August 15, 2006

போரின் ஞாயம்

இஸ்ரேல் - ஹெஸ்பல்லா போர் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் (ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தால்) என்னுடய சொந்த அனுபவம் சில,

மத்தியகிழக்கில் வாழ்ந்த சில காலத்தில் என் அரசியல் - சமூக நிலைப்பாடு பெரிதும் மாறுதல் அடைந்ததை நான் முதலில் ஒத்துக் கொள்ளவேண்டும். இந்தியாவில் இருந்த வரை பாலஸ்தீனர்களுக்காகப் பரிதாபப் பட்டதும் உண்டு, இஸ்ரேலின் அராஜகங்கள் என்று படித்து கொதித்ததும் உண்டு. இன்று I Stand for Israel என்று என் வலைப்பதிவின் வலது புறத்தில் HTML கோடை சேர்த்துவிட்டு வலைப்பூ எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இஸ்ரேலில் கூடவே வேலை பார்க்கும் நண்பர்களுடன் பேசியதில் தெரியும்/அறியும் விஷயங்களில்,

இந்த லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஞாயமானதே என்று பலரும் கருதுகின்றனர். ஏன் என்று அவர்களிடம் கேட்டால், ஹெஸ்பல்லா தீவிரவாத அமைப்பைக் கட்டுப்படுத்த லெபனான் அரசு முன் வரவில்லை. ஹெஸ்பல்லாக்கள் இஸ்ரேலிய படை வீரர்களைக் கடத்தி பணயக் கைதிகளாக்கித் ஏற்கனவே இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்கின்றனர். லெபனான் மக்கள் ஹெஸ்பல்லாக்களை ஆதரிக்கின்றனர். ஆகயால் தீவிரவாதிகள், தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் மேல் தாக்குதல் நடத்துவது தவறேதுமில்லை என்று கூறுகின்றனர்.

என்னைப் பொருத்த வரையில் பிரச்சனை எப்போது பெரிதாகிறது என்றால், கோபம் கட்டுக் கடங்காமல் போகும் போது...!!

இரண்டு வீரர்களை ஹெஸ்பல்லாக்கள் கடத்தினர், இஸ்ரேலியர்கள் பதிலாக பெய்ரூத்தை விமானம் கொண்டு தாக்கினர், கற்பிணிப் பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்தனர். கோபம் கட்டுக் கடங்காமல் போனது...! ஹைபா, ஹதேரா, ஆக்கோ மீது கத்யூஷா ராக்கெட்டுகள் விழத்தொடங்கின.

கேட்டால் பல இஸ்ரேலியர்கள் ...ஆம், இது தான் இங்கே சகஜம்...என்கிறார்கள்...!! ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதும், ஆளைக் கொல்வதும் தான் சகஜமா?!! ஆம், இது தான் மத்திய கிழக்கு என்கிறார்கள்.

அவர் அவர் ஞாயம் அவர் அவருக்கு...!

யாருக்கும் விட்டுக் கொடுத்துச் செல்ல மனமில்லை. இஸ்ரேலில் அடிப்படைவாதிகள் உள்ளனர் என்றால் அதைவிட தீவிர அடிப்படை வாதிகள் அரபு நாடுகளில் உள்ளனர். ஓப்பனாக, இஸ்ரேலின் அழிவில் தான் அமைதி உள்ளது என்று பிரகடனம் செய்பவர்கள்.

இஸ்ரேலியர்கள் ஏன், பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இரண்டு வீரர்களைக் கடத்தியவுடன் லெபனான் மீது போர் தொடுத்தது என்று எனகும் தோன்றியது. நண்பர் IDFல் இருப்பவர், அவரிடம் கேட்டேன்...

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் இஸ்ரேலை ஒரு பலமில்லாத நாடாகப் பார்ப்பர் இந்த அரபு தேசத்தவர். சரி. அவர்கள் சொல்வதை ஒத்துக் கொண்டு பணயக் கைதிகளை விடுவித்தால் நாளை மேலும் பல படை வீரர்கள், சிவிலியன்கள் கடத்தப் படுவர். இஸ்ரேலின் ஞாயம் ஒரு போராட்டம், வாழ்வதற்கான போராட்டம். அமைதிப் பேச்சுவார்த்தையை கோழைத்தனம் என்று பார்க்கும் அரபு வீரத்திடம் எப்படி பேச்சு வார்த்தை நடத்த முடியும்? என்று விளக்கமளித்தார்.

ஞாயமாகப் பட்டது.

இதன் காரணமாகவே IDF செயல்களில் ஞாயம் உள்ளது என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது...ஹெஸ்பல்லாக்கள், போர் நிறுத்தத்தை வெற்றி என்று கொண்டாடுவதிலேயே தெரியவில்லையா? எது மத்திய கிழக்கில் வீரம் என்று கருதப்படுவது?

வீரம் என்றால் எதிரியன் நேருக்கு நேர் நின்று போராடுவது அல்ல. எதிரியின் Weak spot ஐ அடிப்பதும், எங்கே அடித்தால் வலிக்குமோ, அங்கே அடிப்பதும் தான் வீரம் உலகின் இந்தப் பகுதியில். இங்கே பழிக்குப் பழி, ரத்தத்திற்கு ரத்தம் எல்லாம் இல்லை. அவன் அழியவேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது.

இஸ்ரேலியர்கள இவர்களுக்கு நடுவில் வாழ்கின்றனர் என்பதை நாம் மறக்கக் கூடாது, சொகுசாக கலிபோர்னியாவிலோ, அல்லது தில்லியிலோ, சிங்கப்பூரிலோ உட்கார்ந்து கொண்டு உலக ஞாயம் பேசும் நாம்.

இஸ்ரேலுக்கு வரும் முன்னர், எல்லோரின் விருப்பமும் அமைதியாக வாழ்வதும் அவர் அவர் வேலையைச் செய்துகொள்வது தான் என்று எண்ணியிருந்தேன், இந்த இரண்டாடுகளில் மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தை என்பது சிறு பிள்ளைத்தனம் என்பதை என்னால் உணர முடிந்தது.

Not every body is content with peaceful co-existence. என்று என்னுடன் ஒரே அப்பர்ட்மெண்டில் வாழும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் நாகடானி கிண்டலாகச் சொன்னது நினைவுக்கு வருகின்றது...!! :D

16 comments:

dondu(#4800161) said...

நீங்கள் நேரடியாக பெற்ற அனுபவத்தில் பேசுகிறீர்கள். நான் 2000 ஆண்டுகளாக இஸ்ரவேலர்கள் பட்ட கஷ்டங்களையும், எவ்வளவு சமாதானமாகப் போனாலும் அவர்களைத் துரத்துத் துரத்திக் கொலை செய்ததைப் பற்றியும் படித்ததாலும், அரேபியர்களுக்கு உதை வாங்கினால்தான் புரியும் என்பதை உணர்ந்து கொண்டதாலும், இஸ்ரவேலர்களுடன் என் பூர்வ ஜென்மபந்தம் இருப்பதை நான் உணர்ந்ததாலும் இஸ்ரேலிய ஆதரவாளனாக இருக்கிறேன்.

உங்களது நேரடி அனுபவங்கள் என் புரிதலுடன் ஒத்துப் போவதில் மிக்க மகிழ்ச்சி. நான் ஏற்கனவே ஒரு முறை கூறியது போல பைபிளின் பழைய ஏற்பாடுகளில் எழுதத்தக்க அளவில் இப்போதைய இஸ்ரவேலர்களின் வீரத்தைப் பார்க்கிறேன். பென் குரியன் அரசன் தாவூதுக்கு எம்முறையிலும் குறைந்தவர் அல்ல. கோல்டா மையர் மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கிடைக்கவில்லையே என் ஏங்கியிருக்கிறேன்.

ஐன்ஸ்டைனுக்கு வெண்கலச் சிலை எடுக்கப் போவதை பற்றிப் பேசினார்களாம், அப்போது அவர் கூறினாராம், "சிலைக்கு ஆகும் உலோகத்தில் நல்ல குண்டுகள் தயார் செய்யுங்கள்" என்று.

ஒரு சின்னஞ்சிறு தேசத்தையும் அதன் மக்களையும் வேரோடு ஒழிக்க எண்ணுபவர்களிடம் என்ன சமாதானம் வேண்டியிருக்கிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Samudra said...

//. சரி. அவர்கள் சொல்வதை ஒத்துக் கொண்டு பணயக் கைதிகளை விடுவித்தால் நாளை மேலும் பல படை வீரர்கள், சிவிலியன்கள் கடத்தப் படுவர். //

நமது நாட்டில் இது நடந்ததே!
ஐ.சி.814 விமானம் கடத்தபட்ட போது விடுவிக்கபட்ட அசாத் பாராளமன்றத்தையே தாக்கவில்லையா?

Never negotiate!

Vajra said...

சமுத்ரா,

தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை என்பது கூடாது. ஏன் என்றால் அவர்கள் எண்ணம் பேச்சு வார்த்தை மூலம் அமைதிக்கு வழி வகுப்பது அல்ல. அவர்கள் எண்ணம் Total anhilation. பாகிஸ்தானின் எண்ணமும் அதுவே. கஷ்மீர் தீவிரவாதிகள் கஷ்மீரைக் கொடுத்து விட்டால் தீவிரவாதம் செய்யாமல் இருப்பார்களா?

abiramam said...

Please visit http://news.sky.com/skynews/video/videoplayer/0,,31200-galloway_060806,00.html

Vajra said...

டோண்டு சார்,

இவர்கள் செய்வதில் ஞாயம் இருப்பதாகவே எனக்குப் படுகின்றது...வேறு வழியும் இல்லை. என்ன தான் செய்வார்கள்....

இஸ்ரேலை உலக மேப்பில் இருந்து அழிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார், ஈரானிய அதிபர். கொலான் மலையை கைப்பற்றவேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார் சிரியா அதிபர் பஷர் ஆஸாத்.

இஸ்ரேலில் இருக்கும் அரபுகளோ, ஹெஸ்பல்லாக்கள் வெற்றியைக் கொண்டாடுகின்றனர்...!! இஸ்ரேலில் இருந்து கொண்டே..!!

கால்கரி சிவா said...

ஷங்கர், அவர்களுக்கு வெற்றி என்பது அப்பாவி பொதுமக்களை கேடயமாக்கி அவர்களை பலி கொடுத்துவிட்டு இவர்கள் உயிரோடு இருப்பதுதான்.

எப்பாடு பட்டாவது உயிருடன் இருப்பதுதான் இவர்களின் வெற்றி

மகேந்திரன்.பெ said...

இஸ்ரேலில் இருக்கும் வஜ்ரா இஸ்ரேலுக்கு ஆதரவாய் இருப்பதில் ஆச்சர்யம் என்ன நாளையே அவர் லெபனான் போனால் ஐ இஸ்டேன்டு பார் லெபனான் என்று ஹெச் டி எம் எல் கோடு இன்னொரு மூலையில் போட்டுக்குவார்

Vajra said...

மகேந்திரன்,

லெபனானையோ அல்லது ஈரானையோ, சிரியாவையோ உலக மேப்பிலிருந்து அழிக்க இஸ்ரேல் முற்படவில்லை.

ஆனால், ஹெஸ்பல்லா, அஹமெதனிஜாத், பஷர் ஆஸ்ஸாத், இஸ்ரேலை அழிக்கவேண்டுகின்றனர்...

ஏன் என்று கேளுங்கள்...

I would stand for Lebanon if they disobey Hezbollah.

I would stand for palestine if they disobey Hamas.

I would stand for Iranian people if they throw the Islamic fanatic regime.

I would stand for Syrian people, if they stop bothering Israel.

வாழு வாழ விடு என்பது இங்கே செல்லுபடியாகவில்லை என்பது தான் என் ஆதங்கள்...அதைத் தான் பதித்திருக்கிறேன்.

தமிழன் said...

வளைகுடாவில் இருக்கும் மகேந்திரன் லெபனானுக்கு ஆதரவாய் இருப்பதில் ஆச்சர்யம் என்ன?நாளையே அவர் இஸ்ரேல் போனால் பர்தா அணிந்த பெண்ணுக்கு பதில் பேண்ட் போட்ட பெண்ணின் படத்தை பதிவில் போட்டுக் கொள்வார்.

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் க்ரூப் என்பதை இஸ்ரேல் எக்ஸ்பிரஸ் க்ரூப் என மாற்றிக் கொண்டாலும் ஆச்சரியமில்லை.(பெரிய டாட்டா பிர்லா க்ரூப்:-)

Vajra said...

சமுத்ரா,

It is the policy of israel to never negotiate with terrorist organizations.

மகேந்திரன்.பெ said...

//கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் க்ரூப் என்பதை இஸ்ரேல் எக்ஸ்பிரஸ் க்ரூப் என மாற்றிக் கொண்டாலும் ஆச்சரியமில்லை.(பெரிய டாட்டா பிர்லா க்ரூப்:-) //


இதுக்கு பேருதான்யா இன்ஸ்டன்ட் காப்பி :))
ஆமா உங்களுக்குன்னு ஒரு செடி பூவு, எதுவும் இல்லை வெத்து வேட்டா? :))

மகேந்திரன்.பெ said...

//பர்தா அணிந்த பெண்ணுக்கு//

அது பர்தா இல்லை தாவனி நெற்றிப்பொட்டை கூடவா பார்க்கவில்லை? பச்சை கலரில் பர்தாவா தமிழா நீ எங்கே இருக்கிறாய் :))

CT said...

Hi Shankar
I agree with your post. I haven't read much about ISRAEL except one book.Looking into present day situation what they did is right.Your answers for why you will stand for lebanon is great !!


"அப்போது அவர் கூறினாராம், "சிலைக்கு ஆகும் உலோகத்தில் நல்ல குண்டுகள் தயார் செய்யுங்கள்" என்று"

I thought Einstein was against nuclear bombs.Infact I have read him saying ,if there is a rebirth he want to be a plumber in the next..."
so this is news to me.

" It is the policy of israel (and USA) to never negotiate with terrorist organizations "

It is the policy of INDIA to always negotiate with negotiate (possible party ), so that social justice will be saved in hard drive"

dondu(#4800161) said...

"I thought Einstein was against nuclear bombs."
ஐன்ஷ்டைன் குறிப்பிட்டது சாதாரண பீரங்கி குண்டுகள். அவை இஸ்ரவேலர்களின் பாதுகாப்புக்கு அவசியம், தனது சிலை அல்ல என்பது அவர் கூறியதன் நோக்கம். அவரும் ஒரு யூதர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vajra said...

CT,

Start writing blogs...about things...not necessarrily political...

CT said...

Dondu sir(Alumni respect)
Thanks for the clarification.From what I read about him,He was not in favour of bombing(let it be nuclear and non nuclear), thats the reason I said news to me. I have heared of people saying that US government took lot of pain to make him agree for the usage of his theory to make bombs.
pyriamudan
CT

Shankar
what ?? you don't like me sleeping in the night , do you?(I am just kidding ).I don't have enough stuff to write.

Have a great day pal