September 22, 2008

தீவிரவாதிகளுக்குப் தீனியாகும் அறிவுசீவிகள்

 நம்மூர் அச்சு, வலை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் தோன்றி அவ்வப்போது மக்களுக்கு "மத நல்லிணக்கத்தை"ப் போதிக்கும் பல அறிவுஜீவிகள் கவுண்டர் கரண்ட்ஸ் (கோயம்புத்தூர் கவுண்டர்கள் இல்லை) என்னும் இணைய தளத்திலும் எழுதி வருகிறார்கள். உதாரணம் ஷப்னம் ஹாஷ்மி ( நடிகை ஷபானா ஆஸ்மி அல்ல), ராம் புனியானி மற்றும் பலர். வலைப்பதிவுகளிலும் அடிக்கடி இவர்கள் கட்டுரைகள் எல்லாம் பதிவாக்கப்படும், இந்து மதவெறியர்கள் என்று அவர்களால் இனம் காணப்படுபவர்களைத் தாக்கப்பயன் படும். இன்று இந்த countercurrents வலைத்தளம் சிக்கலில் சிக்கப் போவது உறுதியாகிவருகிறது.

தில்லி, அஹமதாபாத், ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்குக் காரணமான ஜிஹாதி அமைப்பு, இந்தியன் முஜாஹித்தீன். இந்த அமைப்பினர் குண்டு வெடிப்பு நடத்துவதற்கு முன் பத்திரிக்கைகளுக்கு ஈ-மெயில் அனுப்பும் புது டெக்னிக்கைக் கையாண்டு வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் நடத்திய குண்டு வெடிப்புக்கு முன் அனுப்பப் பட்ட ஈ-மெயில் எங்கிருந்து வந்தது என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

dreamhost.com எனும் கலிபோர்னியா கம்பெனியில் பதிவு செய்யப்பட்ட அக்கவுண்டிலிருந்து அனுப்பியிருக்கிறார்கள். அதற்கும் உள்ளூர் கம்யூனிஸ்டு அறிவுஜீவிகளுக்கும் என்ன தொடர்பு?

அந்த அறிவுஜீவிகள் அடிக்கடி பயன் படுத்தும் வலைத்தளம் கவுண்டர்கரண்ட்ஸ். இதுவும் அதே  dreamhost.com ல் தான் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட வலைதளம்.

இதில் என்ன இருக்கிறது ?

வெறும் இதை மட்டும் பார்த்தால் தெரியாது, கவுண்டர் கரண்ட்ஸில் சமீபத்தில் வெளிவந்த சில கட்டுரைகளில் இருந்து அப்படியே காப்பி அடித்து அந்த மிரட்டல் ஈ மெயிலில் அனுப்பியிருக்கிறார்கள் தீவிரவாதிகள். தவிற கவுண்டர் கரண்ட்ஸில் ஒவ்வொறு முறை குண்டு வெடிக்கும் போதும் ஒரு கட்டுரை வெளிவந்து அதில் இஸ்லாமியத்தீவிரவாதிகளுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் வகையில் இருக்கும்.


இதெல்லாம் பார்க்கும் பொழுது, இஸ்லாமியத் தீவிரவாதிகள் கம்யூனிஸ்டு பன்னாடைகளின் உதவியுடன் தான் இந்தியாவைத் தாக்கிவருகிறார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்திருக்கிறது. தீவிரவாத அமைப்பை ஆதரிக்கும் கவுண்டர் கரண்ட்ஸ் எழுத்தாளர்களுக்கு கூடியவிரைவில் ஆப்பு அடிக்கப்படப் போவது உறுதியாகியிருக்கிறது.


மேலதிகத் தகவல்களுக்கு ஆப் ஸ்டம்ப்ட் வலைத்தளத்தைப் பார்க்கவும்.

பெரியார் என்ற ஜனநாயகவாதி

இன்று பெரியாரின் பெயர் சொல்லி, போற்றி போற்றி என்று கோயில் கட்டாத குறையாய் தெருவுக்குத் தெரு சிலை வைத்து கும்பிடும் "நாத்திகர்கள்" அடிக்கடி பெரியார் எப்பேற்பட்ட ஜனநாயகவாதி  தெரியுமா ? என்று கேட்டுவருகிறார்கள்.

21.9.2008 வாரமலர் திண்ணை பகுதியில் அவர் எப்பேற்பட்ட ஜனநாயகவாதி என்று அவரது உற்ற தோழர் கோவை அய்யாமுத்து எழுதியதாக நடுத்தெரு நாராயணன் எழுதியுள்ளார்.
படித்துத் தெளிந்து கொள்ளவும்.


திண்ணை! - நடுத்தெரு நாராயணன்

ஈ.வெ.ரா.,வுடன் இருந்தவர் கோவை அய்யாமுத்து. காங்கிரஸ் கட்சியிலும், பிறகு ஈ.வெ.ரா.,வின் சுயமரியாதை இயக்கத்திலும் பணியாற்றியவர். ஈ.வெ.ரா.,வின், "குடியரசு' பத்திரிகையின் ஆசிரியர். ராஜாஜி ஆதரவாளர். காந்தியுடன் நெருங்கிப் பழகியவர். மிகச் சிறந்த நிர்வாகி என்று புகழ்பெற்றவர். ஈ.வெ.ரா., உயிருடன் இருந்த காலத்திலேயே இவர் திருலோக சீதாராமின், "சிவாஜி' பத்திரிகையில் (1970) எழுதிய கட்டுரை இப்படித் துவங்குகிறது...என் மதிப்புக்குரிய நண்பர் ஈ.வெ.ரா., செல்வத்திடமும், செல்வத்தை வைத்திருக்கும் செல்வரிடத்தும் மட்டற்ற மதிப்பு உடையவர். அவரிடத்தும் செல்வம் ஓரளவு குவிந்திருக்கிறது. தாம் ஆண்டுதோறும் ஈரோடு நகராட்சி மன்றத்துக்கு ஐந்தாயிரமோ, அதற்கு அதிகமாகவோ சொத்து வரி செலுத்தி வருவதாகப் பெருமிதத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார். தாம் செல்வந்தர் என்பதால் தம்மைப் பிறர் மதிக்க வேண்டும், மதிப்பாக நடத்த வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்க்கிறார். செல்வம் இல்லாதவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பதற்குத்தான் தகுதியுடையவர்கள் என்று கருதுவார். அவர்களை, அன்னக்காவடிகள், தகர போணிகள் என்றும், "கீழே பூமியும், மேலே ஆகாயமும் அன்றி வேறெதுவும் இல்லாதவர்!' என்றும் பரிகாசமாகச் சொல்வார்.
"இவனுக்கு என்ன தகுதி? அவனுக்கு என்ன யோக்கியதை?' என்று பணத்தைக் கொண்டே மனிதனை எடை போட்டுப் பார்ப்பார்.

பனகல், பொப்பிலி, ராஜா சர்.அண்ணாமலை, சவுந்தர பாண்டியன், ஆர்.கே.சண்முகம், ஜமால் முகமது போன்ற செல்வந்தர்கள் தான் ஆட்சி பீடத்தில் அமர அருகதை உடையவர்கள் என்று கருதுவார். யாதுமற்ற அன்னக் காவடிகள் அரியாசனம் ஏறி, அதிகாரம் செய்ய வாய்ப்பளிக்கும், "ஜனநாயகம்' என்ற சனியனை கண்ணால் காண்பதும், வாயால் சொல்வதும் ஈ.வெ.ரா.,வுக்கு துளி கூடப் பிடிக்காது. உலகில் ஒரு கடவுளைக் கூட ஈ.வெ.ரா., ஏற்றுக் கொள்வாரேயொழிய அன்னக் காவடிகளை அரசர்களாக்கும் இந்த பெரும் சனியனாகிய ஜனநாயகத்தை அவர் இப்பிறவியிலும், மற்றொரு பிறவியிலும் நிச்சயமாக, முடிவாக, தீர்மானமாக ஏற்றுக் கொள்ளவே மாட்டார். ஏதோ வேண்டா வெறுப்பாகக் காமராஜரும், அண்ணாதுரையும், கருணாநிதியும் ஆட்சிப் பீடத்திலிருந்து அதிகாரம் செய்த காரணத்தால், அவர்களை அண்டுவதால் தமக்கு மரியாதைகளும், மலர் மாலைகளும், சிறப்பு விழாக்களும், பிற சிறப்புகளும் கிடைக்கின்றன என்ற காரணத்தால், அவர்களைப் பச்சைத் தமிழன், உண்மைத் தமிழன் என்றும், "கலைஞர் கருணாநிதி' என்றும் தம்முடைய, "பரிவாரங்கள்' என்றும் பரிந்துரைகள் வழங்கிப் பாராட்டுதல் தெரிவித்தார். ஆனால், அவருடைய அடித்தளத்தை சோதித்துப் பார்த்தால், "உம்... என்னிடம் மாதம் முப்பது ரூபாய்க்கு இருந்த பயல், இப்போது மந்திரியாகி விட்டான்! மந்திரியாவதற்கு அவனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?' என்ற பொருமல் பெருமளவில் காணப்படும். தமிழ்நாட்டில் இன்று தம்மை மிஞ்சிய அறிவாளி யாரும் இல்லை என்றும், தம்மைத் தவிர்த்து மற்ற எல்லாரும் முட்டாள்கள் என்றும் வாழும் ஈ.வெ.ரா.,வின் மனநிலையை இது வரை கணித்தோம். இனி...

இப்படி எழுதியுள்ளார் கோவை அய்யாமுத்து.

January 15, 2008

மனித வெடிகுண்டு

சென்ற வாரம் இரண்டு படங்கள் பார்த்தேன்.

1. The kingdom
2. Paradise now

Image Hosted by ImageShack.us


கிங்டம் என்னும் ஹாலிவுட் படம், FBI ஏஜெண்டுகள் சிலர், சவுதி அரேபியாவில் உள்ள ஒரு அமேரிக்க குடியுருப்புப் பகுதியில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றை பற்றி துப்பறியச் சென்று, அங்கு அவர்கள் ஆளாகும் பிரச்சனைகள் பற்றிய படம். முதல் 10 நிமிட படத்தில் 1930 களில் எப்படி சவுது என்னும் இனத்தலைவர்களால் சவுதி அரேபியா உருவானது என்பதும், அதில் அமேரிக்கர்கள் எப்படி உள்ளே வந்தார்கள் என்றும் காட்டியது மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தது.


Image Hosted by ImageShack.us

Paradise now என்னும் திரைப்படம்  வெளிநாட்டுப் படவிரிசைப் பிரிவில் ஆஸ்கார் விருதுக்குத் தகுதி பெற்ற திரைப்படம். முக்கியகாம பாலஸ்தீன அரபு மக்கள் வாழ்க்கைப் பிரச்சனையைக் காட்டும் படம். படத்தின் கதை: இணைபிரிய நண்பர்கள் இருவர் தற்கொலைத் தாக்குதல் செய்யத் துணிந்து பின் ஒரு பெண்ணால் முடிவுகளை மாற்றிக் கொள்ளும் கதை. சிலர் இதனை பாலஸ்தீனர்களில் உள்ள moderates அதாவது மிதவாதிகளின் குரல் என்றெல்லாம் எழுதினர். என்னைப் பொருத்தவரை, இதில் மிதவாதக் குரலின் வெளிப்பாடாக அந்தப் பெண்ணைத்தவிர வேறு யாரையும் காட்டவில்லை. ஆறுதலான நல்ல விஷயம், படத்தில் பேசப்படும் அரபு dialect  பாலஸ்தீன அரபு மொழி. அது சற்றே ஹீப்ரூவை ஒத்திருக்கிறது. சில பல வார்த்தைகள் இவர்களிடமிருந்து எடுத்து ஹீப்ரூவிலும் அப்படியே பயன் படுத்திக் கொள்கிறார்கள். மற்ற அரபி மொழி பேச்சைவிட பாலஸ்தீன அரபி மொழி கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும். உதாரணமாக கிங்டம் படத்தில் பேசப்படும் அரபி மொழி மிகக் கடினமாக இருக்கும். 

அலி சுலைமான், அஷ்ரஃப் பர்ஹோம் என்ற இரு அரபு நடிகர்கள் இரண்டு படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.