April 21, 2006

போலி டோண்டுவும் இஸ்ரேலும்...

சமீபத்தில், கால்கரி சிவா அவர்களின் ஜாதிகளை ஒழிக்க எளிய வழிமுறை என்ற பதிவில் போலி டோண்டு அவர்கள் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார்.

அதில், டோண்டு (உண்மையான டோண்டு) அவர்கள் தன் ஜாதியை பரப்புவது தான் தன் முதன்மையான நோக்கம் போல் வலைப்பூவில் எழுதி வருவதாக டூப்ளிகேட் டோண்டு கருதுவதாகவும், அதனால் அவரை தரக்குறைவாக பேசியது நியாயம் போல் எழுதி இருந்தார். இது டோண்டுவுக்கும், டூப்ளிகேட்டுக்கும் உள்ள பிரச்சனை. நான் உண்மையான டோண்டு அவர்களின் அனைத்து பதிவுகளையும் படித்தேன். ஒரு சில பதிவுகளில் அவர் தன் ஜாதியய் குறிப்பிட்டிருப்பது உண்மை. ஆனால் அதைக் கேட்டதினால் தான் குறிப்பிட்டுள்ளேன் என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.

அதில் இன்னோன்றும் டூப்ளிகேட் அவர்கள் எழுதி இருந்தார், அது, பார்பானர்கள் (பிராமணர்கள்) இஸ்ரேலை அதரிப்பது பற்றியது.

முதலில் டூப்ளிகேட்டுக்கு எத்தனை பிராமணர்களைத் தெரியும்? அதில் எத்தனை பேர் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள்?

இரண்டாவது, இஸ்ரேலை அதரிப்பதில்தான் இந்தியாவின் நலம் உள்ளது. அது இந்தியாவை ஆளும் அரசியல்வாதிகளுக்கும், IAS அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். டூப்ளிகேட்டிடம் யாரும் idea கேட்கவில்லை (அது தான் இஸ்ரேல் ஆதரவாளர்களிடம் அவருக்கு கோபம் போலும்!!).

இஸ்ரேலை ஆதரிப்பது என்றவுடன் பாலஸ்தீனத்தை எதிர்ப்பது ஆகாது. மத்திய கிழக்கில் அமைதி ஏற்பட்டால் இந்தியாவுக்கு என்ன தீங்கா?

உலகிலேயே தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப் பட்ட நாடு இஸ்ரேல், இஸ்லாமியத் தீவிரவாததிற்கு பதிலுக்கு பதில் "ஆப்பு" அடிக்கும் நாடு இஸ்ரேல், இஸ்ரேலை இந்தியா ஆதரிப்பது, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அடாவடி இஸ்லாமிய நாடுகளை அடக்கும் தொழில்னுட்பத்திற்கு தான். இதில் நிச்சயம் இந்தியாவின் நலம் உள்ளது என்பதற்கு டூப்ளிகேட்டுக்கு மற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.

அடுத்ததாக டூப்ளிகேட் அவர்கள், அறிவியலாளர்களாலேயே தூக்கி எரியப்பட்ட "race theory" யின் அடிப்படையிலான ஆரிய படை எடுப்புக் கோட்பாட்டினை தெய்வ வாக்கு போல் நம்புகிறார். எதற்கெடுத்தாலும் "பார்பானர்கள், வந்தேரி ஆரியர்கள்" என்று சாடுகிறார். அவரின் அனைத்துப் பதிவுகளிலும் இந்த வெறுப்பை உமிழ்ந்திருப்பார். கால்கரி சிவாவின் பதிவில் பதித்த பின்னூட்டமும் அதற்கு விதி விலக்கு அல்ல. ஆரியப் படை எடுப்புக் கோட்பாட்டினை சுத்தமாக உடைத்தெரியும் பொறுட்டு அறிவியல் பூர்வமாக தனி பதிவு கூடிய விரைவில் போடுகிறேன்.

அதுவரை நன்றி,

ஷங்கர்.

6 comments:

dondu(#4800161) said...

நான் மிகவும் மதிக்கும் இஸ்ரேலில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களைப் பார்த்தால் சற்று பொறாமையாகவே இருக்கிறது.

நல்ல விஷயங்களையே பேசுவோமே. போலி டோண்டு மாதிரி இழிபிறவிகளைப் பற்றி ஏன் பேச வேண்டும்? இருந்தாலும் அவனுடைய ஒரு பொய்யை இங்கு வெளிப்படுத்தியே ஆக வேண்டும். யாரையாவது ரொம்ப மோசமாகத் திட்ட வேண்டுமானால் தலித் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு அந்தப் பயலே, அந்தக் கம்னாட்டி என்றுதான் எழுதுகிறான். அவ்வாறு திட்டப்பட்டவர்களில் டி.பி.ஆர். ஜோசஃப், சோம்பேறி பையன், காசி, இலவசக் கொத்தனார் ஆகியோர் அடங்குவர்.

என்னுடைய இஸ்ரேலியப் பதிவுகளைப் படித்ததாக எழுதியிருக்கிறீர்கள். சந்தோஷம்.

ஐஷ்மன் வழக்கிலிருந்தே இஸ்ரவேலர்கள் என்னைக் கவர்ந்தனர். அச்சமயம் எனக்கு வயது 14-15 இருக்கும். யூதர்கள் மேல் நடந்த கொடுமைகளைப் பற்றி பல புத்தகங்கள் என் தந்தை ஹிந்து பத்திரிகை நூலகத்திலிருந்து கொண்டு வருவது வழக்கம். 1967-ல் அரேபிய ஆக்கிரமிப்பாளர்களை ரவுண்டு கட்டி அடித்ததில் மிக்க மகிழ்ச்சி.

நான் ஏற்கனவே கூறியபடி இஸ்ரேல் மேல் உள்ள என் பாசம் பூர்வ ஜன்ம தொடர்பாகவே படுகிறது.

மேலும் எழுதுங்கள். முக்கியமான விஷயம். என் பெயரில் வரும் பின்னூட்டங்களைப் பார்க்க இரண்டு சோதனைகள் உண்டு. என் பிளாக்கர் எண் 4800161 எலிக்குட்டி சோதனையில் காண்பிக்கப் படவேண்டும். மேலும் உங்கள் பதிவில் போட்டோக்கள் எனேபிள் செய்யப்பட்டிருந்தால் அதுவும் தெரிய வேண்டும். இரண்டும் ஒன்றாக வெற்றி பெற்றால்தான் பின்னூட்டமிட்டது உண்மையான டோண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vajra said...

//
மேலும் எழுதுங்கள். முக்கியமான விஷயம். என் பெயரில் வரும் பின்னூட்டங்களைப் பார்க்க இரண்டு சோதனைகள் உண்டு. என் பிளாக்கர் எண் 4800161 எலிக்குட்டி சோதனையில் காண்பிக்கப் படவேண்டும். மேலும் உங்கள் பதிவில் போட்டோக்கள் எனேபிள் செய்யப்பட்டிருந்தால் அதுவும் தெரிய வேண்டும். இரண்டும் ஒன்றாக வெற்றி பெற்றால்தான் பின்னூட்டமிட்டது உண்மையான டோண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
//

வருகைக்கு நன்றி (ஒரிஜினல்) டோண்டு அவர்களே!

டூப்ளிகேட்டைப் பற்றி இனி கவலைப் படப் போவது இல்லை. உருப்படியாக ஏதாவது சொன்னால் ஜாதியய் கூறித் திட்டுவதுதான் அவனின் பழக்கமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் ஆரியர்கள், வந்தேரிகள் என்று ஆரம்பித்து விடுகிறான். ஏதோ மேல் ஜாதிக்காரர்கள் எல்லாம், தலித் மக்களை வீட்டிற்குள் அழைத்து சோறு போட்டால் ஜாதி அழிந்துவிடும் என்ற அதீத நம்பிக்கை வேறு.


வித்தியாசமான மக்களாக இருப்பதினால் தான் என்னவோ!இஸ்ரேலியர்களின் மத நம்பிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. அதைப் பற்றித்தான் இப்பொழுது எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

கூடிய விரைவில், இஸ்ரேலியர்களின், அரசியல் பற்றியும், இஸ்லாமியத்தீவிரவாதத்தை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற விஷயங்களைப் பற்றியும் ஒரு பதிவு போடுகிறேன்.

ஷங்கர்.

Muse (# 5279076) said...

தங்களுடைய பதிவை மிக ஆர்வத்தோடு எதிர்பார்கிறேன், சங்கர நாரயணன் அவர்களே.

சமீபத்தில் என்னுடைய இஸ்லாமிய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். இஸ்லாமிய மத வெறியை மிகத் தீவிரமாக எதிர்க்கும் அவர், இம்மதவெறியர்களிடையே காணப்படும் இஸ்ரேலிய எதிர்ப்பை மட்டும் தன்னால் ஒத்துக் கொள்ளமுடிகிறது எனவும் கூறினார். அவர் பாலஸ்தீன போராட்டம் நியாயமான ஒன்று எனவும் கருதுகிறார். உண்மையில் பாலஸ்தீனத்திற்கு இஸ்ரேல் தீங்கு இழைத்து வருகிறதா? அல்லது இருவரும் ஒருவருக்கொருவர் துன்பம் இழைத்து வருகிறார்களா? ஏன்?

தங்களுடைய கட்டுரை இவை அனைத்தையும் விளக்கும் என நம்பி ஆவலோடு காத்திருக்கிறேன்.

இன்னொன்று. அந்த இஸ்லாமிய நண்பர் கூறியது. அந்நாட்டினை பார்ப்பனர்கள் மதிப்பதற்குக் காரணம் யூதர்கள் தாங்கள் பிறப்பினால் உயர்ந்தவர்கள் எனக் கருதுவதே. ஒருவர் யூதராக மதம் மாற முடியாது. ஒருவர் பிறப்பினால் மட்டுமே யூதராக முடியும் என அவர் கூறினார். இந்தியாவில் காணப் படும் ஜாதி அமைப்பு போல அங்கு "குடும்ப" அமைப்பு (யூதர்களிடையே) காணப்படுவதாகவும் அவர் கூறினார். இது பற்றி நீங்கள் ஒரு நேரடிப் பார்வையாளராகவிருப்பதால் ஒரு தெளிவான பதிலை கூறுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

உங்கள் வலைப்பதிவிற்கு என்னுடைய வலைப்பதிவில் லிங்க் எப்படி கொடுப்பது ?

நன்மனம் said...

சங்கர், போலி டோண்டு வேற்று மதத்தவராக இருப்பாரோ என்று தோன்றுகிறது. பார்பணர்களை எதிர்ப்பது போல் மறைமுகமாக இந்து மற்றும் மற்ற மதத்தினரை எதிர்பதாக தோற்றம் அளிக்கிறது.

ஸ்ரீதர்

Vajra said...

வருகைக்கு நன்றி muse அவர்களே!!

இப்போது, சற்று busyயாக இருப்பதினால், புதிய பதிவுகள் இடவில்லை, விரைவிலேயே, நீங்கள் கேட்டதர்க்கும், உங்கள் இஸ்லாமிய நண்பருக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு பதிவு போடுகிறேன்.

ஒருவர் யூதராக மதம் மாற முடியாது என்பது முற்றிலும் உண்மையல்ல. நான் அறிந்த சில ஜெர்மனிய நன்பர்கள், யூத மதத்தை சேர்ந்தவர்களை மணம் செய்து கொள்ளும் பொருட்டு, மதம் மாறினர். ஆனால் இத்தகய மத மற்றம், கிருத்துவதிற்கோ, இஸ்லாத்திர்க்கோ மதம் மாறுவது போல் எளிதான விஷயம் அல்ல.

எங்கு தான் மக்களிடையே உயர்வு தாழ்வு கூறாமல் இருக்கிறார்கள்!!? பிரச்சனைகள், உயர்ந்த குடும்பம், தாழ்ந்த குடும்பம் போன்ற அமைப்புகள் எல்லா மதத்திலும் இருக்கின்றன.

வலைப்பதிவில் லிங்க் கொடுப்பது என்பது உங்கள் அடைப்பலகையில் (template) links, Edit me என்று இருக்கும் இடத்தில் URL ஐ இட வேண்டும், அவ்வளவே!

நீங்கள், உங்கள் வலைப்பதிவில் என் பதிவிற்கு லிங்க் கொடுப்பீர்களேயானால், மிக்க மகிழ்ச்சி.

நன்றி,
ஷங்கர்.

Vajra said...

வாருங்கள் ஸ்ரீதர்,

டூப்ளிகேட் இண்டர்னெட்டின் இஸ்லாமியத் தீவிரவாதி!! அவர் இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களையும் கன்ன பின்னா வென்று கெட்டக் கெட்ட வார்தைகளால் திட்டுவான்!! அவனைப் பற்றி இனி கவலை படப் போவதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

ஷங்கர்.