April 26, 2006

இஸ்ரேலுக்காக...! -2

இது முந்தய பதிவின் தொடர்ச்சியே...

Noam Chomsky, John Mearsheimer, மற்றும் Stephen Walt போன்றவர்கள், நடு நிலைக்கருத்து கூறுபவர்கள் என்ற பரவலான நம்பிக்கை இருந்து வருகிறது. அவரகள் உண்மையாகவே வெகுவாக சிந்தித்து ஒரு சில விஷயங்களில் நடு நிலைக் கருத்தை எட்டியிருக்கலாம், மறுப்பதற்கில்லை. ஆனால் பல இடங்களில், அவர்களின் கருத்து உண்மை நிலைக்கு ஒத்து வராத ஏட்டுச் சுரைக்காயாக இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

வெகுவாக, கூகிள் தேடல் எல்லாம் செய்து, பல லிங்குகள் எல்லாம் கொடுக்காமல், அவர் இதைச் சொன்னார், இவர் அதைச்சொன்னார் அதை நான் வளி மொழிகிறேன் என்றெல்லாம் என் வாதத்திற்கு வக்காலத்து தேடாமல் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

Chomsky ஒரு தலை சிறந்த சிந்தனையாளர் தான் மறுப்பதற்கில்லை. அவரது "liberal" சிந்தனைகள், neo-marxism போலத் தான் இருக்கிறது. Anti-globalization, Anti-americanism என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவரின் கூற்று, அமேரிக்கா தன் கொள்கைகளில் பாஸிச நாடாக மறிக் கொண்டிருப்பதாக எண்ணுகிறார். இதே கொள்கையய் கூறுபவர், Michael Moore.

இன்றய உலகில் அந்த கொள்கை சரியான சிந்தனையுள்ளவர்களுக்கு ஏற்புடயதாக இல்லை என்பதே உண்மை.

இஸ்ரேலுக்கு வரலாம்...

Chomsky ஒரு Anti-semite என்றெல்லாம் கூறி "பிரச்சார" விஷயத்திற்கு தீனி போடுவதற்க்கான பதிவு இது அல்ல.

மு. மாலிக் என்பவரின் வலைப் பதிவில், இஸ்ரேலின் லாபி என்று ஒரு பதிவு, அதில் நான் இட்ட பின்னூட்டத்திற்கு பதிலளிக்கும் பொருட்டு, மாலிக் அவர்கள், இந்த வாதத்தை வைத்திருந்தார்.

உலகில் உள்ள மற்றொரு சித்தாந்தமாகிய யூத சித்தாந்தத்தினைப் போற்றுகிறார்கள். யூத நம்பிக்கையிலும் பிறப்பால் வேறுபடுத்தும் சாதி முறை உள்ளது. அவர்கள் சாதியினை 'குடும்பங்கள்' எனும் பெயரில் அழைக்கிறார்கள். மேலும் ஒருவன் பிறப்பால் ஒருவன் யூதனாக யிருந்தால்தான் அவன் ஒரு யூதன். இது இங்குள்ள சாதிமுறையினை ஒத்த ஒரு அம்சம். எனவே யூதம் சாதி முறைக்கு ஆதரவு அளிப்பதால் அதனை போற்றும் உயர்சாதிக் காரர்களும் உண்டு.

இது முற்றிலும் உண்மையல்ல. நான் ஆறிந்த பலர், யூத மதத்திற்கு மதம் மாறி இருக்கின்றனர். அது, கிருத்துவம், இஸ்லாத்திற்கு மதம் மாறுவது போல் ஓவர் நைட் விஷயம் கிடையாது. யூத மத்திற்கு மாற வேண்டுமானால் பல யூத நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஹீப்ரு மொழி கற்றுக் கொள்ள வேண்டும் இன்னும் பல விஷயங்கள் (ஆண்/ பெண் வேறுபாடுகளுக்கு இணங்க) செய்ய வேண்டும். மற்றும் முக்கியமாக, வலுவான காரணம் இருக்க வேண்டும்.

ஆனால், சாதாரணமாக, மதம் மற்றுவது போல் எல்லோரிடமும் போய் யூத மத குருக்கள் மதம் மாறச் சொல்வது இல்லை, அத்தகய மத மற்றம் தவறு என்று எண்ணுபவர்கள் யூதர்கள். Proselytization is prohibited in Jewish religion.

மற்றும், ஏற்றத் தாழ்வுகள் எந்த மத்தில் தான் இல்லை. இஸ்லாத்தில் இல்லை என்று சொல்வீர்களேயானால், சற்று யோசியுங்கள். எனது முந்தய பதிவைப் பாருங்கள்.

ஷங்கர்.

No comments: