சென்ற வாரம் இரண்டு படங்கள் பார்த்தேன்.
1. The kingdom
2. Paradise now
கிங்டம் என்னும் ஹாலிவுட் படம், FBI ஏஜெண்டுகள் சிலர், சவுதி அரேபியாவில் உள்ள ஒரு அமேரிக்க குடியுருப்புப் பகுதியில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதல் ஒன்றை பற்றி துப்பறியச் சென்று, அங்கு அவர்கள் ஆளாகும் பிரச்சனைகள் பற்றிய படம். முதல் 10 நிமிட படத்தில் 1930 களில் எப்படி சவுது என்னும் இனத்தலைவர்களால் சவுதி அரேபியா உருவானது என்பதும், அதில் அமேரிக்கர்கள் எப்படி உள்ளே வந்தார்கள் என்றும் காட்டியது மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தது.
Paradise now என்னும் திரைப்படம் வெளிநாட்டுப் படவிரிசைப் பிரிவில் ஆஸ்கார் விருதுக்குத் தகுதி பெற்ற திரைப்படம். முக்கியகாம பாலஸ்தீன அரபு மக்கள் வாழ்க்கைப் பிரச்சனையைக் காட்டும் படம். படத்தின் கதை: இணைபிரிய நண்பர்கள் இருவர் தற்கொலைத் தாக்குதல் செய்யத் துணிந்து பின் ஒரு பெண்ணால் முடிவுகளை மாற்றிக் கொள்ளும் கதை. சிலர் இதனை பாலஸ்தீனர்களில் உள்ள moderates அதாவது மிதவாதிகளின் குரல் என்றெல்லாம் எழுதினர். என்னைப் பொருத்தவரை, இதில் மிதவாதக் குரலின் வெளிப்பாடாக அந்தப் பெண்ணைத்தவிர வேறு யாரையும் காட்டவில்லை. ஆறுதலான நல்ல விஷயம், படத்தில் பேசப்படும் அரபு dialect பாலஸ்தீன அரபு மொழி. அது சற்றே ஹீப்ரூவை ஒத்திருக்கிறது. சில பல வார்த்தைகள் இவர்களிடமிருந்து எடுத்து ஹீப்ரூவிலும் அப்படியே பயன் படுத்திக் கொள்கிறார்கள். மற்ற அரபி மொழி பேச்சைவிட பாலஸ்தீன அரபி மொழி கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும். உதாரணமாக கிங்டம் படத்தில் பேசப்படும் அரபி மொழி மிகக் கடினமாக இருக்கும்.
அலி சுலைமான், அஷ்ரஃப் பர்ஹோம் என்ற இரு அரபு நடிகர்கள் இரண்டு படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.