
எர்ணாக்குளத்தில் 1922 ஆம் அண்டு நாராயண ஐயர் என்பவரின் மகனாகப் பிறந்து அங்கேயே தன் பள்ளிப்படிப்பை முடித்தவர், திருச்சி St. Joseph's ல் பௌதீகத்தில் B.Sc hons முடித்து 1942ல் பங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திற்குச் சென்றார். அங்கேயே தன் முதுகலைப்படிப்பை முடித்து கேம்ப்ரிட்ஜ்ஜில் W.A.Wooster என்பவருடன் இரண்டாண்டுகள் ஆராய்ச்சிப் படிப்பு முடித்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் பங்களூருக்கே வந்து பௌதீகத்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியைத் துவக்கினார்.

அதே வேளையில் சென்னைப் பல்கலைக்கழகம் அவரை வரவேற்றுக் காத்திருந்ததால் சென்னைக்கு வந்துவிட்டார். ஒரு நாள் ஜே. டி பெர்னல் என்பவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது கொலாஜெனின் மூலக்கூறுகள் அடுக்கப் பட்டுள்ளவிதம் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று எண்ணத்தோன்றியது. உடனே, மத்தியத் தோல் ஆராய்ச்சிக்கழகத்தின் உதவியுடன் collagen ன் மூலக்கூறுகள் எவ்வாறு அடுக்கப் பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து, 1954-55 ல் இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகப் புகழ்பெற்ற nature இதழில் வெளியிட்டார். அதன் காரணமாக புரதங்களின் மூலக்கூறான அமினோ அமிலங்கள் எவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக வரிசையில் அமைந்து புரதத்தை உருவாக்குகிறது போன்ற மிக அடிப்படை அறிவு நமக்குக் கிட்ட வழிவகுத்தார்.
அதன் காரணமாக இன்று பயன் படுத்தும் ஒருவித Graph plot க்கு ராமச்சந்திரன் plot என்றே பெயர்.
புரதங்களின் database ஆன PDB ல் புரதங்களின் மூலக்கூறுகள் அடுக்கப் பட்டுள்ள முறை இயற்கையில் சரியானதாக உள்ளதா என்று சரிபார்க்கக் கூட இந்த ராமச்சந்திரன் plot பயன் படுகிறது.


புரதங்களில் அமைந்த அமினோ அமிலங்கள் ஒன்றோடொன்று கொண்ட கோணங்கள் எவ்வாறு அமையக்கூடும் எவ்வாறு அமையக்கூடாது என்பதை உணர முடிந்தது ராமச்சந்திரன் அவர்களின் ஆராய்ச்சியின் விளைவே.