May 31, 2006

மத்திய கிழக்கில் அறிவியல் ஆராய்ச்சி

அறிவியல், ஆராய்ச்சி, படிப்பு என்று ஊற் சுற்றிவிட்டு, தொழில் பற்றி ஒரு பதிவு கூடப் போடவில்லை என்றால், அது தொழில் துரோகமாகிவிடும்.

இப்போது நிகழும் அரசியல் சமூகச் சூளலில், மத்திய கிழக்கில் அறிவியல் வளர சாத்தியக் கூறுகள் ஒன்றும் பிரகாசமாக இல்லை என்றாலும், ஓரளவிற்கு நம்பிக்கை மட்டும் இருக்கிறது. உலகில் உள்ள அறிவியலாளர்களை ஒன்று செர்க்க உலகப் போரின் பிறகு ஆரம்பிக்கப் பட்ட தெழில்னுட்பம் Synchrotron radiation facility. இந்த வசதியில், சில பல Giga electron volts களில் வரும் கதிர்வீச்சுகளில் ஆராய்ச்சி செய்ய பணம் முதலீடு செய்து ஆராய்ச்சிக் கூடம் கட்ட உதவிய நாடுகளிலிருந்து வரும் ஆராய்ச்சியாளர்கள் இந்த வசதியைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இதனால், பல நாட்டு அறிவியலாளர்கள், அடிக்கடி சந்தித்து பேசி கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளாலாம்.

இந்த synchrotron என்பது particle accelerator கள், +2 வில் வான் டி கிராஃப் accelerator, cyclotron (சைக்கிள் ஓட்ரான் அல்ல!!) போன்ற வார்த்தைகளை கேட்டிருப்பீர்கள், அதிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த ஒரு பெரிய அளவிலான அனு சிதைவு செய்து வெளிவரும் எலக்ட்ரான்களை அதிவேகமாக ஒரு வட்டப் பாதையில் செல்ல வைத்து நடுவில் ஆங்காங்கே காந்தங்களை வைத்து இந்த அதிவேக எலக்ட்ரான்களிலிருந்து பல கதிர்வீச்சுக்கள் வெளிவரவைக்கும் கருவி.

படத்தில் இருப்பது Grenoble ல் (ஃப்ரான்ஸ்) இருக்கும் 844 மீ சுற்றளவு கொண்ட synchrotron.

ஐரோப்பா, மற்றும் அமேரிக்காவில் இத்தகய synchrotron வசதிகள் நிரய உள்ளன. மத்தியகிழக்கில் தொடர்ந்து போர்ச் சூளல், மதத்தினால் வெறுப்பு, எவ்வளவு தான் உதவ முன்வந்தாலும் உதவிகளை ஏற்காமல் பூண்டோடு அழிக்க நினைக்கும் மனோபாவம். இவையெல்லாம் இருந்தும், சில வருடங்களாக, எகிப்து, ஜோர்டன், சவூதி, ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீன, அறிவியலாளர்கள் ஒன்று சேர்ந்து ஐரோப்பாவில் இருப்பது போன்றதொரு synchrotron வசதியை கட்ட முயற்சி செய்துவருகின்றனர். இதற்குப் பெயர் SESAME, Synchrotron-light for Experimental Science and Applications in the Middle East. இதைப் பற்றி மேலதிக விவரங்கள் பெற சுட்டி.

மத்தியகிழக்கில் அரபியர்களுக்கும், யூதர்களுக்கு இருக்கும் ஒற்றுமைகள் (மன, மத, உடல் ரீதியான) அதனால் வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது. மரபணு சம்பந்தப் பட்ட வியாதிகள் பல, அரபியர்களுக்கும் யூதர்களுக்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள் உள்ளதால் அது பற்றி கூட்டு ஆராய்ச்சி செய்ய உதவும்.

என்னது? ஈரானியர்களும், இஸ்ரேலியர்களும் ஒரே இடத்தில் உட்கார்ந்து அறிவியல் பேசுகின்றார்களா?

ஆம், இது உண்மை. இது என் கனவில் அல்ல, நிஜத்தில் தான் நடக்கிறது. ஆனால் என்ன, எக்கச்செக்க அரசியல் பிரச்சனை என்பதால் வெகு மெதுவாக நடக்கிறது. இஸ்ரேலிய அறிவியலாளர்கள் கருத்து என்னவென்றால், ஐயா!, இது நடப்பதே நம் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள். மதங்களுக்கு அப்பார்பட்ட மனித நேயம் மத்திய கிழக்கில் புதிய சிந்தனை. இந்த சிந்தனை வளர்ச்சி அடைந்து அமைதி நிலவ வேண்டும் என்று பலர் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதற்கு இது முதல் படி.

8 comments:

சுமா said...

நன்றாக எழுதிஉள்ளீர்கள் ஷங்கர்.

Vajra said...

வாங்க சுமா,

உங்கள் பதிவுகளைப் பார்த்தேன், தமிழ்மணத்திற்கு அளிக்கவில்லையா?

Anonymous said...

good shankar, u have proved u have something more than just religious hatred. keep it up

Vajra said...

I do not have religious hatered. I show what the "one book" religions show to the "others".

செல்வன் said...

உங்க புது அவதார் பாத்தா பயமா இருக்கு சங்கர்.ஆனா கொஞ்ச நாளில் பழகிடும்னு தோணுது.

Vajra said...

செல்வன்,

மேட்ரிக்ஸ் ஏஜண்ட் ஸ்மித் தான்...பயப்படவேண்டாம்..

படத்தைப் போட்டால் போலி டோண்டு, போலி காசி போல் என்படத்தைப் பயன் படுத்தி "சரோஜாதீவிக்" கதைகள் எழுதுவார்கள். அதனால் தான் அடிக்கடி அவதார் மாற்றுவது நல்லது.

சிறில் அலெக்ஸ் said...

நல்ல பதிவு ஷங்கர்.
நீங்க ஆராய்ச்சியாளரா? சொல்லவேயில்ல..

Vajra said...

சிறில்,

ப்ரோஃபைல்லெ தான் எல்லாமே இருக்கே...! நீங்க பார்க்கவிலையா..?