May 31, 2006

மத்திய கிழக்கில் அறிவியல் ஆராய்ச்சி

அறிவியல், ஆராய்ச்சி, படிப்பு என்று ஊற் சுற்றிவிட்டு, தொழில் பற்றி ஒரு பதிவு கூடப் போடவில்லை என்றால், அது தொழில் துரோகமாகிவிடும்.

இப்போது நிகழும் அரசியல் சமூகச் சூளலில், மத்திய கிழக்கில் அறிவியல் வளர சாத்தியக் கூறுகள் ஒன்றும் பிரகாசமாக இல்லை என்றாலும், ஓரளவிற்கு நம்பிக்கை மட்டும் இருக்கிறது. உலகில் உள்ள அறிவியலாளர்களை ஒன்று செர்க்க உலகப் போரின் பிறகு ஆரம்பிக்கப் பட்ட தெழில்னுட்பம் Synchrotron radiation facility. இந்த வசதியில், சில பல Giga electron volts களில் வரும் கதிர்வீச்சுகளில் ஆராய்ச்சி செய்ய பணம் முதலீடு செய்து ஆராய்ச்சிக் கூடம் கட்ட உதவிய நாடுகளிலிருந்து வரும் ஆராய்ச்சியாளர்கள் இந்த வசதியைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இதனால், பல நாட்டு அறிவியலாளர்கள், அடிக்கடி சந்தித்து பேசி கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளாலாம்.

இந்த synchrotron என்பது particle accelerator கள், +2 வில் வான் டி கிராஃப் accelerator, cyclotron (சைக்கிள் ஓட்ரான் அல்ல!!) போன்ற வார்த்தைகளை கேட்டிருப்பீர்கள், அதிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த ஒரு பெரிய அளவிலான அனு சிதைவு செய்து வெளிவரும் எலக்ட்ரான்களை அதிவேகமாக ஒரு வட்டப் பாதையில் செல்ல வைத்து நடுவில் ஆங்காங்கே காந்தங்களை வைத்து இந்த அதிவேக எலக்ட்ரான்களிலிருந்து பல கதிர்வீச்சுக்கள் வெளிவரவைக்கும் கருவி.

படத்தில் இருப்பது Grenoble ல் (ஃப்ரான்ஸ்) இருக்கும் 844 மீ சுற்றளவு கொண்ட synchrotron.

ஐரோப்பா, மற்றும் அமேரிக்காவில் இத்தகய synchrotron வசதிகள் நிரய உள்ளன. மத்தியகிழக்கில் தொடர்ந்து போர்ச் சூளல், மதத்தினால் வெறுப்பு, எவ்வளவு தான் உதவ முன்வந்தாலும் உதவிகளை ஏற்காமல் பூண்டோடு அழிக்க நினைக்கும் மனோபாவம். இவையெல்லாம் இருந்தும், சில வருடங்களாக, எகிப்து, ஜோர்டன், சவூதி, ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீன, அறிவியலாளர்கள் ஒன்று சேர்ந்து ஐரோப்பாவில் இருப்பது போன்றதொரு synchrotron வசதியை கட்ட முயற்சி செய்துவருகின்றனர். இதற்குப் பெயர் SESAME, Synchrotron-light for Experimental Science and Applications in the Middle East. இதைப் பற்றி மேலதிக விவரங்கள் பெற சுட்டி.

மத்தியகிழக்கில் அரபியர்களுக்கும், யூதர்களுக்கு இருக்கும் ஒற்றுமைகள் (மன, மத, உடல் ரீதியான) அதனால் வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது. மரபணு சம்பந்தப் பட்ட வியாதிகள் பல, அரபியர்களுக்கும் யூதர்களுக்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள் உள்ளதால் அது பற்றி கூட்டு ஆராய்ச்சி செய்ய உதவும்.

என்னது? ஈரானியர்களும், இஸ்ரேலியர்களும் ஒரே இடத்தில் உட்கார்ந்து அறிவியல் பேசுகின்றார்களா?

ஆம், இது உண்மை. இது என் கனவில் அல்ல, நிஜத்தில் தான் நடக்கிறது. ஆனால் என்ன, எக்கச்செக்க அரசியல் பிரச்சனை என்பதால் வெகு மெதுவாக நடக்கிறது. இஸ்ரேலிய அறிவியலாளர்கள் கருத்து என்னவென்றால், ஐயா!, இது நடப்பதே நம் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள். மதங்களுக்கு அப்பார்பட்ட மனித நேயம் மத்திய கிழக்கில் புதிய சிந்தனை. இந்த சிந்தனை வளர்ச்சி அடைந்து அமைதி நிலவ வேண்டும் என்று பலர் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கு இது முதல் படி.

May 27, 2006

அமீர்கான் Vs குஜராத்


இந்தியப் பத்திரிக்கைகளுக்கு குஜராத், மோடி, ப.ஜ.க என்றாலே ஒரு தனி வெறுப்பு. சில நாட்களாக இந்தி திரைப்பட உலக நட்சத்திரம் அமீர் கானின் ஃபனா (फ़ना) திரைப்படம் பிரச்சனைகளில் சிக்கியுள்ளது.
பிரச்சனை இது தான், அமீர் கான் குஜராத் ப.ஜ.க பற்றி நர்மதா அணைக்கட்டுப் பிரச்சனையில் அவர் கருத்தை வெளியிட்டதும், அது குஜராத்தில் உள்ள ஒரு சில ப.ஜ.க தொண்டர்கள் கோபத்தை கிளரிவிட்டதும், அதனால் திரையிட்டால் பிரச்சனைதான் என்றெண்ணி குஜராத் Multiplex திரையரங்குகளின் முதலாளிகள், படத்தை வெளியிடாதது.

இங்கே, படத்திற்கு "தடை" என்று ஒன்றுமே கிடயாது. தடை என்பது, ஒரு அரசால் தீர்மான்க்கப் பட்டு படத்தை வெளியிடாமல் இருப்பது (பஞ்சாப், கோவா, நாகாலானிதில் Da Vinci Code). இங்கே அரசின் தலையீடே கிடயாது. மாறாக ப.ஜ.க மேலிடம் இந்தப் பிரச்சனியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது.

ஒரு சில அறிவற்ற ப.ஜ.க கட்சி தொண்டர்களினால் (அரை வட்டம், கால் வட்டம் கேசுகள்) மிரட்டல்கள் வரலாம். தவிரித்து, நர்மதா பிரச்சனை, குஜராத் மக்கள் மனதில் எப்பொழுதுமே எரியும் பிரச்சனை. மக்கள் மனதில் மேத பட்கர் ஒரு Anti-Development கேசு என்பது தெளிவாகப் பதிவாகியிருக்கிறது. அமீர் கான் அவர் நர்மதா பிரச்சனையில் தலியிடுகிறேன் பேர்வழி என்று ப.ஜ.க அரசை (நரேந்திர மோடி அரசை) குற்றம் கூறி அறிக்கை வெளியிடவே, அது எரியும் நெருப்பில் எண்ணை உற்றிவிட்டது. திரையரங்கு நடத்துபவர்களும் குஜராத்தில் வாழ்பவர்கள் தான் அவர்களுக்கும் அமீர் மேல் கோபம். அவர் படத்தை வெளியிடாமல் நிறுத்திவிட்டனர்.

குஜராத் ப.ஜ.க வில் ஒரு சில பித்தம் தலைக்கேறிய கேசுகள் (Hotheads) இருப்பது உண்மையே, அவர்கள் இது போல் உள்ள சூள்நிலைகளில் தங்களுக்குச் சாதகமாக ஏதாவது செய்து கொள்ள இப்படி கிளரிவிடுகின்றனர். குஜராத் காங்கிரஸில் கூட அமீர் கான் படத்தை வெளியிட பிரச்சனை செய்கின்றனர் (அதை சுலபமாக பத்திரிக்கைகள் மரைத்துவிடுகின்றன). இது இந்தியாவிற்குப் புதிதல்ல. எப்போதுமே நடப்பது தான். City of Joy பிரச்சனையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தும் மே. வங்கத்தில் இதே தான் நடந்தது.


அமீர் கான் பத்திரிக்கைகளிலும், மற்ற அச்சு ஊடகங்களிலும், வெளிவரும் செய்திகளை நமபத்தகுந்தவைகளாக இல்லை என்று கருதுகிறார். ஆனால் அதே வேளையில் மேதா பட்கர் ஐ ஆதரித்துப் பேசியபோது அதே அச்சு ஊடகங்களின் செய்திகளை "நம்பி" த்தான் இட மாற்றம் செய்யப் படும் மக்களுக்காக பேசியதாகக் கூறுகிறார். இதை அவரிடம் கேட்டால், ப.ஜ.க வைப் பொரிந்து தள்ளுகிறார்.

சுற்றுப்புறச் சூளல் மாசுபட, நிலத்தடி நீர் காய்ந்து போக முனைப்புடன் செயல்படும் கோகா கோல பன்னாட்டு நிருவனத்தின் Poster-boy ஆக இருக்கும் அமீர் கான் நர்மதா பிரச்சனையில் நடந்து கொள்ளும் விதம், ஒன்றுக் கொன்று முரணாக இருக்கிறது.

May 21, 2006

ஆசிய ஆன்மா அறுவடை செய்ய மதச் சுதந்திரம்

நேற்று ஹிந்துஸ்தான் டைம்ஸில் வந்த செய்திக் குறிப்பில், கத்தோலிக்க முக்கிய மடாதிபதி யான போப் பெனிடிக்ட் 14 அவர்கள், இந்தியாவில் சில மாநிலங்களில் அமலில் உள்ள கட்டாய மத மற்றத் தடை சட்டத்தைக் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

"The country should firmly reject any attempts to legislate clearly discriminatory restrictions on the fundamental right to religious freedom"

இதை இந்தியாவின் வாடிகன் தூதுவர் அமித்வா த்ரிபாதியிடம் கூறியதாக செய்திகள் வெளியான வண்ணாம் உள்ளன.

இந்திய அரசாங்கம் போப்பின் இந்த குற்றச்சாட்டை மிதமான வார்தைகளால் மறுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

"It is acknowledged universally that India is a secular and democratic country where adherents of all faiths enjoy equal rights,"


ஒருவர் தான் சுயமாக மனம் விறும்பி மதம் மாறுவது வேறு, கூட்டம் கூட்டமாக, ஒரு கிராமமே மதம் மாறுவது என்பது வேறு. இந்தியாவில் இரண்டாவது தான் அதிகம் நடக்கிறது, அதை தடை செய்யவே கட்டாய மதமாற்றத் தடை சட்டம். பணம்கொடுத்து மதம் மாற்றுவது, குழந்தைகளை மூளைச் சலவை செய்வது, வேலை கிடைக்கும் என்று சொல்லி மதம் மாற்றுவது, போன்ற காரியங்கள் செய்யும் கிறுத்துவப் பாதிரியார்களின் "ஆன்மா அறுவடை" வேலை பாதிக்கப் படும் என்று போப் கவலைப் படுகிறார் போலும்.

வழக்கம் போல், வண்மையாகக் கண்டனம் தெரிவித்தது RSS மற்றும் BJP யினர் மட்டுமே. Outlook ல் வந்த செய்தி.

"The Pope's remarks on religious freedom is not relevant to India. There is much more freedom here than in many countries. Freedom of religion does not mean conversions by coercion and allurements"

தமிழில் ஆப்பிள்..

ஆப்பிள் மக்கிண்டோஷ் பிரியர்கள் அதுவும் தமிழில் ஆப்பிள் மக்கிண்டோஷ் பயன்படுத்துபவர்கள் வெகு சிலரே. சென்ற வருடம் ஆப்பிள் Mac OS X Tiger வெளிட்யிட்டது. அதில் தமிழும் சேர்த்திருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயமே.

அதை பயன்படுத்த நினைப்போர் System preferenceக்குச் சென்று, International என்கிற பகுதிக்குள் க்ளிக்கிவிட்டு, படத்தில் தெரிவது போல், ஆப்ஷன்களை தேர்வு செய்துகொண்டீர்கள் என்றால் தமிழில் பக்கங்கள் பார்க்க, எழுத உதவும்.

நான் சிலகாலமாக, ஆப்பிள் தமிழ் எழுத்துருக்களைத் (Fonts) தேடிக் கொண்டிருந்தேன், இணைமதியைத்தவிர வேறு என்த True Type யூனிகோடு எழுத்துருக்களும் சரியாக வேலை செய்யவில்லை. விஷயத்தை ஆராய்ந்த போது. ஆப்பிள் பயன்படுத்துவது ATSUI-Apple Type Services for Unicode Imaging. என்கிற Unicode Engine.

தமிழில் இணயத்தில் கிடைக்கும் எழுத்துருக்கள் அனைத்தும் Uniscribe என்கிற Unicode Engine கொண்டு வடிவமைக்கப் பட்டதால். ஆப்பிளில் எழுத்துக்கள் உடைந்து தெரிகின்றது. (முக்கியமாக, உயிர் மெய் எழுத்துக்கள்)ஆப்பிள் OS X 10.3 (Panther)அதற்கு முந்தய பதிவுகள் பயன் படுத்துவோர் தமிழில் எழுத (Uniscribe Open type Font களைப் பயன் படுத்தி ஆனால் அதை ATSUI க்கு ஏற்றார்போல் மாற்றி..என்று நினைக்கிறேன்) Xenotypetech போன்ற நிறுவனத்திடமிறுந்து வாங்கும் மென்பொருள் தேவைப் பட்டது. 10.4 (Tiger)ல் அது தேவை இல்லை.

இது தொடற்பாகத் தேடிப் பிடித்ததில், ஆப்பிள் மக்கின்டோஷில் தமிழ் இந்த ஒரே ஒரு வலிப்பூ தான் இது சம்பந்தப் பட்டதாக இருந்தது.

இந்தப் பதிவு பதிக்க முக்கிய காரணம்,
 1. ஆப்பிளில் கூடவே வரும் ATSUI ல் எழுதப்பட்ட இணைமதி எழுத்துரு தவிர வேறு ஏதும் ஆப்பிளில் பயன் படுத்த ஏதுவான எழுத்துரு இணயத்தில் இருக்கிறதா? என்று கேட்கவும்
 2. தகவல் தெரிந்த்தோர், இணயத்தில் ஆப்பிள் பிரியர்கள் (வெறியர்கள்..என்னைப் போன்ற..) தமிழில் எழுதி தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு சேவகம் செய்ய உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதற்காகவும் தான்.

May 20, 2006

இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-5


யூதர்கள் என்றுமே Two state solutionஐ ஏற்றுக் கொண்டதில்லை.

Naom Chomsky புத்தகங்களைப் படித்தால் பல இடங்களில் யூதர்கள் என்றுமே Two state solution ஏற்றுக் கொண்டதில்லை போல் எழுதியிருப்பார். நம் நாட்டிலும் பல பத்திரிக்கைகள் இதையே உண்மைபோல் ஏற்றுக் கொண்டு செய்திக் கட்டுரைகள் எழுதுவதுமாக உள்ளனர்.

We must only recall the real world, in which the PLO had been calling for negotiations ad peaceful settlement with Israel for many years while the US and Israel never countered with any 'reasonable people ready to make peace,' just as they do not today


உண்மை என்ன?

என்று இந்த Two state solution தீர்வாக வைக்கப் பட்டதோ அன்றே, யூதர்கள் ஏற்றுக் கொண்டதும், அரபுகள் ஏற்றுக் கொள்ளாததும் தான் உண்மை.

1937ல் ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் இருந்த பாலஸ்தீன நிலப்பகுதியைப் பற்றி Peel கமிஷன் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.அதில் Two state solution ஒரு தீர்வாக வைக்கப் பட்டிருக்கிறது.

யூதர்கள் இந்தத் தீர்வை ஏற்றுக் கொண்டனர். அப்போதிருந்த சூளலில் ஐரோப்பாவில் Anti-semitism தலைவிரித்தாடிக் கொண்டிருந்த நேரத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு இடம் கிடைத்தால் போதும் என்றெண்ணி ஏற்றுக் கொண்டனர்.


அரபுமக்கள் இந்த Peel கமிஷன் அறிக்கையை ஏற்க முற்றிலும் மறுத்துவிட்டனர். அவர்கள் கேட்டது, பாலஸ்தீன் முற்றிலும் அரபு ஆட்சியில் இருக்கவேண்டும், மற்றும் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் யூதர்கள் பாலஸ்தீனைவிட்டு வெளியேற்றவேண்டும் என்பது தான்.

Peel கமிஷன் இந்தப் பிரச்சனையை உடனடியாக கண்டுகொண்டு, ஒரு விவாதத்திற்கு ஏற்பாடு செய்தபோது, அரபுகள் யூதன் இருக்கும் இடத்தில் அமர்ந்து பேசக்கூட மறுத்ததாகக் கூறுகிறது.

அரபுகள், தங்களுக்கென்று ஒரு நாடு உருவாகாவிடிலும் பரவாயில்லை, ஆனால் யூதர்கள் நாடு என்று ஒன்று உருவாகக் கூடாது என்பதில் திண்ணமாக இருந்தனர் என்பதை பீல் கமிஷன் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மேலும் பாலஸ்தீனர்கள், சிரியாவிலிருந்த மன்னர் ஆட்சியை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் அரபுகள், யூதர்களுக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தத் துவங்கினர். இதைக் கண்டு ஆங்கிலேயர்கள், யூதர்களுக்கு எதிராக தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது. 1939 ல் வெளியிடப்பட்ட White paper யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வருவதற்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டதாகக் கூறுகிறது.

Michael Oren என்பவர் இவ்வாறு கூறுகிறார்.

Though the british has steadily abandoned their support for the Jewish National Home, the home was already a fact: an inchoate burgeoning state

ஆனால் இந்த நாடு முழுதாக உருவாவதற்கு ஆங்கிலேயர்கள் அரபுகள் பேச்சைக் கேட்டுத் தடையாக இருந்தனர்.


அந்த நேரத்தில் ஹோலோகாஸ்ட் அரங்கேறிக் கொண்டிருந்தது ஐரோப்பாவில். அரபுகள் மட்டும் அந்த பீல் கமிஷன் Two state solution ஐ ஏற்று கொண்டிருந்தால் யூதர்கள் ஐரோப்பாவைவிட்டு வெளியேறி ஹோலோகாஸ்ட் நடக்காமலே போயிருக்க வாய்ப்பு இருந்தது.

ஜெர்மனியிலும் மற்ற ஐரோப்பாவிலும் யூதர்களை வெளியேரச் சொன்னார்கள், ஆனால் அவர்கள் போவதற்கு இடமேதுமில்லை, Gas chamber கள் தவிர.

May 19, 2006

படங்காட்றேன்....!!-3

முந்தய படங்கள் துடுப்பு-1, துடுப்பு-2

கெஃபர்னௌம் (Capharnaum).


இது தான் ஏசு கிறுஸ்து வாழ்ந்த கிராமம். ஒரு பழய யூத கிராமம், ஆலிவ் விதைகளைச் செக்கிலிட்டு அரைத்து வரும் எண்ணையை வியாபாரம் செய்து பிழைக்கும் மக்கள். ஊருக்கு நடுவில் கோவில். சுற்றியும் வீடுகள். கடைகள்.

இன்று இது ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்த கிறுஸ்துவப் புனிதஸ்தலம்.

முக்கியமான இடங்களில் கன்னாடிக் கூண்டு போட்டு புதைபொருள் ஆராய்ச்சி இன்னமும் செய்கின்றனர்.


யூதத் தேவாலயத்தின் கட்டமைப்பு கி.பி 500 க்கு பிறகானதாக இருக்கும். ஆனால், Vatican இது தான் கிறிஸ்து வந்து தொழுகை செய்த யூதத் தேவாலயம் என்று அடித்துச் சொல்கிறது.

May 18, 2006

"திம்மி"க்களும் டாவின்சி கோடும்...

இந்த பதிவு எனது கருத்தைத் தான் சொல்கிறது. இது Poltically correct என்றும், இது தான் சரி, இது தவறு என்றும் வாதிடுவதற்காக அல்ல.

Dan Brown எழுதிய The Da vinci code என்ற புத்தகம், வெளிவந்து சக்கை போடு போட்டு, கிட்டத்தட்ட 55 வாரம் வரை டாப் டென் லிஸ்டில் இருந்தது. இன்றும், அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

சோனி நிறுவனம், Ron Howard இயக்கத்தில் இந்தக் கதையை முழு நீளத் திரைப்படமாக எடுத்து 19/05/2006 உலகெங்கும் வெளியிடவுள்ளது.
கதையில், கிறுத்துவ மதம் வளர்வதற்கு வாதிகன் (Vatican) பல பொய்கள், புரட்டுகள் சொல்லி உண்மைகளை மரைக்கின்றது என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதில் ஏசு கிறுஸ்து மேரி மக்டாலேனை மணந்து குழந்தைகள் பெற்றெடுத்தார் எனவும், இந்த வாரிசுகள் தான் Holy grail என்றெல்லாம் கதை செல்கின்றது. இதில் வாதிகனுக்கும் ஒரு ரகசிய கூட்டமைப்பிற்கும் நடக்கும் போராட்டம் தான் கதையின் முக்கிய அம்சமாக புத்தகத்தில் இருக்கிறது.

இந்தியாவில் படம் வெளிவரக் கூடாது என்று Catholic Secular forum மற்றும் சில கிறுத்துவ அமைப்புகள் கூட்டமைப்பு, போராட்டம் செய்கிறது. அதைக் கேட்டு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரியா ரஞ்சன் தாஸ்முன்ஷி கதோதிக மதகுருக்கள், படம் அவர்கள் நம்பிக்கைக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தால் தடை செய்யலாம் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

இது மிகவும் வெட்கக் கேடான விஷயம். இதை Dhimmitude என்று நான் கூறுவேன்.சில காலம் முன்பு, M.F.Hussain இந்துக்கள் மிகவும் மதிக்கும் சரஸ்வதியை ஆடை யின்றி வரைந்தது நினைவிருக்கலாம். இந்து கலாச்சாரத்தில் இத்தகய சித்திரங்கள், சிற்பங்கள் இல்லை என்பதற்கில்லை. ஹுசைன் தனது படங்கள் அனைத்திலும் அத்தகய ஸ்டைலைப் பயன்படுத்தியிருந்தாரே என்றால் ப்ரவாயில்லை, சரஸ்வதி, சீதா, அனுமன், பார்வதி, சிவன் எல்லாம் விகாரமான Sexually provoking கோணத்திலும், ஃபாதிமா, ஹுசைனின் தாயார் படங்கள் அழகான ஆடையுடன் வரயப்பட்ட சித்திரங்களாக இருப்பது கேள்வியை எழுப்புகிறது. இதை கேட்டு, போராட்டம் செய்தவர்களை "communal" பட்டம் கட்டி கண்டபடி திட்டியது இந்தியப் பத்திரிக்கைகள் பல. அப்போது தடை செய்யக் கோரியவர்களிடம் பேசக்கூடவில்லை இந்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமச்சர்.

டென்மார்க் கார்டூன்கள் எழுப்பிய எதிர்ப்பு அலையில் இந்தியா டென்மார்கிடம் கண்டனம் தெரிவித்தது நினைவிருக்கலாம்.


மறுபடியும் இந்த டாவின்சி கோடுக்கு வருவோம்,

Vatican கூட தடைசெய்யக் கோராத இந்த படத்துக்கு, இந்தியாவில் தடை செய்யக் கோறும் இந்த Secular அமைப்பும், அதை கேட்டுக் கொண்டு மத்திய அமைச்சகம் மறு பரிசீலணை செய்ய சென்ஸார் போர்டுக்கு அனுப்புவதும். கேவலமான "திம்மி" மனப்பாங்காகத் தெரிகிறது.

1-2% இருக்கும் கிறுத்துவர்கள், 13-15% இருக்கும் இஸ்லாமியர்கள் என்ன சென்னாலும் சரி. 80% சதவிகித இந்துக்கள் மனம் கோணும் வகையில் ஒரு இஸ்லாமியன் வரைந்த படத்தை தடை செய்ய மனம் வரவில்லை. இதுவே மதச்சார்பின்மை. வாழ்க இந்திய "திம்மி" மனப்பாங்கு.

May 13, 2006

படங்காட்றேன்....!!-2

மஸாதா மற்றும் Dead Sea பற்றிய படங்கள் மற்றும் எனது அனுபவங்கள்

கி.பி 73 ல் ஜெரூசலம் ரோமானியர்களால் கைப்பற்றப் பட்டபோது, யூதர் அனைவரும் ஒன்று வெளியேறிக் கொண்டிருந்தனர் இல்லை, ரோமானிய மன்னர் ஆட்சியில் வாழத் தங்களை தயார் படுத்திக் கொண்டனர். ரோமானியர் ஜெரூசலத்தைத் தாக்க முக்கிய காரணம் யூதர்களின் புரட்சி.

அந்த புரட்சி வெறியர்கள் மெனஹீம் பென் யெஹூதா தலமையில் (zealots ஹீப்ரூவில் கனாய் என்பார்கள், அர்த்தம் one who is jelous on behalf of God) சிலர் ஹெரோட் மன்னன் கட்டிய மஸாதா கோட்டையை அங்கிருந்த சிறு ரோமானியப் படையிடமிறுந்து கைபற்றி அதில் மறைந்து கொண்டனர்.

ஃப்ளேவியஸ் ஸில்வா தலமையிலான ரோமானியப் படை இந்தக் கோட்டையை முற்றுகையிட்டது. ரோமானியர்கள் புரட்சியாளர்களை கைது செய்தே தீருவது என்ற நோக்கில், புரட்சியாளர்கள் தப்பிக்க முடியாதபடி, கோட்டையின் அனைத்து வழிகளயும் அடைத்துவிட்டனர். அடிமைப் படுத்தப்பட்ட யூதர்கள் தான் இந்த வேலைக்கு அமர்த்தினர் என்பது சரித்திரம்.


படம் 2: ரோமானிய படையின் தங்குமிடம் மஸாதா உச்சியிலிருந்து.

பென் யெஹூதா தலமையிலான புரட்சியாளர்கள் ரோமானியர்களிடம் அடிமையாவதைவிட தற்கொலை செய்து கொள்வது மேல் என்று எண்ணி உயிர் துரந்தனர். அவர்கள் அப்படிச் செய்ய அவர்களின் தீவிர புரட்சி எண்ணம், யூதர்கள் அடிமைப்படக்கூடாது என்ற சுய மரியாதையை விட்டுக் கொடுக்காத ஒரு மன நிலை, என்று பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அவர்கள் தற்கொலை செய்து கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சி வித்தியாசமானது. பத்து பெயர்களை சீட்டில் எழுதிப் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர் மற்ற ஒன்பது பேரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளவேண்டும். இப்படி கிட்டத்தட்ட 1000 பேர் இறந்துள்ளனர். கடைசியாக இரு பெண்களும், ஒரு குழந்தையும் தற்கொலைக்கு பயந்து ஒளிந்துகொண்டு ரோமானியர்களிடம் மாட்டிக் கொண்டனர். இந்த புரட்சியாளர்களைப் பர்றி மேலதிக தகவல்கள் பெற விக்கிபீடியா சுட்டி. இப்பொழுது கோட்டை தரை மட்டமாகிவிட்டது.படம் 3: கோட்டையின் மேற்கு நுளைவு வாயில் மிஞ்சியிருக்கும் சிதிலங்களில் ஒன்று.

இந்த மஸாதா ஒரு யூத சுய மரியாதைக்குறிய எடுத்துக்காட்டாக இன்று இருப்பதும், "மஸாதா மறுமுரை வெளி நாட்டவர் கையில் விழாது" என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள ஒவ்வொறு வருடமும் IDF ல் இணையும் வீரர்கள் வருகின்றனர்.

Dead Sea
இதைப் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை, இதில் மூழ்க முடியாது. தண்ணீரில் மிக அதிக உப்பு இருப்பதனால், தண்ணீர் விழக்கேண்ணை போல் அடர்த்தியாக இருக்கும். அதனால் தான் சுமோ வீரர் கூட இதில் மிதக்க முடியும். கடல் மட்டத்திலிருந்து 400 மீ ஆழத்தில் இருக்கிறது. யாம் அ மெலாக்ஹ் என்று ஹீப்றூ வில் இதைக் குறிப்பிடுகின்றனர். அர்த்தம் "உப்பு ஏரி".

May 12, 2006

இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-4

யூதர்களில் பலர், பாலஸ்தீனர் ஆதரவாக அவர்கள் விடுதலைக்காக குரல் கொடுப்பது ஏன்? (இது இஸ்ரேல் ஆதரவாக வந்த கேள்வி என்றே வைத்துக் கொள்ளலாம்).

இதில் பிரச்சனை என்ன வென்றால், இதைக் காரணம் காட்டி இஸ்ரேல் தான் தப்பு செய்கிறது என்ற வாதம் வைக்கப் படுகிறது. உதாரணமாக மு. மாலிக் அவர்களின் Israel lobby என்ற பதிவைப் பார்க்கலாம்.

"Following the line of Judha Magnus, the great critical efforts of non- or Anti-Zionist Jews like Emer Berger, Israel Shahak, Noam Chomsky, Mazine Rodinson, Liva Rokach, I.F. Stone, many of them sponsered or directly encouraged by arab effors in the West, forever dismissing the myth of Zionist innocence"

சொன்னவர்கள், Edward Said, Christopher Hitchens.

"The true Jews remain faithful to Jewsih belief and are not contaminated with Zionism. The trye jews are against dispossesing the Arabs o their land and homes. According to Torah, the land should be returned to them"

சொன்னவர் Neturei Karta (USA), இவர் ஒரு Ultra-orthodox யூதர்.


உண்மை என்ன?

இஸ்ரேலியர்கள், மற்றும் யூதர்களிடம் காணப்படும் பேச்சு, எழுத்துச் சுதந்திரத்தால், எத்தகய கருத்துக்களும் வரவேற்று பிரசுரிக்கப் படும் பத்திரிகைகள், நாளிதள்கள், தொலைக்காட்சி channel கள் இஸ்ரேலில்.

அதே சமயத்தில் பாலஸ்தீனர்கள், மற்றும் அரபு தேசங்களில் உள்ள அதி தீவிர கட்டுப்பாடு மற்றும் எதிர்த்துப் பேசுபவர்களுக்கு வெளியிடப்படும் பத்வாக்கள். எத்தகய கருத்துச் சுதந்திரமும் இல்லாத சூளலில் பாலஸ்தீன். எப்படி எதிர்ப்புக் குரல் வரும்?

இவை இரண்டையும் ஒன்றோடொன்று உவமிப்பது (ஒத்துப் பார்ப்பது) ஞாயமற்றது.


இஸ்ரேலில் யூதர்களைத் தவிர, பத்து லட்சத்திச் சொச்சம் பாலஸ்தீனர்கள், அரபு மக்கள் இஸ்ரேலில் அதே கருத்துச் சுதத்ந்திரத்துடன் இருக்கிறார்கள்.


யூதர்களிடயே என்றுமே ஒரு சிறுபான்மையினர் அடிப்படைவாத தீவிரவாத கருத்துக்கள் வைத்திருப்பது மரபாகவே உள்ளது. இன்றய இஸ்ரேலியர்களை எடுத்துக் கொண்டீர்களேயானால், மேசியாவை எதிர்பார்ப்பவர்கள், ஸயனிஸ எதிரிகள், மாவோயிஸ்டுகள், ஸ்டாலினிஸ்டுகள், உலகம் தட்டை என நம்புபவர்கள், ஹோலோகாஸ்ட் நடக்கவில்லை என்பவர்கள், என்று பல நம்மால் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாத தீவிர அடிப்படைவாத கருத்துக்கள் வைத்திருப்பவர்களைப் பார்கலாம்.


இது போன்ற கருத்துக்கள் வருவதற்க்கு முக்கிய காரணம், அமேரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் உள்ள கருத்துச்சுதத்ந்திரமிக்க பத்திரிக்கைகள் எத்தகய கருத்தையும் வரவேற்பதும், அதை யூதர்களே எதிர்பார்பதும் தான். ஒரு ஒப்புக்கு பாலஸ்தீனத்தை எடுத்தீர்கள் என்றாலும், அங்கே எதிர்ப்புக் குரலை உடனடியாக அடக்குவது, தேவைப்பட்டால் போட்டுத்தள்ளுவது என்று தீவிர கட்டுப்பாட்டுடன் தான் எந்த Media வும் இயங்குகிறது.


பாலஸ்தீன தொலைக்காட்சி Channel களில், பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களால் கொல்லப்படுவதைத் தவிர இஸ்ரேலியர்கள் குண்டு வெடிப்பு பற்றி படச்செய்திகள் காட்ட மாட்டார்கள். Gaza நிலப்பகுதியை ஷரோன் தலமையிலான இஸ்ரேலிய அரசு தன்னிச்சயாக விட்டு வெளியேரியபோது, இஸ்ரேலிய செய்திகள் அதற்கு எதிர்ப்பையும், அதனை ஆதரிப்பவர்களின் குரல்களையும் காட்டின. பாலஸ்தீன TV யில் இஸ்ரேலியர் எதிர்ப்பை மட்டும் கட்டிவிட்டு முடித்துக் கொண்டனர்.

Yoram Kinuik என்ற இஸ்ரேலில் அமைதி நிலவவேண்டும் என்று எண்ணுபவர் (Israeli peace movement) வெறுத்துப் போய் சொன்ன வார்த்தைகள்.

Since the failure of the Camp David talks, when the truth came out, I've had to face the fact that the Arabs simply don't accept Israel being here. Our peace partner is suicide bomber"

ஒரு யூதனே பாலஸ்தீனர்களை ஆதரிக்கின்றான் என்றால் பாலஸ்தீனர்களிடம் தான் ஞாயம் உள்ளது என்று விவாதிப்பது அடிப்படையிலேயே தவறான கண்ணோட்டம், குழந்தைத்தனமான விவாதமும் கூட. எடுத்துக் காட்டாக, ஹோலேகாஸ்டை மறுக்கும் யூதர்களும் இருக்கிறார்கள், மற்றும் வெகு பிரபலமான நோம் சாம்ஸ்கி போன்ற யூதரும் அத்தகய நோக்கை அங்கீகரிக்கிறார் என்றால், உடனே ஹோலோகாஸ்ட் போன்றதொரு கேடு கெட்ட செயல் நடக்கவில்லை என்று சொல்ல முடியுமா?

"This argument by Ethnic admission is logically and emprically fallacious"
கூறியவர் Allan Dershowitz.

கடைசியாக, யூதன், யூத மதம் என்றாலே ஒவ்வாமையில் கஷ்டப்படக்கூடிய அறிவு ஜீவிக்கள் யூத மதத்திலேயே இருந்தனர்/இருக்கின்றனர். Karl Marx ஒரு நல்ல உதாரணம். அத்தகய செயல்பாடுகள், அவர்கள் கருத்துக்கள், தத்துவ வடிவமாகக் கொண்டு ஆராயப்படவேண்டுமே தவிர அரசியல் வடிவில் ஏற்றுக் கொள்ளக்கூடாது. நோம் சாம்ஸ்கி, எட்வர்ட் செட் கருத்துக்கள் அரசியல் வடிவம் ஏற்றுக் கொள்கொள்வது துர்பாக்கியமானது.

May 11, 2006

இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-3

இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான செயல்களே, அரபு-இஸ்ரேலியர்களின் பிரச்சனைகளுக்கு மூல காரணம்

There is no symmetry in theis conflict. One would have to say that. I deeply believe that. There is a guilty side and there are victims. The palestinains are the victims


சொன்னவர் Edward Said.

உண்மை என்ன?

இஸ்ரேலை அங்கீகரிக்க மறுக்கும் அரபு தேசங்களால் தான் அரபு-இஸ்ரேல் பிரச்சனையே.

பி. எல். ஓ, அரபு தேசங்கள், பாலஸ்தீனிய மக்கள் Two state solution ஐ ஏற்றுக் கொள்ள 1937 லேயே மறுத்துவந்ததும், இன்னமும் ஹமாஸ் போன்ற இயக்கங்கள் மறுப்பதும் உண்மை நிலவரம். சிறிது காலம் முன்பு (பாலஸ்தீனத்தில் தேர்தல் நடக்கும் முன்னர்) அதன் அதிபர் அப்பாஸ் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர் கட்டுப்பாட்டுள்ள பகுதிகளில் உள்ள திரையரங்குகளிலும், கேபிள் டீ.வி க்களிலும் தோன்றி Two state solution பிரச்சனையைத் தீர்துவிடும் என்று உறுதியாக பிரச்சாரம் செய்தார். விளைவு, தேர்தலில், ஹமாஸ் அமோக வெற்றி பெற்று இஸ்ரேலை அழிப்பதே நோக்கம் என்று குதித்துக் கொண்டிருக்கிறது. அவர் பாவம் தோற்றுவிட்டார்.

அரபு, மற்றும் இஸ்லாமியத் தலைவர்களுக்கு, முஸ்லீம்கள், பாலஸ்தீனர்களின் சுய மரியாதையை (அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் கூட ) விட, யூதர்களை விரட்டவேண்டும், இஸ்ரேலை அழிக்கவேண்டும் என்ற வெறி தான் அதிகம் இருந்தது/இருக்கிறது.

2002 ல் அராஃபத்தால் நியமிக்கப்பட்ட Muslim Trust of Jerusalem த்தின் நீதிபதி,

All palestine is Islami land....The jews userped it....There can be no compromise on islamic land....அவர் வெளியிட்ட ஃபத்வாவில் எந்த பாலஸ்தீனரும் அவரது நிலத்தை யூதர்களுக்கு விற்கக்கூடாது என்றும், அதைச் செய்பவர்கள் இஸ்லாத்தைத் துரந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

it is declared as an act of apostasy and rejection of Islam.பல முக்கிய பாலஸ்தீனத் தலைவர்கள் இப்போது Two state solution ஐ ஏற்றுக் கொண்டாலும் (இதன் அர்த்தம் இஸ்ரேலுக்கு அங்கீகாராம்), இதுவரை அவர்கள் கன்னாபின்னா வென்று போரட்டம் நடத்தி இழந்தவாய்ப்புகள் எத்தனையோ. இவர்களுக்கு ஆசைகாட்டி மோசம் செய்தது யார்? சுற்றியுள்ள அரபு தேசங்கள்.

இந்த ஏற்றுக் கொள்ளாதமனப்பான்மையால் தான் இவ்வளவு பிரச்சனையும்.

பாலஸ்தீனர்கள் சொந்த நாட்டிலேயே அகதியான கதையை டோண்டு அவர்கள் இந்தப் பதிவில் விளக்கியுள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குச் செய்யும் செயல்களால் தான் அரபு இஸ்ரேல் பிரச்சனை என்பதெல்லாம் வெட்டி வாதங்கள். அரபு இஸ்ரேல் பிரச்சனைக்கு மூல காரணம் அரபியர்களின் யூத வெறுப்பு. இவர்கள் "ஊத்துக்கு" பாலஸ்தீனர்களை ஊறுகாயாக்கிவருகின்றனர்.

படங்காட்றேன்....!!

சில காலம் சீரியசா பதிவு போட்டு திட்டுக்களும், மிரட்டல்களும் வாங்கியாகிவிட்டது...பாராட்டுக்கள் இல்லை என்று சொல்லவில்லை....

இப்போ, சில படங்கள்..இது தான் Jordan river, யார்தேனீத் என்று ஹீப்றூவில் அழைக்கும் இடம், யேசு கிறுஸ்து இங்கு தான் Baptize செய்யப்பட்டார்..என்பது நம்பிக்கை.

நதி என்றாவுடன் மாபெரும் கங்கை நதி என்று எண்ணிவிடவேண்டாம். நம்மூரில் அதை ஓடை அல்லது கால்வாய் என்று தான் சொல்லியிருப்பார்கள்.

அடுத்தது, கேப்ரியல் (Gabriel) என்ற தேவ தூதன் யேசு ஒரு தெய்வப் பிறப்பு என்று அறிவித்த இடம் இன்று ஒரு கிறுத்துவ தேவாலயம். அது Church of Annunciation or Bassilica of Annunciation என்று நசரேத்(Nazareth) ல் உள்ளது.

இது கி.பி, 427 ல் இருந்த பைஸாந்திய (Byzantine) தேவாலயம், மற்றும் சிலுவைப் போராளிகள் எழுப்பிய தேவாலயம் என்று பல நூற்றாண்டுகளாக இடிந்து/ இடித்து, மறுபடியும் மறுபடியும் கட்டப்பட்ட தேவாலயம். (இப்பொழுது இருப்பது, 1969 ல் கட்டபட்டது).


ஆடுத்தது ஆழகிய ஹைஃபா
இது பஹாய் மதத்தவர்களின் புனித நகரம். மத்தியத் தரைகடற் கரையிலிருக்கும் ஹைஃபா இஸ்ரேலின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று. முதல் வளைகுடாப் போரில், சதாமின் ஸ்கட்டுகள் இங்கு விழுந்து நொருங்கியது, செய்தியில் வந்தது, நினைவிருக்கலாம். இங்கு இருக்கும் படத்தில் இருக்கும் கட்டிடம், பஹாய் மதக் கோயில். தில்லியில் இருக்கும் Lotus temple போல. பஹாய் கோயில் என்றாலே, தோட்டங்கள் அதன் சிறப்பாம்சம். எங்கு பார்த்தாலும், வண்ண வண்ணப் பூக்கள், வித விதமான செடிகள். உலகில் பல மூலைகளிலிருந்து கொண்டு வந்து சிறப்புப் பராமரிப்புடன் இருக்கும் பஹாய்த் தோட்டம் ஹைஃபாவின் ஹைலைட்.ஆக்கோ என்ற பஹாய் புனிதஸ்தலம்

பஹாய் மதம் தோன்றியது என்னமோ, ஈரானில் ஆனால் வாழ்ந்துகொண்டிருப்பது யூத நாடான இஸ்ரேலில். என்ன தான் இஸ்ரேல் யூத நாடானாலும் மத நல்லிணக்கம் கொண்ட நாடு (Semitic மதங்களுக்கு மத நல்லிணக்கம் என்பது ஒவ்வாத வார்த்தை..அப்படி இருந்தும் யூத நாடு சற்றே வித்தியாசம் காட்டுகிறது..). ஆக்கோ அல்லது ஆக்ரே (Akko or Acre) உலகில் தொன்மையான நகரங்களில் ஒன்று. இங்கு பல புகழ்பெற்ற மசூதிகள் யூத தேவாலயங்கள், கிறுத்துவ தேவாலயங்கள் உள்ளன. ஆனால், பஹாய் மதம் இந்த வரிசயில் புதிது என்றாலும் இதன் முக்கிய மதத் தலைவர் புதைக்க்ப்பட்ட இடம் ஆக்கோ. அவர் பெயர் Bahaullah.பஹாய் மதம் பற்றி மேலதிகவிவரங்கள் பெற இந்தச் சுட்டியை க்ளிக்கவும்.

அறிவிப்பு:

படங்கள் அனைத்தும், எந்தக் காப்பி ரைட் வயலேஷனும் செய்யாமல் சொந்த முயற்சியில், சொந்த கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

May 9, 2006

இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-2

ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்கள், பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டனர்.
"So there are two national groups which claim national self-determination. One group is the indigenous population, or what's left of it-a lot if it's been expelled or driven out or fled. The other group is the jewish settlers who came in, originally from Europe, later from other parts of the Middle-east and some other places. So there are two groups, the indigenous population and the immigrants and their descendants"
கூறியவர் நோம் சாம்ஸ்கி.

இந்த கருத்தும் முழுமையான உண்மையல்ல.

ஐரோப்பிய யூதர்கள் வந்து குடியேரிய பாலஸ்தீன நிலப்பகுதி, மக்கள் தொகை அதிகம் இல்லாத பாலைவன நிலமாகவே இருந்தது. அவர்கள் நிலத்தை வெளினாடுகளில் வசிக்கும் நிலச்சுவாந்தார்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கிக் குடியேறியுள்ளனர். இத்தகய நிலச்சுவாந்தாரர்கள், சிரியா, எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் கோடீஸ்வரர்களாக இருந்து real estate வியாபாரம் செய்ய பல இடங்களில் நில புலன்கள் வாங்கி விற்றனர்.

மேலும், யூதர்களின் நம்பிக்கையான Zion க்கு திரும்புதல் (returning to Zion) என்ற மத நம்பிக்கை காரணமாக வந்து குடியேரியவர்கள் ஐரோப்பிய யூதர்கள்.

Mark Twain, 1867ல் பாலஸ்தீனதிற்கு சுற்றுப்பயணமாக மேற்கொண்டிருந்த வேளையில் அவர் கூறியது,

"Stirring scenes ... occur in the valley (Jizreel) no more. There is not solitary village throughout its whole extent-not for thirty miles in either direction. There are two or three small clusters of Bedouin tents, but not a single permanent habitation. One may ride ten miles hereabouts and not see ten human beings....come to the Galilee for that...these unpeopled desert, these rusty mounts of barrenness, that never, never, never do shake the glare from their harsh outlines, and fade and faint into vague perspective; that melancholy ruin of Capernaum: this stupid village of Tiberias, slumbering its six funeral palms...We reached Tabor safely...We never saw a human being on the whole route.

Nazareth is forelorn...Jericho that accursed lies in the moldering ruin today, even as Joshua's miracle left it more than three thousand years ago; Bethlehem and bethany, in their poverty and their humiliation, have nothing about them now to remind one that they once knew that high honor of Savior's presence, that hollow spot where the shepherds watch their flocks by night and where the angels sang, 'Peace on earth, good will to men', is untenanted by any living creature.....Bethsida and Chorzin have vanished from the earth, and the "desert places" round them, where thousand men once listened to the Savior's voice and ate the miraculous bread, sleep in the hush of solitude that is inhabited by birds of prey and skulking foxes"


" A land without people for the people with out land" என்கிற வாதத்தை நான் இங்கு வைக்கவில்லை என்பதை தெளிவுபடக்கூறிக் கொள்கிறேன். பிரச்சனை என்னவென்றால், 1880 க்கு முன்னால், அங்கு அவ்வளவு மக்கள் தொகை இல்லை, இது விவாதத்திர்குறியது என்றாலும், அந்த காலகட்டத்தில் நிலவிய சூளலில், வேலை இன்மை, வரட்சி போன்ற காரணங்களால், பல அரபு கிராமத்துமக்கள், வெளியேறிக் கொண்டிருந்தனர்.

1911 ஆம் ஆண்டு வெளியான பிரிட்டானிகா கலைக்கழஞ்சியத்தில் பாலஸ்தீன் பற்றி,

"Population of palestine comprises 'widely different ethnological groups', speaking 'no less than fifty languages"
என்று கூறுகிறது.

1880 முதல் 1948 வரையிலான கால கட்டத்தில் நில விற்பனையினை ஆராய்கயில் யூதர்களால் (அல்லது நம் வலைப்பதிவாளர்கள் கூறுவது போல் Zionist களால்) வாங்கப்பட்ட னிலத்தில் 3/4 பங்கு பெரிய நிலச்சுவாந்தாரர்களிடமிருந்தும், பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கி அதிக விலையில் விற்க நினைக்கும் ப்ரோகர்களிடமிருந்தும் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது. அத்தகய நிலச்சுவாந்தாரர்கள், டமாஸ்கஸ், பெய்ரூத், போன்ற பெரு நகரங்களில் வாழ்ந்த பெரிய ஜமீந்தார்கள்.

Prof. Rached Khalidi, பாலஸ்தீன ஆதரவாளரான இவர்,
"There were considerable land sale by absentee landlords both palestinian and non-palestinian"
என்று ஒப்புக் கொள்கிறார்.
David Ben-Gurion (இஸ்ரேலின் முதல் பிரதமர்) யூதர்களிடம், அரபு கிராமத்தாரிடமிர்ந்து நிலத்தை வாங்கவேண்டாம் என்றும் கெட்டுக் கொண்டுள்ளார்.
யூதர்கள், அரபு மக்களை விரட்டிஅடித்துவிட்டுத்தான் இஸ்ரேலை உருவாக்கினர் என்பது, ஒரு பிரச்சாரம் தான். அதில் உண்மை கிஞ்சித்தும் இல்லை.

1880 க்குப்பிறகு வர ஆரம்பித்த யூதர்களால், வியாபாரம் பெருகியது, விவசாயம் பெருகியது, பணம் வர ஆரம்பித்தது, இதனால் யூதர்கள் மட்டும் பயனடயாமல், பாலஸ்தீனர்களும் பயன் அடைந்தனர். Rishon L'Tzion என்ற முதல் யூதக்குடியிருப்பில் நடந்த ஆய்வு ஒன்றில், ஒன்றுமில்லாத இடமாக இருந்த மண்ணில், சுமார் 400 பாலஸ்தீனக் குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ வழி செய்தது 40 யூதக் குடும்பங்கள் என்று காட்டுகிறது. இதே சங்கதி தான் மர்ற யூதக் குடியிருப்புகளிலும்.

1937ல் ஆங்கில அரசு ஆவனம் சொல்லும் கதை இது,

"The growth (of arabs) had been largely due to the health services combating malaria, reducing infant death rates, improving water supply and sanitation."
இதெல்லாம் ஐரோப்பாவிலிருந்து வந்த யூதர்கள் செய்த நல்ல காரியம்.

மூசா அலமி என்கிற பாலஸ்தீன தலைவர், இந்த ஐரோப்பிய யூதர்கள் பூர்வீக பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டனர் என்பது பற்றி,
"The people are in great need of a 'myth' to fill their consciousness and imagination"
ஜோர்டன் மன்னர் King Abdullah,
" The arabs are as prodigal in selling their lands as they are in... weeping [about it]"

இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-1

தமிழ்மணத்தில், இஸ்ரேலுக்கு எதிராக வந்த/வந்து கொண்டிருக்கும் சில பதிவுகளில், எழுதப்படும் கருத்துக்கள்
 1. யூதர்கள் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நாட்டை ஆக்கிரமித்துள்ளானர்
 2. ஐரோப்பாவில் இருந்து வந்தேரிய யூதர்கள், பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டனர்
 3. இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான செயல்களே, அரபு-இஸ்ரேலியர்களின் பிரச்சனைகளுக்கு மூல காரணம்
 4. யூதர்களில் பலர், பாலஸ்தீனர் ஆதரவாக அவர்கள் விடுதலைக்காக குரல் கொடுப்பது ஏன்? (இது இஸ்ரேல் ஆதரவாக வந்த கேள்வி என்றே வைத்துக் கொள்ளலாம்)
 5. யூதர்கள் என்றுமே, Two state solution ஐ ஏற்றுக் கொண்டதில்லை.
 6. ஹோலோகாஸ்ட் சம்பவத்தை யூதர்கள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டுள்ளனர்.
 7. பாலஸ்தீன அகதிகள் பிரச்சனை, முழுக்க இஸ்ரேலினால் வந்த வினை.
 8. இஸ்ரேலியர்கள் அமைதிக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
 9. பாலஸ்தீன சிவிலியன்களை திட்டமிட்டு கொல்கிறது இஸ்ரேல்.
 10. மனித உரிமை மீரல் என்று பார்த்தால் இஸ்ரேலுக்கு தான் முதலிடம்.
இந்தப் பதிவின் நோக்கம் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், இந்த கருத்துக்களுக்கு மறு பக்கத்தை காட்டி விவாத மேடையினை சமன் படுத்துவதே ஆகும். ஒவ்வொரு கருத்தும் தனியாக விவாதிக்கப் படவேண்டும் என்பதால் தனித் தனிப் பதிவுகளாக இடுகிறேன்.
 1. யூதர்கள் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நாட்டை ஆக்கிரமித்துள்ள்னர்
முற்றிலும் தவறு பாலஸ்தீனர்களுக்கு எது சொந்தமே அது யூதர்களுக்கும் சொந்தம்.

முதலில் வெளி நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த யூதர்கள், தத்தம் நாடுகளை விட்டு வந்த காரணம், ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளில் நிலவிய யூத வெறுப்பு காழ்புணர்ச்சி (Anti-semitism). யூதர்கள் சுய மரியாதையுடன், எந்த வித வெறுப்புக்கும் ஆளாகமல் வாழ வேண்டும் என்ற நோக்குடன் வந்தவர்கள். முக்கியமாக அப்போதிருந்த ஓட்டோமான் அரசு யூதர்கள் வருகையை அனுமத்தது (அல்லது அவர்கள் வருகையை கண்டுகொள்ளவில்லை!).

1939 ல் Martin Buber என்ற பாலஸ்தீனிய உரிமைகளுக்காக போராடியவர், "Our settlers, do not come here as do the colonists from occident, to have the natives do their work for them; they themselves set their shoulders to the plough and they spend their strength and their blood to make the land fruitful" என்று கூறியிருக்கிறார்.

1882-1903 வரையான காலகட்டத்தில் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து முதல் அலையாக வந்தவர்கள், பாலஸ்தீனத்தில் காலம் காலமாக வாழ்ந்துவந்த யூதர்களுடன் (Sephardic jews)இணைந்தனர். இப்படி முதல் அலையாக வந்த வர்களிடம் யூத நாடு அமைக்க எந்த எண்ணாமும் இல்லை. அவர்கள் முதல் எண்ணம் அடக்குமுறை அல்லாத, யூத வெறுப்பில்லாத "A home in our country", "a state with in a larger state where they could have civil and political rights and could help our brother Ishmael in the time of his need" என்ற எண்ணாத்துடன் வந்தவர்கள் என்பதற்கு 1882ல் யூதர்களால் வெளியிடப்பட்ட Manifesto சாட்சி. 1897ல் தான் தியோடர் ஹெர்ட்சல் தலமையில் சுவிட்ஸர்லாந்திலுள்ள பஸெல் நகரில், முதல் சியோனிச காங்கிரஸ் நடந்தது அதில் தான் தனி நாடு அமைக்கும் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது. இரண்டாவது அலையாக வந்தவர்கள் தான் அத்தகய எண்ணங்களுடன் செயல் பட்டனர். தனி நாடு என்றவுடன் பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டுத்தான், என்ற எண்ணம் தவறு. அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளது அதைவிரிவாக வேறு பதிவில் போடுகிறேன்.

சரித்திர காலத்துக்குச் சென்றால், ஹீப்றூ இனத்தவர் கி.மு 1500-1000 ஆண்டுவாக்கில் அல்லது அதற்கு முன்னர், ஜோஷுவா தலமையில் வந்து தற்போதய பாலஸ்தீனப் பகுதியில் குடியேறியவர்கள். பிறகு தாவிது அரசனும் அவனது வாரிசுகளாலும் கிட்டத்தட்ட 1600 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளனர் இந்த காலகட்டத்தில் யூத இனத்தவர் தான் இந்த நிலப் பகுதியில் நிரந்தரக் குடிகள். இவைகளுக்கு வரலாற்று சான்றுகள் தோண்டும் இடத்திலெல்லாம் கிடைக்கும். முக்கியமாக ஜெரிகோ, ஜெரூசலம் பகுதிகளில் யூதர்கள் வாழ்ந்த /வாழ்ந்துவந்த சரித்திரம் தெளிவாக இருக்கிறது. Crusader கள், Saracens கள் கொன்று குவித்த யூதர்கள் எண்ணிக்கை ஏராளம்.

ரோமாபுரி மன்னர்கள், ஜுடீயா என்ற இந்தப் பகுதிக்கு பாலஸ்தீன் என்று பெயர் மற்றம் செய்தனர். (கடல் வழியாக யூதர்கள் அல்லாத வந்தேரிய குடிகள் பெயர்). அதற்கு காரணம், ரோம மன்னர்களுக்கு யூதர்கள் மசியாததும், அவர்கள் மதத்தை ஏற்காததும் தான். (கி.பி 70 மற்றும் கி.பி 135 களில் ரோம மன்னர்களின் அடக்குமுறைகு எதிராக யூதப் புரட்சி வெடித்ததும் அதை ரோம மன்னர்கள் அடக்கியதும் வரலாறு).

பாலஸ்தீன் யூத மதப் தத்துவம் கற்கும் இடமாக திகழ்ந்ததும் அதை Zion என்று யூதர்கள் அழைத்ததும், Zion க்கு திரும்பச் செல்லவேண்டும் என்று நித்தமும் வழிபடும் யூதர்கள் ஐரோப்பாவில் இருந்தனர். கிறுத்துவ விவிலியமும் பல இடங்களில் Zion பற்றி குறிப்பிடுகிறது. இந்த இடத்தின் உண்மையான வரலாறு அடிப்படையில், குறைந்தபட்சம் பாலஸ்தீனியர்களுகு எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவு யூதர்கள்க்கும் இந்த நிலப்பகுதியில் உரிமை உள்ளது.

யூதர்கள் அளுமைக்கு உட்பட்டு திகழும் இன்றய இஸ்ரேல், எந்த ஒரு நாட்டையும் பறித்து அமைத்த நாடு அல்ல. காலம் காலமாக யூதர்கள் வாழ்ந்த பூமியில் அமைந்த நாடு.

May 2, 2006

மார்க்ஸ்வாதம் அறிவியல் அடிப்படையிலானதா?

இந்த வார (மே 1 , 2006 ல் இருந்து) தமிழ்மண நட்சத்திர வலைபதிவாளரான முத்து (தமிழினி) இரண்டு பதிவுகள் போட்டிருந்தார்

 1. வங்கி அனுபவம் - கூடமலை கோபால்
 2. மார்க்சியம் சில குறிப்புகள் - கேள்விகள்


அதில், மார்க்ஸியம் பற்றி தமிழினி அவர்கள்,

ஆனால் ஒரு அறிவியலை அடிப்படையாக கொண்டதாக சொல்லப்படுகின்ற ஒரு சிந்தனை முறை பற்றிய படிப்பு நம் பள்ளிகல்வியில் இல்லை என்பது நம் கல்விமுறையின் பற்றாக்குறையை சொல்கிறது என்றே நான் நினைக்கிறேன்.


இப்படி எழுதி வைக்க, நான் அதை தப்பித் தவறி படித்துத் தொலைத்து விட.

இப்படி ஒரு பதில் எழுதி வைத்தேன்.

அறிவியல் அடிப்படை கொண்டது மார்க்ஸியம் என்பது நீங்கள் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.

என்னை பொருத்தவரை, அறிவியல் அடிப்படை என்பது தவறு என்றும் சரி என்றும் நிரூபிக்கப்படக் கூடியதாக இருக்கவேண்டும் (Falsifiablity).

நான் மார்க்ஸ்வாதம் தவறு என்று சொன்னால், என்னை வலது சாரி தீவிரவாதி/ ஹிந்துத்வா வாதி என்று பட்டம் கட்டி ஒதுக்கி விடுவார்கள். (அல்லாஹ் வை ஏற்றுக் கொள்ளாதவர்கள் காஃபிர், கிருத்துவ தத்துவத்திற்கு எதிர்ப்பு கூறுபவர்கள் apostate அல்லது blasphemy செய்துவிட்டதாக கூறுவது போல்).

மார்க்ஸியக் கொள்கை Falsifiable என்பதை ஒத்துக் கொள்வீர்களா? (உலகறிந்த உதாரணம் சிதருண்ட சோவியத் யூனியன்)


நமது கல்வி முறையின் கண்ணோட்டம், சாய்வின்றி இருப்பது நல்லது.

ஏற்கனவே, மார்க்ஸியம் போன்ற தீவிரமான கொள்கையின் (strong ideology) பாதிப்பு நம் பாடப் புத்தகங்களில் உணரப்பட்டதே. மார்க்ஸியக் கொள்கையின் கண்ணோட்டத்தில் நமது வரலாற்றை திரித்தவர்கள் யார்?


ஒரு பின்னூட்டப் "போராட்டத்தை" நான் தூண்டி விட்டேனோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு, சரமாரியாக பதில்கள், பதில் ரூபத்தில் கேள்விகள்.

வந்தவைகளையும், நான் சொன்ன/கேட்ட, பதில்/கேள்விகளையும் இங்கு வைக்கிறேன்..

சங்கர் வரலாற்றை திருத்தியவர்கள் இடதுசாரிகள் இல்லை. இந்துத்துவவாதிகள்தான். சுதந்திரப்போராட்ட துரோகியான சவர்க்கரை ஹீரோவாக சித்தரித்தவர்கள் வாஜ்பாய் வகையறாக்கள்தான்... அடுத்து வாஜ்பாயே மிகப் பெரிய சுதந்திரப்போராட்ட துரோகி... இவர்கள் வெள்ளையனின் கையாள்.. இவரை உத்தம புருஷர் என்று பொய்யாய் சொல்லி புளுகியவர்கள் - திருத்தல்வாதிகள் இந்துத்துவாதிகள்தான்....

இப்படிச் சொன்னவர் சந்திப்பு

எனது பதில்,

நான் வரலாற்றைத் "திரி"த்தவர்களைப் பற்றிப் பேசினேன். "திருத்தி"யவர்களைப் பற்றி அல்ல.
திரித்தவர்கள் இடது சாரிகள் (Irfan Habib, Romila Thapar, போன்ற self proclaimed marxists).
உங்களால், வேறொரு கண்ணோட்டத்தில் சிந்திக்கக் கூட முடியவில்லை.
சாவர்கர் துரோகி, வாஜ்பாய் துரோகி, இவர்கள் வெள்ளயனின் கையாள் என்று, மார்க்ஸ்வாதிகள் கூறுவதைத் தவிர நீங்கள் ஒன்றும் புதிதாகக் கூறவில்லை. (baseless allegations).
யார் வெள்ளையனின் கையாள் என்பதை Mitrokhin நிருவி விட்டார் என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. Mitrokhin ஒரு ஹிந்துத்வாவாதியா!? அல்லது மார்க்ஸியத்தை அழிக்க வந்த அமேரிக்க முதலாளித்துவக் கைப்பாவையா?
பார்த்தீர்களா! மார்க்ஸ்வாதத்தை பற்றி சற்றே சங்கடமான கேள்வி கேட்டால் இந்துத்வாவாதியை இழுப்பது!!
மார்க்ஸ்வாதம் அறிவியல் கண்ணோட்டத்தில் இல்லை என்பதற்க்கு "சந்திப்பை"த் தவிர வேறு உதாரணம் வேண்டுமா?


அடுத்ததாக மா.சிவகுமார்,
மார்க்ஸிசம் அறிவியல் கண்ணோட்டத்தில் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள்?
பொருளாதாரவியல் என்பது சமூக அறிவியலைச் சேர்ந்தது. அந்த வகையில் மார்க்ஸின் கோட்பாடுகள்
அறிவுபூர்வமாக நிரூபிக்கப்பட்டவைதான்.

அதற்கு எனது பதில்,
மார்க்ஸ்வாதிகளைப் பார்கவும்,

மார்க்ஸ்வாதத் தத்துவம் அதனால் அவர்கள் கொண்ட கண்ணோட்டத்தை தவிர வேறு ஒரு கண்ணோட்டம் இருக்கலாம் என்பதை உணர மறுப்பதை. (எதற்கெடுத்தாலும் இந்துத்வா, அமேரிக்க முதலாளித்துவம் என்று பேசுவது)

falsifiability என்பது,
//
"Falsifiability, or defeasibility, is an important concept in the philosophy of science. It is the principle that a proposition or theory cannot be considered scientific if it does not admit the possibility of being shown false."
//

பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது, சோவியத் சிதறியது போன்ற சரித்திர நிகழ்வுகள் மார்க்ஸியத்தின் தவறுகளைக் காட்டிவிட்ட நிலையில். அதை இன்னமும், ஒரு அறிவியல் கண்ணோட்டம் என்று சப்பை கட்டுவது எந்த விதத்திலும் அதை அறிவியலாக்கிவிடாது.

போதாத குறைக்கு, க்யூபா போன்ற நாடுகள், மார்க்ஸ்வாததினால் இன்னமும் முன்னேராமல் இருப்பது உலகறிந்த உண்மை. (அதற்கு காரணம் அமேரிக்கா என்று நமது மார்க்ஸ்வாதிகள் சொல்வது சகிக்கமுடியவில்லை. மார்க்ஸ்வாததின் இன்றய எதிரி அமேரிக்கா, உலகில் உள்ள எல்லா தீமைகளுக்கும் காரணம் அமேரிக்கா)

In here we see marxism not only being shown falsifiable, but also shown to be false or wrong economic concept which lead ultimately to the destruction of the countries following it.

According to science, a theory should accept the possibility of Falsifiability (which marxism does not) and if a theory is shown to be false, it should be discarded (according to science).


சந்திப்பு கூறியது,

மார்க்சியம் விஞ்ஞானப்பூர்வமானது. வரலாற்றை விஞ்ஞானப்பூர்வமாக அலசுகிறது. இயக்கவியல் ரீதியாக பரிசீலிக்கிறது. அந்த பரிசீலனையின் முடிவுதான் கீழ்க்கண்டவை:
1. புராதான பொதுவுடைமை சமூகம் (அதாவது, அனைத்து மனிதர்களும் கூட்டமாக - குழுவாக வாழ்ந்த காலகட்டம். கிடைத்ததை அனைவரும் சமமாக - அல்லது தேவைக்கேற்ப பகிர்ந்து உண்ட சமூகம்)
2. ஆண்டான் - அடிமை சமூகம்
3. நிலப்பிரபுத்துவ சமூகம்
4. முதலாளித்துவ சமூகம்
5. சோசலிச சமூகம்
6. இறுதியில், கம்யூனிச சமூகம்.
சமூகம் எந்த இடத்திலும் மாறாமல் தேங்கிய குட்டையாய் நின்றுபோனது கிடையாது. அதனால் நிற்கவும் முடியாது. இது வளர்ச்சியை நோக்கித்தான் முன்னேறும். அந்த அடிப்படையில் நாம் கடந்து வந்திருக்கிற ஒவ்வொரு பாதையும் முற்போக்கானது. இதுவரை நாம் கண்டுள்ளது சோசலிச சமூகத்தின் ஆரம்பத்தைத்தான். கம்யூனிச சமூக அமைப்பை உலகில் இன்னும் எந்த மூளையிலும் வரவில்லை. இதுதான் விஞ்ஞானம். இந்த விஞ்ஞானம் நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் இந்துத்துவ சமூகம் என்ற ஒன்று எந்த காலகட்டத்திலும் இருந்ததில்லை. அத்தோடு, அந்த இந்துத்துவ சமூகமும் சுரண்டல் வர்க்கத்தின் தத்துவமே. அது பார(தீ)ய சமூகம். இது ஆண்டைகளுக்கும், ஜாதிய மேலாதிக்கத்திற்கும் வக்காலத்து வாங்கும் சமூகமே. எனவே இந்தியாவில் இந்துத்துவ சமூகம் எந்த காலத்திலும் உருவாகாது. ஏனென்றால் இது விஞ்ஞானமல்ல.


சிவகுமார் கூறியது,

மார்க்ஸிசம் என்பதை முழுவதுமாக புரிந்து கொள்ளாமல், சோவியத் யூனியன், பெர்லின் சுவர், கியூபா என்று எதிர்மறை உதாரணங்களைக் காட்டாதீர்கள்.
சந்தைப் பொருளாதரத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் அமல்படுத்தி அதனால் அவதியுற்ற நாடுகளும் உண்டு (தென்கிழக்கு ஆசிய பொருளாதார வீழ்ச்சி, தென் அமெரிக்க வாழைப்பழ குடியரசுகளின் தவறுகள் போன்றவை). அதனாலேயே சந்தைப் பொருளாதாரம்
பற்றிய தத்துவங்கள் தவறு என்று சொல்லி விடுவீர்களா?
நாடுகள் தழுவிய பரிசோதனைகள் தவறாகப் போய் முடிந்து விட்டாலும், இன்னும் ஒவ்வொரு சமூகத்திலும்
(அமெரிக்கா, இந்தியா உட்பட), மார்க்ஸ் விவரித்த காரணிகள் பொருளாதார வாழ்வை பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றின் மெய்ப்பொருள் காண்பது அறிவு.


திருப்பியும் நான் விடாப்பிடியாக,
மா. சிவகுமார்,

மார்க்ஸிஸக் பொருளாதாரக் கொள்கை என்பது, ஒரு கொள்கை தான் என்பதை மறந்துவிடவேண்டாம்.

நான் கேட்பதெல்லாம், மார்க்ஸ்வாதம் falsifiable என்பதை ஒத்துக் கொள்வீர்களா? உலகில் அப்படி எத்தனை மார்க்ஸ்வதிகள் ஒத்துக் கொள்கிறார்கள்.?

//
நாடுகள் தழுவிய பரிசோதனைகள் தவறாகப் போய் முடிந்து விட்டாலும், இன்னும் ஒவ்வொரு சமூகத்திலும்
(அமெரிக்கா, இந்தியா உட்பட), மார்க்ஸ் விவரித்த காரணிகள் பொருளாதார வாழ்வை பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
//

இது மறுப்பதற்கில்லை.

ஆனால், நாடுகள் தழுவிய பரிசோதனைகள், தவறாக முடிந்தது என்பதை ஓப்பனாக ஒத்துக் கொள்ளும் முதல் மார்க்ஸிஸ்ட் நீங்கள் தான். (மற்றவர்களெல்லாம் அமேரிக்க சதி என்று சொன்னார்கள்) நன்றி. (நீங்கள் மார்க்ஸ்வாதி இல்லை என்று சொல்லி கவுத்திவுட்றாதீங்க!)

அது சரி, இன்னும் எத்தனை நாடுகளில் தான் பரிசோதிக்கவேண்டும் என்கிறீர்கள்.? உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரிசோதித்து தோற்றால் தான் ஒத்துக் கொள்வீர்களா?

நான் சந்தைப் பொருளாதாரத்தை மார்க்ஸிய கண் கொண்டு புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இன்றய நிலையில் சந்தைப் பொருளாதாரம் பலனளித்து முன்னேறிய நாடுகள் பல உள்ளன. அதனால் சந்தைப் பொருளாதாரம் தான் சரி மற்ற கொள்கைகளெல்லாம் தவறு என்று யாரும் வாதிடுவதில்லை.

இங்கு ஒரு தகவலை வலைப்பதிவாளர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இஸ்ரேலில் (சில காலமாக இங்கு தான் நம் வாழ்வு), 1940 களில் யூதர்கள் உலகெங்கிலும் இருந்து வந்து வாழ ஆரம்பித்த நிலையில், kibbutz என்று கிராமாமாக வாழ்ந்தார்கள் எல்லாமே பொதுவில் தான், நிலம், வீடு, எல்லாமே பொதுச் சொத்து தான். அவர்கள் kibbutz அமைத்த தத்துவம் From each according to his abilities, to each according to his needs என்ற அடிப்படை மார்க்ஸ் வாதத் தத்துவம் தான் (அது விவிலியத்தில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?). இன்றும் ஆங்காங்கே இருக்கிறது இத்தகய கிப்பூட்ஸ். ஆனால் பெரும்பான்மையோர், வெளியேரிவிட்டனர். காரணம், அவர்களிடம் திறமை இருந்தும் சாதிக்க முடியாமல், போவது. ஒருவர் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது, ஒருவன் வேலையே செய்யாமல் வாழ்வது. மொத்தத்தில் அது சிறிய அளவில் failure. அதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள்.


அதற்கு சிவகுமார் அவர்கள்,

சந்திப்பு எழுதிய சமூகப் பொருளாதரத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய பின்னூட்டத்தை இன்னும் ஒருமுறை
நன்றாகப் படித்து விடுங்கள்.

சோவியத் பரிசோதனை தோல்வி அடைந்தது தவறான புரிதலேயொழிய, அதனால் மார்க்சிஸம் தவறு
என்று ஆகி விடவில்லை. நீங்கள் ஒத்துக் கொண்டாலும், ஒத்துக் கொள்ளாவிட்டாலும் ஒவ்வொரு சந்தைப் பொருளாதார சமூகமும், மார்க்ஸ் கணித்த பாதைகளைக் கடந்து கம்யூனிச (கெட்ட வார்த்தை !!) அமைப்பைத்தான்
அடையப் போகிறது.

உலகின் எல்லா நாடுகளிலும் அதுதான் நடக்கப் போகிறது. நடந்து கொண்டிருக்கிறது.

அப்படிப் பார்க்கப் போனால் கம்யூனிஸ்டு கட்சிகள் அந்தப் பரிணாம வளர்ச்சியை இழுத்துப் பிடித்து தாமதப்படுத்த முனைகின்றனவா என்று கேட்டு விடாதீர்கள் :-)


கடைசியாக, சிவகுமார் கூறியது,

"பழம் தானாகப் பழுக்க வேண்டும். தல்லிப் பழுக்கக் கூடாது" என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். என்னுடைய புரிதலில், இந்த ஆயுதம் ஏந்திய புரட்சிகள் பெரிதாக சாதித்து விட முடியாது. நீங்கள் எழுதிய குறிப்புபடி, முதலாளித்துவம் முற்றி, சோஷலிசம் உருவாகி அதன் பின்னரே கம்யூனிசம் மலரும். இந்த மாறுதலை தாமதப்படுத்தும் நிகழ்வுகளை தவிர்க்கலாமே ஒழிய வலுக்கட்டாயமாக, குறுக்கு வழியில் கம்யூனிசம் காண முயன்றதுதான் சோதனைகளின் தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன்.

நிலவுடமைச் சீர்திருத்தங்கள், தொழிலாளர் நிலை உயர்த்துதல், ஒடுக்கப்பட்டவரின் குரலை எடுபடச் செய்து அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற பணிகள் இந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கங்களின் பெரும்பங்காக உள்ளது என்பது என் கருத்து.


இதே கருத்தினை தமிழினி யும் ஆமேதித்திருக்கிறார்.

முக்கியமாக யாருமே நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. என் பார்வையில் தவறு இருக்கிறது, நான் மார்க்ஸ்வாதத்தை வலது சாரி கண் கொண்டு பார்கிறேன் போன்ற குற்றசாட்டு தான் வந்தது.


நான் கேட்ட கேள்வி மறந்திருந்தால், இதோ மறுபடியும் கேட்கிறேன்.

ஒரு சித்தாந்தம் அல்லது theory அறிவியல்பூர்வமானதாக இருக்க Falsifiability மிக முக்கியம், மார்க்ஸ்வாதம் falsifiable என்பதை ஒத்துக் கொள்வீர்களா?


ஒரு சித்தாந்தம் அறிவியல்பூர்வமானதாக இருக்க,

 1. அந்த சித்தாந்தத்தின் confirmation ஐ மட்டுமே பார்பது தவறு. அத்தகய verification/confirmation எந்த விதமான theoryக்கும் சுலபமாக கிடைத்துவிடும்.
 2. அந்த சித்தாந்தத்தை உடைத்தெரியக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதை நாம் எதிர்பார்க்கவேண்டும்.
 3. ஒரு theory யை தவறு என்று நிரூபிக்க முடியாது என்றால் அந்த நொடியே அந்த theory அறிவியல்பூர்வமானது அல்ல என்ற நிலையய் அடைகிறது. Irrefutability is not a virtue of a theory but a vice.
 4. Theory யை உண்மையான முறையில் சோதனை செய்வது என்பது, அந்த தியரியை தவறு என்று நிரூபிக்கும் பொருட்டு எடுத்துக் கொள்ளும் உண்மையான முயற்சியே. அந்த Theory யை சரி என் நிரூபிப்பதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சி அல்ல.
 5. ஒரு சில Theory க்கள் தவறு என்று நிரூபணமான பின்பும் அதன் சார்புடயவர்கள் அத்தகய சித்தாந்தத்தை விடாப்பிடியாகக் கடைபிடிப்பதும், பழய சிந்தனைகளுக்குப் புதிய அர்த்தங்கள் கற்பிப்பதுமாக பல "Conventionalist twist" கொடுத்து theory யைக் காப்பற்ற முயற்சிகின்றனர்.அத்தகய முயற்சிகள், theory ன் அறிவியல் தன்மையினைப் போக்கிவிடும்.


ஷங்கர்.