May 11, 2006

இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-3

இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான செயல்களே, அரபு-இஸ்ரேலியர்களின் பிரச்சனைகளுக்கு மூல காரணம்

There is no symmetry in theis conflict. One would have to say that. I deeply believe that. There is a guilty side and there are victims. The palestinains are the victims


சொன்னவர் Edward Said.

உண்மை என்ன?

இஸ்ரேலை அங்கீகரிக்க மறுக்கும் அரபு தேசங்களால் தான் அரபு-இஸ்ரேல் பிரச்சனையே.

பி. எல். ஓ, அரபு தேசங்கள், பாலஸ்தீனிய மக்கள் Two state solution ஐ ஏற்றுக் கொள்ள 1937 லேயே மறுத்துவந்ததும், இன்னமும் ஹமாஸ் போன்ற இயக்கங்கள் மறுப்பதும் உண்மை நிலவரம். சிறிது காலம் முன்பு (பாலஸ்தீனத்தில் தேர்தல் நடக்கும் முன்னர்) அதன் அதிபர் அப்பாஸ் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர் கட்டுப்பாட்டுள்ள பகுதிகளில் உள்ள திரையரங்குகளிலும், கேபிள் டீ.வி க்களிலும் தோன்றி Two state solution பிரச்சனையைத் தீர்துவிடும் என்று உறுதியாக பிரச்சாரம் செய்தார். விளைவு, தேர்தலில், ஹமாஸ் அமோக வெற்றி பெற்று இஸ்ரேலை அழிப்பதே நோக்கம் என்று குதித்துக் கொண்டிருக்கிறது. அவர் பாவம் தோற்றுவிட்டார்.

அரபு, மற்றும் இஸ்லாமியத் தலைவர்களுக்கு, முஸ்லீம்கள், பாலஸ்தீனர்களின் சுய மரியாதையை (அவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் கூட ) விட, யூதர்களை விரட்டவேண்டும், இஸ்ரேலை அழிக்கவேண்டும் என்ற வெறி தான் அதிகம் இருந்தது/இருக்கிறது.

2002 ல் அராஃபத்தால் நியமிக்கப்பட்ட Muslim Trust of Jerusalem த்தின் நீதிபதி,

All palestine is Islami land....The jews userped it....There can be no compromise on islamic land....



அவர் வெளியிட்ட ஃபத்வாவில் எந்த பாலஸ்தீனரும் அவரது நிலத்தை யூதர்களுக்கு விற்கக்கூடாது என்றும், அதைச் செய்பவர்கள் இஸ்லாத்தைத் துரந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.

it is declared as an act of apostasy and rejection of Islam.



பல முக்கிய பாலஸ்தீனத் தலைவர்கள் இப்போது Two state solution ஐ ஏற்றுக் கொண்டாலும் (இதன் அர்த்தம் இஸ்ரேலுக்கு அங்கீகாராம்), இதுவரை அவர்கள் கன்னாபின்னா வென்று போரட்டம் நடத்தி இழந்தவாய்ப்புகள் எத்தனையோ. இவர்களுக்கு ஆசைகாட்டி மோசம் செய்தது யார்? சுற்றியுள்ள அரபு தேசங்கள்.

இந்த ஏற்றுக் கொள்ளாதமனப்பான்மையால் தான் இவ்வளவு பிரச்சனையும்.

பாலஸ்தீனர்கள் சொந்த நாட்டிலேயே அகதியான கதையை டோண்டு அவர்கள் இந்தப் பதிவில் விளக்கியுள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குச் செய்யும் செயல்களால் தான் அரபு இஸ்ரேல் பிரச்சனை என்பதெல்லாம் வெட்டி வாதங்கள். அரபு இஸ்ரேல் பிரச்சனைக்கு மூல காரணம் அரபியர்களின் யூத வெறுப்பு. இவர்கள் "ஊத்துக்கு" பாலஸ்தீனர்களை ஊறுகாயாக்கிவருகின்றனர்.

5 comments:

Prasanna said...

அராபியர்கள் மட்டும் யூதர்களை வெறுக்கவில்லை. சொல்லப் போனால் யூதர்களை வெறுக்காத நாடுகளே இல்லை. இதற்கு காரணம் அவர்கள் அறிவாளிகளாய் இருந்ததா?? இல்லை அவர்கள் அந்நாட்டு அரசியலின் பலவீனங்களை அறிந்து அங்கு அடித்து அகதிகளாய் சென்ற எல்லா நாடுகளிலும் நல்ல நிலைக்கு சென்றதாலா?? இப்பொழுது யூத ஆதரவு நிலை எடுத்த அமெரிக்கா கூட முன்பு அவர்களை ஓட ஓட விரட்டி இருக்கிறார்கள். அது போல் அராபியரும் ஒரு நாள் புரிந்து கோண்டு சமாதான முயற்சியில் ஈடு படுவார்கள்.

வஜ்ரா said...

//
சொல்லப் போனால் யூதர்களை வெறுக்காத நாடுகளே இல்லை. இதற்கு காரணம் அவர்கள் அறிவாளிகளாய் இருந்ததா?? இல்லை அவர்கள் அந்நாட்டு அரசியலின் பலவீனங்களை அறிந்து அங்கு அடித்து அகதிகளாய் சென்ற எல்லா நாடுகளிலும் நல்ல நிலைக்கு சென்றதாலா??
//
இந்தியாவில் யூதர்களை யாரும் அடித்து விரட்டவில்லையே...

Zubin Mehta போன்ற உன்னதமான இசையமைப்பாளரை உருவாக்கியிருக்கிறது. சில பாலிவுட் நடிகர்கள், ஏன் இந்தியப் படைகளிலும் சிலர் பணி புரிந்ததாகக் கேள்வி.

ஆனாலும், இந்திய யூதர்கள் ஐரோப்பிய யூதர்கள் போல் சோபிக்கவில்லை என்பது உண்மை.

ஷங்கர்.

Muse (# 01429798200730556938) said...

>>>சொல்லப் போனால் யூதர்களை வெறுக்காத நாடுகளே இல்லை. இதற்கு காரணம் அவர்கள் அறிவாளிகளாய் இருந்ததா?? இல்லை அவர்கள் அந்நாட்டு அரசியலின் பலவீனங்களை அறிந்து அங்கு அடித்து அகதிகளாய் சென்ற எல்லா நாடுகளிலும் நல்ல நிலைக்கு சென்றதாலா?? <<<


மிகக் கடுமையான உழைப்பாளிகளான யூதர்கள் எல்லா நாடுகளிலும் முன்னேறியதோ, பொறாமையின் காரணமாகவும், மத வெறுப்புகளின் காரணமாகவும் வெறுக்கப்பட்டதோ ஆச்சரியமளிக்கவில்லை.

எனக்கு எழும் கேள்வியெல்லாம் இவர்களை புத்திசாலியாகவும், உழைப்பாளிகளாகவும் மாற்றியது எது அல்லது எவை? இது பற்றியும் ஷங்கர் அவர்கள் எழுத வேண்டும் என வேண்டுகிறேன்.

பண்டை இந்தியாவில் யூதர்கள் விரட்டப்படாமலிருந்ததற்குக் காரணம் இங்கு ஹிந்து மதம் (மதங்கள்) இறுகிய நிறுவனமாகவில்லாமலிருந்ததே. தற்கால இந்தியாவில் அவர்கள் குறிப்பிடும்படியான ஆதிக்க சக்தியாக உருவெடுக்க முடியாமல் போனதற்குக் காரணம் இந்தியா ஏறத்தாழ ஒரு இரண்டாவது பாலஸ்தீனமாகவிருப்பதே.

வஜ்ரா said...

//
இவர்களை புத்திசாலியாகவும், உழைப்பாளிகளாகவும் மாற்றியது எது அல்லது எவை? இது பற்றியும் ஷங்கர் அவர்கள் எழுத வேண்டும் என வேண்டுகிறேன்.

பண்டை இந்தியாவில் யூதர்கள் விரட்டப்படாமலிருந்ததற்குக் காரணம் இங்கு ஹிந்து மதம் (மதங்கள்) இறுகிய நிறுவனமாகவில்லாமலிருந்ததே.
//

எல்லா மதங்களிலும் புத்திசாலிகள் உழைப்பாளிகள் உள்ளனர். யூதர்கள் தான் அப்படி என்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

Ashkenazi (மேற்கு ஐரோப்பிய) யூதர்கள் சாதிக்க காரணம், யூத வெறுப்பு மட்டுமல்ல. (ஆனால் அதன் பங்கு முக்கியம்.) மேற்கு ஐரோப்பாவில் நிலவிய அரசியல், சமூகம், மற்றும் தத்துவச் சூழல்.

மேலும், எங்கு சென்றாலும் விரட்டப்பட்டுக் கொண்டிருந்ததால், சுற்றியுள்ள சமூகத்தைவிட தம் ஒரு படி மேலே யோசித்தால் தான் உயிர் வாழமுடியும் என்கிற நிலமை.

இன்றய இந்தியாவிலும் யூதர்கள் விரட்டப்படுவதில்லை. இந்து மதம் இறுகிய நிலை என்றால் என்ன? தங்கள் கேள்வி புரியவில்லையே?

நன்றி,

ஷங்கர்.

Muse (# 01429798200730556938) said...

என்னுடைய கேள்விக்கு தெளிவாகவும், சுருக்கமாகவும் பதிலளித்ததற்கு நன்றிகள்.

>>>>இன்றய இந்தியாவிலும் யூதர்கள் விரட்டப்படுவதில்லை<<<

உண்மைதான். ஆனால் இதற்கு இந்தியாவிலிருக்கும் யூதர்கள் மற்ற மதத்தினருக்கு (முக்கியமாக இஸ்லாமியருக்கு) போட்டியான ஒரு அமைப்பாக மாறாமலிருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பாலஸ்தீன கோரிக்கைகளை மனப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும் ஆதரிக்கும் இந்தியா பிரச்சினைகள் ஏற்படுமானால் எப்பக்கம் சாயும் என்பது ஓரளவு அனுமானிக்கக்கூடியதே. (பாஜாக மட்டும் ஒருகாலத்தில் ஓரளவு இஸ்ரேலை ஆதரித்தது.)

>>>இந்து மதம் இறுகிய நிலை என்றால் என்ன?<<<

இறுகிய நிலையானது புதிய, மாறுபட்ட கருத்துக்களை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளாமலிருப்பதும், அவற்றை அழிக்க முயற்சி செய்வதுமான நிலை. இது அக்கால ஹிந்து மதத்தில் (மதங்களில்) இல்லை.

ஆனால் பல்லாண்டு காலமாக இந்தியாவை ஆண்டுவந்த இறுகிய மதக்கருத்துக்களின் பாதிப்பால் "சில" ஹிந்துத்துவ அமைப்புகள் (உ.ம்: சிவசேனா, பஜ்ரங்தள் முதலானவை) நடத்திவரும் வன்முறைகள் ஹிந்து மதத்தையும் ஒரு இறுகிய மத, கலாச்சார அமைப்பாக மாற்ற முயல்கின்றன.