September 22, 2008

தீவிரவாதிகளுக்குப் தீனியாகும் அறிவுசீவிகள்

 நம்மூர் அச்சு, வலை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் தோன்றி அவ்வப்போது மக்களுக்கு "மத நல்லிணக்கத்தை"ப் போதிக்கும் பல அறிவுஜீவிகள் கவுண்டர் கரண்ட்ஸ் (கோயம்புத்தூர் கவுண்டர்கள் இல்லை) என்னும் இணைய தளத்திலும் எழுதி வருகிறார்கள். உதாரணம் ஷப்னம் ஹாஷ்மி ( நடிகை ஷபானா ஆஸ்மி அல்ல), ராம் புனியானி மற்றும் பலர். வலைப்பதிவுகளிலும் அடிக்கடி இவர்கள் கட்டுரைகள் எல்லாம் பதிவாக்கப்படும், இந்து மதவெறியர்கள் என்று அவர்களால் இனம் காணப்படுபவர்களைத் தாக்கப்பயன் படும். இன்று இந்த countercurrents வலைத்தளம் சிக்கலில் சிக்கப் போவது உறுதியாகிவருகிறது.

தில்லி, அஹமதாபாத், ஜெய்ப்பூர் போன்ற நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்குக் காரணமான ஜிஹாதி அமைப்பு, இந்தியன் முஜாஹித்தீன். இந்த அமைப்பினர் குண்டு வெடிப்பு நடத்துவதற்கு முன் பத்திரிக்கைகளுக்கு ஈ-மெயில் அனுப்பும் புது டெக்னிக்கைக் கையாண்டு வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் நடத்திய குண்டு வெடிப்புக்கு முன் அனுப்பப் பட்ட ஈ-மெயில் எங்கிருந்து வந்தது என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

dreamhost.com எனும் கலிபோர்னியா கம்பெனியில் பதிவு செய்யப்பட்ட அக்கவுண்டிலிருந்து அனுப்பியிருக்கிறார்கள். அதற்கும் உள்ளூர் கம்யூனிஸ்டு அறிவுஜீவிகளுக்கும் என்ன தொடர்பு?

அந்த அறிவுஜீவிகள் அடிக்கடி பயன் படுத்தும் வலைத்தளம் கவுண்டர்கரண்ட்ஸ். இதுவும் அதே  dreamhost.com ல் தான் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட வலைதளம்.

இதில் என்ன இருக்கிறது ?

வெறும் இதை மட்டும் பார்த்தால் தெரியாது, கவுண்டர் கரண்ட்ஸில் சமீபத்தில் வெளிவந்த சில கட்டுரைகளில் இருந்து அப்படியே காப்பி அடித்து அந்த மிரட்டல் ஈ மெயிலில் அனுப்பியிருக்கிறார்கள் தீவிரவாதிகள். தவிற கவுண்டர் கரண்ட்ஸில் ஒவ்வொறு முறை குண்டு வெடிக்கும் போதும் ஒரு கட்டுரை வெளிவந்து அதில் இஸ்லாமியத்தீவிரவாதிகளுக்கு மறைமுக ஆதரவு தெரிவிக்கும் வகையில் இருக்கும்.


இதெல்லாம் பார்க்கும் பொழுது, இஸ்லாமியத் தீவிரவாதிகள் கம்யூனிஸ்டு பன்னாடைகளின் உதவியுடன் தான் இந்தியாவைத் தாக்கிவருகிறார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்திருக்கிறது. தீவிரவாத அமைப்பை ஆதரிக்கும் கவுண்டர் கரண்ட்ஸ் எழுத்தாளர்களுக்கு கூடியவிரைவில் ஆப்பு அடிக்கப்படப் போவது உறுதியாகியிருக்கிறது.


மேலதிகத் தகவல்களுக்கு ஆப் ஸ்டம்ப்ட் வலைத்தளத்தைப் பார்க்கவும்.

8 comments:

முகமது பாருக் said...

அய்யா காவியாரே!! (இப்படி அழைப்பது வெக்கமா இருக்கு இருந்தாலும் உங்களை இப்படித்தான் கூப்புடணும்)

தீவிரவாதத்தில் ஈடுபடுபவனுக்கு மதத்தில் எல்லாம் நம்பிக்கை கிடையாது உதாரனமாக வீர் சாவர்கர் மற்றும் கோட்சே கூட்டம் முதல் மும்பை தாக்குதல் வரை.. பாகிஸ்தான்காரன் இந்த வேலையை செய்தால் அவனை அந்த நாட்டை வைத்துதான் என்னவேண்டுமே தவிர மதத்தை அல்ல..

இல்லை மீண்டும் மீண்டும் மதத்தை வைத்து நீங்கள் தீர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவிப்பீர்கள் என்றால் மலேகோன் குண்டுவெடிப்பில் ராணுவ கர்னல் மற்றும் காவிச் சாமியார்களை நீங்கள் இந்து தீவிரவாதி என்று அலைபீர்களா?..நீங்கள் உண்மையான நடுநிலைவாதி நாட்டுப்பற்றுவாதி என்றால்!!, மாட்டீர்கள் ஏனெனில் தந்தை பெரியாரைப் பற்றி முழுமையாக படிக்காமல் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எழுதும் நீங்கள் நடுநிலைவாதி அல்ல..சங்கரச்சாரிகள் கோவிலுக்குள் கொலையும் செய்வார்கள் (அதும் வேதம் ஓதும் அய்யரை) அவர்களுக்கு அடிவருடும் நீங்கள் எல்லாம் இந்த கணினி உலகத்திலும் மற்றவனை பற்றி குறை சொல்லியே வாழ்கையை ஓட்டிவிடுவீர்கள்..

இந்தப் பின்னூட்டதையும் நீங்கள் இடமாட்டீர்கள்..

காலம் ஒன்றே உங்களுக்கு பதில் சொல்லும்..

தோழமையுடன்

முகமது பாருக்

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைப்பவன்)

Vajra said...

திரு. மு. பாருக்.

நான் பின்னூட்டத்தையெல்லாம் மட்டுறுத்துவதில்லை. ஆகவே, அது வெளியான உடன் தான் எனக்கே ஈ.மெயில் வரும்.

உங்கள் பின்னூட்டம் படித்தேன்.

நான் எங்காவது நான் தான் நடுநிலைவாதி என்று சொல்லியிருக்கிறேனா.

நடுநிலைவாதியாக தங்களைக் காட்டிக் கொள்வோர் முகமுடியை கிழிப்பது தான் என் வேலை.

மற்றவர்களைப்பற்றி குறை சொல்வது யார் ?

இதுவரை நடந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும், இஸ்லாமிய மக்கள் மோசமான நிலையில் வாழ்கிறார்கள் என்பதற்கும் நீங்கள் (அதாவது உங்கள் மதப்பெரியவர்கள்) யாரை குறை சொல்கிறார்கள் தெரியுமா ? யூதர்கள், அமேரிக்கர்கள், ஐரோப்பியர்கள், ஆப்பிரிக்கர்கள், புத்த மதத்தவர், மற்றும் இந்துக்களை.

தங்கள் பிரச்சனைகளுக்குத் தாங்களே பொறுப்பு வகிக்கவேண்டும் என்ற மன/மூளை முதிர்ச்சி இல்லாமல் அடுத்தவர் மீது பழி சுமத்தும் உங்களுக்கும்/உங்கள் மதப்பெரியவர்களுக்கும் உரக்கச் சொல்லும் உண்மை சுடுவதில் வியப்பேதும் இல்லை.

தெரிந்து தெளிதல் என்ற அத்யாதத்தில் உள்ள 10 திருக்குறள்களையும் தினமும் குரானுக்குப் பதில் படியுங்கள். உங்கள் வியாதி குணமடையும்.

முகமது பாருக் said...

அய்யா வஜ்ரா,

பதிலுக்கு நன்றி..

நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் பெயரைக் கொண்டோ பிறப்பைக் கொண்டோ ஒருவரை அடையாளம் கண்டால் அங்குதான் பிரச்சினை ஏற்படும். அதுதான் உங்கள் வியாதி என்று நினைக்கிறேன்.

யூதமதம், கிறித்தவமதம் மற்றும் முஸ்லிம் மதம் இது மூன்றும் தோன்றியது வளைகுடா நாடுகளில் அதைப் பற்றி நீங்கள் முதலில் படியுங்கள் தோழர் பா.ராகவனின் நிலமெல்லாம் ரத்தம் படித்தாலே புரியும்..பிறகு அதைப் பற்றி பேசலாம்..

புத்தமதம் ஏன் இந்தியாவில் இருந்து துரத்தப்பட்டது?..

உங்களைப் போன்றவர்கள் எந்த விசயத்தைப் பற்றி பேசுகிறோமோ அதை உதாசினப் படுத்திவிட்டு பெயர் மற்றும் பிறப்பு குறித்து விவாதத்தை திசை திருப்பி விடுவீர்கள்..

நான் கேட்ட கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை (அது எனக்கும் தெரியும்) வெறும் கோபம் மற்றும் மதத்தை பற்றியே புராணம் பாடுகிறீர்..

முதலில் தந்தை பெரியாரை முழுவதும் படியிங்கள் பிறகு பேசலாம்..

அதற்குதான் சொன்னேன் இந்த கணினி உலகத்திலும் உங்களைப் போல் சில அறிவுஜீவிகள் தங்களை வளத்துகொள்ள நினைக்காமல்

மக்களை பிரித்து வைத்து அவர்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் காட்டேரிகளை (எல்லா மதத்தைச் சேர்ந்த முட்டாள்களும்) ஆதரிக்கிறீர்கள் போல..

அய்யா திருக்குறளைப் பற்றி நீங்கள் பேசியதே அபூர்வமாக உள்ளது..

இன்ன செய்தாரை ஒருத்தர் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

இதை படிக்க நேரம் இல்லையோ..

நான் படித்த இவைகளிருந்து கற்றுகொண்டது

தோரா - மனிதனுக்கு மதம் கல்வியை போன்றது, ஒரே கடவுள் (யூதர்களின்)

பைபிள் - மனிதன் தன் நடத்தையால் இறைவன் ஆகலாம், ஒரே கடவுள் (கிறித்தவர்களின்).

திருகுரான் - மனிதனுக்கு தேவை அன்பும், இரக்கமும், பிறரை மதித்தல், ஒரே கடவுள் (முஸ்லிம்களின்).

பகவத் கீதை - மனிதன் எப்படி வாழ வேண்டும் இறைவனை எப்படி வணங்கவேண்டும், மூன்று முக்கிய கடவுள் (இந்துகளின்).

இதை எவருமே முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை, நடப்பதும் இல்லை..பிரச்சினை வரும்போது தன்னை காப்பாற்றிக்கொள்ள மதத்தை அனைவரும் போர்வை போலவே பயன் படுத்துகிறார்கள்..

அதனால் மதத்தை மறப்போம், மனிதனை நினைப்போம், மனிதத்தை வளர்ப்போம்..

**தமிழைக் கொண்டு தமிழனை அடிமை ஆக்கினால் அந்த தமிழையும் தூக்கி எறிவேன்** சொன்னவர் தந்தை பெரியார், இன்று இதை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

ஏனெனில் இதை நீங்கள் வேறு மொழியில் எழுதி இருந்தால் நான் கண்டிப்பாக பின்னூட்டம் இட்டுருக்க மாட்டேன்

தோழமையுடன்

முகமது பாருக்

Vajra said...

எனது தந்தை என் வீட்டில் இருக்கிறார். எனக்கும் உங்கள் தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் எதைச் சொன்னாலும் அதையெல்லாம் படித்து நான் கடைபிடிக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

நீங்கள் இஸ்லாமியராகப் பிறந்திருக்கலாம், பின்னர் மதத்தை விட்டு வெளியேறியிருக்கலாம். இல்லை வேறு மதத்தில் பிறந்து இஸ்லாமியராக மாறியிருக்கலாம். நான் இந்து.

இந்துவாகப் பிறந்து இந்துவாக வளர்ந்து வாழ்வேன் வாழ்கிறேன். உங்களுக்கு அதில் என்ன பிரச்சனை.

நான் என் மதத்தை தூக்கிப் பிடிப்பேன். உங்களுக்குச் சங்கடமாக இருந்தால் படிக்காமல் ஒதுங்கிவிடுங்கள்.

மீண்டும் சொல்கிறேன். நான் நடுநிலைவாதி அல்ல. நடுநிலைவாதியாக இருக்க எந்தத் தகுதியும் எனக்கில்லை. நான் ஒரு இந்து அபிமானி என்று என் வலைப்பதிவு படிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். அதில் உங்களுக்கு ஏதும் பிரச்சனையிருந்தால் அது உங்கள் பிரச்சனை என் பிரச்சனை அல்ல.

மலேகாவ் விவகாரத்தில் கர்னல் புரோஹித் போன்றவர்களை எல்லாம் இந்துத் திவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது என்று நான் எங்காவது சொல்லியிருக்கிறேனா ?
இவர்களை இந்துத்தீவிரவாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை மாறடிப்பவர்கள் நேற்றுவரை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது, தீவிரவாதிகளுக்கு மதம் இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த "மதச்சார்பற்ற"வர்கள் தாம்.

நீங்கள் பகவத் கீதை யெல்லாம் சுட்டும் போது நாங்கள் திருக்குறளை சுட்டுவதில் என்ன தப்பு ?

பா.ராகவனின் நிலமெல்லாம் ரத்தம் மட்டுமல்ல, அவர் எங்கிருந்தெல்லாம் விவரங்கள் எடுத்தாரோ அந்த வலைத்தளம், புத்தகங்கள் அனைத்தும் படித்திருக்கிறேன்.

முகமது பாருக் said...

//நான் என் மதத்தை தூக்கிப் பிடிப்பேன். உங்களுக்குச் சங்கடமாக இருந்தால் படிக்காமல் ஒதுங்கிவிடுங்கள்//

நீங்க இந்துவாகவே பிறந்து இந்துவாகவே வாழுங்கள் எந்த பிரச்சினையும் யாருக்கும் இல்லை அதே நேரத்தில் இந்தியர் மற்றும் தமிழர் என்ற அடையாளங்களில் வராதீர்கள்.

வந்தால் விமர்சனம் வந்தே தீரும். அதற்கு பதில் சொல்லத்தெரியாமல் சிறுபிள்ளைத் தனமாக நடக்காதீர்கள்.

நீங்க தூக்கியும் புடிங்க இல்ல துரத்தியும் புடிங்க அத உங்க வீட்டுல்ல வைச்சுகுங்க.

மீண்டும் சொல்கிறேன் வேறுமொழியில் (வேத மொழியில்) உங்கள் பதிவை இடவும்.இல்லையேல் கடவுச் சொல்லை(username & password) பயன்படுத்தி நீங்கள் மட்டும் உங்கள் சகாக்கள் பயன்படுத்துங்கள், வெகுஜன ஊடகத்திற்கு வந்து மனித குலத்தை அழிக்காதீர்கள்.

//நீங்கள் இஸ்லாமியராகப் பிறந்திருக்கலாம், பின்னர் மதத்தை விட்டு வெளியேறியிருக்கலாம். இல்லை வேறு மதத்தில் பிறந்து இஸ்லாமியராக மாறியிருக்கலாம். நான் இந்து.//

இந்த வரியை எதிர்பார்த்தேன், நீங்கள் சொல்லியதைப் போல் நடந்திருக்கலாம்..

தந்தை பெரியார் தோன்றவில்லை என்றால் தமிழனின் கதி என்ன? சிலபேர் மட்டும் படிப்பீர்கள் நாங்கள் என்ன தொழில் செய்கிறோமோ அதே தொழிலை பரம்பரையாக செய்ய வேண்டும் நீங்கள் எல்லாம் உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வளர்த்துக்கொல்வீர்கள்..நல்லா இருக்குங்க உங்க நியாயம்!!

//மலேகாவ் விவகாரத்தில் கர்னல் புரோஹித் போன்றவர்களை எல்லாம் இந்துத் திவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது என்று நான் எங்காவது சொல்லியிருக்கிறேனா ?
இவர்களை இந்துத்தீவிரவாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை மாறடிப்பவர்கள் நேற்றுவரை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது, தீவிரவாதிகளுக்கு மதம் இல்லை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த "மதச்சார்பற்ற"வர்கள் தாம்.//

இதைத்தானே அய்யா நானும் சொல்றேன் நீங்க எழுதியதையே மீண்டும் படியுங்கள் புரியும்..எந்த ஒரு இடத்திலும் சிறுபான்மையாக வாழ்பவர்கள் (மொழி, மதம்,இனம், சாதி) முதலில் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள், அவர்களை அடக்கி, அவமான படுத்தி, இரக்கமற்று கொல்வதற்கு வரை..

இதற்கு அடுத்த நடவடிக்கைதான் பெரும்பான்மையினர்க்கு எதிராக வெடிக்கும் புரட்சி, கலவரம் மற்றும் போர். இது இந்தியா, ஈழம் உட்பட உலக வரைபடத்தை இன்றும் அரித்துக்கொண்டுதான் இருக்கிறது..

நீங்கள் உங்கள் கருத்துக்களை வெகுஜன ஊடகத்தில் முன் வைக்கும்போது விமர்சனங்கள் வரும், வந்து கொண்டே இருக்கும்..

போன வருடம் நீங்கள் எழுதிய அலெக்ஸ்சாண்டர் பற்றிய பதிவுக்கும் நான் பின்னூட்டம் இட்டுருந்தேன், எனக்கு வரலாற்றில் கொஞ்சம் அதிகமாகவே ஈடுபாடு உண்டு அதனால்தான் உங்கள் bLOGக்கு வந்தேன்.

நீங்கள் சொல்வதுபோல் நீங்கள் இந்துவாகவே இருங்கள் நான் மனிதனாக இருக்க முயற்சி செய்கிறேன்

//பா.ராகவனின் நிலமெல்லாம் ரத்தம் மட்டுமல்ல, அவர் எங்கிருந்தெல்லாம் விவரங்கள் எடுத்தாரோ அந்த வலைத்தளம், புத்தகங்கள் அனைத்தும் படித்திருக்கிறேன்.//

மிக்க நன்றி

மனிதனைக் காக்க மதங்கள் வந்தது இன்று மதத்தால் மனித இனம் அழிந்து கொண்டு உள்ளது.

முகம் தெரியாத நீங்களும் நானும் படித்ததை பகிர வாய்ப்பு தந்த விஞ்ஞானம் வளர்ச்சிக்கு என் நன்றி

உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்


என்றும் தோழமையுடன்

முகமது பாருக்

Anonymous said...

இது வஜராவின் பதிவு டொண்டுவின் வலைப்பூவில்.

அங்கு என் பதில் ஏற்றப்படவில்லை. எனவே, இங்கு போட்டு விடுகிறேன். ஏற்றுவதும் இல்லாததும், வஜராவுக்கு.

’Jeyamohan and You need not worry about the manipulated history by anti-brahmins.

In the schools run by RSS in Maharastra, Rajasthan, MP and HP, and in the miltary Bonsole College in Nasik, the history books for children upto 9th Std. were written by Sangh-parivaar historians. What the book teach is exactly what you and Jeyamohan will approve.

If BJP comes to power, then, we can ask them to prescribe only such books throughout India!
//

We have been reading History written by Marxist nut cases for so long. All we studied is class struggle in ancient,medieval and modern india. These acorn head could not think anything other than class struggle.

If an alternate narrative might correct the course and bring history back to comman man and you would call that RSS doctored. Then you must join the asylum.

Please read Arun Shourie's Eminent Historians’

---------------------------------------


Vajra,

You have not understood me. I agree with your point that Indian history is botched.

So, the compromise solution would be:

to prescribe different history books to children as under:

(i) In schools run by RSS and other Hindu 0rganisations, the history books authored by RSS historians

(ii) In schools run by missionaries and other Christian orgainsations, history books authoried by their own people or people they like

(iii) Ditto for muslims and others.

(iv) The Hindus should send their children compulsorily to schools run by Hindus only so that they read the history authoried by RSS historians.

What is your view, Vajra? Do you agree with me?

Korkai

Vajra said...

I do not have to agree with you.
If you believe that a honest portrayal of the past is and must be written by RSS. Then you are naive.

PUTHIYATHENRAL said...

சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவா பயங்கரவாத சாமியார் அசீமானந்த் உள்ளிட்ட ஐந்து பேர் மீது தேசிய புலணாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2007ஆம் ஆண்டு இந்தியா VS பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்தது. இதில் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.

கடந்த நான்கரை ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பின், ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் சுவாமி அசீமானந்த், சுனில் ஜோஷி, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திர கலசங்கரா ஆகியோருக்கு எதிராக இன்று குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

CBI மற்றும் NIA போன்ற புலனாய்வு அமைப்புகள் கடந்த நான்கரை ஆண்டு காலம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தன அதன் அடிப்படையில் இன்று பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் அபிநவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக உள்ள அசீமானந்த் ஹைதராபாதில் மக்கா மசூதி குண்டுவெடிப்பு தொடர்பாக 2010 நவம்பர் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார். ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.