November 15, 2006

Lock stock and .....

கய் ரிட்சீ என்ற ஆங்கில (உண்மையான பச்சை ஆங்கில UK திரைப்பட இயக்குனர்/எழுத்தாளர்!) இயக்கிய படங்களில் ஒன்று இந்த Lock Stock and two smoking barrels என்ற 1998 ல் வெளி வந்த இந்த திரைப்படம். வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

கதை இது தான்,

Eddy சீட்டாட்டத்தில் வெல்லும் "லக்" உடையவன். ஒரு நாள் அவனும் அவனது நண்பர்கள் மூன்று பேரும் சட்டவிரோதமாக அதிக பணம் வைத்து ஆடும் சீட்டாட்டத்தை ஒரு லோக்கல் குண்டனான Hatcher உடன் ஆடப் போய். 500,000 பவுண்டுகளை செலுத்தவேண்டும் இல்லையெனில் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு விரலைத் துண்டாக்குவேன் என்ற நிலையில் வீடு திரும்புகின்றனர்.

இந்தப் பணத்தை திரட்டுவதற்கு plan போட்டு, பக்கத்து வீட்டுக்காரனின் வெண்டிலேட்டரில் மைக் வைத்து ஒட்டு கேட்டு, அவன் அடித்த கொள்ளையை டபுள் கிராஸ் செய்து எடுக்கின்றனர். இதற்கெல்லாம் மூல காரணமாக இரண்டு பழமைவாய்ந்த துப்பாக்கிகளை தேடிக் கொண்டிருக்கும் வில்லன் Hatcher அனுப்பிய ஆட்கள் அந்தத் துப்பாக்கியை குறைந்த விலையில் இந்த நான்கு நண்பர்களுக்கே விற்றிருக்கின்றனர்.

எக்கச் செக்க குழப்பத்திற்கு நடுவில் கதையை எப்படி நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் Guy ritchie என்பது தான் ஹைலைட்.

அவரது மற்றொரு படமான Snatch ம் இதே போல் அறுமையான Action comedy படமே.

ஒரு வைரக்கல்லைக் கொள்ளையடித்தவன் கையிலிருந்து அந்த வைரக்கல் எத்தனை பேர் கைமாறுகிறது அதில் வரும் character களின் கதை, எப்படி அவர்கள் மூலக் கதையில் criss cross ஆகின்றனர் என்று lock stock போலவே மாறி மாறி அமைந்த காட்சிகளுக்கு இடையில் நகைச்சுவையுடன் கதை சொல்லப் பட்டிருக்கும்.

எல்லாமே, லண்டனின் நடப்பதால் Cockney ஆங்கிலத்தில் தான் எல்லோரும் பேசுவார்கள். பழக்கமில்லை என்றால் சுத்தமாகப் புரியாது. Sub titles உடன் பார்ப்பது நலம்.

2 comments:

ரவி said...

இரண்டாவது படம், வைரத்தை போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே வெச்சிட்டு போவாரே ஹீரோ ? அதுவா ?

வஜ்ரா said...

இல்லிங்க...

அது இந்தப் படத்துல இல்லீங்க...