...In the seventh month, on the tenth day of the month, you shall afflict your souls, and you shall not do any work ... For on that day he shall provide atonement for you to cleanse you from all your sins before the L-RD. -Leviticus 16:29-30
யோம் கிப்பூர் என்பது மன்னிப்புக் கேட்கும் நாள் (day of attonement) என்று ஹீப்ரூவில் அர்த்தம். அது ஒவ்வொறு ஆண்டும் செப்டம்பர் அக்டோபர் மாத காலத்தில் (ஹீப்ரூ நாட்காட்டியில் டிஷிரி 10 ம் நாள்) வரும்.
இது யூதர்களின் மிக முக்கிய மத விடுமுறை நாளாகும். பல யூதர்கள் மதக்கட்டுபாடுகள் பல கடைபிடிக்காவிட்டாலும் இந்த நாளை நிச்சயம் அனுஷ்டிப்பர். இந்த ஆண்டு இது அக்டோபர் 1 மாலை முதல் அக்டோபர் 2 மாலைவரை (ஹீப்ரூ நாட்காட்டியில் ஒரு நாளின் கணக்கு சூரிய அஸ்தமனத்திற்கு பின் துவங்கி, அடுத்த நாள் சூரியன் அஸ்தமிக்கும் வரை).
மேலே குறிப்பிட்ட tanakh (ஹீப்ரூ விவிலியம்) படி, உணவு இல்லை. மாலை முதல் அடுத்த நாள் மாலை வரை. இதில் வண்டிகள் செல்லாது, ரோட்டில் அனைத்து கடைகளும் அடைத்திருக்கும். யாரும் கார் ஓட்டாதலால் ரோடுகள் வெரிச்சோடிக் கிடக்கும். ஆஸ்பத்திரி எமர்ஜென்சி வார்டுகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மட்டுமே செயல்படும்.
மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இருப்பதை விட, மக்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருப்பர். மன்னிப்பு என்றவுடன் synegouge தேவாலயம் சென்று பிரார்த்தனையில் ஈடு பட்டு மன்னிப்பு கேட்பது போல் இல்லாமல், நண்பர்கள் உறவினர்களிடம் பேசி தாங்கள் இதற்கு முன்னால் ஏதேனும் தீங்கு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளவேண்டும். அப்போது தான் ஆண்டவன் நம்மை மன்னித்து அவர் வைத்திருக்கும் நல்ல பிள்ளைகள் புத்தகத்தில் நம் பெயரை சேர்த்துக் கொள்ள கையொப்பமிடுவாராம்..!! அதற்காக எல்லோரும் g'mar Hatima Tova -May you be inscribed in the book of life என்று வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருப்பர்.
ட்ஸாஹ்ல் (IDF) ல் உள்ள பல பெரிய்ய ஆஃபிசர்களும் லிவு எடுத்துக் கொண்டு குடும்பத்தைக் கவனிக்கச் சென்றுவிடுவர். முழு இஸ்ரேலும் Stand Still.
1973 ம் ஆண்டு, எகிப்து, சிரியா, ஜோர்டான், ஈராக் நாடுகள் கூட்டமைப்புப் படைகள் சோவியத் கொடுத்த போர் விமானங்கள் தளவாடங்கள் உதவியுடன் யோம் கிப்பூர் அன்று இஸ்ரெலைத் தாக்கின. அவர்கள் எண்ணம், இஸ்ரேல் இப்படி இருக்கும் போது தாகினால் போரில் வெற்றி நிச்சயம் என்பதே. (புனித ரமலான் நோன்பு காரணமாக பல அரபு முஸ்லீம் படைகள் போருக்குச் செல்ல முராண்டு பிடித்தாலும் கடைசியில் சென்றனர்).
சிரியா கோலான் மலைப்பகுதியையும், எகிப்து சைனாய் பாலைவனப் பகுதியையும் தாண்டி இஸ்ரேலுக்குள் புகுந்துவிட்டது, (1967) 6 நாள் போருக்கு பிறகு இந்த பகுதிகள் இஸ்ரேல் வசம் இருந்தது. அன்று துவங்கிய யுத்ததில் இஸ்ரேலுக்கு முதலில் பேரிழப்புகள் இருந்த போதிலும், சிக்கிரமே விடுப்பில் இருந்த கம்மாண்டர்களை அழைத்து போருக்கு தயாராகி பதில் தாகுதல் துவக்கியது. இதில் அரபு கூட்டமைப்புப் படைகளுக்கு பெருத்த சேதம் நிகழ்ந்து முடிவில் இஸ்ரேல் வெற்றி கொண்டது சரித்திரம். இந்த பொர் பற்றி விக்கிபீடியா சுட்டி.
14 comments:
test
இந்த யுத்தம் ஆரம்பித்து, நடந்து முடிந்தது வரை (October 6 to October 26, 1973) அக்காலக் கட்டத்தில் கவலையோடு அதை பத்திரிகைகளில் அவதானித்தவன் நான்.
முதலில் சில சங்கடங்களை எதிர்க் கொண்டாலும் இஸ்ரேல் நிலைமையை அபாரமாக சமாளித்தது. அதே சமயம் எகிப்துக்கு இந்த யுத்தம் 1967-ல் பெற்ற யுத்தத்தின் அவமானத்தை சிறிது நீக்கிக் கொள்ள முடிந்தது. பிற்காலத்தில் இஸ்ரேலுடன் ராஜீய உறவுகளை மேற்கொள்ளவும் வழி செய்தது.
நேற்று உங்களுடன் chat-ல் பேசும்போது நான் இது சம்பந்தமாகப் பதிவு போடலாம் என்று யோசித்தேன். ஆனால் அதே சமயம் என்னுடன் chat-ல் இன்னொரு பதிவரும் இருந்தார். அவருடன் பேசியதற்கு அப்புறம் சற்றே என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
சிறிது நேரத்தில் என் பதிவைப் போடப் போகிறேன். அதுவும் யோம் கிப்பூர்தான், ஆனால் அது டோண்டு ராகவனுடையது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜைன மதத்தினர் கூட ஆகஸ்ட் மாததில் ஒரு வாரம் 'பர்யூஷண்' என்ற முறையை கடைபிடித்து அதன் கடைசி நாளன்று 'மிச்சாமி துக்கடம்' என்று எல்லாரிடமும் சொல்வார்கள். அதன் அர்த்தமும் 'நான் அறியாமையால் செய்த தவறுகளுக்கு நேருக்கு நேர் மன்னிப்பு கேட்கிறேன்' என்பதாகும். பம்பாயில் இருந்தபோது அனுபவத்தில் தெரிந்துகொண்டேன்.
என்னவோ காந்தி ஜெயந்தி அன்று பதிவுகளெல்லாம் ஒரே காந்திகிரியாக இருக்கிறது.
//என்னவோ காந்தி ஜெயந்தி அன்று பதிவுகளெல்லாம் ஒரே காந்திகிரியாக இருக்கிறது. //
ஹிஹி உன்மை தான்.
ஹும்ம்ம் அப்பிடியே நம்ம மதுரைகாரர் ஈப்புரூ மொழியெல்லாம் பழகிட்ட மாதிரி தெரியிது. :)
//
ஹும்ம்ம் அப்பிடியே நம்ம மதுரைகாரர் ஈப்புரூ மொழியெல்லாம் பழகிட்ட மாதிரி தெரியிது. :)
//
அவ்வளவாகத் தெரியாது என்றாலும்....சர்வைவல் லெவலுக்கு உள்ளது.
//
என்னவோ காந்தி ஜெயந்தி அன்று பதிவுகளெல்லாம் ஒரே காந்திகிரியாக இருக்கிறது.
//
ha ha ha...
முன்னாபாய் 2 effect ஆ?
http://dondu.blogspot.com/2006/10/jom-kippur.html
இந்த சுட்டிகள் ஆங்கிலத்தில் இருக்கின்றனவே ?
தமிழ் விக்கிபீடியாவில் ஏதும் தகவல் கிடைக்குமா ?
நன்றி CT மற்றும் செந்தழல்...
தமிழ் விக்கியில் அதைப் பற்றி கட்டுரைகள் இல்லை.
// மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இருப்பதை விட, மக்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருப்பர். மன்னிப்பு என்றவுடன் synegouge தேவாலயம் சென்று பிரார்த்தனையில் ஈடு பட்டு மன்னிப்பு கேட்பது போல் இல்லாமல், நண்பர்கள் உறவினர்களிடம் பேசி தாங்கள் இதற்கு முன்னால் ஏதேனும் தீங்கு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளவேண்டும். //
வஜ்ரா, இது அற்புதமான, ஆரோக்கியமான பழக்கம் என்று நினைக்கிறேன். குற்றம் செய்தவன் குற்ற உணர்வில் (guilt) இருந்து மீள்வதற்கு இத்தகைய செயல்பாடுகள், சம்பிரதாயமான மன்னிப்பு, பிரார்த்தனையை விட அதிகம் துணை புரியும். யோம் கிப்பூரின் இத்தகைய வழக்கம் பற்றித் தகவல் தந்ததற்கு நன்றி.
Flemingo,
நன்றி,
கூகிளாண்டவர் கொடுத்த தகவல்களை இங்கே பின்னூட்டுகிறேன்.
//
'மிச்சாமி துக்கடம்'
//
மித்ய மே துஷ்க்ருதம் என்னும் வார்த்தையின் திரிபு. ஜைனர் வழக்கம். சம்வத்சரி ப்ராதிக்ரமணா, ப்ர்யூஷனின் கடைசி நாள்.
யூதர்கள் போல் ஒரு சோக உணர்வு இல்லாமல் சந்தோஷ உணர்வுடன் கொண்டாடப் படும் "பண்டிகை" யாக ப்ர்யூஷன் இருக்கிறது.
புரட்டாசி (பத்ரபாதா) மாசம் வரும் இந்த ப்ர்யூஷன்...!! புரட்டாசி மாசம் நம்மளும் வெஜிடேரியனாக மாறி, கோழி, ஆடுகளை உயிருடன் விட்டு வைக்கிறோம் !!
//
யோம் கிப்பூரின் இத்தகைய வழக்கம் பற்றித் தகவல் தந்ததற்கு நன்றி.
//
ஜடாயு,
இத்தகய வழக்கம் ஜைனர்களிடம் பிரபலம்...Flemingo எடுத்துரைத்திருக்கிறார்...
அதெல்லாம் சரி, மதுரைக்கு போயி வலைப்பதிவர் சந்திப்பு வர்ர வழியிலே சென்னையில் உள்ள லோக்கல் இஸ்ரேலியர் டோண்டு :) அவர்களின் சந்திப்பு என்று ஒன்றும் நடக்கலியா?
கால்கரியாரே,
மதுரையிலிருந்தே நேராக பம்பாய்க்கு விமானம் இருக்கு...அதை பயன் படுத்தி நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும்...
4-5 மணி நேரம் தாமதம்!! நல்ல வேளை எனக்கு onwards விமானம் அடுத்த நாள் காலையில் இருந்தது...பம்பாயில் நண்பருடன் இருக்கலாம் என்று எண்ணி அப்படி புக் செய்தேன்..!
அதுக்கு சென்னைக்கு போயி சொந்த பந்தம் வீட்டில் இருந்துவிட்டு, அப்படியே டோண்டு ஐயாவையும் பார்த்துவிட்டு, மும்பைக்கு போயிருக்கலாம் தான்..இனி அடுத்த முறை என்றொன்றும் இல்லை...என் இஸ்ரேலிய வாழ்க்கை இந்த ஆண்டுடன் முடிவடைக்கிறது...அப்புறம் இந்தியா அப்புறம் எங்கேயோ...ஆண்டவனுக்குத் தான் தெரியும்.
Post a Comment