July 11, 2006

படங்காட்றேன்....!!-7

ஜெரூசலம் - ירושליים-Jerusalem

கோடெல்-כותל-Kotel

யூதர்களின் அழுகைச் சுவர் (Wailing Wall) அதைத் தான் ஹீப்றூ வில் கோடெல் என்றழைக்கிறார்கள்.



இந்த சுவர் தான் சாலமன் மன்னன் கட்டிய இரண்டாம் கோவிலில் மிஞ்சியுள்ள சிதிலம். இந்த இடத்தில் ஆண்டவனின் பார்வை இன்னும் உள்ளது என்பது யூதர்களின் நம்பிக்கை. யூதர்களுக்கு இது புனிதத்திலும் புனித ஸ்தலம்.

கோவில் இடிந்ததன் நினைவு நீங்காமல் இருப்பதற்காக என்னென்ன செய்யவேண்டுமோ அதை செய்பவர்கள் யூதர்கள். உதாரணமாக, கல்யாண நாளன்று ஒரு ஒயின் கிளாஸை தரையில் போட்டு உடைக்கவேண்டும். ஏன் என்றால் கல்யாணம் போன்ற சந்தோஷமான நாட்களில் கூட நாம் நம் கோவில் இடிக்கப் பட்டுவிட்ட சோகத்தை மறக்கக் கூடாது என்பதற்காக.

நம்ம ஊர் மக்கள் கோவில் சுவறில் காகிதத்தில் "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதி வைப்பார்கள். இங்கே அதையே, பக்கம் பக்கமாக தமது பிரார்தனைகளை இறைவன் கேட்பான் என்கிற நம்பிக்கையில் எழுதி வைக்கிறார்கள்.

அதைப் பார்க்கும் பொழுது "Religion is the manifestation of the Divinity already in Man" என்று ஒரு இந்தியாவில் பிறந்த மகான் சொன்னது தான் எனக்கு நினைவிற்கு வந்து சென்றது.



ரபி மார்கள், இங்கே, காலை, மதியம் இரவு என்று என்னேரமும் தொழுகையில் ஈடுபட்டிருப்பர். சுவற்றில் தலைவைத்து அழுது கொண்டிருப்பர்.



அவர் கையிலும், தலையிலும் கட்டிக்கொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன்.

இந்துச் சம்பிரதாயமான "உபனயனம்" போல், இங்கே பார்-மிட்ஸ்வாஹ்- בר מצוה -Bar mitzvah என்று ஒரு ஆணின் 13 வது வயதில் கொண்டாடுவது வழக்கம். அதையே பெண்ணிற்கும் கொண்டாடுவது பாத் மிட்ஸ்வாஹ் என்று சொல்வார்கள்.

முந்தய படங்கள்:
ஜோர்டன் நதி, ஹைஃபா பஹாய் கோவில்
மஸாதா மற்றும் Dead Sea பற்றிய படங்கள் மற்றும் எனது அனுபவங்கள்
ெஃபர்னௌம்- כפרנאום - Capharnaum
டெல் அவீவ் கார்மெல் மார்கெட் - שוק ה כרמל - Carmel market
டெல் அவீவ் கார்மெல் மார்கெட் - שוק ה כרמל - Carmel market 2
ஜெரூசலம் - ירושליים-Jerusalem 1

No comments: