May 12, 2006

இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-4

யூதர்களில் பலர், பாலஸ்தீனர் ஆதரவாக அவர்கள் விடுதலைக்காக குரல் கொடுப்பது ஏன்? (இது இஸ்ரேல் ஆதரவாக வந்த கேள்வி என்றே வைத்துக் கொள்ளலாம்).

இதில் பிரச்சனை என்ன வென்றால், இதைக் காரணம் காட்டி இஸ்ரேல் தான் தப்பு செய்கிறது என்ற வாதம் வைக்கப் படுகிறது. உதாரணமாக மு. மாலிக் அவர்களின் Israel lobby என்ற பதிவைப் பார்க்கலாம்.

"Following the line of Judha Magnus, the great critical efforts of non- or Anti-Zionist Jews like Emer Berger, Israel Shahak, Noam Chomsky, Mazine Rodinson, Liva Rokach, I.F. Stone, many of them sponsered or directly encouraged by arab effors in the West, forever dismissing the myth of Zionist innocence"

சொன்னவர்கள், Edward Said, Christopher Hitchens.

"The true Jews remain faithful to Jewsih belief and are not contaminated with Zionism. The trye jews are against dispossesing the Arabs o their land and homes. According to Torah, the land should be returned to them"

சொன்னவர் Neturei Karta (USA), இவர் ஒரு Ultra-orthodox யூதர்.


உண்மை என்ன?

இஸ்ரேலியர்கள், மற்றும் யூதர்களிடம் காணப்படும் பேச்சு, எழுத்துச் சுதந்திரத்தால், எத்தகய கருத்துக்களும் வரவேற்று பிரசுரிக்கப் படும் பத்திரிகைகள், நாளிதள்கள், தொலைக்காட்சி channel கள் இஸ்ரேலில்.

அதே சமயத்தில் பாலஸ்தீனர்கள், மற்றும் அரபு தேசங்களில் உள்ள அதி தீவிர கட்டுப்பாடு மற்றும் எதிர்த்துப் பேசுபவர்களுக்கு வெளியிடப்படும் பத்வாக்கள். எத்தகய கருத்துச் சுதந்திரமும் இல்லாத சூளலில் பாலஸ்தீன். எப்படி எதிர்ப்புக் குரல் வரும்?

இவை இரண்டையும் ஒன்றோடொன்று உவமிப்பது (ஒத்துப் பார்ப்பது) ஞாயமற்றது.


இஸ்ரேலில் யூதர்களைத் தவிர, பத்து லட்சத்திச் சொச்சம் பாலஸ்தீனர்கள், அரபு மக்கள் இஸ்ரேலில் அதே கருத்துச் சுதத்ந்திரத்துடன் இருக்கிறார்கள்.


யூதர்களிடயே என்றுமே ஒரு சிறுபான்மையினர் அடிப்படைவாத தீவிரவாத கருத்துக்கள் வைத்திருப்பது மரபாகவே உள்ளது. இன்றய இஸ்ரேலியர்களை எடுத்துக் கொண்டீர்களேயானால், மேசியாவை எதிர்பார்ப்பவர்கள், ஸயனிஸ எதிரிகள், மாவோயிஸ்டுகள், ஸ்டாலினிஸ்டுகள், உலகம் தட்டை என நம்புபவர்கள், ஹோலோகாஸ்ட் நடக்கவில்லை என்பவர்கள், என்று பல நம்மால் சிந்தித்துக் கூடப் பார்க்க முடியாத தீவிர அடிப்படைவாத கருத்துக்கள் வைத்திருப்பவர்களைப் பார்கலாம்.


இது போன்ற கருத்துக்கள் வருவதற்க்கு முக்கிய காரணம், அமேரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் உள்ள கருத்துச்சுதத்ந்திரமிக்க பத்திரிக்கைகள் எத்தகய கருத்தையும் வரவேற்பதும், அதை யூதர்களே எதிர்பார்பதும் தான். ஒரு ஒப்புக்கு பாலஸ்தீனத்தை எடுத்தீர்கள் என்றாலும், அங்கே எதிர்ப்புக் குரலை உடனடியாக அடக்குவது, தேவைப்பட்டால் போட்டுத்தள்ளுவது என்று தீவிர கட்டுப்பாட்டுடன் தான் எந்த Media வும் இயங்குகிறது.


பாலஸ்தீன தொலைக்காட்சி Channel களில், பாலஸ்தீனர்கள் இஸ்ரேலியர்களால் கொல்லப்படுவதைத் தவிர இஸ்ரேலியர்கள் குண்டு வெடிப்பு பற்றி படச்செய்திகள் காட்ட மாட்டார்கள். Gaza நிலப்பகுதியை ஷரோன் தலமையிலான இஸ்ரேலிய அரசு தன்னிச்சயாக விட்டு வெளியேரியபோது, இஸ்ரேலிய செய்திகள் அதற்கு எதிர்ப்பையும், அதனை ஆதரிப்பவர்களின் குரல்களையும் காட்டின. பாலஸ்தீன TV யில் இஸ்ரேலியர் எதிர்ப்பை மட்டும் கட்டிவிட்டு முடித்துக் கொண்டனர்.

Yoram Kinuik என்ற இஸ்ரேலில் அமைதி நிலவவேண்டும் என்று எண்ணுபவர் (Israeli peace movement) வெறுத்துப் போய் சொன்ன வார்த்தைகள்.

Since the failure of the Camp David talks, when the truth came out, I've had to face the fact that the Arabs simply don't accept Israel being here. Our peace partner is suicide bomber"

ஒரு யூதனே பாலஸ்தீனர்களை ஆதரிக்கின்றான் என்றால் பாலஸ்தீனர்களிடம் தான் ஞாயம் உள்ளது என்று விவாதிப்பது அடிப்படையிலேயே தவறான கண்ணோட்டம், குழந்தைத்தனமான விவாதமும் கூட. எடுத்துக் காட்டாக, ஹோலேகாஸ்டை மறுக்கும் யூதர்களும் இருக்கிறார்கள், மற்றும் வெகு பிரபலமான நோம் சாம்ஸ்கி போன்ற யூதரும் அத்தகய நோக்கை அங்கீகரிக்கிறார் என்றால், உடனே ஹோலோகாஸ்ட் போன்றதொரு கேடு கெட்ட செயல் நடக்கவில்லை என்று சொல்ல முடியுமா?

"This argument by Ethnic admission is logically and emprically fallacious"
கூறியவர் Allan Dershowitz.

கடைசியாக, யூதன், யூத மதம் என்றாலே ஒவ்வாமையில் கஷ்டப்படக்கூடிய அறிவு ஜீவிக்கள் யூத மதத்திலேயே இருந்தனர்/இருக்கின்றனர். Karl Marx ஒரு நல்ல உதாரணம். அத்தகய செயல்பாடுகள், அவர்கள் கருத்துக்கள், தத்துவ வடிவமாகக் கொண்டு ஆராயப்படவேண்டுமே தவிர அரசியல் வடிவில் ஏற்றுக் கொள்ளக்கூடாது. நோம் சாம்ஸ்கி, எட்வர்ட் செட் கருத்துக்கள் அரசியல் வடிவம் ஏற்றுக் கொள்கொள்வது துர்பாக்கியமானது.

9 comments:

கால்கரி சிவா said...

ஷங்கர், ஒரே குழப்பமாக உள்ளது இந்தப் பதிவு. இவ்வளவு வன்முறை நடக்கும் அந்தப் பகுதியில் அவர்கள் ஏன இருக்கவேண்டும்

அல்லது 'வாங்கின' நிலத்தை திரும்பவும் பாலஸ்தீனர்களுக்கு விற்றுவிட்டு வேறு ஆளில்லா நிலப் பரப்பில் யூதர்கள் வாழலாமே?
அட்லாண்டிக்கிலும் பசிபிக்குலும் ஆளில்லா தீவுகள் நிறைய உள்ளனவே

வஜ்ரா said...

நான் சொல்லவந்ததைத் தெளிவாகச் சொல்லவில்லை என்கிறீர்களா?

இப்படி ஓடி ஓடித்தான் எல்லாவற்றையும் இழந்து நின்றார்கள். இப்பொழுது தான், சற்று திரும்பி தைரியமாக அடிக்கு அடி அடிக்கிறார்கள்.
இந்த நிலம் வாழ்வதற்கான இடம் மட்டுமல்ல இவர்களுக்கு "மாத்ருபூமி" "பித்ருபூமி" இது தான்.

நாம் எங்கு சென்றாலும் இந்தியா தான் நம் தாய் நாடு அதே போல் இவர்கள் எங்கு சென்றாலும் இஸ்ரேல் தான் எல்லாம்.

யூதர்கள் ஜெரூசலம் நோக்கித் திரும்பி தான் தொழிகை நடத்துவார்கள். எந்த Synegogue போனாலும் அப்படித்தான். ஜொரூசலத்தில் உள்ளவர்கள் மேற்குச்சுவர் (அழுகைச்சுவர் Wailing wall) நோக்கித் திரும்பித்தான் தொழுகை.

ஷங்கர்.

கால்கரி சிவா said...

ஷங்கர்,

நீங்கள் சொல்லவந்ததைதான் சொல்கிறேன்.

அவர்களும் நம் இந்து மதத்தவர்கள் போல் தங்களுக்குள்ளேயே தாக்கிக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன்.

அவர்களின் புண்ணியஸ்தலம் ஜெருசேலமாக இருப்பதால் அவர்கள் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று இப்போது புரிகிறது.

அங்கே வர ஆசை உள்ளது. மேலும் ஜோர்டன் சைடில் உள்ள மரணக்கடலுக்கும் செல்ல ஆசை உள்ளது

வஜ்ரா said...

//
யூதர்களில் பலர், பாலஸ்தீனர் ஆதரவாக அவர்கள் விடுதலைக்காக குரல் கொடுப்பது ஏன்?
//

யூதர்களே இஸ்ரேலை எதிர்க்கின்றனர் பார், உண்மையில் இஸ்ரேலிடம் தப்பு இருப்பதினால் தான் அவர்களே எதிர்க்கிறார்கள் என்ற வாதம் வைக்கப் படுகிறது. ஆதனால் தான் இந்த பதிவு.

//
அவர்களும் நம் இந்து மதத்தவர்கள் போல் தங்களுக்குள்ளேயே தாக்கிக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன்.
//
பேச்சு, கருத்துச் சுதந்திரம் என்றால் "We agree to disagree"

//
அங்கே வர ஆசை உள்ளது. மேலும் ஜோர்டன் சைடில் உள்ள மரணக்கடலுக்கும் செல்ல ஆசை உள்ளது
//

Dead sea!! அதில் நினைத்தால் கூட மரணம் நேராது...(தண்ணீரில் மூழ்கி )

பல முறை சென்றாகிவிட்டது...விழக்கெண்ணயில் விழுந்து புரழ்வது போல் ஒரு உணர்வு...

அது இஸ்ரேல் பக்கத்திலும் இருக்கிறது...ஜெரூசலம் இருப்பது ஜுடீய மலை (judean mountains) அங்கிருந்து வழுக்கி கடல் மட்டத்திற்கு 400 மீட்டர் கீழே வந்து விழுந்து விடலாம்...ஒரே இறக்கம் தான்...அப்படி வந்தால் நேரே Dead sea தான். அது தான் உலகில் உள்ள நிலப்பரப்பில் ஆழமான பகுதி..

ஜெரூசலம் இருப்பது கடல் மடதிலிர்ந்து 1000 மீ மேலே...

கொசுறு தகவல், ஜோர்டன் பக்கதில் உள்ள Dead sea ல் பிகினி(bikini) எல்லாம் கிடையாது...!! அவர்கள் புர்கா அணிந்து கொண்டு தான் Dead sea ல் மிதப்பார்கள் என்று நினைக்கிறேன்.!!

ஷங்கர்.

dondu(#11168674346665545885) said...

சடில்லா பாலஸ்தீனிய முகாமில் லெபனீஸ்கள் 1982-ல் தாக்குதல் நடத்தினர், இஸ்ரேலியர்கள் அதை அனுமதித்ததால் இஸ்ரேலுக்கு அதில் மறைமுக பங்கு இருந்ததென உலகப் பத்திரிகைகள் (இந்தியா உட்பட) கண்டனம் தெரிவித்தன.

இதில் விசேஷம் என்னவென்றால் இதை உலகுக்கு முதலில் தெரிவித்ததே இஸ்ரேலிய பத்திரிகைகளே. அவ்வளவு பத்திரிகை சுதந்திரம் அங்கே. அது இருக்கட்டும், இஸ்ரேலின் மறைமுக பொறுப்புக்கே இவ்வளவு பேசிய பத்திரிகைகள் நேர்முக பொறுப்பை தாங்கிய லெபனீஸ்களை பற்றி மூச்சுக் கூட விடவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

ஷங்கர், நன்றாக இருக்கிறது.

இந்த கேள்வியை நான் எழுப்பியபோது மாலிக்கும் பாலஸ்தீனர்களில் இஸ்ரேலை கொள்கை ரீதியாக ஆதரிக்கும் அறிஞர்கள் யாரும் இல்லை என்று கூறினார். இந்நிலைக்கு நீங்கள் கூறுகிற கருத்து சுதந்திரம் இல்லாத ஒரு சூழலைத் தவிர, வேறு காரணங்களும் இருக்கலாமா? உதாரணமாக நம் பார்வையின் எல்லையை ஆங்கில ஊடகங்களின் எல்லைகளே முடிவு செய்கின்றன. அதனால், இஸ்ரேலை ஆதரிக்கின்ற பாலஸ்தீன அல்லது செமிட்டிக் மொழி பேசுகின்றவர்களின் குரலுக்கு நமது செவிகள் செவிடாகவிருக்க வாய்ப்பு இருக்கிறதா?

இன்னொன்றும் அறிய ஆவலாகவிருக்கிறது. செமிட்டிக் நிலங்களில், மனிதர்களில் உருவான தத்துவங்கள் பெரும்பாலும் தன் கொள்கை, இனம் தவிர்த்த மற்ற குழுக்களை அடிமைப்படுத்துவதையும், அழித்துவிடுவதையும் ஒரு மரியாதைக்குரிய ஆனால் மறைவாக செய்யப்படவேண்டிய நடைமுறையாகக் கொண்டுள்ளன. உதாரணமாக இஸ்லாம், கிருத்துவம், கம்யூனிஸம். யூத மதமும் இது போன்ற ஒரு செமிடிக் மதம் என்பதால் இம்மதத்திலும் இந்த கூறுகள் உள்ளனவா? இதை அவர்கள் மற்றவர்கள் போல் நடைமுறைப்படுத்துகிறார்களா?

வேறு: நான் தங்களுடைய போன பதிவுக்கு செய்திருந்த பின்னூட்டம் தங்களை வந்து சேரவில்லையா? அதை என்னால் காண முடியவில்லை.

வஜ்ரா said...

//
இஸ்ரேலை ஆதரிக்கின்ற பாலஸ்தீன அல்லது செமிட்டிக் மொழி பேசுகின்றவர்களின் குரலுக்கு நமது செவிகள் செவிடாகவிருக்க வாய்ப்பு இருக்கிறதா?
//

அதிக வாய்ப்பு இல்லை என்பதே என் கருத்து. ஏன் என்றால், கருத்துச் சுதந்திரம் இல்லாத காரணத்தால் இஸ்ரேலுக்கு சாதகமான ஊடகங்கள் பிரசுரிக்கப் படமாட்டாது.

அப்படியே இருந்தால், இஸ்ரேலில் அதை உடனடியாக வெளியிட்டிருப்பர்.

//
நான் தங்களுடைய போன பதிவுக்கு செய்திருந்த பின்னூட்டம் தங்களை வந்து சேரவில்லையா? அதை என்னால் காண முடியவில்லை.
//

என்னோட comments moderation பக்கத்தில் எந்த பிர பின்னூட்டங்களையும் காணவில்லையே!! வழக்கம் போல் ஒரு வசவுப் பின்னூட்டம் சா"ந"க்கியன் இட்டிருந்தார். அதை நீக்கிவிட்டேன்.

ஷங்கர்.

வஜ்ரா said...

//
செமிட்டிக் நிலங்களில், மனிதர்களில் உருவான தத்துவங்கள் பெரும்பாலும் தன் கொள்கை, இனம் தவிர்த்த மற்ற குழுக்களை அடிமைப்படுத்துவதையும், அழித்துவிடுவதையும் ஒரு மரியாதைக்குரிய ஆனால் மறைவாக செய்யப்படவேண்டிய நடைமுறையாகக் கொண்டுள்ளன.
//

நீங்கள் சொல்வது உண்மையே.
Abrahamic மதங்களின் கொள்கை Exclusivism, totalitarianism, and Terrorism என்று பெல்ஜிய அறிஞர் Koenraad Elst கூறுவது ஞாயமே. அந்த லிஸ்டில் கம்யூனிஸத்தையும் அவர் சேர்த்திருக்கிறார்.

மற்ற செமைடிக் மதம் போல் இல்லாமல் யூத மதம் வெகுவாக மாறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், பல ஆயிரம் ஆண்டுகள் அவர்கள் வாங்கிய அடி. சற்றே பண்பட்டுவிட்டது யூத மதமும், கிறுத்துவமும். இஸ்லாம் அது போல் அடி வாங்கவில்லை. மற்றும் 7ம் நூற்றாண்டில் தோன்றியதால் சற்றே புதிய மதம். இன்னும் இஸ்லாம் பண்பட காலம் பிடிக்கும் என்பது என் நம்பிக்கை.

ஷங்கர்.

Poker Internet said...
This comment has been removed by a blog administrator.