May 13, 2006

படங்காட்றேன்....!!-2

மஸாதா மற்றும் Dead Sea பற்றிய படங்கள் மற்றும் எனது அனுபவங்கள்

கி.பி 73 ல் ஜெரூசலம் ரோமானியர்களால் கைப்பற்றப் பட்டபோது, யூதர் அனைவரும் ஒன்று வெளியேறிக் கொண்டிருந்தனர் இல்லை, ரோமானிய மன்னர் ஆட்சியில் வாழத் தங்களை தயார் படுத்திக் கொண்டனர். ரோமானியர் ஜெரூசலத்தைத் தாக்க முக்கிய காரணம் யூதர்களின் புரட்சி.

அந்த புரட்சி வெறியர்கள் மெனஹீம் பென் யெஹூதா தலமையில் (zealots ஹீப்ரூவில் கனாய் என்பார்கள், அர்த்தம் one who is jelous on behalf of God) சிலர் ஹெரோட் மன்னன் கட்டிய மஸாதா கோட்டையை அங்கிருந்த சிறு ரோமானியப் படையிடமிறுந்து கைபற்றி அதில் மறைந்து கொண்டனர்.

ஃப்ளேவியஸ் ஸில்வா தலமையிலான ரோமானியப் படை இந்தக் கோட்டையை முற்றுகையிட்டது. ரோமானியர்கள் புரட்சியாளர்களை கைது செய்தே தீருவது என்ற நோக்கில், புரட்சியாளர்கள் தப்பிக்க முடியாதபடி, கோட்டையின் அனைத்து வழிகளயும் அடைத்துவிட்டனர். அடிமைப் படுத்தப்பட்ட யூதர்கள் தான் இந்த வேலைக்கு அமர்த்தினர் என்பது சரித்திரம்.


படம் 2: ரோமானிய படையின் தங்குமிடம் மஸாதா உச்சியிலிருந்து.

பென் யெஹூதா தலமையிலான புரட்சியாளர்கள் ரோமானியர்களிடம் அடிமையாவதைவிட தற்கொலை செய்து கொள்வது மேல் என்று எண்ணி உயிர் துரந்தனர். அவர்கள் அப்படிச் செய்ய அவர்களின் தீவிர புரட்சி எண்ணம், யூதர்கள் அடிமைப்படக்கூடாது என்ற சுய மரியாதையை விட்டுக் கொடுக்காத ஒரு மன நிலை, என்று பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அவர்கள் தற்கொலை செய்து கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சி வித்தியாசமானது. பத்து பெயர்களை சீட்டில் எழுதிப் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர் மற்ற ஒன்பது பேரையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளவேண்டும். இப்படி கிட்டத்தட்ட 1000 பேர் இறந்துள்ளனர். கடைசியாக இரு பெண்களும், ஒரு குழந்தையும் தற்கொலைக்கு பயந்து ஒளிந்துகொண்டு ரோமானியர்களிடம் மாட்டிக் கொண்டனர். இந்த புரட்சியாளர்களைப் பர்றி மேலதிக தகவல்கள் பெற விக்கிபீடியா சுட்டி. இப்பொழுது கோட்டை தரை மட்டமாகிவிட்டது.படம் 3: கோட்டையின் மேற்கு நுளைவு வாயில் மிஞ்சியிருக்கும் சிதிலங்களில் ஒன்று.

இந்த மஸாதா ஒரு யூத சுய மரியாதைக்குறிய எடுத்துக்காட்டாக இன்று இருப்பதும், "மஸாதா மறுமுரை வெளி நாட்டவர் கையில் விழாது" என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள ஒவ்வொறு வருடமும் IDF ல் இணையும் வீரர்கள் வருகின்றனர்.

Dead Sea
இதைப் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை, இதில் மூழ்க முடியாது. தண்ணீரில் மிக அதிக உப்பு இருப்பதனால், தண்ணீர் விழக்கேண்ணை போல் அடர்த்தியாக இருக்கும். அதனால் தான் சுமோ வீரர் கூட இதில் மிதக்க முடியும். கடல் மட்டத்திலிருந்து 400 மீ ஆழத்தில் இருக்கிறது. யாம் அ மெலாக்ஹ் என்று ஹீப்றூ வில் இதைக் குறிப்பிடுகின்றனர். அர்த்தம் "உப்பு ஏரி".

10 comments:

dondu(#4800161) said...

ரீடர்ஸ் டைஜஸ்டில் சாவுக் கடலை பற்றிய கட்டுரை இந்த வரிகளில் ஆரம்பிக்கிறது.

சாவுக் கடல் மேல் விமானம் சென்று கொண்டிருக்கும் போது ஏர் ஹோஸ்டஸ் அறிவிப்பு செய்கிறார்,

"Ladies and gentlemen, we are know flying at 200 meters below the sea level!!"

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vajra said...

Dead sea, Masada அறுகில் நிரையவே, விமானங்கள் பறக்கும்.

இங்கு பலர், விமான ஓட்டுனர் பயிர்ச்சி எடுத்துக் கொள்வர். காரணம், உயரம் செல்லச் செல்ல எப்படி காற்றழுத்தம் குறைகிறதோ, அதே போல், ஆழம் செல்லச் செல்ல காற்றழுத்தம் அதிகமாகும். காற்றில் அழுத்தம் அதிகம் இருந்தால் தான் விமானம் நன்றாகப் பரக்கும்.

இங்கு ஆக்ஸிஜன் அழவும் அதிகம், ஆனால் என்ன மண் எல்லாம் உப்பு, தண்ணீர் சுத்தமாக கிடையாது. ஆகயால் ஒன்றும் வளராது. நமது குஜராத்தில் கட்ச் பகுதியில் வளரும் அரிய வகைத்தாவரம் ஒன்று இருக்கிறது, குஜ்ஜு மக்கள் அதை ஒரு காய்கறி போல் கூட்டு வைத்துச் சாப்பிடுவார்கள். அது வளருவது அதிகம் உப்புக் கரிக்கும் கட்ச் பகுதியில், அதன் சொந்தக்காரத் தாவரம் dead sea பகுதியில் பார்க்கலாம்.

பக்கத்தில் உள்ள ஒரு கிப்பூட்ஸ் (kibbutz) ல் சில நாட்கள் இருந்த்தேன், அங்கு அவர்கள், வெளி நாட்டிலிருந்து பல வகை மரங்கள் கொண்டு வந்து, தண்ணீர் வசதி செய்து, வளர்க்கிறார்கள். சாதாரணமாக 3-4 ஆண்டுகளில் காணும் வளர்ச்சியை மரங்கள், ஒரே ஆண்டில் அடைகின்றது வியக்கத்தக்க விஷயம். ஆக்ஸிஜன் அளவு அதிகம் என்பது முக்கிய காரணம். அடுத்து, நிலவும் சீதோஷன நிலை, வெய்யில் காலத்தில் சர்வசாதாரணமாக 50 டிகிரி செல்சியஸ் செல்லும். 90% காற்ரில் ஈரப்பதம், சுறுக்கமாகச் சொன்னால் ஒரு பெரிய Green house.

ஷங்கர்.

நேச குமார் said...

வித்தியாசமான தகவல்கள், பொதுவாக யஆரும் செல்லாத, அதிகம் தெரியாத நாட்டிலிருந்து எழுதுகிறீர்கள் - சுவாரசியமாக இருக்கின்றன இந்த விபரங்கள். நன்றி.

Vajra said...

வாங்க நேசகுமார்,

ொ"துவாக யஆரும் செல்லாத, அதிகம் தெரியாத நாட்டிலிருந்து எழுதுகிறீர்கள்"

அதெல்லாம் இல்லை, நிரைய இந்தியர்கள் இருக்கிறார்கள். தில்லியிலோ, பம்பாயிலோ கிடைக்கக் கூடிய தகவல்கள், சென்னையில் கிடைக்கப் பெற்றால் இஸ்ரேலில் நிரையவே தமிழர்கள் வர வாய்ப்புள்ளது.

உலகப் புகழ்பெற்ற வைஸ்மன் அறிவியல் கழகம், டெக்னியான் அறிவியல் கழகம், மற்றும் டெல் அவீவ், பார் இலான், ஜெரூசலம், ஹைபா, பீர் ஷெவா என்று ஐந்து பல்கலைக்கழகங்கள். இதைத் தவிர்த்து விவசாயத்திற்கென்றே பிரத்யேக அறிவியல் கழகம் வொல்கானி (இஸ்ரேல் முழுவதும் கிளைகள் கொண்டது).

IT industry எடுத்தீர்கள் என்றால், இண்டெல் ன் chip manufacturing unit இங்கு உள்ளது. அதே போல் IBM, Microsoft, Apple என்று எல்லா விதமான பன்னாட்டு முதலீடுகள். ஐரோப்பா, அமேரிக்கா, ஆஸ்திரேலியா என்று மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

நாம் தான் அமேரிக்கா விட்டால் வேறு வெளி நாடே கிடையாது என்று கியூவில் நின்று கொண்டிருக்கிறேம், சென்னை அமேரிக்கத் தூதரகம் முன்பு.

ஷங்கர்.

கால்கரி சிவா said...

ஷங்கர், வித்தியாசமான தகவல்கள். நீங்கள் அங்கிருந்து கிளம்பு முன் ஒரு முறை வந்துவிடவேண்டும். அங்கு வந்து சென்றால் மீண்டும் அரபு நாடுகளுக்க நண்பர்களை சந்திக்க செல்ல முடியாது.

மற்றொரு தகவல். சவூதி அரேபியாவில் ரப் அல் காலி (Empty quarters) என்ற பகுதி உள்ளது. அதன் மேல் விமானங்கள் பறப்பதில்லை. ஏனென்றால் அங்கே வெப்பம் அதிகாமாக இருப்பதால் காற்றின் அடர்த்தி(Density) மிகக்குறைவாக இருக்கும். ஆகையால் விமானத்திற்க்கு தேவையான உந்து விசைக் (thrust) கிடைக்காது.

இயற்கையில் கூட இவ்விரு நாடுகளுக்கும் எவ்வளவு எதிர்மறைகள்

Vajra said...

அப்படி எல்லாம் ஒன்றும் பயப்படத்தேவையில்லை சிவா,

உங்கள் பாஸ்போர்ட்டில் (கடவுச்சீட்டு!!) இஸ்ரேல் சீல் இருந்தால் அரபு நாடுகளுக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதெல்லாம் கனடா, அமேரிக்கக் கடவுச்சீட்டுகளுகுச் செல்லாது. சென்ற மாதம் கூட ஒரு ஆஸ்திரேலிய நண்பன் (இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவன்) எகிப்துக்கு சுற்றுப் பயணம் செய்தான்...

ஷங்கர்.

Muse (# 5279076) said...

இஸ்ரேலிடமுள்ள (இல்லாத, பொல்லாத) கெட்ட விஷயங்களை மட்டுமே எழுத வேண்டும் என நம்மூர் பத்திரிக்கைகள் முடிவு கட்டியுள்ளதால், தாங்கள் சொல்லுகின்ற விஷயங்கள் புதிதாக உள்ளன. நன்றாகவும் எழுதுகிறீர்கள்.

சம்பந்தமில்லாத ஒரு கேள்வி. "ஓ! ஜெருசலேம்" படித்திருக்கிறீர்களா? அப்புத்தகம் பற்றிய தங்கள் கருத்து என்ன?

Vajra said...

இல்லை மியூஸ், படித்ததில்லை. டோண்டு அவர்கள் நிச்சயம் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்..!!

யூதர்களின் வரலாறு தெரிந்ந்தால், பல உண்மைகள் வெளிவரும் என்பதால் இந்தியப் பத்திரிக்கைகள் சுலபமாக மரைக்க்ம் வழி பார்க்கின்றன...

"உனக்கு என்ன வரலாறு, உண்மை சொன்னா தகராறு.." என்று அண்ணாமலை ரஜினி பாட்டுதான் ஞாபகம் வருது! :))

ஷங்கர்.

பழூர் கார்த்தி said...

கடவுச் சீட்டு பற்றிய ஓர் தகவல்.. இஸ்ரேல் இமிக்ரேசனில் உங்கள் கடவுச் சீட்டில் ஏண்ட்ரி ஸ்டாம்ப் விழுவதை விரும்பா விட்டால் (பிற்காலத்தில் அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டி வந்தால்) ஒரு தனி சீட்டில் ஸ்டாம்ப் செய்து தருகிறார்கள்.. எனது நண்பர்கள் சிலர் இம்முறையை பின்பற்றியுள்ளனர்...

Vajra said...

சோ. பை,

இப்படியும் செய்யலாம்.

என்னைப் போல் அதிக நாள் வசிப்பவர்கள் எண்ட்ரி ஸ்டாம்பு விழாமல் செய்ய முடியாது, அதுவும் இங்கிருந்து வேறு நாடுகளுக்குச் செல்லவேண்டும் என்றாகும் பொழுது...!!, பழய பாஸ்போர்ட் தொலைந்து விட்டது என்று சொல்லி, புது பாஸ்போர்ட் இந்தியாவில் வாங்கிக் கொள்ளலாம்...!!