ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தயாரிப்பில் இந்த சிறிய வீடியோ படம் வெளியிட்டுள்ளார்கள்.
இதில், செல்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை இசையுடன் கூடிய வீடியோவாக பதிவு செய்யப் பட்டுள்ளது. எல்லாமே graphics தான் என்றாலும் எவ்வளவுக்கெவ்வளவு அறிவியல் அறிவு வளர்ந்துள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு நுணுக்கங்களைப் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
படத்தின் தொடுப்பு
படத்தில் ஒரு ரத்தக் குழாயினுள் ஆரம்பித்து செல்லுக்குள் எப்படி புரதங்கள் தயாரிக்கப் படுகின்றன, எப்படி செல்கள் தங்கள் வடிவத்தைப் பாதுக்காக்கத் தயாரிக்கும் cytoskeleton கள் உருவாகின்றன. என்று ஏகத்துக்கு நுணுக்கமான விஷயங்களை அழகாகப் வடிவமைத்திருக்கின்றனர்.
படத்திலிருந்து Screen shots கள்.
Protein synthesis (ரைபோசோம்கள், புரதத்தை தயாரித்துக் கொண்டிருக்கின்றன)
செல்லுக்குள் ஒரு பார்வை..
சைடோஸ்கெலிடன்கள்
ஒரு ரத்தக் குழாயினுள்...
Golgi complex
12 comments:
வஜ்ரா,
படம் அருமை பிரமிப்பாக இருந்தது !
நன்றி !
test
படம் பார்ப்பதற்கு நல்லாவே இருந்தது.
ரொம்பவும் நன்றிங்க.
ஆனால், ஒன்னுமே புரியலீங்க.
பரவாயில்ல.
உங்க உழைப்பிற்கும் முயற்சிக்கும் நன்றி
DAMN Good!
I'll have to download the whole thing now.
Thanks vajra.
மிகவும் அருமையான - பயனுள்ள பதிவு. நன்றிகள்.
-ஞானசேகர்
ரொம்ப நல்லா இருந்தது. இதற்கு விளக்கம் ஏதும்கிடையாதா?
nice photos, will see the video from home:-) thank u for sharing this....
http://internetbazaar.blogspot.com
அருமை. கலையும் அறிவியலும் ஒருங்கிணைந்து வழங்கும் ஒரு நல்ல அனுபவம்.ஹமராஃப் போன்றவர்கள் சைட்டோ ஸ்கெலிட்டனையும் அதனை களமாக க்வாண்டம் நிகழ்வுகளையும் இணைத்து பிரக்ஞை செலுலார் அளவிலேயே முகிழ்க்கும் ஒன்றாக கூறுவதை நம்பிட வைக்கிறது இப்படம்.
ஓர் உலகம் இல்ல?
மாசிலா,
இதில் என் உழைப்பு என்றெல்லாம் சொல்லி என்னை pedestal ல் ஏற்றவேண்டாம். கண்டவை, கேட்டவை களைப் பதிகிறேன்.
இந்த வீடியோ science மாணவர்களிடையே பிரபலமான Forward mail. அவ்வளவே.
சமுத்ரா, ஞானசேகர், LFC Fan, நீலகண்டன்,
நன்றி.
தருமி ஐயா,
அதில் காட்டப் படும் ஒவ்வொறு நிகழ்வும் ஒரு Nature paper அல்லது ஒரு "Cell" paper.
எல்லாவற்றையும் விளக்குவது என்பது மிகவும் கஷ்டம்.
வழிப்போக்கன்,
ஓர் உலகம் இல்லையென்றால் ?
//இதில் என் உழைப்பு என்றெல்லாம் சொல்லி என்னை pedestal ல் ஏற்றவேண்டாம். கண்டவை, கேட்டவை களைப் பதிகிறேன்.//
நான் அத சொல்ல வரலீங்க. தமிழ்மண பதிவாளர்களுக்காக பொறுப்பாக எடுத்து செய்தீர்களே, அதுக்குதான் 'உழைப்பு', 'நன்றி' அப்படீன்னு!
தொடர்க!
Post a Comment