அமேரிக்க பேச்சு ஆங்கிலத்தை தமிழில் அப்படியே மொழி பெயர்த்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை. மூலம் இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்து வெளிவந்தது Funtoosh.com ல்.
..
Have a nice day! -- நல்ல நாளை எடுத்துக் கொள்
What's up? -- மேலே என்ன இருக்கு?
Yo, Baby, What's up? -- குழந்தை யோ, மேலே என்ன இருக்கு?
Cool man! -- குளிர் மானிடா!
Don't mess with me, dude. -- என்னுடன் அசிங்கம் பண்ணாதே, ஏய் தம்பி.
Check this out, man -- இதை சோதனை செய், மானிடா
Listen buddy, that chick's mine, okay!? -- கேளு நண்பா, அந்த (கோழி) குஞ்சு என்னுடயது, சரியா!?
Hey Good looking, What's cooking? -- ஏய் சுந்தரி, என்ன சமயல்?
Are you nuts? -- நீங்க கொட்டையா?
Son of gun -- துப்பாக்கி மகனே
General Body meeting -- பொதுவான உடல் சந்திப்பு
Keep in touch -- தொட்டுகிட்டே இருங்க
16 comments:
//Keep in touch -- தொட்டுகிட்டே இருங்க //
இது சூப்பர்...
ஒரு க்ளாசிகல் மொழிபெயர்ப்பு துணுக்கு.
"Out of sight, out of mind" என்ற வாக்கியத்தை கணினி மூலம் ரஷ்யனில் மொழிபெயர்த்து, பிறகு அந்த ரஷ்யன் வாக்கியத்தை இன்னொரு கணினி மூலம் ஆங்கிலத்துக்கு திரும்ப மொழிபெயர்த்தால் கிடைத்த விடை: invisible idiot!
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல கலக்கலான துணுக்கு மொழிபெயர்ப்புகள்.
நாங்கள் சென்னையில் போன தடவை சந்தித்தபோது இது சம்பந்தமாக பேச்சு வந்தது. General Body Meeting விஷயத்தை டோண்டு சாரிடம் சொல்லி சிரித்தோம். அவரும் இதை மொழிபெயர்ப்பாளர் தானே!
பதிவுக்கு நன்றி
Hey Good looking, What's cooking? -- ஏய் சுந்தரி, என்ன சமயல்?
ஏய் நல்லா இருப்பவளே - என்ன சமையல்
மானிடா - மனிதா
Son of gun -- துப்பாக்கியின் மகனே
டோண்டு சார்,
invisible, idiot என்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்... comma நீக்கப்பட்டுவிட்டது!!
ஜெயராமன் சார்,
General body meeting ஐ இந்தியில் Saamnaaya Shareerik Milan என்று வம்பளந்திருந்தனர்...!! :D, தமிழில் அப்படி வரவில்லை.! :((
வணக்கத்துடன்,
நன்றி.
மஞ்சூர் அலி கான்,
அது வெறும் காமெடி தான்...இதிலுமா வடமொழியை தவிர்க்கவேண்டும்!!?
വല്ലിയ പഥിവു ഷങ്കര് ഏത്താ...
ஹி..ஹி....மொழிபெயர்ப்பு பதிவு என்பதால் மேலே என்ன இருக்கு என்பதை யாராவது மொழிபெயர்க்கிறார்களா என பார்க்கலாம் என்றுதான்...:)))
ஷங்கர்
அவர் மஞ்சூர் அலி கான் கிடையாது.மஞ்சூர் ராசா.நீலகிரி மலையில் இருக்கும் மஞ்சூரில் பிறந்து கோவை கவுண்டம்பாளயத்த்தில் குடி இருப்பவர் மஞ்சூர் ராசா.அவர் இயற்பெயர் சுந்தர்ராஜன்.முத்தமிழ் என்ற பெரும் தமிழ் இலக்கிய குழுவை நடத்தி வருபவர்.
செல்வன்,
அதில் ஷங்கர் இருக்கிறது..சரியா...
மலயாளம் கொறச்சு கொறச்சு அறியும்!! (வள் வள் வள்!! )
ஐயோ!!
மன்சூர் ன்னு பார்த்தவுடன் வேறு பெயர் தோனாமல் நேராக நம் கேப்டன் பிரபாகரனில் வந்த வீரபத்ரன் புகழ் மன்சூர்அலி கான் பெயர் வந்து விட்டது...சாரி!!
அதன் மொழிபெயர்ப்பு "வல்லிய பதிவு ஷங்கர் ஏட்டா.."
அப்படி என்றால் "நல்ல பதிவு ஷங்கர் அண்ணே.." என வரும்.ஏட்டா என்பது மரியாதை சொல்,நம்மூரில் அண்ணே என்பது போல.
:-))))
//Don't mess with me, dude. -- என்னுடன் அசிங்கம் பண்ணாதே, ஏய் தம்பி.
Check this out, man -- இதை சோதனை செய், மானிடா//
:))
எல்லா மொழிபெயர்ப்புகளும் சூப்பருங்க.
நல்ல நகைச்சுவை.
என்னுடைய முயற்சி
//Flying on cloud nine
ஒன்பதாவது மேகத்தில் பறத்தல்
//miss you a lot
உன்னை நிறைய தொலைக்கிறேன்
//Im working like anything
நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன் எதைவேண்டுமானாலும் விரும்பு
//Catch you later//
உன்னை பிறகு பிடித்துக்கொள்கிறேன்
there you go - நீ அங்கே போ
படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்
ஏம்பா இப்படி கொல்லுறீங்க.. :)
பள்ளி நாட்களில் நம்ம மொழிபெயர்ப்பு
brother in law - சட்டத்தின் தம்பி
:)
Post a Comment