அதில் அவர்
"ஆசிய அதிபதி" [Lord of Asia] என்று தன்னைப் பீற்றிக் கொண்டு, அலெக்ஸாண்டர் காடு, மலை, பாலைவனம் கடந்து, கடும் மழை, வெப்பம் தாங்கிக் கொண்டு ஆ·ப்கானிஸ்தானில் உள்ள ஹிந்துகுஷ் மலைத் தொடர்களைத் தாண்டி, எதைப் பற்றியும் அறியாத பிரதேசங்களில் துணிவாகப் படைகளுடன் கால்வைத்தார். ஐந்து நதிகள் பாயும் சிந்து சமவெளிப் பரப்பில் அலெக்ஸாண்டர் நுழைந்து இந்திய மன்னன் புருஷோத்தமனைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
Porus (புருஷோத்தமன்) ஐ வெற்றி கொண்டதாக எழுதியிருந்தார்.
பள்ளிப் பாடங்களில் தோற்ற புருவிடம் அலெக்ஸாண்டர் "உன்னை எப்படி நடத்த நீ விரும்புகின்றாய்" என்று கேட்பதாகவும், அதற்கு புரு "ஒரு அரசனை நடத்துவது போல் நடத்து" என்று ஹீரோ மாதிரி பதில் சொல்வதும் நிகழ்ந்ததாக படித்திருக்கிறோம். ஆனால், E. A. Wallis Badge என்பவர் ''Life and Exploits of Alexander the Great'' என்ற தனது புத்தகத்தில், அலெக்ஸாண்டர் புருவிடம் தோற்றதாகவே குறிப்பிடுகிறார்.
In the battle of Jhelum a large majority of Alexander's cavalry was killed. Alexander realized that if he were to continue fighting he would be completely ruined. He requested Porus to stop fighting. Porus was true to Indian traditions and did not kill the surrendered enemy.
மேற்கத்திய சரித்திர ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர் தோற்றார் என்றால் அவரை மாவீரன் என்று சொல்ல முடியாது என்பதால் அவர் தோற்றதை மறைத்து வெற்றி பெற்றார் என்று கூறுகின்றனர். ஆனால் சரித்திரம் மாறிவிடாது. அலெக்ஸாண்டர் புருஷோத்தமனுடன் சமரசம் செய்துகொண்டதற்கான சரித்திர சான்றுகள் உள்ளன, வென்ற அலெக்ஸாண்டர் ஏன் புருஷோத்தமனுடன் சமரசம் செய்து கொள்ளவேண்டும்..?
அலெக்ஸாண்டர் சட்லஜ் (hyphsis) நதிக்கரையின் வழியாக தன் படைகளைத் திரட்டிக்கொண்டு கடலை அடைந்து பாபிலோனியா திரும்பியது தெரிந்ததே. அப்போது எதிர்கொண்ட "மல்லிஸ்" படைகளுடன் புருவின் படைகள் அலெக்ஸாண்டருடன் சேர்ந்து போரிட்டதாக சரித்திரம் கூறவில்லை. புரு தோற்றிருந்தால் அவன் படைகள் அலெக்ஸாண்டரை ஆதரித்து "மல்லிஸ்" படைகளுக்கு எதிராக போரிட்டிருக்கும்!
ப்ளூடார்க் (plutarch) அலெக்ஸாண்டர் புருவுக்கு தங்கங்கள் பல கொடுத்ததாகவும் சொல்கிறார். வென்ற அரசன் தோற்ற அரசனுக்கு தங்கம், வெள்ளி கொடுக்கும் முறை எந்த காலத்தில் இருந்தது?
சில ஆண்டுகளுக்கு முன் வந்த அலெக்ஸாண்டர் திரைப்படத்தை திரு ஜெயபாரதன் பார்த்தாரா என்று தெரியவில்லை. ஆலிவர் ஸ்டோன் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து பின் தன் படத்தை இயக்கியிருக்கிறார். அதில் தெளிவாக அலெக்ஸாண்டர் புருவிடம் தோற்றது காட்டப் படுகின்றது.
இந்த "ராஜாவை நடத்தும் முறையில் நடத்து" என்று தோற்ற புரு டயலாக் அடிப்பதாக படிக்கும் நான்சென்ஸையெல்லாம் எவ்வளவு நாள் தான் நாம் படித்துக் கொண்டிருப்பது?
புருஷோத்தமன், இந்திய மண்ணின் மைந்தன், அலெக்ஸாண்டரை தோற்கடித்தான். இந்தியரான நாம் அதை நினைத்து பெருமை கொள்ளவேண்டும்.
இது தொடர்பாக திண்ணையில் என் கடிதம்.
இந்த யூ டியூப் சுட்டியில் இருக்கும் வீடியோவில் அலெக்ஸாண்டர் தோற்கடிக்கப் படுவது பார்க்கலாம்.
22 comments:
வஜ்ரா,
சிறு வயதில் நான் ஒரு கதைக் கேட்டிருக்கிறேன். இது ரக்ஷா பந்தன் பற்றிய கதை.
போருக்கு முதல் தினம் புருஷோத்தமனுக்கு ராக்கி கட்டி என் கணவனை கொல்லகூடாது என அலெக்சாண்டரின் மனைவி கேட்டுக்கொள்வாள்.
மறுநாள் ஆக்ரோஷமான போர் யானை மீதிருந்த புருஷோத்தமன் அலக்ஸாண்டரை ஒரு கையால் தூக்கி அவன் தலையை வெட்ட வாளை ஓங்கும் போது அவன் கண்ணுக்கு கையில் இருந்த ராக்கி தெரியும்.
தங்கையின் கணவனை வெட்டுவதா என புருஷோத்தமன் அலக்சாண்டரை விட்டுவிடுவான்.
இது கதையா சரித்திரமா என தெரியாது.
இது புதிய தகவல் வஜ்ரா
நானும் இத்தனை நாள் அலெக்சாந்தரிடம் புரு தோற்றான் எனத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். தெளிவுபடுத்தியதற்கு நன்றி
சிவா
இது உண்மையாக இருக்காது. ஏனெனில் அலெக்சாந்தர் ஓரினச் சேர்க்கையாளன்.
//
தங்கையின் கணவனை வெட்டுவதா என புருஷோத்தமன் அலக்சாண்டரை விட்டுவிடுவான்.
//
இது வேறயா?
பாசமலர் சிவாஜி ரேஞ்சுக்கு இருக்கு..
//நானும் இத்தனை நாள் அலெக்சாந்தரிடம் புரு தோற்றான் எனத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.//
Same here!
//
//நானும் இத்தனை நாள் அலெக்சாந்தரிடம் புரு தோற்றான் எனத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.//
Same here!
//
1. It is disputable.
2. There are evidences to the contrary. அதைச் சொல்லத்தான் இந்த பதிவு.
வஜ்ரா,
புதியதொரு தகவலைச் சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு முன் இதை கேள்வி பட்டதில்லை. அதே போல செல்வன் சொன்ன தகவலும் புதிதாக இருந்தது. NatGeoவில் Death of Alexander என்ற ஒரு நிகழ்ச்சியைக் கண்டேன். அதில் தெரிந்து கொண்டது - அலெக்சாண்டர் ஒரு பெரும் குடிகாரன் என்றும், போர் வியூகங்கள் வகுப்பதில் வல்லவன், அவன் வாழ்நாளில் உலகை வெல்வதற்கான தன் பயணத்தின் போது பல நகரங்களுக்கு Alexandria என்று பெயர் வைத்துள்ளான். 32ஆம் வயதில் அவனுடைய மரணம் மர்மம் நிறைந்த்தாக இருக்கின்றது. விஷம் வைத்து கொல்லப் பட்டான் என்பது ஒரு தியரி, காய்ச்சல் கண்டு இறந்தான் என்பது இன்னொரு தியரி. NatGeoவில் முடிவாக காய்ச்சல் கண்டு இறந்ததாகக் கூறினார்கள்.
நல்ல ஆராய்ச்சி வஜ்ரா.. உண்மயில் நடந்த சரித்திரத்தை கூட இப்படி பொய்யாய் ஏன் தான் எழுதுகிறார்களோ..
வஜ்ரா, நான் அலெக்சாந்தர் படத்தை பார்த்தேன். அதில் அவர் ஒரு கருப்பின பெண்ணை திருமணம் செய்துகொள்வார். அவர்களின் முதலிரவு காட்சி அநியாயத்திற்கு செக்ஸி
அவர் ஓரின சேர்க்கையாளர் என தெரிந்ததும் அந்த பெண் பேயாட்டம் போடுவார்
ஆலிவர் ஸ்டோன் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து பின் தன் படத்தை இயக்கியிருக்கிறார். அதில் தெளிவாக அலெக்ஸாண்டர் புருவிடம் தோற்றது காட்டப் படுகின்றது.
நிஜத்தில் தோற்றது அலெக்ஸாண்டர்தான்.
ஆனால், தாங்கள் சொல்லியவாறு அல்லாமல் அந்தப் படத்தில் அலெக்ஸாந்தர் வெற்றிபெற்றதுபோல மழுப்பலாகக் கூறியிருப்பார்கள். அலெக்ஸாந்தரே அடிபட்டு கீழே விழுந்துவிடுகிறாராம். ஆனால் அவரை தூக்கிச் செல்லும்போது நாம் வெற்றி பெற்றோம் என்று அவரிடம் கூறப்படுகின்றது. படம் எடுத்தவரும், பார்க்கப்போகிறவர்களும் யூரோப்பியர் அல்லவா.
மற்றபடி போரஸின் தற்கால வழித்தோன்றல்கள் பின் லேடனுக்காக கோழைகள்போல அப்பாவிகளைக் கொன்றுகொண்டிருக்கிறார்கள்.
யூரோப்பியர் பெரியோர், மற்றவரை ஆளத் தகுதி கொண்டோர் என்று நிறுவ விரும்பும் கதைகள்தான் அலெக்ஸாந்தர் வெற்றிபெற்றதாகக் கூறப்படும் சரித்திரக் கற்பனைகளும். இதை அப்படியே ஏற்றுக்கொள்ள விரும்புகின்ற இந்திய வரலாற்று ஆஸிரியர்கள், இடதுசாரி மார்க்கத்தின் வழிப்படி இந்தியாவில் ஹிந்துக்கள் நடைபெறும் முருகப் பெருமான் வழிபாடு உண்மையில் அலெக்ஸாந்தரை வழிபடுவதிலிருந்து ஆரம்பித்தது என்றெல்லாம் கதைகட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
நம்மில் பலருக்கு அலெக்ஸாந்தர் புருஷோத்தமரிடம் தோற்றதுகூடத் தெரியவில்லை.
எல்லாம் நம்ம ஆட்களுக்கு சரித்திரத்தை ஒழுங்காக பதிவு செய்ய தெரியாததால் வந்த கஷ்டம்.
Nevertheless, Alexander is a fascinating character.
ஷங்கர்,
இந்திய வரலாறு முழுமையாக நூறு சதவிகிதம் ட்ரான்ஸ்பரன்ஸியோடு உண்மையை உண்மையாக எழுதப் படவேண்டும்.
இம்மாதிரி அலெக்ஸாண்டரை வென்ற பெருமை சரித்திரம், இசுலாமியர்களிடம் கோரமாக வதைபட்ட சரித்திரம், ஆங்கிலேயர்களது ஆதிக்கம் பற்றிய கலப்படமற்ற சரித்திரம் என்று உண்மையான இந்திய சரித்திரம் எழுதப்பட வேண்டும்.
எழுச்சியே நம் சரித்திரத்தினை உள்ளது உள்ள படியே அறிந்து கொள்வதில் உள்ளது.
இடது சாரி சார்பு தவறான இந்திய சரித்திரம் படித்துப் படித்து இந்தியா ஒரு வீரமற்ற மென்மையான தேசம் என்ற கருத்தே மேலோங்கியிருக்கிறது.
அன்புடன்
ஹரிஹரன்
ஹரிஹரன்,
இந்தியவரலாறை முழுமையாக எந்த சார்பு நிலையும் இன்றி எழுத வேண்டும்..அதற்கு முதல் படி அதை Depoliticise செய்யவேண்டும்...
அரசு கஜானாவிலிருந்து கரந்துகொண்டு மார்க்சீய சிந்தனையுடன் ஒட்டுண்ணி சரித்திரவிலாளர்களால் எழுதப்படும் சரித்திரங்கள் ஆபத்தனவை என்றால், முரளி மனோஹர் ஜோஷி போன்றவர்கள் செய்வதும் தவறானதே.
அரசியல் கட்சி சார்பு உறுப்பினர்களற்ற அறிவு சார் துரையில் இருப்பவர்களால் சரித்திர ஆராய்ச்சிகள் நடந்து எழுதப்பட்டால் தான் அது உண்மையான இந்திய வரலாறாக இருக்கும்.
அதுவரை, awareness உண்டாக்குவதே நலம்.
depoliticise செய்வது மிகவும் தியரிடிகலான விஷயம். சார்பு நிலை என்பது எப்போதும் இருக்கவே செய்யும். மிலிட்டரி ரூல் வந்தாலும் அதற்கேற்ற சார்பு நிலை இருக்கும்.
அகடமிக் விஷயங்களை பொலிடிகல் லாபத்திற்காக எழுதுவது என்று இருக்கும் நடைமுறையை மாற்றி உண்மையைப் பதிவு செய்யணும்... இது கனவுநிலைதான்.
ஜெர்மனி உலகப்போரில் ஆற்றியவை, ஹிட்லர், ஜப்பானிய சாமுராய் இவர்கள் சரித்திரத்தில் எதிர்மறையான புகழுடனேயெ பதிவாகியிருக்கிறார்கள்.
நாம் ஷஜகானின் கையில் ரோஜாவைத் தந்து மும்தாஜின் ஒப்பற்ற காதலன், காதல் மாளிகை தாஜ்மகாலைக் கட்டியவன்னு ஜல்லியடிக்கிற வரலாற்றைப் கட்டி அழுகிறோம்.
ஆனால் இன்றைய தேதியில் முற்றிலும் /பெருமளவில் தவறான இந்திய சரித்திரத்தால் நாட்டுக்கு தரித்திரமே!
அடங்கொக்கா மக்கா
தோத்ததுக்கே இம்புட்டு எளுதிப்புடானுங்களா ?
புருவுடனான போருக்குப் பின் அலெக்ஸ் வேற போர் புரிந்தாரா அல்லது ரிட்ரீட்தானா ? என்பதனையும் பார்த்தால் தெளிவு கிடைக்கலாம் என நினைக்கிறேன்
அன்புடன் ச சங்கர்,
அவரு புருவுடன் போர் நடத்திய பிறகு சட்லஜ் நதிக்கரை வழி கடலை அடைந்து பாரசீகம் போய் மண்டையை போட்டார். அப்புறம் அவர் ராஜ்ஜியம் அவர் சேனைகளின் தலைவர்கள் பிரித்து ஆண்டனர். அதிலும் இந்தியப் பகுதி இல்லை.
ஐரோப்பிய சரித்திரவியலாளர்களை விட More loyal than the king என்ற பாணியில் இந்த சொத்தை கதையை நம் மக்களுக்கு பள்ளிகளில் சொல்லித் தந்து வளரும்போதே சுயமரியாதையை நசுக்கி விடுகின்றனர். எப்பவுமே, வெள்ளத்தோல் தான் மேல், என்ற ரீதியில் நம் அடிப்படை நம்பிக்கைகள் மாற்றம் பெருகின்றன.
எதிர்பார்த்தேன்...தோர்ற பின் எந்த மன்னனும் மேலும் போர் புரிவதில்லை...அதே போல் உலகையே ஆள வந்த அலெஸ்ஸாண்டர் வட பகுதியை ஜெயித்து விட்டு தென் பகுதிக்குள் வராமல் திடுதிப்பென புறப்பட்டதும் நம்ப முடியவில்லை..இங்குதான் சரித்திரத்துடன் கதைகளையும் கட்டி திரித்து விடுகின்றனர் :(
History is always written from the mind of the person who wrote it rather than from his eyes.
//திரு சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) //
He has replied for your points in thinnai.. he has given more than 10 reference books as a proof for his view...
Did you get a chance to have a look..i am interested to know your answers for his questions...
sorry for typing this engalish.. it would be better to have the answers in tamil...
Yes i read that reply Nakkiran.
என்னால் முடிந்த வரை தேடிப் பார்த்ததில் எந்த சரித்திரவியலாளரும்
புருஷோத்தமன் வெற்றி பெற்றதாகக் குறிப்பிடவில்லை. என்றாலும், இப்போது
எழும் கேள்விகள் இவை.
Plutarch ன் சொந்த வரிகளிலேயே இவ்வாறு அவர் குறிப்பிடுகிறார்
This last combat with Porus took off the edge of the Macedonians' courage and stayed their further progress in India
மேலும் "கதை"ப்படி புருஷோத்தமனை கைது செய்து வந்த பிறகு அலக்ஸாண்டர்
அவனின் மிடுக்கான பதிலைக் கண்டு புருஷோத்தமனுக்கு தான் கைப்பற்றிய சில
பிரதேசங்களையும் புருவின் ராஜ்ஜியத்தையும் ஆளும் "உரிமையை" வழங்கியதாகச்
சொல்கிறார்.
Alexander not only offered Porus to govern his own kingdom as satrap under himself but gave him also the additional territory of various independent tribes whom he had subdued.
இதை நீங்கள் எப்படி பார்க்கப் போகிறீர்கள்.
ப்ளூடார்க் அலக்ஸாண்டரை கடவுளாக்கத் திட்டம் வகுத்து புருவை வென்றதாகச்
சொல்வதை ஏற்பதா அல்லது, யுத்த நீதியின் படி போர் முடிந்ததும் யாரிடம்
அதிக நிலப்பரப்பு உள்ளது என்பதை வைத்து போரின் வெற்றியாளனை முடிவு
செய்வீர்களா?
என்பதை நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
வஜ்ரா,
மேலும் சிறப்பாக ஆராய்ந்த மற்றொரு கட்டுரையை திண்ணையில் எதிர்பார்க்கிறேன்.
அலெக்ஸாந்தர் தன்னுடைய திக்விஜயத்தை ஆரம்பித்தபோது இருந்த போர்வீரர்களின் எண்ணிக்கை, அவன் இந்தியா வருவதற்கு முன்புவரை பெற்ற எண்ணிக்கையைவிட குறைவு. அப்படி இருக்கையில் சொந்த நாட்டைவிட்டு விலகி வெகுநாட்கள் ஆகிவிட்டன என்று சொன்னதால் மொத்தப் படைகளையும் அழைத்துக்கொண்டு திரும்பிவிட்டது என்பது இடிக்கின்றது. அலெக்ஸாந்தர் தன்னால் வெற்றிகொள்ளப்பட்ட மற்ற படையினரை வைத்து போரை தொடர்ந்திருக்கலாமே.
மேலும், அவனுடைய படையினருக்கு ஏற்கனவே அலெக்ஸினுடைய திட்டம் தெரியும். இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக நைல் நதிவரை திரும்புவதுதான் பழைய போர் திட்டம். வெற்றிகரமாக எல்லாம் தொடர்ந்திருந்தால் திட்டத்தை ஏன் கைவிடவேண்டும். அதுவும் 90% நிறைவேறியபின்னால்?
மேற்கிலிருந்து படையெடுத்து வந்த அலெக்ஸை மாவீரன் என்று அழைக்க வயப்படுத்தப்பட்ட நாம், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி படையெடுத்த அட்டில்லாவையும், செங்கிஸ்கானையும் காட்டுமிராண்டிகள் என்று படிக்கிறோம். ஏன்?
அதுவுமன்றி, இவர்களுக்கு இணையாக அதிக பரப்புக்களை வென்ற ராஜ ராஜ சோழன் பற்றி யாராவது அறிவோமா?
வணக்கம் வஜ்ரா,
அலக்சாண்டரை பற்றி மட்டுமல்ல, நாம் படிக்கும் மேற்கெத்திய வரலாறுகள் அனைத்தும் பிரிட்டனால் சொல்லிக் கொடுக்கப்பட்டது.. அதில் பெரும்பாலும் ஐரோப்பியர்களை பற்றி உயர்வாகவே இருக்கும்..எடுத்துக்காட்டாக மெகலன், கொலம்பஸ், வாஸ்கோடகமா இந்த கொலைகாரர்கள் பற்றி நாம் படித்தது..'தமிழர் ஏன் அடிமை ஆனார்' பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்களோட படைப்பை படித்தால் இன்னும் நம்மை பற்றி தெரிந்துகொள்ளலாம் (நீங்கள் முன்னதாகவே இந்த படைப்பை படித்துருந்தால் மன்னிக்கவும் ).தாங்கள் செய்யும் இந்த செயல் பாராட்டத்தக்கது.இந்த செயல் தொடர என் மனப்பூர்வமான வாழ்த்துகள்...
Post a Comment