April 26, 2007

Das leben der anderen

பிறரது வாழ்க்கை ஏன்று அர்த்தம் வரும் இந்தத் திரைப்படம் என்னை மிகவும் பாதித்த படமாகவே நான் கருதுகிறேன். ப்ஃளோரியான் ஹென்கெல் ஃபோன் டோன்னெர்ஸ்மார்க் என்ற இயக்குனரால் 2006 ல் இயக்கி வெளியிடப்பட்ட படம். இது அவரது முதல் படமும் கூட. முதல் படத்திலேயே ஆஸ்கரைத் தட்டிவிட்டார்.

GDR அல்லது DDR என்று அழைக்கப்பட்டு வந்த முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் நடக்கும் கதை. ஜார்ஜ் ட்ரேமன் என்பவர் பிரபலமான எழுத்தாளர் மற்றும் நாடக ஆசிரியரும் ஆவார். சோஷியலிச சித்தாந்தத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டும் நாடகங்களை எழுதி இயக்கி வெளியிடுபவர். அவரது நாடகங்களில் நடிக்கும் நடிகை கிரிஸ்டா மரியா என்ற பெண்ணுக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. இருவரும் ஒரே வீட்டில் வாழும் அளவுக்கு முன்னேறிய நட்பு. இவருமே சோஷியலிச சித்தாந்தத்தில் மிகுந்த ஈடு பாடு காட்டுபவர். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் சோஷியலிச சித்தாந்த நம்பிக்கையில்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் மேல் சந்தேகம் கொண்டு அவர்களை கண்காணிக்க உத்தரவு பிரப்பிக்கிறார் ப்ரூனோ ஹெம்ப் என்கிற மந்திரி. இத்தகைக ஆப்பிரேஷன்களைச் செய்யவே அப்போதய கிழக்கு ஜெர்மனியில் சிறப்பு காவல் படை இருந்திருக்கிறது. அதன் பெயர் STASI. இத்தகைய ஸ்டாஸி ஏஜண்டாக வருகிறார் வைஸ்லர் என்பவர். படத்தின் கதையே இவர் மூலமாகச் சொல்லப்படுவதாக அமைந்திருக்கிறது.

வைஸ்லர் ட்ரேமேனை கண்காணிக்க அவரது வீட்டின் மூலை முடுக்கெல்லாம் மைக்ரோஃபோன்களை மாட்டி 24 மணி நேரமும் கேட்டுக்கொண்டே கண்காணிக்கிறார். நித்தம் ரிப்போர்ட் டைப் செய்து அவரது சுப்பீரியருக்கு அனுப்புகிறார். ட்ரேமேன் மற்றும் க்ரிஸ்டா மரியாவின் வாழ்க்கையினால் கொஞ்சம் கொஞ்சம் அவரும் பாதிக்கப்படுகிறார். ட்ரேமேன் தன் சகாக்களுடன் இணைந்து மேற்கு ஜெர்மனியின் ஊடகதத்திற்கு ஒரு கட்டுரையை எழுதி அனுப்புகிறார், அதுவும் எப்படி கிழக்கு ஜெர்மனியில் தற்கொலைகள் அதிகம் நடக்கின்றன என்று. ஸ்டாஸிக்கள் உஷாராகி, வைஸ்லரைக் கேட்கின்றனர். வைஸ்லர் சரியான சமயத்தில் ட்ரேமேனைக் காப்பாற்றிவிடுகிறார்.

ஒருவரை இப்படியும் ஒரு நாடு கண்காணிக்குமா என்று அதிர்ச்சியில் இருந்த எனக்கு கடைசியாக கிளைமாக்ஸில் மிகப்பெரிய அதிர்ச்சிகள் காத்திருந்தன. ட்ரேமான் போன்ற பிரபலங்களை மட்டுமே கண்கானிக்கவில்லை, பல மில்லியன் மக்களையும் அவர்களது அந்தரங்க வாழ்க்கையையும் கண்காணித்துள்ளனர் என்பது தான் அந்த அதிர்ச்சி.

ஒரு கட்டத்தில் தன் காதலி கிரிஸ்டா மாரியாவை இழந்து நிற்கும் ட்ரேமேன் எழுதுவதை நிறுத்திவிடுவார். அப்போதுகூட அவருக்கு அவரது வீடு கண்காணிக்கப்படுகின்றது என்ற உண்மை தெரியாது. ஆனால் பெரில்ன் சுவர் உடைந்து கடைசியில் தான் நம்பிய அந்த மந்திரியே சொல்லும் போது அதிர்ந்து போய் விடுவார். அவரை யார் கண்கானித்தது என்ற உண்மை அறிந்து கொண்டு பின்னர் ஒரு புத்தகமாக வெளியிடுவார். அந்தப் புத்தகத்தை அந்த கண்காணிப்பாளரான வைஸ்லருக்கே சமர்பணம் செய்வார். இதில் ஐரனி என்னெவென்றால் வைஸ்லரும், ட்ரேமேனும் படத்தில் பேசிக் கொள்ளும் காட்சியே இல்லை. ஆனால் கடைசியில் தன் அந்தரங்கத்தை கண்காணித்த வைஸ்லருக்கே தன் புத்தகத்தை சமர்பணமாக்கும் அளவுக்கு மதிப்பு கொடுக்கிறார்.

எப்படி சோசியலிச நாட்டில் மேற்குலகைப் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் நாம் நம் அரசியல் வாதிகள் அதுவும் முக்கியமாக கம்யூனிஸ்டுகள் சொல்வது போலவே இருக்கிறது.

5 comments:

Anonymous said...

தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு ஆடும் பார்ப்பன நாய்களால் புதுச்சேரியில் ஏன் ஆடமுடியவில்லை என்று யோசித்துப் பார்த்தீர்களா?

அங்கே உங்கள் ஜெயலலிதாவின் பருப்பு வேகாது. அதோடு மட்டுமல்லாமல் எங்கள் மருத்துவர் அய்யாவின் ஆதிக்கம் பாண்டிச்சேரியில் ரொம்ப அதிகம்.

எத்தனை பார்ப்பனர்களும் எத்தனை பார்ப்பனக் கட்சிகள் வந்தாலும் உங்களால் புதுச்சேரியின் மசுரைக்கூட புடுங்க முடியாது.

மிஷனரி அது இது என்று புலம்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான் வந்தேறி நாதாறிகள்.

அரவிந்தன் நீலகண்டன் said...

அருமையான கட்டுரை நன்றி

அருணகிரி said...

வஜ்ரா,

அண்ணா இறந்து கருணாநிதி தலைவராக ஆன பின்பு, முதலில் அடிவாங்கத் தொடங்கியது கருணாநிதி ஆட்சியை விமர்சிக்க முற்பட்ட அன்று இருந்த சில இடதுசாரி பத்திரிகைகள். (துக்ளக்கும் கூட). பத்திரிகை மீது வன்தாக்குதல் நிகழ்த்துவதை வாடிக்கையாக்கிய கருணாநிதியின் அரசுக்கு பயந்த நிலையில்தான் பல பத்திரிகைகள் அன்று இருந்தன. இந்த விஷயத்தில் ஈவேரா என்ற கயமையின் சொல்லை ("பத்திகைகள் எல்லாம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டும்")சரியாகவே பின்பற்றினார் அவரது தொண்டரடிப்பொடி.

கருணாநிதி ஆட்சியில் தமிழ்நாடு அதற்கேயான மிலிடரி ஆகியவற்றுடன் தனிநாடாக உள்ளதாகவும், அதில் அந்த அரசியல் தலைமையை எதிர்த்து முகம் காட்டி பத்திரிகையில் யாராவது எழுதுவதாகவும் கற்பனை செய்து பாருங்கள். எழுதுபவர் வீட்டுக்கும் தமிழ்நாட்டு ஸ்டாசி வரும்தான். இந்த மாதிரி பாசிச அரசியல் நடத்தத்தான் இணையத்திலும் சரி தமிழகத்திலும் சரி ஒரு கும்பலே அலைந்து கொண்டிருக்கின்றதே.

வஜ்ரா said...

அருணகிரி அவர்களே,

ஈ வே ரா என்று எப்போது எந்த மேடையில் பத்திரிக்கையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று சொன்னார் என்று சுட்டி கொடுங்களேன்.

இதெல்லாம் டாக்குமெண்ட் செய்யவேண்டிய விஷயம். இனி வரும் சந்ததியினருக்கு தமிழகத்தின் த(க)ற்காலத்தை நினைவுபடுத்த உதவும். ஈவே ரா அப்படிச் சொல்லியிருந்தால் அது மானக்கேடான விஷயம். அதை வைத்தே பதிவுலகில் ஈ வே ரா- சமத்துவ ஜல்லி அடிப்புகள், ஈ வே ரா- சுதந்திர ஜல்லி அடிப்புகள் எல்லாம் கேள்விக்குள்ளாக்க முடியும்.

வஜ்ரா said...

நன்றி அரவிந்தன் மற்றும் அருணகிரி அவர்களே.