May 11, 2006

படங்காட்றேன்....!!

சில காலம் சீரியசா பதிவு போட்டு திட்டுக்களும், மிரட்டல்களும் வாங்கியாகிவிட்டது...பாராட்டுக்கள் இல்லை என்று சொல்லவில்லை....

இப்போ, சில படங்கள்..



இது தான் Jordan river, யார்தேனீத் என்று ஹீப்றூவில் அழைக்கும் இடம், யேசு கிறுஸ்து இங்கு தான் Baptize செய்யப்பட்டார்..என்பது நம்பிக்கை.

நதி என்றாவுடன் மாபெரும் கங்கை நதி என்று எண்ணிவிடவேண்டாம். நம்மூரில் அதை ஓடை அல்லது கால்வாய் என்று தான் சொல்லியிருப்பார்கள்.

அடுத்தது, கேப்ரியல் (Gabriel) என்ற தேவ தூதன் யேசு ஒரு தெய்வப் பிறப்பு என்று அறிவித்த இடம் இன்று ஒரு கிறுத்துவ தேவாலயம். அது Church of Annunciation or Bassilica of Annunciation என்று நசரேத்(Nazareth) ல் உள்ளது.

இது கி.பி, 427 ல் இருந்த பைஸாந்திய (Byzantine) தேவாலயம், மற்றும் சிலுவைப் போராளிகள் எழுப்பிய தேவாலயம் என்று பல நூற்றாண்டுகளாக இடிந்து/ இடித்து, மறுபடியும் மறுபடியும் கட்டப்பட்ட தேவாலயம். (இப்பொழுது இருப்பது, 1969 ல் கட்டபட்டது).


ஆடுத்தது ஆழகிய ஹைஃபா




இது பஹாய் மதத்தவர்களின் புனித நகரம். மத்தியத் தரைகடற் கரையிலிருக்கும் ஹைஃபா இஸ்ரேலின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று. முதல் வளைகுடாப் போரில், சதாமின் ஸ்கட்டுகள் இங்கு விழுந்து நொருங்கியது, செய்தியில் வந்தது, நினைவிருக்கலாம். இங்கு இருக்கும் படத்தில் இருக்கும் கட்டிடம், பஹாய் மதக் கோயில். தில்லியில் இருக்கும் Lotus temple போல. பஹாய் கோயில் என்றாலே, தோட்டங்கள் அதன் சிறப்பாம்சம். எங்கு பார்த்தாலும், வண்ண வண்ணப் பூக்கள், வித விதமான செடிகள். உலகில் பல மூலைகளிலிருந்து கொண்டு வந்து சிறப்புப் பராமரிப்புடன் இருக்கும் பஹாய்த் தோட்டம் ஹைஃபாவின் ஹைலைட்.



ஆக்கோ என்ற பஹாய் புனிதஸ்தலம்

பஹாய் மதம் தோன்றியது என்னமோ, ஈரானில் ஆனால் வாழ்ந்துகொண்டிருப்பது யூத நாடான இஸ்ரேலில். என்ன தான் இஸ்ரேல் யூத நாடானாலும் மத நல்லிணக்கம் கொண்ட நாடு (Semitic மதங்களுக்கு மத நல்லிணக்கம் என்பது ஒவ்வாத வார்த்தை..அப்படி இருந்தும் யூத நாடு சற்றே வித்தியாசம் காட்டுகிறது..). ஆக்கோ அல்லது ஆக்ரே (Akko or Acre) உலகில் தொன்மையான நகரங்களில் ஒன்று. இங்கு பல புகழ்பெற்ற மசூதிகள் யூத தேவாலயங்கள், கிறுத்துவ தேவாலயங்கள் உள்ளன. ஆனால், பஹாய் மதம் இந்த வரிசயில் புதிது என்றாலும் இதன் முக்கிய மதத் தலைவர் புதைக்க்ப்பட்ட இடம் ஆக்கோ. அவர் பெயர் Bahaullah.



பஹாய் மதம் பற்றி மேலதிகவிவரங்கள் பெற இந்தச் சுட்டியை க்ளிக்கவும்.

அறிவிப்பு:

படங்கள் அனைத்தும், எந்தக் காப்பி ரைட் வயலேஷனும் செய்யாமல் சொந்த முயற்சியில், சொந்த கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

5 comments:

சிறில் அலெக்ஸ் said...

நல்ல பதிவு ஷங்கர். தொடருங்கள்.

Sivabalan said...

ஷங்கர்,

படங்கள் நன்றாக உள்ளது!! நல்ல பதிவு!!

சிக்கிரமே செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்!!

வஜ்ரா said...

நன்றி சிறில் மற்றும், சிவபாலன்.

ஷங்கர்.

கால்கரி சிவா said...

நல்ல படங்கள் , போகாத ஊரிலிரிந்து

வஜ்ரா said...

சிவா,

எத்தனையோ பேர் இஸ்ரேல்-எகிப்து சேர்த்து டூர் அடிக்கிறார்கள். பிரமீடுகள் பார்த்த மாதிரியுமாகிவிடும். ஒரு ஜாலி டூர் அடிக்கவேண்டியது தானே.

கனடா பாஸ்போர்ட்டுக்கு விசா தேவை இல்லை.

ஷங்கர்.