November 10, 2009

Le Chant Des Mariées

Le Chant Des Mariées இரண்டாவது உலகப்போரின் போது துனீசியாவில் வாழும் இரு பதின்ம வயதுப் பெண்கள் இடையே இருக்கும் நட்பு பற்றிய கதை. அதில் ஒருத்தி முஸ்லீம், ஒருத்தி யூதப்பெண்.

ஹிட்லர் ஜெரூசலத்தின் தலமை முல்லாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, ஹிட்லரின் நாஜிப்படைகளுக்கு முல்லா நாஜி சலியூட் அடிக்கும் படத்துடன் திரைப்படம் துவங்குகிறது. பிண்ணனியில் பிரஞ்சு மொழி ரேடியோவில் "அரபிகள் பிரஞ்சு காரர்களுடன் இணைந்து யூதர்களால் அடிமை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், நாஜிக்களுக்கு உதவுவதால் துனீசியா மீண்டும் அரபிகள் கையில் வரும், சுதந்திரம் கிடைக்கும்" என்று பிரச்சாரம் ஒலிக்கிறது.
படத்தில் முஸ்லீம் பெண்ணின் பெயர் நூர், யூதப்பெண்ணின் பெயர் மிரியம், நூருக்கு அவனது மாமா பையண் காலிதுக்கு நிச்சயம் செய்கிறார்கள். நூர் திருமணம் நடக்கவேண்டுமென்றால் காலிதுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று நூரின் தந்தை கண்டிஷன் போடுகிறார். காலித் வேறு வழியில்லாமல் நாஜிப்படைகளுக்கு உதவும் வேலையில் இணைகிறான்.

மிரியம் தனது தாயுடன் முதல் மாடி போர்ஷனில் இருக்கிறார். தையல் தொழில் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள். ஒரு நாள் ரேடியோவில் 20000 பிராங்குகள் கொடுத்தால் யூதர்களை உயிருடன் வாழ விடுவதாக அறிவிப்பு வருகிறது. மிரியமின் தாய் ஒரு பணக்கார நடுத்தர வயது யூத டாக்டரை சந்திக்கிறார். அவர் பணம் கொடுத்து உதவுவதாகச் சொல்கிறார். ஆனால் பதிலுக்கு மிரியமை தனக்கு மணமுடித்துத் தரவேண்டும் என்று கேட்கிறார். மிரியமின் தாயும் இந்தப் பொருந்தாத் திருமணத்திற்கு வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்கிறார். மிரியமையும் ஒத்துக்கொள்ள வைக்கிறார். அவர்கள் திருமணமும் நடக்கிறது. நாஜிப்படைகள் காலிதுடன் மிரியம் வீட்டிற்கு வந்து மிரியமின் தாயை மிரட்டிச் செல்கின்றனர். அதை மிரியம் பார்த்து நூரிடன் சொல்ல நட்பாக இருந்த இருவரும் பிரிகின்றனர்.
இந்த இரு பதின்ம வயதுப்பெண்களின் திருமணத்தால் இவர்களுக்குள் இருக்கும் நட்பு எவ்வாறு பாதிப்படைகிறது, பிரிந்த இருவரும் இணைகிறார்களா இல்லையா என்பது தான் மீதி கதை.
துனீசியா வாழ்கை:

நூரின் நிச்சயதார்த்தத்தில் ஆண்கள் எல்லாம் மேல் மாடியில் (belly dancer) குலுக்கு நடன அழகி ஆடவைத்து கிட்டத்தட்ட குடும்ப பேச்சலர்ஸ் பார்டியாக இருக்கிறது. கீழே பெண்கள் ஆடு வெட்டி சமைக்கும் முன் அதன் விரைப்பையை இடுப்புக்குக் கீழ் கட்டிக்கொண்டு ஒரு நடுத்தர வயதுப்பெண் ஆட மற்றவர்கள் சிரித்து மகிழ்கிறார்கள்.
Turkish bath எனப்படும் பொதுக் குளியலறையில் பெண்கள் ஆடையின்றி குழிப்பது போன்ற வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைகடல் பகுதி மக்களுக்கே உரித்தான கலாச்சாரத்தை காட்டுகிறார்கள். ஒரு காட்சியில் நாஜிக்கள் இந்தப் பொதுக் குளியலறைக்கு வந்து யூதப்பெண்களை அள்ளிச்செல்லும் போது நூர் "லாஹிலாஹ இல்லல்லா, முஹம்மது ரசூலல்லா" என்று சொல்லச் சொல்லி மிரியம் சொல்ல அவளையும் முஸ்லீம் என்று விட்டுவிடுகிறார்கள்.

படத்தில் பிரஞ்சு பிரதான மொழியாகப் பேசப்பட்டாலும், ஜெர்மன், அரபி மொழிகள் அதிகம் பேசப்படுகின்றன. சப்டைடில் இல்லாமல் பார்க்கவே முடியாது. கரின் அல்போ எழுதி இயக்கியுள்ளார்.
2009 palm spring film festival ல் திரையிடப்பட்ட படம்.

17 comments:

உங்கள் ராட் மாதவ் said...

நல் வணக்கங்கள்...
“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் சிறுகதைப் பரிசுப் போட்டி...
மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழுவினரால், தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு முதல் பரிசாக ரூபாய். 2,000/- (இந்திய ரூபாய் இரண்டாயிரம்) வழங்கப்படும்
மேலதிக விபரங்களுக்கு
http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

தருமி said...
This comment has been removed by the author.
thiruchchikkaaran said...

சகோதரர் வஜ்ரா அவர்களே,

"பொய்மையிலிருந்து வாய்மைக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு"

எவ்வளவு சிறப்பன வார்த்தைகள். ஆன்மீக சிந்தனையை தூண்டும் வார்த்தைகளை படித்து முடிக்கு முன்னே கீழே புலன் உணர்ச்சியை தூண்டும் படம்! உண்மையில்லாத நிலையிலிறிந்து உண்மையை எப்படி தேடி அடையப் போகிறீர்கள்? மாயையைக் களைந்தால் உண்மை தெரியும் என்பார்கள். பெண்களின் உள்ளாடைகளை களைந்து உண்மையை கண்டு பிடித்து வெளிச்சத்துக்கு போகலாமோ என்று என்னும்படி படம் போட்டு இருக்கிறீர்கள்.

"பொய்மையிலிருந்து வாய்மைக்கு இருளிலிருந்து வெளிச்சத்திற்கு"
வார்த்தைகளையாவது எடுத்து விடுங்கள். அவை பிரகதாரண்யா உபநிசத்தில் உள்ள வார்த்தைகள். அல்லது இந்த வார்த்தைகளுடன் இந்தப் படத்தையும் சேர்த்து போடுவதுதான் இந்தக் கால பிராமணீயமா?

வஜ்ரா said...

திருச்சி,
அவர்கள் களட்டுகிறார்களா மாட்டுகிறார்களா என்று உமக்குத் தெரியுமா ?
இதெல்லாம் பார்த்தாலே புலன் உணர்ச்சி தூண்டப்படுகிறது என்றால் பிரச்சனை உங்கள் புலனடக்கத்தில் உள்ளது.

thiruchchikkaaran said...

வஜ்ரா அவர்களே,

அவர்கள் உடைகளை கழட்டு கிறார்களா அல்லது மாட்டுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

இவ்வளவு வளர்ந்த பெண்ணுக்கு உடைகளை அணிய உதவி செய்ய ஒரு வாலிபன் தேவையா என்பது பற்றி எல்லாம் நான் ஆழமாக போக விரும்பவில்லை.

இந்தப் படத்தையோ, அல்லது இது போன்ற படங்களையோ பார்க்கும்போது என் மனம் பாதிப்பு அடைகிறது என்பது உண்மையே - அப்படி பாதிப்படையாத அளவுக்கு மனக் கட்டுப்பாட்டை உள்ள ரிஷி நிலையை நான் இன்னும் அடையவில்லை.

மற்றபடி நான் உங்களுக்கு விடுத்தது வெறும் வேண்டுகோள் மாத்திரமே . அதை ஏற்ப்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை.

நீங்கள் முழு பிரகதாரண்ய உபநிடதத்தையும் எழுதி ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும், ஒரு ஆடை அவிழ்ப்பு படத்தையோ அல்லது ஆடை மாட்டும் படத்தையோ போட்டாலும் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. தளம் உங்களுடையது!

வஜ்ரா said...

திருச்சி,

எனக்கு பிருகதாரண்ய உபனிடத்தை இழிவு படுத்தும் நோக்கம் இல்லை.
அதை என் மேல் கற்பிக்காதீர்கள்.

உடை அணிய உதவி செய்வது உயிர் தோழி...வாலிபன் அல்ல.

இரு பெண் பிள்ளைகளுக்கிடையான நட்பைப்பற்றி படம் எடுத்துக்காட்டுவதும்....அந்தப்படத்துக்கு விமர்சனம் எழுதுவதும் வேதத்திலோ, உபனிடதத்திலோ தவறு என்று சொல்லவில்லை. ஆகவே ஆளை விடுங்கள்.

thiruchchikkaaran said...

படத்தை விமரிசிக்கலாம். தவறேயில்லை.

இந்த ஓவியம் கொஞ்சம் உறுத்தலான விடயம். உபநிடத வார்த்தைகளுக்கு கீழே அது கோவிலுக்கு, நூலகத்துக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடை போல உள்ளது.

உங்களுக்கு உபனிடத்தை இழிவு படுத்தும் நோக்கம் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் அறியாமலே அப்படி செய்து விடக் கூடாது என்பதே என் கருத்து.

உங்களை விமரிப்பது என் நோக்கம் அல்ல, நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொண்டிடருபீர்கள் என நம்புகிறேன். நன்றி.

பெரிய இவன் said...

வஜ்ர, திருச்சிதான் மனநல பாதிக்கபட்ட ஒரு மிடில் கிளாஸ் கேசுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும், பிரயதானபட்டு அதுக்கு பதில் வேற சொல்றீங்க. அது பாட்டுக்கு ஒரு மூலையில் இருந்திட்டு போகட்டும்.

மற்றும், இந்த திரை படத்தை ரெபர் செய்ததுக்கு நன்றி.

வஜ்ரா said...

வினவு குழுவே,

ஆனாலும், கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவர் சங்கம், ரூம் போட்டு யோசிப்பவர் சங்கம் என்ற பெயர்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. எஸ்.எம். எஸ்ஸில் வருவது போல் வந்து அடித்திருக்கிறான். அதை எவன் யோசித்து வைத்தானோ அவன் வாழ்க.

என் பெயரில் எக்கச்செக்க அனானி ஆட்டங்கள் ஆடப்பட்டுவிட்டன. இன்னும் என்னையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொண்டு என் பெயரில் அனானி ஆட்டம் அதுவும் வினவு போன்ற தளங்களில் வந்து அடித்து ஆடுகிறார்கள் என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
அவர்களுக்குத் தெரிந்த அளவு கூட எனக்குத் தமிழ் ஒழுங்காகத் தெரியாது. கம்யூனிஸக் கழிசடைகளும், பாட்டாளி வர்க்கத்துப் பெண்குறிகளும் (எல்லாம் நீங்கள் பயன் படுத்தும் சொற்கள் தான்!) நிறைந்து காணப்படும் உங்கள் தளம் எனக்கு ஒவ்வாத தளம். இங்கெல்லாம் வந்து நான் பின்னூட்டம் போடுவதில்லை. எனக்கு வேற வேலை உள்ளது. உங்களைப்போல் இப்படியெல்லாம் எழுதி நான் ஒன்றும் எலும்புத்துண்டுக்கு வாலாட்டவேண்டிய அவசியம் எனக்கில்லை.
இது நான் வஜ்ரா என்ற வலைப்பதிவு தளத்துக்குச் சொந்தக்காரன் தான் இட்டேன் என்பதற்குச் சான்றாக எனது வலைப்பதிவில் இதை இட்டுவைக்கிறேன்.

Kannan said...

மிகவும் அருமை

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous said...

பொய்யை மூலதனமாக வைத்து புரட்சி செய்ய வந்த வினவு இணையதளத்தின் பித்தலாட்டங்கள்புரட்சி புரட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய வினவின் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் படிக்க

இங்கே கிளிக் பண்ணுங்கள்
வினவின் பித்தலாட்டம் அம்பலமாகிறது
http://ethirkkural.blogspot.com/2010/10/blog-post.html

அருள் said...
This comment has been removed by a blog administrator.
அருள் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு விவேகம் கிடையாது என்று ஒருவர் திண்ணையில் எழுதுகிறார்.

படித்தீர்களா ?

அவர் சொல்லுகிறார்:

---கிடா வெட்டிப் பொங்கலிட்டுத்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்றிருந்தால் விவேகம் வரும் வரை அதுவும் நீடிப்பதில் முரண் இல்லை. ஈவிரக்கமின்றித் துன்புறுத்துதலும் குருர இச்சையுடன் வேதனைப் படுத்தி மகிழ்தலும் தகாது என்று உணர்த்தவே ஆன்ம நேயம் வலியுறுத்தப்படுகிறது.--


http://puthu.thinnai.com/?p=4828

raju said...


HI...
There is a lot of good information on this website. Very well written. It is useful for many people. This is a web page that everyone should see and read. Follow each one.
Thank you so much for giving me such good information..
this is my telugu video blogs :
telugu video songs Download 2019
telugu video songs Download
telugu video songs

Slimming Gummies said...

Is your Diet Pills getting stale? I feel you'll discover that there's an overwhelming variety of Diet Pills available. There might be no other way to put it. It is outstanding at this moment. Keto Diet is one of the toughest things I have found. Ponder this, "Build a better Diet Pills and the world will beat a path to your door." It was never in the cards that I would sacrifice Keto Diet for the unlikely advantages of Keto Diet. That clock is ticking. You see? With several this joke, that is almost imperative.

https://www.offerplox.com/weight-loss/slimming-gummies/

https://www.facebook.com/cortexidrops
https://www.offerplox.com/weight-loss/ketoxplode-avis/
https://www.offerplox.com/cbd-products/cbd-care-gummies-au/
https://www.offerplox.com/cbd-products/alpha-bio-cbd-gummies/
https://www.facebook.com/ULTRAProstaCare/
https://usanewsindependent.com/2023/06/glucolean-reviews-must-read-before-your-buy-glucotrust-blood-sugar-formula-ingredients-side-effects-explained/
https://usanewsindependent.com/2023/06/berbamax-reviews-legit-berberine-weight-loss-supplement-berbamax-berberine-hcl-for-diabetes-ingredients-scam-alert/
https://usanewsindependent.com/2023/06/bioscience-cbd-gummies-2023-reviews-update-maximum-strength-bio-science-gummies-thc-free-bioscience-cbd-capsules-ingredients/