April 22, 2006

யூதர்களின் நம்பிக்கை -2


அனைத்து semitic மதம் போன்றதே யூத மதமும். சொல்லப் போனால், யூத மதம், கிருத்துவம், மற்றும் இஸ்லாமுக்கு தாய் மதம். யூத மத்த்தில் உள்ள மிக முக்கியமான நம்பிக்கை, நபித்துவக் கோட்பாடு அதாவது prophetism. அவர்களது நம்பிக்கையில், ஒரு prophet அல்லது நபி பிறந்துவந்து, இஸ்ரேலியர்களை, இஸ்ரேல் என்ற நாட்டை அமைத்து, இடிந்துபோன கோவிலை மறுபடியும் கட்டுவார் என்பது.

நபிகள் இல்லாமலேயே இஸ்ரேல் பிறந்து இன்று ஒரு மிகச் சிறந்த நாடாக விழங்கிக் கொண்டு இருக்கிறது என்பது வேறு கதை.

இந்த நபித்துவக் கோட்பாட்டை மிக வன்மையாக நம்பும் கூட்டம் "hassidic" எனப்படும், யூத உட் பிறிவினையய்ச் சேர்ந்தவர்கள். இவர்களைக் கண்டு பிடிப்பது மிகவும் எளிது. விரிவான உரோமங்களான தொப்பி, கருப்பு அங்கி, கிருதா இருக்கும் இடத்தில் சுருள் முடி என்று ஆட்களே வித்தியாசமாக தோற்றமளிப்பர். நாற்பது டிகிறி வெயில் அடித்தாலும், கருப்பு கோட்டு தான். இவர்கள், மற்ற இஸ்ரேலியர்களைப் போல் compulsary army service செய்யத்தேவை இல்லை, அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்கும் சலுகைகளில் இதுவும் ஒன்று.

இவர்கள், இஸ்ரேலிய தேசிய மொழியான ஹீப்ரூ (hebrew) பேச மாட்டார்கள். ஏன் என்றால், ஹீப்ரூ தேவ பாஷை, அதை சாதாரண சம்பாஷணைக்கு பயன் படுத்தக் கூடாது என்பது, இவர்களது நம்பிக்கை. ஆகயால், yiddish எனப்படும், ஜெர்மானிய மொழியுடன் கலந்த ஒரு வகையான ஹீப்ரூ தான் அவர்கள் பேசும் தாய் மொழி. இதற்காக, yiddish நாளிதள்கள் முதற்கொண்டு, நாவல்கள் வரை அனைத்தும் கிடைக்கும்.

வினோதமாக, இஸ்ரேல் தோன்ற பல வகையான எதிர்ப்புகளில் ஹஸ்ஸீடிக் உட்பிறிவு மக்கள் அதிகம் பங்கேற்றனர். காரணம் என்னவென்றால், ஒரு நபி வந்து அமைக்க வேண்டிய நாட்டை, zionists அமைப்பதனால் தான் இந்த எதிர்ப்பு என்றனர். (சர்குண விக்ருதி என்றால் இது தானோ!!). இன்றும், பல hassidic hardliner கள், பல அரபு நாடுகளைப் போல் இஸ்ரேலின் இருப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். (they do not recognize state of israel!!)

இஸ்ரேல் என்ற நாடு உருவாகாமல் இருந்திருந்தால், ஹஸ்ஸீடிக் மக்கள் எல்லாம், போலாந்திலோ, ரஷியாவிலோ anti-semitism காரணமாக் அழிந்தே போயிருப்பர்.

இவர்களாய்ப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த விக்கிபீடியா சுட்டி யய் க்ளிக் செய்யவும்.

எல்லா மதங்களைப் போலத்தான் யூத மதமும், பல உட்பிறிவுகளைக் கொண்டது. எல்லா ஹஸ்ஸீடிக் மக்களும் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் அல்ல. அவர்களுக்குள் வேற்றுமை. ஆனால் ஒன்று, இப்படி பற்பல வேறுபாடுகளும், முறன்பாடுகளும், இருந்தும், இவர்களை எல்லாம் அணைத்துக் கொண்டு முன்னேருகிறது, யூத மதம். இந்து மதம் போல் வேற்றூமைகளை அதிகம் பொருட்படுத்தாமல், ஒற்றுமைகளை மட்டும் பார்க்க இவர்கள் இப்பொழுது தான் கற்றுக் கொண்டு வருகின்றனர் என்பது நான் கண்ட உண்மை. கூடிய விரைவில் "ஏகம் சத், விப்ர பஹுத வதாந்தி" என்ற 5000 ஆண்டு, உபணிடத உண்மையய் சீக்கிரமே உணருவார்கள் என்று நம்புகிறேன்.

No comments: