August 10, 2006

ஆரியக் கேள்வி!

திராவிடத் தமிழர்கள் என்று வலைத்தளம் அமைத்து சில வலைப்பதிவாளர்கள், முன்பு நான் விவாதித்திருந்த ஆரியர் என்றொரு இனமுண்டா? மற்றும் ஆரியர்-திராவிடர் பூர்வீகக் குடிகள் ஆதாரங்கள் என்று என் கருத்துக்களை ஏதோ மிகப் பெரும் ஆரியர் - திராவிடர் ஆராய்ச்சியாளன் கருத்துப் போல் மதிப்பளித்து பதில் எழுதுகின்றோம் என்று என்னை உயர்த்தி வைக்கின்றனர். அதற்கு என் நன்றி.

திராவிடத் தமிழர்கள் தொடராக எழுதிய 4-5 பதிவிற்கும் என்னால் விடையளிக்க முடியும். ஆனால் அதற்கு முன்னர் என் சில கேள்விகளுக்கு அவர்கள் தெளிவான முறையில் ஆம். இல்லை என்று விடையளிக்கவேண்டும்.


ஆரியர் என்றொரு இனம் (Race) உண்டா?

வட நாட்டு ஆரியர்கள் தென்னாட்டு திராவிடர்கள் என்ற கருத்தை நம்புகின்றீர்களா?

சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் அவர்கள் வந்தேறிய ஆரியர்களால் புலம் பெயர்ந்து தற்பொழுதய தமிழகத்தில் வந்தேறிவிட்டனர் என்று நம்புகிறீர்களா?

குதிரை ஆரியர் வருகைக்கு முன்னர் இல்லை என்று திருவாளர் விட்சல் பரைசாற்றுவதை நம்புகின்றீர்களா?

மொழியியல் ஆராய்ச்சி என்று சொல்லிக் கொண்டு இந்தோ ஆரிய மொழி என்றும், திராவிட மொழி என்றும் பிரித்தது எதனால், மொழியினாலா, அல்லது இனத்தினாலா?

திராவிடம் என்ற கருத்தாக்கத்தை "ஆரியம்" என்ற கருத்தாக்கத்தின் எதிர் வினை என்றே சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டாலும் (அதில் இன அடிப்படை ஏதும் இல்லை), பிராமண எதிர்ப்பு ஏன்? தமிழ் பேசும் பிராமணர்கள் திராவிடர்கள் இல்லையா?

10 comments:

முகமூடி said...

தமிழ் சினிமாவுக்கு கவுண்டமணி செந்தில் மாதிரி தமிழ் வலையுலகத்துக்கு திராவிட தமிழர்கள்... கவுண்டமணி காமெடிய பாத்து சிரிச்சமா, ஜாலியா அடுத்த வேலய பாக்க போணமான்னு இருப்பீங்களா.. அத்த விட்டுட்டு ஆராய்ச்சி பண்ணிகிட்டு...

Vajra said...

முகமூடி,

தமிழ் சினிமாவுல ரெண்டு பேர் தான் இருக்காங்க...இவனுங்க 40 பேராம்ல...!! தமிழ் வலையுலகு தாங்குமா?

மருதநாயகம் said...

என்ன இருந்தாலும் நீங்க ஒரு ஆள் பண்ற காமெடிக்கு ஈடாகுமா?

Vajra said...

மருது...

எதன பேர் வந்தாலும் தனி ஆளா சமாளிக்கிற தைரியமும் திராணியும் எங்கிட்ட இருக்குய்யா!!

விடாதுகருப்பு said...

தெரியாமல்தான் கேட்கிறேன்... கைபர்போலன் கணவாய் வழியா ஆடுமாடு மேய்க்க வந்த அந்த பரதேசிப் பயல்கள் யாருங்க?

Vajra said...

வி. க,

முடிவை வெண் திரையில் காண்க! ;D

(அதாவது விவாதத்தின் முடிவில் விடை கிடைக்கும்)

Muse (# 5279076) said...

>>> தெரியாமல்தான் கேட்கிறேன்... கைபர்போலன் கணவாய் வழியா ஆடுமாடு மேய்க்க வந்த அந்த பரதேசிப் பயல்கள் யாருங்க? <<<<

அவஞ்ச வந்தாய்ஞ்சளா இல்லையான்னு தெரியாது அப்பு. அனா அவஞ்சளுக்கு பின்னால அதே கைபர், போலான் கணவாய் வந்த நாதாறிஞ்ச பத்தி நாட்டுக்கே தெரியுமே அப்பு. இஸ்கூலுக்கெல்லாம் போனதில்லையா?

அவஞ்ச பரம்பரயில வந்த மிருகங்களெல்லாம் இப்போ பன்னி, பூனை, சொறிநாய்னு பேர வச்சுக்கிட்டு என்னா அளிச்சாட்டியம் பன்றாஞ்ச. பைத்தியம் பிடிச்சவன்னு வேற சொல்றாஞ்ச. பாவமா இருக்கு.

பன்னிங்க கூட சண்டைபோடனும்னா சாக்கடையிலதான் உருளணும். பன்னிகளுக்கு சாக்கடையில உருண்டு சண்டை போட்ட சந்தோசம். மனுசப்பயல்களுக்கு அசிங்கம்.

Aravindan Neelakandan said...

ஆரிய திராவிட இனவாத வெறி இயக்கமான திராவிட இயக்கம் கிறிஸ்தவ பாதிரிகளால் சத்தூட்டி வளர்க்கப்பட்டதாகும். 'கிறுஸ்தவ திருச்சபையும் திராவிட இயக்கமும்' என்கிற நூல் வெளியீட்டில் மதுரை கிறிஸ்தவ ஆயர் ஒருவர் 'திராவிட இயக்கம் இந்து மதத்தை அழிக்க கிறிஸ்தவம் வைத்த டைம்பாம்' எனக் கூறியதை சுவாமி சித்பவானந்தர் தமது 'கிறீஸ்தவ இந்து மத' ஒப்பீட்டு நூலில் பதிவு செய்துள்ளார். காளிமுத்து தமது வாழ்க்கை வரலாறை குமுதத்தில் எழுதி வந்த போது எப்படிஉள்ளூர் பாதிரி மாணவர்களை திராவிட இயக்கத்தில் சேர வலை விரித்தான் என்பதை புகழ்ந்து எழுதியுள்ளார். இந்த இளைஞர்கள் சனாதன தருமத்தை அழிக்கும் வெடிமருந்து என அந்த பாதிரி தனது நாளேட்டில் எழுதியிருந்ததை காளிமுத்து வாசித்ததாகவும் அந்த குமுதம் தொடர் தெரிவிக்கிறது.

luckylook said...

திராவிடத் தமிழர்கள் கவுண்டமனி-செந்திலோ என்னமோ தெரியாது... ஆனால் முகமூடி கண்டிப்பாக கைப்புள்ள... அதுமட்டும் நிச்சயம்!!!!

இரா.சுகுமாரன் said...

//முகமூடி,

தமிழ் சினிமாவுல ரெண்டு பேர் தான் இருக்காங்க...இவனுங்க 40 பேராம்ல...!! தமிழ் வலையுலகு தாங்குமா?//

ஹா..ஹா...ஹா....ஹா....சிரிச்சேன்

இதில இல்லாதவர்களின் எழுத்த மத்தவங்க தாங்கி கிட்டுத்தான இருக்காங்க.