதுகாத்து கண்காட்சிப் பொருளாக, வணங்கும் பொருளாக மாற்றவில்லை. ராமர் எந்த இடத்தில் உயிர் துரந்தார்? கிருஷ்ணர் உடல் எங்கே தகனம் செய்யப் பட்டது? தெரியாது, தேவையில்லை.! அவர்களின் நல்ல கருத்துக்களை மக்கள் பின்பற்றுவதே முக்கியமாகக் கருதினர்...ஆனால் நீ! வந்து இதையெல்லாம் கெடுத்து விட்டாய்!"

"பின்னோக்கிச் செல்!" அந்த வெண் திரையை நோக்கி நான்காவது ஒளிப் பந்து கட்டளையிட்டது.
வெண் திரையில் காட்சி விரிந்தது....அடர்ந்த காட்டின் நடுவில் ஒரு நதி, நதிக்கரையில் ஷங்கரர் நடந்து சென்று கொண்டிருக்கிறார்... அங்கே ஓரிடத்தில் ஒரு ராஜ நாகம் படமெடுத்துக் கொண்டிருந்தது...ஆனால் என்ன அதிசயம், அதன் தலைக்குக் கீழே ஒரு தவளையை கொடூர வெயிலிலிருந்து அது பாதுகாத்துக் கொண்டிருந்தது...! இதைப் பார்த்த ஷங்கரர், இங்கே தெய்வீகம் நிறைந்துள்ளது என்று கூறி சாரதா மாதா கோவில் கட்ட நினைக்கிறார்.
"நில்" வெண்திரையில் காட்சி அப்படியே "Freeze" ஆகி நிற்கிறதி..."இது தான் உனது முதல் அடி, சரித்திர அடிப்படை வாழ்க்கை முறைக்கு, ஒரு நாள், அந்த ஒரு நொடியில் ஒரு நாகம் தானே உண்ணக்கூடிய தவளையை வெய்யிலிலிருந்து பாதுகாத்தது என்றால் அந்த இடம் ஒன்றும் என்றுமே இறைவனின் அருள் பெற்ற இடமல்ல" அந்த ஒளிப் பந்து சொன்னது. "மேலே செல்"

வெண் திரையில் வேறொரு காட்சி... "ஒரு நதியின் அடிப்பகுதியில் ஆதி ஷங்கரர் நீந்தி வந்து அங்கே கிடந்த ஒரு சிவ லிங்கத்தை எடுத்து கரைக்கு கொண்டு வருகின்றார். அதை ஷங்கரர் அங்கே கூடியிருந்த மக்களிடம் காட்டி "இந்த சிவ லிங்கம் புத்த மதத்தவர்களால் பல நூற்றாண்டுகள் முன்னர் நதியில் வீசப் பட்டது. இப்போது நமக்கு அது கிடைத்துள்ளது இந்த மூர்த்தியை இங்கே இந்த புனிதஸ்தலத்தில் வைத்து பூஜிக்கவேண்டும் இங்கே தான் சிவன் நெடுந்தவம் புரிந்துள்ளார்" என்கிறார்.

" நில்" மறுபடியும் வெண் திரைக்காட்சி Freeze ஆகிறது..."என்ன செய்தாய் பார்த்தாயா...? யாருக்குமே தெரியாத ஒரு புது விஷயம் அங்கே சிவன் நெடுந்தவம் புரிந்தது என்பது, அதை வைத்துக் கொண்டு அந்த இடத்தில் ஒரு புனிதஸ்தலம் கட்டிவிட்டாய். மறுபடியும் ஒரு சரித்திர அடிப்படையில் புனிதஸ்தலம். இது வெரும் ஆரம்பமே...இதே போல் கிருஷ்ணர், ராமர் என்று உன் கொள்கையினால் இதையெல்லாம் வழிப்பாட்டுத் தெய்வங்களாக்கிவிட்டாய். அதற்குக் கோவில்கள் திரும்பும் திக்கெல்லாம். பாட்டெழுதுகிரேன் பேர்வழி என்று அயோத்தி, மிதிலா, துவாரகா என்று சரித்திர அடிப்படையில் புனிதஸ்தலங்களைக் கோடிட்டு காட்டிவிட்டாய். இஷ்டதேவதையிடம் சரணாகதி ஆவது மோக்ஷத்திற்கான வழி என்று புதிய கோட்பாட்டை ஆரம்பித்துவிட்டாய், மனிதனைத் தவிர கடவுள் என்று தனிப்பட்டு திகழும் சக்திவுள்ளது, அதை வழிபடவேண்டும், போற்றவேண்டும், அதன் முன் வணங்கவேண்டும் என்பதே இயற்கைக்கு முரனான பழங்குடித் தத்துவம்"

"ஆனால் நான் அத்வைதம் என்ற தத்துவத்தையும் சொல்லியுள்ளேன்" மிக அமைதியாக ஷங்கரர் சொன்னார்.

ஒரு சிறிய அமைதி நிலவியது...

"ஆம், அதனால் தான் இந்த நிலைவரை உன்னால் வர முடிந்தது, உன் நல்ல செயல்கள் நீ ஆரம்பித்து வைத்த இந்த கெட்ட செயல்களை எவ்வாறு ஈடு செய்கிறது என்பதைப் பார்க்கத்தான் இவ்வளவு விவாதம், உனக்கு உன் கருத்தைச் சொல்ல வாய்ப்பு கிடைக்கும் இன்னும் இருக்கிறது கேள்"
வெண்திரையில் காட்சி வேகமாக நகர்ந்தது....ராமானுஜர் தோன்றி மறைந்து சில நூற்றாண்டுகள் நகர்ந்தது...புத்த மதம் அழிந்து கொண்டிருந்தது...பக்தி மார்க்கம் மென் மேலும் வளர்ந்து கொண்டிருந்தது... "மெதுவாகச் செல்" என்றது ஏழாவது ஒளிப்பந்து.

"இவர்கள் யார்? சப்த ரிஷிகளா?" என்று வியந்து கொண்டிருந்தார் ஷங்கரர்.

திரையில் காட்சி தோன்றியது...ஒரு கோவில், அதில் பக்தர்கள் ஆண்கள் பெண்கள் என்று பஜனை பாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று சில படைவீரர்கள் உள்ளே நுளைந்து அவர்கள் கடவுள் பெயரைக் கத்திக் கொண்டே ஆண்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தனர்...கர்பக் க்ருஹத்தில் ஒளிந்து கொண்டிருந்த பெண்களை அங்கேயே உடைகளைக் களைந்து வண்புணர்ச்சி செய்தனர்... ஒருவர்கூட எதிர்த்துப் போராடவில்லை...."ராமா" கிருஷ்ணா" என்று கத்திக் கொண்டு இருந்தனர்...அதே படை வீரர்கள் அந்த கடவுள் சிலைகளை உடைத்து நொறுக்கினர். தங்கம் வெள்ளி நகைகளை எடுத்துச் சென்றனர்...

"இது வெறும் ஆரம்பமே! பார் எப்படி அவர்கள் எதிர்த்துப் போராடவேண்டிய கடமையிலிருந்து தவறுகிறார்கள் என்று. சரித்திர மஹா புருஷர்களை துணைக்கு அழைத்து என்ன நடக்கப் போகிறது. எல்லாம் நீ அரம்பித்து வைத்த செயலினால் தான். இது வேத தத்துவத்தைக் கடைபிடிக்கும் ஒரு சமூகத்திற்கு நடந்திருக்கவே நடந்திருக்காது. பார்க்கலாம் எவ்வளவு காலம் இப்படிப் போகுமென்று. சரித்திர அடிப்படை கொண்ட மக்கள் சமூகம் தங்கள் சரித்திரம் தான் உயர்ந்தது, என்று அடுத்தவர்களிடம் நிறூபிப்பதே பெரும் செயலாகக் கருதிக் கொண்டு இருப்பர்...அதுவே சரித்திர அடிப்படை சமூகத்தின் இயற்கை."

திரையில் காட்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன...காலம் ஓடிக்கொண்டிருந்தது...திடீரென்று ஏழாவது ஒளிப்பிம்பம் எதையோ பார்த்துவிட்டு "மெதுவாகச் செல்" என கட்டளையிட்டது.

1670 AD என்ற காலத்தில் திரையில் காட்டியது..தக்கான பீடபூமியின் நடுவில் ஒரு கிராமத்தில் ஒரு யோகி தன் கடைசி சொற்பொழிவை ஆற்றிவிட்டு. பிரணவ மனிதிரத்தை ஜபிக்கிறார். அவர் கைகளில் அசையும் ஜப மாலை நின்றவுடன் சுற்றி சுவர்கள் கட்டப் பட்டு ஒரு கோவில் எழுப்பப் படுகின்றது. பக்தர்கள் வெள்ளமாகப் பெருகி அங்கே வர ஆரம்பிக்கின்றனர்.


"என்ன நடந்தது பார்த்தாயா? சரித்திர புருஷர்களுக்கு, அவர்கள் பிறந்த இடம் போன்றவற்றிற்கு பக்தி என்பது அவர் இறந்தது அந்த இடத்தில் புனித ஸ்தலம் அமைத்து பிறப்பிடத்தை வழிபடுவது போல் இறப்பிடத்தை வழிபடுகின்றனர். என்ன தான் அத்வைதம் என்பதை நீ விளக்கியிருந்தாலும் மனிதன்-கடவுள் என்ற துவைத கொள்கையை நீ அன்றாட வாழ்வில் ஊக்குவித்ததனால் அரை குரை துவைதமாம ராமானுஜர் கொள்கையும், பின்னர் வந்த மத்வ மதக் கொள்கையின் முழுமுதல் துவைதமும் சமூகத்தில் வந்தடைந்து விட்டது. இதற்குப் பிறகு பக்தி மட்டுமே, எல்லா தத்துவ அடிப்படை எண்ணங்களும் நின்று விடுகின்றது. இஷ்ட தேவதையிடம் சரணாகதி, கோவில், பூஜை. ஒரு நாளுக்கு எவ்வளவு முறை, என்று, எப்படி பூஜிப்பது போன்ற அபத்தங்கள் மட்டுமே உள்ளன. வேதங்கள் கிடைக்கப் பெற்ற நாள் முதல் பல தத்துவங்கள் தோன்றி மறைந்துள்ளன. முதலில் சாங்கியரினுடய தத்துவம், அடுத்து, மைமாம்ஸ, மைத்ராயணி, மத்யமாதின, கௌதும்ன, அன்வ, சௌனக, பைப்பால்த, ஜைமின்ய, என்று பல..சில தத்துவங்கள் காலத்தால் அழிந்தன, சில நிலைத்து நின்றன. தொடர்ச்சியாக மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபாவமே தேடலின் முதல் படி. அது என்றுமே இருந்தது. ஒரு சில தத்துவங்கள் அழிந்த போதும் அடுத்துவந்தவை மக்கள் சாஸ்திர சம்பிரதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டால் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை இழந்துவிடுவர். அது நடந்தே விட்டது, உன்னால்"

"என்னால் தான் எல்லாமே நடந்தது என்று சொல்வதை தயவு செய்து நிறுத்தவும், என் நிலை விளக்கம் இன்னும் நான் கொடுக்கவில்லை" என்றார் ஆதி ஷங்கரர்.

ஒளி: "சரி, அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்."

"அடுத்த பின் விளைவுகளைப் பார்ப்போம்..." திரையில் காட்சிகள் தோன்றின. வெள்ளையர்கள் வந்து சென்றனர். மோஹன் தாஸ் காந்தி கொல்லப் பட்டிருந்தார். அவரது அந்திம கிரியை நடந்த இடத்தை அலங்கரித்து ஒரு பெரும் நினைவுச் சின்னம் எழுப்பப் படுகிறது. அவர் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்கின்றனர்.

"அவரது கொள்கைக்கு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்" என்றது ஒரு ஒளிப் பந்து.
திரையில் இந்திய நகரங்களில் அனைத்துவித மக்களும் தாங்கள் காந்தியக் கொள்கையைக் கடைபிடிப்பவர்கள் என்று சொல்லிக் கொண்டு அதே போல் உடை அணிந்து செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருந்தனர். திருடர்கள், ஜால்ராக்கள், மொள்ள மாரிகள் காந்தி பெயரைச் சொல்லிக் கொண்டு வோட்டு வாங்கிக் கொண்டிருந்தனர். நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருந்தனர். காந்தியின் சிந்தனைகளை யாரும் கடைபிடிப்பதில்லை. அது கடைபிடிக்கமுடியாது என்பது விவாதப் பொருளல்ல என்றாலும், அடி மனதில் காந்தி பெயரைச் சொல்லி எதைச் செய்தாலும் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் தான்."

"ஒரு சாதாரண மனிதனை சரித்திர புருஷராக்கி வணங்க ஆரம்பித்தால் அவர் கடைபிடித்த சிந்தனைகள் செயலிழந்து போய். அந்த ஆளின் பெயர் மட்டுமே நிற்கும். இதுவே இயற்கையின் நியதி" சொன்னது அந்த ஏழாவது ஒளிப்பந்து.

திரையில் ஒரு வீட்டின் உட்புறத்தில் ஒரு வயோதிக ஆள் தன் மூன்று மகன்களுடன் ராமர், கிருஷ்னர், சிவா, சீதா இத்யாதி..இத்யாதி சிலைகள் கொண்ட பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். பூஜை முடிந்ததும் பிரசாதத்தை வீட்டிலுள்ள் அனைவரும் பிரித்துக் கொடுக்கிறார் அந்த வயோதிகர். அழைப்பு மணி ஒலிக்கிறது. கதவைத் திறந்தால் அங்கே, ஒரு வக்கீல்.
வரவேற்பு, குடிக்க டீ, காபி எல்லாம் முடிந்தது. வீட்டின் ஹாலில் எல்லோரும் குடும்ப சமேதமாக, பெரியவர் தன் மனைவியுடன், அவரது மகன்கள் தங்கள் மனைவி குடும்பத்துடம் அமர்ந்திருக்கின்றனர்.

வக்கீல்: "நீங்கள் கேட்டது போல் papers ready செய்துவிட்டேன்."

வயதான பெரியவர்: " நன்றி வக்கீல் சார், ரொம்பவே வேகமாகச் செய்துவிட்டீர்கள். என் உடல் நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆகயால் என் சொத்துக்களை என் குடும்பத்தாருக்குப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்துவிட்டேன். இதுவே எனது உயில்.. வீடு பெரிய பையனுக்கு, நில புலன்கள் இரண்டாவது பையனுக்கு, Factory கடைசி மகனுக்கு."
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வீட்டில் ஒரே கூச்சல் குழப்பம்...."Factory எனக்குத்தான் வேண்டும்..." "என் அப்பா ஒன்றும் இந்த வீட்டிற்காக உங்களை எனக்கு கட்டி வைக்கவில்லை... மரியாதையாக நில புலன்களை எடுத்துக் கொள்ள கேளுங்கள்..." மனைவிகளின் குரல்கள் மகன்களின் திருப்தியின்மை.... நடுவில் பவமாய் அந்தப் பெரியவர்.

" நில்" ஒளிப் பந்து சொல்ல திரையில் காட்சி Freeze...! "பார்! பூஜையில் என்றுமே தனக்கு நேரும் கஷ்டத்தை எண்ணி வருந்தாத தன் கணவரிடம் நச்சரிக்காத பெண்ணை பூஜித்தனர். முற்றும் துரந்த மஹா புருஷரைப் பூஜித்தனர். இருந்தும், அவர்கள் வாழ்ந்து காட்டிய தத்துவத்தை மறந்துவிட்டு கூடப் பிறந்தவர்களுடனேயே தெரு நாய்கள் போல் சண்டை போட்டுக் கொள்கின்றனர். பார், சரித்திர அடிப்படை சமூகம் மனிதனி மனத்தை எப்படி மாற்றுகிறது என்று...பார், கடவுள்-மனிதன் என்று பாகுபாடு பிரித்தால் அது செய்யும் லீலையை...!"

காட்சி ஒரு நீர் மூள்கிக் கப்பலுக்குள் "பார், துவாரகா வைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர்..." அடுத்த காட்சியில் ஒரு விண்வெளிக் கோளில் படங்கள் பதிவாகிக் கொண்டிருந்தது..."பார், ராமர் கட்டிய பாலத்தை படம் பிடித்துக் கொண்டும், மறைந்த சரஸ்வதி நதியை படம் பிடித்துக் கொண்டும் இருக்கின்றனர்.. இதெல்லாம் எதற்காக, எதற்காக பல்லாயிரமாண்டு முன் நடந்த சம்பவங்களுக்கு சான்றுகள் தேடுகின்றனர் ? நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சனாதன தர்மம் ஒரு கோவில் கட்டுவதை வைத்துக் கொண்டு இப்படி அடித்துக் கொண்டு சீரழிகிறது...எல்லாம் எதனால்...?"

"இது போதுமா? இன்னும் வேண்டுமா?"


ஆதி ஷங்கரர், நிமிர்ந்தார்...." நீங்கள் முடித்துவிட்டீர்களா?" ..." நான் விளக்கலாமா?"

(தொடரும்...)

பின் குறிப்பு: இது ஒரு மொழி பெயர்ப்பு முயற்சி. இரண்டு பாகமாக பிரித்து எழுதுகிறேன். ஆங்கில மூலத்தின் சுட்டி இரண்டாவது/இறுதி பாகத்தில்.

October 20, 2006

மடைதிறந்து பாயும் நதி...தமிழ் Rap

மடைதிறந்து பாயும் நதி...தமிழ் Rap


தமிழில் ராப் பாடல்...

ஓவராக அமேரிக்க ghetto கருப்பின மக்களின் பாடல் போல் ஒரு தோற்றமளிக்கிறது.

லிரிக்ஸும் கொஞ்சம் Strong தான்...என்றாலும் போற்றத்தகு முயற்ச்சி. அச்சு அசல் காப்பி அடிக்கவேண்டுமா என்று எண்ணத்தோன்றுகிறது...

October 15, 2006

இணைய ரேடியோவில் புதிய முயற்சி

www.pandora.com என்ற இணைய தளத்தில், Music genome Project என்று ஒரு புதிய முயற்சி செய்துவருகின்றனர். ஆங்கில பாடல்கள் மட்டுமே என்றாலும், இதில் இசையை வகைப்படுத்தி சேமித்துவைத்திருக்கிறார்கள். எப்படிப் பட்ட பாடல்கள், எத்தகைய இசை கருவிகள் உபயோகப் படுத்தப் பட்டிருக்கின்றன, Vocal tonation, Jazz, Rock, R&B என்று.

உங்களுக்குப் பிடித்த Artist பெயர் அல்லது Album பெயர் கொடுத்தால் அதிலிருந்து பாடல்கள் கேட்கலாம். பாடல் ஓடிக்கொண்டிருக்கையில் அந்த பாடல் உங்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்று வாக்கு போட்டீர்கள் என்றால் அடுத்த பாடல் அதற்கேற்ப கொடுக்கும்.

உதாரணமாக Smashing Pumpkins என்ற Artist கொடுத்து கேட்டால், அந்த இசை கலைஞர்களின் தனித்தன்மை என்னவோ அதே போல் தனித்தன்மைகள் உள்ள மற்ற இசை கலைஞர்களை நாம் கண்டுகொள்ளலாம்.

Smashing pumpkins களுக்கு, முக்கிய அம்சங்கள், மூல ஆண் Vocalist, Hard rock இசையின் மூலம், Tonal variation என்று சொல்லக் கூடிய பாடும் விதம் என்று அதை வகைப் படுத்தியிருக்கிறார்கள். அதே போல் வகைப் படுத்தப் பட்ட மற்ற பாடல்களை அது இசைக்கும். அதே விதமாக, Perl Jam, Pixies, Nirvana போன்ற இசை குழுக்களின் பாடல்கள் நீங்கள் கேட்கலாம்.


இதன் மூலம் உங்கள் விருப்பப் பாடல்கள் கேட்பது மட்டுமில்லாமல் அதே போல் உள்ள மற்ற இசைக்குழுக்களின் பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம். க்ரெடிட் கார்ட் இருந்தால் பாடல்களை விலைக்கு வாங்கலாம். புதிய Artist களைத் தெரிந்துகொள்வது இதன் முக்கிய அம்சம்.எல்லாம் காப்பிரைட் சமாச்சாரம் என்பதால் திருட்டுத்தனமாக டவுண்லோட் எல்லாம் செய்ய முடியாது.

இது போல் தமிழ் பாடல்களை வகைப்படுத்தி இணையத்தில் வைத்து விருப்பங்கள் ஏற்றவாரு கொடுக்க முடியவேண்டும்.

October 6, 2006

அலெக்ஸாண்டர்

சென்ற வாரம் திண்ணையில் திரு சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) எழுதிய கட்டுரை உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள்-2 மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) வெளிவந்திருந்தது.

அதில் அவர்

"ஆசிய அதிபதி" [Lord of Asia] என்று தன்னைப் பீற்றிக் கொண்டு, அலெக்ஸாண்டர் காடு, மலை, பாலைவனம் கடந்து, கடும் மழை, வெப்பம் தாங்கிக் கொண்டு ஆ·ப்கானிஸ்தானில் உள்ள ஹிந்துகுஷ் மலைத் தொடர்களைத் தாண்டி, எதைப் பற்றியும் அறியாத பிரதேசங்களில் துணிவாகப் படைகளுடன் கால்வைத்தார். ஐந்து நதிகள் பாயும் சிந்து சமவெளிப் பரப்பில் அலெக்ஸாண்டர் நுழைந்து இந்திய மன்னன் புருஷோத்தமனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.Porus (புருஷோத்தமன்) ஐ வெற்றி கொண்டதாக எழுதியிருந்தார்.

பள்ளிப் பாடங்களில் தோற்ற புருவிடம் அலெக்ஸாண்டர் "உன்னை எப்படி நடத்த நீ விரும்புகின்றாய்" என்று கேட்பதாகவும், அதற்கு புரு "ஒரு அரசனை நடத்துவது போல் நடத்து" என்று ஹீரோ மாதிரி பதில் சொல்வதும் நிகழ்ந்ததாக படித்திருக்கிறோம். ஆனால், E. A. Wallis Badge என்பவர் ''Life and Exploits of Alexander the Great'' என்ற தனது புத்தகத்தில், அலெக்ஸாண்டர் புருவிடம் தோற்றதாகவே குறிப்பிடுகிறார்.


In the battle of Jhelum a large majority of Alexander's cavalry was killed. Alexander realized that if he were to continue fighting he would be completely ruined. He requested Porus to stop fighting. Porus was true to Indian traditions and did not kill the surrendered enemy.


மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர் தோற்றார் என்றால் அவரை மாவீரன் என்று சொல்ல முடியாது என்பதால் அவர் தோற்றதை மறைத்து வெற்றி பெற்றார் என்று கூறுகின்றனர். ஆனால் சரித்திரம் மாறிவிடாது. அலெக்ஸாண்டர் புருஷோத்தமனுடன் சமரசம் செய்துகொண்டதற்கான சரித்திர சான்றுகள் உள்ளன, வென்ற அலெக்ஸாண்டர் ஏன் புருஷோத்தமனுடன் சமரசம் செய்து கொள்ளவேண்டும்..?


அலெக்ஸாண்டர் சட்லஜ் (hyphsis) நதிக்கரையின் வழியாக தன் படைகளைத் திரட்டிக்கொண்டு கடலை அடைந்து பாபிலோனியா திரும்பியது தெரிந்ததே. அப்போது எதிர்கொண்ட "மல்லிஸ்" படைகளுடன் புருவின் படைகள் அலெக்ஸாண்டருடன் சேர்ந்து போரிட்டதாக சரித்திரம் கூறவில்லை. புரு தோற்றிருந்தால் அவன் படைகள் அலெக்ஸாண்டரை ஆதரித்து "மல்லிஸ்" படைகளுக்கு எதிராக போரிட்டிருக்கும்!


ப்ளூடார்க் (plutarch) அலெக்ஸாண்டர் புருவுக்கு தங்கங்கள் பல கொடுத்ததாகவும் சொல்கிறார். வென்ற அரசன் தோற்ற அரசனுக்கு தங்கம், வெள்ளி கொடுக்கும் முறை எந்த காலத்தில் இருந்தது?


சில ஆண்டுகளுக்கு முன் வந்த அலெக்ஸாண்டர் திரைப்படத்தை திரு ஜெயபாரதன் பார்த்தாரா என்று தெரியவில்லை. ஆலிவர் ஸ்டோன் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து பின் தன் படத்தை இயக்கியிருக்கிறார். அதில் தெளிவாக அலெக்ஸாண்டர் புருவிடம் தோற்றது காட்டப் படுகின்றது.


இந்த "ராஜாவை நடத்தும் முறையில் நடத்து" என்று தோற்ற புரு டயலாக் அடிப்பதாக படிக்கும் நான்சென்ஸையெல்லாம் எவ்வளவு நாள் தான் நாம் படித்துக் கொண்டிருப்பது?


புருஷோத்தமன், இந்திய மண்ணின் மைந்தன், அலெக்ஸாண்டரை தோற்கடித்தான். இந்தியரான நாம் அதை நினைத்து பெருமை கொள்ளவேண்டும்.

இது தொடர்பாக திண்ணையில் என் கடிதம்.

இந்த யூ டியூப் சுட்டியில் இருக்கும் வீடியோவில் அலெக்ஸாண்டர் தோற்கடிக்கப் படுவது பார்க்கலாம்.