September 21, 2006

விமானநிலைய Wi-fi

இப்பொழுதெல்லாம் விமான நிலையங்களில் இண்டர்னெட் வசதிக்காக வயர் லெஸ் (wi-fi) வசதி செய்யப்பட்டு வருகின்றது. சென்னை விமான நிலையத்தில் பிரச்சனையின்றி இயங்குவதாக கேள்விப்பட்டேன்...

மதுரை விமான நிலையத்தில் போர்டு எல்லாம் மாட்டிவிட்டுருந்தார்கள்....இந்த விமான நிலையத்தில் வை-பை வசதியுள்ளது என்று.

அட, நம் விருமாண்டி ஊர் மதுரையில கூட வை-பை வசதி இருக்கே என்று மடி கணினி எடுத்து சோதித்துப் பார்த்தால்...BSNL க்கு பணம் கொடுக்காமல் கனெக்ஷன் கட். !! லாகின் கடவுச்சொல் வேண்டும் என்று காட்டியது திரை. கேட்டால் அதில் ஏதோ பிரச்சனை என்று விமான நிலைய இன்சார்ஜ் தெரிவித்தார்.

பம்பாய் சர்வதேச விமான நிலையத்தில் மணிக்கு 100 ரூ கொடுத்து வாங்கவேண்டிய TATA IndiCom Wi fi. எத்தனையோ பேர் வந்து போகும் விமான நிலையத்தில் எப்போதோ, ஐந்தோ, பத்து நிமிடமோ பயன் படுத்தும் வசதிக்காக 100 ரூ செலவு செய்யவேண்டுமா...? என்ன முட்டாள் தனம்.

உலகம் முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் இலவச வை-பை வசதி கொடுக்கும் இந்த வேளையில் ஒரு டிக்கட்டுக்கு சராசரியாம 1500 ரூ வரை airport tax - விமான நிலைய சேவை வரி வசூலிக்கும் நம் விமான நிலையத்தின் நிலை படு மோசம்.

மற்ற சர்வதேச விமான நிலையத்தின் சேவைவரி 20-25 US$ மட்டுமே. நம்மூரில் அந்த அளவுக்கு பணம் வாங்கியும் கிடைப்பது இரண்டாம் தர சேவையே. ஏன்?

18 comments:

viswa said...

yes correct ya sonninga

புலிப்பாண்டி said...

இளிச்சவாயனுங்க மாச சம்பளம் வாங்கறவங்கதானுங்களே..கைக்குழந்தைகளுக்கு விமான நிறுவனங்களே இலவச டிக்கெட்டோ,அல்லது ஒரு சொற்பத் தொகையோ மட்டுமே வசூலிக்கின்றன..ஆனால் விமானநிலைய வரி இத்யாதி ஆயிரத்து சொச்சம், பிறந்த குழந்தையானாலும்..

இலவசக்கொத்தனார் said...

வஜ்ரா,

நீங்கள் சொல்வது சரி இல்லை. இன்றும் பல விமான நிலையங்களில் இணையத் தொடர்பு கட்டணச் சேவைதான். அமெரிக்காவிலும் சரி ஐரோப்பாவிலும் சரி.

இங்கும் பல இடங்களில் நீங்கள் குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது வாங்க வேண்டும். விலையும் அப்படி ஒன்றும் சகாயமில்லை.

உயர் வகுப்பு கட்டணதாரர்கள் செல்லக் கூடிய லவுஞ்சுகள்ளில் மட்டும் வேண்டுமானால் இலவசமாகக் கிடைக்கலாம்.

இந்த இணைய வசதி தருபவர்கள் விமான நிலையத்தில் தங்கள் சேவையை விற்பதற்காகத்தான் விமான நிலயத்திற்கு பணம் செலுத்தி வந்துள்ளார்கள். அங்குள்ள உணவகத்தில் இலவசமாகக் காபி கேட்போமா? இதில் மட்டும் ஏன்?

கொஞ்சம் நிதானமாய் யோசித்துப் பாருங்கள்.

Vajra said...

இலவசக் கொத்தனார்,

சர்வதேச விமான நிலையங்களில் இலவசச் சேவை பெரும்பாலும் வழங்கப்படுகிறது...

பிறகு அந்த வெயிட்டிங் லவுஞ்ச்சில் கொடுக்கிறார்கள்...அங்கே அதிக பட்சம் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை மட்டுமே வெயிட்டிங்...அதிலும் எத்துனை பேர் இந்த வசதியைப் பயன் படுத்தப் போகிறார்கள்? இலவசமாகக் கொடுத்தால் ஒன்றும் குறைந்து போக மாட்டார்கள்.

ஒரு சில விமான சேவை நிறுவனங்கள் தங்கள் விமானத்திலேயே கொடுப்பதாக சேதி..! அது கட்டன சேவை.!!

சர்வதேச விமான நிலையம் அல்ல, டொமெஸ்டிக் விமானம் பிரயாண டிக்கெட்டுக்கு 1450 ரூ சேவை வரி வசூலிக்கப் பட்டது..! சர்வதேச விமானம் என்றால் வரி அதிகம்!

இவ்வளவு வரி வசூல் செய்து என்ன செய்கிறார்கள்...கக்கூசில் கரப்பான் பூச்சி, இருப்பதிலேயே விலை மலிவு பினாயில் போட்டு துடைத்த வாடை (அரசு ஆஸ்பத்திரி ஜெனெரல் வார்டில் அடிக்கும் அதே வாடை, உங்களை பம்பாயில் வரவேற்கும்!)

service என்று சொல்லிவிட்டு வாங்கும் பணத்திற்கு அவர்கள் செய்வது disservice. வை-பை ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

//
அங்குள்ள உணவகத்தில் இலவசமாகக் காபி கேட்போமா? இதில் மட்டும் ஏன்?
//

காபி யார் வேண்டும் என்றாலும் குடிக்கலாம்..எல்லோருக்கும் வாய் இருக்கிறது. வயிறு இருக்கிறது...!

கம்பியூட்டர் இருப்பவர்கள் மட்டுமே அதுவும் வை-பை கார்டு பொருத்திய கணினி பயன்படுத்துவோர் மட்டுமே, அதிலும், வெயிடிங் லவுஞ்சில் நேரம் கிடைத்தால் மட்டுமே..பயன் படுத்துவார்கள்...!!

மணியன் said...

தமிழ்நாட்டுக்காரனென்றாலே இலவசங்களை எதிர்நோக்குபவர்கள் என்ற மும்பைகாரர்களின் கிண்டலையும் மீறி நீங்கள் சொல்வது சரியென்றே சொல்வேன். வேண்டுமானால் நேரக்கட்டுப்பாடோ தரவிறக்க அடக்கக் கட்டுப்பாடோ விதிக்கலாம்.உ-ம் 30 நிமிடங்கள், 500MB .

இலவசத்தை இலவசனார் எதிர்ப்பதும் ஒரு முரணே :))

Vajra said...

மனியன் அவர்களே... நீங்கள் சொல்வது சரியே...

தமிழ் நாட்டுக்காரனெல்லாம் ஓ. சி கேஸ் இல்லை... ஓ சி என்று கொடுத்து..கெடுத்து வைத்திருக்கும் அரசியல் நாகரீகம் முழு இந்தியாவிலும் உள்ளது... இடது சாரியும் ப.ஜ.க வும், அதில் அடக்கம்.!

வலை வசதி என்பது டாய்லெட் போல் இன்றியமையாத ஒன்று ஆகி வரும் சூளலில்.. அதை இலவசமாக எதிர்பார்ப்பது தவறெதும் இல்லை என்பது என் கருத்து.

விமான நிலையங்களில் கட்டனக்கழிப்பறை இருந்தால் எப்படி இருக்கும்?!!

புலிப்பாண்டி,

யார் ஒரிஜினல் புலிப்பாண்டி என்று எனக்கு அடிக்கடி சந்தேகம் வருகின்றது...உங்கள் பெயரில் எக்கச்செக்க போலிகள், ஒரிஜினல் டூப்ளிகேட்டுகள் வலம் வருகின்றார்கள்...!! படத்தைப் போட்டு வைத்துள்ளீர்கள் என்பதனால் நம்பி வெளியிட்டுள்ளேன்...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

புலிப்பாண்டி said...

ஹி...ஹி...நாந்தானுங்க ஒரிஜினல் புலி..எக்கச்சக்க போலி புலிப்பாண்டிகளால எனக்கே சமயத்துல எங்க என்ன எழுதினேன்னு குழப்பம் வரும்..பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க..போலியெல்லாம் யாருன்னு தெரியாதுங்களா?
அட..எல்லாம் நம்ம பசங்க('பாய்'ஸ்) தான்...:)

கால்கரி சிவா said...

ஆக.... ஊருக்கு போய்ட்டு வந்திட்டீங்க...

கால்கரி சிவா said...

ஆக.... ஊருக்கு போய்ட்டு வந்திட்டீங்க...

மு.கார்த்திகேயன் said...

//விருமாண்டி ஊர் மதுரையில //

ஆஹா..இது என்ன புதுப் பேர் மதுரைக்கு.. பாத்துங்க யாராவது சண்டைக்கு வரப் போறாங்க..

முதல் முறை இங்கே.. நெறைய புது விஷயங்கள்..வாழ்த்துக்கள்..

BTW, என் பதிவுக்கு வருகை தந்தமைக்கு நன்றி, வஜ்ரா

Vajra said...

வாங்க கார்த்திகேயன்,

உங்கள் பதிவில் comment moderation ஏற்பாடு செய்துகொண்டீர்களா? அப்பத்தான் தமிழ்மணம் அன்மையில் மறுமொழி இடப்பட்ட இடுகைகளில் தெரியும்...

//
ஆஹா..இது என்ன புதுப் பேர் மதுரைக்கு.. பாத்துங்க யாராவது சண்டைக்கு வரப் போறாங்க..
//

25 வருஷமா மதுரையில தான இருந்தேன்..இருக்கேன்... எனக்கு இல்லாத உறிமையா... நான் என்னவேணா சொல்லுவேன்..என் ஊரு அது. ;D

Vajra said...

ஆமாம் கால்கரியாரே,

ஊருக்கு போயிட்டு வந்துட்டேன்... நீங்க எப்ப இந்தியா பக்கம் போயிட்டு வரப்போறீங்க...

வருஷத்துக்கு ரெண்டு trip அடிக்கவேணாமா?

செந்தழல் ரவி said...

right said...

Samudra said...

AAI நிர்வாகம் இருக்குற வரைக்கும் இந்த மாதிரி கோமாளிதனமான வேலைகளை தான் செய்வாங்க.ஒன்னியும் பன்ன முடியாது. :)

சந்தோஷ் said...

வஜ்ரா,
கொத்தனார் சொல்வது சரிதான் நீங்க அந்த லிஸ்டை பாத்திங்கண்ணா பெரிய பெரிய விமான நிலையங்களில் wifi இலவசம் கிடையாது(எ.கா atlanta,சிகாகோ, நியூஜெர்சி, நியூயார்க JFK(இதில் ஒரே ஒரு டெர்மினலில் மட்டும் இருக்கிறது.)) இந்த இலவசம் எல்லாம் சிறிய மற்றும் நடுத்தரவிமான நிலையங்களிலேயே. பல விமான நிலையங்கள் non commercial airlines மட்டுமே வந்து போபவை. மேலும் இந்தியாவில் விமான பயணம் செய்பவர்கள், மடிக்கணினி உபயோகிப்பவர்கள் ஒன்றும் ஏழைகள் அல்லவே அவர்களுக்கு 100 ரூபாய் ஒரு பெரிய விஷயமாக இராது. அப்புறம் விருமாண்டி ஊர் எப்படி இருக்கிறது? ரொம்ப அன்பான மக்கள் மதுரை மக்கள்.

இலவசக்கொத்தனார் said...

இதைப் பெரிய விவாதமாக்க விரும்பாததினால்தான் மேலும் பேச்சை வளர்க்கவில்லை.

சந்தோஷ் நீங்கள் சொல்வது சரிதான். பெரிய விமானநிலையங்களில் இந்த வசதி இலவசமாகக் கிடையாதுதான். சிறிய விமானநிலையங்கள் தங்கள் சர்வைவலுக்காக இது போல் வசதிகளை அளிக்கின்றன.

அமெரிக்காவில் இன்று பெரும்பாலான ஹோட்டல்களில் இலவச இணைய தொடர்பு வழங்கப்படுகிறது. அது போல் மதுரை ஹோட்டலில் வழங்கப் படுவதில்லை என ஆவேசப்பட்டால் சரியா?

வஜ்ரா எழுதியதையே எடுத்துக் கொள்ளுங்கள்.

//காபி யார் வேண்டும் என்றாலும் குடிக்கலாம்..எல்லோருக்கும் வாய் இருக்கிறது. வயிறு இருக்கிறது...!

கம்பியூட்டர் இருப்பவர்கள் மட்டுமே அதுவும் வை-பை கார்டு பொருத்திய கணினி பயன்படுத்துவோர் மட்டுமே, அதிலும், வெயிடிங் லவுஞ்சில் நேரம் கிடைத்தால் மட்டுமே..பயன் படுத்துவார்கள்...!!//

பணத்தை செலவிட முடிவெடுத்த பின் அனேகம் பேருக்கு உபயோகப்படும் விதத்தில் செலவழிப்பார்களா அல்லது "கம்பியூட்டர் இருப்பவர்கள் மட்டுமே அதுவும் வை-பை கார்டு பொருத்திய கணினி பயன்படுத்துவோர் மட்டுமே, அதிலும், வெயிடிங் லவுஞ்சில் நேரம் கிடைத்தால் மட்டுமே" இருப்பவர்களுக்கு வசதி செய்து தருவார்களா?

சந்தோஷ் சொல்வது போல் அந்த வகை மக்கள் ஒரு கப் காபிக்கு 100 ரூபாய் கொடுப்பவர்கள். அவர்கள் இவ்வசதி வேண்டுமானால் தரமலேயா போவார்கள்?

கடைசியாக ஒன்று.

//இலவசத்தை இலவசனார் எதிர்ப்பதும் ஒரு முரணே :))//

குடுத்தால் வேண்டாமெனச் சொல்லவில்லை. எதிர்பார்ப்பதுதான் தப்பென்கிறேன்.

நன்றி வணக்கம். (அட சை. அரசியல்வியாதி பேச்சு மாதிரி ஆகிப் போச்சா. அதான்.) :D

Nakkiran said...

//சர்வதேச விமான நிலையத்தின் சேவைவரி 20-25 US$ மட்டுமே.//

இல்லை.. இது த்வறு என நான் நினைக்கிறேன்.. நான் ச்மீபத்தில் தான் USA ல் டிக்கெட் வாங்கினேன்.. சுமார் $200 வரியாக வசூலித்தார்கள்.

soorian said...

எனக்கு தெரின்சு ஹொங் கொங் விமான நிலயத்தில் wi fi free பாவீக்கலாம். இன்னும் 20 ஹொங் கொங் டாலர் கொடுத்தால் ஒரு மாதம் வரை WI FI இலவசமாக ஹொங் கொங்கில் எங்கும் பாவீக்கலாம்.
இன்னும் துபாய் ஒருதடவ Online Register பண்ணினா ஒரு மாதம் வர அதெய் User Name Password கொண்டு ஏயர் போர்டில்ல் எங்கும் பாவீக்கலாம் . நல்ல வேகம்.
இலங்கை விமான நிளயதிதஹில் எனக்கு தெரின்சு 2 வருடத்துக்கு முன்னாலாயே இந்த வசதி இருக்கு. ஆனா காசு எவ்வளவு கட்டனும் தெரியாது.