தமிழகத்திற்கு இது தேவையில்லாத ஆராய்ச்சி.
தமிழகம் செய்யவேண்டியது, ராமர் வாழ்ந்தாரா இல்லையா என்ற ஆராய்ச்சி அல்ல. சேது சமுத்திர திட்டம் தக்க பலனை அளிக்குமா இல்லையா என்பதே.
சேது சமுத்திரத் திட்டம், ரூ 87 கோடி ஆண்டுவருமானமாக ஈட்டும் திட்டம்.
2006 ஆம் ஆண்டு மட்டுமே இந்திய அரசு ஹஜ் மானியமாக ரூ 180 கோடி வழங்கியுள்ளது.
இதில் உள்ள "மதச்சார்பின்மையை" ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும், சேதுத் திட்டம் செயல் படுத்துவதால் எத்தகய இலாபத்தை இந்திய அரசு எதிர்பார்க்கிறது என்பது தெளிவுபட வேண்டும்.
படத்தில் இருப்பது சோழர் காலத்து நாணயம். அதில் எழுதியுள்ளது, "சேது" என்று தமிழில்.
சேதுவைப் பற்றியும் அதனைச்சார்ந்த கதையான கம்ப இராமாயணமும் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டுகிறது.
இராமன் எந்த இஞ்சினியரிங் கல்லூரியில் படித்தான் என்று கேட்டு சிரிப்பது, பகுத்தறிவாளர்களின் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டுகிறது.
இதே கருணாநிதி அவர்கள், The DaVinci code திரைப்படத்தையும் புத்தகத்தையும் தடைசெய்த போது இவர்களின் பகுத்தறிவு எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது.
2 comments:
வஜ்ரா,
"தமிழ்பாரதி" திரட்டி-க்கு ஒரு சின்ன தொடுப்பு (சரி, இணைப்பு!) கொடுங்களேன்!
http://www.thamizhbharathi.com/
நன்றியுடன்,
எஸ்.கே
வஜ்ரா... உங்கள் பதிவுகளை இன்று தான் பார்த்தேன்.... உங்கள் கருத்துக்களுடன் என்னவைகள் ஒத்துப்போகின்றன... தொடந்து எழுதுங்கள்... வாழ்த்துகள்!
---
Indian
Post a Comment