April 21, 2006

யூதர்களின் நம்பிக்கை!


கடந்த சில வருடங்களாக, நான் இஸ்ரேலில் வாழ்ந்து வருகிறேன், யூதர்களின் நம்பிக்கை பற்றி நான் கண்ட சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

யூதர்கள் யார், அவர்கள் எங்கு இருந்து வந்தவர்கள் போன்ற அனைவருக்கும் தெரிந்த உண்மைகளைப் பற்றி எழுதி பக்கத்தை நிரப்பாமல், நேராக யூத தெய்வ நம்பிக்கை பற்றி எழுதுகிறேன். படத்தில் பார்க்கும் பெட்டி தான் ark of the covenant. இதை தான் பல காலம் யூதர்கள் தங்கள் கோவிலில் வைத்து கும்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த பெட்டிக்குள் என்ன தான் இருந்தது என்று யோசிப்பவர்களுக்கு Indiana jones and the lost ark என்ற spielberg திரைப்படம் பார்த்து வியந்து கொள்ளுங்கள். பைபிள் மற்றும் டோரா (torah) எனப்படும் பழய ஏற்பாடு, அந்தப் பெட்டிக்குள் ஜெஹோவா (யூதக் கடவுளின் பெயர்), யூத மக்களுக்கு எகிப்திலிருந்து வெளியேரும் போது அளித்த ஓப்பந்தம் (covenant) கல் வெட்டாக செதுக்கப்பட்டு வைக்கப் பட்டுள்ளது என்கிறது.

கோவிலும் அழிந்தது, யூதர்கள், பரதேசிகளாக ஐரோப்பா, மற்றும் பல நாடுகளுக்கு அடிமைகளாகவும் சென்றனர். 2000 ஆண்டுகள் சென்றது. இன்று, படத்தில் பார்கும் இந்த கோவிலின் மேற்கு அடிச்சுவர்தான் மிஞ்சியிருக்கும் பகுதி. இதில் இன்னும் புனித்துவம் மிஞ்சி இருப்பதாக யூதர்கள் நம்புகின்றனர். (இந்தச் சுவற்றை கோட்டெல் kotel என்கின்றனர்)

இந்த 2000 ஆண்டுகளில், அவர்கள் கோவில் இல்லாததனால், வழிபாட்டு முறைகள் வெகுவாக மாறிவிட்டன, ஆனால் நம்பிக்கை கிஞ்சித்தும் மாறவில்லை. இப்பொழுதெல்லாம், 2000 ஆண்டுகளுக்கு முன்பு போல், பலி கொடுத்து, கோவிலில் வழிபடும் முறை மாறி, தெய்வத்தை மனதில் நிருத்திக் கொண்டு, பழயக் ஏற்பட்டில் குறிப்பிட்டுள்ள சில வரிகளைப் கோவிலின் மேற்குச்சுவர் நோக்கித் திரும்பி நின்றுகொண்டு படிப்பது தான்.

சில நாட்கள் முன்பு என் நண்பன் யாகோவ் (ஜேகப்) வுடன் ஜெரூசேலம் சென்றிருந்தேன். அங்கு அவர், ஒரு Rabbi (யூத மத குரு) யிடம் மாட்டிக் கொண்டார். அங்கு அந்த rabbi "this is a jewish obligation, every jew must perform" என்று சொல்லி, யாகோவின் கையிலும் தலையிலும், தோலினால் ஆன வார் ஒன்றை கட்டிவிட்டார்.
உன்னித்துப் பார்ததில் அந்த வாரின் ஒரு முனையில், பெட்டி போன்ற ஒன்று இருந்தது தெரிந்தது. பார்க்க படம். அந்த பெட்டிக்குள் என்ன இருக்கிறது, இதை ஏன் இவன் கையிலும், தலையிலும் கட்டிவிட்டீர்கள் என்று அந்த rabbiயிடம் கேட்டதில், அந்த சிறிய பெட்டிக்குள் இருப்பது, பழய கோட்பட்டின் சில வரிகள் பதித்த துண்டுச் சீட்டே என்றும், அதில் கூறப் பட்டுள்ள வரிகள்,

"நான், உங்களது கடவுளான ஜெஹோவா உங்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இஸ்ரேல் என்ற நாட்டை அளிக்கிறேன், இதன் நன்றிக் கடனாக, நீங்களும், உங்கள் சந்ததியினரும் என்னைத் தொழுவீர்கள்"

போன்ற கடவுளின் நேரடி வார்தைகள் என்று அந்த rabbi விளக்கமளித்தார்.

இதைக் கடவுள்தான் சொன்னாரா என்பதைப் பற்றியெல்லாம் விவாதிக்காமல், ஜெரூசேலத்தில் மற்ற இடங்களைப் பார்க்கச் சென்றுவிட்டேன்.இன்று ஜெரூசேலத்தில் யூதர்கள் கோவில் இருந்த பகுதி, dome of rock எனப்படும், மசூதி தான் இருக்கிறது. இதற்குள் செல்ல முஸ்லிம்களைத்தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. வெள்ளிக் கிழமைகளில் (ஜும்மா) பக்கத்தில் கூட செல்ல அனுமதி இல்லை (முஸ்லீம் அல்லாதவர்க்கு). இந்த மசூதியய்ப் பற்றி வரும் நாட்களில்...

அதுவரை, நன்றி

ஷங்கர்.

2 comments:

கால்கரி சிவா said...

வஜ்ராவே வருக. நீங்கள் இதை தமிழ்மணத்தில் அளிக்க வேண்டும். வித்தியாசமான இடத்திலிருந்து வித்தியாசமான பதிவு

வாழ்க

Vajra said...

நன்றி சிவா,

இன்னொரு முறை ஜெரூசேலம் சென்று வந்து, இன்னும் பல வித்தியாசமான தகவல்களுடன், சில பதிவுகள் போட்ட பிறகு தமிழ்மணத்தில் நுழைகிறேன்.

ஷங்கர்.