April 2, 2007

சமீபத்தில் பார்த்த படங்கள்

1. Happy Feet
2. The Departed
3. Children of Men

happy feet:

அழிவின் விழிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் emperor penguin கள் தங்கள் குரல் வழத்தால் ஜோடியைத் தேர்ந்தெடுக்கும் முறையை ஏக இறை கொள்கை போல் கடைபிடித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் காஃபிர் போல் குரல் வளம் இல்லாத ஆனால் நன்கு நடனமாடக்கூடிய ஒரு குட்டி பிறக்கிறது. அது தன் வாழ்கையில் எத்தகைய கஷ்ட நஷ்டங்கள் அனுபவிக்கிறது, எதனால் தன்னினம் அழிவின் விழிம்பிற்குத் தள்ளப்பட்டுவருகிறது என்ற காரணத்தை அறியத் துடித்து தேடலில் ஈடுபடுவது என்று animated திரைப்படம் என்றாலும் விருவிருப்புக்குச் சற்றும் குறைவின்றி அதே நேரத்தில் இடையே gobal warming funda க்களையும் நுளைத்து அருமையான படம். எல்லோரும் பார்க்கவேண்டிய படம்.

The Departed:

குற்றவாளிக்களிடையே ஒரு போலீஸ் ஒற்றன், போலீஸ்களிடையே ஒரு கிரிமினல் ஒற்றன், இருவரும் சந்தித்தால் ? லியொனார்டோ டிகாப்ரியோவும், மாட் டிமொன்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். நல்ல ஆக்ஷன் த்ரில்லர்.

237 முறை fu*k என்ற பதத்தைப் பயன்படுத்திய படம் ஆஸ்கார் வாங்கி சரித்திரம் படைத்திருக்கிறதாம்...சொல்கிறார்கள்.

Children of Men:

பதினெத்து ஆண்டுகள் ஒரு குழந்தை கூடப் பிறக்கவில்லை என்றால் ?

2027 ல் நடக்கும் இந்த sci-fi thriller ல், க்ளைவ் ஓவன் முக்கிய கதாப்பாத்திரமான தியோ வாக நடித்திருக்கிறார். படம் ஆரம்பிக்கும் போது ஒரு காஃபி ஷாப்பில் தொலைக்காட்சி செய்தியில் உலகின் மிக இளமையான மனிதர் கொலைசெய்யப்பட்டார் என்பது. அவருக்கு வயது 18. அந்த செய்தி முடிந்து சில நொடிகளில் தியோ வெளியில் வந்து காஃபியில் தன் பிரியமான "விஸ்கி" மிக்ஸிங்க் செய்யும் போது "பூம்"!! வெடிகுண்டு, தற்கொலைப்படைத் தாக்குதல். அல்லாஹ் ஹு அக்பர் கோஷங்கள். ப்ரொலெடேரியட் புரட்சிகள் என்று படம் எக்கச்செக்க திடீர் திருப்பங்களுடன் செல்கிறது. தியொவின் ex காதலி ஜூலியன் பிரிட்டனில் immigrants rights க்காகப் போராடும் ஒரு புரட்சிகர அமைப்பின் அங்கம் வகிக்கிறாள். அதில் ஒரு கருப்பினப் பெண் கர்பமாக இருப்பது தெரியவே அரசியல் லாபத்திற்காக ஜூலியனை கொன்றுவிடுகின்றனர்..எப்படி அந்த கர்பமான பெண்ணை அரசியல் லாபத்திற்காக புரட்சி செய்யும் கூட்டத்திடமிருந்து காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. 2007 ஆஸ்கருக்காக நாமினேஷனில் இருக்கும் படம். சமீபத்தில் தான் DVD வெளிவந்துள்ளது.


P.D. James ன் இதே பெயரில் வெளிவந்த நாவல் கதையை திரைப்படம் ஆக்கியிருக்கிறார்கள்.

படத்தில் ஏன் மனித குலத்துப் பெண்கள் கருத்தரிக்காமல் போனார்கள் ? இந்த infertility க்கான காரணம் என்ன ? என்றெல்லாம் எந்த விளக்கமும் இல்லை! என்பது உருத்திக் கொண்டே இருக்கும் கேள்வியாக இருந்தது.

No comments: