November 29, 2006

சரித்திர சமநிலைப்பாடு

உலக அளவில் மிக பிரபலமான ஆங்கில எழுத்தாளர்களில் நய்பாலும் ஒருவர். அவரது முழு பெயர் Sir வித்யாதர் சூரஜ்பிரசாத் நய்பால் T.C. 2001 ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டு கவுரவிக்கப் பட்டவர்.

ஆகஸ்ட் 17 1932ல் ட்ரினிடாட் ல் பிறந்தவர் இன்று இங்கிலாந்தில் வில்ட்ஷயர் என்ற இடத்தில் வசிக்கிறார். 1971 ல் Booker பரிசைப் பெற்ற முதல் இந்திய வம்சாவழி வந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இவரைப் பற்றி வலைப்பதியவேண்டும் என்ற எனது நீண்ட நாள் அசையைப் பூர்த்தி செய்துகொள்ளவே இந்தப் பதிவு.

இதற்கு பல காரணங்கள்.


முதலில் இவர் மார்க்ஸ்வாத சிந்தனையை எதிர்ப்பவர். ஆகவே நவயுக மார்க்ஸ்வாதிகளால் தீவிரமாக விமர்சிக்கப் படுபவர், politically correct மரமண்டைகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாத சிந்தனைகளை வைப்பவர். இரண்டு, இஸ்லாம் பற்றிய இவர் பார்வை.

பலர் தீவிரமாக அதை அன்றைய நாளில் விமர்சித்திருந்தாலும் இறுதியில் இவரது கூற்றே நின்றது. சாமுவேல் ஹண்டிங்டன் சொல்லிய Clash of the civilization ன் மூல சிந்தனை இவரது இஸ்லாம் பற்றிய இரண்டு புத்தகங்களில் பரவலாகப் பார்க்கலாம்.

1. Among the believers: An Islamic Journey
2. Beyond Belief: Islamic excursion among the converted people

இந்த இரண்டு புத்தகத்திலும் அவர் கூறும் முக்கிய விஷயம்.


Islam is an Arab religion. Everyone who is not an Arab is a convert. Islam is a demanding religion. A convert to Islam changes his view of the world. His holy places are in another country, his sacred language is Arabic. He rejects his own history and turns away from his own historical background. In a profound way the converted Muslims are a colonised people.
..
இஸ்லாம் ஒரு அரபியர் மதம். அரபியர் அல்லாத இஸ்லாமியர் அனைவரும் மதம் மாற்றப் பட்டவர்கள். இஸ்லாம் அதனைப் பின்பற்றுபவர்களிடம் பல கட்டுப்பாடுகளை முன்வைக்கும் மதம். மதம் மாற்றப் பட்டவன் தன் பார்வையை மாற்றிக் கொள்கிறான். அவனது புனிதஸ்தலங்கள் வேறு நாட்டிற்கு மாறிவிடுகின்றன. அவனது புனித மொழி அரபியாக மாறிவிடுகிறது. அவன் தனது வரலாற்றை நிராகரித்துவிடுகிறான். ஒரு விதத்தில் மதம் மாற்றப்பட்ட இஸ்லாமியருக்கும் ஒரு அன்னிய ஏகாதிபத்தியத்தின் கீழ் வாழும் மக்களுக்கும் வித்தியாசமில்லை.


பாபர் "மசூதி" இடிப்பு பற்றி அவர் முன் வைக்கும் பார்வை வித்தியாசமானது.

அவுட்லுக் இந்தியாவில் முன்பு வந்த இந்த சிறிய உரையாடலின் தொகுப்பில் குஷ்வந்த் சிங் பாபர் "மசூதி" இடிப்பு பற்றி அவரிடம் கேட்டதற்கு நய்பால் அளித்த பதில்,


I would call it an act of historical balancing. The mosque built by Babar in Ayodhya was meant as an act of contempt. Babar was no lover of India. I think it is universally accepted that Babar despised India, the Indian people and their faith.

இதை ஒரு சரித்திர சமநிலைப்பாட்டினை நோக்கிச் செல்லும் முதல் படி என்று தான் சொல்வேன். பாபர் அயோத்தியாவில் கட்டிய "மசூதி" ஒரு அவமதிப்பின் சின்னம். பாபர் ஒன்றும் இந்தியாவை விரும்பியவரல்ல. பாபர் இந்தியாவைப் பற்றியும் இந்திய மக்கள் மற்றும் இந்திய மதங்களைப் பற்றியும் ஒரு இகழ்ச்சியான சிந்தனையைத்தான் வைத்திருந்தார் என்பது இன்று உலகில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்பதே என் கருத்து.


இப்படியெல்லாம் பேசியதாலேயோ என்னவோ BJPயின் poster boy ஆகிவிட்டார் நய்பால். இதை சல்மான் ருஷ்டி எதிர்த்தார். ஆனால் ருஷ்டி satanic verses எழுதியதால் அவருக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடமிருந்தும் அடி. ருஷ்டி எவ்வளவு தான் இஸ்லாமை எதிர்த்தாலும் அவர் முஸ்லீம் என்பதில் அலாதி பெருமை கொண்டுள்ளவர் அவர்.

ப.ஜ.க அரசியல் கொளகையை மீறி இன்று நாம் நய்பாலைப் பார்க்கவிரும்புவதில்லை என்ற நிலைக்குப் போய்விட்டோம். இதற்கு முக்கிய காரணம் லிபரல் சிந்தனை என்று சொல்லிக்கொண்டு பத்திரிக்கைகளில் எழுதும் நவ யுக மார்க்ஸ்வாதிகள். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு கூஜா தூக்கும் இவர்கள் சல்மான் ருஷ்டியின் நிலை பற்றி மிக மிக அடக்கி வாசிப்பது திம்மித்தனத்தின் உச்சகட்டம் என்பதைத் தவிர வேறு சொல்வதற்கில்லை.

பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளில்கூட (இன்னும் உயிருடன் இருக்கும்) சிந்திக்கக் கூடிய மக்கள் சிலர் சல்மான் ருஷ்டியை ஏற்கின்றனர்.

ஒரு காலத்தில் An Area of Darkness என்று புத்தகம் எழுதி அதில் இந்தியாவை "உலகின் மிகப்பெரிய சேரி" என்று "வர்ணித்தவர்" தான் நய்பால்.

நெற்றியில் பொட்டு வைத்த பெண்ணைப் பற்றி, "அந்தப் பொட்டின் பொருள், என் தலையில் மூளைக்குப் பதில் களிமண் தான் என்பதே" என்றெல்லாம் கமெண்ட் அடித்தவர் இந்த நய்பால்.

இந்திரா காந்தியைப் போற்றியும் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.

இஸ்லாமை விமர்சித்ததற்காக அவரை "ஹிந்து அடிப்படைவாதி", சாதி வெறியன், தீண்டாமை பார்க்கும் மேல்சாதி இந்து என்றெல்லம் பட்டங்கள் கொடுக்கும் இந்திய லிபரலிஸ்டுகள் முன்னிலையில், இஸ்லாமை விமர்சித்ததற்காகவே ப.ஜ.க அவரை ஏற்றுக் கொண்டுள்ளது என்பது வேடிக்கையாகத் தெரிகின்றது.

அவர் இந்துக்கள், இந்தியர்கள் பற்றி வைத்த விமர்சனங்கள் ப.ஜ.க, சங் அமைப்புகள் இன்றும் பல கோணங்களில் எதிர்க்கும் விமர்சங்களே என்றாலும், இவர்கள் மாறி வருகின்றனர் என்பதற்கு நய்பாலை ஏற்பதிலிருந்தே தெரிகின்றது. அதே வேளையில் இன்று இந்தியாவில் எதையும் ஏற்க மனமில்லாமல் சோசியலிசமே குறி என்று இயங்கும் சிந்தனையாளர்களிடையே நிலவும் சிந்தனையை "லிபரல்" என்று சொல்வது உண்மையான லிபரல் சிந்தனைக்கு கேடு என்பதே என் கருத்து.

November 23, 2006

இலங்கைத் தமிழர் மற்றும் பாலஸ்தீன்

இலங்கைத் தமிழர் பிரச்சனையை பல வலைப்பதிவாளர்கள் தங்கள் பதிவுகளில் பதிகின்றனர். இதில் ஒரு Trend என்னவென்றால், இலங்கைப் தமிழர் பிரச்சனையை பாலஸ்தீனர்களுடன் equate செய்துகொள்வது. மிகவும் ஆழமான பிரச்சனையை இது சுலபமாக சுளித்துவிடுகிறது என்பதனால் இதை என்னால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

பாலஸ்தீனர்கள் நாடிழந்து நிற்பதும், தமிழர் நாடு கேட்டு நிற்பதும், இருவேறு தளங்களில் பார்க்கப் படவேண்டிய பிரச்சனைகள் என்றே நான் கருதுகிறேன்.

பாலஸ்தீனர்களுக்கு நாடு இல்லாமல் போனதுக்கான காரணம் சரித்திரம் அறிந்த உண்மை. ஜோர்டான் எகிப்து செய்தது போன்று தமிழர்களுக்காக ஒன்றும் இந்தியா இலங்கையின் மேல் போர் தொடுத்து தமிழருக்குச் சேர வேண்டிய நாட்டை அபகரிக்கவில்லை.

இலங்கையை விட்டுச் சென்ற வெள்ளையர்கள் ஒன்றும் ஈழ நாட்டையும் இலங்கையையும் கோடு போட்டுப் பாகப் பிரிவினை செய்துவிட்டுச் செல்லவில்லை.

பாலஸ்தீன அரசைப் போல் இலங்கை விடுதலைப் புலிகள் ஒன்றும் ஸ்ரீ லங்கா என்ற நாட்டை முழுவதும் அழிக்க நினைப்பதில்லை.

இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு அமேரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் ஆதரவு திரட்டிட வேண்டும், ஐ. நா வின் மூலம் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்றால், அது இந்த நாட்டில் உள்ள Powerful jewish lobby க்களின் கவனைத்தை ஈர்த்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதில் ஆரம்பிக்கலாம்.

கொள்கைக்காக பாலஸ்தீனர்களுடன் (இஸ்லாத்துடன் என்று படிக்கலாம்) இணைந்து கொண்டால் உங்களை தீவிரவாதிகள் என்றே இங்கு சொல்லி ஒதுக்கிவைப்பார்கள்.

அதற்காக பகிரங்க இஸ்ரேலிய ஆதரவு வேண்டும் என்று சொல்லவில்லை. கொஞ்சம் ஒன்றுக்கும் பிரயோசனப்படாத பாலஸ்தீன ஆதரவை அடக்கி வாசிக்கலாம் என்று தான் சொல்ல விழைகிறேன்.

சங்கம்.ஆர்க் ல் தமிழர் பிரச்சனை ஒரு தனிப்பிரச்சனை. மதம் சார்ந்த பாலஸ்தீன, கஷ்மீர், செசன்யா போல அல்ல என்று Vijay Lazarus எழுதியுள்ளார்.

November 20, 2006

உடலுக்குள் ஒரு உலகம்

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தயாரிப்பில் இந்த சிறிய வீடியோ படம் வெளியிட்டுள்ளார்கள்.

இதில், செல்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை இசையுடன் கூடிய வீடியோவாக பதிவு செய்யப் பட்டுள்ளது. எல்லாமே graphics தான் என்றாலும் எவ்வளவுக்கெவ்வளவு அறிவியல் அறிவு வளர்ந்துள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு நுணுக்கங்களைப் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் தொடுப்பு

படத்தில் ஒரு ரத்தக் குழாயினுள் ஆரம்பித்து செல்லுக்குள் எப்படி புரதங்கள் தயாரிக்கப் படுகின்றன, எப்படி செல்கள் தங்கள் வடிவத்தைப் பாதுக்காக்கத் தயாரிக்கும் cytoskeleton கள் உருவாகின்றன. என்று ஏகத்துக்கு நுணுக்கமான விஷயங்களை அழகாகப் வடிவமைத்திருக்கின்றனர்.

படத்திலிருந்து Screen shots கள்.

Protein synthesis (ரைபோசோம்கள், புரதத்தை தயாரித்துக் கொண்டிருக்கின்றன)செல்லுக்குள் ஒரு பார்வை..சைடோஸ்கெலிடன்கள்ஒரு ரத்தக் குழாயினுள்...


Golgi complex

November 15, 2006

Lock stock and .....

கய் ரிட்சீ என்ற ஆங்கில (உண்மையான பச்சை ஆங்கில UK திரைப்பட இயக்குனர்/எழுத்தாளர்!) இயக்கிய படங்களில் ஒன்று இந்த Lock Stock and two smoking barrels என்ற 1998 ல் வெளி வந்த இந்த திரைப்படம். வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

கதை இது தான்,

Eddy சீட்டாட்டத்தில் வெல்லும் "லக்" உடையவன். ஒரு நாள் அவனும் அவனது நண்பர்கள் மூன்று பேரும் சட்டவிரோதமாக அதிக பணம் வைத்து ஆடும் சீட்டாட்டத்தை ஒரு லோக்கல் குண்டனான Hatcher உடன் ஆடப் போய். 500,000 பவுண்டுகளை செலுத்தவேண்டும் இல்லையெனில் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு விரலைத் துண்டாக்குவேன் என்ற நிலையில் வீடு திரும்புகின்றனர்.

இந்தப் பணத்தை திரட்டுவதற்கு plan போட்டு, பக்கத்து வீட்டுக்காரனின் வெண்டிலேட்டரில் மைக் வைத்து ஒட்டு கேட்டு, அவன் அடித்த கொள்ளையை டபுள் கிராஸ் செய்து எடுக்கின்றனர். இதற்கெல்லாம் மூல காரணமாக இரண்டு பழமைவாய்ந்த துப்பாக்கிகளை தேடிக் கொண்டிருக்கும் வில்லன் Hatcher அனுப்பிய ஆட்கள் அந்தத் துப்பாக்கியை குறைந்த விலையில் இந்த நான்கு நண்பர்களுக்கே விற்றிருக்கின்றனர்.

எக்கச் செக்க குழப்பத்திற்கு நடுவில் கதையை எப்படி நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் Guy ritchie என்பது தான் ஹைலைட்.

அவரது மற்றொரு படமான Snatch ம் இதே போல் அறுமையான Action comedy படமே.

ஒரு வைரக்கல்லைக் கொள்ளையடித்தவன் கையிலிருந்து அந்த வைரக்கல் எத்தனை பேர் கைமாறுகிறது அதில் வரும் character களின் கதை, எப்படி அவர்கள் மூலக் கதையில் criss cross ஆகின்றனர் என்று lock stock போலவே மாறி மாறி அமைந்த காட்சிகளுக்கு இடையில் நகைச்சுவையுடன் கதை சொல்லப் பட்டிருக்கும்.

எல்லாமே, லண்டனின் நடப்பதால் Cockney ஆங்கிலத்தில் தான் எல்லோரும் பேசுவார்கள். பழக்கமில்லை என்றால் சுத்தமாகப் புரியாது. Sub titles உடன் பார்ப்பது நலம்.

November 9, 2006

ஏசுவும், கிறுத்தவர்களும் ஆரியர்களா ?


சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய்,

நேரிய எதிர் ஒப்பு இன்றி நீத்த ஓர் கடவுள் தூய,

வேரிய கமல பாதம் வினை அறப் பணிந்து போற்றி,

ஆரிய வளன்தன் காதை அறம் முதல் விளங்கச் சொல்வாம்


திரு.ஜடாயு அவர்களின் பதிவில் பெஸ்கி பாதிரியார் ஏசுகிறிஸ்துவை ஆரியன் என்று பாடுவதாக ஒரு அனானி பின்னூட்டியிருந்தார்.

இரண்டாம் உலகப் போர் முன்பு இந்த ஆரிய இனக் கொள்கை மிகவும் பிரபலம். ஹிட்லரின் இந்த ஆரிய இனவாதம் வாடிகனின் ஆசியுடனேயே கடைபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மேற்கத்திய வெள்ளையர்களுக்கு கிறித்துவை, தாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாய் புழுவாய் நடத்திவரும் யூத இனத்தில் பிறந்தவராகக் காட்டிக் கொள்ள அருவருப்பாக இருந்தது. குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் ஏசு யூதர் அல்லர், ஆரியர் என்ற "உயர்ந்த இனத்தைச்" சேர்ந்தவர் என்ற புது வரலாறு இதற்காகவே கண்டுபிடிக்கப்பட்டுப் பரப்புரை செய்யப்பட்டது.

ஆரிய என்ற வேர்ச்சொல்லில் இருந்து (கிரேக்க aristos) அரிஸ்டோ, அரிஸ்டோக்ரேட் என்று பல சொற்கள் அதே பொருள்பட ஐரோப்பிய மொழிகளில் இருந்தும், அதை ஓர் இனமாக்கியது இந்தக் காரணத்திற்காகத்தான்.

Stewart Chamberlain போன்ற அடிப்படைவாத கிறுத்துவ இனவெறியர்கள், ஏசுவை யூதர் அல்லர், ஆரியர் என்று பரப்பி யூதப்பெருங்கொலைக்கு வழிவகுத்தவர்கள். இந்த ஸ்டுவர்ட் ஒருபடிமேலே போய், ஏசுவை யூதர் என்று சொல்பவர் வடிகட்டிய மடையர்கள். ஒரு சொட்டு யூத ரத்தம் கூட அவர் நாளங்களில் ஓடவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம் என்றான். இவனின் வாயிலிருந்து உதித்த இன்ன பிற நஞ்சுக்களை இங்கே பார்க்கலாம். பின்னர் ஹிட்லரின் தோல்வி மற்றும் எதிர்பாராத யூத எழுச்சி போன்ற காரணங்களால், வாத்திகன் இந்த ஆரிய இனவாதக் குல்லாவைக் கழட்டி விட்டது.

ஆனால் இந்தியர்களைப் பிரிப்பதற்கு வசதியாக இங்கே மட்டும் இந்த யாதொரு அடிப்படையுமில்லாத இனவாதத்தைத் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். அதற்கு இந்த திராவிட Fascist கள் ஜல்லி ஒரு பக்கம் என்றால் மார்க்ஸ்வாத மடையர்களின் Tacit support இன்னொறு பக்கம்.

திராவிட Fascist களுக்கு இது அதிகார ஆசையினால் கடைபிடிக்கும் கொள்கை என்றால், எதிர்ப்புவாத மார்க்ஸ்வாதிகளுக்கு என்ன இலாபம் ? If you cannot beat them, Join them என்ற உடன் போக்கு "பொதுபுத்தி" யோ ?

இப்போது அந்த அனானி கேட்ட கேள்வி,


இங்கே ஆரியன் என்பது ஏசுவின் இனமா அல்லது குணமா என்று தமிழ்மண ஆரியதிராவிட இனவியாதிகளே பதில் சொல்லட்டும்.


அதை அப்படியே வழிமொழிந்து இந்த பதிவின் மூலம் இனவாத துவேஷிகளைக் கேட்கிறேன். பதில் உள்ளதா ?