May 19, 2006

படங்காட்றேன்....!!-3

முந்தய படங்கள் துடுப்பு-1, துடுப்பு-2

கெஃபர்னௌம் (Capharnaum).


இது தான் ஏசு கிறுஸ்து வாழ்ந்த கிராமம். ஒரு பழய யூத கிராமம், ஆலிவ் விதைகளைச் செக்கிலிட்டு அரைத்து வரும் எண்ணையை வியாபாரம் செய்து பிழைக்கும் மக்கள். ஊருக்கு நடுவில் கோவில். சுற்றியும் வீடுகள். கடைகள்.

இன்று இது ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்த கிறுஸ்துவப் புனிதஸ்தலம்.

முக்கியமான இடங்களில் கன்னாடிக் கூண்டு போட்டு புதைபொருள் ஆராய்ச்சி இன்னமும் செய்கின்றனர்.


யூதத் தேவாலயத்தின் கட்டமைப்பு கி.பி 500 க்கு பிறகானதாக இருக்கும். ஆனால், Vatican இது தான் கிறிஸ்து வந்து தொழுகை செய்த யூதத் தேவாலயம் என்று அடித்துச் சொல்கிறது.

2 comments:

Unknown said...

இது நாசரேத்தா,பெத்லெகேமா,ஜூடாயாவா சங்கர்?

வஜ்ரா said...

இது கொஃபர்னௌம் என்கிர கிராமம்...


ஷங்கர்.