May 18, 2006

"திம்மி"க்களும் டாவின்சி கோடும்...

இந்த பதிவு எனது கருத்தைத் தான் சொல்கிறது. இது Poltically correct என்றும், இது தான் சரி, இது தவறு என்றும் வாதிடுவதற்காக அல்ல.

Dan Brown எழுதிய The Da vinci code என்ற புத்தகம், வெளிவந்து சக்கை போடு போட்டு, கிட்டத்தட்ட 55 வாரம் வரை டாப் டென் லிஸ்டில் இருந்தது. இன்றும், அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

சோனி நிறுவனம், Ron Howard இயக்கத்தில் இந்தக் கதையை முழு நீளத் திரைப்படமாக எடுத்து 19/05/2006 உலகெங்கும் வெளியிடவுள்ளது.
கதையில், கிறுத்துவ மதம் வளர்வதற்கு வாதிகன் (Vatican) பல பொய்கள், புரட்டுகள் சொல்லி உண்மைகளை மரைக்கின்றது என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதில் ஏசு கிறுஸ்து மேரி மக்டாலேனை மணந்து குழந்தைகள் பெற்றெடுத்தார் எனவும், இந்த வாரிசுகள் தான் Holy grail என்றெல்லாம் கதை செல்கின்றது. இதில் வாதிகனுக்கும் ஒரு ரகசிய கூட்டமைப்பிற்கும் நடக்கும் போராட்டம் தான் கதையின் முக்கிய அம்சமாக புத்தகத்தில் இருக்கிறது.

இந்தியாவில் படம் வெளிவரக் கூடாது என்று Catholic Secular forum மற்றும் சில கிறுத்துவ அமைப்புகள் கூட்டமைப்பு, போராட்டம் செய்கிறது. அதைக் கேட்டு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரியா ரஞ்சன் தாஸ்முன்ஷி கதோதிக மதகுருக்கள், படம் அவர்கள் நம்பிக்கைக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தால் தடை செய்யலாம் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

இது மிகவும் வெட்கக் கேடான விஷயம். இதை Dhimmitude என்று நான் கூறுவேன்.



சில காலம் முன்பு, M.F.Hussain இந்துக்கள் மிகவும் மதிக்கும் சரஸ்வதியை ஆடை யின்றி வரைந்தது நினைவிருக்கலாம். இந்து கலாச்சாரத்தில் இத்தகய சித்திரங்கள், சிற்பங்கள் இல்லை என்பதற்கில்லை. ஹுசைன் தனது படங்கள் அனைத்திலும் அத்தகய ஸ்டைலைப் பயன்படுத்தியிருந்தாரே என்றால் ப்ரவாயில்லை, சரஸ்வதி, சீதா, அனுமன், பார்வதி, சிவன் எல்லாம் விகாரமான Sexually provoking கோணத்திலும், ஃபாதிமா, ஹுசைனின் தாயார் படங்கள் அழகான ஆடையுடன் வரயப்பட்ட சித்திரங்களாக இருப்பது கேள்வியை எழுப்புகிறது. இதை கேட்டு, போராட்டம் செய்தவர்களை "communal" பட்டம் கட்டி கண்டபடி திட்டியது இந்தியப் பத்திரிக்கைகள் பல. அப்போது தடை செய்யக் கோரியவர்களிடம் பேசக்கூடவில்லை இந்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமச்சர்.

டென்மார்க் கார்டூன்கள் எழுப்பிய எதிர்ப்பு அலையில் இந்தியா டென்மார்கிடம் கண்டனம் தெரிவித்தது நினைவிருக்கலாம்.


மறுபடியும் இந்த டாவின்சி கோடுக்கு வருவோம்,

Vatican கூட தடைசெய்யக் கோராத இந்த படத்துக்கு, இந்தியாவில் தடை செய்யக் கோறும் இந்த Secular அமைப்பும், அதை கேட்டுக் கொண்டு மத்திய அமைச்சகம் மறு பரிசீலணை செய்ய சென்ஸார் போர்டுக்கு அனுப்புவதும். கேவலமான "திம்மி" மனப்பாங்காகத் தெரிகிறது.

1-2% இருக்கும் கிறுத்துவர்கள், 13-15% இருக்கும் இஸ்லாமியர்கள் என்ன சென்னாலும் சரி. 80% சதவிகித இந்துக்கள் மனம் கோணும் வகையில் ஒரு இஸ்லாமியன் வரைந்த படத்தை தடை செய்ய மனம் வரவில்லை. இதுவே மதச்சார்பின்மை. வாழ்க இந்திய "திம்மி" மனப்பாங்கு.

63 comments:

கோவி.கண்ணன் said...

இன்றைக்கு இதே தலைப்பில் இது மூன்றாவது பதிவு.

வஜ்ரா said...

இது தானே ஹாட் டாபிக்....

படம் வெளிவரப்ப் போகுதாம்லெ....! சில வெட்டுகள் விழுந்த
பிறகுதான்னு செய்தி...!!

ஷங்கர்.

Muse (# 01429798200730556938) said...

எனக்கு இது சம்பந்தமாக வந்த ஒரு மெயிலும் அதற்கு என் பதிலும் இன்கு பொருத்தமாக இருப்பதால் அதை இங்கே பதிகிறேன்:

>>> Where are the champions of ‘freedom of expression’ – Shabanaji and gang – hiding now ?<<<

I know where Shabanaji currently is. In the CNN-IBN they showed her along with catholic priests and nuns fasting against the film. The only difference is that she has completely shaved her head.

When Mira Nair's film "Water" that projected hindu widows survive only by prostitution is objected by the hindutva people, the media said that it is against the "freedom of expression".

CNN IBN is conducting an opinion poll on this Da Vinci film issue asking the viewers to vote "Whether offending films should be banned or not".

For a film against a group of people the media uses the phrase "freedom of expression" for certain others it is "offending films".

With Regards,

Ananda Ganesh, V.

----- Original Message -----
From:

To: 'Ananda Ganesh' ;

Sent: Thursday, May 18, 2006 2:22 PM
Subject: FW: A Letter to Editor from Deccan Herald


Wooing minorities?

Sir, The government has decided to halt the screening of The Da Vinci Code until it gets a clearance from Church. Isn’t it an example of minority appeasement that the government – which didn’t utter a single word against M F Hussain’s blasphemous paintings of Hindu goddesses and Bharat Mata even after a series of petitions – immediately succumbs to the Church’s pressure ? Where are the champions of ‘freedom of expression’ – Shabanaji and gang – hiding now ?

Muse (# 01429798200730556938) said...

இந்த ஹூஸைன் விஷயம் பற்றி நான் என்னுடைய ஒரு பதிவில் (http://bliss192.blogspot.com/2006/05/blog-post.html) கூறியதை இங்கே பதிகிறேன்.

கலைக்கான சுதந்திரம் என்ற பெயரில் ஒரு ஹுசைன் ஸரஸ்வதியையும், பாரத மாதாவையும் ஆபாசமாக வரையலாம். ஆனால் அதே ஆள் கிருத்துவ இஸ்லாமியத்தில் உயர்வாகக் கருதப்படும் பெண்டிரை அதேபோல் வரைய மாட்டார். நீங்கள் சொல்லலாம் உங்கள் கோயில் சிற்பங்கள் தெய்வங்களை நிர்வாணமாக வைத்துள்ளனவே என்று. அந்த காலத்தில் மனிதர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே தெய்வங்களும் வடிவமைக்கப்பட்டார்கள். இஸ்லாமிய கிருத்துவ ஆதிக்கங்களின் விளைவாக தற்காலத்தில் ஹிந்துக்களும் தங்கள் தெய்வங்களை மரியாதைக்குரிய ஆடை கலாச்சாரத்துடந்தான் வணங்குகிறார்கள். தற்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் தெய்வங்களை தற்கால ஒழுக்க விதிகளுக்கேற்ப ஆடைகளோடுதான் படைக்கிறோம், வணங்குகிறோம்.

வஜ்ரா said...

ஆனந்த் கணேஷ்,

நீங்கள் சொல்வது சரியே...

சரஸ்வதி, பாரத மாத விஷயத்தில் காட்டிய "செகுலர்" தனத்தை இந்திய அரசாங்கம், டாவின்சி கோடு, முகம்மது கார்டூன் விஷயத்தில் காட்ட மறுப்பது தான் "திம்மி" த்தனம் என்கிறேன்.

ஷங்கர்.

Muse (# 01429798200730556938) said...

அந்த ஹூசைனின் மற்ற ஓவியங்களையும் போட்டு வித்தியாசங்களை சுட்டிக்காட்டி நிஜமாகவே படம் காட்டியிருக்கிறீர்கள்.

சிவமுருகன் said...

ஹாட் டாபிக், கொஞ்சம் சூடாகவே இருக்கிறது.

வஜ்ரா said...

//
அந்த ஹூசைனின் மற்ற ஓவியங்களையும் போட்டு வித்தியாசங்களை சுட்டிக்காட்டி நிஜமாகவே படம் காட்டியிருக்கிறீர்கள்.
//

ஆனந்த் கணேஷ்,

ஹுசைன் எவ்வளவு கீழ்த்தரமான ஆசாமி என்பதும் தெரியட்டுமே!!

சிவமுருகன்,

முதல் தடவையாக வந்திருக்கிறீர்கள், வருகைக்கு நன்றி.

ஷங்கர்.

வஜ்ரா said...

வாங்க நேசகுமார்,

//
ஆனால், இங்கே ஒன்றைக் கவனியுங்கள். தற்போதைய தகவலின்படி, ஒரு டிஸ்க்ளெய்மருடன் இப்படத்தை திரையிட கிறித்துவ அமைப்புகள் ஒப்புக்கொண்டுவிட்டன. கத்தோலிக்கர்கள் அடல்ட்ஸ் ஒன்லி சர்டிஃபிகேட் இப்படத்துக்கு வழங்கவேண்டும் என்ற அடிஷனல் கோரிக்கையை வைத்துள்ளனர்(ய்ஆர் இந்த 'கத்தோலிக்கர்கள்' என்று நிய்உஉசில் தெரியவில்லை - சர்ச் சார்ந்த சில அமைப்புகள் என்று ய்உஉகிக்கின்றேன்).
//

கிறுஸ்தவர்கள் இந்த "சகிப்புத்தன்மை" நிலைக்கு வர கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் பிடித்துள்ளன...

இஸ்லாமியர்கள் இந்த நிலைக்கு வர எவ்வளவு ஆண்டுகள் பிடிக்குமோ! அல்லது வராமலே போகவும் வாய்ப்புகள் உள்ளது.

//
இந்நேரம் இப்படி ஒரு படம் முகமது அவர்களைப் பற்றி வந்திருந்தால் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும்!
//

அது யூதர்களின் சதி என்று ஈரான் இஸ்ரேல் மீது குண்டு போடுவதற்க்கு காரணம் கிடைக்கும்...!!

மத்திய கிழக்கு முழுவதும் தீ பற்றி எரியும்...தூதரகங்கள் வெடித்துச் சிதறும்.

இந்திய அரசு, முதுகெலும்பு இல்லாமல், வன்மையாக கண்டிக்கும்!! அது தான் மதச்சார்பற்ற நிலை என்று நிரைய இஸ்லாமிய நண்பர்கள் வலைப்பூ எழுதிப் பதிப்பார்கள்...அவர்கள் சொல்வது சரி என்று ஒரு கூட்டம் ஜல்லி அடிக்கும் !!

சீய்! என்ன கேவலம் இது ! என்று நாம் கவலைப்பட்டுக்கொண்டிருப்போம்!

இல்லை, படம் எடுப்பதற்க்கு எந்த இயக்குனருக்கும் தைரியம் வராது. "திம்மி" த்தனம் இந்தியாவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் அமேரிக்காவிலும் பரவலாக இருக்கிறது.

ஷங்கர்.

Amar said...

கை குடுங்க!
தமிழ்மனத்தில் ஒரு இந்தியனுக்கு ரோஷம் உள்ளது!

Shanker,I cant seem to find your email.

Could you mail me at amarnathgovindarajan AT gmail ?

வஜ்ரா said...

நன்றி சமுத்ரா,

நான் மட்டுமல்ல்...நிரையவே ரோஷமுள்ளவர்கள் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள்.

ஷங்கர்.

Muse (# 01429798200730556938) said...

>>>> கிறுஸ்தவர்கள் இந்த "சகிப்புத்தன்மை" நிலைக்கு வர கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் பிடித்துள்ளன...<<<

உண்மையில் அவர்களுடைய சகிப்புத்தன்மையையும் நான் சந்தேகிக்கிறேன். அவர்களுடைய வன்முறை வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. பொருளாதார, சமூக எதேச்சதிகாரங்களின் மூலமாக கிருத்துவ அமைப்புகள் தங்களுடைய வன்முறையை வெளிப்படுத்துகின்றன. இதனால் இவ்வன்முறையானது பெரும்பான்மையாகவுள்ள சராசரி ஜனங்களுக்குத் தெரிவதில்லை.

இந்தியாவில் இந்த திரைப்படத்திற்கான அவர்களின் எதிர்ப்பு உண்மையில் ஆழமில்லாதது. இந்த எதிர்ப்பு வாடிகனிடமிருந்து வெளிப்படையாக வந்திருக்குமானால், மேலும் இப்போது இவர்கள் நடத்திய முதல் சுற்று போராட்டங்கள் தோல்வியடையுமானால் அப்போது நிலைமை வேறுமாதிரியாகவிருந்திருக்கும். இவர்களுடைய "சகிப்புத்தன்மை" வெளிப்பட்டிருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் இவர்களைக் கணிக்க முடியும்.

இந்த போராட்டத்திற்கான உண்மையான காரணம் இந்த திரைப்படத்தை எதிர்க்கவேண்டும் என்பதல்ல. இந்திய கத்தோலிக்கர்கள் தங்கள் ஒற்றுமையையும், பலத்தையும் அரசியல்வாதிகளுக்குக் காட்ட விரும்பினர். அது இந்த திரைப்பட எதிர்ப்பின் மூலம் நிறைவேறியது.

Muse (# 01429798200730556938) said...

>>> ஹுசைன் எவ்வளவு கீழ்த்தரமான ஆசாமி என்பதும் தெரியட்டுமே!! <<<<

நான் டெல்லியில் வேலை பார்த்தபோது பழைய டெல்லிக்கு உடன் வேலை பார்ப்பவரோடு சென்றிருந்தேன். நண்பர் மொஹல் வகை உணவுகளை விரும்புபவர். எனக்கு சைவ உணவும் கிடைத்தது. அங்கே திடீரென்று இரண்டு இளம் சிட்டுக்கள், கவர்ச்சியான ஆடைகளோடு. எல்லோருடைய கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது. அவர்களின் இடையை அணைத்தவாறு வந்தது, யா அல்லா, நமது கலையுலகக் கடவுள் M. F. ஹூசைனேதான்.

விசாரித்தபோது அவர் அது போன்ற ஹோட்டல்களுக்கு அடிக்கடி வருவாரென்றும், ஒவ்வொரு முறை வரும்போதும் இதுபோன்ற பெண்களை அழைத்து வருவாரென்றும் கேள்விப்பட்டோம்.

என் நண்பர் M. F. ஹுசைனுடைய இனிஷியல்களுக்கு வேறு மாதிரியான விரிவாக்கம் செய்து ஒரு புதிய பட்டத்தை எங்களுக்கு மட்டும் கேட்கும்படி கூறினார்.

கால்கரி சிவா said...

ஷங்கர்,

சல்மான் ருஸ்டியின் சாத்தானின் வேதத்தை முதன் முதலில் தடை செய்து, அந்த போர் அடிக்கும் புத்தகத்திற்கு விளம்பரம் தேடிக்கொடுத்ததே நம் திம்மியர்கள் தான்.

பிறகு தான் மற்ற முல்லாகளுக்கு ஆக்ரோஷம் வந்து சாமி ஆடினார்கள்.

இங்கே வெகு லாவகமாக இந்த படம் போர், மிக நீளம், டாம் சரியாக நடிக்கவில்லை, விறுவிறுப்பு இல்லை என விமர்சனம் செய்து அமுக்குகிறார்கள்

வஜ்ரா said...

//
இங்கே வெகு லாவகமாக இந்த படம் போர், மிக நீளம், டாம் சரியாக நடிக்கவில்லை, விறுவிறுப்பு இல்லை என விமர்சனம் செய்து அமுக்குகிறார்கள்
//

வாங்க சிவா,

எப்பயும் நடப்பது தானே...!

அமேரிக்கர்கள் In God We Trust கோஷ்டி. அவர்கள் Blasphemous படங்கள் எடுப்பது அபூர்வம். அப்படி நடந்தால் இப்படி அமுக்குவார்கள்.

சல்மான் ருஷ்டி கேஸ் படு கேவலமான விஷயம்...திம்மித்துவத்தின் உச்ச கட்ட வெளிப்பாடு.

(செ!..கலக்குற சங்கரு...ஹிந்துத்வாக்கு ஆப்போசிட்டா திம்மித்வா!!)

ஷங்கர்.

முகமூடி said...

// அப்படி நடந்தால் இப்படி அமுக்குவார்கள் //

ஆனால் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமான Ian McKellen இப்படி சொன்னதையும் பத்திரிக்கையில் சுதந்திரமாக வெளியிட்டார்கள். அவர் வீட்டு மீது வெடிகுண்டு வீசவில்லை. அவர் உயிருக்கு இன்னும் விலை வைக்கவில்லை.

"I'm very happy to believe that Jesus was married," said McKellen, an outspoken defender of gay rights since disclosing his homosexuality in the late 1980s. "And I know the Catholic church has problems with gay people, and I thought this would be absolute proof that Jesus was not gay."

கூத்தாடி said...

நீங்கள் என்ன சொல்ல வருகிற்றீர்கள்..
da vinci code ரீலிஸ் பண்ணலாமா வேண்டாமா ..

என்னைப் பொறுத்தவரை வேண்டும்..அதுவே எம் f ஹுசைன் படங்களுக்கும்..water போன்றப் படங்களுக்கும்...water எடுக்க விடாம துரத்தின இந்துத்துவா பற்றியும் யோசியுங்கள்..

Unknown said...

அமேரிக்கர்கள் In God We Trust கோஷ்டி. அவர்கள் Blasphemous படங்கள் எடுப்பது அபூர்வம். அப்படி நடந்தால் இப்படி அமுக்குவார்கள்.//

அமெரிக்காவில் பாதி பேர் லிபரல்கள் சங்கர்.மீதி பேர் தான் கன்சர்வேடிவ்கள்.Hollywoodல் யூதர்கள் ஆதிக்கம் மிக அதிகம்.பாகிஸ்தான் காந்தி படத்துக்கு போட்டியாக ஜின்னா என்ற படத்தை எடுத்தபோது அதை அமெரிக்காவில் எங்கும் திரையிட விடாமல் செய்துவிட்டார்கள்.யூத ஆதரவு படங்கள்(ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்) பெரும் வெற்றி பெற யூத லாபியும்,மீடியாவும்(டைம்,சி.என்.என்) முக்கிய காரணங்கள்.

பேஷன் ஆப் கிறைஸ்டுக்கு யூதர்கள் பெருமளவில் எதிர்ப்பு காட்ட முடிவு செய்து பிறகு கன்சர்வேடிவ்களை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்பதால் விட்டு விட்டார்கள்.

சிறில் அலெக்ஸ் said...

சங்கர்,
படம் வெளிவரப் போகிறதே. கிரிக்கட் பிட்சை சிதைப்பவர்கள், வழிபாட்டுத்தலங்களை தரைமட்டமாக்குபவர்கள், பார்க்கில் பீச்சில் பேசிக்கொண்டிருக்கும் இளைஞர்களை முடியை பிடித்து இழுத்து அடிப்பவர்களெல்லாம் செய்யாத ஒன்றை இந்திய கிறித்தவர்கள் செய்திருப்பதாகவே தெரிகிறது. சமரசம்.

டா வின்சி கோட் ஒரு மாபெரும் கற்பனை என்பது அதை படித்தவுடனேயே தெரியும். நம்பத்தகமாக எதுவுமே இல்லாத நாவல். இதைப் பற்றி இணையத்தில் அதிகமாகவே படிக்கலாம், ஏன் டான் பிரவுனே இதை ஒத்துக்கொண்டிருக்கிறார்.

விரைவில் இதை பற்றி ஒரு பதிவு விரைவில்.

வஜ்ரா said...

சிறில் அலெக்ஸ், மற்றும் கூத்தாடி,

படம் வெளிவரப் போவது சந்தோஷம்.

போராட்டாங்கள் ஜனநாயக உரிமை. செய்யட்டும். அதற்காக அரசாங்கம் அதைக் கேட்டுக் கொண்டு (இந்த மாதிரியான சில்ரை விஷயத்தில்-ஃப்யர், வாட்டர், டாவிஞ்சி கோடு) ஒரு மத்திய மந்திரி அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் படம் வெளிவரவேண்டாம் என்று சொல்லலாமா?

டாவின்சி கோடு விஷயத்திலும், முகம்மது கேலிச்சித்திரம் விஷயத்திலும், இந்திய அரசாங்கம் நடந்து கொண்டது போல், ஏன் ஹுசைன் சரஸ்வதி விஷயத்தில் நடந்துகொள்ள்வில்லை? (அப்படித்தான் நடந்துகொண்டுரிக்கவேண்டும் என்பது சரி என்று நான் கூறவில்லை)

அப்போது காட்டிய "மதச்சார்பின்மை" இப்போதும் காட்டவேண்டியது தானே? என்ன பயம்.

//
கிரிக்கட் பிட்சை சிதைப்பவர்கள், வழிபாட்டுத்தலங்களை தரைமட்டமாக்குபவர்கள், பார்க்கில் பீச்சில் பேசிக்கொண்டிருக்கும் இளைஞர்களை முடியை பிடித்து இழுத்து அடிப்பவர்களெல்லாம் செய்யாத ஒன்றை இந்திய கிறித்தவர்கள் செய்திருப்பதாகவே தெரிகிறது. சமரசம்.
//

அதெல்லாம் செய்பவர்களைக் கேட்டு அரசாங்கம், காதலர்களிடம் இவர்கள் மனம் புண்ப்டும் படி நடந்து கொள்ளவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதா? அல்லது கிரிகெட் தான் நடக்காமல் இருந்ததா? கிறுத்தவர்கள் செய்வது தவறேதுமில்லை, அதைக் கேட்டுக் கொண்டு அரசாங்கம் சென்சார் போர்டுக்கு படத்தை மறு பரிசீலணைக்கி அனுப்புவது, ஒரு கத்தோலிக்க கும்பத்லுடன் ஸ்பெஷல் ஷொ பர்த்து இவர்கள் சொல்படி படத்தை ஏற்ருக் கொள்ளுங்கள் என்பது...இதெல்லாம் "திம்மி"துவத்தின் வெளிப்பாடு.

வஜ்ரா ஷங்கர்.

சந்திப்பு said...

ஷங்கர் டாவின்சி கோட் படம் குறித்து கருத்து சொல்கிறேன் என்ற போர்வையில், இந்துத்துவத்திற்கு வக்காலத்து வாங்குவது நகைப்புக்குரியது.

என்னைப் பொறுத்தவரையில் எந்த ஒரு கலைஞனாக இருந்தாலும், அவரவர் பாணியில் ஒரு கருத்தை சித்தரிப்பதற்கு உரிமையிருக்கிறது. கிறித்துவர்களின் மனம் புண்பட்டால் போராட்டம் நடத்துவதற்கும், கருத்து சொல்வதற்கும் உரிமை இருக்கிறது. இதனை செய்வதுதான் ஜனநாயகம். அதனை விட்டு, விட்டு அதனை தடை செய்ய வேண்டும் என்று சொல்வது சரியல்ல.

அதே போல்தான் பயர் படத்திற்கு இந்துத்துவவாதிகள் காட்டிய எதிர்ப்பு மறக்க முடியுமா?
பாகிசுதான் கிரிக்கெட்டிற்கு இந்துத்துவவாதிகள் செய்த அட்டகாசத்தைதான் மறக்க முடியுமா?
ஓவியர் ஸூசைனின் கூடாரம் அடித்து நொறுக்கப்பட்ட இந்துத்துவ பாசிசத்தைத்தான் மறக்க முடியுமா?

Muse (# 01429798200730556938) said...

>>> கிரிக்கட் பிட்சை சிதைப்பவர்கள், வழிபாட்டுத்தலங்களை தரைமட்டமாக்குபவர்கள், பார்க்கில் பீச்சில் பேசிக்கொண்டிருக்கும் இளைஞர்களை முடியை பிடித்து இழுத்து அடிப்பவர்களெல்லாம் செய்யாத ஒன்றை இந்திய கிறித்தவர்கள் செய்திருப்பதாகவே தெரிகிறது. <<<

1. இதுவரை நடந்த இனப்படுகொலைகளில் நம்பர் 1 என்கிற இடத்தை எல்லா சமூகவியலாளர்களும் கொடுத்திருப்பது சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஹுடு - டுட்ஸி படுகொலைகளுக்குத்தான். இவை கிருத்துவப் படுகொலைகள்.

2. ஹிந்துத்துவாவின் பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் அங்கனம் செய்வதற்குக் காரணம் அவர்களுக்கு ஹிந்துமதம் பற்றி எதுவும் தெரியாததும், ஏனைய எதேச்சதிகார மதங்களின் பாதிப்பாலும்தான்.

>>> டா வின்சி கோட் ஒரு மாபெரும் கற்பனை என்பது அதை படித்தவுடனேயே தெரியும். நம்பத்தகமாக எதுவுமே இல்லாத நாவல். <<<

டா வின்சி கோட் கிருத்துவைப் பற்றிய இந்த விஷயத்தைக் கூறிய முதல் புத்தகம் இல்லை. ஹோலி ப்ளட், ஹோலி க்ரயில், ஜீஸஸ் லிவ்ட் இன் இந்தியா மாதிரியான பல புத்தகங்கள் இவற்றை ஏற்கனவே கூறியுள்ளன. இவற்றையும், இந்த விஷயம் பற்றி இதே மாதிரியான கருத்துக்கள் கொண்ட சில இஸ்லாமிய, ஹிந்து மத அறிஞர்களின் புத்தகங்களையும் படித்துள்ளேன். என்ன, மேற்சொன்ன புத்தகங்கள் சற்று கடின நடை கொண்டவை. சராசரி பொது ஜனங்களிடமிருந்து விலகிய நடை. ஆனால், டான் ப்ரௌனின் இந்த புத்தகம் கதை வடிவிலிருப்பதாலும், விறு விறுப்பான நடையில் ஒரு மர்ம நாவல் போல இருப்பதாலும் மக்களிடையே அதிக ப்ரஸித்தம் பெற்றுவிட்டது. இந்த உண்மை மேலை நாட்டினருக்குத் தெரியும். ஆதலால் அங்கெல்லாம் இந்த அளவில் பிரச்சினைகள் எழவில்லை. வாடிகனும் வாயைச் சற்று மூடியே வைத்திருந்தது.

பிறகு ஏன் இந்தியாவில் இவ்வளவு பிரச்சினைகள் செய்தார்கள்?

தங்களுடைய பலத்தை அரசியல் கட்ஷிகளுக்கு காட்டத்தான்.

>>>> நம்பத்தகமாக எதுவுமே இல்லாத நாவல்........, ஏன் டான் பிரவுனே இதை ஒத்துக்கொண்டிருக்கிறார். <<<

பொய் (அல்லது அறியாமை).

Anonymous said...

//இது மிகவும் வெட்கக் கேடான விஷயம்.//

எனக்கு இது புரியவில்லை. டாவின்சி கோடை தடை செய்தது கேவலமானது என்றால், ஹுசைன் ஒவியங்களை அரசு தடை செய்யாதது கேவலமில்லாத, சரியான செயல்தான் என்கிறீர்களா?

அப்படியில்லாமல், ஹுசைன் ஓவியம் வரைந்தது தவறு, அவற்றை அரசு தடை செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், டாவின்சி கோடை தடை செய்தது சரியான செயல் என்றல்லவா நீங்கள் சொல்லியிருக்க வேண்டும்?

வஜ்ரா said...

சந்திப்பு, மற்றும் சதயம்,

//
சரஸ்வதி, பாரத மாத விஷயத்தில் காட்டிய "செகுலர்" தனத்தை இந்திய அரசாங்கம், டாவின்சி கோடு, முகம்மது கார்டூன் விஷயத்தில் காட்ட மறுப்பது தான் "திம்மி" த்தனம் என்கிறேன்.
//

இது தான் என் கருத்து. இதை நான் ஆனந்து கணேஷ்க்கு பதிலாக 5 வது பின்னூட்டத்தில் எழுதியுள்ளேன்.

நான் கிறுத்தவர்களுக்கு எதிரானவன் அல்ல. அவர்கள் உரிமை போராடுவது. அதே போல் ஹிந்துத்வாவதிகளுக்கும் அந்த உரிமை உண்டு. ஆனால் இவர்கள் பேச்சைக் கேட்க்கும் அரசு, இந்துத்வாவாதி பேச்சு கேட்பதில்லை.

கேட்டுத்தான் நடக்கவேண்டும் என்று முடிவாகிவிட்டது என்றால் இந்து சமூகப் பிரச்சனைகளுக்கு இந்துத்வாவாதிகளின் பேச்சும், இஸ்லாமியர் பிரச்சனைக்கு இஸ்லாமியர் பேச்சும், கிறுத்தவர்கள் பிரச்சனைக்கு கதோலிக்க அல்லது எந்த பிரிவினரோ அவர்கள் பேச்சுக் கேட்டு நடக்கவேண்டும்,

அப்படி நடந்தால் அரசாங்கம் விளங்குமா? இது கேவலமான விஷயம் தானே?

ஒரு நல்ல மதச்சார்பற்ற அரசு இதை பெரிது படுத்தியிருக்கக் கூடாது.

இந்துக்கள் விஷயத்தில் அப்படி நல்ல மதச்சார்பின்மை காட்டும் அரசு இஸ்லாமியர், கிறுத்தவர் விஷயத்தில் மதச்சார்பின்மை கடைபிட்பதில்லை. இதைத் தான் "திம்மி"த்துவம் என்கிறேன்.

ஷங்கர்.

வஜ்ரா said...

//
இந்துத்துவ பாசிசத்தைத்தான் மறக்க முடியுமா?
//

சந்திப்பு,

Fascism என்பது Totalitarian regime (ஒரு அரசாங்கத்தின் நிலையைத்தான் சொல்ல முடியும்). ஒரு நாட்டின் கொள்கையாகத் தான் இருக்கமுடியும், நான் கவர்மெண்டல் ஆர்கனைசேஷன் கொள்கையோ அல்லது ஒரு அரசியல் கட்சியின் கொள்கையாக இருக்கமுடியாது.

இந்துத்வா ஃபாசிசம் என்றெல்லாம் உளராதீர்கள். எவனோ ஒரு மார்க்ஸ்வாத அறிவாளி சொன்னான் என்றால் அது சரி என்று நம்பாதீர்கள்.

இந்துத்வா என்பது இடது சாரி கண்ணோட்டம் போல் வலது சாரி கண்ணோட்டம்.

டாபிக்குக்கு சம்பத்ந்தமில்லாததால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். வேண்டுமென்றால் நீங்கள் இதைப் பற்றி தனியாக பதியுங்கள் விவாதிக்கலாம்.

ஷங்கர்.

Prasanna said...

நல்ல பதிவு ஷங்கர் அவர்களே, உங்களிடம் இருந்து நான் இது போன்ற ஒரு பதிவைத் தான் எதிர் பார்த்தேன். இதே போலத் தான் ராமாயணத்துக்கு பதிலாக கீமாயணம் ஒன்றை எழுதினார்கள். அதை கேக்க யாரும் இல்லை. இப்போ வந்து குதிக்குறாங்க. எல்லா தரப்பு கதைகளையும் வைத்து எல்லா விதமான படங்களும் வர வேண்டும். அப்போ தன் நாம நல்ல படங்கள் பார்க்க முடியும்.

Prasanna said...

///டா வின்சி கோட் ஒரு மாபெரும் கற்பனை என்பது அதை படித்தவுடனேயே தெரியும். நம்பத்தகமாக எதுவுமே இல்லாத நாவல்///
தேவை இல்லை, கதை தான சார் அது, அத அப்போஸ் பண்ண வலுவான காரணங்கள் இருந்தால் எடுத்து வைங்க. படம் எடுக்க கூடாதுனு சொல்லக் கூடாது. பைபிள எழுதினவங்க உலகம் தட்டைனு சொன்னவங்கனு எப்பவோ படிச்ச ஞாவகம்.

அசுரன் said...

நல்ல பதிவு சங்கர், நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களின் ஜனநாயக விரோத பண்பை அம்பலப்படுத்தும் விதமாக இருந்தது உங்கள் பதிவு (நீங்கள் விரும்பாவிட்டாலும் கூட)(எனது ஊகம்).

இன்று உலகம் முழுவதும் பெரும்பான்மை சாதரண உழைக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி கஸ்டப்படும் போது, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மத அடிப்படைவாத இன வெறி நிறுவனங்கள் அற்பத் தனமான பண்ப்பாட்டு விழுமியங்களின் அடிப்படையில் அராஜகமாக செயல்படுவதை தங்கள் கட்டுரை ஒருவகையில் அம்பலப்படுத்துவது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆனால் தாங்கள் ஏதோ இந்து மத வெறி பாசிஸ்டுகளின் ஜனநாயக விரோத போராட்டங்கள் வெற்றி பேறாதது போல் பேசுவது சரியா என்று பரிசீலிக்கவும்.
ஹுசைன் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கூட அரசியல் ஆதாயம்(political milage) பெற ஒன்றும் இல்லை என்று கருதி இந்துத்துவ வெறியர்கள் - இந்தியாவின் காலாச்சார காவலர்கள் சும்மா அடையாள எதிர்ப்பு தெரிவித்து விட்டிருக்கலாம். ஏனெனில் இந்து வெறியர்களின் ஜனநாயக விரோத வெறியாட்ட வராலாறுக்கு இங்கு பின்னோட்டம் போட்டால் அது தனி blog ஆகிப்போகும்.
எ-கா வுக்கு சில,
* பம்பாய் - படத்தை RSS கொலை வெறிக் கும்பல் தணிக்கை செய்த காதை
* குஜராத் படு கொலை பற்றிய பல ஆவணப் படங்களை இன்று வரை வெளிவர விடாமல் செய்திருப்பது.
* Mumbai கலவரம் பற்றிய ஆவணப் படங்களுக்கு நேர்ந்த கதை.
* காதலர் தினம், கம்முனாட்டி தினம் என்று நித்தம் தொடரும் இந்துத்துவா கும்பலின் அராஜகம்.
* சிவாஜியை பற்றி இந்த வெறியர்களுக்கு பிடிக்காதை எழுதியதற்க்காக ஒரு வரலாற்று ஆய்வு எழுத்தாளரின் நூலகத்தை முற்றிலுமாக எரித்தது. இன்னோருவரின் புத்தகம் வெளிவரவிடாமல் செய்திருப்பது.

அது போக பற்பல கலவரங்கள், ஜாதி வெறியர்களின் கோரிக்கைகளுக்கு தீனி போடுவது என்று - ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வரலாறே கொண்டது இவர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகள்(இது பற்றி மக்கள் கலை இலக்கிய கழகம் - தமிழகத்தில் மிகச் சிறப்பாக அம்பலப்படுத்தி பல கட்டுரைகள், புத்தகங்கள் வெளியிட்டுள்ளது, அவர்களின் 'தமிழகத்தை R.S.S ன் கல்லறையாக்குவோம்' என்ற முழக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்).

சங்கர் சுட்டிகாட்டும் மற்ற மத வெறியர்களின் போராட்டங்கள் பல நேரங்களில் அரசை நிர்ப்பந்திப்பதாக இருப்பதில்லை(Exception: கார்டூன் பிரச்சனை). சிறுபான்மையினருக்கு ஆதாரவான பெரும்பாலான அரசின் நடவடிக்கைகள் வோட்டு அரசியலுக்காக சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் ஏதாவது நடவடிக்கைகளே அன்றி வேறல்ல. ஆனால் இந்துத்துவ வெறியர்கள் வட மாநிலங்களில் தாங்கள் நினைத்தை சாதிக்கக் கூடிய அளவில் அரசியல், நிர்வாக செல்வாக்கு உடையவர்களாக உள்ளனர். சங்கரின் வருத்தம் அந்த வெறியர்கள் 100% மதிப்பெண் எடுக்காமல் இருப்பதுதான்.

ஆக சங்கரும் கூட ஒரு ஜனநாயக விரோத பாசிஸ்டாகத்தான் உள்ளார். இன்று கிறிஸ்து, முஸ்லிம் மத வெறி நடவடிக்களை காரணம் காட்டி நாமும்(இந்துத்துவ வெறியர்களும்) அவ்வாறு செய்ய வெண்டும் என்று - மதச்சர்பின்மையின் பேரில் அழும் இவர் நாளை தாலிபான்களையோ, அல்லது வேறு சில கிறுக்கர்களையோ காரணம் காட்டி, அய்யகோ! இந்தியாவில் அவ்வாறு செய்ய முடியவில்லையே என்று நியாயம் கேட்பார். மிக ஆபத்தான மத வெறியர்களுள் ஒருவராய் சங்கர் உள்ளார்.

இருள், வெளிச்சம், பொய்மை, வாய்மை என்றேல்லாம் முகவிலாசம் எழுதி வைத்திருக்கும் சங்கரின் பார்வையில் வாய்மை, வெளிச்சம் இவற்றுக்கும் மதச்சார்பு(அவர் பாசையில் மதச்சார்பின்மை) உண்டோ ?

அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை! அது காலம்காலமாக பாசிஸ்டுகளின் ஆயுதம்!
இந்தியாவில் சமூகத்தின் இதர பிரிவினருக்கு கல்வி கற்க்கும் உரிமையை மறுத்து தங்களை உயர்த்தி கொண்ட வராலாற்று புகழ் பெற்ற பாசிஸ்டுகள் யார் என்று சொல்லத் தேவையில்லை.

அதென்ன 80%?!! அம்மணமாக அலையும் சரஸ்வதியும் பிற தெய்வங்களும் அந்த 80-ல் எத்தனை சதவீதத்தக்கு பிரச்சனையாக உள்ளது என்று மானமிகு தமிழரங்கப்புலி, இந்தியாவுக்கான இஸ்ரேலின் அரசியல், காலச்சாரம், பண்பாட்டு மற்றும் சுற்றூலாத் துறை தூதுவர் திரு. சங்கர் அவர்கள் விளக்கினால் சிறப்பாக இருக்கும்(அவரது அல்லக்கைகளும் கூட விளக்கலாம்). ஏனெனில் அந்த 80-க்குள்ளேயே வெறு பல பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் பிரச்சனைகளை நான் பார்க்கிறேன்.

I would like to remind here the plight of World's Only Hindu Country(ofcourse World's Poorest Country too). So it is very clear that the problem of any country is not Religion(neither religion is a solution). And sarcastically(to sankar) the conutry at the end of receiving it's freedom has declared it is no more a hindu nation. And in India also Hindu(read Brahmanic) religion is the one causing more atrocities on working people in Rural and urban slums etc. World's worst terrorist religion is Hindhudva(read Brahmanic).

Still those who converted to Islam, or Christianity for milk powder are waiting there in mandaikadu(tamil nadu) to be killed by R.S.S. They are 'Thesa Throkigal'.

But those who changed their country for dollors are 'Thesa abimanigal'(like Sankar).

If the scenario goes like this there are questions like
what constitutes a country?
What is patriotism?
are araising.

வஜ்ரா said...

போனபார்டு,

உங்கள் கண்ணோட்டத்தில் பல விஷயங்கள் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது.

இந்துத் தீவ்ரவாதி, ஃபாஸிஸ்ட், அடிப்படைவாதி, R.S.S தீவிரவாத இயக்கம். இந்து மத வெறி பாசிஸ்டுகளின் ஜனநாயக விரோத போராட்டங்கள், World's worst terrorist religion is Hindhudva(read Brahmanic). இத்யாதி, இத்யதி,...

Blunt accusations, baseless allegations, Percieved injustice

இதைத்தவிர உங்களிடம் வேறு ஏதாவது சரக்கு இருந்தால் வாருங்கள். இல்லை என்றால் வியாபரம் செய்ய வேறு ஆள் பாருங்கள்.

வருகைக்கும் அந்தப் பெரிய்ய்ய்ய்ய்ய பின்னூட்டத்திற்கும் நன்றி.

ஷங்கர்.

S.L said...

போனபெர்ட்,


உங்கள் பெயரிலேயே இதை எழுதியிருக்கலாமே. எதுக்கு இவ்ளோ பயம்?

shankar,

kalakunga.

S.L said...

Da Vinci Code maligns Christ: Cardinal Vithayathil

Kochi (ICNS) -- Cardinal Varkey Vithayathil, Major Archbishop of the Syro Malabar Church says the controversial film Da Vinci Code distorts history and maligns the adorable person Jesus Christ and his message.

Following is a statement that Cardinal Vithayathil issued on Saturday on the controversial film.

I understand that Dan Brown’s novel Da Vinci Code is now released as a film.

I am constrained to state that the novel is purely an imaginative work that distorts history and sacrilegiously maligns the adorable person of Jesus Christ and His message. I would like to make some important points for the sake of people of goodwill who are committed to truth.

1.Jesus’s purported marriage with Mary Magdalene is purely a figment of imagination with absolutely no foundation in history. There is no historical document, Christian or otherwise, to substantiate the claim.

2.The myths of the Holy Grail and Priory of Sion are mere legends with no historical substance. Therefore, the so-called secret and its keepers, including Leonardo Da Vinci, are imaginative creations having no historical veracity.

3.The claim that the Morovingians are the descendents of the girl child of Jesus born to Mary Magdalene smacks of racism, indirectly claiming that the Europeans are some way the descendents of Jesus Christ. This kind of rereading of history is born out of a total lack of honesty regarding historical facts.

4.Christ was never married nor had he any physical descendants. Jesus said, “My mother and my brothers are those who hear the word of God and do it" (Lk 8:21). So every person who follows His words is His descendant. These types of sensational things will only help to lower the high sexual morality preached by Jesus Christ who had said, “But I say to you that every one who looks at a woman lustfully has already committed adultery with her in his heart” (Mt.5:28).

5.The novel has already created a lot of confusion and pain to people who believe in and honour Jesus Christ. India’s secularism positively respects all religions without showing undue favour to any. In such a country, it is highly deplorable that film of this kind is allowed to be screened, disregarding the religious sentiments of millions of citizens. I would exhort Christians not to be unduly agitated and to pray that this film may never get clearance for publicly screening in our country.

http://www.theindiancatholic.com/news_read.asp?nid=1686

வஜ்ரா said...

S.L,
வருகைக்கு நன்றி.

கைபுள்ள தானே போனபார்டு..

அந்த வலைப்பூவில் போனபார்டு அவருடய பின்னூட்டத்தை பதிவாகப் போட்டிருக்கிறார்.

---
மேலும் பின்னூட்டமிட விரும்புவோர், அவருடன் சேர்ந்து என்னை திட்டித்தீர்க்க நினைப்போர் கவனத்திற்கு:

தயவு செய்து அவரின் பதிவிற்கே சென்று பின்னூட்டம் போடுங்கள், உங்கள்" தேசப் பற்றை " அவர் நிச்சயம் பரை சாற்றுவார்.

நான் நடுனிலையாளன், அறிவாளி, Liberal, progressive என்று சர்டிஃபிகேட் கேட்டு இந்தப் பதிவு பதிக்கவில்லை. பதிவில் என்கருத்தைத் தான் நான் சொல்லமுடியும்...
தவறு என்று பட்டால் தகுந்த காரணத்துடன் சுட்டிக் காட்டுவது நலம்..

ஷங்கர்.
---

வஜ்ரா said...

//
ஆனால், ஆகாது என்பதற்குக் காரணம். இஸ்லாம் என்ற கட்டிடத்தில் ஒரு கல்லை உருவினால் எல்லா கல்லுமே வெளிவந்துவிடும். ஏனெனில், கிட்டத்தட்ட அனைத்துமே முகமதின் வார்த்தைகளின் மீதான நம்பிக்கையிலும் அவர்தான் கடைசி தூதர் என்ற நம்பிக்கையின் பேரிலும் கட்டப்பட்டுள்ளது.

//

நேச குமார்,

1000 ஆண்டுகளுக்கு முன்பு, கிறுத்துவமும் அப்படித்தானே இருந்தது. மாற்றம் நிகழ வில்லையா!.

ஒரு வோல்டாயர்(Voltair) தோன்றாமலா போய்விடுவார்?

இது என் நம்பிக்கை தான்... நடந்தால் நலம்..எல்லோருக்கும், நடக்கவில்லை என்றால் நாகரீகத்தின் எதிரி இஸ்லாம் ஆக மாறிவிடும்...

ஷங்கர்.

சன்னாசி said...

சென்ற முறை சுட்டிகள் வேலைசெய்யாததால், அதை நீக்கிவிட்டு மறுபடி இடுகிறேன். சிரமத்துக்கு மன்னிக்க.
----------------------------------

//அங்கே திடீரென்று இரண்டு இளம் சிட்டுக்கள், கவர்ச்சியான ஆடைகளோடு. எல்லோருடைய கவனமும் அவர்கள் பக்கம் திரும்பியது. அவர்களின் இடையை அணைத்தவாறு வந்தது, யா அல்லா, நமது கலையுலகக் கடவுள் M. F. ஹூசைனேதான்.//
//என் நண்பர் M. F. ஹுசைனுடைய இனிஷியல்களுக்கு வேறு மாதிரியான விரிவாக்கம் செய்து ஒரு புதிய பட்டத்தை எங்களுக்கு மட்டும் கேட்கும்படி கூறினார்.//

முதலில், சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்ததற்காக எம்.எஃப்.ஹூசேனை சாடித் தள்ளியாயிற்று (வழக்கம்போல முஸ்லீம்களும் இந்த ஹூசேன் தாக்குதலில் இணைந்துகொள்வார்கள், ஹூசேனை ஒதுக்கிவைக்கவேண்டும் என்பார்கள்), இப்போது அவர் ஒரு ஸ்திரீலோலன் என்று வேறு சொல்கிறீர்கள். சிட்டுக்களுடன் ஹோட்டலுக்கு அவர் வந்ததை மட்டும்தானே பார்த்தீர்கள்? அதைச் செய்தாலும், அதற்கு மேல் சிட்டுக்களுடன் அவர் என்ன செய்தாலும் -அது அவர் இஷ்டம், உங்களுக்கு என்ன வந்தது? இல்லை குஷ்புவை தமிழ்நாட்டை விட்டுத் துரத்தவேண்டும் என்ற கோமாளிகள் மாதிரி ஒரு அறவியல் கிடுக்கியில் பிடித்து எம்.எஃப் ஹூசேனையும் இந்தியாவைவிட்டுத் தூக்கி எறிந்துவிடவேண்டுமா? இதிலே கலையுலகக் கடவுள் என்று ஒரு கிண்டல் வேறு. உலகம் முழுவதிலுமுள்ள ஓவியர்கள் eccentricity நிறைந்தவர்களே - சால்வடார் டாலியிலிருந்து வான் கோவிலிருந்து பீட்டர் ப்ருஹேலிலிருந்து, மறுமலர்ச்சிக் காலத்தில் விவிலியக் காட்சிகளை ஓவியமாய்த் தீட்டிய எத்தனையோ ஓவியர்களை உதாரணமாய்ச் சொல்லலாம். இந்திய மரபில் இன்னும் எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். இடையை அணைத்தவாறு ஹூசேன் வந்தது உங்கள் puritanical திருஷ்டியில் அசிங்கமாய்ப் பட்டால் அதற்கு யார் என்ன செய்யமுடியும்?

M.F.ஹூசேனுக்கு உங்கள் நண்பர் ஒரு பெயரைச் சொன்னதாக அதை beep வேறு செய்திருக்கிறீர்கள். அது என்ன, mother f***er ஹூசேனா? பட்டென்று உடைத்துச் சொல்லிவிடவேண்டியதுதானே, காழ்ப்பையெல்லாம் தேக்கி வைத்துக்கொள்ளக்கூடாது. முதலில், ஒரு ஓவியன் என்பவனை பொதுப் பார்வை, ஜிப்பா ஜோல்னாப் பை தாடி என்ற ரீதியில் ஸ்டீரியோடைப் செய்துவிடும், இல்லை காதலா காதலா கமல்ஹாசன் மாதிரி கண்டதும் விழுந்து இழுகிக்கிடப்பதல்லாம்தான் நவீன ஓவியம் என்ற மாதிரி ஒரு "பதினாறு ரூபாய்க்கு அன்லிமிட்டட் மீல்ஸ்" ரீதியிலான இண்டலெக்சுவல் விளக்கத்தைக் கொடுத்துவிடும். போதாக்குறைக்கு ஹூசேன் ஒரு முஸ்லீமாக வேறு பிறந்து தொலைத்துவிட்டார், அதுவுமில்லாமல் இந்துக் கடவுள்களை நிர்வாணமாக வேறு வரைந்துவிட்டார். எனவே, MF ஹூசேனைப் போட்டுத் தாக்குங்கள் அனைவரும், கேள்வி கேட்க ஒரு பயல் இருக்கக்கூடாது. பஜ்ரங் தள் ஹூசேனின் ஓவியக்கூடத்தை அடித்து நொறுக்கியபோது, "ஹூசேன் ஹிந்துஸ்தானுக்குள் நுழையமுடிந்தால், நாங்கள் அவரது வீட்டுக்குள் நுழையமுடியாதா" என்று பால் தாக்கரே கேட்டதாக நினைவுண்டு - இதில் உள்ள அரசியல் என்ன என்று விளக்க வேறு செய்யவேண்டுமா?

-------------------------------------------------------------------------------------------

ஷங்கர்: உங்கள் பதிவில் சில விஷயங்கள், இந்த dhimmitude குறித்து எனக்குத் தோன்றிய சில.
//அமேரிக்கர்கள் In God We Trust கோஷ்டி. அவர்கள் Blasphemous படங்கள் எடுப்பது அபூர்வம். அப்படி நடந்தால் இப்படி அமுக்குவார்கள்.//

சமீபத்தில் கூட South Park காமெடி சீரியலில், Virgin Maryயை Bloody Mary என்று சித்தரித்து, மேரி மாதாவின் ஆசனவாயிலிருந்து ரத்தம் பீச்சியடித்ததாக ஒரு எபிசோட் வந்து சர்ச்சையைக் கிளப்பியது. ஹூசேனின் ஓவியக்கூடத்தை பஜ்ரங் தள் அடித்து நொறுக்கியமாதிரியோ, முஹம்மதின் கார்ட்டூன்களுக்குப் பின் நிகழ்ந்த வன்முறைகள் போலவோ Cartoon Network அலுவலகத்தை யாரும் அடித்து நொறுக்கவில்லை. கடவுளின் Omnipotenceஐக் கேள்விகேட்கும் பிரபலமான கேள்வியான "If God is omnipotent, can he create a stone so heavy that he cannot lift" ஐ சிம்ப்ஸன்ஸ் தொடரில் 'Can God microwave a burrito so hot that he himself cannot eat it' என்று கிண்டலடிப்பதில் தொடங்கி, blasphemy என்பது பல தளங்களிலும் உள்ளது. Passion of the Christ பற்றிச் சொல்லியுள்ளீர்கள்; மார்ட்டின் ஸ்கோர்ஸீஸி எடுத்த Last temptation of Christல் மகதலேனை ஏசு திருமணம் செய்துகொள்வதாகத்தான் முடிகிறது. அமுக்கவும் செய்கிறார்கள் - நீங்கள் சொல்வதுமாதிரி இங்கே "அமுக்குபவர்கள்" தீவிர மதநம்பிக்கையாளர்கள் - அவர்கள் அனைத்து மதங்களிலும் உள்ளனர், இந்தியாவின் அடிப்படைவாத இந்துக்கள் மாதிரி, அடிப்படைவாத இஸ்லாமியர்கள் மாதிரி.

//சல்மான் ருஷ்டி கேஸ் படு கேவலமான விஷயம்...திம்மித்துவத்தின் உச்ச கட்ட வெளிப்பாடு.//
ஆக, ஒரு முஸ்லீம் இஸ்லாமை விமர்சனம் செய்தால் தவறில்லை, ஆனால்
//ஹுசைன் எவ்வளவு கீழ்த்தரமான ஆசாமி என்பதும் தெரியட்டுமே!! //
ஒரு முஸ்லீம் ஹிந்துக் கடவுள்களை நிர்வாணமாய் வரைந்தால், அவர் ஒரு கீழ்த்தரமான ஆசாமி. இரண்டும் நீங்கள் சொன்னதுதான்.

இதையெல்லாம் சுட்டிக்காட்டினால், ஹிந்துவாக இருந்தால் அவன் ஒரு dhimmi, கெட்ட நேரத்துக்கு முஸ்லிமாக இருந்து தொலைத்துவிட்டால் இன்னும் போச்சு, தேசத் துரோகி. இதை எந்தtude போட்டு அழைப்பதென்று தெரியவில்லை. வெறுமனே assertive deflectionக்கு உபயோகப்படும் இந்த dhimmitude மாதிரியான catchphrases எல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. Right-wing langue ஒரு வற்றாத ஜீவ ஊற்று மாதிரி, தனது கருத்தாக்கங்களை நிலைநிறுத்திக் கூற உதவும் வார்த்தைகளைக் கண்டுபிடித்துப் பொதுத் தளத்தில் பரப்புவதில் அவர்களை அடித்துக்கொள்ள முடியாது என்பதை வேண்டுமானால் ஒத்துக்கொள்கிறேன்.

முகம்மது தலைப்பாகையில் வெடிகுண்டை வைத்ததற்கு முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்ததைக் குறிப்பிடுகிறீர்கள், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையிலோ, அடிப்படைவாத இஸ்லாமிலோ எனக்கும் உடன்பாடில்லை. ஆனால், அந்த எதிர்ப்புணர்வை, மத்திய கிழக்கில் நிகழும் போர்கள், சாவுகள் இவற்றின் பின்னணியிலும், அடிப்படைவாத இஸ்லாம் சாமானிய இஸ்லாமியர்களின்மீது பொருத்தும் அழுத்தம் இவற்றின் பின்னணியிலேயே வைத்துப் பார்க்கவேண்டும். இதேபோல, ஆனால் வன்முறையற்ற எதிர்ப்புக்கள் ஐரோப்பாவில் இந்துக் கடவுள்களைக் கக்கூஸ் மூடியிலும் பிகினிகளிலும் செருப்புக்களிலும் வைத்தபோது நிகழ்ந்திருக்கின்றன, ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் முகம்மது தலைப்பாகையில் வெடிகுண்டு முஸ்லீம்களை ஏன் சூடேற்றியதென்று விளங்கவேண்டுமெனில், காளி கழுத்தில் மண்டையோட்டு மாலைக்குப் பதிலாக வெடிகுண்டு மாலையும், கையில் ஏ.கே.47, சூரிக்கத்தி என்று ஒரு பிம்பத்தையோ, சமீபத்தில் சதர்ன் கம்ஃபர்ட் விஸ்கி பாட்டில்களோடு புலி மேல் போஸ் கொடுத்துக்கொண்டிருந்த துர்க்காதேவியோடு நிறுத்திவிடாமல், அதே துர்க்கைக்கு ஹூட்டர்ஸ் நங்கையர் போல ஒரு பிகினி மாட்டி புலி மேல் உட்காரவைத்து விஸ்கி பாட்டில்களைக் கொடுத்து பம்பாயின் தெருக்களில் பில்போர்டுகள் வைத்திருந்தால் என்ன விளைவு இருக்குமென்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். அப்போது அடிதடி வன்முறை ஏதும் நிகழாதோ ஒருவேளை?

//1-2% இருக்கும் கிறுத்துவர்கள், 13-15% இருக்கும் இஸ்லாமியர்கள் என்ன சென்னாலும் சரி. 80% சதவிகித இந்துக்கள் மனம் கோணும் வகையில் ஒரு இஸ்லாமியன் வரைந்த படத்தை தடை செய்ய மனம் வரவில்லை. இதுவே மதச்சார்பின்மை. வாழ்க இந்திய "திம்மி" மனப்பாங்கு.//

Minority appeasement என்று குழையும் திம்மிட்யூட் இந்திய அரசியல்வாதிகளிடம் இருப்பதாகச் சொல்கிறீர்கள். Hindus are getting too big for their boots என்று அமெரிக்காவில் குரலெழுப்பும் white nationalistகள், வெள்ளை மாளிகையின் தீபாவளிக் கொண்டாட்டத்தை 'promoting paganism' என்று எழுதுவதை தேடிப் படித்துப் பாருங்கள்; அவர்களைப் பொறுத்தவரையில் ஆஃப்டர் ஆல் 1-2% இருக்கும் pagan காட்டுமிராண்டிகளுக்காக புஷ் செய்வதும் ஒரு dhimmitude தான். These arguments cut both ways, don't you think? அவர்கள் பார்வையில், அமெரிக்காவின் வெள்ளை ஆங்கிலோ-சாக்ஸன் ப்ராட்டெஸ்டண்ட் கலாச்சாரத்துக்கு உள்ளே வராமல் ஊரிலிருந்து லக்கேஜ் மாதிரி முப்பத்து முக்கோடி தேவர்களையும், என்னவென்று புரிந்துகொள்ளமுடியாத garlicgarlicgarlicgarlicgarlicgarlic என்பது மாதிரி அனைத்துச் சொற்களையும் உச்சரிக்கும் மொழிகளையும், எட்டு ஊருக்கு நாறுவது மாதிரி curry செய்து வாடகைக்கு இருக்கும் வீட்டையெல்லாம் நாறடிக்கும் விஷயங்களையும் சேர்த்துக் கொண்டுவரும் இந்த 1-2% ஹிந்துக்களைக்கண்டு எரிச்சலடைவதுதான் politically correct non-dhimmitude என்றால், அதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

இந்தப் படத்தைப் பார்த்து முடித்தபின் வெளியே வந்து பொதுவாகப் பேசிக்கொண்டிருக்கையில் எனக்குத் தெரிந்த குஜராத்திப் பெண் ஒருத்தி, "Only such things keep the muslims at check" என்றாள். சில நிமிடங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை - உனக்கு நிகழ்ந்திருந்தால் தெரியும் என்றுதான் மௌனமாக நினைக்கத் தோன்றியது. மதச்சார்பின்மை என்பது ஒரு weakling attitude என்ற testosterone-loaded திரிப்புக்களையும் தாண்டி அதில் குறைந்தபட்ச நம்பிக்கையாவது தேவை என்பது என் கருத்து.

Anonymous said...

ஷங்கர்,

இது குறித்த என் பின்னூட்டம் மிகவும் நீண்டதால் தனிப்பதிவாகவே பதித்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.

-- விக்னேஷ்

சிறில் அலெக்ஸ் said...

http://etamil.blogspot.com/2006/05/how-da-vinci-code-doesnt-work.html

இதை படித்துவிட்டு படம் பார்க்கவும்.

வஜ்ரா said...

இஙு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல,

என் கருத்து என்னவென்று ஐந்தாவதி ப்ன்னூட்டமாக இதில் போட்டுள்ளேன் ...

//
சரஸ்வதி, பாரத மாத விஷயத்தில் காட்டிய "செகுலர்" தனத்தை இந்திய அரசாங்கம், டாவின்சி கோடு, முகம்மது கார்டூன் விஷயத்தில் காட்ட மறுப்பது தான் "திம்மி" த்தனம் என்கிறேன்.
//

இதை நான் பல முரை சொல்லிவிட்டேன்...தயவு செய்து அதை படித்து விட்டு பின்னூட்டமிடவும்...

நன்றி,
ஷங்கர்.

வஜ்ரா said...

//
ஆக, ஒரு முஸ்லீம் இஸ்லாமை விமர்சனம் செய்தால் தவறில்லை, ஆனால்
//ஹுசைன் எவ்வளவு கீழ்த்தரமான ஆசாமி என்பதும் தெரியட்டுமே!! //
ஒரு முஸ்லீம் ஹிந்துக் கடவுள்களை நிர்வாணமாய் வரைந்தால், அவர் ஒரு கீழ்த்தரமான ஆசாமி. இரண்டும் நீங்கள் சொன்னதுதான்.
//

சன்னாசி,
அவர், இதே போல் தெரசா, ஃபாதிமா வரந்திருந்தால் பராவாயில்லை. அது என்ன இந்துக்கடவுள்களை மட்டும் அப்படி வரைவது? இஸ்லாத்தில் அந்த மாதிரி வரைய தைரியம் இல்லை. இந்து மதத்தை ஏன் கிண்டல் செய்ய வேண்டும்? அவருக்கு அந்தத் தகுது கிடையாது.

//
Hindus are getting too big for their boots என்று அமெரிக்காவில் குரலெழுப்பும் white nationalistகள், வெள்ளை மாளிகையின் தீபாவளிக் கொண்டாட்டத்தை 'promoting paganism' என்று எழுதுவதை தேடிப் படித்துப் பாருங்கள்; அவர்களைப் பொறுத்தவரையில் ஆஃப்டர் ஆல் 1-2% இருக்கும் pagan காட்டுமிராண்டிகளுக்காக புஷ் செய்வதும் ஒரு dhimmitude தான்.
//

ஹிந்துக்கள் போராட்டம் நடத்தும் போது (ஹிந்துத்வாவாதிகள் போராட்டம்) இந்திய மத்திய அரசு தலையிட்டதா...?

//
இந்த 1-2% ஹிந்துக்களைக்கண்டு எரிச்சலடைவதுதான் politically correct non-dhimmitude என்றால், அதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
//

நான் என் கருத்தை politically correct என்று நான் சொல்ல்வேயில்லை.

இந்துக்கள் கூட இந்த சகிப்புத்தன்மையற்ற ஆபிரஹாமிய மதங்கள் போல் மாறி வருவது கவலைக்குறியது.

அதே நேரத்தில் சகிப்புத்தன்மை என்கிற பெயரில் கண்டதையும் இந்துக்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிறீர்களா?

அமேரிக்க ஜனாதிபதி, இந்துக்கள் எதாவது ஒரு காரணத்திற்காக ஆர்பாட்டம் செய்தால் அதைக் கேட்டு இவர்கள் செல்படி கேளுங்கள் என்று அமேரிக்க சென்சார் போர்டுக்கு கட்டளையிடுவாரா...அல்லது அமேரிக்க Senator தான் அப்படி செய்வாரா?
(அமேரிக்காவில் சென்சார் போர்டு போல் ஏதாவது இருந்தால்..)

//
மதச்சார்பின்மை என்பது ஒரு weakling attitude என்ற testosterone-loaded திரிப்புக்களையும் தாண்டி அதில் குறைந்தபட்ச நம்பிக்கையாவது தேவை என்பது என் கருத்து.
//

உண்மைதான்...மதச்சார்பின்மை என்பது ஒரு அரசாங்கம் வேண்டுமானால் கடைபிடிக்கலாம், தனி மனிதன் கடைபிடிப்பது என்பது முடியாத காரியம்.

நான் தனி மனிதன்.

ஷங்கர்.

Anonymous said...

சன்னாசி சொன்னது...
//இந்தப் படத்தைப் பார்த்து முடித்தபின் வெளியே வந்து பொதுவாகப் பேசிக்கொண்டிருக்கையில் எனக்குத் தெரிந்த குஜராத்திப் பெண் ஒருத்தி, "Only such things keep the muslims at check" என்றாள். சில நிமிடங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை - உனக்கு நிகழ்ந்திருந்தால் தெரியும் என்றுதான் மௌனமாக நினைக்கத் தோன்றியது.//
அவளுக்கோ அல்லது அவளைச் சார்ந்தவர்களுக்கோ அது போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதால்தான் அப்படி சொல்கிறாரோ என்னமோ?

Amar said...

//போனபார்டு,

உங்கள் கண்ணோட்டத்தில் பல விஷயங்கள் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது.

இந்துத் தீவ்ரவாதி, ஃபாஸிஸ்ட், அடிப்படைவாதி, R.S.S தீவிரவாத இயக்கம். இந்து மத வெறி பாசிஸ்டுகளின் ஜனநாயக விரோத போராட்டங்கள், World's worst terrorist religion is Hindhudva(read Brahmanic). இத்யாதி, இத்யதி,...

Blunt accusations, baseless allegations, Percieved injustice

இதைத்தவிர உங்களிடம் வேறு ஏதாவது சரக்கு இருந்தால் வாருங்கள். இல்லை என்றால் வியாபரம் செய்ய வேறு ஆள் பாருங்கள்.

வருகைக்கும் அந்தப் பெரிய்ய்ய்ய்ய்ய பின்னூட்டத்திற்கும் நன்றி.

ஷங்கர்.//

Well said, Shankar.
Such morons do not realise that by making such comments they only end up enraging Hindus.

வஜ்ரா said...

சமுத்ரா,

பார்த்தீர்களா திம்மிக்கள் என்றால் சிலருக்கு இவ்வளவு கோவம் வருகிறது,

திம்மிக்களிடம் நீ திம்மி என்றால் கோவப் படுவார்கள் என்று நினைக்கிறேன்..."Stolkholm syndrome" மாதிரி...

ஷங்கர்.

வஜ்ரா said...

சிறில் அலெக்ஸ்,

இது ஒரு கதை தான்...யாரும் இது தான் உண்மை என்று நம்பச் சொல்லவில்லை. அறிவுள்ளவன் தெளிவாக யோசித்து, படத்தை பார்த்து ரசித்துவிட்டு வீட்டுக்குப் போவான்...

நம்மூரில், இது போல் வந்தால் பாவப்பட்ட ஏழைகள், ஒன்றும் தெரியாதவர்களை ஏமாற்றி மதம் மாற்றுவது கஷ்டமாகிவிடும் என்று நினைக்கிறார்களோ என்னவோ...!! அதற்காகத் தான் போராட்டம் செய்து தடைசெய்யச் சொல்கிறார்களோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

ஷங்கர்.

சன்னாசி said...

//சன்னாசி,
அவர், இதே போல் தெரசா, ஃபாதிமா வரந்திருந்தால் பராவாயில்லை. அது என்ன இந்துக்கடவுள்களை மட்டும் அப்படி வரைவது? இஸ்லாத்தில் அந்த மாதிரி வரைய தைரியம் இல்லை. இந்து மதத்தை ஏன் கிண்டல் செய்ய வேண்டும்? அவருக்கு அந்தத் தகுது கிடையாது.//

தகுதி கிடையாதவர் என்று எவரும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் உணர்வைப் புண்படுத்தியதாக இருந்தால், எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டிய முறை என்று ஒன்று இருக்கிறது. ஹூசேனின் ஓவியக்கூடத்தை அடித்து நொறுக்கியதை விமர்சிக்காமல், பின் முஹம்மதின் கார்ட்டூன்களுக்கெதிரான வன்முறையை விமர்சனம் செய்வது double-standard மாதிரித்தான் படுகிறது. அதே தர்க்கப்படி பார்த்தால், இந்துக் கடவுள்களை அவமதித்த ஹூசேனின் ஓவியக்கூடத்தை நொறுக்கி ஓடவைக்கமுடியும் என்றால், முஹம்மதை இழிவுபடுத்தியவர்களையும் அடித்து நொறுக்கலாம் என்று வைத்துக்கொள்ளலாமா? ஒரு குதர்க்கமான கேள்வியாக, Satanic verses என்று எழுதியதற்குப் பதிலாக Gitanic verses என்று ஹிந்துக் கருத்தாக்கங்களை விமர்சித்து ருஷ்டீ எழுதியிருந்தால் ஃபத்வா கொடுக்கிறார்களோ இல்லையோ, அதே அளவிலான எதிர்ப்பு எழுந்திராது என்று நினைக்கிறீர்களா? என்ன, பிற மதத்தவர்கள் கிண்டலடித்தால் ஹிந்துக்களுக்குப் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது, தன் மதத்தவர் உட்பட எவர் கிண்டலடித்த்தாலும் இஸ்லாமியர்களால் பொறுக்கமுடிவதில்லை - இதில் எது உசத்தி என்று வாதம் செய்வதில் ஏதாவது உபயோகம் இருக்கிறதா என்ன?

//அமேரிக்க ஜனாதிபதி, இந்துக்கள் எதாவது ஒரு காரணத்திற்காக ஆர்பாட்டம் செய்தால் அதைக் கேட்டு இவர்கள் செல்படி கேளுங்கள் என்று அமேரிக்க சென்சார் போர்டுக்கு கட்டளையிடுவாரா...அல்லது அமேரிக்க Senator தான் அப்படி செய்வாரா?//

இந்தியாவில் முஸ்லீம்கள் 12% இருப்பதுமாதிரி இங்கே இந்துக்களோ யூதர்களோ 12% இருந்து, ஓட்டு வங்கியாக இருந்திருந்தால், அதுவும் நிகழத்தான் செய்யும் என்பது என் அபிப்ராயம். சதவிகித அடிப்படையில் கணக்குப் பண்ணினால், மத ரீதியிலான சிறுபான்மையினராக இல்லாமல் அதே எண்ணிக்கையிலான இன ரீதியிலான சிறுபான்மையினராக ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் அதே அளவில் வருவார்கள். தனியொரு தேசமாக விடுதலை அடைந்தபோது இருந்த நிலையைக் கொண்டு, சிறுபான்மையினர் மதரீதியாக இருக்கிறார்களா இனரீதியாக இருக்கிறார்களா மொழிரீதியாக இருக்கிறார்களா என்று நாட்டுக்கு நாடு நிலைமை வேறுபடத்தான் செய்கிறது. கறுப்பினத்தவருக்காக அமெரிக்க அரசாங்கம் செய்துகொள்ளும் 'சமரசங்கள்' ;-) தான் affirmative action போன்ற விஷயங்கள். தேர்தல் சமயங்களில் கறுப்பினத் தலைவர்களிடம் endorsement வாங்குவதற்கு குடியரசுக் கட்சி ஜனநாயகக் கட்சி என்று வித்தியாசமில்லாமல் போகத்தான் செய்கிறார்கள். திறமைக்கான தேவை என்ற ஒரு காரணத்தைத் தவிர, அனைத்துத் தரப்பினரும் வந்து வேலைசெய்யுமளவு அடியும் உதையும் வாங்கி இணக்கமான சூழலை உருவாக்கியது கறுப்பினத்தவர். அமெரிக்காவில் எனில், Uncle Tom's cabin புத்தகம் தொடங்கி, blues இசை வரை அடக்குமுறையின் வேதனைகளை சகல தளங்களிலும் வெளிப்படுத்திப் பிற இனத்தவருக்கும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்ததில் அவர்களுக்குப் பெரும் பங்குண்டு. தற்போது ஒரு இந்தியரையோ, அல்லது எந்தவொரு வெளிநாட்டவரையோ இன ரீதியாக அவமானப்படுத்தினால் அதை நீதிமன்றம் கையாள உதவும் சட்டங்கள் பெரும்பாலும் கறுப்பினத்தவர் மீதான அடக்குமுறைகளை ஒடுக்க உருவாக்கப்பட்டவையே. இப்படி உருவான ஒரு இணக்கமான சூழலில் இங்கே/வேறெந்த அந்நிய நாட்டிலும் வந்து உட்கார்ந்துகொண்ட இந்திய சிகாமணிகள், சொந்த ஊரில் சிறுபான்மையினரைப் போட்டுத் தாக்கு அடக்கி வை, அதைப் பண்ணு இதைப் பண்ணு என்று சண்டியர்த்தனம் பண்ணுவதுதான் எனக்கு விளங்காத ஒரு விஷயம். இதையெல்லாம் வெளிநாட்டுக்கு வந்துதான் புரிந்துகொள்ளமுடியும் என்றில்லை என்றாலும், அங்கே வந்தும்கூட இதேமாதிரி ஒரு மனோநிலையில் இருப்பது என்னைப் பொறுத்தளவில் விபரீதமான ஒன்றாய்த்தான் படுகிறது. உன்னைப் பிறர் எப்படி நடத்தவேண்டுமென்று எதிர்பார்க்கிறாயோ அதேபோல் பிறரையும் நீ நடத்து என்று சொல்வது அவ்வளவு அசௌகரியமான விஷயமா என்ன?

இந்தமாதிரி விஷயங்களை வன்முறைக்கு எதிரான வன்முறை என்ற ரீதியில் நியாயப்படுத்தமுடியாது. ஒரு பிரதேசத்தின் கலாச்சாரத் தனித்துவத்துக்கு (அல்லது அப்படிக் கற்பிதம் செய்யப்பட்ட ஒன்றுக்கு) இடைஞ்சலாயிருக்கும், அதன் மைய நீரோட்டத்துடன் ஒத்துப் போகாத எந்தவொன்றையும் அந்நியப்படுத்தி அவற்றை அகற்றியதற்கு நாசிகளின் யூதப் படுகொலைகள் முதற்கொண்டு ஏகப்பட்ட உதாரணங்கள். அக்காலத்தின் ஐரோப்பிய யூதர்கள் தனிப்பட்ட குழுக்களாக இருந்தார்களே தவிர வன்முறையிலா ஈடுபட்டிருந்தார்கள்?

//இந்துக்கள் கூட இந்த சகிப்புத்தன்மையற்ற ஆபிரஹாமிய மதங்கள் போல் மாறி வருவது கவலைக்குறியது. //
இதுகுறித்து நீங்கள் கவலைப்படுவதை நான் மதிக்கிறேன். அந்தக் கவலை, 'ஹிந்து மதத்தின் வன்முறையற்ற பிரத்தியேகத்துவம்' என்ற கற்பனாவாதத்தின் மேல் அமைக்கப்பட்டிருக்காது என்றும் நம்புகிறேன்.

//உண்மைதான்...மதச்சார்பின்மை என்பது ஒரு அரசாங்கம் வேண்டுமானால் கடைபிடிக்கலாம், தனி மனிதன் கடைபிடிப்பது என்பது முடியாத காரியம்.
நான் தனி மனிதன்.//
சிந்திக்கத் தெரிந்த, படித்த ஒரு தனி மனிதனை அந்த மாதிரி ஒரு நிலைமைக்குத் தள்ளாமல் இருக்கத்தான் இவ்வளவு வாதங்களும் பிரதிவாதங்களும்.

சன்னாசி said...

//அமேரிக்க ஜனாதிபதி, இந்துக்கள் எதாவது ஒரு காரணத்திற்காக ஆர்பாட்டம் செய்தால் அதைக் கேட்டு இவர்கள் செல்படி கேளுங்கள் என்று அமேரிக்க சென்சார் போர்டுக்கு கட்டளையிடுவாரா...அல்லது அமேரிக்க Senator தான் அப்படி செய்வாரா?//

புஷ் அமெரிக்க சென்ஸார் போர்டுக்குக் கட்டளையிடுவதெல்லாம் நடக்காத காரியம்; "he's a f***king idiot" என்று புஷ்ஷை நேரடியாக நக்கலடிக்கும் Mind of Mencia போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு புஷ் தடையுத்தரவு போட்டால் அவரை வெகுஜன ஊடகங்கள் வறுத்துப் பொரித்து எடுத்துவிடும். மேலும், சென்சார் என்று ஒன்றும் கிடையாது, தகவல்கள் வேண்டுமெனில் இங்கே போய்ப் பார்க்கவும்.

வஜ்ரா said...

//
என்ன, பிற மதத்தவர்கள் கிண்டலடித்தால் ஹிந்துக்களுக்குப் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது, தன் மதத்தவர் உட்பட எவர் கிண்டலடித்த்தாலும் இஸ்லாமியர்களால் பொறுக்கமுடிவதில்லை - இதில் எது உசத்தி என்று வாதம் செய்வதில் ஏதாவது உபயோகம் இருக்கிறதா என்ன?
//

ஐயா, அந்த பிற மதத்தவர் தம் மதத்தை கிண்டல் செய்யமாட்டாராம், இந்துவைமட்டும் செய்வாராம் நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கவேண்டுமா...அடுத்தது, அவர், சீதா, ஹனுமன், ராவணன், சரஸ்வதி வரைந்த பொழுதுகூட எந்த இந்துத்வா அமைப்பும் அவரை கவனிக்கவில்லை. உச்சகட்டமாக பாரத மாதாவை வரைந்தார். பொருத்தது போது என்றாகிவிட்டது. அதனால் அவர் கூடாரத்தின் மீது நடந்த வன்முறையை நான் ஞாயப் படுத்தவில்லை. ஆனால் கோபம் ஞாயமானது.

//
இப்படி உருவான ஒரு இணக்கமான சூழலில் இங்கே/வேறெந்த அந்நிய நாட்டிலும் வந்து உட்கார்ந்துகொண்ட இந்திய சிகாமணிகள், சொந்த ஊரில் சிறுபான்மையினரைப் போட்டுத் தாக்கு அடக்கி வை, அதைப் பண்ணு இதைப் பண்ணு என்று சண்டியர்த்தனம் பண்ணுவதுதான் எனக்கு விளங்காத ஒரு விஷயம்.
//

சிறுபான்மையினர் என்றால் யார்? முஸ்லீம்களா, அவர்கள் 15% இருக்கும் இரண்டாவது Majority. சுயமரியாதைக்காக சத்தம் போட்டால் சண்டியர்தனம்? நன்றாக இருக்கிறது..

நம் இந்திய Politically Correct கூட்டத்துக்கு,
"The mere invocation of the term "minority" is enough to make them mushy and infuriatingly sanctimonious. Minority rights, we are repeatedly told, must be preserved at all costs, even if it involves making hideous compromises with the principles of equity and modernity." ( ஸ்வபன் தாஸ்குப்தா, The Daily Pioneer)


//
அதன் மைய நீரோட்டத்துடன் ஒத்துப் போகாத எந்தவொன்றையும் அந்நியப்படுத்தி அவற்றை அகற்றியதற்கு நாசிகளின் யூதப் படுகொலைகள் முதற்கொண்டு ஏகப்பட்ட உதாரணங்கள்.
//

ஏங்க ஒரு வரயரை இல்லையா, Nazi க்களுக்கும் இந்து சுயமரியாதைக்கும் எந்த ஒரு ஒற்றுமையும் இல்லை. இஸ்லாமியர்கள நாம் அன்னியப் படுத்தத் தேவையே இல்லை. அவர்களே, மதம் மாறிய மறு க்ஷணம் அன்னியப்பட்டுவிடுவர். அதே தான் பல கிறுத்தவர்களுக்கும்.

//
'ஹிந்து மதத்தின் வன்முறையற்ற பிரத்தியேகத்துவம்' என்ற கற்பனாவாதத்தின் மேல் அமைக்கப்பட்டிருக்காது என்றும் நம்புகிறேன்.
//

ஹிந்து மதத்தின் வன்முறையற்ற பிரத்தியேகத்துவம் என்றால் என்ன என்றே எனக்குத் தெரியாது.

நான் நம்புவது, இந்த ஆபிரஹாமிய மதங்கள் செய்யும் சண்டியர்தனத்திலிருந்து இந்துக்கள் தம்மையும், தம் மதத்தையும், தம் நாட்டையும் காத்துக் கொள்ள இது ஒரு "தர்ம யுத்தம்".

ஷங்கர்.

சன்னாசி said...

//சிறுபான்மையினர் என்றால் யார்? முஸ்லீம்களா, அவர்கள் 15% இருக்கும் இரண்டாவது Majority. //
சரி, கறுப்பர்களா, 12% இருக்கும் அவர்கள் இங்கே இரண்டாவது மெஜாரிட்டி என்று சொல்லிப் பார்க்கச்சொல்லுங்கள் இங்கே! சும்மா திரும்பத் திரும்ப வெளிநாட்டையும் இந்தியாவையும் ஒப்பிடுகிறேனென்று நினைக்காமல், பிறரிடத்தில் தன்னை வைத்துப் பார்க்கச் சொல்லவே இது.

அப்புறம், ஸ்வபன் தாஸ்குப்தா மட்டுமில்லை, ரிடிஃப் போன்ற தளங்களில் இன்னும் பெரிய படையே இருக்கிறது. நீங்கள் சுட்டி கொடுத்திருக்கும் 'Shadow warrior' ராஜீவ் ஸ்ரீனிவாசன், ஒரு கோணத்தில் ஃபிரான்சுவா கோத்தியே என்று. 'Politically correct phonies'க்கு இவர்கள் எடுக்கும் 'சீர்திருத்தப் பாலபாடங்கள்' ஒருகட்டத்தில் தொடர்ந்து அதிகமாகிப்போனதையும், ரிடிஃப்பின் India Abroad பத்திரிகையின் அச்சு வடிவமும் வலை வடிவமும் திரிந்துபோனதையும், சமீபத்தில் குறிப்பாக இட ஒதுக்கீடு விஷயத்தில் அதற்கெதிரான அதன் நாசூக்கான mobilizing strategyயையும் பார்க்கையில் (எத்தனை பேர் இதைக் கவனித்தார்களென்று தெரியவில்லை - இது குறித்தான ரிடிஃப்பின் அனைத்துப் பதிவுகளையும் தொகுத்துப் படித்தாலே விளங்கும்) அனைவர் காதையும் செவிடாக்குமளவு வலையில் ஊதித் தள்ளும் திருட்டுப் பாஞ்சஜன்யமாக அது உருவெடுக்கும் நாள் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

இந்த ஸ்வபன் தாஸ்குப்தா போன்றவர்களின் 'இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம்' சித்து விளையாட்டுக்கள் எனக்கு வேறுவிதமாகத்தான் புரிபடுகிறது - உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு முன் எழுதப்பட்ட என் பழைய பதிவொன்றில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்வபன் தாஸ்குப்தாவின் பத்தியொன்றின் சுட்டியைப் படித்துப் பார்க்கவும். இதெல்லாம் ஏதோ அதீதமான அர்த்தங்கற்பிப்பு போலத் தோன்றலாம், ஆனால் உதாரணத்துக்கு, அதே பத்தியில் //The Ayodhya movement was one of the few moments when Hindu nationalism and Hindu religious energy converged.// என்று ஒரு open-ended statement இருக்கும் ;-). பத்திரிகையுலகில் 'purposeful fillers' ஐ வெகு திறமையாக உபயோகிப்பதும் ஒரு கலை, அதை இந்த கோஷ்டி வெகு தெளிவாகச் செய்து வருகிறது என்பது எனக்குப் பட்ட ஒன்று. எனவே, ஸ்வபன் தாஸ்குப்தா என்றெல்லாம் மேற்கோள் காட்டுகையில் இந்தமாதிரி 'படித்துத் தெளிந்தது'தான் சட்டென்று நினைவுக்கு வருகிறது!

இதுகுறித்து மேலும் எழுதினால் பின்னூட்டங்கள் பதிவிலிருந்து திசைதிருப்பப்படலாமென்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இதுவரையான பதில்களுக்கு நன்றி.

வஜ்ரா said...

சன்னாசி,

ஸ்வபன் தாஸ்குப்தா, ராஜீவ் ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் இணயத்தில் ஊதித் தள்ளுவது திருட்டு பஞ்சஜன்யம்..!! பரவாஇல்லை, People's democracy தவிர்த்து நீங்கள் வேறு கோணத்தில் எழுதப்படும் பத்திரிக்கைகளையும் படிக்கிறீர்கள் என்பதில் சந்தோஷம். ஆனால் நீங்கள் சொல்வது தான் சரி, மற்றவர்கள் கோணம் தவறு, பார்வை தவறு என்று பிடிவாதமாக இருப்பது தான் சரியில்லை. உங்கள் அந்த பழய பதிவையும் பார்த்தேன்.

உங்கள் கவலை எனக்குப் புரிகிறது. சிறுபான்மையினரை அழிப்பது தான் இவர்கள் நோக்கம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு யாரும் பொருப்பல்ல.

சிறுபான்மையினர் என்றால் உரிமை இந்தியாவில் அதிகம், வேறு எந்த நாட்டிலும் அது இல்லை. நீங்கள் நடப்பதைப் பார்த்தாலே தெரியும், ஜைனர்கள் சிறுபான்மையினராக அங்கீகரிக்கச் சொல்லி மனு கொடுத்துள்ளனர். இப்படியே, நாடு முழுவதும் ஒவ்வொறு ஜாதியும் சிறுபான்மை என்று கேட்டால், நாடு சின்னாபின்னமாகிவிடும். அதே நேரத்தில் சிறுபான்மையினர் உரிமை காக்கவேண்டும் என்கிற பெயரில், நாட்டின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படச் செய்வது நல்லதல்ல.

வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி,

வஜ்ரா said...

//
அனைவர் காதையும் செவிடாக்குமளவு வலையில் ஊதித் தள்ளும் திருட்டுப் பாஞ்சஜன்யமாக அது உருவெடுக்கும் நாள் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
//

//
ஸ்வபன் தாஸ்குப்தா என்றெல்லாம் மேற்கோள் காட்டுகையில் இந்தமாதிரி 'படித்துத் தெளிந்தது'தான் சட்டென்று நினைவுக்கு வருகிறது!
//

Please focus on the substance of their position rathen than branding them...with one or the other kind of labels.

மாமன்னன் said...

//இந்தியாவில் முஸ்லீம்கள் 12% இருப்பதுமாதிரி இங்கே இந்துக்களோ யூதர்களோ 12% இருந்து, ஓட்டு வங்கியாக இருந்திருந்தால், அதுவும் நிகழத்தான் செய்யும் என்பது என் அபிப்ராயம்.//

சன்னாசி உங்கள் அபிப்பிராயத்தை உடைப்பில் போட்டால் என்ன? இதே போல 25 சதவீதம் இந்துக்கள் இருந்த பங்களாதேஷில் இன்று 9 சதவீதமாகக் குறைந்து போய் இன்னும் குறைந்துகொண்டிருக்கிற இந்துக்கள் பற்றி எங்கேனும் படித்திருக்கிறீர்களா? அங்கு இந்துக்கள் வாக்கு வங்கியாக செயல்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு இந்தியாவில் முஸ்லீம்களுக்கு இருப்பதுபோன்று சிறுபான்மை உரிமைகள் என்ற பெயரில் இதே போன்று சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று நினைக்கிறீர்களா? நான் இந்தியாவைத்தான் சொன்னேன் என்று ஜல்லி அடிக்காதீர்கள். பங்களாதேஷ் முன்னால் இந்தியாவாகத்தான் இருந்தது.

//பத்திரிகையுலகில் 'purposeful fillers' ஐ வெகு திறமையாக உபயோகிப்பதும் ஒரு கலை, அதை இந்த கோஷ்டி வெகு தெளிவாகச் செய்து வருகிறது என்பது எனக்குப் பட்ட ஒன்று. //

அதை வெளிப்படையாகவே காட்டுக்கத்தலாக செய்வது நீங்களும், உங்களது "முற்போக்கு" கோஷ்டியும். அதனை நான் தற்கொலை கோஷ்டி என்றுதான் அழைக்கிறேன்.

சன்னாசி said...

//சன்னாசி உங்கள் அபிப்பிராயத்தை உடைப்பில் போட்டால் என்ன? இதே போல 25 சதவீதம் இந்துக்கள் இருந்த பங்களாதேஷில் இன்று 9 சதவீதமாகக் குறைந்து போய் இன்னும் குறைந்துகொண்டிருக்கிற இந்துக்கள் பற்றி எங்கேனும் படித்திருக்கிறீர்களா?//

ஆரோக்கியம்: If I decide to scratch my back, I'd rather look at a relatively cleaner back as an example. சரியான பதிலை நீங்களே சொல்லி 'இப்படி ஜல்லியடிக்காதீர்கள்' என்று ஒரு டிஸ்க்ளெய்மரும் கொடுத்து மடக்க என்ன அவசியம் என்று தெரியவில்லை.

//அதை வெளிப்படையாகவே காட்டுக்கத்தலாக செய்வது நீங்களும், உங்களது "முற்போக்கு" கோஷ்டியும். அதனை நான் தற்கொலை கோஷ்டி என்றுதான் அழைக்கிறேன்.//

Your signal is my noise, and vice versa என்ற புரிதலின் அடிப்படையில் எனக்குத் தோன்றியதை நான் சொல்கிறேன், உங்களுக்குத் தோன்றுவதை உங்கள் 'என்னமோ போ' வலைப்பதிவில் சொல்கிறீர்கள் - அதையும் படித்துப் பார்க்கிறேன், அவ்வளவுதான். உங்கள் கருத்துக்கள், சிறுபான்மையினரை எப்படி நடத்தவேண்டும் என்பதுகுறித்த என் பார்வையை மாற்றினால், அப்போதும் வலைப்பதிந்துகொண்டிருந்தால் உங்கள் பதிவுக்கு வந்து நன்றி சொல்கிறேன் - அவ்வளவுதான் செய்யமுடியும்; நன்றி.

Anonymous said...

http://www.dinamalar.com/2006june01/final1.asp#1

Tamilnadu Government has banned davinci code movie.

Prasanna said...

இது அநியாயம்!!! அந்த படம் ஏன் திரையிடப்படக்கூடாது?? நான் என்ன படத்தை பார்க்கணும் பார்க்க கூடாதுன்னு நான் தான் முடிவு எடுக்கணுமே தவிர நான் தேர்ந்தெடுத்த ஒரு அரசு முடிவு பண்றது என்ன நியாயம். கும்பமேளா பத்தி வீதிக்கு வீதி மீட்டிங் போட தி.கவுக்கு சுதந்திரம் இருக்கும்போது, ஏன் டாவின்சி கோட் வரக் கூடாது.
மதசார்பின்மைனு பேசிட்டு, நோன்பு கஞ்சி குடிக்குறவங்க கிட்ட என்ன எதிர் பார்க்க முடியும்...
வாழ்க ஜனனாயகம். வாழ்க கருத்து சுதந்திரம்

வஜ்ரா said...

நான் தான் சொன்னேனே...

டாவிஞ்சி கோட் தமிழ் நாட்டில் தடை செய்ததில் இரண்டு நல்ல காரியம். ஒன்று இந்த Rice Christians யோசிக்கலாம். இரண்டு இதற்கு பைசா செலவில்லாத பப்ளிசிடி.

இப்போ, இந்த இந்து மதத்தை அழிப்பதை விட்டுவிட்டு, இந்துக்களை மதம் மாற்றுவது தவறேதுமில்லை என்று வாதிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். (போர்திக்கிட்டு படுத்தாலும், படுத்துட்டு போர்த்திக்கிட்டாலும் ஒண்ணுதான்). இத்தகய மதமாற்று வியாதிகள் தான் இதைப் பற்றி யோசிக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு தடை ஏன்? யாரால் இது நடக்கிறது...?

சாதாரண கிருத்துவனாலா...இல்லை அவர்கள் மதம் மாற்றும் வேலையில் தடையாக குட்டையை குழப்பும் என்பதால் தான் இதை தடை செய்ய மிஷனரிக்கள் முயர்சிப்பார்கள். இவர்கள் சொன்னால் அரசு கேட்கும். ஏன் என்றால் இவர்கள் சொன்னால் கிறுத்தவர்கள் ஆட்டு மந்தை போல் அந்த கட்சிக்கு வோட்டு போடுவார்கள்.

Muse (# 01429798200730556938) said...

இப்படம் ஏசுவைக் குறை சொல்லுவதோடு நிறுத்தியிருந்தால் எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது. ஆனால் வத்திக்கானையல்லவா குறை சொல்லிவிட்டார்கள்?

இங்கே பெங்களூரில் இந்தப் படத்தைத் தடை செய்யும் முன் (இன்று உச்ச நீதி மன்றம் இப்படத்திற்கான தடையைப் பற்றி விசாரணை ஆரம்பிக்கிறது) படத்தைப் பார்த்துவிட வேண்டும்.

வஜ்ரா said...

இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ்சின் வந்த செய்தி,

டாவிஞ்சி கோட் எதிர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டின் ஆப்பு

சிறில் அலெக்ஸ் said...

//இவர்கள் சொன்னால் அரசு கேட்கும். ஏன் என்றால் இவர்கள் சொன்னால் கிறுத்தவர்கள் ஆட்டு மந்தை போல் அந்த கட்சிக்கு வோட்டு போடுவார்கள்.//

கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என நினைக்கிறேன்.

:)

வஜ்ரா said...

மன்னித்துக் கொள்ளுங்கள்..

Another way of telling vote bank politics...other wise no personal offense intended on particular community as a whole.

Anonymous said...

இந்த பதிவை படிச்சப்பவும் பின்னூட்டங்களை படிச்சப்பவும் தோண்றிய சில ....
//ஒரு குதர்க்கமான கேள்வியாக, Satanic verses என்று எழுதியதற்குப் பதிலாக Gitanic verses என்று ஹிந்துக் கருத்தாக்கங்களை விமர்சித்து ருஷ்டீ எழுதியிருந்தால் ஃபத்வா கொடுக்கிறார்களோ இல்லையோ, அதே அளவிலான எதிர்ப்பு எழுந்திராது என்று நினைக்கிறீர்களா? என்ன, பிற மதத்தவர்கள் கிண்டலடித்தால் ஹிந்துக்களுக்குப் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது, தன் மதத்தவர் உட்பட எவர் கிண்டலடித்த்தாலும் இஸ்லாமியர்களால் பொறுக்கமுடிவதில்லை - இதில் எது உசத்தி என்று வாதம் செய்வதில் ஏதாவது உபயோகம் இருக்கிறதா என்ன? ////
அப்படீன்னு சன்னாசி எழுதியிருக்கிறார்..

சரிதாங்க...முகமதை கிண்டலடித்து போஸ்டர் எல்லாம் அமெரிக்கா..இங்கிலாந்து இங்கெல்லாம் வைத்தாலும்..இல்லை சாத்தானின் வேதம் புத்தகம் இந்த நாடுகளில் வெளியிட்டாலும் எங்கயோ ஈரானில் இருந்து .பட்வா குடுத்தா மூணு வருஷம் தலை மறைவா இருக்க வேண்டியிருக்கும்...ஏன்னா அவங்க நம்புற மதத்தை அவங்க சீரியசா எடுத்துக்குறாங்க..தப்பில்லை..அது அவங்க நம்பிக்கை அதை இழிவு படுத்தினா அவங்களுக்கு எங்கிருந்தாலும் கோவம் வர்ரது ஞாயம்தான்...
ஆனா இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்த நாட்டில்(இல்லை இப்ப நெலமை மாறிடுச்சா :)) அவர்கள் வணங்கும் கடவுளை நிர்வாணமாக வரைந்து வெளியிட்டு அதை இந்துக்களே ரெண்டு கோஷ்டியா பிரிஞ்சு..ஒரு கோஷ்டி தப்புன்னும்...இன்னொரு கோஷ்டி இல்லை இல்லை அது கலை அப்படீன்னும் விவாதிக்கிறதை / அடிச்சுக்கிறத ரெண்டு சின்னப் பொண்ணுங்க இடுப்புல கையப் போட்டுக்கிட்டு ஜாலியா ரோட்டோரம் நின்னு ரசிக்கலாம்...அதுவும் யாராவது ஒரு கூட்டம் அந்த தனியாளின் கூடாரத்தை நொருக்கிட்டா அதை ஹிந்து தீவிரவாதம் அப்படீன்னு இந்தியாவின் எண்பது கோடி ஜனங்க மேலையும் சூட்டி மகிழலாம்...ஏன்னா நாங்க இருக்கிறது செக்கூலர் ஸ்டேட்..அதாவது பெரும்பான்மை மக்களுக்கு எது நடந்தாலும் அரசாங்கம் கண்டு கொள்ளாது அப்படீன்னு அர்த்தம்....தீவிரவாதத்துக்கே வருவோம்...ஹிந்துக்கள் தீவிரவாதம் எது...பாபர் மஸூதியை இடிச்சது....அப்புறம் ஒரிஸாவில் கிருத்துவ பாதிரியார்+குடும்பத்தை ஒரு கூட்டம் கொன்னது+குஜராத் கலவரம்(இதுல முஸ்லீமும் ஹிந்துவும் மாறி மாறி அடிச்சிக்கிறாங்க பல நூறு வருஷங்களாக..ஆனா இப்பதான் அதுக்கு ஹிந்து தீவிரவாதம் அப்படீன்னு பேர்...முன்னாடி அது மதக் கலவரம்...என்னா முன்னாடி செக்கூலர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததாலா) இந்த மாதிரி சில கூட்டம் செய்யிற செயல்...அடடா முக்கியமான அதி தீவிரவாதத்தை சொல்ல மறந்து விட்டேன்..ராத்திரியோட ராத்திரியா கிரிக்கெட் பிட்சை நோண்டுறதைதான் சொல்றேன்.... ஒரு சமுதாயத்தின் மோல் தீவிரவாதமாக கற்பிக்கப் படுகிறது....அதை அந்த சமுதாயத்திலிருந்தே சிலர் ஆமாம் இதெல்லாம் தீவிரவாதம்தான் ... நாங்களெல்லாம் தீவிரவாதக் கூட்டத்தின் அங்கங்கள்தான் என வாதிடுவதுதான் செக்கூலர் வேடிக்கை....இதனால் இந்த ஹிந்துக்களில் ஒரு கூட்டம் செய்த மேற்சொன்ன காரியங்களை நான் ஞாயப்படுத்தவில்லை...அவை தவறானவை.....தவறானவை...தவறானவை....ஆனால் இதை ஒரு நாட்டிலுள்ள பெரும்பான்மை சமுதாயத்தின் மீது அந்த சமுதாயத்தின் தீவிரவாதமாக கற்பிதம் செய்வதுதான் ஜீரணிக்க முடியவில்லை....இந்த மாதிரி பொறுப்பற்ற செக்கூலர் செயல்கள்தான் மதில்மேல் பூனைகளை போலரைஸ் செய்து (கோயமுத்தூரில் பஜபா ஆதரவு போல)விடுகிறது....ஜனநாயகம் என்றால் செக்கூலர் என்றெல்லாம் ஜல்லியடிக்காமல்...பெரும்பான்மையினரின் உணர்வை மதிப்பது மற்றும் சிறுபான்மையினரின் நலனை பாது காப்பது என்பதாக அறிகிறோமோ அன்றுதான் உருப்படுவோம்...அது கம்யூனிச பெரும்பான்மை...இந்துப் பெரும்பான்மை..எதுவாக இருந்தாலும் சரி.....இது என் கருத்துதான்..பதிய வேண்டும் என்று தோன்றியது...பதிந்து விட்டேன்....நன்றி

சரவணகுமார்...சென்னை

வஜ்ரா said...

//
இந்த மாதிரி பொறுப்பற்ற செக்கூலர் செயல்கள்தான் மதில்மேல் பூனைகளை போலரைஸ் செய்து (கோயமுத்தூரில் பஜபா ஆதரவு போல)விடுகிறது....
//

இந்த கருத்தை வைத்துத் தான் ஒரு பதிவு போடவேண்டும் என்றிருந்தேன்...

அதை யோசிக்கும் போதெல்லாம்..
அருன் ஷூரியின் பழய கட்டுரை ஒன்று ஞாபகத்திற்கு வந்து செல்கிறது...ஃபாசிசம்

கருத்துக்கு நன்றி சரவண குமார்.

Anonymous said...

//இப்போ, இந்த இந்து மதத்தை அழிப்பதை விட்டுவிட்டு, இந்துக்களை மதம் மாற்றுவது தவறேதுமில்லை என்று வாதிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்//

ஷங்கர்,

சில தினங்களுக்கு முன்பு டெக்கன் ஹெரால்டில் முன்னாள் மத்திய அமைச்சர்(இன்னாள் எம்.பி என்று நினைக்கின்றேன்) எடுவார்டோ ஃபெலீரோ ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆசைகாட்டி (அல்லது ஆன்மீக அச்சுறுத்தல் மூலமாக) மதம் மாற்றுவதை மிகவும் கண்டித்திருந்தார்.

அதில் போப்கள் தொடர்ந்து இதற்கு எதிராக ( கத்தோலிக்க மதத்திலிருந்து இதர சிறுபான்மை சர்ச்சுகளுக்கு மதம் மாற்றுவதை எதிர்த்து) சொல்லியிருந்த வாசகங்களையெல்லாம் எடுத்தாண்டிருந்தார்.

ஆச்சர்யமாயிருந்தது. தேடிக்கொண்டிருக்கின்றேன் அந்த ஸ்டேட்மெண்டை - ஆன்லைனில். கிடைத்தால் எடுத்து உள்ளிடுகின்றேன்.

வஜ்ரா said...

எகிப்தில் டாவிஞ்சி கோடுக்குத் தடை...

சொல்லும் காரணத்தைப் பாருங்கள்...

Anonymous said...

அன்பின் ஷங்கர்,

இங்கு சென்னையில் படத்தின் டிவிடிக்களை 99 ரூபாய்க்கு விற்கின்றனர்(பிரிண்ட் சுமார்தான் ஆனால் சப்டைட்டில்கள் இருப்பதால் புரிந்து கொள்ள முடிகிரது). இரு தினங்களுக்கு முன்பு லேன்ட்மார்க்கில்(ஸ்பென்செர் ப்ளாஸா - அண்ணா சாலை) படத்தின் ஸ்க்ரீன்ப்ளேயை வரிக்கு வரிக்கு போட்டு(அழகிய படங்கள் வேறு - பாகன் சிற்பங்கள் உள்ள கதீட்ரல்கள், சினிமாவில் வரும் காட்சிகள் போன்றவை) ஒரு புத்தகம் பார்த்தேன்.

இம்மாதிரித் தடைகளால் இந்தக்காலத்தில் எதுவும் செய்ய முடியாது என்பதை அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

- Nesakumar.

Anonymous said...

The Da vinci code Tamil Dubbed Movie ( தி டாவின்சி கோட் திரைப்படம் )