August 5, 2006

Turn left at the end of the World


Sof ha olam smola

2004ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் Israeli Film academy விறுது பெற்ற படம். இயக்குனர் அவி நெஷர் இஸ்ரேலில் பெரிய இயக்குனர்களில் ஒருவர். சமீபத்தில் அவரிடம் துணை இயக்குனராகப் பணிபுரியும் ஒரு பெண்ணிடம் பேசியதின் விளைவாக இந்த படத்தின் DVD வாடகைக்கு எடுத்துப் பார்த்தேன்.

ஆறு நாள் போருக்குப் பிறகு இஸ்ரேலுக்கு இறக்குமதியாகும் பல யூதக் குட்ம்பங்கள் சேர்ந்து வாழும் குடியிருப்பில் ஒரு இந்தியக் குடும்பம் வருகிறாது. அந்த 1960 காலகட்டத்தில் (Post colonialism era) எத்தகய மனோபாவத்தில் மக்கள் இருந்தனர். குறிப்பாக இஸ்ரேலியப் பொதுமக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்று கதை அமைந்திருக்கும். டெல் அவீவ், போன்ற பெரிய நகரவாழ்க்கை இல்லாமல் நெகவ் பாலைவனப்பகுதியில் இருக்கும் குடியிருப்பில், ஏர்கனவே வந்த மொராகன் மற்றும் புதிதாக வந்திறங்கிய இந்தியக் குட்ம்பமும் எவ்வாறு முட்டிக் கொள்கின்றனர்..முக்கியமாக மொராக்கன் குக்டும்பப் பெண் இந்தியர்கள கறுப்பாக இருப்பதை கிண்டல் செய்வதும், இந்தியக் குடும்பப் பெண் பிரஞ்சு மொழி பேசும் மொராக்கன் குடும்பத்துப் பெண்கள் எவ்வாறு வெட்கமில்லாமல் ஆடைஅணிகிறார்கள் என்று அங்கலாய்ப்பதும் ..படத்தில் இழையோடிய அந்தப் புராதன காலத்து Racist mentality தெளிவாகத் தெரியச் செய்திருக்கிறார் அவி நெஷர்.

வந்த இடத்தில் ஏகப்பட்ட வேலைவாய்ப்பு இருக்கும் என்று நம்பி வந்த குடுமத்திற்கு மிஞ்சுவது ஏமாற்றமே...

சாரா ஒரு 17 வயதுப் பெண், அவள் தந்தை தாய் தம்பியுடன் வந்திறங்குகிறாள். நிகோல் ஒரு மொராக்கோ தேசத்திலிருந்து வந்த யூத குடும்பத்தைச் சேர்ந்தவள், அவளின் நட்பு சாரா விற்கு கிடைக்கிறது. சாரா எழுதும் தன் கதை புத்தகம் வாயிலாகச் சொல்லப்படுவது போல் அமைந்த இந்த கதையில் கொஞ்சம் காமெடி தனியாக இல்லாமல் கதையுடன் சேர்ந்தே வருவது சிறப்பு.


இந்தியக் குடும்பம் ஆன்கிலம் தான் சிறந்தது, ஆங்கில சோப்பு தான் சிறந்தது என்றும் மொராக்கன் குட்ம்பம் பிரஞ்ச் தான் சிறந்தது அந்த நாட்டு சோப்பு தான் சிறந்தது என்று துணி காயப்ப் போடும் இடத்தில் முறைத்துக் கொள்வதில் துவங்கி ஏகப்பட்ட சண்டைகள்.

இரண்டு குட்ம்பங்களும் வந்தது ஐரோப்பிய காலனியாதிக்க நாட்டிலிருந்து தான்.

எப்படி இந்த இரண்டு குடும்பங்களும் ஒண்றிணைகின்றன, எத்தகய நிகழ்வுகள் அவர்களை இணைய வைக்கிறது என்று சற்றே emotional ஆகும் பின்பாதி மற்றும் கொஞ்சம் சுவாரஸ்யம் என்று படம் ஜாலியாகப் போகும் ஒரு Drama.

படத்தில் இந்தியக் குடும்பங்கள் இருப்பதால் கிரிக்கெட் மேட்ச் எல்லாம் உண்டு. இந்தியக் குடும்பத்தின் தலைவர் அதாவது சாரா வின் தந்தையாக நம்மவூர் டீ. வி. மெகா சீரியல்களில் நடிக்கும்
பர்மீத் சேதி ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் தன் அழுத்தமான நடிப்பினால். இன்ஸாப், சந்திரகாந்தா போன்ற தொ(ல்)லைகாட்சித் தொடர்களில் நடித்த கிருத்திகா தேசாய் கூட படத்தில் உண்டு.

படத்தின் மொழி: ஹீப்றூ (என்ற போதிலும் இந்தியக் குடும்பங்கள் பெறும்பாலும் ஆன்கிலமே பேசிக் கொள்வதும், மொராக்கன் தேசத்துக் குடும்பங்கள் பிரஞ்சு மொழி பேச்திக் கொள்வதுமாகவே இருக்கிறது....)

4 comments:

செல்வன் said...

இஸ்ரேலில் இந்தியர்கள் இருக்கின்றனரா ஷங்கர்?மிசோரத்திலிருந்து யூதர்கள் போனதாக படித்துள்ளேன்.இந்த பட போஸ்டரில் சேலை கட்டி பொட்டு வைத்த இந்துப்பெண் இஸ்ரேலில் இருப்பது போல் இருக்கிறதே?அந்த பெண் யூதப்பெண்ணா இல்லை இந்துப் பெண்ணா?

மொரக்கோ பெண் ஏஞ்சலினா ஜோலி போலவே சைட் போஸில் இருக்கிறார்..ஹி..ஹி

Vajra said...

இந்திய யூதக் குடும்பத்தைப் பற்றிய கதை தான்..அவர்கள் எல்லோருமே யூதரே...

பர்மீத் சேதி கூட ஒரு யூதராகவே நடித்திருக்கிறார். ரோஜர் டாகர் அவரது பெயர் படத்தில். கிரிக்கெட் ஆட்டக்காரரும் கூட...!

நாகை சிவா said...

ஷங்கர்!
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Vajra said...

நன்றி நாகை சிவா