முதல் பகுதி
சரி,
"இந்த திரை எப்படி வேலை செய்கிறது...? எவ்வளவு தூரம் என்னால் பின்னோக்கிச் செல்ல முடியும்? காலத்தில் முன்னோக்கிச் செல்ல முடியுமா?" ஷங்கரர் கேட்க...ஒரு ஒளிப்பந்து "எவ்வளவு காலம் வேண்டுமானாலு பின்னோக்கிச் செல்லும், ஆனால் முன்னோக்கி வருங்காலத்தைப் பார்க்க முடியாது. சம்பவங்கள் நடந்து முடிந்த பின் தான் இங்கே தெரியும்... நேரே திரையைப் பார்த்து பேசினால் அது எங்கே செல்லவேண்டுமோ அங்கே சென்று காட்டும்".
ஷங்கரர் "பின்னோக்கிச் செல்"...முதலில் வெண்திரையில் ஒன்றும் மாறவில்லை... ஒரு சிறிய தாமதத்திற்குப் பிறகு திரையில் காட்சி மாறியது...ஒரு 8000 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது " நில்..அங்கே...அந்த இடத்தில் .." சரஸ்வதி நதிக்கரையில் சில ரிஷிக்கள் யாகத்தில் ஈடுபட்டிருந்தனர்...வேதங்கள் அப்போது தான் தோன்றிக் கொண்டிருந்தது...
"அங்கே பார்த்தீர்கள் என்றால்...அவர்கள் அந்த சரஸ்வதி நதியை பல இடங்களில் போற்றிப் பாடுகின்றனர்..."
"முன்னோக்கிச் செல்" அங்கிருந்து திரையில் காலம் சில ஆயிரம் ஆண்டுகள் முன்னோக்கி விறைந்து மிதிலைக்கு வந்தடைந்தது, அங்கே சிவ தனுசை ராமன் தூக்கி நாணை கட்டிக் கொண்டிருந்தார்..சீதாவை வென்று மணமுடிப்பதற்காக...! "முன்னோக்கிச் செல்" என்றார் ஷங்கரர், பல வாணரங்களும் ராக்ஷசர்களும் மாண்டு கிடந்த யுத்த பூமி அது... நடுவில் ராமன் யாகம் செய்து கொண்டிருந்தான்...சிவனின் பக்தனான ராவணனைக் கொன்றதற்காக!
"இன்னும் முன்னோக்கிச் சென்று குருக்ஷேத்திரத்தில் காண்பி" என்றார் ஷங்கரர்...அங்கே ஒரு தேரின் மேல் ஹனுமனின் உருவம் பதித்த கொடியிருந்தது..அந்த தேரில் அர்ஜுனன் நின்று கொண்டிருந்தான்.
" சனாதன தர்மம் என்றுமே சரித்திர அடிப்படையும் கொண்டுள்ளது என்பதற்கு நான் மூன்று சான்றுகள் கொடுத்துள்ளேன். நதிகளை போற்றுதல், புனிதஸ்தலங்கள், போற்றத்தகு புருஷர்கள் என்பதற்கெல்லாம் சனாதன தர்மத்தில் வேத காலம் தொட்டே இடம் இருந்துள்ளது. துவைதம் அதாவது கடவுள்-மனிதன் பாகுபாடு என்பது என்றுமே இருந்துள்ளது, அது இல்லாமல் எந்தப் போரும் நேர்ந்திருக்காது, அதை புதிதாக நான் ஒன்ரும் ஆரம்பிக்கவில்லை"
"ஆனால், அதை மிக இயற்கைக்கு முரனான தளத்திற்கு இட்டுச் சென்ற பெருமை உன்னையே சேரும்" சொன்னது மூன்றாவது ஒளிப் பந்து.
"அது இயற்கைக்கு முரனான தளம் என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது... இப்போதே அதை விளக்குகிறேன்."
"மனித மன நிலையை நால்வகைத் தன்மை கொண்டதாகப் பிரிக்கலாம், செயல்வீரன், சிந்தனையாளான், யதார்த்தவாதி, மற்றும் தத்துவார்த்தவாதி முதலும் மூன்றாவதும் பெண்பால் மன நிலைகள். அவை சரித்திரத்தில் ஈற்பு கொண்டு, அதை பக்தியாக வெளிப்படுத்தும். ஆகவே பெண்கள் என்றுமே சின்னச் சின்ன நிகழ்வுகளை ஞாபகம் வைத்திருப்பர், யார் என்ன உடை அணிந்திருந்தனர், எந்த தேதி, நாள் என்று.
ஆனால், ஒரு ஆண் அவனது திருமண நாளைக் கூட மறந்துபோவான். இரண்டு மற்றும் நான்காவது நிலைகள் ஆண்பால் நிலைகள், அவை தத்துவ அடிப்படை கொண்டவை. ஆகவே ஒரு ஆண் எப்போதும் எந்த நிகழ்வுக்கும் வேர் என்ன என்பதைத் தேடுவான்...மிக சிக்கலான கணித சூத்திரமானாலும் சரி, அல்லது ஒரு பழம் மரத்திலிருந்து கீழே விழும் விஷயமாக இருந்தாலும் சரி.
இதே காரணிகள் மற்ற மனித செயல்களுக்கும் பொருந்தும்."
"முன்னோக்கிச் செல்" திரையில், ஷங்கரர் பிறப்பதற்கு சில வருடங்கள் முன்னர் இலங்கையின் முக்கிய நகரம் கண்டி..அங்கே, சில புத்த பிக்ஷுக்கள் புத்தரின் பல்லை பாதுகாத்து வைத்திருந்தனர் ப்ல்லாயிரம் பக்தர்கள் வந்து தரிசித்தனர்.
"இந்த காலத்தில் தான் நான் பிறந்தேன்,"புத்தமதம் தழைத்துக்கொண்டிருந்தது, இந்து மதத்தை அது இந்த நான்கு நிலைகளிலும் தோற்கடித்து விட்டிருந்தது" அது சகிப்புத் தன்மையற்ற திடக் கொள்கையாக "சிந்தனையாளன்-தத்துவார்த்தவாதி" தளத்திற்கு மாறும் முன்னர் இந்து சனாதன தர்மத்தை தத்துவ அடிப்படையில் அது வென்றிருந்தது. அதற்குப் பிறகு பௌத்தம் இந்த "செயல்வீரன்-யதார்த்தவாதி" தளத்தில் மிக வேகமாக வளரத் துவங்கிவிட்டது, பக்தி மார்க்கமாக சிலை வழிபாடு, கோவில்கள், இத்யாதி.. இந்துமதம் சரித்திரத்தில் அடிப்படையில் மெலிந்து இருந்தத்தால் இந்த அடிக்கு அது தாங்கவில்லை. முற்றிலும் அழிந்தே போய்க் கொண்டிருந்தது"
"அந்த தருணத்தின் தேவை இந்து சனாதன தர்மத்தை உயிர்பிக்கச் செய்வதே...அதனால் அடிப்படையில் இந்த நான்கு நிலைகளிலும் அதை உயிரூட்ட வேண்டிருந்தது. அத்வைதம் சிந்தனையாளன், தத்துவார்த்தவாதி நிலைகளை உயிரூட்டினாலும் செயல்வீரன்-யதார்த்தவாதி நிலைகளை அது எத்தகய மாற்றமும் செய்யவில்லை. ஆகயால், சரித்திர அடிப்படை கொண்ட தர்மத்தை உருவாக்கினால் இந்த நிலைகளும் உயிர்பெரும் என்பது என் நம்பிக்கையாக இருந்தது."
"சரித்திரம்+ தத்துவம் = சரித்திரத்துவம்" முணுமுனுத்தது ஐந்தாவது ஒளிப்பந்து.
"அதே, அத்வைதம் சரித்திர புருஷர்களின் வழிப்பாட்டுடன் கலப்பதால் துவைத கொள்கை உருவாகும் என்பதை நான் முற்றிலும் அறிந்திருந்தேன். இந்த சரித்திர புருஷர்களான ராமர், கிருஷ்ணர் வழிப்பாட்டினால் ஒரே அடையாளம் இல்லாமல் பன்மை அடையாளங்கள் ஒரே மனித மனத்தில் உருவெடுத்தது. அதற்கு முன்னர் மக்கள் பௌத்தர், வேதாந்திகள் என்று தனிமை அடையாளம் கொண்டவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் வைஷ்ணவர், சைவர், ஷக்தர் என்று பர்ப்பல அடையாளங்கள் கொண்டு விளங்குவர், அவர்தம் இஷ்ட தெய்வத்திற்கேற்ப. அவர்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை அவர்களே கூட உருவாக்கிக் கொள்ள முடியும். முன்னர் பௌத்தம் மேலோங்கி இருந்ததால் இந்து சமூகத்திடம் செல்வம் இல்லாமல் இருந்தது. இந்த இஷ்ட தெய்வ பக்தி கோவில்கள் பல எழுப்பியது. இதனால் வேலைவாய்ப்பு பெருகியது, பணம் புரள ஆரம்பித்தது. பாடல்கள், கவிதைகள் ஏற்றுதல், ஆடல் கலை என்று கலைகளும் வளர்ந்தது. மொழி வழம் பெருகி பற்பல மொழிகள் தோன்ற ஆரம்பித்தன. இந்த புதிய மக்கள் மத இஷ்ட தெய்வ அடையாளங்கள் தவிர மொழி அடையாளங்களும் பெற்றனர். இது பன்முகத்தன்மையை வலுப்பெறச் செய்தது. மத்வாச்சார்யார், ராமானுஜர் போன்றோர் இன்னுமொறு அடையாளத்தை மக்களுக்குக் கொடுத்தனர். பௌத்தமும் அதன் ஒரே குரு, ஒரே தத்துவம், ஒரே மொழி, ஒரே விதமான வழிபாட்டு முறை என்ற ஒருமையும் இத்தகய பன்முகத்தன்மையின் தாக்குத்தலைத் தாக்கு பிடிக்கவில்லை. சில் நூற்றாண்டுகளில் அது அழிந்தே போனது. ஆகவே, மத்வாச்சார்யார், ராமானுஜர் போன்றோரையும் இந்த நீதி மன்றத்தில் நீங்கள் விசாரிக்கவேண்டும்.."
" நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை நீ சொல்லத் தேவையில்லை. உன் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பௌத்தம் பற்றியது அல்ல. ஆகவே அந்தக் கோணத்தில் விவாதப் பொருளை திசை திருப்பித் தப்பிக்க எண்ணாதே"
"புரிகிறது, மன்னித்துக் கொள்ளுங்கள். நான் இதனால் என்ன சொல்ல வந்தேன் என்றால், இந்து மதம் மானுட அன்றாட விஷயங்களில் மனித இயற்கையான சரித்திர அடிப்படை எண்ணத்தில் வலுவாக இருக்கவில்லை. ஆனால், அது தற்பொழுது சற்று அதிகமாகவே சரித்திர அடிப்படை தர்மமாக மாறிவிட்டது என்பது உண்மை, என் கணிப்பு எல்லாம் பௌத்தத்தை பொருத்தே அமைந்தது என்றாலும் இதற்கு ஒரு நல்ல அம்சமும் இருந்ததை நான் எண்ணிப் பார்க்கவில்லை. முன்னோக்கி என் காலத்திற்குச் செல்"
வெண்திரை பாரசீக பாலைவனத்தின் நடுவில் உள்ள ஒரு நகரைக் காட்டியது. அந்த நகரின் மக்கள் முன்னே கோவிலில் புகுந்து வண்புணர்வில் ஈடுபட்ட படைவீரர்கள் போலவே உள்ளவர்களால் வெட்டிக் கொல்லப் பட்டுக் கொண்டிருந்தனர்.
"பாருங்கள்!" ஷங்கரர் சொன்னார் "அவர்களும் வைத்தீக மக்கள் போலவே அக்னியை வழிபடுபவர்கள். அவர்களும் சரித்திர அடிப்படை சற்றும் இல்லாதவர்கள். ஆனால், அவர்கள் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டனர். மற்றொன்றைப் பார்க்கலாம்".
திரையில் பல பௌத்த மற்றும் இந்து ராஜ்ஜியங்கள் இந்திய மண்ணில். பௌத்த ராஜ்ஜியங்கள் ஒவ்வொன்றாக அதே படைவீரர்களுக்குப் பலியாகிக் கொண்டிருக்க, இந்து ராஜ்ஜியங்கள் சில விழுந்தாலும், சில சிதரி மறுபடியும் ஒன்று கூடி மேலெழும்பி திருப்பித் தாக்கின.
"இதனால் நமக்கு என்ன தெரியவருகின்றது? சரித்திர அடிப்படை கொண்ட, ஒரே வழிபாட்டு வரைமுறை கொண்ட, பன்முகத்தன்மையில்லாத சித்தாந்தங்கள் அதே போலுள்ள ஆனால் சிறந்த போர் முறைகள் கொண்ட மற்ற பன்முகத்தன்மையில்லாத சித்தாந்தங்களுக்கு பலியாகிவிடும் என்பதே. ஆனால், ஒரு அத்வைதக் கட்டமைப்பினாலான சரித்திர அடிப்படை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட சித்தாந்தத்தை நான் உருவாக்கிவிட்டேன் என்னையறியாமலேயே. மக்கள் வேத வழியை என்றும் விட்டுக்கொடுக்கவில்லை.
தத்துவம் சரித்திரத்திடம் தோற்றே போனது சில இடங்களில், ஆனால் அதற்கு சரித்திர அடிப்படை கொண்ட வெளி நாட்டுத் துவைதக் கொள்கைகளால் தான் அந்தத் தோல்விகளும். கூடப் பிறந்தவர்களிடத்தே சண்டை சச்சரவு எல்லாம் நூற்றாண்டுகள் வெளி நாட்டு துவைதக் கொள்கையினால் ஏற்பட்ட அடிமைவாழ்க்கையினால் தான், சரித்திர அடிப்படை வாழ்க்கைமுறையினால அல்ல. ஒரு கோவில் கட்ட சண்டை, ராமர் கட்டிய பாலத்தைக் கண்டுபிடிப்பது, அழிந்து போன நதியை அளவெடுப்பது எல்லாம் இந்த வெளி நாட்டு துவைதக் கொள்கையுடன் தொடரும் சண்டைகளே. இந்தப் போர் நடந்தே ஆகவேண்டும், அதில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றால், மக்கள் தத்துவ அடிப்படை வாழ்க்கைமுறைக்குத் தானாக மாறிவிடுவர்."
"நீ என்ன சொல்லவருகின்றாய் என்பது எனக்குப் புரிகிறது!" முதல் ஒளிப் பந்து கூறியது, நீல நிறமாக மாறி. "துவைதக் கொள்கை வேறு இடங்களில் துவைத அடிப்படை கொண்டுள்ளதால், சகிப்புத் தன்மையற்று இருக்கிறது ஆகவே அது அழிந்து போகவாய்ப்பும் உள்ளது. ஆனால் நீ ஆரம்பித்து வைத்த துவைதக் கொள்கை அத்வைதத்தின் அடிப்படை கொண்டுள்ளதால் அசூயைத் தன்மை இல்லாமல் உள்ளது, மேலும் வெளி நாட்டுக் கொள்கைகளின் பிடியில்லாம இருக்கையில் இந்த துவைதம் என்ற உடையைக் கழைந்து உண்மையான அத்வைத தத்துவ அடிப்படைக்கு மாறிவிடும்"
"அதுவே" ஷங்கரர் சொன்னார். " நான் ஆரம்பித்து வைத்த அத்வைத அடிப்படை துவைதக் கொள்கை என்பது, இன்னொறு முறை சனாதன தர்மம் எதிரியை அழிக்க எதிரி போல் உருமாருவதே, எதிர் அழிந்தபின் ஒரு ஆத்மா இறந்த உடலைத் துரப்பது போல் இந்த உருவமும் துரந்து உண்மை நிலையை அடையும் சனாதன தர்மம்"
அதற்கு ஏழாவது ஒளிப்பந்து "அதை பொருத்துத் தான் பார்க்கவேண்டும்".
அனைவரும் காத்திருந்தனர்....
பூலோகக் காலம் விரைந்து சென்று கொண்டிருக்க இவர்களுக்கு ஆண்டுகள் நொடிகளாகச் சென்றன.
திரையில் ராமர் கோவில் அதே இடத்தில் கட்டப் படுவது தெரிந்தது.
"இது ஒரு மைல்கல், இன்னும் முன்னே செல்லலாம்" என்றார் ஷங்கரர்.
கொஞ்ச அதிக நேரமே காத்திருந்தனர்.
ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஓடிவிட்டது. " நில்" என்றது ஏழாவது ஒளிப்பந்து. அதே கோவில் சிதிலமடைந்து பாழ் பட்டுக் கிடந்தது. முக்கிய புனித ஸ்தலங்கள், அனைத்திற்கும் இதே கதி. வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் எல்லாம் என்ன்வென்றே தெரியாமல் மக்கள் இருந்தனர். மத அடையாளங்களை மக்கள் வெளியில் காண்பிப்பதை நிறுத்திவிட்டிருந்தனர்"
"பாருங்கள்" ஷஙகரர் தொடர்ந்தார் " துவைதத்தின் தேவையே இப்போது இல்லாமல் போய்விட்டது, ஏனென்றால் வெளி நாட்டுக் கொள்கைகள் அழிந்துவிட்டன. 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அந்த இரண்டு துவைத மதக் கொள்கைகள் சண்டையிட்டனவே அது என்ன ஆயிற்று பார்த்தீர்களா? அன்னாட்டு மக்கள் மதங்களையே வெறுத்து ஒதுக்கிவிட்டு காட்டில் குகைகளில் வாழும் நிலைக்குப் போய் விட்டனர். இந்த மக்கள் துவைதத்தை ஒரு எதிர்வினையாகவே கடைபிடித்தனர் என்பதால் அவர்கள் துவைதத்தைத் தூக்கி எரிந்துவிட்டு அடிப்படை அத்வைதக் கொள்கைக்கு மாறிவிட்டனர். அதோ, அங்கே பார்க்கலாமா?"
ஒரு பள்ளியின் வகுப்பறை, 24ம் நூற்றாண்டு, 13 வயது மாணவ மாணவிகள் ஒரு தீப்பந்தை காற்றில் மிதக்க விட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
"உங்க தூரத்து சொந்தக்காரர் போல் இருக்காரே?" என்றால் ஷங்கரர். அங்கிருந்த எந்த ஒளிப்பந்துக்கும் இந்த Joke பிடித்தது போல் தெரியவில்லை.
அந்த மாணாக்கர்கள் "அக்னியே, அனைத்து தெய்வங்களுக்கும் தூதுவனே, நாம் உம்மை வணங்குகிறோம்" என்று வணங்கிக் கொண்டிருந்தனர்...
ஆசிரியர் வருகிறார், "இன்று உங்களுக்கு திடீர் Test வைக்கப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு, "ப்ரஹதாரண்யக உபனிடத்தின் அடிப்படைத் தத்துவங்களுக்கும் எதிர்-புவியீர்ப்பு விசைத் தத்துவத்திலிரிந்து பெறப்படும் உப தத்துவங்களுக்குள் உள்ள ஒற்றுமையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதுங்கள்...ஒரு மணி நேரம். இப்பவே ஆரம்பம்...ம்ம்!"
"துவைதக் கொள்கையை முற்றிலும் துரந்துவிட்டனர் போல் தெரிகிறாது, மக்கள் கோவில், சிலைகளுக்கு வழிபாடு போன்ற விஷயங்களை விட்டுவிட்டனர். வீட்டில் பூஜை அறை என்றெல்லாம் இல்லை, சரித்திர புருஷர்களின் பிறந்த நாட்களையெல்லாம் கொண்டாடுவதில்லை. சனாதன தர்மத்தை விதைத்த ரிஷிகள் எண்ணிய வண்ணம் அதாவது, தத்துவ அடிப்படை வாழ்க்கை வாழ ஆரம்பித்துவிட்டனர். ஆனால், வெளியிலிருந்து ஏதேனும் துவைதக் கொள்கைகளினால் தாக்கப்பட்டால் சனாதன தர்மம் அந்த தாக்குதல் தொடரும் வரை தன் நிலையை எதிரியைப் போல் மாற்றிக் கொள்ளும். அந்த தாக்குதன் நின்றவுடன் மீண்டும் பழய நிலைக்குத் திரும்பும்...இது தொடர்ந்து கொண்டே இருக்கும்.."
என்று சொல்லிவிட்டு ஷங்கரர் திரும்பினால்...அங்கே யாருமில்லை....
எல்லாம் மறைந்துவிட்டது.
அண்டத்தின் நடுவில் ஷங்கரர், உடலிலிருந்து பல வண்ண ஒளி வீசத் துவங்கி எல்லா திசைகளிலும் விரியுத் துவங்கியது. சூரிய மண்டலம், நக்ஷத்திரங்கள், பால் வீதி எல்லாம் அவருள் அடங்க அவர் விரிந்து கொண்டே போய் ஒரு வினாடி ஒரு ஒளிப்பிளம்பாக உருவெடுத்து பேரொளி பரப்பிரம்மாதில் கலந்தார்.
(முற்றும்.)
ஆங்கில மூலம்:
மூர் நாம்மின் The Trial of Adi shankara
42 comments:
test
இதற்கு சரணாகதிகாரர்களும் இராயர்களும் என்ன சொல்லப் போகிறார்களோ :) இதுதான் முடிவு என சொல்ல முடியாத தர்மம் சனாதன தர்மம்.
வைரக்கல் வைரமாக ஜொலிக்க பட்டை திட்டப் படவேண்டும் , அதுவே சரணாகதி என்பது விசிஷ்டாத்வைதம். கரியும் கார்பனே, வைரமும் கார்பனே, கரி வைரமாக பலத்த அழுத்தத்தை எதிர்கொள்ளவேண்டும் என்பது த்வைதம்.
மொத்தத்தில் Matter is same.
கலக்கலான பதிவு.....இதன் மூலம் நான் படித்ததில்லை, ஆனால் அத்வைதமும் அதன் சாஸ்வதமான கருத்துக்களுக்கு இப்படியும் ஒரு எக்ஸ்டன்ஷன் தேவை என்பதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை. ஆனால் அத்வைதத்தினை ஒப்புக்கொள்ளும் நான் அதன் அடுத்தனிலைக்கு செல்ல செய்யவேண்டியதையும் சொன்னால் நன்றாக இருக்கும்.
இதுபோல் தமிழ்படுத்தி தருவதன் மூலம் ஆரோக்கியமான பல விவாதங்களை உருவாக்கலாம் வஜ்ரா. உங்கள் முயற்ச்சிக்கு நன்றி...
வந்துக்கிட்டே இருக்காங்க...!!!!
ஒவ்வொரு முறையும் சனாதன தர்மம் க்ஷீணிக்கும் தருணத்தில் சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார், விவேகானந்தர் போன்ற யுக மனிதர்கள் தோன்றுகின்றனர் என்றுதானே கூறவருகிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu ஐயா,
இல்லை.
ஒவ்வொரு முறையும் இப்படி தர்மம் க்ஷீணிக்கும் பொழுது வரும் யுக புருஷர்களை போற்றி கும்பிடுவது நம் பழக்கமாகிவிட்டது. அதனால் எது முக்கியமோ அதை விட்டு விடுகிறோம். அவர்கள் கொள்கைகளை நாம் கடைபிடிப்பதில்லை. அது தானே அவர்கள் பிறவிப் பயன் ? இல்லை, நாம் அவர்களுக்கு கோவில் கட்டி கும்பிட்டுவிட்டு, வெளியில் வந்து அவர்தம் கொள்கைகளை காற்றில் பறக்க விடுவதா ?
ராமானுஜர், மத்வாச்சார்யார் கொள்கைகள், Partial duality to complete duality யாக தர்மம் மாற்றம் பெற்ற நிலையைக் காட்டுகின்றது. In a way, they accelerated the transformation that Adi shankara has not forseen. But, that was for good in any case.
Good Perspective vajra. :-) Thanks for the translation. I will try to read the original also.
குமரன்,
நன்றி அந்த மூர் நாம் என்னும் ஆளுக்குத்தான் சொல்லவேண்டும்...
பல காலம் பல discussion கள், சண்டைகள் பின்பு இந்த முடிவுக்கு நானும் வந்திருந்தேன், அதே போல் இருந்ததால் இந்த சிந்தனைகள் மொழி பெயர்த்தேன்.
வஜ்ரா,
மொழிபெயர்ப்பு அருமை, எழுத்துப் பிழைகள் இருந்தாலும் !
ஷங்கரரின் எதிர் விவாதம் வாசிக்க சுவாரசியமாகவும், ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும் இருந்தது.
ஓரளவு புரிதலும் ஏற்பட்டது என்று நினைக்கிறேன் :) பாராட்டுக்கள்
கொஞ்சம் விளம்பரம்:
http://balaji_ammu.blogspot.com/2006/10/250.html
எ.அ.பாலா
//
ஓரளவு புரிதலும் ஏற்பட்டது என்று நினைக்கிறேன்
//
ஓரளவு என்பதே என்ன அளவோ...அதுவே நினைக்கிறீர்கள் என்று வேற சொல்லி வைக்கிறீங்க...என்னங்க பாலா சொல்ரீங்க...முத்து தமிழினி மாதிரி பேசுரீங்களே...!
//என்னங்க பாலா சொல்ரீங்க...முத்து தமிழினி மாதிரி பேசுரீங்களே...!
//
Dear Vajra,
Please don't do this to me, Muthu is incomparable ;-)
வஜ்ரா,
அற்புதமான ஒரு பதிவு. தமிழ் ப்ளாக்குகளில் மனம் உவந்து படித்தவை மிக சொல்பமே. அதில் உங்களின் இந்த பதிவும் அடக்கம். மொழிபெயர்ப்பாய் இருந்தால் என்ன!! ஒரு ஒரிஜினல் சிந்தனை அடைந்த பதிவு என்பதால் மகிழ்ச்சி.
அத்வைதம் முடிவான பரம சத்தியம். துவைத கோட்பாடுகளும், செயல்வீரத்தனமும் ஒரு நிலையில் outdated ஆகின்றன. காலத்தின், விஞ்ஞானத்தின் சீற்றத்தில் அவை கேலிக்குறியவையாகின்றன. ஆனால், அத்வைதம் என்றும் மனிதனை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் ஒரு சக்தி. அதுவே சனாதன தர்மத்தின் ஜீவநாடி. அத்வைதமே பல நவீன சந்தேகங்களுக்கு விடை கொடுக்கும் ஒரே ஆன்மீக தத்துவம் என்று நான் நினைக்கிறேன். அதனால், அது தற்கால post modern society ல் ஒரு முரண்பாடும் இல்லாமல் வாழும்.
"போராடும் துவைத கொள்கைகள்" அழியுமா என்பது எனக்கு தெரியாது. அழியவேண்டும் என்பதே என் அவா. உலகின் முதலும், கடைசியுமாக நிலைத்திருக்கும் இந்த pagan religion ஆன சனாதன தரமம் இந்த சக்திகளை வெல்லும் என்ற தங்களின் ஆரூடம் பலிக்குமா என்று பார்க்க நீங்களும், நானும் இருக்கமாட்டோம். இந்த இணைய ப்ளாக் வெப்சைட் இருந்தால் எல்லோரும் வெரிஃபை பண்ணிக்கலாம்.
நன்றி
அருமையான பதிவுங்க.
ஒரு தடவை படிச்சிட்டேன்..முழுசா புரியல. :)
திரும்பவும் நிதானமா படிக்கிறேன்.
உண்மையை சொல்லணும்னா சங்கரர் பதில் சுத்த விட்டுடுச்சு..:) எனக்கு புரியலை...நாளாகும்னு நினைக்கிறேன்
//ஓரளவு புரிதலும் ஏற்பட்டது என்று நினைக்கிறேன் :)
//
Vajra,
Did you not see the smiley ???
I will stop here to avoid the main theme of the posting getting side tracked
//
உடலைக் கொண்டாடும், உடல் வழிபாட்டை முன்னிறுத்தும் தலித் ஆன்மீகத்தை மிகப் பெரிய அளவில் மீண்டும் கொண்டுவர வேண்டும், இத்தகைய சிந்தனைகளுக்கு மாற்றாக என்று கூட எனக்கு அடிக்கடி தோன்றுகிறது(ஒரு வேளை இதுவும் ஒரு ஆதிக்க சிந்தனையாக இருக்கலாம்).
//
நேசகுமார்,
என்னதான் ஒருவர் இப்படி சிலைகளை வழி பாடு, உடல் வழிபாடு என்றாலும்,
ஏகம் சத், விப்ராஹ் பஹுத வதாந்தி என்ற உபனிடத சிந்தனைக்கு மறுப்பு என்றுமே இருந்ததில்லை.
நீங்கள் சொல்வது போல் தலீத் ஆன்மீகம் தழைக்க எந்த தடையுமில்லை. Infact, ஆதி ஷங்கரர் அதைத் தான் செய்தார், பௌத்த மதத்துடன் போர் என்றபோது.
பௌத்தம் சிலை வழிப்பாட்டினைப் போற்றிய மதம். அதனை அதன் வழியிலேயே தோற்கடிப்பது தான் சிறந்த முறை.
அதே போல் ஆபிரஹாமிய மதங்களையும் அதன் வழியிலேயே தோற்கடிக்கவேண்டும்.
Dharma should take the form of the enemy to defeat it. But the soul remains the same.
Soviet communist Russia threatend all the time with wepons but they never used it. Ronald regan, Empowered the millitary of US by throwing money at it like any thing. Eventually Russia succumbed to the economic pressure. They could not keep up.
The way of war is to defeat the enemy in all the fields by using their own methods against them.
This is the essence of the post.
வஜ்ரா அவர்களே,
இன்னும் படித்து முடிக்கவில்லை, அதற்க்குள் சின்னதாக ஒரு nitpicking... கோச்சுக்காதீங்க...
//அங்கே காண்டீபத்தை ராமன் தூக்கி நாணை கட்டிக் கொண்டிருந்தார்..சீதாவை வென்று மணமுடிப்பதற்காக...! //
இராமர் முறித்தது சிவ தணுசு இல்லையோ? அர்ஜுனனுடைய காண்டீபம் எப்படி இராமர் கைக்கு வந்தது...
இப்போது மீண்டும் படிக்கப் போகிறேன்...
-வெங்கட் ஸ்ரீதர்.
மன்னிக்கவும் ஸ்ரீதர் வெங்கட்,
என் தவறு தான்...அது. திருத்திவிடுகிறேன்.
நேச குமார்,
பௌத்தம் தோற்றதற்கு மற்றுமொரு காரணம், ஆதி ஷங்கரர் வழி வந்த மற்ற குருக்கள் அதன் தத்துவங்களை கேள்வி கேட்டு Debate செய்தனர்.
பௌத்தம், இந்திய மண்ணில் தோன்றிய மதம் என்பதால் இது செய்ய முடிந்தது...இஸ்லாத்தினையோ, கிறுத்துவத்தினையோ இப்படி Debate செய்ய முடியுமா...கழுத்தில் கத்தி விழும். அல்லது அமேரிக்கா போர் தொடுக்கும். ;D
//
அடிப்படையில் இவைகளுக்குள் எதிர்மறை உறவு கிடையாது. எப்படி என்ற எனது புரிதலை, இந்த பின்னூட்டத்தின் மூலம் உங்களுக்கு (மற்றும் படிக்கும் அனைவருக்கும்) புரியவைக்க முடியும் என்னால் இப்போது என்று தோன்றவில்லை.
//
சிறப்பு,
தனிப்பதிவு சீக்கிரமே!! அப்படித்தானே?
//
தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கைக்கும், சிலை வழிபாடு - சடங்குகள் ஆகியவற்றிற்கும் முரண்பாடு இருப்பதாக கட்டுரையாளர்(மற்றும் நீங்கள்) எண்ணுகின்றீர்கள். அதுபோலவே அத்வைதத்திற்கும் துவைதத்திற்கும் முரண்பாடு இருப்பது போன்ற தொணியும் தொணிக்கின்றது.
//
உண்மை தான் அப்படி கட்டுரையாளர் எண்ணுகிறார். மேலும் Virulent துவைதமாக வெளி மதங்களையும் சித்தரிக்கிறார்.
துவைத அடிப்படையில் சில முன்னேற்றங்கள் வந்தாலும், சில காலம் கழித்து தொய்வு நிலைக்கு அது தள்ளப்பட்டு தகர்க்கப் படுகின்றது...ஏனென்றால் மாற்றம் மட்டுமே உண்மை. அதை Adapt செய்து கொள்ளக் கூடிய நிலையில் துவைதம் இருப்பதில்லை. The more it progresses the more it becomes intolerant.
காளியை மட்டுமே வழிபடும் கூட்டம் உள்ளது. மற்ற கடவுள்களை அந்தக் கொள்கை கீழாகப் பார்க்கும். இவர்கள் காளி என்று சொல்லி சிலை வைத்து வணங்குவதை அல்லாஹ் என்று சொல்லி மக்கா பக்கம் திரும்பி வணங்குகிறார்கள் சிலர்.
அடிப்படையில் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
மிக நன்றாக வந்திருக்கிறது. சனாதன (அல்லது பாகனிய) மதத்தைப் பற்றிய புதிய பார்வை. இன்னும் நிறைய புரிந்து கொள்ள வேண்டும்.
மொழி பெயர்ப்புக்கு மிக்க நன்றி!
- வெங்கட் ஸ்ரீதர்
after thought...
ஒரு வேளை இந்த 'பாகனிய மதம்' (pagan religion) என்பதிலிருந்துதான் 'பார்ப்பனிய மதம்' என்ற வார்த்தை தோன்றியிருக்குமோ? நேசக் குமாருக்குத் தெரிந்திருக்கலாம்... ஒருவேளை...
நேச குமார்,
எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது...இந்த Proud pagan எண்ணம் மேலை நாடுகளில் Semitic ஏக இறை மதங்களுக்கு எதிரான Spirituality யாக உருவெடுக்கிறது. இந்த Strategy நமக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை. ஏனென்றால் உள்ளார்ந்த ஏக இறை தத்துவம் என்பது சனாதன தர்மத்தின் அடி நாதம்.
sridhar venkat,
நீங்கள் நேசகுமாரை தவறாகப் புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.
பார்ப்பானீயம் என்பது வஹாபிசம் போன்ற ஒரு intolerant மதம். அதுபோல் சனாதன தர்மத்தின் (அல்லது இங்கே கூறப்பட்ட) ஏக இறை (அத்வைத) தத்துவம் இருப்பதாக எண்ணுகிறார் அவர். ஆனால் அவர் கூறும் சிலைவழிப்பாட்டு முறைகள் அதன் மூலம் தோன்றும் துவைதம் அதனால் தோன்றும் intolerance தான் பிரச்சனைக்கு மூல காரணம் என்று எண்ணுகிறேன் நான்.
அருமை வஜ்ரா. மற்றவர் சொல்லியது போல இணையத்திலிருந்து குறிஞ்சிப்பூ போல அழுத்தமான ஒரு தத்துவ சிந்தனைப் பதிவு.
இரண்டு குறிப்புகள்:
1. அவசரமாகப் எழுதிப் பதித்தீர்களோ? எழுத்துப்பிழைகள் அதிகம் உள்ளன. இது படிப்பின் ஓட்டத்தைப் பாதிக்கிறது. திருத்தங்கள் செய்து பதிப்பிக்க வேண்டுகிறேன்.
2. "பௌத்தமும் அதன் ஒரே கடவுள், ஒரே குரு, ஒரே தத்துவம், ஒரே மொழி, ஒரே விதமான வழிபாட்டு முறை என்ற ஒருமையும் இத்தகய பன்முகத்தன்மையின் தக்குத்தலைத் தாக்கு பிடிக்கவில்லை".
பவுத்தம் ஒரே கடவுள் என்று சொல்வதில்லை. (கடவுள் குறித்து அது எந்த நிலைப்பாடும் எடுப்பதில்லை).
மூலத்திலும் இவ்வாறு இல்லையே. இது மொழிபெயர்ப்பின் பொருட்பிழையாகும் அபாயம் உள்ளது. கவனிக்க வேண்டுகிறேன்.
பவுத்தம் அழிந்ததற்கு வேறு ஒரு முக்கியக் காரணமும் உள்ளது. பவுத்தம் வெகுஜன மக்களிடமிருந்து விலகியும் பெரும்பாலும் மடம் மற்றும் அரண்மனை (அரசர்களின் ஆதரவு) சார்ந்த மதமுமாகவே இருந்தது. (இதனாலேயே பல நேரங்களில் அரசியலை மதத்துடன் கலந்து விளையாட முற்பட்டு, மன்னர்களின் வெறுப்புக்கும் உள்ளானது). மக்களின் அன்றாட சமூக வாழ்வியலுக்குத் தொடர்பில்லாத வெகு தொலைவில் அது இருந்தது. ஊராரால் உருவாக்கப்பட்ட (மரபுகளை அகத்தே கொண்ட) இந்து மரபே வெகுஜனங்களுக்கு அணுக்கமான வாழ்வியல் மதமாக இருந்தது. வெகுஜன மக்களின் வாழ்வியலான பிறப்பு, திருமணம், மக்கட்பேறு, இறப்பு என அனைத்து நிலைகளிலும் அவர்களின் அன்றாட வாழ்விலும் இந்து மரபுகளும், அதன் வழிவழி சடங்குகளையுமே பின்னிப் பிணைந்திருந்தன. சங்கரர் ஆன்மீக தத்துவத்தையும், அன்றாட வாழ்வியலையும் இணைத்த அணுகுமுறையின் வாயிலாக இந்து மரபைப் புதுப்பித்து அதன்மூலம் வெகுஜனங்களின் அன்றாட வாழ்விலிருந்து அன்னியப்பட்டு, மட/ அரண்மனை மதமாக இருந்த பவுத்தத்தின் வீழ்ச்சியை விரைவுபடுத்தினார். சங்கரர் ஏற்கனவே இருந்ததைப் புதுப்பித்து ஒருங்கிணைத்து பிரபலப்படுத்தியவர்தான், புதிதாகப் படைத்தவர் அல்லர். சமூக காரணிகளும் அவருக்கு உதவின.
ஆகவே கட்டுரை ஆசிரியர் சொல்வதுபோல் செயல்வீரன், சிந்தனையாளான், யதார்த்தவாதி, மற்றும் தத்துவார்த்தவாதி ஆகிய நான்கு நிலைகளிலும் "இந்து மதம் தோல்வியுற்றிருந்தது" என ஒப்புக்கொள்ள முடியாது. இந்த நான்கு நிலைகளும் இந்து சமூகம் (கவனிக்க: இந்து மதமோ மரபோ அல்ல) ஒவ்வொரு சமூகமும் ஒரு காலத்தில் அடையக்கூடிய ஒரு விட்டேற்றியான (indifferent) நிலையை அடைந்திருந்தது என்றுதான் சொல்லலாம்.
ஹனுமனின் மகிமையை அவனுக்குச் சொல்லி அவனது அவதார நோக்கம் ஈடேற ஒரு ஜாம்பவான் தேவையாய் இருந்ததைப்போல, இந்து சமூகத்திற்கு அந்த சமயத்தில் ஒரு சங்கரர் தேவையாய் இருந்தது.
வஜ்ரா அவர்களே,
நேசகுமாரின் பரந்த அறிவையும் ஆழ்ந்த படிப்பையும் பல இடங்களில் நான் உணர்ந்திருக்கின்றேன்.
எனது முந்திய கேள்வி அவ்விரு வார்த்தைகளும் rhyming-ஆக இருந்ததினால் தோன்றிய கேள்வி. அவ்வளவே.
நீங்கள் உங்கள் விவாதத்தை தொடருங்கள்.
வஜ்ரா
மிகவும் சிந்தனையைத் தூண்டும் சிறந்த முயற்சி. பல பதிவர்களை இந்தப் பதிவை நோக்கித் திரும்ப வைத்துள்ளீர்கள்! பாராட்டுக்கள்!
நேசகுமார் அவர்களின் ஆழ் பொருள் அலசல், ஸ்ரீதர் வெங்கட், மற்றும் அருணகிரி ஆகியோரின் விவாதங்களால், பதிவுக்கு மேலும் சிறப்பு.
//ஆனால், வெளியிலிருந்து ஏதேனும் துவைதக் கொள்கைகளினால் தாக்கப்பட்டால் சனாதன தர்மம் அந்த தாக்குதல் தொடரும் வரை தன் நிலையை எதிரியைப் போல் மாற்றிக் கொள்ளும். அந்த தாக்குதன் நின்றவுடன் மீண்டும் பழய நிலைக்குத் திரும்பும்...இது தொடர்ந்து கொண்டே இருக்கும்//
வஜ்ரா, இது தான் பதிவின் கரு/சாராம்சமா? ஏன் கேட்கிறேன் என்றால், மீண்டும் இன்னொரு முறை படித்து விட்டு வருவதற்காக! :-)
//வெளியிலிருந்து ஏதேனும்// அத்வைதத்தில் வெளி என்ற ஒன்று தனியாகக் கிடையாதே. அனைத்தும் அகம் அல்லவா?
வேத கால ரிஷிகள் உயிரைக் கொல்ல வருவோரைக் கூட 'எதிரி'யாகப் பாவிக்கவில்லை. (ததீசி மகரிஷி தன்னையே தந்தது தானே "வஜ்ரா" ஆயுதம் :-))
1.
அப்படிப்பட்ட வாழ்வியல் - சனாதன தர்மம், ஏன் எதிரிகளைச் சம்பாதிக்க நேர்ந்தது???
மற்ற மதங்கள் என்றால், அவற்றின் நோக்கங்கள் முரண்பட்டன; அதனால் தான் நிலைக்க வேண்டும் என்ற ஆசையால், எதிரித் தன்மை அவர்களுக்குள் உண்டானது எனலாம்.
இங்கே இன்னொரு எதிரி வலிய வந்து நின்றாலும், வேத வாழ்வியல் அதை ஒரு பொருட்டாக எண்ணப்போவது இல்லையே! "நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா" என்ற அவா அற இருந்தது தானே வேத வாழ்வு! அசுரர் பிறப்பில் இருந்த ஒருவர் தேவ குரு ஆவதும் இதனால் தானே!
2.
மற்றொரு கொள்கை, மிரட்டலாக வரும் வரை, வேத வாழ்வு மட்டும் தான் இருந்ததா?
(அக்னி, சோமன் இன்ன பிற வாழ்வுடன் சேர்ந்த முறைகள்).
துவைத நிலையோ, வேதங்களில் சொல்லப்படும் பிற மூர்த்திகளோ, வேறு ஒரு கொள்கை தலை தூக்கியதால் தோன்றிய பிரதி பிம்பங்கள் தானா???
3.
தென்னாட்டில் வேத வழியில் சற்று மாறுபட்டு, மாயோன், சேயோன் என்று வழங்கிய தர்மங்களும் சனாதனமானவை தானே? இதில் அவற்றை எங்கே பொருத்துவது? பின்பு தோன்றிய துவைத நிலையில் எல்லாம் ஒன்றாய்க் கலந்தது என்றால், துவைத நிலை முன்பே இருந்திருக்க வேண்டும் அல்லவா???
மேலே கேள்விக்குறியிட்ட மூன்றும் நான் உங்களிடம் இருந்து விடைகளை அறிந்து கொள்ள வி்ழையும் கேள்விகளே. தங்கள் பதில் கண்டு தெரிந்து, தெளிந்து, பின்னர் மீண்டும் வருகிறேன்.
அப்புறம் இன்னொரு தகவல்
//அந்த மூர் நாம் என்னும் ஆளுக்குத்தான் சொல்லவேண்டும்//
நீங்கள் துவக்கிய இந்தச் சுவையான சிந்தனை விளையாட்டு (இப்படிச் சொல்லலாம் தானே?:-)), எனக்கு அப்படியே சங்கரர்-மண்டன மிஸ்ரர் விவாதங்களை நினைவுக்குக் கொண்டு வந்து விட்டது! அங்கும் கிட்டத்தட்ட இதே பூர்வ மீமாம்சை discussion தான்.
சனாதன தர்மம், பாதுகாப்புக்கு ஒரு கொள்கையும், வாழ்வியலுக்கு வேறு கொள்கையும் கொண்டுள்ளதா என்று அவரும் சங்கர பகவத்பாதரைக் கேள்வி கேட்கிறார்!
வஜ்ரா, ஏதோ மாட்ரிக்ஸ் படம் பார்த்தஹ்டு போல் இருக்கிறது.
நல்ல ஒரு கட்டுரை. இந்த கட்டுரைகள் பல சிந்தனைகளை தூண்டிவிட்டது.
நிறைய படிக்கவேண்டும் மேலும் படிக்கவேண்டும் என ஆவல்களை தூண்டிவிட்டது.
இதேபோல் பல கட்டுரைகளை எழுதவும்.
பல திம்மிகளின் பதிவுகளில் பின்னூட்டமிட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பது என் அன்பான வேண்டுகோள்.
மீதி கனடா திரும்பியவுடன்.
//அவர்களுக்கு கோவில் கட்டி கும்பிட்டுவிட்டு, வெளியில் வந்து அவர்தம் கொள்கைகளை காற்றில் பறக்க விடுவதா ?//
வஜ்ரா பாய்,
அப்னா முன்னா பாய் பி வோஹீச் போல்தா ஹை. சம்ஜா க்யா?
காந்தி சிலையெல்லாம் உடைத்தாலும் பரவாயில்லை, அவர் கொள்கைகளை மறாக்காதவரை!
//
அத்வைதத்தில் வெளி என்ற ஒன்று தனியாகக் கிடையாதே. அனைத்தும் அகம் அல்லவா?
//
அது துவைதத்ததில்...
//
ஆனால், வெளியிலிருந்து ஏதேனும் துவைதக் கொள்கைகளினால் தாக்கப்பட்டால் சனாதன தர்மம் அந்த தாக்குதல் தொடரும் வரை தன் நிலையை எதிரியைப் போல் மாற்றிக் கொள்ளும். அந்த தாக்குதன் நின்றவுடன் மீண்டும் பழய நிலைக்குத் திரும்பும்...இது தொடர்ந்து கொண்டே இருக்கும
//
இங்கே எஸ்ஸன்ஸ் உண்மையாக என்னதான் இந்து மதம் பல துவைதக் கொள்கைகளை அதனுள் அடக்க முடிந்தாலும், ஏன் இஸ்லாத்தையும், கிருத்துவத்தையும் அடக்க முடியவில்லை என்று கேட்டிருந்தீர்கள் என்றால் என்னிடம் பதில் இல்லை.
அதை எதிரியாகப் பார்க்கும் பாங்கு என்று ஆரம்பித்தது என்பதற்கும் என்னிடம் பதில் இல்லை.
ஆனால், நாம் பார்க்கவில்லை என்றாலும் அந்த மதப் போதகர்கள் பார்த்தார்கள்/பார்க்கிறார்கள் என்பது உண்மை.
மூர் நாம் அவர்கள் சிந்தனையின் படி,
The Best way to defeat the enemy is to use its own technique agaist them.
எதிரி துவைதன் என்றால் சண்டைக்காக துவைதமாக உருவெடுப்பது. பின் அதைத் துரப்பது.
Ultimately continued existence is what matters.
இன்று இந்து மதம் இருக்கிறது என்றால் அது இந்த மாற்றத்தினால் தான்.
கட்டுரை இந்த இந்து தர்மத்தின் (சனாதன தர்மத்தின்) Purpose of adaptation ஐ சொல்ல முயற்சித்திருக்கிறது என்பது என் எண்ணம்.
அரே Flemingo...அபுன் சம்ஜேலா...
என்னங்க இப்படி இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கப்புறம், நம்மள முன்னா முன்னா பாய் ஆக்கிட்டீங்க...!?
கண்ணபிரான் ரவிஷங்கர் அவர்களே,
உங்கள் கேள்விகளை அலசிக்கொண்டிருக்கிறேன்...
என் பதிலை சீக்கிரமே...எழுதுகிறேன்...
வஜ்ரா, இரண்டாம் பாகமும் நல்ல வீரியம் மிக்க மொழிபெயர்ப்பு. பாராட்டுக்கள்.
கொஞ்சம் தாமதமாக வந்ததால் சொல்ல வந்த விஷயங்களைப் பலர் சொல்லி விட்டார்கள். நேசகுமார் மற்றும் அருணகிரி சொன்ன கருத்துக்கள் இன்னும் தெளிவான பார்வையை நோக்கி இட்டுச்செல்லுகின்றன.
இவ்வளவு சிக்கலான, ஆழ்ந்த விஷயத்தை ஒரு சிறு சித்திரம் மூலம் விளக்குவது கடினம்.. அதனால் தான், பல இடங்களில் அத்வைதம் உயர்ந்தது, த்வைதம், உருவ வழிபாடு, பக்தி எல்லாம் ஒரு transitory தத்துவம் போன்ற கருத்து ஓங்கி ஒலிக்கிறது. ஆனால், சங்கரரை ஆழ்ந்து படித்தவர்கள், இது போன்று கட்சி பேசும் நிலையில் அவர் கருத்துக்கள் இல்லை என்பதையும் உணர்வார்கள்.
1. வேதம் அத்வைதத்தையே முன்வைக்கிறது என்றூ கட்டுரையாளர் வாதிடுவது தெரிகிறது.. ஆனால், துவைதத்திலிருந்து அத்வைதம் வரை எல்லா தத்துவப் பார்வைகளிமே அதில் உள்ளன என்று விவேகானந்தர் கருதுவதே எனக்குச் சரியாகப் படுகிறது. "ஒரு அத்வைதி தன் உரையில் வேண்டுமென்றே வெளிப்படையாக த்வைதப் பொருள் தரும் மந்திரங்களைச் சிதைக்கிறார், த்வைதியும் அப்படியே" என்றும் சுவாமிஜி கூறுகிறார். இருபதாம் நூற்றாண்டில் உபநிஷதங்கள் மீள்வாசிக்கப் பட்டபோதி தான் இந்தக் கருத்து தெளிவாக முன்வைக்கப் பட்டது.
2. வைணவம் முழுக்க முழுக்க த்வைத பரமானது என்பதும் சரியல்ல. ஸ்ரீராமானுஜர் தோன்றுவதற்கு முன்பே ஆழ்வார்கள் காலம் முடிந்து விட்டது. வைணவ மதத்திற்கு ஒரு தத்துவ ஒழுங்கைத் தான் ராமானுஜர் அளித்தாரே அன்றி அதை உருவாக்கவில்லை. உதாரணமாக, திருவாய்மொழியில் "கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும், கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்" என்ற வரிகளில் தெரிவது கடைந்தெடுத்த அத்வைதம் என்றே சொல்ல முடியும். குஜராத் வைணவத்தின் குரு வல்லபாச்சாரியார் தம் மார்க்கத்திற்கு "சுத்த அத்வைத வைஷ்ணவம்" என்றே பெயரிட்டார். நிம்பார்க்கரது வைணவ மரபுக்கு "த்வைதாத்வைதம்" என்று பெயர். தமிழகத்தில் நாம் வைணவத்தை விசிஷ்டாத்வைதம் என்ற அளவிலேயே பார்த்துப் பழகியிருக்கிறோம்.
3. கட்டுரையில் வரும் எதிர்காலத்தில் கோயில், பஜனை எல்லாம் மறைந்து அது ஏதோ ஒரு spritual utopia என்பது போல சித்தரிக்கப் பட்டுள்ளது. நேசகுமார் சுட்டியது போல இது ஒரு ஆரிய சமாஜ் அடிப்படைவாதம் தான் ("Vedic Fundamentalism" in the words of Koenrad Elst), அது சனாதன தர்மம் அல்ல. நம்மாழ்வாரையும், திருமூலரையும் வேத ரிஷிகளுக்கு ஒப்பாக (ஏன் மேலாகவே கூட) ஒரு சாதகன், இந்து போற்றி வணங்கக் கடவான். காலத்தால் முந்தையது என்பதற்காக எல்லாரும் puritan வேத கலாசாரத்திற்குத் திரும்பவேண்டும் என்று சொல்வது சனாதன தர்மத்தின் பன்முகப் பட்ட அழகையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் புரிந்து கொள்ளாமையின் அடையாளம் என்றே நான் கருதுகிறேன்.
என் இரண்டு பைசாக்கள்.
//
ேத வழிபாடே உயர்ந்தது என்றால், அத்வைதம் பொய்யாகிறது. எப்படி என்றால், உருவக் கடவுள்களை வணங்கியவர்கள் அனைவரும் இறை நிலையை எய்த முடியாது (அல்லது பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியாது) என்றாகிறது. அப்போது, காண்பன யாவுமாய் கண்கண்ட தெய்வமாய் இறையை ஏத்தும் அத்வைதத்தின் சாராம்சம் அடிபட்டுப் போகிறது.
//
உருவ, சிலை வழிபாடுகள் பக்தியை அடிப்படையாகக் கொண்டு "இறை" யை அடைகின்ற வழிகள். பக்தி மார்க்கம் என்று சொல்லலாமா ?
"இறை" உனக்குள்ளும் உள்ளது என்பது அத்வைதம். அதை வேறு வழிகளிலும் அடையலாம்...என்பது என் தாழ்மையான கருத்து. உதாரணமாக "இறை" யை தேடி ஆராய்தல் இப்படி, தமிழ் மணத்தில் உட்கார்ந்து கொண்டு...அதை ஞான மார்க்கம் என்று சொல்லலாமா ?
ஆனால் மூர் நாம் அவர்கள் சிலை வழிபாட்டினை தாழ்த்தி பேசியதாகத் தெரியவில்லை.
ஆனால் தன் சிலை தான் பெரியது....அல்லது தன் தெய்வம் தான் பெரிய தெய்வம் என்ற எண்ணத்தை அது நாளடைவில் ஏற்படுத்திவிடுகின்றது.
That is the major reason for conflict.
//
காண்பன யாவுமாய் கண்கண்ட தெய்வமாய் இறையை ஏத்தும் அத்வைதத்தின் சாராம்சம் அடிபட்டுப் போகிறது.
//
காண்பதை யாவும் தெய்வம் எனலாம், ஆனால் எல்லாவற்றையும் உட்கார்ந்து கும்பிட முடியாது...இறை வழிபாடு கொஞ்சம் கொஞ்சமாக Evolve ஆக வேண்டும். பக்தி, ஞானத்திலும் முன்னேரவேண்டும். அதைத்தான் கடைசியில் Future ல் நிகழும் மாணவர்களை வைத்து ஷங்கரர் சொல்லியிருப்பார்.
வெறும் ஞானம் செறுக்கு, திமிர் உண்டாக்கும். வெறும் பக்தி மூடத்தனம் உண்டாக்கும்.
//
பவுத்தம் வெகுஜன மக்களிடமிருந்து விலகியும் பெரும்பாலும் மடம் மற்றும் அரண்மனை (அரசர்களின் ஆதரவு) சார்ந்த மதமுமாகவே இருந்தது.
//
வெகுஜன பிரியம் இல்லாமல் ஒரு மதம் இப்படி பரவியிருக்க முடியாது. பின்னாளில் அது அப்படி elite மதமாக மாறியது அதன் அடிப்படை தவறு.
வஜ்ரா,
துவைதத்தினால் ஏற்பட்ட பக்தி மார்கம் தனி மனித ஒழுக்கத்தையும், நேயத்தையும் வளர்ப்பதில் பெரும் பங்காற்றியது என்று நிச்சயம் கூற முடியும். பிற யோகங்களை விட, பக்தி யோகமே எல்லோராலும் எளிதில் பின்பற்ற வல்லதும் கூட. மேலும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பல நல்ல மாற்றங்களும் நிகழ்ந்தன அல்லவா ?
பக்தி மார்கத்தில் பயணித்துக் கொண்டு, தத்துவத்தையும் கை கொள்ளும்போது, நம்மை நாம் உணர்ந்து கொள்ளும் அத்வைத நிலையை அடைய இயலும்.
//
3. கட்டுரையில் வரும் எதிர்காலத்தில் கோயில், பஜனை எல்லாம் மறைந்து அது ஏதோ ஒரு spritual utopia என்பது போல சித்தரிக்கப் பட்டுள்ளது. நேசகுமார் சுட்டியது போல இது ஒரு ஆரிய சமாஜ் அடிப்படைவாதம் தான் ("Vedic Fundamentalism" in the words of Koenrad Elst), அது சனாதன தர்மம் அல்ல. நம்மாழ்வாரையும், திருமூலரையும் வேத ரிஷிகளுக்கு ஒப்பாக (ஏன் மேலாகவே கூட) ஒரு சாதகன், இந்து போற்றி வணங்கக் கடவான். காலத்தால் முந்தையது என்பதற்காக எல்லாரும் puritan வேத கலாசாரத்திற்குத் திரும்பவேண்டும் என்று சொல்வது சனாதன தர்மத்தின் பன்முகப் பட்ட அழகையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் புரிந்து கொள்ளாமையின் அடையாளம் என்றே நான் கருதுகிறேன்.
//
நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்...ஏதோ Spiritual utopia...என்று...
எண்ணிப்பார்த்தால்... நாம் மத அடயாளங்கள் ஏன் வைத்திருக்கவேண்டும்...என்று சில வேளைகளில் தோன்றுகிறது..
யாருடைய திருப்திக்காக மத அடயாளங்கள் நம்மில் வளர்க்கவேண்டும் என்று கூட தோன்றுகிறது...
Again, as you say the author is some places has shallow passages. And it can very well be what Koenraad elst puts it. The "Vedic fundamentalism"!
//
ஆனால், துவைதத்திலிருந்து அத்வைதம் வரை எல்லா தத்துவப் பார்வைகளிமே அதில் உள்ளன என்று விவேகானந்தர் கருதுவதே எனக்குச் சரியாகப் படுகிறது.
//
வரலாறு அடிப்படை, சரித்திர அடிப்படை கொண்ட கண்ணோட்டம் வேதத்தில் இருக்கிறது என்று ஷங்கரர் சொல்வதாகவும் கட்டுரை அமைந்துள்ளதே !
ஆனால் அத்வைதம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கருதுகிறார். அது மறுப்பதற்கில்லை.
//
அடிப்படையில், இறை நிலை என்பது நமது இயல்பான தன்மை எனக் கொண்டால், அத்வைதமாய் அனைத்தும் இறை என்று கொண்டால், நமது இயல்பான தன்மையை எக்கடவுளை வணங்கினாலும் மீட்டெடுக்க முடியும். அது அல்லாஹ்வாக இருந்தாலும் சரி, முனீஸ்வரராக இருந்தாலும் சரி, எல்லையம்மனாக இருந்தாலும் சரி, மரியம்மையாக இருந்தாலும் சரி - பிண்டத்தினுள்ளே அண்டத்தைக் காண பார்ப்பானின் பார்வை(பார்ப்பான் - விட்னெஸ், sridhar venkarகள் கோபம் கொள்ள வேண்டாம். மூலம்:திருமூலர்)தான் முக்கியமே தவிர நீங்கள் யாகம் வளர்த்து அக்னி மூலம் இறைவனை வணங்குகிறீர்களா, வேத மந்திரங்களை சரியான மீட்டரில் உச்சரிக்கின்றீர்களா என்பதெல்லாம் அல்ல என்கிற முடிவுக்கே என்னால் வரமுடிகிறது.
//
I agree.
இது போல் Spiritual enquiry இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதா இந்து மதம்...ஒரே பக்தி, சடங்கு சம்பிரதாயம் என்று மாறிவிடுகிறதா என்று கூடத் தோன்ற ஆரம்பித்துவிட்டது...! அப்போது தான் இந்த கட்டுரை கண்ணில் பட்டது.
கண்ணபிரான்,
துவைத நிலை என்றுமே இருந்துள்ளது. பக்திக்கு துவைதம் வேண்டும். புத்திக்கு அத்வைதம் வேண்டும்.
நமக்கு பக்தி (humility) வேண்டும், அதே போல் புத்தி (inquisitive) யும் வேண்டும்.
பக்தி மட்டுமே இருந்தால் மூடத்தனம் அதனால் வரும் மூர்க்கத்தனம், புத்தி மட்டுமே இருந்து பக்தி இல்லை என்றால் தற்பெருமை, Ego அதனால் வரும் மூர்க்கத்தனமும் வரும்.
We need to balance it.
வஜ்ரா
தங்கள் பதிலில் எனக்குத் திருப்தியே!
ஜடாயு அவர்களும் நல்ல கோணங்களில் அலசியுள்ளார். எப்படி சங்கரர் அத்வைத சிந்தனையில் த்வைதப் பொருளையும் உள்ளடக்கினாரோ, அதே போல் ஆழ்வார்களும், திருமூலரும், நாயன்மார்களும், இராமானுசரும், மத்வரும் இன்ன பிற ஆச்சார்யர்களும் துவைத சிந்தனையில், அத்வைத பொருளையும் உள்ளடக்கினார்கள்.
"உளன் இரு தகைமையுடன் ஒழிவு இலன் பரந்தே" என்று சொல்லும் நம்மாழ்வாரால், "புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே" என்று சொல்லவும் முடிந்தது!
நீங்கள் குறிப்பிடுவது போல, it is the continued existence மட்டும் அல்லாது continued evolution also matters. அதற்கு இந்த சனாதன தர்மத்துக்கு போதுமான களமும், கருத்தும் குறைவில்லாது இருக்கின்றன!
முதல் பாகத்தில் சங்கரரைக் கேட்கும் கேள்விகளில் சில
1. மதச் சின்னங்கள்
2. மாற்றார் தாக்கிய போது பக்தியால் எதையும் சாதிக்க முடியாமல் ஓடியது
போன்ற கேள்விகளுக்கு இரண்டாம் பாகத்தில் முழுமையான விடைகள் இல்லாததால், விவாதம் பல பக்கங்களில் திரும்பி விட்டது என எண்ணுகிறேன்.
மற்றபடி, ஞான நிலைகளில் கண்டு அறிந்த evolution-ஐ அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்த்து ஒரு பரந்த தர்மத்தை aggregate செய்ததில் பெரும் பங்கு துவைத நிலைகளுக்கு உண்டு. ஜடாயு சொல்வது போல் ஒரு சாதகன் அதற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளான்.
சடங்குகள் மலிந்து சாரம் இழந்தது என்றால் அது தனி மனித சுய லாபங்களும், மாறி வரும் materialistic orientation, மற்றும் தவிர்க்க முடியாத பொருளாதார நிலைகளும், சமுதாயத்தில் கலந்து, அதன் மூலமாக, தர்மத்தில் coexist செய்வதனால் தான்; அன்றி துவைத நிலைகள் அவற்றுக்கு காரணிகள் ஆகா. இருந்தாலும் இதுவும் ஒரு evolution தான்; இதனால் இந்த தர்மம் மேலும் மெருகு ஏறும்!!
அறிவால் "அறிந்து", உன் இருதாள் "இறைஞ்சும்" அடியார் இடைஞ்சல் களைவோனே, என்பது போல் மிகவும் முத்தாய்ப்பாக பக்தி-புத்தி என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள்;
மிக நன்று; இது போல் பதிவுகளை அவ்வப்போது தாருங்கள்! (மொழி பெயர்ப்போ, இல்லை தங்கள் சிந்தனைச் சிதறல்களோ, எதுவாயினும் சரி...மிகவும் விரும்புவோம்). நன்றி/பாராட்டுக்கள் வஜ்ரா!
//கண்ணபிரான்,
துவைத நிலை என்றுமே இருந்துள்ளது. பக்திக்கு துவைதம் வேண்டும். புத்திக்கு அத்வைதம் வேண்டும்//
உங்கள் அனுமதியுடன் இதைச் சிறிதே மாற்றிக் கொள்கிறேன்.
:-)
ஏன் என்றால் பக்தி, புத்தி இரண்டும் இரண்டிலுமே இருக்கிறது! அதனால் இது பயனுடன் விவாதிக்கும் யாருக்கும் இது ஒரு eye sore போல் ஆகி விடக்கூடாது!
பக்திக்கு துவைத மன ஓட்டமும், புத்திக்கு அத்வைத மன ஓட்டமும் வேண்டுவோம்!
அறிவால் "அறிந்து", உன் இருதாள் "இறைஞ்சு" வோம்!!
//ஒவ்வொரு முறையும் இப்படி தர்மம் க்ஷீணிக்கும் பொழுது வரும் யுக புருஷர்களை போற்றி கும்பிடுவது நம் பழக்கமாகிவிட்டது. அதனால் எது முக்கியமோ அதை விட்டு விடுகிறோம். அவர்கள் கொள்கைகளை நாம் கடைபிடிப்பதில்லை. அது தானே அவர்கள் பிறவிப் பயன் ? இல்லை, நாம் அவர்களுக்கு கோவில் கட்டி கும்பிட்டுவிட்டு, வெளியில் வந்து அவர்தம் கொள்கைகளை காற்றில் பறக்க விடுவதா ?//
பல பதிவர்களை இந்தப் பதிவை நோக்கித் திரும்ப வைத்துள்ளீர்கள்! பாராட்டுக்கள்!
நல்லதொரு முயற்சி ஷங்கர்,
அருமையான மூலத்தை சிரத்தையோடு மொழிபெயர்த்திருக்கின்றீர்கள்.
வாழ்த்துக்கள்.
கால்கரி சிவா!
//பல திம்மிகளின் பதிவுகளில் பின்னூட்டமிட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம் என்பது என் அன்பான வேண்டுகோள்.//
திம்மி என்ற அரபி வார்த்தையை எந்த அர்த்தத்தில் உபயோகப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை. வலைப் பதிவர்களில் பலரும் இதற்கு 'முஸ்லிம்கள்' என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அரபி மொழியில் 'திம்மி' என்பதற்கான பொருள் 'இஸ்லாமிய அரசின் பிரஜையாக வாழ்ந்து வரும் பிற மதத்தவர்'. எனவே இனி பின்னூட்டம் இடும்போது 'திம்மிகளின் பதிவில் மட்டும் பின்னூட்டம் இடுங்கள்' என்று கோரிக்கை வைக்கவும். :-))
'இஸ்லாமிய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு அதன் கீழ் வாழ்ந்து வரும் ஒரு திம்மியை கொன்று விடுபவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டான். அதன் நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே விசிக் கொண்டிருக்கும்'
சொன்னவர் : முகமது நபி
கேட்டவர் : அப்துல்லா பின்அம்ர்
ஆதார நூல்: புகாரி
வஜ்ரா!
//அதன் ஒரே குரு, ஒரே தத்துவம், ஒரே மொழி, ஒரே விதமான வழிபாட்டு முறை என்ற ஒருமையும் இத்தகய பன்முகத்தன்மையின் தாக்குத்தலைத் தாக்கு பிடிக்கவில்லை.//
பவுத்தம் அழிந்ததற்கான காரணம் இதுதான் என்று கட்டுரையாளர் சொல்கிறார். ஏறத்தாழ இதே கோட்பாடுடன் உள்ள இஸ்லாம் இன்று வரை அழியாமல் மேலும் வளர்வதற்கு காரணம் எதுவாக இருக்கும்?
எனவே பவுத்தம் அழிந்ததற்கான உண்மையான காரணம் வேறுஇருக்கலாம் என்பது என்எண்ணம்.
சுவனப்பிரியன்,
திம்மி என்பதை கால்கரி சிவா அவர்கள் இஸ்லாமிய அரசாணை இருக்கும் நாட்டில் வாழும் இஸ்லாமியரல்லாதோர் என்ற பதத்திலேயே பயன் படுத்தியிருக்கிறார்.
பௌத்தம் அழிந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. அது பொது மக்களிடையே வலு இழந்ததற்கு காரணம் பன்முகத்தன்மை இல்லாதது. அது elitist மதமாக உருபெற்று politics ல் தீவிரமாக இரங்கிவிட்டது. அதன் தவறு. அதே தவறை இஸ்லாம் இன்று செய்து கொண்டிருக்கிறது. அது elitist என்று மாறாமல் அதை கம்யூனிஸ முறையைப் பயன் படுத்தி புரட்சி அது இது என்று செய்கிறது.
பௌத்தம் அழிந்ததற்கு இன்னுமொரு முக்கிய காரணமாக ஒரு முகத்தன்மை கொண்ட இஸ்லாத்தின் வருகையை காரணமாகவும் சொல்கிறார் அதே கட்டுரையாளர். அதை ஒத்துக் கொள்கிறீர்களா ?
Post a Comment