April 26, 2006

இஸ்ரேலுக்காக...!

சமீபத்தில், மு. மாலிக் என்ற வலைபதிவாளர், இஸ்ரேலின் லாபி (கள்ளப் பரிந்துரைக் குழு) என்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் அவர் கூரியுள்ள சில விஷயங்களும் அதற்கு என் பதிலும். ( நான் ஏற்கனவே அவரின் பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளேன், அதையும் இந்தப் பதிவில் இணைக்கிறேன்)


ஏற்கனவே கள்ளத் தனமாக அணு ஆயுதம் செய்துவிட்ட இஸ்ரேலின் அணுத்திட்டத்தைப் பற்றிக் கண்டுக் கொள்ளாமலும், மற்ற நாடுகள் அதைப் பற்றி மூச்சுவிட்டால், தன் 'அழுத்தும்' தொழில்நுட்பத்தினைக் கொண்டு அவர்களை அடக்கியும் வருகிறது அமெரிக்கா.

ஈரானின் அனு அயுதம் பற்றிய அவரின் கருத்தும், இஸ்ரேலின் அனு ஆயுதம் பற்றிய அவரின் கருத்தும் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை. இஸ்ரேல் என்ன தான் சொன்னாலும் ஒரு Responsible democracy. ஈரான் அப்படியா? சும்மா ஒரு அனு ஆயுதமும் இல்லாமல், எந்த வித அச்சுருத்தலும் இஸ்ரேலிடமிருந்து இல்லை என்ற போதிலும், இஸ்ரேலை உலக மேப்பிலிருந்து அழிக்கவேண்டும் என்று கொக்கரித்தவர் ஈரான் முதல்வர் அஹமெதினிஜாத். அத்தகய irresponsible attitude கொண்டவர் அனு ஆயுதம் தாயாரிப்பது, உலகில் எந்த நாட்டிற்கும் நல்லதல்ல.

இஸ்ரேலைவிட இந்தியா ஈரானுக்கு வெகு அருகில் இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். இன்று இஸ்ரேல் உலக மேப்பில் இருக்கக்கூடாது என்று கூறுபவர் நாளை இந்தியா இருக்கக்கூடாது என்று கூற மாட்டார் என்பது என்ன நிச்சயம்? இந்தியாவின் வெகு அருகில் இருக்கும் ஒரு volatile இஸ்லாமிய நாடு அனு ஆயுதம் தயாரித்து வைத்திருப்பது, இந்தியாவுக்கு நல்லதல்ல.


அதாவது உருவாக்கப்படும் இடத்திலுள்ள மற்றவர்களை விரட்டிவிட்டு, அயல்நாடுகளில் வாழ்பவற்களுக்காக நாடு உருவாக்குதல்தான் சியோனிசம்.


இதிலிருந்தே தெரிகிறது, உங்கள் zionism பற்றிய அடிப்படைகண்ணோட்டமே ஒரு பக்கச் சாய்வு உள்ளதாக இருக்கிறது.


ஆனால் தற்போதைய இஸ்ரேல் சார்பான வெளியுறவுக் கொள்கையால் அமெரிக்காவிற்கு இழப்புகளே அதிகம்; பொருளாதார-கொள்கை ரீதியான ஆதாயம் ஏதும் இல்லை; இருப்பினும், அது விடாப்பிடியாக, அதே வெளியுறவுக் கொள்கையினைக் கடைபிடிக்க காரணம், இஸ்ரேலின் கள்ளப் பரிந்துரைக் குழு (Lobby) -தான் என்பது அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியகளின் ஆய்வு முடிவு.

நீங்கள் கூறும், கள்ளாப் பரிந்துரைக்குழு எல்லாம், உங்களுக்கு பிடிக்காத zionism பற்றிய கருத்தாகவே இருக்கிறதே தவிர நடு நிலை என்பது, கிஞ்சித்தும் இல்லை. அமேரிக்கர்கள், நீங்கள் கூறுவது போல் ஒன்றும், ஒண்ணும் தெரியாத பாப்பாக்கள் அல்ல, அவர்களின், வெளியுறவுக் கொள்கை அவ்ர்களுக்கு நன்மை பயக்காவிடில், எதைபற்றியும் கவலைப் படாமல் மாற்றிவிடுவர். இது Republican அல்லது democratic எந்த கட்சி வந்தாலும் மாறாத கொள்கை.

If supporting Israel, protects american interests in Middle east, they do. And why not! Israel has the brain power to tackle all the surrounding hostile arab countries single handedly. Who will say no to such a strong ally? Only those who do not care for their own national interest will say so.

9/11க்கு பிறகு, இஸ்லாமியத்தீவிரவாதத்தால் பதிக்கப் பட்ட நாடுகள் அனைத்தும் ஒன்று திரள்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதில், இஸ்ரேல் இல்லாமல் போய் விடுமா....உலகிலேயே இஸ்லாமியத் தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப் பட்ட நாடு இஸ்ரேல் தான்.


இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டுமானால், ஐரோப்பிய நாடுகள், ஆரம்பக் காலங்களில், இஸ்ரேலின் நிலையை எதிர்த்தே வந்துள்ளன.



இது உண்மையாக இருக்க வாய்ப்புகள் மிகவும் கம்மி. ஏன் என்றால் இஸ்ரேல் உருவாக முக்கியக் காரணம், இங்கிலாந்து, மற்றும் ரஷ்யா போன்ற ஐரோப்பிய ஜாம்பவான்கள் தான். அவர்களின் state sponsered anti semitism த்திற்கு பரிகாரம் தேடினார்கள் போல...!


பிறகு இஸ்ரேல் அவர்களை அங்கிருந்து விரட்டி, பாலஸ்தீனர்களை காஸா நிலத் துண்டிற்குள்ளும், மேற்குக் கரைப் பகுதிக்குள்ளும் சென்று அடங்குமாறு செய்தனர்.

முற்றிலும் தவறு. பாலஸ்தீனர்களை யாரும் விரட்டவில்லை. இன்னும் பல நகரங்களில் அரபு மக்கள், அதாவது இஸ்ரேல் தோற்றத்திற்கு முன் குடி இருந்த மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால், மிகப் பெரும் பகுதி, un inhabited desert land தான். யூதர்கள் இங்கு வந்த பிறகு, செல்வம் கொழிக்க ஆரம்பித்தது, வியாபாரம் பெருகியது, இதை எல்லாம் பொருக்காத பக்கத்து அரபு நாடுகள் சும்மா இருந்த பாலஸ்தீனர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்தது. போதாத குறைக்கு அரபுகளின் Anti semitism மிகவும் மோசமானது. யூதனைப் பார்தால் கொண்ரு விடு என்று தான் சொல்வார்கள். ஒரே தந்தைக்குப் பிறந்த அண்ணன் தம்பிகள் தான் யூதர்களும், அரபிக்களும். அவர்களின் சண்டையில் இந்திய முஸ்லீம்கள், அரபு முஸ்லீம்களின் side எடுப்பது தான் வியப்பாக இருக்கிறது.

இந்திய முஸ்லீம்களுக்கும் யூதர்களுக்கும் எந்தவித முன் விரேதமோ, தர்ம யுத்தமோ கிடையாது. அரபு நாடுகள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திர்க்காக இந்திய முஸ்லீம்கள் அரபு நாடுகளின் பக்கம் சாய்ந்து விவாதிப்பதும், அதை நியாயப்படுத்துவதுமாக இருக்கின்றனர். இது எங்கு கொண்டு போய் விடும் என்று ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இந்த பின்னூட்டத்திர்க்குப் பிறகு அவர் பதில் பின்னூட்டம் ஒன்றும் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறி இருக்கும் சில கருத்துக்களும், எனது பதில்களும்.


லாபி மட்டுமே காரணம்', என்று நான் வாதிட வில்லை. லாபி மட்டுமே காரணமாக இருக்கமுடியாது என்பதுவே பேராசிரியர் சாம்ஸ்கி அவர்களது வாதமும். அதனாலேயே நான் அவரது கட்டுரைக்கும் தொடுப்பு வழங்கியிருந்தேன்.


Fair enough!!



மேலும் ஒரு ஒத்த விஷயம். நம் நாட்டு வலதுசாரி/சங் கூட்டத்தினர் எப்போதும் இஸ்ரேல் ஆதரவாளர்களாக இருப்பார்கள். "சங் கூட்டத்தினருக்கு முஸ்லீம்களைக் கண்டால் ஆகாது; இஸ்ரேலுக்கும் ஆகாது; எனவே சங் கூட்டத்தினர் இஸ்ரேல் பக்கம்" என எண்ணத் தூண்டும். ஆனால் இந்த மதக் காரணத்திற்கும் அப்பாற்பட்ட காரணம் ஒன்று உண்டு. சங்கூட்டத்தினரில் பெரும்பாலான உறுப்பினர்கள் உயர்சாதியினைச் சேர்ந்தவர்கள். சங் எனும் அமைப்பு அவர்களது நலனுக்காக அவர்களாலேயே உருவாக்கப்பட்டது. அந்த உயர்சாதி கூட்டத்தினர் தங்களது சாதி முறை சித்தாந்தத்திற்கு ஆதரவாக, உலகில் உள்ள மற்றொரு சித்தாந்தமாகிய யூத சித்தாந்தத்தினைப் போற்றுகிறார்கள். யூத நம்பிக்கையிலும் பிறப்பால் வேறுபடுத்தும் சாதி முறை உள்ளது. அவர்கள் சாதியினை 'குடும்பங்கள்' எனும் பெயரில் அழைக்கிறார்கள். மேலும் ஒருவன் பிறப்பால் ஒருவன் யூதனாக யிருந்தால்தான் அவன் ஒரு யூதன். இது இங்குள்ள சாதிமுறையினை ஒத்த ஒரு அம்சம். எனவே யூதம் சாதி முறைக்கு ஆதரவு அளிப்பதால் அதனை போற்றும் உயர்சாதிக் காரர்களும் உண்டு.


இதுவுமே முற்றிலும் தவறு, சங் பரிவாரங்கள் பற்றி உங்களுக்குத் தெரியாது என்று சொல்லி முடித்துக் கொள்ளுங்கள், ஜாதியயை திணிக்காதீர்கள்.

இஸ்ரேல் ஆதரவாளர்கள் அனைவரும் மேல் ஜாதிக்காரர்கள்! ஜாதீயக் கோட்பாட்டை யூத மதம் கொண்டுள்ள காரணத்தால் அவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் என்பதெல்லாம், அதீத கற்பனை (vivid imagination)!! யூத மதத்தைப் பற்றி இந்தியாவில் எத்தனை பேருக்கு உருப்படியாகத் தெரியும்!!? நான் இஸ்ரேலுக்கு வரும் முன்னர் anti semitism பற்றி கேள்விப் பட்டது கூடக் கிடையாது.!!

அடாவடி இஸ்லாமியப் பக்கத்து நாடுகளான பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் தொழில் நுட்பம் கொண்டு அடக்காவிடில் இந்திய இறையாண்மைக்கு தீங்கு, என்ற கருத்தில் உங்களுக்கு மற்று கருத்து இருக்காது என்று நம்புகிறேன். அத்தகய தொழில் நுட்பம் இஸ்ரேலிடம் உள்ளது, அதன் காரணமாகத்தான் இஸ்ரேலை இந்திய நாட்டின் நலம் விரும்பிகள் ஆதரிக்கின்றனர். சங் பரிவாரங்கள் இஸ்ரேலை ஆதரிப்பதும் இதன் காரணமாகத்தான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.


முஸ்லீம் எனும் காரணத்தினால்தான் நான் இஸ்ரேலை எதிர்க்கிறேன் என்று இனிமேலாவது கொள்ளவேண்டாம். அந்த காரணத்திற்காக மட்டுமே இஸ்ரேலை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் மறுப்பதற்கில்லை. நான் எதிர்ப்பது நியாமான காரணத்திற்காகவே.


நீங்கள் கூறும் நியாயத்தில் நீங்கள் பிறந்த தாய் நாட்டின் நலம் இல்லை என்பது என் கருத்து. (மதத்தை இழுத்தது என் தவறு தான்!! ஒத்துக்கொள்கிறேன், ஆனால் அதன் காரணமாகவே இஸ்ரேலை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்று நீங்களும் ஆமோதித்திருக்கிறீர்கள்.)

இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள் என்றவுடன் பாலஸ்தீன மக்களை எதிர்க்கிறார்கள் இந்தியர்கள் என்பதெல்லாம் பொய், மத்தியகிழக்கில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திர்க்கும் இடையில் அமைதி நிலவினால் இந்தியாவுக்கு என்ன தீங்கா?


நான் மேற்கோள் காட்டிய அனைவரும் எனது நிலையினைக் கொண்டவர்கள்தான். முஸ்லீம்கள் மட்டும்தான் இஸ்ரேலினைக் கண்டிப்பார்கள் என்று இல்லை. நான் மேற்கோள் காட்டியவர்களில் எட்வர்டு செய்த் ஒரு பாலஸ்தீன கிறிஸ்தவர் ஆவார். நோம் சாம்ஸ்கியும், நார்மன் ஃபிங்கில்ஸ்டீனும் யூதர்கள் ஆவார்கள். நான் பரிந்துரைத்த கட்டுரையை எழுதியவரான ஜான் மியர்ஷைமர் ஒரு யூதராவார். இப்பிரச்சனையில் எனக்கு மதம் முக்கியமில்லை என்றாலும், அறிவுஜீவிகளின் மதத்தினைப் பற்றி இங்கு பேசுவது, நீங்கள் இது பற்றி பிரச்சனை எழுப்பியதாலேயே.


இவர்கள் எல்லாம் இடது சாரிச் சிந்தனையாளர்கள் என்று ஒரே brush யினால் பெயிண்ட் அடித்துத் தள்ளி விடமுடியும். ஆனால், நீங்கள் கொடுத்துள்ள லிங்குகளை படித்த பிறகு பதில் இடுகிறேன். தேவைப்பட்டால், தனிப் பதிவு போடுகிறேன். அதற்கு முன் ஒன்று கூறிக் கொள்கிறேன். இடது சாரிச் சிந்தனைகளில் anti-semitism இருப்பதாகவே கருதப்படுகிறது.

2 comments:

Unknown said...

Vanakkam Sankar narayanan

வஜ்ரா said...

Welcome, but your link is not accesible. I cannot see your profile.

And so i cannot access your blog.

sankar.