April 27, 2006

சங் பரிவாரங்களும் இஸ்ரேலும்

இஸ்ரேலைப் பற்றி பல பேருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை என்றாலும், தெரிந்த சில பேரிடையே இரண்டே வகைக் கருத்துக்கள் தான் நிலவுகின்றது. ஒன்று, இஸ்ரேலைப் பரி பூரணமாக ஆதரிப்பதும், இரண்டு இஸ்ரேலை முழுமையாக எதிர்ப்பதும்.

  • இதில் இந்தியாவுக்கு எது நல்லது? ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
  • சங் பரிவாரங்கள் எதர்க்காக இஸ்ரேலை அதரிக்கவேண்டும் என்கின்றன?
  • இஸ்ரேலியர்கள் ஜாதீயக் கொள்கையய் கடைபிடிப்பவர்களா? ஆகயால் தான் சங் பரிவாரங்கள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனரா?
  • இந்திய முஸ்லீம்கள் இஸ்ரேலை எதிர்ப்பது ஏன்?


இப்படிப் பட்ட கேள்விகளுக்கு விடை தேடியே இந்தப் பதிவு.

இஸ்ரேலை எதிர்ப்பது ஏன்?


  1. இஸ்ரேலியர்கள், zionism கொள்கை கொண்டு, பாலஸ்தீன மக்களை அவர்கள் நாட்டிலிருந்து விரட்டிவிட்டு, அங்கு இஸ்ரேல் என்ற யூதர்களுக்கான நாட்டை அமத்துக்கொண்டனர்.
  2. இஸ்ரேலியர்கள், பாலஸ்தீன மக்களை, அவர்கள் சொந்த வீட்டிலிருந்து விரட்டி விட்டு, அவர்கள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர்.
  3. Zionism கொள்கை, யூத மதத்தில் பிறந்தவன் உயர்ந்தவன் என்ற ஜாதீயக் கொள்கை போல் இருபதினால். அதாவது யூதராக யாரும் மதம் மாற முடியாது, யூத மத்தில் பிரந்தாலொழிய.
  4. "சங் கூட்டத்தினருக்கு முஸ்லீம்களைக் கண்டால் ஆகாது; இஸ்ரேலுக்கும் ஆகாது; எனவே சங் கூட்டத்தினர் இஸ்ரேல் பக்கம்" என எண்ணத் தூண்டும். ஆனால் இந்த மதக் காரணத்திற்கும் அப்பாற்பட்ட காரணம் ஒன்று உண்டு. சங்கூட்டத்தினரில் பெரும்பாலான உறுப்பினர்கள் உயர்சாதியினைச் சேர்ந்தவர்கள். சங் எனும் அமைப்பு அவர்களது நலனுக்காக அவர்களாலேயே உருவாக்கப்பட்டது. அந்த உயர்சாதி கூட்டத்தினர் தங்களது சாதி முறை சித்தாந்தத்திற்கு ஆதரவாக, உலகில் உள்ள மற்றொரு சித்தாந்தமாகிய யூத சித்தாந்தத்தினைப் போற்றுகிறார்கள். யூத நம்பிக்கையிலும் பிறப்பால் வேறுபடுத்தும் சாதி முறை உள்ளது. அவர்கள் சாதியினை 'குடும்பங்கள்' எனும் பெயரில் அழைக்கிறார்கள். மேலும் ஒருவன் பிறப்பால் ஒருவன் யூதனாக யிருந்தால்தான் அவன் ஒரு யூதன். இது இங்குள்ள சாதிமுறையினை ஒத்த ஒரு அம்சம். எனவே யூதம் சாதி முறைக்கு ஆதரவு அளிப்பதால் அதனை போற்றும் உயர்சாதிக் காரர்களும் உண்டு. என்கிறார் இஸ்ரேலை எதிர்க்கும் மு. மாலிக் என்ற வலைபதிவாளர்.


இஸ்ரேலை ஏன் ஆதரிக்கவேண்டும்?

  1. அடாவடி இஸ்லாமியப் பக்கத்து நாடுகளான பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் தொழில் நுட்பம் கொண்டு அடக்காவிடில் இந்திய இறையாண்மைக்கு தீங்கு, அத்தகய தொழில் நுட்பம் இஸ்ரேலிடம் உள்ளது, அதன் காரணமாகத்தான் இஸ்ரேலை இந்திய நாட்டின் நலம் விரும்பிகள் ஆதரிக்கின்றனர். சங் பரிவாரங்கள் இஸ்ரேலை ஆதரிப்பதும் இதன் காரணமாகத்தான்.
  2. இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் என்றவுடன் பாலஸ்தீன மக்களை எதிர்க்கிறார்கள் இந்தியர்கள் என்பதெல்லாம் பொய், மத்தியகிழக்கில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திர்க்கும் இடையில் அமைதி நிலவினால் இந்தியாவுக்கு என்ன தீங்கா?
  3. இஸ்ரேல் ஆதரவாளர்கள் அனைவரும் மேல் ஜாதிக்காரர்கள்! ஜாதீயக் கோட்பாட்டை யூத மதம் கொண்டுள்ள காரணத்தால் அவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் என்பதெல்லாம், அதீத கற்பனை (vivid imagination)!! யூத மதத்தைப் பற்றி இந்தியாவில் எத்தனை பேருக்கு உருப்படியாகத் தெரியும்!!?
  4. சங் பரிவாரங்கள் இஸ்லாமியருக்கு எதிரானவர் அல்லர். அவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதத்தைத் தான் எதிர்கின்றனர். இஸ்லாத்தவர்களில் மிதவாதிகள் கூட இஸ்லாமியத் தீவிரவாதத்தை மரைமுகமாக ஆதரிப்பதால் தான் சங் பரிவாரங்கள் கொதிக்கின்றனர். அவர்கள் எதிர்க்கும் முறை வேறு.


இஸ்ரேலியர்கள் ஜாதீயக் கொள்கையய் கடைபிடிப்பவர்களா? ஆகயால் தான் சங் பரிவாரங்கள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனரா?


முற்றிலும் தவறு, சங் அமைப்புகளோ, யூதர்களோ, ஜாதீய கோட்பாட்டை கடைபிடிப்பவர்கள் அல்லர். மிசனரிக்களும், கம்மியூனிஸ்டுகளும், தேச விரேத இயக்கங்களும் செய்யும் பிரச்சாரம் அது. Zionism பற்றி அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள் சொல்லும் பிரச்சாரம், Anti-semitic organizations களான Ku-Klux-Klan மற்றும், Neo-Nazi கள் செய்யும் பிரச்சாரம், யூதர்கள் பிரப்பால் உயர்ந்தவரகள் என்ற விஷயம்.

இதில் வேடிக்கை என்ன வென்றால், சங் பரிவாரங்களை எதிர்ப்பவர்களுக்கும், Zionism த்தையும் எதிர்ப்பவர்களுக்கும், அடிப்படையில் பல ஒற்றுமைகள் இருப்பது தான். அதை மரைக்க சங் பரிவாரங்களுக்கும், Zionism த்திற்கும் ஒற்றுமை இருப்பதாகக் கூறி எந்த விவாதத்தையும் திசை திருப்பிவிடுகின்றனர். சங் பரிவாரங்களுக்கும், Zionism த்திற்கும் ஒற்றுமை இருப்பது பற்றி சங் பரிவாரங்களுக்கே தெரியாத பல விஷயங்களை இவர்கள் "கண்டுபிடித்து"ச் சொல்வார்கள்.

இந்திய முஸ்லீம்கள் இஸ்ரேலை எதிர்ப்பது ஏன்?


பல இந்திய முஸ்லீம்கள், முஸ்லீம் என்ற காரணத்தைத் தவிர வேறு எந்த ஒரு காரணமும் இல்லாமல், இஸ்ரேலை எதிர்கின்றனர். இஸ்லாத்தில் யூதர்கள் பல தவறு செய்ததாகக் கூறப்படுவதும், அதை மசூதியில் இருந்து பிரச்சாரம் செய்யும் முல்லாக்கள் சாதரண முஸ்லீம்களிடம் சொல்லி யூத-வறுப்பை வளர்பதினால் தான் இந்திய முஸ்லீம்கள் யூத நாடான இஸ்ரேலை எதிர்க்கின்றனர். இதில் சற்றே மிதவாதிகள், பாலஸ்தீன நாட்டை யூதர்கள் ஆக்கிரமித்துவிட்டனர், அவர்களை விரட்டிவிட்டனர் என்று உலக நியாயம் கூறி இஸ்ரேலை எதிர்கின்றனர். இஸ்ரேலை எதிர்க்க வேண்டும் என்பதர்க்காக ஒரு காரணம் தேவை, அவ்வளவே, தவிர உண்மையாக இந்திய நாட்டின் நலன் பார்த்தால், அவ்வாறு அவர்கள் கூறுவதில் நியாயம் இல்லை.

அவ்வாறு உலக நியாயம் பேசுபவர்கள், கஷ்மீரிலிருந்து பண்டிதர்களை தீவிரவாதிகள் விரட்டிவிட்டபொழுது ஏன் வாயய் மூடிக் கிடந்தனர்? Kashmir mein rehna hai, tho Allah hu akbar kehna hai" (கஷ்மீரில் இருக்கவேண்டும் என்றால், அல்லாஹ் ஹு அக்பர் என்று சொல்லவேண்டும்!) என்று மசூதியில் ஆஸான் மூலமாக எண்பதுகளில் பிரச்சாரம் செய்து தீவிரவாதிகள் Ethnic clensing செய்யவில்லையா? இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம், அவர்கள் கூறும் "உலக நியாயம்" என்றால் என்ன என்ற Definition ல் வந்து இடிக்கும்!!

கடைசியாக நான் முதலில் கேட்ட கேள்விக்கு வருகிறேன்...

இதில் இந்தியாவுக்கு எது நல்லது? இஸ்ரேலை ஆதரிப்பதா? எதிர்ப்பதா?


என்னைப் பொருத்தவரை ஆதரிப்பதில் தான் இந்தியாவின் நலம் உள்ளது.

ஷங்கர்.

35 comments:

ஜயராமன் said...

மிகுந்த கருத்தாழம் மிக்க இடுக்கை. மிக நன்று. வழங்கியதற்கு நன்றி.

இஸ்ரேலிடமிருந்து நாம் இந்தியர்களாக கற்க வேண்டியது பலப்பல.

1. இஸ்ரேலியர்களின் ஆழ்ந்த உழைப்பு. ஒன்றுமில்லாத பாலைவனத்தை அவர்கள் கடும் முயற்சியால், அண்டை அரபு நாடுகளின் விரோத்த்தையும் மீறி இன்று மத்தியகிழக்கு நாடுகளில் மிகுந்த பொருளாதார வளமுள்ள நாடாக்கிவிட்டார்கள்.

2. இஸ்ரேலியர்களின் தேசப்பற்று. இஸ்ரேலில் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயமாக ஒரு வருடம் மிலிட்டரியில் வேலை செய்தாக வேண்டும். எல்லா இளைஞர்களுக்கும் தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இஸ்ரேலியர்கள் போர் முனைக்கு எப்போதும் தயாரான தேசப்பற்று மிக்கவர்கள்.

3. இஸ்ரேலியர்களின் படிப்பு. யூதர்கள் மிகுந்த படிப்பாளிகள். உலக மக்கள்தொகையில் 50க்கும் மேல் நோபல் பரிசு யூதர்களுக்கு இதுவரை. இது விகிதாசாரத்தில் பார்க்கும் போது மிக மிக அதிகம். (இந்தியாவுக்கு ஒன்றோ இரண்டோ இதுவரை). அவ்வாறே யூதர்களில் டாக்டர்கள், வணிகர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று எல்லோருமே மிகுந்த படிப்பாளிகள்.

இந்த நல்ல விஷயங்களை நாம் கற்போம். முஸ்லிம்களின் கண்மூடித்தனமான இஸ்ரேல் விரோதத்தால் பாதிக்கப்படுவது அரபு முஸ்லிம்கள்தான்.

நன்றி

வஜ்ரா said...

நன்றி திரு. ஜெயராமன் அவர்களே,

//
இஸ்ரேலியர்களின் தேசப்பற்று. இஸ்ரேலில் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயமாக ஒரு வருடம் மிலிட்டரியில் வேலை செய்தாக வேண்டும். எல்லா இளைஞர்களுக்கும் தீவிரவாத எதிர்ப்பு பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இஸ்ரேலியர்கள் போர் முனைக்கு எப்போதும் தயாரான தேசப்பற்று மிக்கவர்கள்.
//

18 வயது நிரம்பிய ஆண் 3 ஆண்டுகளும், பெண் 1 ஆண்டும் கட்டாய Millitary service செய்யவேண்டும். பிறகு வாழ்கை முழுவதும் வருடத்திற்கு 3 மாதங்கள் Millitary service வந்து கொண்டிருக்கும் (அதை ஹீப்ரூவில் மிலுயீம் "Milueem" என்பார்கள்). தொடர்ச்சியாக இல்லாமல் இங்கொரு வாரம், அங்கொரு வாரம் என பிரித்து நம் வசதிக்கேற்ப செய்து கொள்ளலாம்.

//
இந்த நல்ல விஷயங்களை நாம் கற்போம். முஸ்லிம்களின் கண்மூடித்தனமான இஸ்ரேல் விரோதத்தால் பாதிக்கப்படுவது அரபு முஸ்லிம்கள்தான்.
//

இஸ்ரேலியர்களின் பாலைவனத்தை சொலை வனமாக்கும் தொழில்னுட்பத்தை இப்பொழுது ஜொர்டான், எகிப்து, போன்ற எதிரி நாடுகள் கூட வங்கிப் பயன் பெருகின்றன. கண்மூடித்தனமான இஸ்ரேல் விரோதம், அரபு முஸ்லீம்களிடம் இருப்பது புரிந்துகொள்ளமுடிகிறது (அவர்களுக்குத்தான் இதனால் பாதிப்பு என்றாலும்) ஆனால் இந்திய முஸ்லீம்களின் இஸ்ரேல் எதிர்ப்புதான் வியப்பே! அவர்கள் முஸ்லீம் என்ற காரணத்தை தவிர வேறு எந்த வலுவான காரணத்தையும் காண முடியவில்லை.


வருகைக்கு நன்றி, திரு. ஜெயராமன் அவர்களே.

ஷங்கர்.

Muse (# 01429798200730556938) said...

பதில்களுக்கு நன்றி. கன்வின்ஸ் செய்யும் வகையில் எழுதியுள்ளீர்கள்.

இதற்கு நண்பர் மாலிக்கின் பதில்களையும் எதிர்பார்க்கிறேன். அவரிடமும் நியாயங்கள் இருக்கும்.

Muse (# 01429798200730556938) said...

>>>>>யூதர்கள் மிகுந்த படிப்பாளிகள். உலக மக்கள்தொகையில் 50க்கும் மேல் நோபல் பரிசு யூதர்களுக்கு இதுவரை.<<<<

அடக் கடவுளே, என்ன ஒரு கஷ்டம். இங்கே இந்தியாவில் (தற்கால) கம்யூனிஸக் கொள்கைகளுக்கு ஜால்ரா போடுவதும், மற்றும் இந்தியாவிற்கு எதிராக எழுதுவதுமே ஒருவர் படிப்பாளியாகப் போதுமானது.

வஜ்ரா said...

//
அடக் கடவுளே, என்ன ஒரு கஷ்டம். இங்கே இந்தியாவில் (தற்கால) கம்யூனிஸக் கொள்கைகளுக்கு ஜால்ரா போடுவதும், மற்றும் இந்தியாவிற்கு எதிராக எழுதுவதுமே ஒருவர் படிப்பாளியாகப் போதுமானது
//

எல்லா அந்த JNU ஜோல்னா பை கேசுங்களால வர்ர வென!! என்ன பண்றது...!!?

கால்கரி சிவா said...

Shankar,

I am pasting one of the forwarded mai to me. It may be opt here


Why are Jews so powerful?
http://www.jang.com.pk/thenews/apr2006-daily/02-04-2006/oped/o3.htm


There are only 14 million Jews in the world; seven million in the Americas, five million in Asia, two million in Europe and 100,000 in Africa. For every single Jew in the world there are 100 Muslims. Yet, Jews are more than a hundred times more powerful than all the Muslims put together. Ever wondered why?

Jesus of Nazareth was Jewish. Albert Einstein, the most influential scientist of all time and TIME magazine's 'Person of the Century', was a Jew. Sigmund Freud -- id, ego, superego -- the father of psychoanalysis was a Jew. So were Karl Marx, Paul Samuelson and Milton Friedman.
Here are a few other Jews whose intellectual output has enriched the whole humanity: Benjamin Rubin gave humanity the vaccinating needle. Jonas Salk developed the first polio vaccine. Alert Sabin developed the improved live polio vaccine. Gertrude Elion gave us a leukaemia fighting drug. Baruch Blumberg developed the vaccination for Hepatitis B. Paul Ehrlich discovered a treatment for syphilis (a sexually transmitted disease). Elie Metchnikoff won a Nobel Prize in infectious diseases.

Bernard Katz won a Nobel Prize in neuromuscular transmission. Andrew Schally won a Nobel in endocrinology (disorders of the endocrine system; diabetes, hyperthyroidism). Aaron Beck founded Cognitive Therapy (psychotherapy to treat mental disorders, depression and phobias). Gregory Pincus developed the first oral contraceptive pill. George Wald won a Nobel for furthering our understanding of the human eye. Stanley Cohen won a Nobel in embryology (study of embryos and their development). Willem Kolff came up with the kidney dialysis machine.

Over the past 105 years, 14 million Jews have won 15-dozen Nobel Prizes while only three Nobel Prizes have been won by 1.4 billion Muslims (other than Peace Prizes).

Why are Jews so powerful? Stanley Mezor invented the first micro-processing chip. Leo Szilard developed the first nuclear chain reactor. Peter Schultz, optical fibre cable; Charles Adler, traffic lights; Benno Strauss, Stainless steel; Isador Kisee, sound movies; Emile Berliner, telephone microphone and Charles Ginsburg, videotape recorder.
Famous financiers in the business world who belong to Jewish faith include Ralph Lauren (Polo), Levis Strauss (Levi's Jeans), Howard Schultz (Starbuck's), Sergey Brin (Google), Michael Dell (Dell Computers), Larry Ellison (Oracle), Donna Karan (DKNY), Irv Robbins (Baskins & Robbins) and Bill Rosenberg (Dunkin Donuts).

Richard Levin, President of Yale University, is a Jew. So are Henry Kissinger (American secretary of state), Alan Greenspan (fed chairman under Reagan, Bush, Clinton and Bush), Joseph Lieberman, Madeleine Albright (American secretary of state), Casper Weinberger (American secretary of defence), Maxim Litvinov (USSR foreign Minister), David Marshal (Singapore's first chief minister), Issac Isaacs (governor-general of Australia), Benjamin Disraeli (British statesman and author), Yevgeny Primakov (Russian PM), Barry Goldwater, Jorge Sampaio (president of Portugal), John Deutsch (CIA director), Herb Gray (Canadian deputy PM), Pierre Mendes (French PM), Michael Howard (British home secretary), Bruno Kreisky (chancellor of Austria) and Robert Rubin (American secretary of treasury).

In the media, famous Jews include Wolf Blitzer (CNN), Barbara Walters (ABC News), Eugene Meyer (Washington Post), Henry Grunwald (editor-in-chief Time), Katherine Graham (publisher of The Washington Post), Joseph Lelyyeld (Executive editor, The New York Times), and Max Frankel (New York Times).

Can you name the most beneficent philanthropist in the history of the world? The name is George Soros, a Jew, who has so far donated a colossal $4 billion most of which has gone as aid to scientists and universities around the world. Second to George Soros is Walter Annenberg, another Jew, who has built a hundred libraries by donating an estimated $2 billion.

At the Olympics, Mark Spitz set a record of sorts by wining seven gold medals. Lenny Krayzelburg is a three-time Olympic gold medalist. Spitz, Krayzelburg and Boris Becker are all Jewish.

Did you know that Harrison Ford, George Burns, Tony Curtis, Charles Bronson, Sandra Bullock, Billy Crystal, Woody Allen, Paul Newman, Peter Sellers, Dustin Hoffman, Michael Douglas, Ben Kingsley, Kirk Douglas, Goldie Hawn, Cary Grant, William Shatner, Jerry Lewis and Peter Falk are all Jewish? As a matter of fact, Hollywood itself was founded by a Jew. Among directors and producers, Steven Spielberg, Mel Brooks, Oliver Stone, Aaron Spelling (Beverly Hills 90210), Neil Simon (The Odd Couple), Andrew Vaina (Rambo 1/2/3), Michael Man (Starsky and Hutch), Milos Forman (One flew over the Cuckoo's Nest), Douglas Fairbanks (The thief of Baghdad) and Ivan Reitman (Ghostbusters) are all Jewish.

To be certain, Washington is the capital that matters and in Washington the lobby that matters is The American Israel Public Affairs Committee, or AIPAC. Washington knows that if PM Ehud Olmert were to discover that the earth is flat, AIPAC will make the 109th Congress pass a resolution congratulating Olmert on his discovery.

William James Sidis, with an IQ of 250-300, is the brightest human who ever existed. Guess what faith did he belong to?
So, why are Jews so powerful? Answer: Education.

The writer is an Islamabad-based freelance columnist
Email: farrukh15@hotmail.com

வஜ்ரா said...

//
To be certain, Washington is the capital that matters and in Washington the lobby that matters is The American Israel Public Affairs Committee, or AIPAC. Washington knows that if PM Ehud Olmert were to discover that the earth is flat, AIPAC will make the 109th Congress pass a resolution congratulating Olmert on his discovery.
//

இதைத்தான், மு. மாலிக் என்பவர், தனது இஸ்ரேலிய லாபி என்ற பதிவில் வாதிட்டிருந்தார். அதையே மிகவும் மிகைப்படுத்தப்பட்ட வரிகளில் பரூக் கூறியுள்ளார். இதில் எவ்வளவு உண்மை என்பது ஆராய்ந்தால் தான் தெரியும். AIPAC is a powerful lobby என்பதில் சந்தேகமில்லை.

அமேரிக்க வெளியுறவுக் கொள்கை AIPAC யினால் தான் இஸ்ரேல் பக்கம் சாய்ந்திருகிறது என்பதில் முழுமையான உண்மை இல்லை. AIPAC போலவே, அரபு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் லாபிக்கள் உள்ளன. அரபு நாடுகள் தங்களுக்கு சாதகமாக பல காரியங்களை இந்த லாபிக்கள் மூலம் செய்து கொண்டு தான் இருக்கின்றன. பாகிஸ்தானிய லாபி, சமீபத்தில் கையெழுதிடப்பட்ட இந்திய அமேரிக்க அனு சக்தி ஒப்பந்தத்திற்கு எந்த முறையில் தடை போட்டிருக்கும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா? அதையும் தாண்டி ஒப்பந்தம் நிரைவேறியுள்ளது. இனி காங்கிரஸின் கையில்தான் இருக்கிறது. லாபிக்களைக் குறை கூறிப் பிரயோசனமில்லை. லாபிக்களின் வேலையே அது தான். அமேரிக்க வெளியுறவுக் கொள்கை, அமேரிக்கா வின் நலன் பொருத்து மாறும். இந்திய அமேரிக்க அனு சக்தி ஒப்பந்தம் ஒரு நல்ல உதாரணம். பாகிஸ்தானிற்கு உதவிக் கொண்டிருந்த அமேரிக்கா இந்தியா பக்கம் சாய்ந்து வருகிறது. எதற்காக? இப்பொழுது இந்தியாவுக்கு உதவுவதில் தான் அமேரிக்க நலன் இருக்கிறது. அவர்கள் தேவை தீர்ந்து விட்டால் தூக்கி எரியத் தயங்க மாட்டர்கள், obviously எந்த நாடும் ஒரு நாட்டுடன் தேவை இல்லாமல் உறவு வைத்திறுக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை.

ஷங்கர்.

மு மாலிக் said...

உங்கள் பதிவு முற்றிலும் வேறுபட்டது. என்னுடைய பதிவு என்பது பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை மற்றும் அரசியலைப் பற்றியது. பாலஸ்தீனர்கள் விஷயத்தில் இஸ்ரேலின் நியாய/அனியாயத்தையும், அதற்கு இஸ்ரேல் ஆதரவு பெற செய்யும் முயற்சிகளையும் பற்றியது.

உங்களுடைய பதிவு, இஸ்ரேல் எனும் நாடு, மக்கள், அவர்களுடைய நம்பிக்கை, இந்தியாவிற்கான 'பலன்'. முதலியவைகளைப் பற்றியது. மன்னிக்கவும், ...முதலியவற்றைப் பற்றிய உங்களுடைய கருத்தினைப் பற்றியது.

இரண்டும் வெவ்வேறு கருத்துகளைப் பற்றியதால், ஆனந்த கணேஷ், இதில் நான் கருத்துக் கூற என்ன உள்ளது ? எனது பதிவு யூதர்களைத் தாக்கும் 'ஆன்டி செமிடிக்' பதிவல்ல. பாலஸ்தீன-இஸ்ரேல் பற்றிய ஒரு அரசியல் பதிவு. இவருடைய (ஷங்கருடைய) பதிவோ, நாடு, கலை, கலாச்சாரம், போன்ற வகையில் வருவது.

இருப்பினும் ஒரு சில கருத்துக்கள் என்னிடம் உள்ளன.

ஜாதிய கருத்துக்கள் பற்றி ஷங்கர் தெரிந்ததைக் கூறியுள்ளார், நான் படித்ததைக் கூறினேன். திருமணங்களின் போது அது பின் பற்றப் படுவதாக படித்ததாக நினைவு. (நடைமுறையில் இல்லாவிட்டால் கொள்கை அடிப்படையில் மட்டுமாவது.)

இந்தியாவின் மிசோர மாவட்டத்திலிருந்து ஒரு சில மக்கள் தாங்கள் யூதர்கள் என கண்டறிந்துள்ளதாக் கூறியதும், அவர்களை பாலஸ்தீனப் பகுதிகளில் குடியமர்த்துவதற்குப் பயன்படுத்த ஒரு ராபி வந்து அவர்களை 'யூதர்களா ?' என ஆராய்வது போல ஆராய்ந்து,'யூதர்கள்தாம்' எனும் முடிவிற்கு வந்து அவர்களை ஒரு யூத ஜாதியில் (பீஷ்னாய் என நினைக்கிறேன்) சேர்த்து அவர்களைக் கொண்டு சென்று காசா பகுதியில் யூதக் குடியிருப்புகளில் போட்டனர். காசாவைக் காலி செய்யும் போது, அவர்களை மீண்டும் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டனர். (கொடுமைதான்).

யூதர்களின் புத்திசாலித்தனம் பற்றி கூறியுள்ளீர்கள். அதனை யூதத் தோற்றம் என்பதைவிட ஒரு ஐரோப்பியத்தோற்றம் என்றே கொள்ளலாம். ஐரோப்பாவில் அனைவரும் முன்னேறிக் கொண்டிருந்த காலமது. அந்த ஐரோப்பிய யூதர்கள் தான் அமெரிக்காவிலும் குடியேறியவர்கள். 'வகாபிசம்' போன்ற அடிப்படை வாதங்களினாலும், காலனியாதிக்கங்களினாலும் ஆசியாவில் விஞ்ஞான வளர்ச்சிப் பின் தங்கியிருந்தது.

ஒருவர் நோபல் பரிசுகளைப் பற்றிக் கூறியுள்ளார். நோபல் பரிசுக்கு நாமினேஷன் முறையில் 'தகுந்த' ஆட்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அது பெரும்பாலான சமயங்களில் பாரபட்சமாக இருப்பதாக புகார்கள் உள்ளன. சென்ற வருடம் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஈசிஜி சுதர்ஷன் அவர்களுடைய கண்டுபிடிப்பிற்காக மற்றவருக்கு வழங்கப் பட்டதை நினைவுக் கூறலாம். இதற்கு முன்பு நோபல் பரிசு பெற்றவர்கள் ஒவ்வொரு வருடத்திற்கும் யாரையாவது பரிந்துரைக்க அனுமதி யுண்டு. ஆனால் என்ன பிரச்சனை யென்றால், எந்த ஒரு குழு 'தன்னை பிறப்பால் உயர்ந்தவன்' எனும் நம்பிக்கையில் வாழுமோ அந்த குழு, தன் குழு உறுப்பினர்களையே பரிந்துரைக்க வாய்ப்பு உண்டு. இத்தகைய சார்புப் பரிந்துரைப்பினால் அந்த குழுவிற்கான அனுகூலம் ஒரு புறம் இருப்பினும், இது இத்தகைய நம்பிக்கையினால் தூண்டப் படும் ஒரு அம்சம் ஆகும். இந்த நாமினேஷன் முறை அகற்றப் பட வேண்டும். பல காரணங்களுக்காக சார்பு நிலை நிகழ்வதாக புகார்கள் உள்ளன. அமெரிக்கர்கள் எனும் சார்பு நிலை நிகழ்வதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. மேலும் ஒருவர் 'ராயல் இன்ஸ்டிட்யூட்', ஸ்வீடனை என்றாவது விசிட் செய்தவர்களுக்கும் பரிச்சயமானவர் எனும் காரணத்திற்காக நோபல் பரிசுக் கொடுக்கப் படுவதாகவும் புகார்கள் உள்ளன. நான் யூதர்கள் அரேபியர்களைவிட அறிவில் சிறந்தவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது யூதர்கள் என்பதற்காக என்பதைவிட அவர்கள் ஐரோப்பியர்கள் என்பதே காரணம். பிற்காலத்தில் ஆசியாவில் நிலவிய அரசியல் மற்றும் வாழ்க்கை நிலையே அராபியர்கள் (அல்லது ஆசியர்கள்) பின்_தங்கக் காரணம்.

வஜ்ரா said...

போலியன் இட்ட பின்னூட்டத்தை சிறிது மட்டுருத்தம் செய்து வெளியிடுகிறேன்...

//
ஓ# நான் ஒ@#$%^. .....

முகமூடி என்பது யார், அவனுக்கும் பிகேசிவக்குமாருக்கும் என்ன தொடர்பு என்பதை முதலில் எழுதியது எங்கள் தலைவர்தான்.

முகமூடி என்று யாரோ ஒருவனை நீங்கள் காட்டி அறிமுகப் படுத்தி பேசிக் கொண்டால் அது உண்மையாகுமாடா ஓ@ ஒ@#$%&*

இணையத்தில் பாப்பார ஜாதியையா வளர்க்குறீங்க? க@#$%^ #$ தே#@$% மகனுங்களா?

(போலிடோண்டு ரசிகர் மன்றம்
அமெரிக்க கிளை)

//

இது தான் முதலும் கடைசி முறையாக போலியனின் பின்னூட்டத்தை வெளியிடுகிறேன், போலியன் இதைப் பார்தால், கெட்ட வார்தைகள் பயன் படுத்தாமல் எழுதினால், எந்த பின்னூட்டமாயினும் வெளியிடுவேன்.

ஷங்கர்.

வஜ்ரா said...

//
உங்களுடைய பதிவு, இஸ்ரேல் எனும் நாடு, மக்கள், அவர்களுடைய நம்பிக்கை, இந்தியாவிற்கான 'பலன்'. முதலியவைகளைப் பற்றியது. மன்னிக்கவும், ...முதலியவற்றைப் பற்றிய உங்களுடைய கருத்தினைப் பற்றியது.
//

வருகைக்கு நன்றி மு. மாலிக் அவர்களே,

உண்மை தான், வலைப் பதிவில், நான் என் கருதைத் தான் எழுத முடியும். என் கருத்தில் ஞாயம் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்வது படிப்பவர்கள் யோசிக்க வேண்டியது.

//
ஜாதிய கருத்துக்கள் பற்றி ஷங்கர் தெரிந்ததைக் கூறியுள்ளார், நான் படித்ததைக் கூறினேன். திருமணங்களின் போது அது பின் பற்றப் படுவதாக படித்ததாக நினைவு. (நடைமுறையில் இல்லாவிட்டால் கொள்கை அடிப்படையில் மட்டுமாவது.)
//

நான் அவர்களுடன் பேசிப் பழகி, வாழ்ந்து பார்த்து தெரிந்து கொண்டது பற்றி கூறியுள்ளேன்.

//

யூதர்களின் புத்திசாலித்தனம் பற்றி கூறியுள்ளீர்கள். அதனை யூதத் தோற்றம் என்பதைவிட ஒரு ஐரோப்பியத்தோற்றம் என்றே கொள்ளலாம். ஐரோப்பாவில் அனைவரும் முன்னேறிக் கொண்டிருந்த காலமது. அந்த ஐரோப்பிய யூதர்கள் தான் அமெரிக்காவிலும் குடியேறியவர்கள். 'வகாபிசம்' போன்ற அடிப்படை வாதங்களினாலும், காலனியாதிக்கங்களினாலும் ஆசியாவில் விஞ்ஞான வளர்ச்சிப் பின் தங்கியிருந்தது.
//

இந்த கருத்தை நான் முன்னமே உங்கள் பதிவில் அமேதித்திருக்கிறேன். இந்தியாவில் கூட பம்பாயைச் சுற்றி பல யூதர்கள் வாழ்ந்து வந்துள்ளானர். அவர்கள் எல்லாம் நோபல் பரிசு பெறவில்லையே.

அந்த கருத்தை கூறியவர், பரூக் என்ற பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர். அதை Forwarded message ஆகப் பெற்ற சிவா இங்கு அதைப் பின்னூட்டமாக இட்டிருக்கிறார்.

ஷங்கர்.

Muse (# 01429798200730556938) said...

>>>>உண்மை தான், வலைப் பதிவில், நான் என் கருதைத் தான் எழுத முடியும். என் கருத்தில் ஞாயம் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்வது படிப்பவர்கள் யோசிக்க வேண்டியது.<<<<

சங்கர் அவர்களே.

இந்தியாவின் லாபம் பற்றி விளக்கியிருந்தீர்கள். ப்ராக்டிக்கலாக நீங்கள் சொல்லுவதுதான் சரி. இரண்டு வலிமையான சிங்கங்கள் சண்டை போடுகின்றன. இந்தச் சண்டையே ஸர்வைவலுக்காகத்தான். இதில் இந்தியா மட்டும் தன்னுடைய ஸர்வைவலை "தியாகம்" செய்துவிட்டு ஏதேனும் ஒரு குழுவில் இணைந்தால் "அல்வா" கூட கிடைக்காது. சங்குதான்.

அதெல்லாம் சரி தலைவரே. இந்தியாவின் லாபத்தை விடுங்கள். அந்த இரண்டு நாட்டவரும் எதற்கு இப்படி அடித்துக் கொள்கிறார்கள்? நிலத்துக்காக. யாருடைய நிலம் அது? யார் பிடுங்கிக் கொண்டார்கள்? அல்லது யார் பிடுங்க விரும்புகிறார்கள்? மாலிக் இது பற்றி தன்னுடைய கருத்தைக் கூறி விட்டர்.

ஒரு நேரடி பார்வையாளர் என்ற முறையில் நீங்கள் இதை மிக அழகாக விளக்க முடியுமே. எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது.

வஜ்ரா said...

//
அந்த இரண்டு நாட்டவரும் எதற்கு இப்படி அடித்துக் கொள்கிறார்கள்? நிலத்துக்காக. யாருடைய நிலம் அது? யார் பிடுங்கிக் கொண்டார்கள்? அல்லது யார் பிடுங்க விரும்புகிறார்கள்? மாலிக் இது பற்றி தன்னுடைய கருத்தைக் கூறி விட்டர்.

ஒரு நேரடி பார்வையாளர் என்ற முறையில் நீங்கள் இதை மிக அழகாக விளக்க முடியுமே. எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது.
//

யாருடைய நிலம் அது? அது தான் பெரிய கேள்வி? 10 மார்க் 15 மார்க் கேள்வி இல்லை, 100 மார்க் கேள்வியே அது தான்! பதில் சென்னீங்கன்னா ஒன்று 100 க்கு 100 இல்லாட்டி 100 க்கு 0.

இஸ்ரேல் பக்கம் இருக்கும் ஞாயத்தை என்னால் சொல்ல முடியும், பாலஸ்தீன ஞாயம் பற்றி மாலிக் அவர்கள் விளக்கி விட்டார்கள். இருந்தும் சரித்திரக் கண்ணேட்டம் வேண்டும். அதன் படி அவர்கள் வாதம் எடுபட மாட்டேன் என்கிறது, அது தான் நான் சிந்திக்கும் நிலை.

இஸ்ரேலின் நிலை என்று ஒரு பதிவாகத் தான் எழுத வேண்டும். அதை இன்று மாலைக்குள் (இந்தியவில் இரவு) இடுகிறேன்.

ஷங்கர்.

மா சிவகுமார் said...

நான் சீனாவில் இருந்தபோது சீனாவின் இந்தியத் தூதர் திரு நம்பியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் " இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள், தர்மக் கோட்பாடுகளை (principles) அடிப்படையாகக் கொண்டது. சீனாவோ தன் தேச நலத்தைப் பொறுத்து வெளியுறவு கொள்கைகளை மாற்றிக் கொள்ளும்" என்று குறிப்பிட்டார்.

சமீப காலம் வரை, பாரதீய ஜனதா கட்சி ஆட்சி வருவதற்கு முன் வரையில் இதுதான் உண்மையாக இருந்தது. தேசிய ஜனநாயக முன்னணி அரசின் கீழ் இந்தியாவும், தன் நலம் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டது. நசுக்கப்படும் மக்களின் குரலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கொள்கைகயின் அடிப்படையிலானது, இந்திய - பாலஸ்தீன நட்பு. இந்தியாவும் அது மாதிரி ஆக்கிரமிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்ட வரலாற்றின் நினைவில் எடுக்கப்பட்ட நிலை அது.

இப்போது நமக்கும் டாலர்களும், பொருளாதார பலன்களும்தான் முக்கியமாகிப் போய் விட்டன. நீண்ட கால நோக்கில் இந்தியாவை உலகின் தார்மீக மன சாட்சியாக வலுப்பெற வைக்கும் கொள்கைகளுக்கு டாட்டா காட்டுவதும், அதற்க்கு படித்தவர் மத்தியில் ஆதரவு பெருகுவதும் கவலைக்குரிய போக்குகள்.

நாம் மேற்கத்திய நாடுகளை அடியொற்றி, அவர்கள் விதி வகுத்த விளையாட்டில், நாமும் முதலிடம் பெற்று விட வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே அப்படி ஓடிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

நம்முடைய வலிமை, நம்முடைய வளம், பல்லாயிரம் ஆண்டுகளாக பேணி வரும் தார்மீக சக்தி. அணு குண்டு வெடித்ததால் நாம் பலவீனமாகிப் போனோமே ஒழிய, அதைப் பயன்படுத்தி அமெரிக்கர்களையோ, சீனர்களையோ விட நாம் வலிமை பெற்று விட முடியாது.

இசுரேல் நமது நண்பனாகி விட்டால் என்ன சாதித்து விடப் போகிறோம். யூதர்களின் முன்னேற்றம் அவர்களது திறமையால் விளைந்தது. அதை மற்றவரை துன்புறுத்த அவர்கள் பயன்படுத்துவது அவர்களுக்கு அவமானம். அதற்கு ஆதரவு தெரிவிப்பது இந்தியா போன்ற நாட்டுக்கு அவமானம். அமெரிக்கா ஒன்றைச் செய்வதாலேயே அது சரியாகி விடாது.

வஜ்ரா said...

வாருங்கள் சிவகுமார்,

//
சமீப காலம் வரை, பாரதீய ஜனதா கட்சி ஆட்சி வருவதற்கு முன் வரையில் இதுதான் உண்மையாக இருந்தது. தேசிய ஜனநாயக முன்னணி அரசின் கீழ் இந்தியாவும், தன் நலம் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டது.
//

இந்தியாவின் இஸ்ரேலிய அதரவு வெளியுறவுக் கொள்கை, நரசிம்ம ராவ் காலத்திலேயே அரம்பித்துவிட்டது. ப. ஜ. க அதை மேலும் கொண்டு சென்றது.

//
நம்முடைய வலிமை, நம்முடைய வளம், பல்லாயிரம் ஆண்டுகளாக பேணி வரும் தார்மீக சக்தி. அணு குண்டு வெடித்ததால் நாம் பலவீனமாகிப் போனோமே ஒழிய, அதைப் பயன்படுத்தி அமெரிக்கர்களையோ, சீனர்களையோ விட நாம் வலிமை பெற்று விட முடியாது.
//

இந்தியா ஒரு அனு அயுத வல்லமை படைத்த நாடு என்ற வலிமை பெற்றோமே தவிர, அனு குண்டு சோதனையால், இந்தியா பலவீனம் அடைந்துவிட்டது என்ற "மாயை" நமது கம்மியூனிஸ்டுகள் சீனா விடம் காட்டும் விஸுவாசதிற்க்கான விஷப் பிரச்சாரம். சிதருண்ட சோவியத்திடமிருந்து பணம் வாங்கி தேசத்தை விற்றவர்கள் செய்யும் பிரச்சார வலையில் நீங்கள் விழுந்துவிட்டீர்களே.

//
இசுரேல் நமது நண்பனாகி விட்டால் என்ன சாதித்து விடப் போகிறோம். யூதர்களின் முன்னேற்றம் அவர்களது திறமையால் விளைந்தது.
//

கண்மூடித்தனமான இஸ்ரேலிய எதிர்ப்பாலும் நாம் சாதித்ததை விட கண் திரந்து பார்த்து இஸ்ரேல் என்ற நாட்டை ஆதரிப்பதால் நாம் சிறப்பாகவே சாதிக்கலாம்.

//
நான் சீனாவில் இருந்தபோது சீனாவின் இந்தியத் தூதர் திரு நம்பியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் " இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள், தர்மக் கோட்பாடுகளை (principles) அடிப்படையாகக் கொண்டது. சீனாவோ தன் தேச நலத்தைப் பொறுத்து வெளியுறவு கொள்கைகளை மாற்றிக் கொள்ளும்" என்று குறிப்பிட்டார்.
//

இந்தியாவின் நலனை தியாகம் செய்யச்சொல்லும் வெளியுறவுக் கொள்கை தர்மக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுகிறீர்களா? அத்தகய தர்மக் கோட்பாடுகளை அதர்மக் கோட்பாடுகள் என்றே அழைக்கலாம். சீனா மற்றிக் கொண்டால் தவறில்லை, இந்தியா மற்றிக் கொண்டால் தவறா? நீங்கள் இந்தியரா, சீனரா?

//
இப்போது நமக்கும் டாலர்களும், பொருளாதார பலன்களும்தான் முக்கியமாகிப் போய் விட்டன. நீண்ட கால நோக்கில் இந்தியாவை உலகின் தார்மீக மன சாட்சியாக வலுப்பெற வைக்கும் கொள்கைகளுக்கு டாட்டா காட்டுவதும், அதற்க்கு படித்தவர் மத்தியில் ஆதரவு பெருகுவதும் கவலைக்குரிய போக்குகள்.
//

இத்தகய சித்தாந்தம் எல்லாம், ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடு கூட கிடைக்காமல் கஷ்டப்படும், தண்ணி யில்லா காட்டில் விவசாயம் செய்யும் விவசாயி யிடம் போய் நீங்கள் சொல்ல வேண்டும். படித்து விட்டால் Ivory tower ல் இருந்து உலக நியாயம் பேச வேண்டும் என்று யார் உங்களுக்கு கற்றுக் கொடுத்தது? இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் எப்படிப் பட்ட வெளியுறவுக் கொள்கையயும் மற்றியே ஆகவேண்டும்.

ஷங்கர்.

கால்கரி சிவா said...

சிவகுமார்,

எது தார்மீகம். காந்தியமா? நம் தார்மீக சக்தியை மதியாமல் நம்மால் உருவான பங்காளாதேஷ் கூட நம்மை எதிரியாக செயல்படுவது என்ன நியாயம்?

நம் நாட்டில் உள்ள நல்ல முஸ்லிம்களையும் மதம் என்ற வெறியூட்டி காஷ்மீரை துண்டாட நினைக்கும் பாகிஸ்தானை அடக்கவும், வடமேற்கு மாநிலங்களை குறிவைக்கும் சீனாவை எச்சரிக்கவும் தான் அணுகுண்டு சோதனை.

இதில் என்ன தவறு?

வஜ்ரா said...

//
போலியன் has left a new comment on your post சங் பரிவாரங்களும் இஸ்ரேலும்:

//பல இந்திய முஸ்லீம்கள், முஸ்லீம் என்ற காரணத்தைத் தவிர வேறு எந்த ஒரு காரணமும் இல்லாமல், இஸ்ரேலை எதிர்கின்றனர்//

ஓ@#%% ^% &**^ ()&*^%#@. க$%%$# &* மகனே. ஓ^%$ #$$ ^%$#^ ...... *&*&^%$ மகனே,

பாப்பான் ஏன் இஸ்ரேலுக்கு ஆதர்வு அளிக்கிறான்? பாலஸ்தீனம் இஸ்லாமிய நாடு என்பதால்தானே?

//

இது, டூப்ளிகேட்டின் அச்சில் ஏற்ற முடியாத பின்னூட்டன்க்களில் ஒன்று, அதை சற்றே Edit செய்து இங்கு இடுகிறேன்.

ஷங்கர்.

வஜ்ரா said...

வாங்க சிவா,

அது வட மேற்கு அல்ல, வட கிழக்கு. வட கிழக்கில் தான் சீன உள்ளது.

ஷங்கர்.

கால்கரி சிவா said...

ஷங்கர், வடகிழக்கு சரி. நான் கால்கரியில் வடமேற்கில் இருக்கிறேன். அந்த பழக்கத்தால் தப்பாக அடித்துவிட்டேன். சாரி.

சார், நம்ம ஊர்ப்பக்கம் வந்து உங்க ஆராய்ச்சியை தொடருங்கசார்.

அப்பறம் கங்கிராஜூலேஷன்ஸ், போலியார் உங்களை ஐயங்கார் என்ற ஜாதிக்கு பிரமோஷன் கொடுதுட்டாரு.

வஜ்ரா said...

இஸ்ரேலின் மொத்த ஜனத் தொகையில் 15% முஸ்லீம்களும் (பாலஸ்தீனத்தை எடுத்துக் கொள்ளாமல்) 2-3 சதவிகிதம் கிருத்துவர்களும், 1 % துரூஸ் என்ற மதத்தினரும் இருக்கின்றனர். யூதர்கள் கிட்டத் தட்ட 80% தான் என்பது இங்கு டூப்ளிகேட் உட்பட எத்தனை பேருக்குத் தெரியும்?

சும்மா, பாலஸ்தீனம் இஸ்லாமிய நாடு, இஸ்ரேல் யூதர்கள் நாடு அதனால் தான் நான் இஸ்ரேலை ஆதரிக்கிறேன், பாலஸ்தீனத்தை எதிர்கிறேன் என்ற கருத்தை எல்லாம் தெரியாமல் பரப்பக் கூடாது.

ஷங்கர்.

கால்கரி சிவா said...

ஷங்கர், சற்றுமுன் Gulfnews படித்தேன். அதில் GCC நாடுகளில் ஒன்றான கட்டார் இஸ்ரேலியரையும் கிறித்தவர்களையும் வரவேற்கிறது. அது நல்ல செய்தியல்லவா பார்க்க http://www.gulfnews.com/region/Qatar/10036080.html.

dondu(#11168674346665545885) said...

என்னுடைய ஐந்து இஸ்ரேலியப் பதிவுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக மீள்பதிவு செய்ய முடிவு செய்துள்ளேன். முதல் பதிவு வந்து விட்டது. இரண்டாம் பதிவு வகைபடுத்த முடியவில்லையாதலால் இப்போதைக்கு டிராஃடாக வைத்துள்ளேன். சிறிது நேரம் கழித்து முயற்சி செய்ய எண்ணம்.

பை தி வே, உங்கள் வலைப்பூவுக்கு நான் லிங்க் கொடுத்துள்ளேன். நீங்கள் எனக்கு அதே போல லிங்க் கொடுத்ததற்கும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் said...

ஷங்கர்,

இந்தியா அணுகுண்டு வெடித்ததால் எப்படி பலவீனப்பட்டது?

1980களில் ராஜீவ் டாக்ட்ரைன் என்று அணு ஆயுதங்களை முழுவதும் ஒழிக்க உலக நாடுகளுக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் அறை கூவல் விடுக்க முடிந்தது. எம்மிடம் அணு ஆயுதம் தயாரிக்கும் வல்லமை இருந்தாலும், மனித குலத்தை வேரோடு அழித்து விடக் கூடும் ஆயுதங்களை நாங்கள் தயாரிக்க மாட்டோம் என்ற தார்மீக பலம் நம்மிடம் இருந்தது.

இப்போது அணுஆயுத நாடாக, அமெரிக்கர்களிடம் கெஞ்சி இரண்டாம்தர வரிசையில் இடம் பிடிக்கப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

கிராமத்தில் பாடுபடும் விவசாயியின் தன்மானம் தில்லியில் அமர்ந்த்து கொண்டு அறிவுஜீவிகள் நடத்தும் வெளியுறவுக் கொள்கைகளை விட பல மடங்கு உயர்ந்தது. குறுகிய கால நலனுக்காக தமது கொள்கைகளைத் தியாகம் செய்து கொள்பவர்களிடம் கொள்கைகளும் மிஞ்சாது , அப்படிப் பெற்ற நலன்களும் மிஞ்சாது.

சீனா போகும் பாதை அவர்களுக்கு பலனளிக்கிறது. நமது பாதை தனியாக, உலகை வழி நடத்தும் வண்ணம் இருக்க வேண்டுமே ஒழிய, வல்லவனுக்கு வால் பிடிக்குமாறு இருக்கக் கூடாது.

மா சிவகுமார் said...

காந்தீயம், தார்மீகத்துக்கு நல்ல வழி காட்டும் சிவா.

நாம் அணுகுண்டு வெடித்து பலத்தைக் காட்டியது, சிறு நரிகளைக் கண்டு சிங்கம் ஊளையிட்டது போல இருந்தது. நமக்கு இருக்கும் உறுதியும், வரலாறும், தொன்மையும் சீனாவைப் பார்த்து, பாகிஸ்தானைப் பார்த்து வெளியுறவுக் கொள்கை வகுக்கும் நிலையில் நம்மை வைக்கவில்ல.

dondu(#11168674346665545885) said...

"சீனா போகும் பாதை அவர்களுக்கு பலனளிக்கிறது. நமது பாதை தனியாக, உலகை வழி நடத்தும் வண்ணம் இருக்க வேண்டுமே ஒழிய, வல்லவனுக்கு வால் பிடிக்குமாறு இருக்கக் கூடாது."

என்ன உளறல். உலகுக்கு வழிகாட்ட நாம் யார்? நாம் நலனைப் பார்த்துக் கொண்டு போவதுதான் நல்லது. இதே மாதிரி நேரு அவர்கள் காலத்தில் பஞ்சசீலம் என்றெல்லாம் பேசி நாம் செருப்படி பட்டதுதான் பலன். யாருக்கு ஐயா வேண்டும் வெறும் நல்லவன் என்ற பெயர். முதலில் வல்லவனாவோம், பிறகு நல்லவனாக இருப்பதை பற்றியோசித்துக்ல் கொள்ளலாம். இதே மாதிரி பாலஸ்தீனியருக்கு வால் பிடித்தோம், அவர்கள் சமயம் வரும்போதெல்லாம் பாகிஸ்தானை ஆதரித்து நமக்கு பெப்பே காட்டினார்கள்.

"எவ்வளோ அடிச்சாலும் இவன் அழல்லேடா, ரொம்ப நல்லவண்டா" என்பதைக் கேட்டு உணர்ச்சிவசப்படும் கைப்பிள்ள ரேஞ்சுக்கு இந்தியா ஆக வேண்டும் என விரும்புகிறீர்களா? சற்று யோசியுங்கள்.

இப்பின்னூட்டத்தின் நகலை எனது இஸ்ரேல் பதிவின் இரண்டாம் பகுதியில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/2_29.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்தை நகல் எடுக்க மறந்து பப்ளிஷ் பட்டனை அழுத்தி விட்டதால் அதை என் பதிவில் பின்னூட்டமிட முடியவில்லை. இதன் நகலை அங்கு இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/2_29.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

மா. சிவகுமார்,

//
சீனா போகும் பாதை அவர்களுக்கு பலனளிக்கிறது. நமது பாதை தனியாக, உலகை வழி நடத்தும் வண்ணம் இருக்க வேண்டுமே ஒழிய, வல்லவனுக்கு வால் பிடிக்குமாறு இருக்கக் கூடாது.
//

சீனர்கள் போகும் பாதை அவரகளுக்கு பலனளிக்கிறது, மிகச் சரி. இந்தியர்கள் போகும் பாதை இந்தியர்களுக்குத் தானே பலனளிக்கவேண்டும்?.

நாம் ஏன் "உலகை வழி" நடத்தவேண்டும்? ஒரு மற்றத்திற்கு சீனர்கள் செய்யட்டுமே!! உலகை வழி நடத்துவது போன்ற தியாகச் செயல்களை! தில்லியில் அத்தகய சீனத் தலைவர்களுக்கு சிலை வைத்து மரியாதை செலுத்துவோம்!! அதை ஏன் நீங்கள் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்?

வல்லவனுக்கு வால் பிடித்தது எல்லாம், சோவியத்திடம் பணம் வாங்கி நாட்டை விலை பேசிய நம் கம்மியூனிஸ்டுகள்.

ஷங்கர்.

வஜ்ரா said...

வாங்க டோண்டு சார்,


//
இதே மாதிரி பாலஸ்தீனியருக்கு வால் பிடித்தோம், அவர்கள் சமயம் வரும்போதெல்லாம் பாகிஸ்தானை ஆதரித்து நமக்கு பெப்பே காட்டினார்கள்.
//

இதெல்லாம் நடந்தது தெரிந்துதான் பலஸ்தீனர்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று பேசுகிறார்களா!!? இல்லை தெரியாமல் பேசுகிறார்களா!

ஷங்கர்.

மா சிவகுமார் said...

ஐயாமார்களே,

கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள்.

மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்திய ஆடுகளத்தில், அவர்கள் வகுத்தி விதிகளின்படி நடக்கும் போட்டியில் இறங்கி வெற்றி பெற வேண்டும் என்று இறங்குவதுதான் இன்றைய அமெரிக்க கலாச்சார மோகம்.

வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும் தெரிந்து முடிவு எடுக்க வேண்டும். நம்முடைய வலிமை என்ன, நம் நகரங்களில் எல்லாம், மேற்கத்திய பாணி விரைவு உணவகங்களும் பன்மாடி கேளிக்கை கூடங்களும்தான் நமது முன்னேற்றம், நமது விவசாயிகளுக்கு விடிவுகாலம் என்று இறங்கி விட்டால் இந்த நோக்கம் சரிதான். நம்முடைய வாழ்க்கை, கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்து, மறந்து விட்டு சூடு போட்டுக் கொள்ள முயன்றால் வரிகள் வராது, தீக்காயம் தான் மிஞ்சும்.

நம்முடைய நலனைப் பார்த்துக் கொண்டு போவது என்பது அமெரிக்கர்கள் வகுத்த வாழவை நடத்துவதுதான் என்றால் நீங்கள் சொல்வது சரி. நம்முடைய வழி தனி வழி. அதைப் பாதுகாத்து நடை போடுவதுதான் நமக்கும் பெருமை.

சீனர்கள் போன போகும் வழி அழிவு வழி. அவர்கள் கொடுத்த விலை மிகப் பெரிது. அந்த வழிகள் நமக்கு வேண்டவே வேண்டாம். சீனாவைப் பார்த்து நாம் எதுவும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. நம்மிடம் சீனர்கள் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

அதைப் பற்றிய என்னுடைய எண்ணங்களை தனியாக எழுதுகிறேன்.

அன்புடன்,

dondu(#11168674346665545885) said...

"மேற்கத்திய நாடுகள் ஏற்படுத்திய ஆடுகளத்தில், அவர்கள் வகுத்த விதிகளின்படி நடக்கும் போட்டியில் இறங்கி வெற்றி பெற வேண்டும் என்று இறங்குவதுதான் இன்றைய அமெரிக்க கலாச்சார மோகம்."

நண்பர்களோ எதிரிகளோ நிரந்தரம் அல்ல, நம் நாட்டு நலன்கள்தான் நிரந்தரம் எனும் தாரக மந்திரம் அமெரிக்கக் கண்டுபிடிப்பே அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயோ அதற்கும் முன்னமேயிலிருந்தோ கூட இது நடந்து வந்திருக்கிறது. அர்த்த சாத்திரம் எழுதிய கௌடில்யனும் கூறியிருக்கிறான், திருக்குறளில் பொருட்பாலில் வரும் பல குறள்களும் கூட அரசர் எவ்வாறு நாட்டு நலனை எல்லாம் காக்க வேண்டும் என்ப்தையெல்லாம் வகைபடுத்தி வைத்துவிட்டன.

முதலில் நாம் மற்றவருக்கு எடுத்துக் காட்டாக இருக்கவேண்டும் என்பதெல்லாம் கவைக்குதவாது. அவ்வாறு இளிச்சவாய்த்தனமாக நடந்து கொண்டுதான் சீனாவிடம் இவ்வளவு இடங்களை இழந்து நிற்கிறோம்.

அதெல்லாம் விடுங்கள், இஸ்ரேலுக்கு வருவோம். அது உண்டான நாளிலிருந்து சுற்றிலும் பகைவர்கள். அத்தனை பேருக்கும் தண்ணி காட்டி வந்திருக்கிறது. அதனிடமிருந்து கற்று கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு.

முக்கியமானது தன்னம்பிக்கை. பாலஸ்தீனரிடம் அது இல்லை. இல்லாவிட்டால் ஜோர்டானிடமும் எகிப்திடமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை இழந்து நிற்க மாட்டார்கள்.

அவர்களோடு சேர்ந்து கொண்டால் நாமும் இழப்போம்.

இந்தப் பின்னூட்டத்தின் நகலை என்னுடைய இஸ்ரேல் பற்றிய இரண்டாம் பதிவிலும் பின்னூட்டமிடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/2_29.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

மா சிவகுமார் said...

"ஒரு சாதியினர் அனைவரும் இசுரேல் ஆதரவாளர்கள், இசுரேலை எதிர்ப்பவர்கள் எல்லாம் இசுலாமியத் தீவிரவாதிகள், இந்தியா அணுகுண்டு வைத்திருப்பதை எதிர்ப்பவர்கள் எல்லோரும், இரான் / சீன குண்டுகளை ஆதரிக்கிறார்கள்."

கண்ணில் வண்ணக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்த்தால் இப்படித்தான் தெரியும். சொல்ல வந்தக் கருத்துகளை புரிந்து கொண்டு பதிலிடுங்கள்.

டோண்டு சார், நாம் மற்றவருக்கு எடுத்துக் காட்டாக இருப்பதற்காக மட்டும் இந்தியா நியாயங்களை பின்பற்ற வேண்டாம், நியாயங்களை பின்பற்றினால், நம்மை பிறர் வழி காட்டியாக கொள்வார்கள் என்பதுதான் என் கருத்து. கொஞ்சம் அடாவடியாக செயல்படும் பெரிய மனுசனின் நிழலில் நின்று கொண்டால் வாழ்க்கை நல்லாயிருக்கும் என்ற முட்டாள்தனத்தைக் கைவிட வேண்டும் என்பது என் கருத்து.

வஜ்ரா said...

//
நியாயங்களை பின்பற்றினால், நம்மை பிறர் வழி காட்டியாக கொள்வார்கள் என்பதுதான் என் கருத்து. கொஞ்சம் அடாவடியாக செயல்படும் பெரிய மனுசனின் நிழலில் நின்று கொண்டால் வாழ்க்கை நல்லாயிருக்கும் என்ற முட்டாள்தனத்தைக் கைவிட வேண்டும் என்பது என் கருத்து.
//

நாம் எதற்காக ஐயா, மற்றவரகளுக்கு வழிகாட்டியாக எல்லாம் இருக்க வேண்டும்? நம் வழியில் நாம் சென்று நல்ல நிலை அடைந்தால் போதாதா? அதைத்தான் ஏற்கனவே சொல்லியாச்சே!!

//
கண்ணில் வண்ணக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்த்தால் இப்படித்தான் தெரியும். சொல்ல வந்தக் கருத்துகளை புரிந்து கொண்டு பதிலிடுங்கள்.
//

நீங்களே, நல்லா பாருங்க, தமிழ்மணத்தில், யார் எப்படி பேசுகிறார்கள் என்பதை. அரசியல் விஷயத்தில் கோடுகள் போட்டு பிரித்து விடலாம், ஆனால், ஒரு ஜாதிக்காரன் மட்டும் இஸ்ரேலை ஆதரிக்கிறான், ஒரு மதத்தவன் மட்டும் இஸ்ரேலை எதிற்கிறான் என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை. இடது சாரிகள் பற்றி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அவர்களது Extra territorial integrity காலம் காலமாக கடைபிடித்து வரும் கொள்கை அடிப்படையிலானது.

ஷங்கர்.

வஜ்ரா said...

வாங்க ஆரோக்கியம் சார், வருகைக்கு நன்றி.

அது என்ன உங்களோட எல்லா பின்னூட்டத்துலயும் இந்த வரிகள் இருக்கு?"those who forget the past are condemned to repeat it"

நல்ல வரிகள் தான், இந்தியாவில் மறதி அதிகம்.!!

ஷங்கர்.

Anonymous said...

தொடக்கத்தில் நடுநிலையாக கருத்துக்களை தெரிவிப்பது போல் தெரிவித்துவிட்டு இறுதியில் உங்களின் வர்ணாசிரம, இந்துத்துவத்திற்கு சாதகமாகத்தான் தெரிவித்துள்ளீர்கள். அது உங்கள் இரத்தத்தின் வன்மம். அது உங்களுடைய தவறல்ல. உங்களுடைய ஜீன் அப்படி.

dondu(#11168674346665545885) said...

"உங்களின் வர்ணாசிரம, இந்துத்துவத்திற்கு சாதகமாகத்தான் தெரிவித்துள்ளீர்கள். அது உங்கள் இரத்தத்தின் வன்மம். அது உங்களுடைய தவறல்ல. உங்களுடைய ஜீன் அப்படி."

சொன்னது எதுவாயினும் நேரிடையாகப் பெயர் சொல்லி சொல்வது சங்கருடைய நேமையைக் குறிக்கிறது. உங்களை மாதிரி நேர்மையின்றி பேசுவதுதான் உங்கள் ஜீன், ஆண்மையுணர்வு இல்லாத ஜீன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோன்டு நைனா!

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏன் நெரி கட்டுது

இதுதான் 'இன' பாசமோ