Showing posts with label Secularism. Show all posts
Showing posts with label Secularism. Show all posts

October 20, 2007

கரன் தாபரும் நரேந்திர மோடியும்

இந்த வார devil's advocate நிகழ்சிக்காக கரன் தாபர் காந்திநகரில் நரேந்திர மோடியை சந்திக்கச் சென்றிருக்கிறார். அங்கே நேர்காணலுக்கு சம்மதித்த குஜராத் முக்கிய மந்திரி மோடி தன் நவராத்திரி விரதத்திற்கு நடுவில் கரனின் கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். நேர்காணல் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடமே அதை முடித்துக் கொண்டு மோடி அவர்கள் வெளியேறிவிட்டார் என்று செய்திகள் வந்தது.

ஏன் ?

சும்மா மெல்லும் வாயில் அவலைப் போட்டுவிட்டாரா மோடி ?

மோடி இதற்கு முன் நேர்காணலே கொடுக்கவில்லையா ?
இல்லை Times now என்ற சேனலில்  கொடுத்தார். 

மோடியை ஒரு ஹிட்லரைப் போன்ற கொலைகாரன் என்று வர்ணிக்கும் சிலர் (முக்கியமாக சில NGOக்கள்) கேட்கும் கேள்வியைத்தான் திரும்பத் திரும்ப கரன் அவர்கள் மோடியிடம் கேட்டிருக்கிறார் அந்த நேர்காணலில்.

கேள்வி:

"குஜராத் கலவரத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோருவீர்களா ?"

என்பது தான்.

ஏன் கரன் அவர்கள் அந்தக் கேள்வியில் அவ்வளவு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று அவருக்குத் தான் வெளிச்சம்.

மன்னிப்பு கேட்கவேண்டியவர்கள் யார் ?

ஏன் குஜராத் முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் ?

நடந்தது கலவரம். அதில் பங்கு இரு சமூகத்தினருக்கும் சமமாக உள்ளது. . காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மற்றும் அறிவு சீவிக்கள் அடிக்கும் "pogrom", "holocaust" ஜல்லி அல்ல.

(ஹோலொகாஸ்ட் போன்றதொரு கொடூரத்தைக்கூட இந்த செகுலர் சிந்தனைவியாதிகள் விட்டு வைக்கவில்லை! அதைக்க்குட ஜல்லியடிக்கப் பயன்படுத்தி 6 மில்லியன் மனித உயிர்களுக்கு மிகப்பெரும் துரோகம் இழைத்துவிட்டார்கள்)

அந்த குஜராத் கலவரத்தினை "செகுலர்" முலாம் பூசி (இந்துக்கள் நடத்திய வண்கொடுமை என்று சொல்லி)  அடிக்கடி மக்கள் மத்தியில் பரப்பி சமுதாயப்பிரிவினைக்கு மேலும் வலு சேர்ப்பவர்கள் இந்த மீடியாக்கள். ஞாயமாகப் பார்த்தால் அவர்கள் தான் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். செய்வார்களா ?


அந்தக் கலவரத்தையே காரணம் காட்டி குஜராத்தை எப்பவுமே மட்டம் தட்டும் சில NGO க்கள் செய்யும் வேலையை, கரன் செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன ?

1984 சீக்கியப் படுகொலைகள் நடந்த போது அப்போதய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி பேசியது என்ன ? அதற்கு அவர் எத்தனை முறை மன்னிப்பு கேட்டார் ?

கஷ்மீரிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட இந்துக்களின் கதி என்ன ? அதற்கு எந்த கஷ்மீர் முதல்வர் இதுவரை மன்னிப்பு கேட்டுள்ளார் ? எத்தனை முறை கேட்டுள்ளார் ?

தற்பொழுது மிகப்பெரும் பிரச்சனை நரேந்திர மோடிக்கு இருக்கும் மக்கள் ஆதரவு தான் என்று தோன்றுகிறது. 

இரண்டு முறை முதல்வர் ஆனவர் தன் மாநிலத்தில் நலனில் அக்கரை கொண்டு செயல்படும் இந்தியாவின் சிறந்த முதல்வர் என்று அவர் பெருமைகள் இருக்க, அவருடைய மாநிலத்தில் இருக்கும் முன்னேற்றத்திற்குக் காரணம் என்ன என்று கேள்விகள் எழுப்பி பேட்டியை நடத்தாமல் ஏன் கரன் தாபர் அவர்கள் 2002 ல் நடந்த ஒரு சம்பவத்தை மட்டுமே வைத்துக் கொண்டு கேள்வி எழுப்பவேண்டும் ?


மோடி செய்த ஒரே தவறு, கரன் தாபருடனான நேர்காணலுக்கு சம்மதித்தது.

February 24, 2007

நான் இங்கேயே இருக்கிறேன்

'நான் யார் என்று இந்த வெங்காயத்தை வைத்துக் கொண்டு எப்படிக் கண்டுபிடிப்பது?'

'மகனே நீ யார் என்று கேட்டால் என்ன சொல்வாய்?'

'நான் இன்னாரின் மகன்; இந்த ஊரில் இந்த இடத்தில் இப்படி இருக்கிறேன் என்று சொல்வேன்.'

'அது மேல்தோலுடன் கூடிய உரிக்காத வெங்காயம். உண்மையில் நீ அதுதானா? இந்தஉடம்பு, இது இன்னாரின் மகன் என்று சொல்வது எது? அப்படியானால் அந்த உடம்பா நீ? என் கை, என் கால் என்று கை கால் இழந்தாலும் சொல்வது எது? அது உடம்பைக் கடந்த வேறு ஒன்று அல்லவா?அதைக் கண்டுபிடிக்கும் வரை வெங்காயத்தின் அடுக்குகளை ஒவ்வொன்றாய் உரித்துக் கொண்டு வா!'

தலைவருக்குக் குழப்பமாய் இருந்தது.

'இதைக் கண்டுபிடிக்க எவ்வளவு நாளாகும்? நான் வேறு வேலை செய்ய வேண்டாமா?'

'நீ இதற்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் மகனே. தினசரி விடிகாலையில்அமைதியாக ஐந்து நிமிடம் அமர்ந்து யோசித்தால் போதும். இதற்கு விடையை நீ நிச்சயம் கண்டுபிடிப்பாய். இந்த ஊரையே நல்வழிப் படுத்துவாய்'

- என்று சொல்லித் தலைவரின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் சித்தர்.

இருவரும் குகையை விட்டு வெளியே வந்தனர்.

'தலைவர் இவர் இனி உங்களை நல்வழிப்படுத்துவார்' என்று ஊர்மக்களிடம் சொல்லிவிட்டுத் தன்வழி நடந்தார் சித்தர்.

ஆத்திகர்களுக்கோ ஏமாற்றம்; அயோக்கியர்களுக்கு ஆதரவான இந்தத் தலைவன் நம்மைநல்வழிப் படுத்துவானா என்று.

நாத்திகர்களுக்கோ கொண்டாட்டம். 'பாருய்யா இந்தச் சாமியாரையே ஜெயிச்சு ஊரைவிட்டே அனுப்பிட்டாரு நம்ம தலைவரு' என்று எக்காளமிட்டனர்.

தலைவர் அமைதியாக வீடு நோக்கி நடந்தார். அடிப்பொடிகள் கூடவே சென்றன.

தலைவர் திண்ணையில் அமர்ந்து கையில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு எதுவும்பேசாமல் யோசனையில் ஆழ்ந்ததைப் பார்த்ததும் அவர்களுக்குக் கிலி பிடித்துக் கொண்டது.

அவரிடம் தைரியமாய்ப் பேசும் அவரின் வலக்கை போன்றவன் குரல் கொடுத்தான்.

'என்ன தலைவா, அந்த ஆரியப் பார்ப்பு உங்களை ஏதாச்சும் மயக்கிட்டானா?'

இது ஆத்திகர்களைப் பார்த்து தலைவர் வழக்கமாய்ப் பேசும் வசனம்தான்.ஆனாலும் இப்போது தலைவருக்கு இதைக் கேட்டதுமே அருவருப்பாய் இருந்தது.

'டேய் அடங்குங்கடா! எதுக்கெடுத்தாலும் ஆரியன் பூரியன்னுக்கிட்டு. அந்தச்சாமியாரு நம்பாளுதாண்டா. போங்கடா எல்லாரும்!' என்றவர் கத்தக் கண்டு
கலங்கிக் கலைந்து போனது அவர் கோஷ்டி.

அடுத்தநாள் விடியுமுன்னர் எழுந்து நிதானமாய் யோசிக்க ஆரம்பித்தார் தலைவர்.

'என் உடல் என்று சொல்வது எது? என் வீடு இடிந்து போனதென்றால் அது என் வீடல்ல, என் மனைவி என்னை விட்டுப் போய் விட்டால் என் மனைவி அல்ல என்று சொல்வது சரி. என் உடல் என்பது நானேதானே...'

சித்தர் சொன்னது ஞாபகம் வந்தது.

'என் கை, என் கால் என்று சொல்வது...'

'நாளை எவனாவது என் விரோதி என் கையை வெட்டிவிட்டுப் போய்விட்டால்...'

கையைப் பார்த்துக் கொண்டார்.

'இந்தக் கையே நாளை துண்டாகி விழுந்துவிட்டால் அது நானில்லாமல் போகும்.
அப்போது இந்தக் கை நானில்லை. அப்புறம் இந்த உடலில் நான் நான் என்று
சொல்வதுதான் எது?'

'மூளை மட்டுமா? அது மட்டும் நானாகி விடுமா? அது தனியே யோசிக்குமா?'

'இல்லை, சாமியார் சொல்வது போல் அது உடலாய் இருக்க வாய்ப்பில்லை..!'

வெங்காயத்தின் மேல்தோலைப் பிய்த்தெறிந்தார்.

மேலே சிந்திக்கத் தோன்றவில்லை.

அடுத்த நாள் விடிகாலை அவர் கண்ட கனவொன்று அவரை எழுப்பியது. மீண்டும் சிந்தனையில் ஆழ்த்தியது.

'கனவில் நான் அனுபவித்த இன்பத்தை உண்மையில் அனுபவித்தது எது? இந்த உடலா அல்லது வேறொன்றா?'

வெங்காயத்தின் அடுத்த அடுக்கும் உறிந்தது.

தொடர்ந்து வந்த நாட்களில் ஐந்து நிமிடம் பத்து நிமிடமாகி மணிக்கணக்கில் நீண்டது. தலைவர் தன் ஜமாவைச் சந்திப்பதையே நிறுத்தி விட்டார்.



வெளியே ஏகக் கலவரம்.

தலைவரை எதிர்த்துக் கேள்வி கேட்ட வலக்கையின் பின்னால் நாத்திகக் கூட்டம் ஒன்று திரண்டிருந்தது இப்போது. இவன் இன்னும் முரடன். தலைவரை எதிர்த்து அறிக்கைக்கு மேல் அறிக்கையாக விட்டுக் கொண்டிருந்தான்.

ஆத்திகக் கோஷ்டியைச் சேர்ந்த அயோக்கியன் ஒருவன், சித்தர் நட்ட கல்லைச் சுற்றி பெரிதாய் நிலத்தை வளைத்து வேலி போட்டு, அந்தக் கல்லுக்கு ஒரு புடவையையும் கட்டி விட்டான்.

'ஊரில இருக்கற சாமியோட சக்தியெல்லாம் இங்க இந்த ஆத்தா கிட்ட இப்ப வந்திருச்சு! டேய் எல்லாம் எனக்குப் படையல் வயுங்கடா. இங்க பெரிசா கோயில் எழுப்பணுமடா' என்று சாமியாடிக் கூட்டம் சேர்க்க ஆரம்பித்தான். குறி சொல்லி எல்லோர் குறையும் தீர்க்கிறேன், காணிக்கையோடு வாருங்கள் என்று அவன் அழைப்பதைக் கேட்டு மூட பக்தர்களின் பெருங்கூட்டம் திரண்டது.

வலக்கைக்கு ஆத்திரம் கரை புரண்டோடியது. ஊர்க்கோயிலில் வருமானம் குறைந்ததால் அவனுக்குத் தாங்க முடியவில்லை.

'வாங்கடா இந்த புதுப்பூசாரிய இன்னிக்கு ரெண்டில ஒண்ணு பாத்திறுவோம் வாங்கடா' என்று படை திரட்டினான்.

முனைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அருளப்பா மட்டும் இதற்கு ஆட்சேபித்தார். 'நலிந்து வரும் நாட்டார் மரபியல்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து சமீபத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர் அவர். அவர் சார்ந்திருந்த அமைப்பு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அவரை ஊர் ஊராகப் பிரச்சாரத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தது. நேற்று கூட உள்ளூர் சிவன் கோயில் வாயிலில், பகுத்தறிவாளர் பாசறை அமைத்துக் கொடுத்த மேடையில் 'நடுகல் வழிபாடே தமிழர் வழிபாடு' என்ற தலைப்பில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒண்ட வந்து, தமிழரின் தொல்வழிபாட்டு மரபுகளைக் கபளீகரம் செய்த பார்ப்பனக் கூட்டத்தை சாடிப் பேசியதை, அதை வலக்கையே பாராட்டிப் பேசியதை அவர் நினைவூட்டினார். அவர் தொலைநோக்குடன் செய்து வரும் பரப்புரைகளுக்கு இந்த வலக்கை ஒரே நாளில் வேட்டு வைத்து விடுவான் போலிருக்கிறதே.

''அண்ணே! அங்க என்ன பாப்பானா மணியாட்டுறான் நம்ம ஆள்தான அண்ணே விட்றுங்க அண்ணே" என்று பக்குவமாய்ச் சொல்லிப் பார்த்தார்.

"இதுக்குதான் படிச்சவனயெல்லாம் கிட்டசேக்கக் கூடாதுன்னு சொல்றது" என்று வலக்கை சீறி விழுந்தான்.

"யோவ்! ஏதாச்சும் வாய்ல வந்து சொல்லப் போறன்யா. ரெண்டாயிரம் வருசம் கதையெல்லாம் இப்ப எதுக்குய்யா? இப்ப இன்னா அத்தப்பாரு. உள்ளூரு வெளியூருன்னு எம்மா சனம் அங்க இப்ப அம்முது பாத்தியா? உண்டி மட்டும் ஒரு நாளைக்கு ரெண்டுதரம் ரொம்புதான்யா. நம்ம இன்னா இளிச்சவாயனுங்களா? இங்க இன்னாடான்னா நம்ம கோயில்ல பாவம் அய்யிரு தட்ல கூட பத்து ரூவா சேர மாட்டேங்குதுன்னு அழுதுட்டாருய்யா நேத்து. உனுக்குப் பிடிக்கலன்னா எதிரொலிய கேட்டுப்பிட்டு பித்து பிடிச்சாப்புல உக்காந்திருக்காரே தலிவரு, அவரு கூட போய் உக்காந்துக்க போ!"

வலக்கை தன் சுயநலத்திற்காகக் கோயில் பார்ப்பனருக்கே பரிந்து பேசுவான் என்று அருளப்பா எதிர்பார்க்கவில்லை. பேசாமல் இடத்தைக் காலி செய்தார்.

"அதே கல்லு கிட்ட இன்னிக்கு நான் கேள்வி கேக்கப் போறன். ஏதாச்சும் உட்டாலக்கடி வித்தை காட்ட சாமியாரும் இப்ப பக்கத்தில இல்ல. மவனே அதுலயிருந்து இன்னிக்குப் பதில் வரலயின்னா, எப்டி வரும், வராது, அப்புறம் அந்த கல்லையும் உடச்சுப் போட்டுட்டு அந்த பேமானி மண்டையும் பொளந்துட்டு வரலாம் வாங்கடா!"

பெரிய கடப்பாறை ஒன்றை எடுத்துக் கொண்டு நாத்திகர் கூட்டம் புடைசூழப் புறப்பட்டான் வலக்கை.

தலைவர் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். இதற்கு மேல் சிந்திப்பதே கஷ்டமாய் இருக்கிறதே சாமியாரே என்று சொல்லிக் கொண்டே அமர்ந்திருந்தவர் மெதுவாய் எதுவுமே யோசிக்காமல் மனதை அலைபாய விடாமல் எங்கிருந்து இந்தச் சிந்தனை எல்லாம் உதிக்கிறது என்று உற்றுக் கவனிக்கத் தொடங்கினார்.

அவர் சிந்தனை உள்முகமாய்க் குவிந்து நின்று போன ஒரு கணத்தில் அவருள் அந்த அதிசய மாற்றம் நிகழ்ந்தது. அவர் திடீரென்று ஓர் ஒளிக்கடலில் வெடித்துக் கலந்தார்.

விவரிக்க இயலாத அந்த ஆனந்தப் பெருக்கில் விம்மி விம்மி அழுதார் தலைவர். அவர் சிறுமைகள் யாவும் கண்ணீரில் கரைந்தன. கருணையைத் தவிர வேறொன்றும் அங்கில்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நிற்கும் அந்த ஆனந்த ஜோதியில், 'நான்' என்ற அடையாளம் கொண்ட ஒரு துளி கரைந்து போனது. தன் வீடும் மனைவியும், மக்களும், ஊரும், மலையும், அருவியும், ஆறும் யாவும் பிணைத்து நிற்கும் சக்தி வெள்ளத்தில் கரைந்து தாமாகி நிற்பதைக் கண்டார்.

ஊர் மக்களைக் காணும் இச்சை வர அந்த ஒளிவெள்ளமே அவரை மலையடிவாரத்தை நோக்கி நகர்த்தியது.

வலக்கை கையில் கடப்பாறையுடன் அந்தக் கல்லின் முன் நின்று உரத்து சண்டை போட்டிருந்தான். புதுப்பூசாரியும் ஆவேசம் வந்தது போல் ஆடிக்
கொண்டிருந்தான்.

"டேய், ஆத்தா குடியிருக்கிற கல்லு மேலய கை வெச்சுடுவியா நீ? வெய்யிடா பாக்கலாம்! ராத்திரிக்குள்ள நீ ரத்தம் கக்குல நான் ஆத்தா இல்லடா!"

"டேய் அடங்குடா! இப்ப நான் இன்னா கேட்டேன்? ஒன் ஆத்தாவுக்கு உண்மைலய சக்தி இருந்துச்சுன்னா நான் கேக்கற கேள்விக்குப் பதில் சொல்லட்டுமடா. இல்லாட்டி இதை கண்டிப்பா ஒடப்பேன்" என்று கடப்பாறை தூக்கி நின்றான் வலக்கை.

"கேள்டா! என்னா வேணும்னாலும் கேளு! ஆத்தா வந்து பதில் நிச்சயம் சொல்வாடா! ஆனா என் மூலம் சொல்வாடா" என்றான் ஆவேசத்திலிருந்த புதுப்பூசாரி.

"இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் நம்ம கிட்ட வேணாம் கண்ணு. எனக்கு இந்தக் கல்லுதான் இப்ப பதில் சொல்லணும்" என்ற வலக்கை ஊர் மக்களை அமைதியாக நிற்கும்படிச் சொல்லிவிட்டு தலைவர் நின்று கேள்வி கேட்ட இடத்தில் வந்து நின்றான்.

எங்கும் நிசப்தம்.

தலைவரைப் பார்த்தே பேசக் கற்றவன் அவன்.

உரத்த குரலில் கல்லைப் பார்த்துக் கேட்டான்.

"யார் நீ எங்கிருக்கிறாய்?"

இம்முறை ஊர்மக்கள் அனைவருக்கும் கேட்கும்படி பதில் வந்தது.

"யார் நீ எங்கிருக்கிறாய்?"

ஆனால் ஆத்தா குரலில் அல்ல,
- தலைவர் குரலில்.

(நிறைந்தது)

நன்றி:
இணைய நண்பர்கள், மற்றும் ஒத்த சிந்தனை உடையவர்கள்.

February 21, 2007

கெலிச்சான் மோடி

Special economic zones என்கிற சிறப்பு வணிகவளாகங்கள் நாடெங்கும் அமைக்கப் பட்டு வருகின்றது. ஒரு SEZ (special economic zone) நிருவுவதற்கே பட்டாச்சார்யா, அதாங்க மே. வ கம்யூனிஸ்ட் முதல்வருக்கு தாவு தீர்ந்துவிடுகிறது.

விவசாயிகள் ஆர்பாட்டம் ஒரு பக்கம் என்றால் எதிர்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் இன்னொரு பக்கம் என்று மாநிலத்தையே ஸ்தம்பிக்கச் செய்யும் பந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவிருகின்றனர்.

இதே வேளையில் இந்தியாவின் மேற்குக் கரையில் (west coast !!) அதாங்க, குஜராத்தில், ஊடகங்களின் வில்லன், செகுலரிசத்தை நசுக்கிய அரக்கன் மோடி ஆளும் மாநிலத்தில் 33 SEZ களை சத்தமின்றி சேங்க்ஷன் செய்திருக்கிறார். அவரால் மட்டும் எப்படி முடிந்தது என்று outlook ல் R.K Mishra கேள்வி எழுப்பியுள்ளார் .

அந்தக் கேள்வியை ஆராய்ந்து பார்க்கையில்,

மோடி செய்த நல்லவிஷயம், அரசு விதிமுறைகள் என்று சொல்லி மக்களை கஷ்டப்படுத்தாமல் லிபரல் எகனாமிக்ஸ் படி நிறையவே தனியார் நிறுவனங்கள் கூட்டுவைத்து மாநிலத்தில் முன்னேற்றத்தை அதிகரித்தது. குஜராத்தின் entrepreneurial skill கொண்ட மக்கள் அதை மிகவும் வரவேற்று முன்னேறினர். இன்று FDA அதிகம் கொண்டுவரும் மாநிலம் மே.வங்கமோ, கேரளமோ அல்ல, குஜராத்.

இன்னொன்றும் எனக்கு strike ஆனது, குஜராத்தில் நிறையவே விவசாயத்திற்கு உதவாத சதுப்பு நிலங்கள், கட்ச், சௌராஷ்டிரா பகுதிகளில் அதிகம், அதை நன்றாகப் பயன் படுத்தி SEZ களை கடலோரப் பகுதி, விவசாயத்திற்குப் பயன் படுத்த முடியாத நிலங்களில் அமைத்தது மோடியின் புத்திசாலித்தனம்.

பட்டாச்சார்யா ஆளும் மே. வங்கத்தில் கம்யூனிஸம் என்று தழைக்க ஆரம்பித்ததோ அன்றே பிடித்தது சனி. 30 ஆண்டுகால ஆட்சியில் கல்கத்தாவைத் தவிர எந்த நகரமும் சொல்லிக் கொள்ளும் படி முன்னேற்றாம் அடையவில்லை. பெரும் நிறுவனங்கள் trade union பிரச்சனை என்று சொல்லி முதலீட்டினைக் குறைத்துவிட்டன. வங்கதேசம் போன்ற வளமையான தேசம் நாட்டில் இல்லை, தஞ்சை போன்ற டெல்டா பகுதி அது. கங்கை, பிரம்மபுத்திரா வந்து வங்கக்கடலில் கலக்கும் பகுதி அது. வெள்ளைக்காரன் வந்து இறங்கிய உடன் கைவைத்த இடங்கள் தமிழக தஞ்சையும், வங்க தேசமும் தான். ஏனென்றால் அங்கே தான் டெல்டா பகுதி விளை நிலங்கள் அதிகம். 18ம் நூற்றாண்டின் SEZ சிறப்பு வணிக வளாகங்கள் தஞ்சையும், வங்காளமும். அதை வெள்ளையன் நன்றாகவே பயன் படுத்திக் கொண்டான். இன்று வெள்ளையனே A joke of an ideology என்று சொல்லித் தூக்கி எரிந்துவிட்ட கம்யூனிசத்தை வைத்துக்கொண்டு படாத பாடு படுகிறார் பட்டாச்சார்யார். இவர்கள் எதிர்கட்சியாக இருந்து என்னென்ன செய்தார்களோ அதையே செய்து மம்தா பானர்ஜீ அரசியல் ஆதாயம் தேடுகிறார். அது தெரியாமல் விவசாயிகளும் அவர் பின்னால் செல்கின்றனர்.

பந்த், Strike, உண்ணாவிரதம் எல்லாம் கம்யூனிஸ்டுகள் தான் மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இருந்து சொல்லிக் கொடுத்தார்கள். இன்று அந்த கசப்பு மருந்தை ஆட்சியில் இருந்துகொண்டு அனுபவிக்கவேண்டிய நெருக்கடி அவர்களுக்கே வந்துவிட்டது வேடிக்கையான உண்மை.

அதே அவுட்லுக் கட்டுரையில், மிஸ்ரா சொல்வது,

Another reason why setting up SEZs have been trouble-free is because the government has left it to the promoters to purchase the land directly from farmers. So, the farmer can demand market price for his property and not settle for the lower prices offered by the state when it acquires land.

மோடியிடமிருந்து ஒரு சில மேனேஜ்மெண்ட் பாடங்களை பட்டாச்சாரி கற்கலாம். சும்மா அவரை தூற்றுவதை கொஞ்சம் தில்லி, மும்பை, மற்றும் தமிழகத்தில் உள்ள Tabloidகள் நிறுத்தலாம்.