January 14, 2007

போகி

Bonfire என்பது வெளிநாடுகளில் பரவலாகச் செய்யப்படும் ஒரு "சந்தோஷத் தீ."
அதுபோல் நம் போகிப்பண்டிகை.

நம்மூரில் இந்திர விழா என்று சொல்லி இந்தியா முழுதும் பலப் பெயர்களில் கொண்டாடப்படும் இந்த Summer Solestice, பொங்கல் தமிழ்நாட்டில். (ஆகவே இது ஒரு இந்துப் பண்டிகை!)

ஆடிப்பாடி மகிழ்ந்து இருக்கவேண்டிய நாட்கள் இவை.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். குஜராத், மஹாராஷ்டிரம், உத்திரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இது மகர ஷங்கராந்தி வாழ்த்துக்கள்.
ஆந்திராவில் "பெத்த பண்டுகா" வாழ்த்துக்கள், கர்நாடகத்தில் "எள்ளு பெள்ள திண்டு, ஒள்ளே மாட்ட ஆடு." (எள்ளுருண்டை தின்று, நல்ல வார்த்தைகள் மட்டுமே பேசு).

இந்த நன்னாளில் பழைய ப்ளாக்கர் கணக்கைத் தூக்கிவிட்டுப் புதிய ப்ளாக்கருக்கு மாற்றம் செய்தாகிவிட்டது.

தமிழ்மண நிரல் துண்டு எந்தப்பிரச்சனையும் இல்லாமல் வேலையும் செய்கிறது. பின்னூட்டங்கள் திரட்டவும் படுகின்றன.