May 9, 2006

இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-1

தமிழ்மணத்தில், இஸ்ரேலுக்கு எதிராக வந்த/வந்து கொண்டிருக்கும் சில பதிவுகளில், எழுதப்படும் கருத்துக்கள்
  1. யூதர்கள் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நாட்டை ஆக்கிரமித்துள்ளானர்
  2. ஐரோப்பாவில் இருந்து வந்தேரிய யூதர்கள், பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டனர்
  3. இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான செயல்களே, அரபு-இஸ்ரேலியர்களின் பிரச்சனைகளுக்கு மூல காரணம்
  4. யூதர்களில் பலர், பாலஸ்தீனர் ஆதரவாக அவர்கள் விடுதலைக்காக குரல் கொடுப்பது ஏன்? (இது இஸ்ரேல் ஆதரவாக வந்த கேள்வி என்றே வைத்துக் கொள்ளலாம்)
  5. யூதர்கள் என்றுமே, Two state solution ஐ ஏற்றுக் கொண்டதில்லை.
  6. ஹோலோகாஸ்ட் சம்பவத்தை யூதர்கள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டுள்ளனர்.
  7. பாலஸ்தீன அகதிகள் பிரச்சனை, முழுக்க இஸ்ரேலினால் வந்த வினை.
  8. இஸ்ரேலியர்கள் அமைதிக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
  9. பாலஸ்தீன சிவிலியன்களை திட்டமிட்டு கொல்கிறது இஸ்ரேல்.
  10. மனித உரிமை மீரல் என்று பார்த்தால் இஸ்ரேலுக்கு தான் முதலிடம்.
இந்தப் பதிவின் நோக்கம் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், இந்த கருத்துக்களுக்கு மறு பக்கத்தை காட்டி விவாத மேடையினை சமன் படுத்துவதே ஆகும். ஒவ்வொரு கருத்தும் தனியாக விவாதிக்கப் படவேண்டும் என்பதால் தனித் தனிப் பதிவுகளாக இடுகிறேன்.
  1. யூதர்கள் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நாட்டை ஆக்கிரமித்துள்ள்னர்
முற்றிலும் தவறு பாலஸ்தீனர்களுக்கு எது சொந்தமே அது யூதர்களுக்கும் சொந்தம்.

முதலில் வெளி நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த யூதர்கள், தத்தம் நாடுகளை விட்டு வந்த காரணம், ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளில் நிலவிய யூத வெறுப்பு காழ்புணர்ச்சி (Anti-semitism). யூதர்கள் சுய மரியாதையுடன், எந்த வித வெறுப்புக்கும் ஆளாகமல் வாழ வேண்டும் என்ற நோக்குடன் வந்தவர்கள். முக்கியமாக அப்போதிருந்த ஓட்டோமான் அரசு யூதர்கள் வருகையை அனுமத்தது (அல்லது அவர்கள் வருகையை கண்டுகொள்ளவில்லை!).

1939 ல் Martin Buber என்ற பாலஸ்தீனிய உரிமைகளுக்காக போராடியவர், "Our settlers, do not come here as do the colonists from occident, to have the natives do their work for them; they themselves set their shoulders to the plough and they spend their strength and their blood to make the land fruitful" என்று கூறியிருக்கிறார்.

1882-1903 வரையான காலகட்டத்தில் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து முதல் அலையாக வந்தவர்கள், பாலஸ்தீனத்தில் காலம் காலமாக வாழ்ந்துவந்த யூதர்களுடன் (Sephardic jews)இணைந்தனர். இப்படி முதல் அலையாக வந்த வர்களிடம் யூத நாடு அமைக்க எந்த எண்ணாமும் இல்லை. அவர்கள் முதல் எண்ணம் அடக்குமுறை அல்லாத, யூத வெறுப்பில்லாத "A home in our country", "a state with in a larger state where they could have civil and political rights and could help our brother Ishmael in the time of his need" என்ற எண்ணாத்துடன் வந்தவர்கள் என்பதற்கு 1882ல் யூதர்களால் வெளியிடப்பட்ட Manifesto சாட்சி. 1897ல் தான் தியோடர் ஹெர்ட்சல் தலமையில் சுவிட்ஸர்லாந்திலுள்ள பஸெல் நகரில், முதல் சியோனிச காங்கிரஸ் நடந்தது அதில் தான் தனி நாடு அமைக்கும் தீர்மானம் நிரைவேற்றப்பட்டது. இரண்டாவது அலையாக வந்தவர்கள் தான் அத்தகய எண்ணங்களுடன் செயல் பட்டனர். தனி நாடு என்றவுடன் பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டுத்தான், என்ற எண்ணம் தவறு. அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளது அதைவிரிவாக வேறு பதிவில் போடுகிறேன்.

சரித்திர காலத்துக்குச் சென்றால், ஹீப்றூ இனத்தவர் கி.மு 1500-1000 ஆண்டுவாக்கில் அல்லது அதற்கு முன்னர், ஜோஷுவா தலமையில் வந்து தற்போதய பாலஸ்தீனப் பகுதியில் குடியேறியவர்கள். பிறகு தாவிது அரசனும் அவனது வாரிசுகளாலும் கிட்டத்தட்ட 1600 ஆண்டு காலம் ஆட்சி புரிந்துள்ளனர் இந்த காலகட்டத்தில் யூத இனத்தவர் தான் இந்த நிலப் பகுதியில் நிரந்தரக் குடிகள். இவைகளுக்கு வரலாற்று சான்றுகள் தோண்டும் இடத்திலெல்லாம் கிடைக்கும். முக்கியமாக ஜெரிகோ, ஜெரூசலம் பகுதிகளில் யூதர்கள் வாழ்ந்த /வாழ்ந்துவந்த சரித்திரம் தெளிவாக இருக்கிறது. Crusader கள், Saracens கள் கொன்று குவித்த யூதர்கள் எண்ணிக்கை ஏராளம்.

ரோமாபுரி மன்னர்கள், ஜுடீயா என்ற இந்தப் பகுதிக்கு பாலஸ்தீன் என்று பெயர் மற்றம் செய்தனர். (கடல் வழியாக யூதர்கள் அல்லாத வந்தேரிய குடிகள் பெயர்). அதற்கு காரணம், ரோம மன்னர்களுக்கு யூதர்கள் மசியாததும், அவர்கள் மதத்தை ஏற்காததும் தான். (கி.பி 70 மற்றும் கி.பி 135 களில் ரோம மன்னர்களின் அடக்குமுறைகு எதிராக யூதப் புரட்சி வெடித்ததும் அதை ரோம மன்னர்கள் அடக்கியதும் வரலாறு).

பாலஸ்தீன் யூத மதப் தத்துவம் கற்கும் இடமாக திகழ்ந்ததும் அதை Zion என்று யூதர்கள் அழைத்ததும், Zion க்கு திரும்பச் செல்லவேண்டும் என்று நித்தமும் வழிபடும் யூதர்கள் ஐரோப்பாவில் இருந்தனர். கிறுத்துவ விவிலியமும் பல இடங்களில் Zion பற்றி குறிப்பிடுகிறது. இந்த இடத்தின் உண்மையான வரலாறு அடிப்படையில், குறைந்தபட்சம் பாலஸ்தீனியர்களுகு எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவு யூதர்கள்க்கும் இந்த நிலப்பகுதியில் உரிமை உள்ளது.

யூதர்கள் அளுமைக்கு உட்பட்டு திகழும் இன்றய இஸ்ரேல், எந்த ஒரு நாட்டையும் பறித்து அமைத்த நாடு அல்ல. காலம் காலமாக யூதர்கள் வாழ்ந்த பூமியில் அமைந்த நாடு.

25 comments:

dondu(#11168674346665545885) said...

மனதுக்கு மிக்க நிறைவை தந்த பதிவு. உங்கள் நற்பணி தொடரட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மு. மயூரன் said...

நமஸ்காரம்,

காலாகாலமாக காஷ்மீரிகள் வாழ்ந்த பூமியில் , காலம் காலமாக பஜ்சாபிகள் வாழ்ந்த பூமியில், காலங்காலமாக தமிழர்கள் வாழ்ந்த பூமியில் தனி நாடு அமைவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வஜ்ரா said...

மயூரன், சிங்கள-தமிழர் பிரச்சனைக்கும், இஸ்ரேல் பாலஸ்தீனர் பிரச்சனைக்கும் ஒற்றுமைகளைவிட வேறுபாடுகள் தான் அதிகம். அதையும் இதயும் போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டாம்.

அதே கதை தான், காஷ்மீர் பிரச்சனைக்கும்.

காலிஸ்தான் தீவிரவாதம் அடங்கிவிட்டது என்று தான் நினைத்திருந்தேன். அதை பாகிஸ்தான் மறுபடியும் தூசு தடுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

வருகைக்கு நன்றி,
ஷங்கர்.

வஜ்ரா said...

வாங்க டோண்டு சார்,

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுதானே ஆகவேண்டும்..எவ்வளவு நாள் தான் பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டு இப்படி படித்தவர்களை ஏமற்றிக் கொண்டிருப்பார்கள்.

அடுத்த சில பதிவுகளில் உங்கள் பதிவுக்கும் சில இணைப்புகள் கொடுக்கப்படும், "காப்பி ரைட் வயலேஷன்" செய்யப்படமாட்டாது.

நன்றி,
ஷங்கர்.

ரவி said...

முழுமையாக எழுதவும்....நன்றாக உள்ளது..

Muse (# 01429798200730556938) said...

ஸ்ரீமான் மயூரன்,

>>> .... வாழ்ந்த பூமியில் தனி நாடு அமைவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?<<<<

ஷங்கர நாராயணன் பேச வந்த பிரச்சினைகள் வேறு. இந்த கேள்விக்கான பதிலை அவர் வேறொரு தலைப்பில்தான் எழுத வேண்டியிருக்கும்.

ஆனால், இது பற்றி என்னுடைய கருத்தை சுருக்கமாக இங்கே சொல்லவா?

எப்போது ஒரு குறிப்பிட்ட குழுவானது அதன் இனம் முதலான சில அடையாளங்களின் அடிப்படையில் வெறுக்கப்படவும், அழிக்கப்படவும் செய்யப்படுகிறதோ அப்போது அக்குழு தன்னைக்காத்துக்கொள்ள, அக்குழுவை அழிக்கின்ற சக்திகளிடமிருந்து தப்பிக்க முயலும். முயலவேண்டும். இங்கனம் தப்பிப்பதற்கு ஒரு நாட்டின் குறிப்பிட்ட பகுதியை திருடிக்கொள்வதுகூட தவறில்லை.

(இஸ்ரேல் நிலை வேறுபட்டது. அது திருடிக்கொள்ளவில்லை.)

அந்த வகையில் பார்த்தால் காஷ்மீர் பண்டிட்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் ஒரு தனி நாடு அமைய வேண்டும் என்பதே என் கருத்து. இலங்கை பிரச்சினையில் என் மூளையை விட, ரத்த பாசமும், இதயமும் அதிகம் துடிக்கிறது. போகிற போக்கை பார்த்தால் ஹிந்துக்களுக்கும் ஒரு தனி நாடு தேட வேண்டிய சூழ்நிலை இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் ஏற்படக்கூடும். அப்போது அவர்கள் மனோபலத்துடன் இருந்தால் அது சாத்தியமாகும், இல்லாவிட்டால் அவர்கள் அனைவரும் கிருத்துவ, இஸ்லாமிய ஆதிக்கங்கள் அழித்துப்போட்ட கலாச்சாரங்களுக்குள் ஒன்றாவர்.

dondu(#11168674346665545885) said...

பா ராகவன் அவர்கள் எழுதியுள்ள நிலமெல்லாம் ரத்தம் என்னும் புத்தகத்தையும் பார்க்க: http://christopher_john.blogspot.com/

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

ஷங்கர்,

>>Crusader கள், Saracens கள் கொன்று குவித்த யூதர்கள் எண்ணிக்கை ஏராளம்.<<<

Saracensகள் யூதர்களைக் கொன்றது புரிகிறது. ஆனால் Crusaderகள் எதற்காக யூதர்களைக் கொல்லவேண்டும்? அவர்களது எதிரிகள் ஜிகாதியர்கள்தானே?

Muse (# 01429798200730556938) said...

டோண்டு சார்,

>>>பா ராகவன் அவர்கள் எழுதியுள்ள நிலமெல்லாம் ரத்தம் என்னும் புத்தகத்தையும் பார்க்க: http://christopher_john.blogspot.com/<<<

இந்திய பத்திரிகை தர்மத்திற்கேற்ப பாலஸ்தீனர்கள் சார்பாக எழுதப்பட்ட அத்தொடரின் சில அத்தியாயங்களை நான் படித்திருக்கிறேன். நேர்மையில்லாததாக எனக்குத் தோன்றுகிறது.

எனினும், அது பாலஸ்தீனர்களின் சார்பாக முன்வைக்கப்படும் அனைத்து வாதங்களின் தொகுப்பு என்ற அளவில் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

எதிரான கருத்து என்ற போதிலும் அவற்றிற்கும் இடம் கொடுத்ததன் மூலம் நீங்கள் தற்கால இன்டெலெக்ட்யுவல் குழுவை சார்ந்தவரில்லை என்பது மீண்டும் தெளிவாகிறது.

வஜ்ரா said...

//
Saracensகள் யூதர்களைக் கொன்றது புரிகிறது. ஆனால் Crusaderகள் எதற்காக யூதர்களைக் கொல்லவேண்டும்? அவர்களது எதிரிகள் ஜிகாதியர்கள்தானே?
//

crusader கள், இப்பொழுது இருக்கும் வஹாபி இஸ்லாமியர் போல அந்த கால கட்டத்தில் இருந்தவர்கள். ஒரு யூதன் தான் யேசுவைக் காட்டிக் கொடுத்து, சிலுவையில் அறையக் காரணமாக இருந்ததால் கிறுஸ்தவர்களுக்கும் யூத-வெறுப்பு அதிகம். ஹிட்லர் காலத்தில் வாத்திகன் போப் கூட யூதர்களைக் கொல்ல ஆதரவு தெரிவித்தது சரித்திரம்.

ஷங்கர்.

Prasanna said...

யூதர்கள் பாலஸ்தீனர்களை விரட்டவில்லை என சொல்வதற்கில்லை. ஏனென்றால் சில குறிப்புகளில் இஸ்ரேல் எனும் நாடு அமைவதற்காக யூதர்கள் நிலங்களை வாங்கி குவித்ததும், படிப்பறிவில்லாத பாமர பாலஸ்தீனியர்களின் நிலத்தை நிலவங்கிகள் மூலம் அபகரித்ததும், அப்படி கொடுக்காத பாலஸ்தீனியர்களை தாக்கியதாகவும் பதிவுகள் உண்டு. இது பற்றி பா.ராகவன் எழுதிய நிலமெல்லாம் ரத்தம் படித்தாலும், அதன் சுட்டிகளை படித்தாலும் தெரியும்.
கருத்தில் பிழை இருந்தால் பொறுக்கவும்
அன்பில் பிரசன்னா

வஜ்ரா said...

பிரஸன்னா,

வருகைக்கு நன்றி,

என்னுடய அடுத்தபதிவையும் பார்க்கவும்.

ஷங்கர்.

dondu(#11168674346665545885) said...

Crusaderகள் எதற்காக யூதர்களைக் கொல்லவேண்டும்?
பொருளாதாரக் காரணம். சிலுவைப் போருக்கு செல்பவர்கள் முக்கால்வாசி பேர்கள் பிரபுக்கள், குறுநில மன்னர்கள் ஆகியோர். தாம்தூம் என்று செலவு செய்து எக்கச்சக்கத்துக்கு கடன் வாங்குபவர்கள். அப்போது கடன் கொடுப்பவர்கள் யூதர்களே. ஆகவே சிலுவைப்போருக்கு செல்லும் நேரத்தில் ஏசுவை கொன்றவர்களைக் கொல்வதாகக் கூறி யூதர்கள், முக்கியமாக கடன் கொடுத்தவர்களை போட்டுத் தள்ளி விட்டால் போகிற வழிக்கு புண்ணியம் மற்றும் கடன் தொல்லையும் தீர்ந்தது.

அக்காலக் கட்டத்தில் யூதர்களுக்கு லேவாதேவித் தொழில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

////////பா ராகவன் அவர்கள் எழுதியுள்ள நிலமெல்லாம் ரத்தம் என்னும் புத்தகத்தையும் பார்க்க: http://christopher_john.blogspot.com/ //////////

வேலை செய்யவில்லை டோண்டு ராகவன் அவர்களே ...

வவ்வால் said...

வணக்கம்,
பா.ராகவனின் நிலமெல்லாம் ரத்தம் என்ற தொடரின் மறு வடிவமாகவெ உள்ளது புதிதாக எழுத முயற்சிக்கலாமே? மேலும் பாலஸ்தீன் பிரச்சனை இந்தியர்களின் வாழ்வியலோடு எந்த வகையில் பிணைந்துள்ளது ,இதனை பேசுவதனால் என்ன மாற்றம் நிகழும்? இந்தியாவில்,குறிப்பாக தமிழ் நாட்டில் பேசப் மறந்து,அல்லது பேச தயங்கி விட பட்ட பிரச்சனைகள் ஏராளம்..ஏராளம் .

உ.ம்:பாப்பா பட்டி ,கீரிப் பட்டிகளில் ஏன் உள்ளாட்சி தேர்தல்கள் நடை பெறவில்லை?

சிறை கைதிகளுக்கு வாக்களிக்க வசதிகள் மறுக்க படுவதேன்?

அரவாணிகளுக்கு வாக்காளார் அடையாள அட்டை கூட தரப் படுவதில்லையே ஏன்?

கோடைக்காலங்களில் தண்ணீர் தேடும் நாம் மழைக்காலத்தில் கொள்ளிடம் ,காவிரியில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடும் நீரை சேமிப்பதில்லையே ஏன்?(வீடுகளில் மட்டும் தான் மழை நீர் சேகரிப்பா?)

வஜ்ரா said...

செந்தழல் ரவி, நன்றாகவே வேலை செய்கிறது அந்த துடுப்பு.

ஷங்கர்

dondu(#11168674346665545885) said...

சுட்டி வேலை செய்கிறதே. அதிலிருந்து நகலெடுத்து கீழே ஒட்டியுள்ளேன். மறுபடி முழற்சிக்கவும்.

http://christopher_john.blogspot.com/

அமெரிக்க அரசியல் வரலாற்றை டாலர் தேசம் என்ற கட்டுரைத் தொடர் மூலம், பாமரனுக்கும் புரியும் விதத்தில் எளிமையாக சுவாரஸ்யமாக தந்த எழுத்தாளர் பா. ராகவனிடமிருந்து, இதோ இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சினைப் பற்றிய ஒரு அருமையான, முழுமையான வரலாற்று தொகுப்பு. இந்த இரண்டு இன மக்களின் பூர்வீகம் முதல், கிட்டத்தட்ட நாலாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மோசேயின் வரலலற்றிலிருந்து தொடங்கி, இன்றைய தேதி வரையிலான விஷயங்களை 101 அத்தியாயங்களில் மிக அழகாக விவரித்திருக்கிறார். சில இடங்களில் பாலஸ்தீனியருக்காக அனுதாப படுவதாக தோன்றினாலும், ஒட்டு மொத்தமாக பார்த்தால், ஒரு நடுநிலையோடு தொகுக்ககபட்ட வரலாற்று தொடர் என்பதில் சந்தேகமில்லை. சிறிது கவனம் பிசகினாலும், இந்த கட்டுரை போரடித்திருக்கும்; ஆனால், கடைசி வரை சுவை குன்றாமல், எல்லா தரப்பினரையும் கவரும் விதத்தில் எழுதியிருக்கிறார். மிக கடின மான உழைப்பு தெரிகிறது; புத்தகமாக வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும் (கிபி 1600-லிருந்து 1947 வரை), இப்படி முழுமையாக தொகுக்கலாமே..

திரு பாரா அவர்களே, உங்கள் எழுத்துப்பணி மேலும் மேலும் சிறக்க இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்!

அன்புடன்,
கிறிஸ்டோபர்

வஜ்ரா said...

வவ்வால், (Batman!!) வருகைக்கு நன்றி,

பா. ரா வின் தொடரை நான் படித்ததில்லை, இஙு பின்னுட்டமிட்டுள்ள டோண்டு சார் சொல்லித்தான் தெரியவந்தது. படித்துக் கொண்டு இருக்கிறேன்.

நன்றாகவே எழுதியுள்ளார்.

//
இந்தப் பதிவின் நோக்கம் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவும், இந்த கருத்துக்களுக்கு மறு பக்கத்தை காட்டி விவாத மேடையினை சமன் படுத்துவதே ஆகும்.
//

நான் செய்யவிரும்புவது இது தான். பா. ரா வின் தொடர் ஒரு reference ஆக எடுத்துக் கொள்ளப்படும். மற்ற ஏனய புத்தகங்களும் எடுத்துக் கொள்ளப்படும்.

பா. ரா ஒரு சில இடங்களில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எழுதவில்லை. உதாரணமாக மஸாதா! இன்றும் புதிதாக ஐ.டி.எஃப் ல் (Israel defence forces) இணைபவர்கள், மஸாதாவில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். மஸாதா பற்றி உண்மை தெரிந்திருந்தால் அது ஏன் என்று புரியும்.

ஷங்கர்.

dondu(#11168674346665545885) said...

70-73 கி.பி.யில் நடந்த மசாடா போரைப் பற்றி எத்தனை முறை படித்திருப்பேன் நான். ஒவ்வொரு முறையும் தீரம் மிகுந்த இஸ்ரவேலர்கள் என்னைக் கவர்கின்றனர். மசாடா மறுபடியும் விழாது என்பதுதானே இப்போதைய இஸ்ரவேலர்களின் சபதம்? ஆமென்.

பிற்காலத்தில் என்ன நடந்தாலும் 1947-ல் நவீன இஸ்ரேல் உருவானது சரித்திரத்தின் பெருமை மிக்கப் பக்கங்களில் சேர்க்கப்படும். டேவிட் பென் குரியன், மோஷெ டயான், மெனாசெம் பெகின், கோல்டா மையர், ஆரிக் ஷெரோன் ஆகியோர் மறக்க முடியாதவர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

டோண்டு சார்,

3-4 முறை மஸாதாவுக்கு சென்று வந்திருக்கிறேன். ஒவ்வொறு முறையும், வெவ்வேறு வழிகளில். dead sea பக்கமிருந்து Cable car இருக்கிறது, பெரும்பான்மையானோர் பயன்படுத்தும் வழி அது தான். ரோமானியர் முற்றுகையிட்ட பகுதியிலிருந்து ஏறலாம், அல்லது, dead sea பக்கமிருந்தே ஏறலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒவ்வொரு வழிகாட்டியும் (tourist guide) சற்றே வெவ்வேறு கருத்துக்கள் சொல்வார்கள். ஆனால் எல்லோரும் பயன்படுத்தும் மஸாதா பற்றிய புத்தகம், யிகால் யதீன் எழுதிய "Masada-Herod's fortress and the Zealots' last stand".

யிகால் யதீன் பயன்படுத்தியது, josephus flavius எழுதிவைத்த ஏடுகளும், அகழ்வாராய்ச்சி முடிவுகளும்.

ஷங்கர்.

Muse (# 01429798200730556938) said...

டோண்டு சார்,

தங்களின் பின்னூட்டங்களில் ஒன்று (17 ஆவது என நினைக்கிறேன்) அன்புடன் கிறிஸ்டோபர் என்று கையெழுத்துப் பகுதியிலிருக்கிறதே. நடையை பார்க்கும்போது நீங்கள்தான் அதை எழுதியுள்ளீர்கள் என்று தோன்றுகிறது.

வஜ்ரா said...

ம்யூஸ்,

அந்த பதில் பா. ரா வின் நிலமெல்லாம் ரத்தம் தொடர் பதியப்பட்டுள்ள வலைப்பதிவாளருடயது. செந்தழல் ரவி என்பவர் துடுப்பு வேலை செய்யவில்லை என்றார். அதற்காக ஒரு உதாரணத்திற்காக டோண்டு அவர்கள் வெட்டி ஒட்டி யிருக்கிறார் என்று நினைக்கிறென்.

ஷங்கர்.

ரவி said...

பா.ரா வினை படிக்கவேண்டும் என்ற நீண்டநாள் அவாவினை பூர்த்தி செய்த டோண்டு அய்யாவிற்கு நன்றி..

dondu(#11168674346665545885) said...

கிறிஸ்டோபர் அவர்கள் வலைப்பூவில் பல பகுதிகள் மிஸ்ஸிங். தொடர் எண்கள் பல காணக் கிடைக்கவில்லை. பாரா அவர்களால் எழுதப்பட்ட அப்புத்தகம் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

link என்ற ஆங்கில வார்த்தைக்குச் சமமாக தமிழில் சுட்டி என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது. துடுப்பு என்று நீங்கள் குறிப்பிடுவது தொடுப்பு என்ற வார்த்தையை என்று நினைக்கிறேன். சரிப்படுத்திக்கொள்ளவும்.