December 13, 2006

அனானிமஸ் அமீபா

ஒரு சர்தார் ஜி ஜோக்,

சர்தார் ஒரு வசந்த் அன் கோ வுக்குப் போயி அந்த ஃபிரிட்ஜ் என்ன விலை என்று கேட்க, கடை முதலாளி "நான் முட்டாள்களுக்கு எல்லாம் ஃப்ரிட்ஜ் விக்கிறதில்ல" என்று சொன்னான்.

சர்தாருக்கு வந்ததே கோவம், உடனே வீட்டுக்குப் போயி பாய் மாதிரி வேஷம் போட்டுகிட்டு அதே கடைக்கு போய் அந்த ஃப்ரிட்ஜ் என்ன விலை என்று கேட்க, கடை முதலாளி தெரிந்து கொண்டு "ஏய் ஏற்கனவே சர்தார் மாதிரி வந்த ஆள் தானய்யா நீ, அப்பவே சொன்னேன்ல நான் முட்டாள்களுக்கு எல்லாம் ஃப்ரிட்ஜ் விக்கிறதில்லன்னு ! ஏன்ய்யா வந்து தொந்தரவு பண்ற ?" என்றான்.

ச்செ! என்று வெறுத்த சர்தார் இன்னொரு நாள் நன்றாக மொட்டை அடித்து ஷேவ் எல்லாம் செய்துகொண்டு அதே கடைக்குப் போய் "அந்த ஃப்ரிட்ஜ் என்ன விலை?" என்று கேட்க கடை முதலாளிக்கு வந்ததே கோவம், "யோவ் மொட்டை அடிச்சுட்டு வந்தா, ஆள் தெரியாதா?, போய்யா முட்டாள், ஏற்கனவே சொன்ன மாதிரி நாங்க முட்டாப்பசங்களுக்கெல்லாம் ஃப்ரிட்ஜ் விக்கிற மாதிரி இல்ல!" என்று காட்டமாக கத்திவிட, சர்தார் மெதுவாக, "ஐயா, நான் எவ்வளவு கஷ்டப் பட்டு வேஷத்த மாத்தி, கொரல மாத்தி பாஷைய மாத்தி எல்லாம் வந்தும் நீங்க கண்டு புடிச்சுட்டீங்களே! எப்புடிய்யா ?" என்று பவ்யமாக கேட்டான்.

"யோவ், நீ கேட்டது ஃப்ரிட்ஜ் இல்லைய்யா வாஷிங் மெஷின்!" என்று பதில் வந்தது.

..

பி.கு., தமிழ்மணத்தில் "அனானிமசாக" வந்து சிலர், தாங்கள் யார் என்று மீண்டும் மீண்டும் காட்டிக் கொண்டுள்ளனர். அவர்களைப் புண்படுத்துவதற்காக இந்த ஜோக் சொல்லவில்லை.

13 comments:

Anonymous said...

சிரித்து வயிறு வலிக்கிறது.

வடிவேலு மொழியில் "உட்காந்து யோசிச்சுட்டு" வர்றாங்களோ!!!

சர்தாரின் இந்த வேடம் எத்தனை நாளுக்கு தெரியல.

Hariharan # 26491540 said...

ஷங்கர்,

அமீபாங்குறது ஒரு செல் உயிரினம். பகுத்தறிவு எல்லாம் வேலை செய்ய இயலாத உயிரினம்!

அதனாலயே சிந்திக்காமல் பிறரை மீண்டும் மீண்டும் நிந்திக்க தொடைதட்டி வலம் வருகிறது!

அமீபா ...தொடைதட்டின்றதால ரம்பாவை தனிமனிதத் தாக்குதல்னு பதிவு போட்டாலும் ஆச்சரியமில்லை
:-)))

Anonymous said...

வணக்கம் திரு.வஜ்ரா சங்கர் அவர்களே,

இந்த சல்மா அயூப்,மாயவன், இட்லிவடை, யாரோ ஒருவர், முகமது யூனூஸ், சர்வாண்டஸ் கிருஷ்ணன், ராபின்ஹூட், பஜ்ஜி, சொஜ்ஜி, கட்டபொம்மன், குறள் இப்போது கடைசியாக முனிவேலு... இதெல்லாம் யார் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?

bala said...

//அமீபாங்குறது ஒரு செல் உயிரினம். பகுத்தறிவு எல்லாம் வேலை செய்ய இயலாத உயிரினம்!//


ஹரிஹரன் அய்யா,

ஆனாக்க, திராவிட பகுத்தறிவு பாசறையிலே, 4 அல்லது 5 ப்ரெயின் செல்களுக்கு மேலே இருக்கிற மனுஷங்களுக்கு, பகுத்தறிவு செர்டிஃபிகேட் குடுக்கமாட்டோம்னு சொல்றாங்க.

பாலா

முகமூடி said...

அய்யய்யோ... என்ன காரியம் செஞ்சீங்க.. இப்பலேர்ந்து எங்க மெண்டலய்யா செய்யப்போற எல்லா காரியத்துக்கும் நீங்க அத ப்ரவோக் பண்ணி எழுதிய இந்த பதிவுதான் காரணம்.

இவண்,
முற்போக்கு தி.சங்கம்
மாங்காமடையனூர் (கிளை)
வெளங்காப்பயலூர் (போஸ்ட்)
கூமுட்டை மாவட்டம்

Anonymous said...

எல்லேராம் மறு அவதாரம் எடுத்து வந்தாச்சு போல.

விட்டுது சிகப்பு பதிவுல எழுத போகலியா?

Vajra said...

முகமூடி ஐயா,

வாங்க. Long time no see! ?

நான் எந்த மெண்டலையும் ப்ரவோக் பண்ணவில்லை.

சிலர் ப்ரவோக் ஆனால் அவர்கள் மெண்டல்கள் என்று தங்களை உறுதி செய்துகொள்வார்கள் என்பது போக, முற்போக்கு வயிற்றுப் போக்கு கழகங்கள் வந்து வால் பிடிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

hariharan,

சரியாகச் சொன்னீர்கள். ஆனால் அமீபா கூட சூடு சொறணை உள்ள ஒரு செல் உயிரினம். பகுத்தறிவை அதற்குச் சூட்டி அதைக் கேவலப்படுத்தவேண்டாம் என்பது என் எண்ணம்.

பாலா,

நன்றி.

சல்மா அயூப்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அனானிமஸ்,

நன்றி. நீங்கள் கேட்ட கேள்வியை நேராக சம்பந்தப் பட்டவர்களையே கேளுங்கள். என் பதிவில் பின்னூட்டமாக பிறரைக் கேட்டு உங்கள் ஊத்துக்கு என் பதிவை ஊறுகாயாக்கவேண்டாம்.

மேலும் இந்தப் பதிவு யாரையும் குறிப்பது அல்ல என்று specific ஆகச் சொல்லியுள்ளேன்.

Anonymous said...

அமீபாவாவது ஒரு செல் உயிரி.

பாப்பான் அதுவும் இல்லாத பிணம்.

Vajra said...

anonymous

நன்றி.

செந்தழல் ரவி said...
This comment has been removed by a blog administrator.
Vajra said...

ரவி அவர்களே,

உங்கள் பின்னூட்டம் வெளியிட்ட பிறகு தான் தனி மடல் என்பதை கவனித்தேன்.

Sorry.

கெட்ட பின்னூட்டம் இருக்கட்டுமே, அவசரப்பட்டவர், அவரே தூக்கட்டும்.

ஆதித்யன் said...

அந்த நரிக்கு வால அத்து புட்டத்துல சூடும் போட்டாச்சு. இனி அது எந்த வேசத்துல வந்து ஊளவுட்டாலும் சுளுவா கண்டுக்கலாம் ;-)

Anonymous said...

//அந்த நரிக்கு வால அத்து புட்டத்துல சூடும் போட்டாச்சு. இனி அது எந்த வேசத்துல வந்து ஊளவுட்டாலும் சுளுவா கண்டுக்கலாம் //

கோந்து போட்டு ஒட்டி வேற பேர்ல வரவாமாட்டாய்ங்க ? பொது இடத்துல ஆய் போறவங்கள ஏன் கண்டுக்கறீங்க ? மூக்க புடிச்சுட்டு போய்க்கினே இருக்க வேண்டியதுதான் . வேற வழி , நாங்கெல்லாம் ஸிரீரங்கத்துல "பெரியபாறைய" கண்டுக்காம போகல ?