- இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-1
- இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-2
- இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-3
- இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-4
யூதர்கள் என்றுமே Two state solutionஐ ஏற்றுக் கொண்டதில்லை.
Naom Chomsky புத்தகங்களைப் படித்தால் பல இடங்களில் யூதர்கள் என்றுமே Two state solution ஏற்றுக் கொண்டதில்லை போல் எழுதியிருப்பார். நம் நாட்டிலும் பல பத்திரிக்கைகள் இதையே உண்மைபோல் ஏற்றுக் கொண்டு செய்திக் கட்டுரைகள் எழுதுவதுமாக உள்ளனர்.
We must only recall the real world, in which the PLO had been calling for negotiations ad peaceful settlement with Israel for many years while the US and Israel never countered with any 'reasonable people ready to make peace,' just as they do not today
உண்மை என்ன?
என்று இந்த Two state solution தீர்வாக வைக்கப் பட்டதோ அன்றே, யூதர்கள் ஏற்றுக் கொண்டதும், அரபுகள் ஏற்றுக் கொள்ளாததும் தான் உண்மை.
1937ல் ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் இருந்த பாலஸ்தீன நிலப்பகுதியைப் பற்றி Peel கமிஷன் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.அதில் Two state solution ஒரு தீர்வாக வைக்கப் பட்டிருக்கிறது.
யூதர்கள் இந்தத் தீர்வை ஏற்றுக் கொண்டனர். அப்போதிருந்த சூளலில் ஐரோப்பாவில் Anti-semitism தலைவிரித்தாடிக் கொண்டிருந்த நேரத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு இடம் கிடைத்தால் போதும் என்றெண்ணி ஏற்றுக் கொண்டனர்.
அரபுமக்கள் இந்த Peel கமிஷன் அறிக்கையை ஏற்க முற்றிலும் மறுத்துவிட்டனர். அவர்கள் கேட்டது, பாலஸ்தீன் முற்றிலும் அரபு ஆட்சியில் இருக்கவேண்டும், மற்றும் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் யூதர்கள் பாலஸ்தீனைவிட்டு வெளியேற்றவேண்டும் என்பது தான்.
Peel கமிஷன் இந்தப் பிரச்சனையை உடனடியாக கண்டுகொண்டு, ஒரு விவாதத்திற்கு ஏற்பாடு செய்தபோது, அரபுகள் யூதன் இருக்கும் இடத்தில் அமர்ந்து பேசக்கூட மறுத்ததாகக் கூறுகிறது.
அரபுகள், தங்களுக்கென்று ஒரு நாடு உருவாகாவிடிலும் பரவாயில்லை, ஆனால் யூதர்கள் நாடு என்று ஒன்று உருவாகக் கூடாது என்பதில் திண்ணமாக இருந்தனர் என்பதை பீல் கமிஷன் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மேலும் பாலஸ்தீனர்கள், சிரியாவிலிருந்த மன்னர் ஆட்சியை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் அரபுகள், யூதர்களுக்கு எதிராகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தத் துவங்கினர். இதைக் கண்டு ஆங்கிலேயர்கள், யூதர்களுக்கு எதிராக தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது. 1939 ல் வெளியிடப்பட்ட White paper யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வருவதற்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டதாகக் கூறுகிறது.
Michael Oren என்பவர் இவ்வாறு கூறுகிறார்.
Though the british has steadily abandoned their support for the Jewish National Home, the home was already a fact: an inchoate burgeoning state
ஆனால் இந்த நாடு முழுதாக உருவாவதற்கு ஆங்கிலேயர்கள் அரபுகள் பேச்சைக் கேட்டுத் தடையாக இருந்தனர்.
அந்த நேரத்தில் ஹோலோகாஸ்ட் அரங்கேறிக் கொண்டிருந்தது ஐரோப்பாவில். அரபுகள் மட்டும் அந்த பீல் கமிஷன் Two state solution ஐ ஏற்று கொண்டிருந்தால் யூதர்கள் ஐரோப்பாவைவிட்டு வெளியேறி ஹோலோகாஸ்ட் நடக்காமலே போயிருக்க வாய்ப்பு இருந்தது.
ஜெர்மனியிலும் மற்ற ஐரோப்பாவிலும் யூதர்களை வெளியேரச் சொன்னார்கள், ஆனால் அவர்கள் போவதற்கு இடமேதுமில்லை, Gas chamber கள் தவிர.
4 comments:
பாலஸ்தீனிய மற்றும் அரபுத் தலைவர்கள் ஹிட்லருக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். 60 லட்சம் பேர் இறந்ததும் அவர்களைப் பாதிக்கவில்லை. அத்தனை பேரும் இறக்கவில்லையே என்றுதான் வருந்தினர்.
1948 மற்றும் 1967-ல் ஹிட்லர் செய்யாமல் விட்டதைத் தாங்கள் செய்யப் போவதாக மார் தட்டினர்.
1967 யுத்தத்துக்கு முன்னால் பல யூதர்கள் உலகெங்கிலும் இருந்த இஸ்ரேலியத் தூதரகங்களுக்கு வந்து, "60 லட்சம் பேரை இழந்த எங்களால் இப்போது இஸ்ரேலையும் இழக்க முடியாது, நாங்களும் உங்களுடன் வந்து சண்டையிட்டு இறக்கிறோம்" என்று கூற, இஸ்ரவேலர்களோ, "சாவதற்கு வேறு ஆளைப் பாருங்கள், நாங்கள் வாழப் பிறந்தவர்கள்" என்று பதிலளித்தனர். சுற்றிலும் வந்து தாக்கிய அரேபியரை ஓட ஓட விரட்டினர். இது யூத சரித்திரத்தில் அவர்தம் பழைய ஏற்பாடுகளில் வரும் யுத்தக் காட்சிகளுக்கு எவ்வகையிலும் குறைந்தது அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நம் நாட்டிலும் பல பத்திரிக்கைகள் இதையே உண்மைபோல் ஏற்றுக் கொண்டு செய்திக் கட்டுரைகள் எழுதுவதுமாக உள்ளனர்//
வெள்ளைகாரன் என்ன சொன்னாலும் அதை வேத வாக்கு என்று நம்பும் இந்தியர்களின் stockholm syndrome என்று ஒழியுமோ!
டோண்டு சார்,
தகவல்களுக்கு நன்றி.
//
இது யூத சரித்திரத்தில் அவர்தம் பழைய ஏற்பாடுகளில் வரும் யுத்தக் காட்சிகளுக்கு எவ்வகையிலும் குறைந்தது அல்ல.
//
இதைப் பற்றி பதிவு போடுங்கள் சிறப்பாக இருக்கும்..
ஷங்கர்.
//
வெள்ளைகாரன் என்ன சொன்னாலும் அதை வேத வாக்கு என்று நம்பும் இந்தியர்களின் stockholm syndrome என்று ஒழியுமோ!
//
வெள்ளைக்காரன் என்றால் ஒரு உயர்வு என்ற அடிப்படை நம்பிக்கை, அதை தீனி போட்டு வளர்க்கும் நமது மார்க்ஸ்வாத அறிவு ஜீவிக்கள். இவர்கள் தான் பாடப் புத்தகத்தை எழுதுகிறார்கள். இப்படி படித்த்விட்டு "அறிவு ஜீவி" லிஸ்டில் சேருபவர்கள் ஏராளம். இதன் விளைவு தனி நபர் stockholm syndrome இல்லை, சமுதாய Stockholm syndrome. (Dee Graham - Societal Stockholm syndrome).
ஷங்கர்.
Post a Comment