September 7, 2006

மதுரெ மதுரெ..

வீட்டில் விசேஷம் காரணமாக மதுரை வந்து சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், புத்தகக் கண்காட்சி நினைவுக்கு வர, சிறப்பு பேருந்தெல்லாம் நம் பாண்டியன் போக்குவரத்துக் கழகம் இயக்குகின்றது என்பதை அறிந்து சி2 வட்டப் பேருந்து பிடித்து தமுக்கம் திடலை அடைந்தேன்...
புத்தகக் கண்காட்சி பற்றி சொல்லும் முன்னர் வட்டப் பேருந்து பற்றியும் அதை மதுரையில் அறிமுகம் செய்யக் காரணம் பற்றியும் சொல்லிவிடுகின்றேன்...
மதுரையில் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே கட்டிய ரயில்வே மேம்பாலம் பெரியார் பஸ் ஸ்டாண்டு அருகில் இருந்தது. அதை ஹானரபிள் அம்மா காலத்தில் பெரிய மேம்பாலமாகக் கட்டி முடிக்க திட்டம் தீட்டி கட்ட ஆரம்பித்தனர். கட்ட ஆரம்பித்தவர்கள் முதலில் பழைய பாலத்தை உடைத்துவிட்டதால். கோச்சடை, அரசடி, அச்சம்பத்து, விராட்டிபத்து, அடிக்கடி வலைப்பதிவுகளில் அடிபடும் பெயரான நாட்டார்மங்கலம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் டவுன் பஸ்கள் ரயில் நிலைய மேற்கு நுளைவுவாயிலில் நிருத்தி வைத்திருந்தனர். அப்போதிருந்தே நூதன சிந்தனையாக பெரியார் ஆரம்பித்து ஆரப்பாளயம் சென்று வேறுவழித்தடம் வழியாக மாட்டுத்தாவணிக்குப் போய் திரும்ப பெரியார் நிலையம் வரும் வட்டப் பேருந்து இயக்கப்பட ஆரம்பித்தது.
பாலம் கட்ட ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டாண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், ஹானரபிள் அம்மா இப்போது அவ்வளவு ஹானரபிள் பதவியில் இல்லாத நிலையிலும் பாலம் கட்டுமானப் பணிகள் நின்று நிதானமாகச் செல்கின்றது, ப்ராக்கெட்டில் "ஆமையைவிட" என்று போட்டுக் கொள்ளவும்.
அப்பாடா, ஒரு வழியாக கோச்சடை போக பெரியார் நிலையத்திலிருந்து வசந்த நகர் சுற்றி, பைப்பாஸ் ரோடு பிடித்து மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் கட் அடித்து தற்பொழுது டவுன் பஸ்கள் செல்வது போல் புத்தகக் கண்காட்சிக்கு வந்துவிட்டேன்...டீ டூர் (de tour) என்றால் இது தானோ?
சரி, தமுக்கம் திடலில் நடக்கும் புத்தகக் கண்காட்ச்சியில் ஏகப்பட்ட ஸ்டால்கள்..(statistics களை ஹிந்து, எக்ஸ்பிரஸ் நாளிதள்களில் இடம் பெறும் செய்தியில் பெற்றுக் கொள்ளுங்கள்!)
சில பல ஸ்டால்களில் "ஸ்டேல்" (stale) சரக்குகள் மட்டுமே இருந்தது மன வேதனை அழித்தது...
ஆன்மீகப் புத்தகக் கடைகளும், பெரியாரின் கருத்துக்கள் போதிக்கும் புத்தகக் கடைகளும் மிக அருகாமையில் கண்ணில் பட்டது...இதுவரை அடிதடி நடந்ததாக செய்திகல் வரவில்லை.!! :)
ஆங்கிலப் புத்தகங்கள் வெகு சிலவே இருந்தன...அதுவும் எல்லாம் ஹைதர் அலி காலத்துப் பழையப் புத்தகங்கள்...New releases இல்லாமல் என்ன புத்தகக் கண்காட்சி?!!
தமிழில் அப்படி இல்லை, புதிய புத்தகங்கள் ஏராளமாய்க் காணப்பட்டது...ஆனால், தமிழில் புத்தகத்தின் புலம் (subjects) பாலிடிக்ஸை விட்டு வெகுதூரம் செல்வதாக இல்லை. 100 க்கு 90 புத்தகங்கள் பாலிடிக்ஸ் அல்லது ஆன்மீகமாகவே காணப்படுகின்றன...பயோடெக்னாலஜி, இன்ஃபர்மேடிக்ஸ், ஜீனோமிக்ஸ் போன்ற அறிவியல் புலங்களில் தமிழ் புத்தகங்கள் காணக்கிடைப்பதில்லை. இந்தப் புத்தகக் கண்காட்சியிலும் கிடைக்கவில்லை.
கிழக்கு பதிப்பகத்தின் வெளியான, திரு பா. ரா வின் நிலமெல்லாம் ரத்தம், மற்றும் ஹெஸ்புல்லா புத்தகத்தை வாங்கினேன்...( அதைப் பற்றி அடுத்த வலைப்பதிவு வரும்! )
இங்கு கண்ணில் பட்ட இன்னொறு சமாச்சாரம், பத்து கடைக்கு ஒரு கடையில் கார்ல் மார்க்ஸும், சே குவேராவும் இழித்துக் கொண்டும், முஷ்டியை மடித்து வானத்தில் குத்திக் கொண்டும் நின்றது.
மாவோவின் கவிதைத் தொகுப்பு என்று புத்தகங்களும் காணப்படுகின்றன...
காந்தியைவிட, அப்துல் கலாமைவிட கார்ல் மார்க்ஸ் போஸ்டர்கள் கண்ணில் பட்டது தான்...மனதை உருத்தியது...
இருந்தும் அதில் ஒரு சந்தோஷம் என்னவென்றால் செத்த ideology ஐ பழய புத்தகத்திலும், நூலகங்களிலும் தான் காண முடியும்!!
சீக்கிரமே அந்த நூலகள் ப்ழய நூலகங்களை அடையும் அல்லது துருப் பிடித்துப் போன மூளையை மேலும் செல்லரிக்கவைக்கும் என்று நம்புகின்றேன்...
கல்கியின் படைப்புகள் தனி ஸ்டாலே இருந்தது...150 ரூ முதல் 350 ரூ வரை விலை வித்தியாசத்தில் பல பொன்னியின் செல்வன்கள் கிடைக்கின்றன...ஹாரி போட்டர் சீரீஸ் போல் அழகாக பேக் செய்யப்பட்ட பெட்டியில் வரும் புத்தகங்களாக கல்கியின் பொன்னியின் செல்வன் இன்னும் வராமல் ஐந்து புத்தகதை இன்னும் சணல் நூல் அல்லது பிளாஸ்டிக் கயிறு கட்டி விற்கின்றனர்...!!
கொடுக்கும் காசுக்கு குவாலிட்டி எதிர்ப்பார்க்கக்கூடாதா?
350 ஐ 500 ஆக்கி நல்ல gsm தாள்களில் அச்சடித்து பேப்பர் பேக் (paper back) புத்தகத்தை தரமான முறையில் பேக் செய்தால் பொன்னியின் செல்வனை வாங்க மாட்டார்களா?

15 comments:

Sivabalan said...

கண்காட்சிக்கு நேரில் போன Effect கொடுத்திட்டீங்க..

நல்லது..

கால்கரி சிவா said...

மதுரை எப்படி? அதே ஜாலியா?
நடத்துங்க சாமி உங்க விடுமுறையை நல்லா நடத்துங்க

சுந்தர் said...

நீங்க மதுரையாண்ணே? சொல்லவே இல்லையே! :-)

அங்கிட்டு எங்கிட்டு இருக்கீக?

செல்வன் said...

//இங்கு கண்ணில் பட்ட இன்னொறு சமாச்சாரம், பத்து கடைக்கு ஒரு கடையில் கார்ல் மார்க்ஸும், சே குவேராவும் இழித்துக் கொண்டும், முஷ்டியை மடித்து வானத்தில் குத்திக் கொண்டும் நின்றது.காந்தியைவிட, அப்துல் கலாமைவிட கார்ல் மார்க்ஸ் போஸ்டர்கள் கண்ணில் பட்டது தான்...மனதை உருத்தியது...///

காரல் மார்க்ஸ் தலைசிறந்த தத்துவஞானி ஷங்கர்.அவரது சீடகோடிகள் தான் அவரது பெயரை ரிப்பேராக்கி விட்டார்கள்.

மதுரை மார்க்ஸிஸ்டுகள் செல்வாக்குடன் இருக்கும் ஏரியா என்பதால் தான் இத்தனை ஸ்டால்களையும்,படங்களையும் பார்த்தீர்கள்.சென்னை புத்தக கண்காட்சியில் இதை பார்க்க மாட்டீர்கள்.

Vajra said...

சிவபாலன்,

நன்றி

கால்கரி சிவா,

அடுத்து...ஜிகர்தண்டா பதிவு!! ஓகே யா?!!

சுந்தர்,

ஆம்மாண்ணே...மதுரெதாண்ணே...இங்கிட்டு மீனாட்சி கோவில் பக்கத்துல டவுன்ல தான்ணே...நமக்கு...

செல்வன்,

உண்மைதான்...மதுரை மார்க்ஸிஸ்டு செல்வாக்கு திராவிட அரசியலின் திராவக வீச்சாலும் (லீலாவதி மேல் ஆசிட் வீச்சு) காங்கிரஸின் remarkable failure ஆலும் உள்ளது...

சென்னை புத்தகக் கண்காட்சி பார்த்ததில்லை...

நன்றி..

துளசி கோபால் said...

அட! நீங்க மதுரைக்காரரா? சொல்லவே இல்லை( வடிவேலு ஸ்டைலில் படிச்சுக்குங்க)

நமக்கும் அங்கெ பக்கத்துலேதான், போடி மாமியா வூடு.

புத்தகங்கள் இப்ப நல்லதரமா வருதுங்களே. சந்தியா & கிழக்குப் பதிப்பகம் நல்லா வெளியிடறாங்களே.

பொன்னியின் செல்வன் நிறையப்பேருக்குப் போகணுமுன்னு விலை குறைச்சு வச்சு அதெ சமயம்
'மலிவு'பதிப்பா ஆயிருச்சோ?

Senthil said...

எ.பி சார்பில் ,

//வேதனை அழித்தது...//

வேதனை அளித்தது...
//ப்ழய//
பழைய

//இயக்க்ப்பட //
இயக்கப்பட

நான் பார்த்தவரையில்

அன்புடன்
சிங்கை நாதன்

சிவமுருகன் said...

ஷங்கர் நீங்க மதுரை வற்றதா (உங்க) அம்மாவும், அப்பாவும் சொன்னாங்க. என்னால தான் வந்து பாக்க முடியவில்லை. இப்போது சென்னையில் உள்ளேன்.

புத்த கண்காட்சி கண்ணில் பட்டது போக தான் குடுத்து வைக்கல, நல்ல வேளை அந்த கொறய தீர்த்து வச்சிட்டீன்ங்க.

கால்கரி சிவா said...

ஷங்கர், மஞ்சனக்கார தெரு பாய் செய்யும் ஜிகர்தண்டாவை ஸ்டெப் பை ஸ்டப் போட்டோ எடுத்து வலைப் பதிவில் போட முடியுமா?

தொழிலை பர்பெக்ட் செய்யதான். பேராசிரியர் (தருமி சார்) வேற நீங்க செயவது கனடா வெர்ஸன் என்று சொல்லிவிட்டார்

சதயம் said...

அப்பப்ப தோனும் 'பயபுள்ள இம்புட்டு வெறப்பா நிக்குதே'ன்னு...இப்பல்ல தெரியுது அய்யா நம்ம ஊரூன்னு.

நமக்கு உங்க கருத்துகள்ள ஒப்புதல் இல்லாட்டியும்...ஊருன்னு வரும்போது தாயாப்புள்ளயா போயிட வேண்டியிருக்கு...ஹி..ஹி...

நல்லாயிருங்க...வாழ்த்துக்கள்

Vajra said...

கால்கரி,

மஞ்சனக் காரர்த்தெரு பாய் கடையை மாற்றிவிட்டார்...

கீழ மாரட் வீதி, நவபத் கானா தெருவில் தான் இப்போது..ஜிகர்தண்டா!!

சதயம்,
மதுரையா?!!

சதயம் said...

நமக்கு மதுரதான்.....

St.Marys..ல ஆரம்பிச்சு தியாகராசர் பொறியியல்ல குப்ப கொட்டிட்டு இப்ப சென்னைல சொந்தமா தொழில்னு வண்டி ஓடிட்டு இருக்கு....

Vajra said...

எழுத்துப் பிழை சார்பில் எழுதிய சிங்கைநாதன் என்ற செந்தில்...

நீங்கள் சுட்டிக் காட்டியனவற்றை திருத்தி எழுதிவிட்டேன்...

நன்றி
ஷங்கர்.

Muse (# 5279076) said...

மதுரையில் வெயில் எப்படியுள்ளது?

பெங்களூரின் தட்பவெப்பம் பழகியதால் என்னால் மதுரையில் இருக்கவே முடிவதில்லை. பிறந்து, இருபத்தாறு வருடங்கள் வாழ்ந்த பூமி. அந்த மீனாக்ஷி மட்டும்தான் என்னை இழுத்துக்கொண்டே இருக்கிறாள். அந்த அழகி இப்போது எப்படி இருக்கிறாள்? சந்தித்தீர்களா?

வீட்டிற்கு வந்த உணர்வு உள்ளதா?

இல்லை, அடங்கொக்காமக்கா, நம்ம மதுரையா இது ? என்று கேள்வி எழுகிறதா?

இவன் புதைக்கப்படவில்லை, விதைக்கப்படுகிறான் என்று கோயம்புத்தூர் கொலைகாரன் முகம்மது அலி பற்றி போஸ்டர்கள் ஒட்டிய ஊரில், கார்ல் மார்க்ஸும், மாவோவும் கூட்டணி சேர்ந்து கும்மியடிப்பதில் அதிஸயம் ஏதுமில்லை. ம.க.இ.க ஸ்டால் போட்டு துப்பாக்கிகளை விற்காதவரை எல்லாம் சுபமே.

என்னதான் பொன்னியின் செல்வன் விலை குறைந்து வந்தாலும், மணியம் ஓவியம் இல்லாமல் நன்றாகவே இல்லை. மணியத்தின் ஓவியங்களோடு வருமானால் எவ்வளவு பணமானாலும் கொடுத்து வாங்கிவிடுவேன். விஸாரித்தபோது காப்பிரைட் ப்ரச்சினைகள் உள்ளன என்று கேள்விப்பட்டேன்.

அப்புறம், கருவாச்சி மீனாச்சியை மறந்துவிடாமல் நான் கேட்டதாய் சொல்லிவிடுங்கள்.

Muse (# 5279076) said...

இன்னொன்னும் இருக்கு. கல்லூரிகளில் DYFI ஒரு பலம் வாய்ந்த அமைப்பு. அதுவும் கார்ல் மார்க்ஸ், மாவோ பற்றிய புத்தகங்களின் விற்பனைக்குக் காரணம். இதுபோன்ற புத்தகங்கள்தான் சென்னையிலும் அதிகமாக இருந்ததாக பார்த்துவிட்டுவந்த நண்பர் சொன்னார்.

துன்பம் என்னவென்றால், கார்ல் மார்க்ஸோ, சேகுவராவோ சொன்னதை நேரடியாக சொல்லாமல் அவர்கள் "பற்றி" எழுதப்படும் புத்தகங்கள்தான் அதிகம். எழுதுபவர்கள் தங்களது சொந்த தேவைகளை முன்னிட்டு எழுதுகிறார்கள். படிப்பவர்களுக்கு கார்ல் மார்க்ஸ் போன்ற ஞானியின் கருத்துக்கள் தெளிவாக சென்றடையாமல் போய்விடுகின்றது. இவர்கள் எழுதும் கார்ல் மார்க்ஸ் புத்தகங்களுக்கும் எம்சியாரின் ஸினிமா கதைகளுக்கும் வித்யாஸம் இல்லை.