October 15, 2006

இணைய ரேடியோவில் புதிய முயற்சி

www.pandora.com என்ற இணைய தளத்தில், Music genome Project என்று ஒரு புதிய முயற்சி செய்துவருகின்றனர். ஆங்கில பாடல்கள் மட்டுமே என்றாலும், இதில் இசையை வகைப்படுத்தி சேமித்துவைத்திருக்கிறார்கள். எப்படிப் பட்ட பாடல்கள், எத்தகைய இசை கருவிகள் உபயோகப் படுத்தப் பட்டிருக்கின்றன, Vocal tonation, Jazz, Rock, R&B என்று.

உங்களுக்குப் பிடித்த Artist பெயர் அல்லது Album பெயர் கொடுத்தால் அதிலிருந்து பாடல்கள் கேட்கலாம். பாடல் ஓடிக்கொண்டிருக்கையில் அந்த பாடல் உங்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்று வாக்கு போட்டீர்கள் என்றால் அடுத்த பாடல் அதற்கேற்ப கொடுக்கும்.

உதாரணமாக Smashing Pumpkins என்ற Artist கொடுத்து கேட்டால், அந்த இசை கலைஞர்களின் தனித்தன்மை என்னவோ அதே போல் தனித்தன்மைகள் உள்ள மற்ற இசை கலைஞர்களை நாம் கண்டுகொள்ளலாம்.

Smashing pumpkins களுக்கு, முக்கிய அம்சங்கள், மூல ஆண் Vocalist, Hard rock இசையின் மூலம், Tonal variation என்று சொல்லக் கூடிய பாடும் விதம் என்று அதை வகைப் படுத்தியிருக்கிறார்கள். அதே போல் வகைப் படுத்தப் பட்ட மற்ற பாடல்களை அது இசைக்கும். அதே விதமாக, Perl Jam, Pixies, Nirvana போன்ற இசை குழுக்களின் பாடல்கள் நீங்கள் கேட்கலாம்.


இதன் மூலம் உங்கள் விருப்பப் பாடல்கள் கேட்பது மட்டுமில்லாமல் அதே போல் உள்ள மற்ற இசைக்குழுக்களின் பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம். க்ரெடிட் கார்ட் இருந்தால் பாடல்களை விலைக்கு வாங்கலாம். புதிய Artist களைத் தெரிந்துகொள்வது இதன் முக்கிய அம்சம்.



எல்லாம் காப்பிரைட் சமாச்சாரம் என்பதால் திருட்டுத்தனமாக டவுண்லோட் எல்லாம் செய்ய முடியாது.

இது போல் தமிழ் பாடல்களை வகைப்படுத்தி இணையத்தில் வைத்து விருப்பங்கள் ஏற்றவாரு கொடுக்க முடியவேண்டும்.

8 comments:

சன்னாசி said...

சமீபகாலமாக இதைத்தான் பாடல்கள் கேட்க உபயோகித்து வருகிறேன் - ஒரேயொரு குறை, அவர்கள் கொடுக்கும் வரிசையில் அடுத்த பாடலைக் கேட்கலாமே தவிர, முந்தைய பாடலுக்குத் திரும்பப் போய்க் கேட்க முடியாது (ஒருவேளை நான் சரியாகப் பார்க்கவில்லையோ?). இருந்தாலும், நல்ல முயற்சி இது!

வஜ்ரா said...

உண்மை தான். காப்பிரைட் வயலேஷ ஆகக்கூடாது பாருங்கள்...உங்களுக்குப் பிடித்த பாடலை புக் மார்க் செய்து கொள்ளலாம். அப்படி புக் மார்க் செய்தால் அதன் சாம்பிள் தான் கேட்க முடியும். இல்லையென்றால் அதை விலை கொடுத்து வாங்கவேண்டும்.

அந்த அடுத்த பாடல் கேட்கும் வசதியிலும் ஒரு மணி நேரத்துக்கு இத்தனை முறை தான் Skip செய்ய முடியும் என்று limit வைத்திருக்கிறார்கள்.

அ. பசுபதி (தேவமைந்தன்) said...

என் வலைப்பதிவில் தாங்கள் இட்டுள்ள பின்னூட்டத்துக்கு மேலதிகமான விளக்கமொன்றை இன்றுதான் தரமுடிந்தது. உங்கள் தளத்துக்கும் இன்றுதான் வரமுடிந்தது. மிகவும் நடைமுறைப் பயனுள்ள செய்தி. என் குடும்பத்தார்க்கு இதைத் தெரிவித்தேன். பயன்படுத்திக் கொள்வார்கள். குறிப்பாக இத்துறையில் மிகவும் ஈடுபாடுள்ள பேரன், உடனே இதைப் பயன்படுத்திக்கொள்வதாகத் தெரிவித்தான்.

ரவி said...

வீ த பீப்புள் பதிவுல என்னுடைய :)கமெண்டுக்கு தான் பதில் சொல்லி இருக்கீங்க..

ஹி ஹி....

மற்றபடி தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Pandora குறித்த என்னுடைய பழைய இடுகை -

http://mathy.kandasamy.net/musings/2006/04/28/376

பண்டோராவில், ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிப்பாடல்களையும் கேட்கலாம். பிரெஞ்சு, ஸ்பானிஷ் - இப்படி..

இப்போதெல்லாம் பாடல்கள் கேட்க இந்தத் தளந்தான் என்றாகிவிட்டது.

வஜ்ரா said...

நன்றி மதி கந்தசாமி,

உங்கள் station களை கேட்டுப் பார்த்தேன்...ஒரே சால்சா ரேஞ்சில் இருக்கிறது...

சால்சா டான்ஸ் செய்வீர்களா? ஷகீராவும் மார்க் ஆந்தனியும் ஒரே ஸ்டேஷனிலா? வித்தியாசமான தேர்வு தான்.

என்னுடய கோல்ட்ப்ளே கேட்டு பாருங்கள்.

http://www.pandora.com/?sc=sh144523459089812381

Muse (# 01429798200730556938) said...

தீபாவாளி நல்வாழ்த்துக்கள் !! என்ஜாய்மாடி!!

Anonymous said...

விரும்பிய பாடலை தமிழில் கேட்க www.lifedirectionfm.com