July 21, 2006

செய்தித் துணுக்குகள்..

போர் சூளலில் வாழக் கற்றுக் கொண்ட இஸ்ரேலியர்கள்:

ஹைபாவில் ஒரு மணி நேரத்தில் 60-70 ராக்கெட்டுகள் விழுகின்றது என்றவுடன். பள்ளி கல்லூரிகள் விடுமுறை, அலுவலகங்கள் விடுமுறை, என்று யாருக்கும் வேலையிலை. எல்லோரும் அவர்கள் கார் எடுத்துக் கொண்டு தென் கோடி இஸ்ரேலில் இருக்கும் ஏலாத் க்கு டூர் அடிக்கப் போய்விட்டனராம்..
ஏழு கி.மீ தூரத்துக்கு ஏலாத் நுளைவு வாயிலில் Traffic jam!

மேலே வடக்கில் தொலைத்த சுற்றுலாத் துரையின் வருமானத்தை வட்டியுடன் பெற்று விடுகின்றனர் தெற்க்கில். ..:D

நாட்டை விட்டு யாரும் ஓடவில்லை.

இஸ்ரேலைப் பயன் படுத்தும் பெரிய அண்ணன்:

ஹெஸ்பொல்லாகளைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பது நிதர்சன உண்மை. அதற்கு யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்புகள் இல்லை. ஆனால் லெபனான் அரசு தன் இயலாமையினால் ஹெஸ்பொல்லாக்களை வளரவிட்டுவிட்டது.

ஹெஸ்பொல்லாக்களை துவம்சம் செய்தாகவேண்டிய நிலை இப்போது உள்ளது. அதைச் செய்ய எந்த மேலை நாடுகளும் முன்வரப்போவதில்லை. ஏன் என்றால் ஹெஸ்பொல்லாக்களால் யாருக்கும் தற்சமயம் இன்னல்கள் இல்லை. நாளை பின்லாதன் போல் லண்டனில் குண்டு வைத்தால் லெபனான் காலியாகும், ஆனால் இஸ்ரேலியர்கள் இவர்களை சகித்துக் கொண்டு வாழவேண்டும். ஏன் என்றால் 25 கி.மீ தொலைவிலிருந்து அவர்கள் விடும் ராகெட்டுகள் அவர்கள் வீட்டுக் கூறையை பிய்த்துக் கொண்டு விழுகின்றது ஹைபாவில்.

அமேரிக்கா என்றாலே வெறுப்பை கக்கும் "பீச்சாங்கை" யர்கள் (leftist தான்..!!) அமேரிக்காவின் உதவியில் தான் இஸ்ரேல் இது போன்ற தொரு காரியத்தில் ஈடுபடுகின்றது. லெபனான் அனைத்தயும் தரைமட்டம்மக்கினாலும் பெரியண்ணன் அமேரிக்கா அதை கண்டும் காணாமலும் இருக்கும் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டனர். உண்மையில், பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தான் பிரச்சனை. லெபனான் அரசு வளர விட்ட ஹெஸ்பொல்லாக்களை ஆப்படிப்பது யார்?

இஸ்ரேல் அதைச் செய்கிறது என்றவுடன் மேலை நாடுகள் கன்னியமாக விலகிக் கொண்டுவிட்டன. அதாவது, ஹெஸ்பொல்லாகளை காலி செய்ய இஸ்ரேல் பயன் படுத்தப் படுகின்றது ஒரு விதத்தில்.

Reserve படைகள் கூப்பிடப் படுகின்றன:

ஏர்கனவே போர் அதிகமாகியிருப்பதால், லெபனானுக்குள், காலாட்படை ஹெஸ்பொல்லாக்களை களை எடுக்க அனுப்பப்பட்டுவருகின்றதாலும், Reserve படைகள் அழைக்கப் பட்டுவருகின்றன என்று செய்தி வெளியாகியிருக்கின்றது. வேலைகளை விட்டு விட்டு, துப்பாக்கித் தூக்கப் போகவேண்டும் என்பதே இதன் அர்த்தம்.


அதிசய செய்தி:

சவுதி அரேபிய முல்லா ஹெஸ்பொல்லாக்கள ஆதரிக்கவெண்டாம் என்று Fatwa வெளியிட்டிருக்கிறாராம். இது போல் வேறுபட்ட கருத்துக்களும் இஸ்லாதில் உள்ளது என்பதைப் பார்க்கும் போது நன்றாகத்தான் இருக்கின்றது. ஆனால் இவர்கள் நீண்ட நாட்கள் வாழ மாட்டார்கள் என்ற பயமும் உள்ளது.

7 comments:

கால்கரி சிவா said...

ஐயா, தாங்கள் பத்திரமா?

சிறிது நாள் ஊருக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாமே

சிறில் அலெக்ஸ் said...

ஷங்கர் உங்கள் இடத்தில் எப்படி இருக்கிறது? நீங்கள் வெளியேறும் எண்ணம் உண்டா?

JustForComment said...

அப்படியே இருதரப்பிலும் கொல்லப்படும் அப்பாவிப் பொதுமக்களின் கணக்கையும் தந்துகொண்டிருந்தால் நன்று.

Vajra said...

சிறில் மற்றும் சிவா,

நன்றி.

நான் உயிருடன் பத்திரமாகத் தான் இருக்கேன்..
நான் இருக்கும் இடத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை. மத்திய இஸ்ரேல் வரை தாக்கக் கூடிய சக்தி வாய்ந்த ராக்கெட்டுகள் ஹெஸ்பொல்லாக்களிடம் இல்லை. இன்னும் சில நாட்களில் நிச்சயம் இஸ்ரேல் படை ஹெஸ்பொல்லாக்களை சிரியாவிற்குள் துரத்தி விடும்...அப்புறம் வடக்கு இஸ்ரேலில் ராக்கெட்டுகள் விழாது.

justforcomment,

பொதுமக்கள் பின்னால் ஒளிந்து கொண்டு ராக்கெட் விடும் தீவிரவாதிகள் கொல்லப்படும் போது பொது மக்கள் என்று சொல்ல முடியாது...
அதில் உண்மையான பொதுமக்கள் என்று எப்படி கண்டறிவீர்கள்?

இப்போது ஹெஸ்பொல்லாக்களின் புதிய தெக்னிக் வீட்டிர்குள் இருந்து கொண்டு ராக்கெட்டுகளை விடுவது....வீட்டைப் போட்டுத்தள்ளினால் பொது மக்கள் கொல்லப்படுவதாக வதந்திகளை கிளப்பிவிடுவது...இது ஹெஸ்பொல்லாக்கள் டெக்னிக்...

CT said...

Shankar
I am closely following the news.Day before yesterday they were telling "Israel is calling for 5000 reserves , there are chances israel may cature lebanon"
I think situation is really bad,Might be you should consider leaving the place for good.

Take care pal
CT

Izzath said...

First you understand the issue and comment before writing biased views.
Let me just enlighten you that Hezbollah is a resistance movement whose only mission is to defend its country and the legitimate rights of its country against the Middle East’s biggest terror organisation – Israel.
It is Israel that has raped the land of Palestine, invaded neighbouring countries killing tens of thousands, displacing millions and imprisoning thousands, along with a host of other vicious crimes over an infamous 58 years.
Hezbollah is only a reaction to Israel’s aggressive actions.
Having finally succeeded in killing the Middle East peace process, while continuing to terrorise the Palestinian peo ple since 1948, Israel continues to hold Arab prisoners, some for more than 25 years.
It is Hezbollah’s legitimate right to take Israeli army prisoners with the honourable aim of swapping them for their own. Besides, the only way forward is for the international community to start holding Israel soley responsible for the implementation of all its unimplemented resolutions concerning the Middle East and for people to start speaking the truth loud and clear.
The Spanish prime minister is a very good recent example. The Jewish American thinker, Noam Chomsky, is also an excellent long-standing example as well.
Disarming Israel of its large nuclear arsenal which is threatening the region’s whole existence is another major requirement going forward.
ISRAEL is the biggest terrrorist country in the world.
Note I DO NOT Support ISLAMIC Terrorism as well.

Vajra said...

இஜ்ஜத்,

ஹெஸ்பொல்லாக்களை எதிர்ப்புவாதி ஆக்கி வெள்ளையடிக்கவேண்டாம். அவர்கள் தீவிரவாதிகள்.

Israel has the right to exist and Islamic terrorist organizations working in Palestine and Surrounding countries do not want it. Disarming Israel is not the priority. Israel is a sensible mature democracy where as Hamas and other Monarchy ruled neighboring arab states (including syria and iran) are irresponsible states, and nuclear arms in their hands is as dangerous as nuclear armed Al qaida.

Disarming and dismantling islamic terrorist groups based on Arab soil and Accepting Israel as a middle eastern power is the first and formemost thing to be done. Unfortunately, no arab or islamic country is ready to do that. As long as they hold this hatered, the rage and war in Middle east will go on.