October 20, 2007

கரன் தாபரும் நரேந்திர மோடியும்

இந்த வார devil's advocate நிகழ்சிக்காக கரன் தாபர் காந்திநகரில் நரேந்திர மோடியை சந்திக்கச் சென்றிருக்கிறார். அங்கே நேர்காணலுக்கு சம்மதித்த குஜராத் முக்கிய மந்திரி மோடி தன் நவராத்திரி விரதத்திற்கு நடுவில் கரனின் கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். நேர்காணல் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடமே அதை முடித்துக் கொண்டு மோடி அவர்கள் வெளியேறிவிட்டார் என்று செய்திகள் வந்தது.

ஏன் ?

சும்மா மெல்லும் வாயில் அவலைப் போட்டுவிட்டாரா மோடி ?

மோடி இதற்கு முன் நேர்காணலே கொடுக்கவில்லையா ?
இல்லை Times now என்ற சேனலில்  கொடுத்தார். 

மோடியை ஒரு ஹிட்லரைப் போன்ற கொலைகாரன் என்று வர்ணிக்கும் சிலர் (முக்கியமாக சில NGOக்கள்) கேட்கும் கேள்வியைத்தான் திரும்பத் திரும்ப கரன் அவர்கள் மோடியிடம் கேட்டிருக்கிறார் அந்த நேர்காணலில்.

கேள்வி:

"குஜராத் கலவரத்திற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கோருவீர்களா ?"

என்பது தான்.

ஏன் கரன் அவர்கள் அந்தக் கேள்வியில் அவ்வளவு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று அவருக்குத் தான் வெளிச்சம்.

மன்னிப்பு கேட்கவேண்டியவர்கள் யார் ?

ஏன் குஜராத் முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும் ?

நடந்தது கலவரம். அதில் பங்கு இரு சமூகத்தினருக்கும் சமமாக உள்ளது. . காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மற்றும் அறிவு சீவிக்கள் அடிக்கும் "pogrom", "holocaust" ஜல்லி அல்ல.

(ஹோலொகாஸ்ட் போன்றதொரு கொடூரத்தைக்கூட இந்த செகுலர் சிந்தனைவியாதிகள் விட்டு வைக்கவில்லை! அதைக்க்குட ஜல்லியடிக்கப் பயன்படுத்தி 6 மில்லியன் மனித உயிர்களுக்கு மிகப்பெரும் துரோகம் இழைத்துவிட்டார்கள்)

அந்த குஜராத் கலவரத்தினை "செகுலர்" முலாம் பூசி (இந்துக்கள் நடத்திய வண்கொடுமை என்று சொல்லி)  அடிக்கடி மக்கள் மத்தியில் பரப்பி சமுதாயப்பிரிவினைக்கு மேலும் வலு சேர்ப்பவர்கள் இந்த மீடியாக்கள். ஞாயமாகப் பார்த்தால் அவர்கள் தான் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். செய்வார்களா ?


அந்தக் கலவரத்தையே காரணம் காட்டி குஜராத்தை எப்பவுமே மட்டம் தட்டும் சில NGO க்கள் செய்யும் வேலையை, கரன் செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன ?

1984 சீக்கியப் படுகொலைகள் நடந்த போது அப்போதய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி பேசியது என்ன ? அதற்கு அவர் எத்தனை முறை மன்னிப்பு கேட்டார் ?

கஷ்மீரிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட இந்துக்களின் கதி என்ன ? அதற்கு எந்த கஷ்மீர் முதல்வர் இதுவரை மன்னிப்பு கேட்டுள்ளார் ? எத்தனை முறை கேட்டுள்ளார் ?

தற்பொழுது மிகப்பெரும் பிரச்சனை நரேந்திர மோடிக்கு இருக்கும் மக்கள் ஆதரவு தான் என்று தோன்றுகிறது. 

இரண்டு முறை முதல்வர் ஆனவர் தன் மாநிலத்தில் நலனில் அக்கரை கொண்டு செயல்படும் இந்தியாவின் சிறந்த முதல்வர் என்று அவர் பெருமைகள் இருக்க, அவருடைய மாநிலத்தில் இருக்கும் முன்னேற்றத்திற்குக் காரணம் என்ன என்று கேள்விகள் எழுப்பி பேட்டியை நடத்தாமல் ஏன் கரன் தாபர் அவர்கள் 2002 ல் நடந்த ஒரு சம்பவத்தை மட்டுமே வைத்துக் கொண்டு கேள்வி எழுப்பவேண்டும் ?


மோடி செய்த ஒரே தவறு, கரன் தாபருடனான நேர்காணலுக்கு சம்மதித்தது.

September 19, 2007

கருணாநிதியும் சேதுராமனும்

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அருளிய பொன் மொழிகளில் ஒன்று, ராமன் என்று யாரும் இருந்ததற்கான சரித்திரப்பூர்வமான சான்று இல்லை என்பது. 
தமிழகத்திற்கு இது தேவையில்லாத ஆராய்ச்சி.

தமிழகம் செய்யவேண்டியது, ராமர் வாழ்ந்தாரா இல்லையா என்ற ஆராய்ச்சி அல்ல. சேது சமுத்திர திட்டம் தக்க பலனை அளிக்குமா இல்லையா என்பதே.
சேது சமுத்திரத் திட்டம், ரூ 87 கோடி ஆண்டுவருமானமாக ஈட்டும் திட்டம்.
2006 ஆம் ஆண்டு மட்டுமே இந்திய அரசு ஹஜ் மானியமாக ரூ 180 கோடி வழங்கியுள்ளது.
இதில் உள்ள "மதச்சார்பின்மையை" ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும், சேதுத் திட்டம் செயல் படுத்துவதால் எத்தகய இலாபத்தை இந்திய அரசு எதிர்பார்க்கிறது என்பது தெளிவுபட வேண்டும்.
படத்தில் இருப்பது சோழர் காலத்து நாணயம். அதில் எழுதியுள்ளது, "சேது" என்று தமிழில்.
சேதுவைப் பற்றியும் அதனைச்சார்ந்த கதையான கம்ப இராமாயணமும் தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டுகிறது.
இராமன் எந்த இஞ்சினியரிங் கல்லூரியில் படித்தான் என்று கேட்டு சிரிப்பது, பகுத்தறிவாளர்களின் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டுகிறது.

இதே கருணாநிதி அவர்கள், The DaVinci code திரைப்படத்தையும் புத்தகத்தையும் தடைசெய்த போது இவர்களின் பகுத்தறிவு எங்கே போனது என்று யாருக்கும் தெரியாது. 

August 26, 2007

போலி மதச்சார்பின்மை = குண்டுவெடிப்புகள்

குண்டுவெடிப்புகள் போன்ற வெறிச்செயல் செய்யும் ஒரு கூட்டத்துக்கு முதுகு சொறிந்துவிடும் வோட்டு வங்கி அரசியல் நடப்பதால் தான் குண்டுவெடிப்புகள் அதிகரிக்கின்றன.

CNN-IBN தொகுத்த சில குண்டு வெடிப்புச் சம்பவங்கள்.

கடந்த சில ஆண்டுகாலத்தில் நடந்த குண்டுவெடிப்புகள் இவை :
  1. ஆகஸ்ட் 2007, ஹைதராபாத் குண்டு வெடிப்பு
  2. மே 2007, மக்கா மசூதி குண்டு வெடிப்பு, அதே ஹைதராபாதில்.
  3. செப்டம்பர் 2006, மெலகாவ் மசூதியில் குண்டுவெடிப்பு.
  4. ஜூலை 2006, மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு.
  5. மார்ச் 2006, வாரணாசியில் தொடர் குண்டுவெடிப்பு.
  6.  அக்டோபர் 2005, தில்லியில் தொடர் குண்டுவெடிப்பு தீபாவளிக்கு முந்தய நாள் இரவு நிகழ்த்தப்பட்டது.
  7. ஆகஸ்ட் 2003, மும்பையில் டாக்சியில் குண்டுவைத்து வெடிக்கச் செய்தனர்.
  8.  மார்ச் 1993, மும்பையில் டைகர் மேமன், தாவூத் கூட்டாளிகளால் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு.
காட்கோபர் மும்பையில் 2003ல் நடந்த குண்டுவெடிப்பைத் தவிர, அனைத்துச் செயல்களுமே காங்கிரஸ் மாநிலத்திலும் மத்தியிலு ஆட்சியில் இருக்கும் போது தான் நிகழ்த்தப்பட்டுள்ளது. 
காங்கிரஸ் மற்றும் போலி மதச்சார்பின்மைவாதிகளால் தான் இஸுலாமிய அடிப்படைவாதிகளின் குண்டுவெடிப்புகள் அதிகரிக்கின்றன என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.