September 22, 2008

பெரியார் என்ற ஜனநாயகவாதி

இன்று பெரியாரின் பெயர் சொல்லி, போற்றி போற்றி என்று கோயில் கட்டாத குறையாய் தெருவுக்குத் தெரு சிலை வைத்து கும்பிடும் "நாத்திகர்கள்" அடிக்கடி பெரியார் எப்பேற்பட்ட ஜனநாயகவாதி  தெரியுமா ? என்று கேட்டுவருகிறார்கள்.

21.9.2008 வாரமலர் திண்ணை பகுதியில் அவர் எப்பேற்பட்ட ஜனநாயகவாதி என்று அவரது உற்ற தோழர் கோவை அய்யாமுத்து எழுதியதாக நடுத்தெரு நாராயணன் எழுதியுள்ளார்.
படித்துத் தெளிந்து கொள்ளவும்.


திண்ணை! - நடுத்தெரு நாராயணன்

ஈ.வெ.ரா.,வுடன் இருந்தவர் கோவை அய்யாமுத்து. காங்கிரஸ் கட்சியிலும், பிறகு ஈ.வெ.ரா.,வின் சுயமரியாதை இயக்கத்திலும் பணியாற்றியவர். ஈ.வெ.ரா.,வின், "குடியரசு' பத்திரிகையின் ஆசிரியர். ராஜாஜி ஆதரவாளர். காந்தியுடன் நெருங்கிப் பழகியவர். மிகச் சிறந்த நிர்வாகி என்று புகழ்பெற்றவர். ஈ.வெ.ரா., உயிருடன் இருந்த காலத்திலேயே இவர் திருலோக சீதாராமின், "சிவாஜி' பத்திரிகையில் (1970) எழுதிய கட்டுரை இப்படித் துவங்குகிறது...என் மதிப்புக்குரிய நண்பர் ஈ.வெ.ரா., செல்வத்திடமும், செல்வத்தை வைத்திருக்கும் செல்வரிடத்தும் மட்டற்ற மதிப்பு உடையவர். அவரிடத்தும் செல்வம் ஓரளவு குவிந்திருக்கிறது. தாம் ஆண்டுதோறும் ஈரோடு நகராட்சி மன்றத்துக்கு ஐந்தாயிரமோ, அதற்கு அதிகமாகவோ சொத்து வரி செலுத்தி வருவதாகப் பெருமிதத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார். தாம் செல்வந்தர் என்பதால் தம்மைப் பிறர் மதிக்க வேண்டும், மதிப்பாக நடத்த வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்க்கிறார். செல்வம் இல்லாதவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பதற்குத்தான் தகுதியுடையவர்கள் என்று கருதுவார். அவர்களை, அன்னக்காவடிகள், தகர போணிகள் என்றும், "கீழே பூமியும், மேலே ஆகாயமும் அன்றி வேறெதுவும் இல்லாதவர்!' என்றும் பரிகாசமாகச் சொல்வார்.
"இவனுக்கு என்ன தகுதி? அவனுக்கு என்ன யோக்கியதை?' என்று பணத்தைக் கொண்டே மனிதனை எடை போட்டுப் பார்ப்பார்.

பனகல், பொப்பிலி, ராஜா சர்.அண்ணாமலை, சவுந்தர பாண்டியன், ஆர்.கே.சண்முகம், ஜமால் முகமது போன்ற செல்வந்தர்கள் தான் ஆட்சி பீடத்தில் அமர அருகதை உடையவர்கள் என்று கருதுவார். யாதுமற்ற அன்னக் காவடிகள் அரியாசனம் ஏறி, அதிகாரம் செய்ய வாய்ப்பளிக்கும், "ஜனநாயகம்' என்ற சனியனை கண்ணால் காண்பதும், வாயால் சொல்வதும் ஈ.வெ.ரா.,வுக்கு துளி கூடப் பிடிக்காது. உலகில் ஒரு கடவுளைக் கூட ஈ.வெ.ரா., ஏற்றுக் கொள்வாரேயொழிய அன்னக் காவடிகளை அரசர்களாக்கும் இந்த பெரும் சனியனாகிய ஜனநாயகத்தை அவர் இப்பிறவியிலும், மற்றொரு பிறவியிலும் நிச்சயமாக, முடிவாக, தீர்மானமாக ஏற்றுக் கொள்ளவே மாட்டார். ஏதோ வேண்டா வெறுப்பாகக் காமராஜரும், அண்ணாதுரையும், கருணாநிதியும் ஆட்சிப் பீடத்திலிருந்து அதிகாரம் செய்த காரணத்தால், அவர்களை அண்டுவதால் தமக்கு மரியாதைகளும், மலர் மாலைகளும், சிறப்பு விழாக்களும், பிற சிறப்புகளும் கிடைக்கின்றன என்ற காரணத்தால், அவர்களைப் பச்சைத் தமிழன், உண்மைத் தமிழன் என்றும், "கலைஞர் கருணாநிதி' என்றும் தம்முடைய, "பரிவாரங்கள்' என்றும் பரிந்துரைகள் வழங்கிப் பாராட்டுதல் தெரிவித்தார். ஆனால், அவருடைய அடித்தளத்தை சோதித்துப் பார்த்தால், "உம்... என்னிடம் மாதம் முப்பது ரூபாய்க்கு இருந்த பயல், இப்போது மந்திரியாகி விட்டான்! மந்திரியாவதற்கு அவனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?' என்ற பொருமல் பெருமளவில் காணப்படும். தமிழ்நாட்டில் இன்று தம்மை மிஞ்சிய அறிவாளி யாரும் இல்லை என்றும், தம்மைத் தவிர்த்து மற்ற எல்லாரும் முட்டாள்கள் என்றும் வாழும் ஈ.வெ.ரா.,வின் மனநிலையை இது வரை கணித்தோம். இனி...

இப்படி எழுதியுள்ளார் கோவை அய்யாமுத்து.

7 comments:

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் எப்போதுமே ஒரு சின்ன விசயத்தை ஊதிப் பெரிதாக்கி விடுவார்கள்.

அதுவும் பார்ப்பனரல்லாதாருக்குள் ஒரு சின்னப்பிரச்சினை என்றால் போதும் அவர்களுக்கு அல்வாசாப்பிட்டது போல் அப்படியே அச்சேற்றி உலகம் முழுவதும் பரப்பி விடுவார்கள்.

ஆனால் சங்கராச்சாரிகள் பிரம்மச்சாரியத்தை துறந்து மாமிகளிடம் ஆடை துறந்து இருந்தாலும் கூட சாமி மாமிக்கிட்ட பிரார்த்தனை செய்யறா! என்று சாங்கோ பாங்கமா எழுதி மறைச்சுடுவா!

அது போல்தான் கோவை அய்யாமுத்து அவர்கள் எழுதியதை கருமாதி மலரில் எடுத்துப் போட்டு சந்தாசோப் படுதுகள் அவாள் கூட்டம்.

அய்யாமுத்துவுக்கும் பெரியாருக்கும் உள்ள அடிப்படைப் பண்புகள் நட்பு பற்றி பேராசிரியர் தி. ராசகோபல் அவர்கள் தரும் தகவல் இதோ:

"பெரியார் பணக்காரர்களின் ஏஜெண்டா? மேட்டுக்குடி மக்களின் பாதுகாவலரா? - திரிபுவாதத்துக்கு சம்மட்டியடி!


தந்தைபெரியார் ஓர் இமய மலை; அந்த இமயமலையை இன்றைக்குச் சில எலிகள் தங்கள் வாலால் அளக்க முயலுகின்றன. தலைமுறைத் தலைவர் பெரியார் ஒரு நைல் நதி; அந்நதியை இன்றைக்குச் சில மீன்கள் தங்கள் செதில்களால் அளக்க முயலுகின்றன. அறிவு ஆசான் பெரியார், ஒரு பெரு நெருப்பு; அந்நெருப்பினைச் சில கட்டெறும்புகள் தங்கள் கால்களால் எடை போடத் தொடங்கியிருக்கின்றன. உயராய்வு மய்யங்களும் அறிவுலக மேடைகளும் ஆராய வேண்டிய பகுத்தறிவுப் பகலவனை, டீக்கடை பெஞ்சுகளும் திண்ணைப் பேச்சுகளுமா எடை போடுவது?

பொது வாழ்க்கையில் நகக் கண்ணில்கூட அழுக்குப் படியாமல் வாழ்ந்தவர் பெரியார்: அவருடைய தாடிமுடிகளில் கூடப் படிகத்தின் பரிசுத்தம் உண்டு. பெரியாருடன் சில ஆண்டுகள் பழகியதாலும், அவருக்குக் கீழ் பணியாற்றியதாலுமே, பெரியாரை முழுதாக உணர்ந்து கொண்டேன் எனச் சொல்லிவிட முடியாது. கடற்கரையின் ஒரு பக்கத்தில் நிற்பவன், மறு கரையைப் பற்றி எப்படிச் சொல்ல முடியும்? ஒரு புறத்தில் காற்றின் ஈரப்பசையை உணர்ந்தவன், அதன் மற்ற பக்கங்களைப்பற்றி எப்படிச் சொல்ல முடியும்?

கோவை அய்யாமுத்து அவர்கள் தந்தை பெரியாருக்குக் கீழ் காங்கிரஸ் கட்சியிலும், குடிஅரசு பத்திரிகையிலும் பணியாற்றியது உண்மை. அய்யாமுத்து இயல்பூக்கங்களால் உந்தப்பட்டு, உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப் போனவரே தவிர, கொள்கைவயப்பட்டுக் குன்றென நின்றவர் அல்லர் என்பதை, அவருடைய சுயசரிதையைப் படிப்பவர்கள் உணர்வர். அப்படிப்பட்டவர் அய்யாவின் மேலாண்மைத் திறத்தை நேரில் கண்டு, மெய்மறந்து நிற்கிறார்.

திருப்பூரிலிருந்த தமிழ்நாடு காதிபோர்டின் தலைவராக ஈ.வெ.ரா. இருந்தார். க. சந்தானம் அதன் காரியதரிசி. தெருத் தெருவாய் கதர் சுமந்து கொண்டுபோய் விற்பதற்கு அய்யாசாமியும் நானும் நாயக்கரிடம் கதர் கடனாகக் கேட்டோம். அவரா கடன் கொடுப்பார்? 500 ரூபாய் ரொக்கமாகக் கொடுத்துக் கதர் வாங்கி வந்தோம்...

நாயக்கர் ஒரு சிறந்த உழைப்பாளி. அவரது அயராத உழைப்பும் ஊக்கமும் எங்களுக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தன. சோறு, தண்ணீர், உறக்கம் ஆகியவற்றை அவர் பெரிதாகப் பொருட்படுத்த வில்லை. எந்த இடத்தில் எது கிடைத்ததோ அதைச் சாப்பிட்டு விட்டுத் தெருவிலோ, திண்ணையிலோ, மரத்தடியிலோ, எங்கு வேண்டுமானாலும் அவர் துப்பட்டியை விரித்துப் படுத்துறங்கினார். நாயக்கர் ஒரு கர்மயோகியாகவும், தன்னலமற்ற தியாகியாக வும் விளங்கினார் என இரத்த சாட்சியாக எழுதுகின்றார் (எனது நினைவுகள்: பக்.205-206) அய்யாமுத்து


பொது வாழ்க்கையில் நேர்மையும், நாணயமும் பெரியாருக்கு இரண்டு கண்களாய் அமைந்தவை. குடிஅரசு பத்திரிகையில் அய்யாமுத்துவைப் பெரியார் அவர்கள் எவ்வளவு மரியாதையோடு வைத்திருந்தார் என்பதற்கு அய்யாமுத்துவின் நினைவுக் குறிப்புகளே போதுமானது. ஒரு நாள் பகல் குடிஅரசு காரியாலயத்தில் கண்ணப்பரும் நாயக்கரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். நாயக்கர் வந்திருக்கிறார் என்பதை ஆபீஸ் பையன் மூலமாக அறிந்த என் மனைவி, எப்போதையும் விடக் கொஞ்சம் விசேஷமாகவும் அதிகமாகவும் சாப்பாடு அனுப்பியிருந்தாள். அய்யாமுத்து தனது யோக்யதைக்கு மீறிய சாப்பாடு சாப்பிடுகிறார் எனக் கண்ணப்பரிடம் நாயக்கர் கூறியது என் காதில் விழுந்தது.. உடனே சாவிக்கொத்தை நாயக்கரின் மீது வீசி எறிந்துவிட்டு, உங்கள் குடிஅரசு பணத்தில் கறியும் மீனும் முட்டையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க எனக்குப் பிரியமில்லை. புஞ்சைப் புளியம்பட்டிக்குப் போய் எப்போதும் கம்பங்கூழ் குடிக்கப் போகிறேன் எனும் அய்யா முத்துவின் வாக்கு மூலமே (பக்.259-260) பெரியாரின் பெருந்தன்மையை எடுத்துக்காட்டுவதாகும். கம்பங்கூழ் சாப்பிடுபவரை, கறியும் மீனும் முட்டையும் சாப்பிட வைத்து, பெரியாரின் சமத்துவ உணர்வைக் காட்டாதா?

அய்யா அவர்கள் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில், குடிஅரசு பத்திரிகையின் கணக்கு வழக்கைச் சரியாக வைக்காத காரணத்தால், ஒரு தமிழறிஞரையே வீட்டுக்கு அனுப்பினார் எனும் செய்தி நடுத்தெரு நாராயணன்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை தான்!

பெரியாரிடத்திலேயே குருகுலவாசம் செய்த சாமி ஒருவர் கடைசி காலத்தில், தடம் புரண்டு, பெரியாரிடம் இவ்வளவு சொத்து இருக்கிறது என்று வருமான வரித்துறைக்கு எழுதிவிட்டார். அதற்குத் திருவல்லிக்கேணி கூட்டத்தில் பதில் சொல்ல வந்த பெரியார், என்னிடம் இருக்கின்ற சொத்தை ஏன் குறைத்துச் சொன்னாய்! நீ சொன்னதை விட இத்தனை இலட்சங்கள் அல்லவா என்னிடம் அதிகமாக இருக்கின்றன. நாடு, அதனை எடுத்துக் கொள்வதாக இருந்தால் எடுத்துக் கொள்ளட்டுமே! என் குடும்பத்துக்காகவா வைச்சிருக்கேன்; நீ ஏன் அயோக்கியத்தனமா குறைச்சுச் சொல்றே என்றாரே, இந்தக் கண்ணியத்தை உலகத் தில் எந்தத் தலைவரிடம் காண முடியும்?

பெரியாரின் மனிதநேயத்திற்கு அய்யாமுத்துவைக் காட்டிலும் வேறு யாரும் பட்டயம் தீட்ட முடியாது. அய்யாமுத்து அவர்கள் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு, சட்டத்தின் கிடுக்கிப்பிடியில் சிக்குண்டு கிடந்த நேரத்தில், அய்யா அவர்கள் அவரைத் தேடிச் செல்கிறார். சென்னையோடு நாயக்கருக்கும் எனக்கும் இருந்த உறவு அற்றுப் போயிருக்கும் என எண்ணிக் கொண்டிருந்தேன். நாயக்கர் என் போன்ற சின்ன மனிதர் அல்லவே! அவர் சொற்பமான வரும் அல்லவே! பெரியார் அல்லவா? பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க்கும்மே எனச் சும்மாவா பாடினான்! இராமசாமிப் பெரியார் என்னைத் தேடிக் கொண்டு ஒரு நாள் புஞ்சைப் புளியம்பட்டியிலிருந்த எனது கதர்க்குடிசைக்கே வந்து விட்டார். வாருங்கள்! வாருங்கள்! என ஆனந்தக் கூத்தாடி எழுந்து நின்று அவரை வரவேற்றேன்.
நாயக்கர் அகஸ்மாத்தாக அங்கு வரவில்லை; தற்செயலாகவும் அந்தச் சந்திப்பு ஏற் படவில்லை. ஈரோட்டைவிட்டுப் புறப்படும் போதே என்னைப் பார்க்க வேண்டும் என்று புரோகிராம் போட்டுப் புறப்பட்டிருக்கிறார். ஈரோட்டில் நிகழவிருக்கும் சுயமரியாதை மாநாட்டில் நான் பங்கு பெற வேண்டும் என்றார். நான் கதர்க்கடையில் கட்டுண்டுக் கிடக்கின் றேனே என்றேன். மாநாட்டுப் பந்தலில் டிக்கெட்டுகள் விற்கும் பொறுப்பை நீங்கள் தான் ஏற்க வேண்டும். நானும் யோசித்து யோசித்துப் பார்த்தேன். அந்த வேலைக்குப் பொறுப்பான ஆள் உங்களைத் தவிர வேறு யாரும் என் கண்ணில் படவில்லை என்று பேச்சை முடித்தார். அந்தப் பெரிய மனிதரே கையைப் பிடித்து அழைக்கும் போது எப்படி மாட்டேன் என்று சொல்வது? என அய்யாமுத்துவே (ப.267 -268) அய்யாவின் தோழமை உணர்வுக்குச் சாசனம் தீட்டும்போது, நடுத்தெருவிலே இருப்பவர் கள் ஊளையிட்டு என்ன பயன்?


தந்தை பெரியார் ஏதோ பணக்காரர்களின் ஏஜெண்டு போலவும், மேட்டுக்குடி மக்களின் பாதுகாவலர் போலவும் சித்தரிக்கத் துடிக்கும் நூலோர்கள், அய்யாமுத்து வின் எழுத்துகளை மறுவாசிப்பு செய்துவிட்டு, மனசாட்சியோடு யோசித்துப் பார்த்தால், பெரியார் ஒரு வரலாறு காணாத சமூகப் பேராளி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அய்யாமுத்து அவர்களின் மதிப்பீட்டிலும் தமிழினத்தின் கணக்கீட்டிலும் தந்தை பெரியார் எவ்வளவு உயர்ந்து நிற்கிறார் என்பதை அவருடைய நினைவுக் குறிப்புகளைப் படித்தாலே தெற்றெனப் புலப்படும். உப்புச் சத்தியாக்கிரகம் நடந்து கொண்டிருந்தபோதே, சுயமரியாதை மாநாடும் நிகழவிருந்தது. தோழர் ஜீவானந்தம் அவர்கள் அப்போது, சுயமரியாதை மாநாட்டை ஒத்தி வைத்துவிட்டு, அனைவரும் உப்பு சத்தியாக்கிரகத்திற்கு வருவதற்கான ஒரு தீர் மானத்தை மாநாட்டில் முன்மொழிந்து பேசவிருந்தார். தோழர். ஜீவா அவர்கள் ஓர் ஆற்றல் மிக்க பேச்சாளர் என்பதை நன்கறிந்த பெரியார் அவர்கள், கோவை அய்யாமுத்துவைச் சந்தித்து, அரசியல் விடுதலைக்குக் காந்தியார் பாடுபடட்டும்: அதை நாம் ஆட்சேபிக்க வேண்டாம். சமுதாய விடுதலைக்கு, முக்கியமாகத் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு நாம் பாடுபடுவோம். தீண்டப்படாத மக்கள் கோயில் குளங்களில் பிரவேசிப்பதற்காக, நாம் சிற்சில இடங்களைத் தேர்ந்தெடுத்துப் போராட்டம் துவங்குவோம். நமது இயக்கத்தில் தீவிரமாக உள்ள ஊழியர்கள் ஏற்ற அளவில் இல்லை. அந்த நிலையில் நாம் காங்கிரஸ் துவங்கியுள்ள போராட்டத்தில் கலந்து கொண்டால், நமது இயக்கம் அத்தோடு முடிந்து விடும் என்று எடுத்துரைத்தார்.
நாயக்கரின் நம்பிக்கை பாழாகக் கூடாது என்று நானும் ஜீவாவின் தீர்மானத்தை, எதிர்த்துப் பேசித் தோற்கடித்தேன் (பக்.269-270) என வாக்குமூலம் தருகின்றார் அய்யாமுத்து!

வரலாற்று உண்மைகள் இவ்வாறிருக்க, பன்றிகள் தின்பதற்காகவே மலத்தைத் தள்ளுகின்ற சில பேனா முனைகளை என்ன செய்யப் போகின்றீர்கள்? இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே பட்டுக்கோட்டையார் பாடியது, இன்று எவ்வளவு பெரிய நிதர்சனமான உண்மையாயிற்று! தந்தை பெரியார் ஒரு சீனச் சுவர்! அதனை எத்தனை எலிகள் சுரண்டினாலும், அவற்றின் பல்லுடையுமே தவிர, அச்சுவற்றின் கல்லைக் கூடப் பெயர்க்க முடியாது. தந்தை பெரியார் ஒரு கலங்கரை விளக்கம்! அதன்மீது காகங்கள் கழியலாம்; ஆனால், அதன் ஒளி வீச்சை எந்தக் காகத்தினாலும் மறைத்து விட முடியாது.


------------------ தி. இராசகோபாலன் அவர்கள் 27-9-2008 "விடுதலை" ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

திருந்துமா திரிபுவாதக் கூட்டம்?

Anonymous said...

Thamizh oviyame

parpanargalai etharku ezhukirir. periyarin seedargal endru sollikkolvar peiryarin kolgai aana madhu ozhippai amal paduththi irukalame........... yaralum ondrum kilikka mudiyavillai aanal vai mattum parpanarai thitti kiligirathu.........

Anonymous said...

oru old man cinne ponne kalayanam pannikalam, medaikallil pothu makkal muniliyil nakusoom varthigalal vangippathum koode periyar kokaikil sile than

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

டேய் தெலுங்கு ஓவியா
தே%^$^மகனே
நீ உன் பொன்னை வச்சி தானடா %^&^& $%^^&பண்ணி பிழைக்கிர கம்மி%^%டி.பொரு%^த்தே$%^^மகனே
செத்து ஒழிடா கூ$%^கனே. திருட்டு தே$%^ப்பயலே
ஒ$%^^& கர்ப்பப்பய்யை கொ$%^னும்டா பொ$%ட்டியயும் பொ^%ணையும் போட்டொவில போட்டு வியாபாரம் பண்ணும் திரு%^ நா%^

Anonymous said...

* எவ்வளவு உயரமான மனிதனாக இருந்தாலும், கால், தரையைத் தொட்டுத்தான் ஆக வேண்டும்.
* கஜத்தை மீட்டராக்கினர்; முழத்தை மாற்ற முடிந்ததா?
* குடையைக் கண்டு மழை விரோதம் கொள்வதில்லை.
* எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், அப்பளத்தை முழுதாகச் சாப்பிட முடியாது.
* விளக்கில் விழுந்து இறப்பதால் தான் விட்டில் பூச்சியைப் பலர் அறிந்திருக்கின்றனர்!
* செருப்புக்குக் கலப்புத் திருமணம் ஏது?
* என்னதான் ஒழுங்காக இருந்தாலும், வாழைப் பழத்தின் தோலை உரித்து விடுகின்றனர்.தே$%^&பயலே
இன்னும் நீ சாகலையா?
பஸ் டயர் இருக்கு
விஷ பாட்டில் இருக்கு
உன் பொண்டாட்டியின் விஷ $%^ இருக்கு,
உன் ம#$%^ வாயும் இருக்கு
தூக்குகயிறும் இருக்கு
ப்ளீஸ் சாகேன்,
ஜாதி வெறி கொண்ட நீ செத்தா தான் ஜாதி ஒழியும்டா
டுபுக்கு மகனே
அப்பன் பேர் தெரியாத அனாதைப்பயலே
விப$%^ விடுதியில் பிறந்து வளர்ந்த ம#$$தி$%னி

பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் சொல்லாமல் இருந்தால் “பார்ப்பான் பூணூலை மறைத்து எழுதுகிறான்” என்கிறார்கள்.

நான் யாரையும் சந்திக்கும் போது அவர்களின் சாதி என்ன என்று கேட்பது இல்லை. ஆனால் என்னை சந்திப்பவர்கள் (குறிப்பாகத் தமிழ்கள்) நான் என்ன சாதி என்று அறிந்து கொள்ளத் துடிக்கிறார்கள்.

பூணூலை அணிவது சில காரணங்களுக்காக செய்ய வேண்டியுள்ளது.

சாவுக்கான சடங்கு முதல் பிற எல்லா சடங்கையும் செய்ய பூணூல் தேவையாக உள்ளது.

சில தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும் போது, பூணூல் சில நேரங்களில் மனதை உறுத்தி ஒரு தடையை உண்டு செய்வதுண்டு. (நான் பீலா விடுவதாக எண்ணக் கூடாது. சில பொருள்களை நாம் புனிதமாக என்னும் போது அதை மீறி சில செயல்களை செய்யத் தயங்குவோம். உதாரணமாக சிகரெட் பிடிக்க நினைத்து சிகரெட்டை எடுக்கும் போது அப்பா வந்தால் அதை நிறுத்தி விடுகிறோம்)

மேலும் பூணூல் அணிவதை நிறுத்தினால் அது நான் பயந்து கொண்டு செய்வதாக இருக்கும். அது தவறு, நான் பிறர் யாரையும் மனதால் தாழ்வாக எண்ணாத வரையில், பூணூலை எடுப்பது அது பிறரை தாஜா செய்வதற்காக செய்யப் படும் செயலாக எனக்குத் தோன்றுகிறது.

பிராமணர்கள் மட்டும் பூணூல் அணிவதில்லை, செட்டியார்கள் அணிகிறார்கள். பொற்க்கொல்லர் அணிகிறார்கள். மர வேலை செய்யும் ஆச்சரிகள் அணிகிறார்கள். வட இந்தியாவில் பூணூல் அணிவது சகஜம்.நசுக்கப் பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் சிலர் கூட பூணூல் அணிகிறார்கள்.

நான் உங்களை, நீங்கள் ஏன் பூணூல் அணியக் கூடாது என்று கேட்டால் நீங்கள் அதிர்ச்சியோ வருத்தமோ அடையக் கூடாது.

சந்தியாவந்தனம் என்று கூறப் படும் சூரிய வழிபாட்டை செய்து முடித்தவுடன் மனதில் அமைதி நிலவுகிறது.

நான் சந்தியாவந்தனத்தை தமிழிலே செய்கிறேன்.

நீங்கள் ஏன் பூணூல் அணிந்து சந்தியாவந்தனம் செய்யக் கூடாது?

தமிழிலோ, வட மொழியிலோ எதில் வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். பொறுமையாக நான் கூறியதில் தவறு இருக்கிறதா அல்லது ஆக்க பூர்வமா என்று எண்ணிப் பாருங்கள்!