November 23, 2006

இலங்கைத் தமிழர் மற்றும் பாலஸ்தீன்

இலங்கைத் தமிழர் பிரச்சனையை பல வலைப்பதிவாளர்கள் தங்கள் பதிவுகளில் பதிகின்றனர். இதில் ஒரு Trend என்னவென்றால், இலங்கைப் தமிழர் பிரச்சனையை பாலஸ்தீனர்களுடன் equate செய்துகொள்வது. மிகவும் ஆழமான பிரச்சனையை இது சுலபமாக சுளித்துவிடுகிறது என்பதனால் இதை என்னால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

பாலஸ்தீனர்கள் நாடிழந்து நிற்பதும், தமிழர் நாடு கேட்டு நிற்பதும், இருவேறு தளங்களில் பார்க்கப் படவேண்டிய பிரச்சனைகள் என்றே நான் கருதுகிறேன்.

பாலஸ்தீனர்களுக்கு நாடு இல்லாமல் போனதுக்கான காரணம் சரித்திரம் அறிந்த உண்மை. ஜோர்டான் எகிப்து செய்தது போன்று தமிழர்களுக்காக ஒன்றும் இந்தியா இலங்கையின் மேல் போர் தொடுத்து தமிழருக்குச் சேர வேண்டிய நாட்டை அபகரிக்கவில்லை.

இலங்கையை விட்டுச் சென்ற வெள்ளையர்கள் ஒன்றும் ஈழ நாட்டையும் இலங்கையையும் கோடு போட்டுப் பாகப் பிரிவினை செய்துவிட்டுச் செல்லவில்லை.

பாலஸ்தீன அரசைப் போல் இலங்கை விடுதலைப் புலிகள் ஒன்றும் ஸ்ரீ லங்கா என்ற நாட்டை முழுவதும் அழிக்க நினைப்பதில்லை.

இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு அமேரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் ஆதரவு திரட்டிட வேண்டும், ஐ. நா வின் மூலம் பிரச்சனையை தீர்க்கவேண்டும் என்றால், அது இந்த நாட்டில் உள்ள Powerful jewish lobby க்களின் கவனைத்தை ஈர்த்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதில் ஆரம்பிக்கலாம்.

கொள்கைக்காக பாலஸ்தீனர்களுடன் (இஸ்லாத்துடன் என்று படிக்கலாம்) இணைந்து கொண்டால் உங்களை தீவிரவாதிகள் என்றே இங்கு சொல்லி ஒதுக்கிவைப்பார்கள்.

அதற்காக பகிரங்க இஸ்ரேலிய ஆதரவு வேண்டும் என்று சொல்லவில்லை. கொஞ்சம் ஒன்றுக்கும் பிரயோசனப்படாத பாலஸ்தீன ஆதரவை அடக்கி வாசிக்கலாம் என்று தான் சொல்ல விழைகிறேன்.

சங்கம்.ஆர்க் ல் தமிழர் பிரச்சனை ஒரு தனிப்பிரச்சனை. மதம் சார்ந்த பாலஸ்தீன, கஷ்மீர், செசன்யா போல அல்ல என்று Vijay Lazarus எழுதியுள்ளார்.

14 comments:

Vajra said...

test

நேச குமார் said...

உலகின் ட்ரென்ட் புரியாமல், இப்படி உளறிக் கொட்டி இலங்கைத் தமிழர்களுக்கு இவர்கள் ஊறு செய்கிறார்கள். இப்படித்தான் இந்திய எதிர்ப்பை இலங்கைத் தமிழர் பிரச்சினையோடு பின்னிப் பினைத்து ஈழத்தவர்களை இந்திய சிந்தனையாளர்களிடமிருந்து அந்நியப்படுத்தினார்கள்.ஈழத்தவர்களுக்கு சார்பாக பேசுவதே இந்திய எதிர்ப்பு என்கிற துரதிர்ஷ்ட நிலையை, சூழலை ஏற்படுத்தியது இவர்களே.


ஈழப்பிரச்சினையை முன்னெடுத்துச் செல்பவர்களுக்கு(குறிப்பாக தமிழகத் தலைவர்கள், அமைப்புகள்) மெச்சூரிட்டியும் கிடையாது, உலகில் சுற்று முற்றும் நடப்பதைப் பார்க்கிற வழியும் தெரியாது.

இன்றைய உலகு பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இல்லை. அரபு நாடுகளே உள்ளளவில் அதை விரும்பவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவாக பலமான நாடுகள் - பலம் என்றால் வெறும் ஆயுத பலத்தை மட்டும் சொல்லவில்லை(அந்த வகையிலும் மிகவும் பலமானவை தான் இந்த நாடுகள் என்றாலும்) - உறுதுணையாக நிற்கின்றன.

இஸ்லாமியத் தீவிரவாதத்தைப் போன்றதே சிங்கள-பவுத்த-இனவாத-மதவாத குழு என்று உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்வது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவைத் தேடித்தரும். இதை நான் வெறும் ஸ்ட்ரேட்டஜியாக மட்டும் சொல்லவில்லை, உண்மையிலேயே சிங்களப்பேரினவாதிகளின் உளப்பாங்கிற்கும் இஸ்லாமிய மேலாதிக்க உளப்பாங்கிற்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. தமிழர்கள் திம்மிக்களாக தமது மொழி, வரலாறு , கலாச்சாரம் ஆகியவற்றை விட்டுக் கொடுத்து தமது பாரம்பரிய பூமியில் சிங்களபவுத்த மேலான்மையை ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த இன அழிப்பு நடக்காது.

இலங்கையின் பவுத்தம் இஸ்லாத்தையொத்தது. இந்த பவுத்தத்தை உருவாக்கியவர் அனகாரிக தருமபாலர். அதற்கு முன்பு இத்துனை தெளிவான சிங்கள பவுத்த - தமிழ் இந்து பிளவு அங்கே இருந்ததில்லை.

எப்படியோ, இன்றைய சூழலில் இஸ்லமிய அடிப்படைவாத எதிர்ப்பை தமக்குச் சாத்கமாக்கிக் கொள்ளும் சாதுர்யம் இல்லாதது மட்டுமல்ல, தோற்கிற கட்சியின் பக்கம் சாய்ந்து, ஈழத்தவர்களையும் சாய்த்து முழுகுகிற தோணியிலேற்றும் வேலையைத்தான் ஈழத்தவர்களுக்கு, அவர்களுக்காக இங்கே பேசும் அரசியல்வாதிகளுக்கும் சிந்தனையாளர்களும் செய்து வருகிறார்கள் என்பதே வருத்தமான உண்மை.

கால்கரி சிவா said...

யூதர்கள் போல் இலங்கை தமிழர்களும் நாடுவிட்டு நாட்டிற்கு விரட்டியடிக்கபடுவது பரிதாபம்.

கனடாவில் தமிழர்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது. இதை இவர்கள் நல்ல முறையில் மார்கெட்டிங் செய்து லாபிகளில் வலுப் பெறவேண்டும்.
திராவிட கட்சிகளை போல் கிட்டபார்வை இல்லாமல் தொலைநோக்கு இருந்தால் தமிழ் ஈழம் சாத்திய படலாம்

kulakkodan said...

I accept you. We must approch Jews.
WE can not approch without Jew's Support.

Vajra said...

சரியாகச் சொன்னீர்கள் நேசகுமார்.

அதை ஈழத்தவர் யோசிக்க ஆரம்பித்துவிட்டனர் என்றே தோன்றுகிறது.

http://www.tamilnation.org/forum/sivanayagam/990315grandpa.htm

இதில் எழுதியவர் அந்த யோசனையில் தான் எழுதியுள்ளார் என்றும் தோன்றுகிறது.

ஈழம் அமைய வழி இருக்கிறது என்றால் அது உலகின் ட்ரெண்ட் புரிந்த ஈழத்தமிழர்கள் Anti-semitic ஆக இல்லாத பெரிய நாடுகளில் சக்திவாய்ந்த லாபிக்கள் அமைத்து செய்வதனால் தான் முடியும்.

பாலஸ்தீனப் போராளிக்குளுக்களுடன் கூட்டு சேர்வதில் அல்ல.

ஈழத்தமிழர் diaspora தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் போல் உலக நடப்பு தெரியாமல் "திராவிடப் பெத்தடினால்" பாதிக்கப் படாலம் இருக்கிறார்கள் என்பது என் யூகம்.

நிச்சயம் யாரைப் பிடித்தால் காரியம் நடக்கும் என்று தெரிந்திருப்பர்கள் என்று தோன்றுகிறது.

Vajra said...

//
இன்றைய சூழலில் இஸ்லமிய அடிப்படைவாத எதிர்ப்பை தமக்குச் சாத்கமாக்கிக் கொள்ளும் சாதுர்யம் இல்லாதது மட்டுமல்ல, தோற்கிற கட்சியின் பக்கம் சாய்ந்து, ஈழத்தவர்களையும் சாய்த்து முழுகுகிற தோணியிலேற்றும் வேலையைத்தான் ஈழத்தவர்களுக்கு, அவர்களுக்காக இங்கே பேசும் அரசியல்வாதிகளுக்கும் சிந்தனையாளர்களும் செய்து வருகிறார்கள் என்பதே வருத்தமான உண்மை.
//

இல்லை நேசகுமார்,

Asiatribune ல் வந்த இந்தக் கட்டுரையில் மேற்கத்திய அரசியலில் லாப்பிக்கள் உருவாக்குவதாகச் சொல்லப் படுகிறது.

ஆனால் இதிலும் அவர்கள் இடது சாரி சிந்தனையுடைய கட்சியில் தான் லாப்பிக்கள் உருவாக்குகிறார்கள் என்பது நெருடலான உண்மை.

கன்சர்வேடிவ்களிடையேயும் லாபிக்கள் உருவாக்கிக் கொள்வதே சிறந்த strategy யாக இருக்கும். தேவை கொள்கையல்ல, நாடு.

இடது சாரி அரசுக்கள் மிரட்டல் மட்டும் தான் செய்யும் (குறைக்கிற நாய்கள், கடிக்காது). கன்சர்வேடிவ்கள் அப்படியல்ல. இறங்கி அடிப்பார்கள்.

என் கவலை தமிழ் ஈழத்தவருக்காகப் பேசுபவர்கள் அவர்கள் priorities களை சரியாகப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என்பதே.

Anonymous said...

மிக நல்ல் சூப்பரான அவசியமான பதிவு.

Anonymous said...

இலங்கைத் தமிழர் பிரச்சினையோடு பின்னிப் பினைத்து ஈழத்தவர்களை இந்திய சிந்தனையாளர்களிடமிருந்து அந்நியப்படுத்தினார்கள்

Anonymous said...

தமிழர்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது.

Vajra said...

சொக்க லிங்கம்,

நன்றி

ஜடாயு said...

// கொள்கைக்காக பாலஸ்தீனர்களுடன் (இஸ்லாத்துடன் என்று படிக்கலாம்) இணைந்து கொண்டால் உங்களை தீவிரவாதிகள் என்றே இங்கு சொல்லி ஒதுக்கிவைப்பார்கள். //

இப்படி செய்வதை ஈழத் தமிழர்கள் (புலிகள் உட்பட) இதுவரை கவனத்துடன் தவிர்த்து வந்திருக்கிறார்கள். அவர்கள் நம்மூர் சிறுபான்மை ஜால்ராக்கள் போல முதுகெலும்பற்றவர்கள் இல்லை, மானமும் வீரமும் உள்ளவர்கள்.

ஆனால் நெருக்கடி நிலை இன்னும் அதிகமாகி இஸ்லாமிய பெட்ரோ டாலர்களை அவர்கள் நாடும் நிலை வரக்கூடாது.

Hariharan # 26491540 said...

ஷங்கர்,

பலம் வாய்ந்த நாடுகள் உலக தாதாயிஸம் என்ற ரௌடியிஸத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் என்பதால் இவர்களது லாபி உதவும்.

லோக்கலாகச் சொன்னால் கொண்டித்தோப்பு பங்க் குமாரைத்தெரியும், பிளேடு பரமனைத் தெரியும் என்று சொன்னால் கபாலிக்கோ கபிலனுக்கோ கொஞ்சம் கிலி வரும்தானே! சமாதானத்திற்கு கபாலியோ கபிலனோ இறங்கி வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்!

soorian said...

(பாலஸ்தீனர்களுக்கு நாடு இல்லாமல் போனதுக்கான காரணம் சரித்திரம் அறிந்த உண்மை)அந்த உன்மை என்ன வெண்று கொன்சம் சொல்லுஙல்.

ஈழப்பிரச்சினைக்கு தீர்வு கான யார் காலிலும் விழத்தேவை இல்லை. அது பிரபகரனின் கையில் தான் உல்லது.
பிரபாகரன் தன்னொட ஆதிக்க கொல்கயை கைவிடனும் இல்லை களுத்தில் தொங்கும் சயனைடை சாப்பிட்டு தானே சாகவேன்டும். ஈழ தாகம் எண்று பல உயிர்கலை கொன்றது போதும்.
இழங்கை தமிழர்கலை படுகொலை சிங்களவர்கல் அல்ல புலிகல்தான்.

Vajra said...

//
(பாலஸ்தீனர்களுக்கு நாடு இல்லாமல் போனதுக்கான காரணம் சரித்திரம் அறிந்த உண்மை)அந்த உன்மை என்ன வெண்று கொன்சம் சொல்லுஙல்.
//

ஐயா சூரியன்

1948 யுத்தத்தில் இஸ்ரேல் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றுது எனவே சொல்லமுடியும்.

அது முடிந்ததும் palestine ல் எகிப்து வென்ற நிலப்பரப்பை அது தன் நாடாக்கிக் கொண்டது. ஜோர்டன் வென்ற பகுதிகள் அது தன் நாட்டின் பகுதியாக்கிக் கொண்டது. இஸ்ரேல் வென்ற பகுதிகளை அது லவட்டிக் கொண்டது.

மற்ற அரபு தேசத்தவரை நம்பிய பாலஸ்தீனர்களுக்குச் சேர வேண்டிய பகுதிகளே அவையெல்லாம்.

இது தான் பாலஸ்தீன் காணமல் போன கதை.